Aggregator

ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் குறித்து மீள் பரிசிலனை செய்யவும் : ஐ.நா.விடம் விக்கி கோரிக்கை!

5 months 2 weeks ago

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சர்வதேச சமூகத்தினர் முன்னிலையில் தொடர்ந்து பத்தாண்டு காலமாக தனது கடப்பாடுகளைத் ஏற்றுவந்த இலங்கை அதே தொடர் ஒழுங்குடன் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கத் தவறி வந்துள்ளது.

உண்மையில் முதல் இரு வருடங்கள் முடிந்து மேலும் கால அவகாசம் கொடுக்க விழைந்தபோது அக்காலகட்டத்தில் எம்முட் சிலர் அமெரிக்க பிரதிநிதியைச் சந்தித்து கடந்த இரு வருடங்களில் கண்கூடாக முன்னேற்றத்ததைக் காணமுடியாத நிலையில் மேலும் கால அவகாசம் கொடுப்பது அவசியமா என்று கேட்டிருந்தோம்.

தன் பாற்பட்ட பல கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை, போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாகப் பதிலளித்தலுக்கான பொறிமுறையொன்றை உருவாக்க தொடர்ந்து மறுத்து வந்தமை அதன் பிழையான செயல்களுள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

பிரிவினைப் பயங்கரவாதஞ் சார்பாக 2009 மே மாதம் தொடக்கம் இன்று வரையில் இலங்கையில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை என்று பெருமையுடன் கூறிய மதிப்பிற்குரிய அமைச்சர் குணவர்த்தன அவர்கள் அப்படியாயின் ஏன் 1979ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத (தற்காலிக)த் தடைச் சட்டத்தை இதுவரை இலங்கை கைவாங்கத் தவறியுள்ளது என்பது பற்றிக் காரணம் கூறத் தவறியுள்ளார்.

கற்றுணர்ந்த பாடங்கள், மீள் நல்லிணக்க சமரச ஆணைக்குழுக்களை நியமிப்போம் என்று 2010ல் கூறிய கூற்றின் மறு உருவமே நேற்றைய தினம் (26.02.2020) உள்ளக விசாரணை ஆணைக்குழுவை நியமிப்போம் என்று ஜெனிவாவில் கூறிய கூற்று.

இவ்வாறான உள்ளக விசாரணை ஆணைக்குழுவை அமைப்போம் என்ற இலங்கையின் புதிய கூற்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இனிவரும் பத்து வருடங்களில் கூட உண்மையைக் கண்டறிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்பதே யதார்த்தம். இலங்கையின் இவ்வாறான வாக்குறுதிகள் மதிப்பற்ற வாக்குறுதிகள்.

காரணம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து வந்துள்ள சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் ஒருமித்த கருத்தை உதாசீனம் செய்யும் இந்தச் செயற்பாடு சம்பந்தமாக போதுமான பதில் நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என்பதே எமது திடமான வேண்டுகோள்.

தனது உலகளாவிய நியாயாதிக்க அதிகாரத்தைப் பாவிக்க வேண்டிய கடப்பாடு தற்போது சர்வதேச சமூகத்தைச் சார்ந்துள்ளது. அதைப் பாவித்து மிகக் கொடூரமான இவ்வாறான குற்றங்களைப் பற்றி ஆராயும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது அதே மாதிரியான அதிகாரம் கொண்ட வேறு மன்றங்களின் முன் இலங்கையின் படையணியினரின் பணியாளர்களை நிறுத்த சர்வதேச சமூகமானது முன் வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் பிரேரணைகளைத் தொடர்ந்து மதிக்காது மீறி வந்துள்ள இலங்கையின் நடத்தையையும் நாட்டின் மக்களிடையே குறிப்பிடட சில பகுதியினருக்கு எதிராக அரசாங்க அனுசரணையுடன் பலகாலமாக நடாத்தி வந்த தவறான செயல்பாடுகளையும் கணக்கில் எடுக்கும்போது இலங்கையை ஐக்கிய நாடுகள் பட்டய உறுப்புரை 6 ன் கீழ் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றே நாம் நம்புகின்றோம்.

