Aggregator

ஓ .. உதுக்குத்தானோ

7 months 2 weeks ago
நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ. புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல. இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் !

7 months 2 weeks ago
– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/

– யாழ்ப்பாண செய்தியாளர் –

யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர்.
இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/

83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ

7 months 2 weeks ago
83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா? அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா? அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா? யாரும் கைது செய்யப்பட்டார்களா? கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா? அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா? இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk

83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன்
அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்..

இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர்.

எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா? அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது.

அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா? அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா? யாரும் கைது செய்யப்பட்டார்களா? கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா? அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா? இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது.

ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.thamilan.lk

பள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு

7 months 2 weeks ago
(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார். ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய  முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு  திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு,  தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன  அறிக்கைவிடுத்துள்ளார்.

isis_sril.jpg

அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள்  அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.

 ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில்,  பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று  அனுப்பி வைத்துள்ளார்.

 அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட  பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும்  தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம்  செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை  வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

http://www.virakesari.lk/article/54674

ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன?

7 months 2 weeks ago
தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680

தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு  ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார்.

அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை  எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

zahran_1.jpg

எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/54680

இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட உடல்கள்; கோபத்தில் உறவினர்கள்

7 months 2 weeks ago
இம்ரான் குரேஷி பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊரான பெங்களூருவுக்கு கொண்டு வரப்படுகின்றன. அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இலங்கையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் கோபத்தில் உள்ளனர். "பாதுகாப்பை உறுதி செய்யாததற்கு இலங்கை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தும் அங்கு ஒரு மெட்டல் டிடெக்டர்கூட இல்லை" என்று பிபிசி இந்தியிடம் பேசிய அபிலாஷ் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்தார். அபிலாஷின் தந்தை லக்ஷ்மி நாராயணன், பெங்களூரு அருகே உள்ள நெலமங்களாவின் முன்னாள் தாலுக்கா தலைவராவார். இவரும், இவரது கட்சியை சேர்ந்த மற்ற ஏழு பேரும், ஏப்ரல் 18ஆம் தேதி வாக்களித்து விட்டு விடுமுறைக்காக கொழும்புவிற்கு சென்றனர். லக்ஷ்மி நாராயணனின் மொத்த குடும்பமும், மேலும் பலரும், ஒரு கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தனர். அங்குதான் அவர்களது அன்புக்குரியவர்களின் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. படத்தின் காப்புரிமை IMRAN QURESHI அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் பிரதமர் தேவே கௌடா மற்றும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் வந்திருந்தனர். இலங்கை தாக்குதல்களில் உயிரிழந்த 11 இந்தியர்களில், எட்டு பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள். படத்தின் காப்புரிமை IMRAN QURESHI / BBC "என் தாயார் அதிர்ச்சியில் உள்ளார். அவரால் பேச முடியும் என்று கூட எனக்கு தோன்றவில்லை. என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். வரும் காலங்களில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, எங்கள் தொழிலைக்கூட நான் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் பல் மருத்துவரான மஞ்சுநாத். பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஆர் விஸ்வநாத், தனது உறவினர் நாகராஜ் ரெட்டியை தேடவும், இச்சம்பவத்தில் காயமடைந்த புருஷோத்தமன் ரெட்டியை பார்க்கவும் கொழும்பு விரைந்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதே கருத்தை முன்வைக்கிறார். "இவ்வளவு பெரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் வண்டிகளில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் விமான நிலையத்தில் வெகு சில ராணுவ போலீஸார் மட்டுமே உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று இங்கு வந்தோம். ஆனால், முக்கிய இடங்களில் கூட ஒரு சில போலீஸார் மட்டுமே உள்ளனர்" என்று விஸ்வநாத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை IMRAN QURESHI / BBC "நாங்கள் கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு (அவரது உறவினர்கள் தங்கியிருந்த இடம்) சென்றபோது, அங்கு மெட்டல் டிடெக்டர் இருந்தது, ஆனால் எங்களை பரிசோதிக்க யாருமில்லை. உலகில் முக்கிய சுற்றுலாத்தளமான அங்கு பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். நாகராஜ் ரெட்டி மற்றும் புருஷோத்தம் ரெட்டி இருவரும், காலை உணவு அருந்த கிங்ஸ்பரி ஹோட்டலின் கீழ் தளத்திற்கு சென்றுள்ளனர். இதில் காயமடைந்த புருஷோத்தம் ரெட்டி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தனது உறவினரான சிவண்ணாவில் உடலை வாங்க கொழும்பு சென்றார் சிவகுமார். "மருத்துவமனைகளில் அதிக குளிர்சாதன பெட்டிகள் இல்லாததால், உடல்கள் விரைவாக அழுகத் தொடங்கின. மேலும் உடல்கள் மோசமாக காயமடைந்திருந்ததால் அவற்றை முழுவதுமாக மூட வேண்டியிருந்தது" என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-48047957

