Aggregator

யாழில் வாள்வெட்டு - முதியவர் பலி ; 7 பேர் படுகாயம்

6 months 2 weeks ago
வன்முறையாளர்கள் குறித்த விசாரணைகளுக்கு பொதுமக்கள் கதவடைப்பு…. May 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பதுடன், விசாரணைக்காக வீடுகளுக்குச் சென்றால் கதவடைப்புச் செய்கின்றனர் என கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக முறுகல் நிலை தொடர்கிறது. இடையிடையே கைகலப்பு – வாள்வெட்டு வன்முறையும் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வன்முறை உக்கிரமடைந்து வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றது. கெற்பலியைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலாவியை சேர்ந்தவர்கள் மீது வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தியது. சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் வன்முறைக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த திங்கட்கிழமை உழவு இயந்திரத்தில் தமது முகங்களை துணிகளால் மறைத்து கட்டியவாறு வந்த 15க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் ஒன்று கெற்போலி மேற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்த உடமைகளை அடித்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளது. அந்த சத்தம் கேட்டு அயலவரான க. கனகலிங்கம் (வயது 31) அவ்வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த நபர்கள் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்தினர். குறித்த சம்பவங்களை அடுத்து ஊரவர்கள் திரண்டதும் தாக்குதல் கும்பல் தமது உழவு இயந்திரத்தையும் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதனை அடுத்து படுகாயமடைந்த நபரை ஊரவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். கெற்போலி மேற்கில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பழி தீர்க்கும் முகமாகவே பாலாவி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் கொடிகாம காவல்துறையினரிடம் கேட்ட போது , ‘இரண்டு கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதகாலமாக முறுகல் நிலை தொடர்கிறது. சில வன்முறைகளும் அங்கு இடம்பெற்றன. எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் ஐவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் விசாரணைக்காக கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்றால் மக்கள் வீட்டுக்கதவை அடைத்துவிட்டு ஒத்துழைப்புத் தர மறுக்கின்றனர். வன்முறைகள் தொடர்பில் சாட்சியம் வழங்க எவரும் முன்வருகிறார்கள் இல்லை. சாட்சியம் வழங்கினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அந்த ஊர்களின் மக்கள் அச்சமடைகின்றனர். அதனால் வன்முறைகளுடன் தொடர்புடைய 20 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் கைது செய்ய முடியவில்லை. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகியுள்ளனர். அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். #kodikamam #investigation #deny #police http://globaltamilnews.net/2019/120301/

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலய அந்தோனியார் திருச்சொருபம் இனந்தெரியாதோரால் உடைப்பு

6 months 2 weeks ago
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலய அந்தோனியார் திருச்சொருபம் இனந்தெரியாதோரால் உடைப்பு May 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் இனந்தெரியாதோரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று புதன் கிழமை மாலை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர். சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள மிகவும் சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது #anthoniyarstatue #tamil #sinhala #church #vilpaththu http://globaltamilnews.net/2019/120282/

May 2, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

1.jpg?resize=800%2C600

வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் இனந்தெரியாதோரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று புதன் கிழமை மாலை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.
சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள மிகவும் சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 #anthoniyarstatue #tamil #sinhala #church #vilpaththu

3.jpg?resize=800%2C5308.jpg?resize=800%2C530

http://globaltamilnews.net/2019/120282/

பள்ளிவாசல்களைச் சுற்றி வளரும் புற்களை வெட்டுவதற்காகவே வாட்களைச் சேமித்து வைத்திருந்தோம் - முஸ்லீம் சமய கலாசார அமைச்சர் ஹலீம் !

6 months 2 weeks ago
அவர்கள் பாண் வெட்டுறது கோடரி கடப்பாரை ஏ கே T-56 யால் அதுதான் 1990இல் காத்தான்குடி பள்ளிவாசலில் பசியில் வருபவர்களுக்கு கொடுத்து பசியாற வைத்திருந்தவர்கள்

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் அமைந்திருக்கும் முஸ்லீம் பள்ளிவாசல்களில் ராணுவமும் பொலீஸும் இணைந்து தேடுதல் நடாத்தி வருகின்றன. இத்தேடுதல்களின்பொழுது பல்வேறு வகையான வாட்கள், கோடரிகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் நாளாந்தம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முஸ்லீம் விவகார அமைச்சரான ஹலீமிடம் பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, தமது பள்ளிவாசல்கள், முஸ்லீம் அடக்கஸ்த்தலங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால், அவற்றைச் சுற்றி வளரும் புற்கள் பற்றைகளை அழிப்பதற்கு பல்வேறு உத்திகளை தாம் பாவித்துவருவதாகவும், அவற்றில் ஒரு உத்தியே வாட்களைக் கொண்டு புற்களை வெட்டுவதும் என்று பதிலளித்துள்ளார். அப்படியானால், இவ்வாட்கள் எதற்காக வெளிநாடுகளிருந்து தருவிக்கப்பட்டன என்று கேட்டதாற்கு, இல்லை, இவை அனைத்துமே உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், தனது அமைச்சினால் கண்டியில் தேசிய தெளவீத் ஜமாத் அமைப்பிற்கான கட்டிடம் ஒன்றை அமைக்க அனுமதிகொடுத்தது பற்றிக் கேட்டபொழுது, தான் அப்படிக் கொடுக்கவில்லை என்று மறுதலித்துள்ளார். அத்துடன், அவரின் கீழான காலத்தில் கண்டிமாவட்டத்தில் எத்தனை புதிய மசூதிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்று கேட்டதற்கு, 2015 இலிருந்து இற்றைவரை வெறும் 96 மசூதிகள் கட்டுவதற்கு மட்டுமே தாம் அனுமதியளித்ததாக சாதாரணமாகப் பதிலளித்துள்ளார் இந்த முஸ்லீம் விவகார அமைச்சர். 