குறித்த உறுப்புரை 6 பின்வருமாறு-

தற்போதைய பட்டயத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகளைத் தொடர்ந்து மீறிச் செயற்படும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் ஒருவரை பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் குறித்த நிறுவனத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் வெளியேற்ற முடியும்

எனவே பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொது சபையானது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இன்று வரையில் இலங்கை உலகை உதாசீனம் செய்து வந்துள்ளது. உலகானது நடவடிக்கை எடுக்க இப்போது தருணம் உதயமாகியுள்ளது. ஒரு உறுப்பு நாடு தனது கடப்பாடுகளை மீற இன்று ஐக்கிய நாடுகள் இடமளித்தால் நாளை இந்த உலக நிறுவனத்தின் சாவு மணியைக் கேட்கநேரிடும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76734

எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

5 months 2 weeks ago
எண்ணெய்ப்பனை என்பதுதான் அதன் பெயரா?? அல்லது கட்டுரையாளர் தன் விருப்பத்துக்கு ஒரு பெயரை வைத்துள்ளாரா? அதை பார்க்காத தென்னை ஓலை போல் இருக்கு. புதியதொரு தகவலுக்கு நன்றி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

5 months 2 weeks ago
இவர் நாலாம் வகுப்பும் படிக்காமல் ஓடிவந்திட்டார் , நான் அநியாயமாய் கூட ஆறு வருடங்கள் படித்து வாழ்க்கையை வீணாக்கி போட்டன்.தவணை முறையில் என்றாலும் பாருங்கள் அவரின் சாதனைகளை.....! 😂

புறநானூறு பாடலில் பன்னாட்டு ஓவியப் போட்டி. #பேரவை2020

5 months 2 weeks ago
North America, presents an event that recognizes Tamil American Pioneers in a certain field, people who are passionate trailblazers in their careers, who are paving the way for the next generation. Objectives of Tamil American Pioneers awards event are:1) Honor and celebrate the extraordinary professional achievements of Tamil Americans in a variety of disciplines. These achievements should have been validated by professional organizations in their respective fields. 2) Provide a formal networking forum for Tamil American professionals 3) Motivate and inspire younger generations of Tamil Americans. To learn more about TAP awards and find out the past award recipients, please check out Tamil American Pioneers Webpage at http://tap.fetna.org/ This is a Prestigious Award from FeTNA. To nominate, please use the form at https://tinyurl.com/TAPNom Please send your nominations by 3/3/2020. However we receive the nominations through out the year. Nominations that are received after March 3 will be considered for next year. IMPORTANT! Please do not let the person whom you are nominating know about the fact that you are nominating. This is similar to Nobel Prize nominations and we want to treat the nominations confidential.

800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய்

5 months 2 weeks ago
இவ்வாறான முயற்சிகள் மேலும் வெற்றிபெற களங்சியப்படுத்தல், குளிரூட்டல் மற்றும் சந்தைப்படுத்தும் திறனாற்றலையும் வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தரகர் மார் தான் அதிகம் உழைப்பார்கள்.

இந்தியாவில் இருந்து பூக்கள், பழங்கள், சுவிற் கொண்டு வர யாழ் விமான நிலையத்தில் தடை.!

5 months 2 weeks ago
பல நாடுகளிலும் இவ்வாறான தடை உள்ளது. காரணம், பயிரினங்கள்; பூக்கள் மற்றும் பழங்கள் ஊடாக பூச்சிகள் பரவி தமது நாட்டில் துவம்சம் செய்யும் என்ற பயம்.