“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்

7 months 2 weeks ago
இலங்கை தற்கொலை குண்டுதாரியின் தந்தையுடன் உள்ள புகைப்படம்: அமைச்சர் றிசாட் கூறுவது என்ன? Image caption றிசாட் பதியுதீன் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது கைது செய்யப்பட்ட நபரொருவர் காணப்படும் படத்தில், தானும் இருப்பதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறு பூசுவதாக, இலங்கையின் கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். இந்த பயங்கரவாத கூட்டத்தை நான்தான் வழிநடத்துவதாக, ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, யாராவது கூறுவார்களாயின் அவர்களை விடவும் மோசமான, கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது என்றும் அவர் இதன்போது கூறினார். "கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் பதவி வகிக்கின்றேன். வர்த்தகத் துறை அமைச்சரை வர்த்தகர்கள் வந்து சந்திப்பதும், அவர்களின் பிரச்சினைகள் பற்றி கூறுவதும் வழமையாகும். அவ்வாறானதொரு சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டுதான், என் மீது சேறு பூசுகின்றார்கள்" எனவும் அவர் விவரித்தார். தன்னை ஒரு தடவை வர்த்தகர்கள் குழுவொன்று சந்தித்ததாகவும், அந்தக் குழுவில் எடுக்கப்பட்ட படத்தில் காணப்படும் இப்ராஹிம் எனும் நபர் ஒருவரை, பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளதாகவும், நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டார் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் தந்தைதான் மேற்படி நபர் எனவும் இதன்போது கூறிய அமைச்சர்; அதனை வைத்தே, தன்மீது மீது சேறு பூசப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். "இப்ராஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சனைகள் தொடர்பாக என்னை சந்தித்தனர்" என்றார் அவர். "அந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட பபடத்தை வைத்துக்கொண்டு, இந்த பயங்கரவாத கூட்டத்தை, நான் வழிநடத்துவதாக கூறுவார்களாயின் அவர்களை விட மிக மோசமான கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது". நானும் இதில் சம்பந்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் இந்த சபையிலே நா கூசாமல் கூறியிருக்கின்றார். இந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் - நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையிலிருக்கின்றோம், வெட்கப்படுகின்றோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்" என்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அங்கு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியும் அப்பாவி மக்களைக் காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும், "இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்கவேண்டும்" எனவும், அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். "புனித ஈஸ்டர் தினத்தை - கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதைவிட கேவலமான ஒன்றும் இருக்க முடியாது. புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய கரும்புலிகளுக்கே, இவ்வாறாவற்றினைச் செய்ய சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒருகுறிப்பிட்ட நேரத்தில் இந்த ஈனச்செயலை மேற்கொண்டு, ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றனர். இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி,எதிர்கால சந்ததியினரின் வாழ்வையும் சீரழித்துள்ளனர். இவ்வாறான செயலை நினைத்து நினைத்து இலங்கையிலுள்ள சுமார் 20 லட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவினரும் பெரும் கவலைகொண்டிருப்பதுடன் வேதப்படுகின்றனர். படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY அது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரின் புகைப்படத்தையும் ஆவணங்களையும்பாதுகாப்பு தரப்பினரிடம் கடந்த காலத்தில் சமர்ப்பித்தும், பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காமை குறித்து, ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன்இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர். இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறியமுழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற, செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை, இவ்வாறானபயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகத்தை வழங்க வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன். ஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக்கேட்கின்றேன். பயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடல் வழியாக வந்த ஒரு லட்சம் அகதிகளில் நானும் ஒருவன். அவர்களுடன் அகதி முகாமில் வாழ்ந்தவன், அதிலிருந்து அரசியலைஆரம்பித்தவன். நாடு இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும். நாளைய எமது எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்ட முடியும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கயவர்களைஅழிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் நடந்த சம்பவங்கள் இப்போது இலங்கையில் தலையெடுத்துள்ளது. வணாத்தவில்லு பிரதேசத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட போதும், அவர்களை விடுவிப்பதற்கு அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன். இந்த விடயத்தை இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று போலீஸாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசினார் என்று இந்த சபையில் தெரியப்படுத்தவேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து, இல்லாத பொல்லாதவிடயங்களைக் கூறி - இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன். அது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து, பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா - பலஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன" எனவும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-48047962

யாழில் நடைபாதை வியாபாரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

7 months 2 weeks ago
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். குடா நாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி ‘ பழைய இரும்புகள் , உடைந்த பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்கப்படும்’ என தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கடந்த நான்கு நாட்களாக தமது தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அதேவேளை வீதியோரங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடுவோர்களும் , வாகனங்களில் வந்து அவற்றை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து , ‘கம்பளம் ‘ உள்ளிட்ட துணிவகைகள் உடுபுடவை வியாபரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் தமது வியாபர நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். குறித்த வியாபர , தொழில் நடவடிக்கைகளில் பெரும்பாலும் முஸ்லீம் மக்களே ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/119345/

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

jaffna.jpg?zoom=0.9024999886751175&resiz
யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

குடா நாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி ‘ பழைய இரும்புகள் , உடைந்த பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்கப்படும்’ என தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கடந்த நான்கு நாட்களாக தமது தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

அதேவேளை வீதியோரங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடுவோர்களும் , வாகனங்களில் வந்து அவற்றை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து , ‘கம்பளம் ‘ உள்ளிட்ட துணிவகைகள் உடுபுடவை வியாபரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் தமது வியாபர நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

குறித்த வியாபர , தொழில் நடவடிக்கைகளில் பெரும்பாலும் முஸ்லீம் மக்களே ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/119345/