மூலம் - கொழும்பு டெயிலி மிரர்

நான் நம்பீட்டன் !!!

எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்

6 months 2 weeks ago
எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம் May 1, 2019 எவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது. இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #rubbish #nepal #Mount #Everest http://globaltamilnews.net/2019/120153/

காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது..

6 months 2 weeks ago
இந்தியா இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. தானே செய்ய எத்தனிக்கும் தாக்குதல் ஒன்றுபற்றி இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியா அறிவிக்க வேண்டிய நோக்கமென்ன? ஆகவே, இந்தியாவிற்கு இந்தத் தாக்குதல்களில் பங்கிருக்கின்றது என்பது அடிபட்டுப் போய்விடுகிறது. ஆனால், இந்த தாக்குதல்களுக்குப் பின்னரான நிலைமைகளை தனக்குச் சாதகாமகப் பாவிக்க இந்தியா முனைகின்றதென்பதை மறுப்பதற்கில்லை. இதன் ஒரு அங்கம்தான் தனது தேசிய பாதுகாப்புப் படையினரையும், புலநாய்வுத்துறையையும் இந்தியா களமிறக்கியிருப்பது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தற்போதைய பங்களிப்புகளுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆசீர்வாதமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம், இந்தியப் பிரஜைகள் இத்தாக்குதலில் தொடர்புபட்டிருப்பது. அண்மைக்காங்களில் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டு முஸ்லீம் இளைஞர்களை நோக்கி பாக்கிஸ்த்தானின் புலநாய்வுப்பிரிவான ஐ. எஸ் . ஐ செயற்திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றதனால் ஆகும். இந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆளும் இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சிமீதிருக்கும் இயல்பான கோபத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் ஸ்த்திரத்தன்மையைக் குலைப்பதற்கு பாக்கிஸ்த்தான் முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. பாக்கிஸ்த்தானின் திட்டங்களுடனும், சவுதி போன்ற மத்திய கிழக்கு சுன்னி இஸ்லாம் நாடுகளினதும் பண உதவியுடனும், சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் கள் இலங்கை இந்திய முஸ்லீம் சமூகளுக்குள் ஊடுருவியிருக்கிறார்கள். சிரியாவில் நடந்த போரில் பங்களிப்பதற்கென்று இவ்விடங்களிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான முஸ்லீம் தீவிரவாத இளைஞர்கள், சிலர் போரில் கொல்லப்பட, மீதமானோர் மீண்டும் நாடு திரும்பியிருக்கிறார்கள். இவ்வாறு நாடு திரும்பிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊரிப்போன தமிழக - இலங்கை முஸ்லீம்கள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள். அதனாலேயே, தமிழகத்தில் தெளவீத் ஜமாத் அமைப்பிற்கும், இலங்கையில் தேசிய தெளவீத் ஜமாத் அமைப்பிற்கும் தொடர்புகள் உருவாகியிருக்கின்றன. இந்திய புலநாய்வுத்துறை தமது விசாரணைகளை கேரளாவில் ஆரம்பித்தபோதே இலங்கை அமைப்பிற்கும் இந்திய அமைப்பிற்குமான தொடர்பு வெளிப்பட்டு, இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டது. போரியல், நாசகாரத் தாக்குதல்கள், குண்டுதயாரித்தல், தற்கொலைத் தாக்குதல்கள் போன்றவற்றில் பரீட்சாயமானவர்களான இவர்களை பாக்கிஸ்த்தானிய - சவூதிக் கூட்டு பாவிக்கிறது. இதெல்லாவற்றையும் விட முக்கியமான விடயம், ஏன் இந்தத் தாக்குதல்கள் பற்றி இலங்கை எதுவுமே செய்யவில்லை என்பதும், மைத்திரி தெரிந்திருந்தும் ஏன் மறைத்தார் என்பதும். பார்க்கப்போனால், இத்தாக்குதல் பற்றி நன்கே தெரிந்திருந்தும், சிறுபான்மை தமிழ் மற்றும் சிறுபான்மைச் சிங்களக் கத்தோலிக்கர்கள் தானே என்கிற அசமந்தப் போக்கோ அல்லது நாட்டில் அசாதாரண நிலையொன்றினை ஏற்படுத்துவதன்மூலம் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்கிற மைத்திரிபால சிறிசேன உற்பட்ட மகிந்த சார்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளினது செயற்பாடோதான் இத்தாக்குதல்களை ஏதுவாக்கியிருக்கின்றன.

யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை

6 months 2 weeks ago
யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழில்-பாரிய-சுற்றிவளைப்/

IMG_6973-720x450.jpg யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_2224-640x480.jpg

IMG_2229.jpg

IMG_2231-640x480.jpg

http://athavannews.com/யாழில்-பாரிய-சுற்றிவளைப்/