சாய்ந்தமருதும் பேரினவாதமும்

5 months 2 weeks ago
சாய்ந்தமருதும் பேரினவாதமும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 27 இம்மாதம் 14ஆம் திகதியன்று, சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. அதற்கு அரசாங்கம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. இது போன்று புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கூறினார். சாய்ந்தமருது வர்த்தமானியை இரத்துச் செய்வதற்காக அவர் தெரிவித்த காரணத்தில், இரண்டு கருத்துகள் பொதிந்துள்ளன. முதலாவதாக, அரசாங்கம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்காமல் இருக்கப்போவதில்லை என்பதாகும். இரண்டாவது, வழங்கப்படவிருக்கும் ஏனைய உள்ளூராட்சி சபைகளோடு அதுவும் எதிர்க்காலத்தில் வழங்கப்படும் என்பதாகும். சாய்ந்தமருதுக்கான சபை எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றால், ஏற்கெனவே வழங்கப்பட்டதை ஏன் இரத்துச் செய்யவேண்டும்? வழங்கப்பட்டதை அவ்வாறே விட்டுவிட்டு, ஏனைய சபைகளைப் பின்னர் வழங்கலாமே! “இந்தச் சபையை வழங்கியமைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளாலேயே, இவ்வாறு இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதா?” என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்ப, இல்லை என்றார். அவ்வாறாயின், வழங்கப்பட்டதை விட்டு விட்டு ஏனையவற்றைப் பின்னர் வழங்கலாம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. சாய்ந்தமருது சபையானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, தாமாக முன்வந்து வழங்கிய சபையல்ல. முன்னைய அரசாங்கமே அதனை வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அதைப் பூர்த்தி செய்யவே, தற்போதை அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் என்று கூறுவதைப் போல், அச்சபையை நிறுவுவதற்காக முன்னைய அரசாங்கத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அலுவல்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணத்தை, அமைச்சர் குணவர்தன, ஊடகவியலாளர்களிடம் காட்டினார். தமது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படும் போதே, ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், “இது நாம் ஆரம்பித்து அல்ல; முன்னைய அரசாங்கம் ஆரம்பித்தது” என்று கூறுவர். ஒருவேளை, தாம் எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் அமைந்தால், அதற்கான பெருமையை, எந்தவோர் அரசியல்வாதியும் தமது போட்டியாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதில்லை. உண்மையிலேயே, அந்தப் போட்டியாளர்கள்தான் அந்தக் காரியத்தை ஆரம்பித்திருந்தாலும், அதற்கான நற்பெயர் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மற்றவர்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த திட்டங்களை, அவர்களுக்கு அழைப்பு விடுக்காமலே திறந்துவைக்கும் நாடு இலங்கை மாத்திரமேயாகும். அவ்வாறிருக்க, பைஸர் முஸ்தபாதான், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுத்தாரென்று, அமைச்சர் பந்துல ஏன் கூறவேண்டும்? யாரோ முன்வைத்த விமர்சனத்துக்கே, அதன் மூலம் அவர் பதிலளித்தார் போலத்தான் தெரிகிறது. யார் அவ்வாறு விமர்சித்தவர் அல்லது விமர்சித்தவர்கள்? எந்தவொரு தமிழ்த் தலைவரும், சாய்ந்தமருதுக்கு நகர சபையொன்றை வழங்குவதை எதிர்க்கவில்லை. அவர்கள், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டும் என்றே கூறினர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் எடுத்துக்கூறி, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைத் தானே நிறுத்தியதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதியாகவிருந்து, பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த சனிக்கிழமையன்று கிழக்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார். ஆனால், அவரே அதற்கு முன்னொருநாள், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தால் கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அதுதான் உண்மையென்றால், சாய்ந்தமருதுக்கான வர்த்தமானியைத் தானே நிறுத்தியதாக அவர் கூறுவது பொய். அல்லது, கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாவதை அவர் விரும்பவில்லை. சில சிங்களத் தனி நபர்களும் சமூக வலைத்தளங்களில் கொக்கரிப்பவர்களும் தவிர, வெளிப்படையாக ஊடகவியலாளர்களை அழைத்து, சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஓர் அமைப்பு மட்டும்தான் இருக்கிறது. அது தான், ராஜபக்‌ஷர்களைத் தெய்வதாக மதிக்கும் டொக்டர் குணதாச அமரசேகர மற்றும் டொக்டர் வசந்த பண்டார ஆகியோர் தலைமையிலான “தேசபக்த தேசிய அமைப்பு” ஆகும். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்றை வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றைத் தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார். இது, பேரினவாதிகளின் மனநோயொன்றையே மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. அவர்கள், பிற சமூகமொன்றைத் தாக்கிப் பேச வேண்டும் என்றால், கையிலெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம்தான், “தனி நாடு ஒன்றை உருவாக்கப் போகிறார்கள்” என்ற குற்றச்சாட்டாகும். ஒரு காலத்தில், கண்ணில் படும் அத்தனைத் தமிழரும் தனித் தமிழ் நாட்டுப் போராட்டத்துக்கு உதவுவதாகக் கூறினர். சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், “கொட்டியா” (புலி) என்றே திட்டினார்கள். பின்னர், மலையகத் தலைவர்கள், “மலைநாடு என்றதோர் தனி நாட்டை உருவாக்கப் போகிறார்கள்” என்று கூறித் திரிந்தனர். அதற்குப் பதிலளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், “மலைநாட்டை உருவாக்கத் தேவையில்லை. பூமி உருவான நாள் முதல் அது இருக்கிறது” என்று கூறியிருந்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவிலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் கல்முனையில் தமிழ்ப் பேசும் கச்சேரியொன்று திறக்கப்பட வேண்டும் என்றும் கோரிய போது, “கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி நாடொன்றை அஷ்ரப் அமைக்கப் போகிறார்” எனக் கூச்சலிட்டனர். அதைத் தவிர, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த வர்த்தமானியை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவரது இனவாதப் போக்கைக் கருத்திற்கொள்ளும் போது, அந்தச் செய்தி உண்மையாகவும் இருக்கலாம். மன்னார் பனை அபிவிருத்திச் சபையின் பெயர்ப் பலகையொன்றில், தமிழ் எழுத்துகளுக்குக் கீழே சிங்கள எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆவேசமடைந்த விமல், அந்தப் பெயர் பலகையை மாற்றியதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்று வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றை தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருக்கும் கருத்தும் விசித்திரமானதாகும். பாரியதோர் முஸ்லிம் பிரதேசத்தைப் பிரித்தே, சாய்ந்தமருது மாநகர சபை உருவாக்கப்பட்டது. முஸ்லிம் பிரதேசங்கள் ஒன்றுசேர்வதற்குப் பதிலாக, பிரிந்து தனி நாடு அமைவது எவ்வாறு? இவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை விரும்பாததற்குக் காரணம், தனித் தமிழ்நாடொன்று உருவாக அது வசதியாகும் என்பதாலாகும். மாகாணங்கள் இணைவதால் தனிநாடு உருவாகும் என்று கூறும் இந்தப் பேரினவாதிகள், முஸ்லிம் பிரதேசங்கள் பிரிவதாலும் தனிநாடு உருவாகும் என்கிறார்கள். கல்முனைப் பிரதேசத்துக்குக் கச்சேரியொன்று வழங்கப்பட வேண்டும் என, இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிய போதும், முஸ்லிம் தனி நாடு வரப்போகிறது என்று அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், சிங்கள் மொழி தெரியாத அம்பாறை மாவட்டத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், அம்பாறைக் கச்சேரிக்குச் சென்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாலேயே, தமிழ் பேசும் கச்சேரியொன்றை, அப்போதைய முஸ்லிம் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கும் தனிநாட்டுச் சாயம் பூசப்பட்டது. இம்முறை அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இந்த பேரினவாதம் பெரிய அலையாக் கிளம்பாவிட்டாலும், அதற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என்பதே உண்மை. புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல இலங்கையில் கிராம சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ அல்லது 1987ஆம் ஆண்டில் தற்போதைய பிரதேச சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ புதிதாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சி சபையே கடந்த 14ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது நகரசபை என்பதைப் போலத்தான், சில பேரினவாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், தனியாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சிசபை, சாய்ந்தமருது நகர சபையல்ல. அதற்கு முன்னரும் சில இடங்களில் புதிதாகத் தனித்தனியான உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், ஏற்கெனவே இருந்த உள்ளூராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டில் பிரதேச சபைகள் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அக்காலத்தில் இருந்த நான்கு கிராம சபைகள் ஒன்றிணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது பின்னர் அது நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டு, 2001ஆம் ஆண்டில் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டது. 2011ஆம் ஆண்டில், அக்கரைப்பற்று மாநகர சபையின் உருவாக்கமும் மற்றோர் உதாரணமாகும். அப்போது, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வே உள்ளூராட்சி அமைச்சராகக் கடமையாற்றினார். அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கிருந்த பிரதேச சபையைப் பிரித்து, மாநகர சபையொன்றை உருவாக்கினார். இதற்கு அக்காலத்தில் “கபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுகான பிரசார அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. பிரதேச சபையொன்று முதலில் நகர சபையாகத் தரமுயர்த்தப்படாமல், நேரடியாகவே மாநகர சபையாகத் தரமுயர்த்தப்படுவது முறையானதல்ல என்பதே அவர்களது வாதமாகியது. அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்து அக்கரைப்பற்று மாநகர சபை பிரித்தெடுக்கப்பட்ட போது, மீதமாக இருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை, சுமார் 4,000 எனவும் கபே கூறியது. ஆனால், அந்த எதிர்ப்புகளை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதற்கு, மஹிந்த தரப்பு ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதே அரசாங்கத்தில் இருந்தவர்கள்தான், இப்போது சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சாய்ந்தமருது நகர சபைக்கான ஆர்ப்பாட்டங்கள், 2017ஆம் ஆண்டிலேயே உச்சகட்டத்தை அடைந்தன. அதே காலத்தில், மலையகத்திலும் உள்ளூராட்சி சபைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நான்கு புதிய சபைகளாகப் பிரித்து, எட்டு சபைகளை உருவாக்க வேண்டும் என்பதே மலையகத் தலைவர்களின் குறிப்பாகத் தமிழ் முற்போக்கு முன்னணியின் கோரிக்கையாக இருந்தது. அந்தக் கோரிக்கைக்காக அவர்கள் முன்வைத்த காரணங்களை எவராலும் மறுக்க முடியவில்லை. இந்த இரண்டு பிரதேச சபைகளினதும் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், ஒவ்வொன்றிலும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகவும் ஒவ்வொன்றிலும் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல சுமார் 100 கிலோமீற்றரைக் கடக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டினர். அதேவேளை, 10,000 மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் உள்ளூராட்சி சபைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். அவ்வாறிருந்தும், அந்தத் தலைவர்கள் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கமே அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை. தாம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மலையகத் தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் சாய்ந்தமருதுக்கும் உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்க வேண்டியிருக்கும் என அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க கூறியதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் கூறியிருந்தார். அவ்வாறாயின், அதையும் கொடுங்கள், இதையும் தாருங்கள் என்று அடம்பிடித்து, தாம் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.மலையகத் தலைவர்களின் அந்தப் போராட்டம் வெற்றியளித்தது. 2017 முடிவடைவதற்குள், புதிதாக 6 பிரதேச சபைகளுடன் நுவரெலியாவும் அம்பகமுவவும் சேர்த்து எட்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாய்ந்தமருதும்-பேரினவாதமும்/91-246139

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 27

இம்மாதம் 14ஆம் திகதியன்று,  சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான  வர்த்தமானி அறிவித்தலை  வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. 

அதற்கு அரசாங்கம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. இது போன்று புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கூறினார்.

சாய்ந்தமருது வர்த்தமானியை இரத்துச் செய்வதற்காக அவர் தெரிவித்த காரணத்தில், இரண்டு கருத்துகள் பொதிந்துள்ளன. முதலாவதாக, அரசாங்கம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்காமல் இருக்கப்போவதில்லை என்பதாகும். இரண்டாவது, வழங்கப்படவிருக்கும் ஏனைய உள்ளூராட்சி சபைகளோடு அதுவும் எதிர்க்காலத்தில் வழங்கப்படும் என்பதாகும். 

சாய்ந்தமருதுக்கான சபை எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றால், ஏற்கெனவே வழங்கப்பட்டதை ஏன் இரத்துச் செய்யவேண்டும்? வழங்கப்பட்டதை அவ்வாறே விட்டுவிட்டு, ஏனைய சபைகளைப் பின்னர் வழங்கலாமே! “இந்தச் சபையை வழங்கியமைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளாலேயே, இவ்வாறு இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதா?” என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்ப, இல்லை என்றார். அவ்வாறாயின், வழங்கப்பட்டதை விட்டு விட்டு ஏனையவற்றைப் பின்னர் வழங்கலாம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை.

சாய்ந்தமருது சபையானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, தாமாக முன்வந்து வழங்கிய சபையல்ல. முன்னைய அரசாங்கமே அதனை வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும்  அதைப் பூர்த்தி செய்யவே, தற்போதை அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் என்று கூறுவதைப் போல், அச்சபையை நிறுவுவதற்காக முன்னைய அரசாங்கத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அலுவல்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணத்தை, அமைச்சர் குணவர்தன, ஊடகவியலாளர்களிடம் காட்டினார்.

தமது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படும் போதே, ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், “இது நாம் ஆரம்பித்து அல்ல; முன்னைய அரசாங்கம் ஆரம்பித்தது” என்று கூறுவர். ஒருவேளை, தாம் எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் அமைந்தால், அதற்கான பெருமையை, எந்தவோர் அரசியல்வாதியும் தமது போட்டியாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதில்லை. உண்மையிலேயே, அந்தப் போட்டியாளர்கள்தான் அந்தக் காரியத்தை ஆரம்பித்திருந்தாலும், அதற்கான நற்பெயர் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மற்றவர்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த திட்டங்களை, அவர்களுக்கு அழைப்பு விடுக்காமலே திறந்துவைக்கும் நாடு இலங்கை மாத்திரமேயாகும்.

அவ்வாறிருக்க, பைஸர் முஸ்தபாதான், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுத்தாரென்று, அமைச்சர் பந்துல ஏன் கூறவேண்டும்? யாரோ முன்வைத்த விமர்சனத்துக்கே, அதன் மூலம் அவர் பதிலளித்தார் போலத்தான் தெரிகிறது. யார் அவ்வாறு விமர்சித்தவர் அல்லது விமர்சித்தவர்கள்?

எந்தவொரு தமிழ்த் தலைவரும், சாய்ந்தமருதுக்கு நகர சபையொன்றை வழங்குவதை எதிர்க்கவில்லை. அவர்கள், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டும் என்றே கூறினர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் எடுத்துக்கூறி, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைத் தானே  நிறுத்தியதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதியாகவிருந்து, பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த சனிக்கிழமையன்று  கிழக்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார். 

ஆனால், அவரே அதற்கு முன்னொருநாள், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தால் கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அதுதான் உண்மையென்றால்,  சாய்ந்தமருதுக்கான வர்த்தமானியைத் தானே நிறுத்தியதாக அவர் கூறுவது பொய். அல்லது, கல்முனைக்குத் தமிழ் மேயர் ஒருவர் தெரிவாவதை அவர் விரும்பவில்லை. 

சில சிங்களத் தனி நபர்களும் சமூக வலைத்தளங்களில் கொக்கரிப்பவர்களும் தவிர, வெளிப்படையாக ஊடகவியலாளர்களை அழைத்து, சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஓர் அமைப்பு மட்டும்தான் இருக்கிறது. அது தான், ராஜபக்‌ஷர்களைத் தெய்வதாக மதிக்கும் டொக்டர் குணதாச அமரசேகர மற்றும் டொக்டர் வசந்த பண்டார ஆகியோர் தலைமையிலான “தேசபக்த தேசிய அமைப்பு” ஆகும். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்றை வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றைத் தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார்.

இது, பேரினவாதிகளின் மனநோயொன்றையே மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. அவர்கள், பிற சமூகமொன்றைத் தாக்கிப் பேச வேண்டும் என்றால், கையிலெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம்தான், “தனி நாடு ஒன்றை உருவாக்கப் போகிறார்கள்” என்ற குற்றச்சாட்டாகும். 

ஒரு காலத்தில், கண்ணில் படும் அத்தனைத் தமிழரும் தனித் தமிழ் நாட்டுப் போராட்டத்துக்கு உதவுவதாகக் கூறினர். சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், “கொட்டியா” (புலி) என்றே திட்டினார்கள். பின்னர், மலையகத் தலைவர்கள், “மலைநாடு என்றதோர் தனி நாட்டை உருவாக்கப் போகிறார்கள்” என்று கூறித் திரிந்தனர். அதற்குப் பதிலளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், “மலைநாட்டை உருவாக்கத் தேவையில்லை. பூமி உருவான நாள் முதல் அது இருக்கிறது” என்று கூறியிருந்தார். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவிலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் கல்முனையில் தமிழ்ப் பேசும் கச்சேரியொன்று திறக்கப்பட வேண்டும் என்றும் கோரிய போது, “கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி நாடொன்றை அஷ்ரப் அமைக்கப் போகிறார்” எனக் கூச்சலிட்டனர். 

அதைத் தவிர, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த வர்த்தமானியை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவரது இனவாதப் போக்கைக் கருத்திற்கொள்ளும் போது, அந்தச் செய்தி உண்மையாகவும் இருக்கலாம். மன்னார் பனை அபிவிருத்திச் சபையின் பெயர்ப் பலகையொன்றில், தமிழ் எழுத்துகளுக்குக் கீழே சிங்கள எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆவேசமடைந்த விமல், அந்தப் பெயர் பலகையை மாற்றியதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, அதற்கு உள்ளூராட்சி சபையொன்று வழங்குவதானது, தனி முஸ்லிம் அரசொன்றை தோற்றுவிப்பதற்கான அடிக்கல்லாகும் என, டொக்டர் வசந்த பண்டார தெரிவித்திருக்கும் கருத்தும் விசித்திரமானதாகும். 

பாரியதோர் முஸ்லிம் பிரதேசத்தைப் பிரித்தே, சாய்ந்தமருது மாநகர சபை உருவாக்கப்பட்டது. முஸ்லிம் பிரதேசங்கள் ஒன்றுசேர்வதற்குப் பதிலாக, பிரிந்து தனி நாடு அமைவது எவ்வாறு? இவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை விரும்பாததற்குக் காரணம், தனித் தமிழ்நாடொன்று உருவாக அது வசதியாகும் என்பதாலாகும். மாகாணங்கள் இணைவதால் தனிநாடு உருவாகும் என்று கூறும் இந்தப் பேரினவாதிகள், முஸ்லிம் பிரதேசங்கள் பிரிவதாலும் தனிநாடு உருவாகும் என்கிறார்கள்.

கல்முனைப் பிரதேசத்துக்குக் கச்சேரியொன்று வழங்கப்பட வேண்டும் என, இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிய போதும், முஸ்லிம் தனி நாடு வரப்போகிறது என்று அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், சிங்கள் மொழி தெரியாத அம்பாறை மாவட்டத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், அம்பாறைக் கச்சேரிக்குச் சென்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாலேயே, தமிழ் பேசும் கச்சேரியொன்றை, அப்போதைய முஸ்லிம் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கும் தனிநாட்டுச் சாயம் பூசப்பட்டது. இம்முறை அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இந்த பேரினவாதம் பெரிய அலையாக் கிளம்பாவிட்டாலும், அதற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என்பதே உண்மை. 

புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல

இலங்கையில் கிராம சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ அல்லது 1987ஆம் ஆண்டில் தற்போதைய பிரதேச சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ புதிதாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சி சபையே கடந்த 14ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது நகரசபை என்பதைப் போலத்தான், சில பேரினவாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், தனியாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சிசபை, சாய்ந்தமருது நகர சபையல்ல.   

அதற்கு முன்னரும் சில இடங்களில் புதிதாகத் தனித்தனியான உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், ஏற்கெனவே இருந்த உள்ளூராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டில் பிரதேச சபைகள் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அக்காலத்தில் இருந்த நான்கு கிராம சபைகள் ஒன்றிணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது பின்னர் அது நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டு, 2001ஆம் ஆண்டில் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டது.

2011ஆம் ஆண்டில், அக்கரைப்பற்று மாநகர சபையின் உருவாக்கமும் மற்றோர் உதாரணமாகும். அப்போது, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வே உள்ளூராட்சி அமைச்சராகக் கடமையாற்றினார். அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கிருந்த பிரதேச சபையைப் பிரித்து, மாநகர சபையொன்றை உருவாக்கினார். இதற்கு அக்காலத்தில் “கபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுகான பிரசார அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. பிரதேச சபையொன்று முதலில் நகர சபையாகத் தரமுயர்த்தப்படாமல், நேரடியாகவே மாநகர சபையாகத் தரமுயர்த்தப்படுவது முறையானதல்ல என்பதே அவர்களது வாதமாகியது. 

அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்து அக்கரைப்பற்று மாநகர சபை பிரித்தெடுக்கப்பட்ட போது, மீதமாக இருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை, சுமார் 4,000 எனவும் கபே கூறியது. ஆனால், அந்த எதிர்ப்புகளை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதற்கு, மஹிந்த தரப்பு ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதே அரசாங்கத்தில் இருந்தவர்கள்தான், இப்போது சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

சாய்ந்தமருது நகர சபைக்கான ஆர்ப்பாட்டங்கள், 2017ஆம் ஆண்டிலேயே உச்சகட்டத்தை அடைந்தன. அதே காலத்தில், மலையகத்திலும் உள்ளூராட்சி சபைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நான்கு புதிய சபைகளாகப் பிரித்து, எட்டு சபைகளை உருவாக்க வேண்டும் என்பதே மலையகத் தலைவர்களின் குறிப்பாகத் தமிழ் முற்போக்கு முன்னணியின் கோரிக்கையாக இருந்தது.

அந்தக் கோரிக்கைக்காக அவர்கள் முன்வைத்த காரணங்களை எவராலும் மறுக்க முடியவில்லை. இந்த இரண்டு பிரதேச சபைகளினதும் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், ஒவ்வொன்றிலும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகவும் ஒவ்வொன்றிலும் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல சுமார் 100 கிலோமீற்றரைக் கடக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டினர். அதேவேளை, 10,000 மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் உள்ளூராட்சி சபைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். 

அவ்வாறிருந்தும், அந்தத் தலைவர்கள் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கமே அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை. தாம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மலையகத் தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் சாய்ந்தமருதுக்கும் உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்க வேண்டியிருக்கும் என அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க கூறியதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் கூறியிருந்தார்.

அவ்வாறாயின், அதையும் கொடுங்கள், இதையும் தாருங்கள் என்று அடம்பிடித்து, தாம் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.மலையகத் தலைவர்களின் அந்தப் போராட்டம் வெற்றியளித்தது. 2017  முடிவடைவதற்குள், புதிதாக 6 பிரதேச சபைகளுடன் நுவரெலியாவும் அம்பகமுவவும் சேர்த்து எட்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, புதிய உள்ளூராட்சி சபைகள் ஒன்றும் புதிய விடயமல்ல.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாய்ந்தமருதும்-பேரினவாதமும்/91-246139

ஐ.நா தீர்மானமும் ஆறிப்போன ரீயும்

5 months 2 weeks ago
ஐ.நா தீர்மானமும் ஆறிப்போன ரீயும் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ ஜெனீவாக்களை நாம் கண்டுள்ளோம். அந்த வரிசையில் இப்போது இன்னொரு ஜெனீவா, அவ்வளவேதான்! இதை நாம் புரிந்து கொள்ளாமல், நம்பிக்கை வளர்ப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை, எதையும் சாதிக்காது என்பது கொஞ்சம் பகுத்தறிவுள்ள எந்தவொரு மனிதனுக்கும் விளங்கியிருக்கும். ஆனால், அதை வைத்து நடக்கும் அரசியல் ஆட்டம் இன்னமும் தொடர்கிறது. இலங்கை அரசாங்கம், தானே முன்வந்து ஒத்துழைத்த பிரேரணையில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்த முன்னைய இலங்கை அரசாங்கமே, அந்தப் பிரேரணையில் உள்ளவற்றை இலங்கையில் செய்யவில்லை. அந்த அரசாங்கத்துக்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கொடுத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது, இலங்கை விலகினாலும் மாற்று வழிகளைச் சர்வதேசம் பயன்படுத்துகிறது. அதன்படி, இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது என்று ‘கரடி’ விடுகிறார்கள். அமெரிக்காவே, இன்று மனித உரிமைகள் பேரவையில் இல்லை. அது விலகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜெனீவாத் தீர்மானம், இதுவரை எதைச் சாதித்திருக்கிறது என்று பார்த்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு உதவியிருக்கிறது. சர்வதேசம் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறது என்று, சிங்களத் தேசியவாதத்தைத் தூண்டி, ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு மீள்வதற்கு வழி செய்துள்ளது. இதைத் தவிர, எதையும் செய்யவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்த் தேசியவாத அரசியல், அதே ரீயை ஆத்தி வந்துள்ளது. இன்னமும் காணாமல் போனவர்களின் கதி, என்னவென்று தெரியாது. அதற்கான எந்தவொரு பதிலையும் இலங்கை அரசாங்கம் இன்றுவரை வழங்கவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை, எட்டாக் கனியாக உள்ளது. ஆனால், தமிழ் மக்களின் பெயரால், அதிகாரத்தில் உள்ளவர்கள் உய்வடைந்து இருக்கிறார்கள். ஜெனீவா, இன்னொரு வகையில் காணிகளை வளைத்துப் போடவும் தனியார் மருத்துவமனைகள் கட்டவும் அரச சலுகைகள், அரச உத்தியோகங்கள், அரச வீடுகள் என்பவற்றைப் பெறவும் உதவியுள்ளது. ஜெனீவா மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று விரும்புவது, அதிகாரத்தில் உள்ளவர்களும் அவர்தம் அடிவருடிகளுமே ஆவார். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, அதுவொரு விற்பனைச் சரக்கு; அடிவருடிகளுக்கு ஜெனீவாப் பயணம். இவர்கள்தான், இலங்கைக்கு எதிராக மாற்றுவழியைப் பிரயோகித்து, மியன்மாருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது போல, இலங்கையை நிறுத்த முடியும் என்று ஆலோசனை சொல்லி, தலைப்புச் செய்தி வரைபவர்கள். இவர்களுக்கு, சர்வதேச நீதிமன்றத்துக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கும் வித்தியாசம் தெரியாது. இரண்டின் நியாயாதிக்கங்களின் தன்மை தெரியாது. கடந்தவாரம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, முன்கூட்டியே வெளியிடப்பட்டது. இதை வாசித்தவர்கள் எத்தனை பேர்? அதில் சொல்லப்பட்ட விடயங்கள் மேலும் மேலும் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன என்ற செய்தியை அவதானித்தவர்கள் எத்தனை பேர்? இலங்கை அரசுடன் கெஞ்சியும் கொஞ்சியும் பேசுகின்ற தொனி, எதைக் குறிக்கிறது? இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை. இதன் பின்னணியில், நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய இரண்டு செய்திகள் உண்டு. ஒன்று, தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை, சிங்கள ஆளும் வர்க்கப் பேரினவாத சக்திகளுடன் வைத்து வந்த வர்க்க உறவானது, இன நலன்களை விட மிக வலிமையானதாகும். தமிழ்த் தேசியவாத அரசியலின் சீரழிவைக் கடந்த சில ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், எமக்குக் காட்டி நிற்கின்றன. இந்தச் சீரழிவானது, உண்மையில் தமிழ்த் தேசியவாதிகளது நாடாளுமன்றத் தரகு அரசியல் வறுமையின் இழிநிலையின் வெளிப்பாடே ஒழிய வேறேதுவுமில்லை. இன்றும் அடித்துக் கொள்வதும் அங்கலாய்ப்பதும் அதிகாரக் கதிரைகளுக்காகவே அன்றி, மக்கள் நலன்களுக்கானவை அல்ல. அதிகாரக் கதிரைக்கான பயனுள்ள குதிரை சர்வதேச சமூகம். அதில், முடியும் மட்டும் பயணிக்க அவர்கள் தயார்; நாம் தயாரா? ஜெனீவா என்ற ரீ ஆறி, ஆண்டுகள் பலவாகி விட்டன. ஆனால், இன்றும் இனியும் அதை ஆத்த, அவர்கள் தயாராக இருக்கிறார்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-நா-தீர்மானமும்-ஆறிப்போன-ரீயும்/91-246141