Aggregator

மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் வடக்கு ஆளுநர்!!

14 hours 45 minutes ago
பன்னீர் தெளித்து வரவேற்பது தமிழ் இனத்தவரின் மரபு. இந்தத் தமிழர் மரபை ஒரு சிங்கள இனத்தவர்மேல் திணிப்பது தவறு. - ஆளுனர் யாழில். சிங்கள பெளத்த மரபுப்படி, கண்டி சிறீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். தமிழரான அந்த ஆளுனர். 😲

ஜிகாதி மனைவி திரும்ப UK அரசு அனுமதிக்குமா?

15 hours 35 minutes ago
ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விடுதலைக்காக போரிட்ட ஈழத்தமிழர்களிர் மிகப்பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்த போதும் இந்து மத இந்தியர்கள் அதை ஆரம்பத்தில் இருந்தே எம்மை ஆதரிப்பது போல் நடித்துக் கொண்டு ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக எல்லா உதவியும் பெளத்த சிங்கள அரசுக்கு செய்தனர்.ஏனெனில் அவர்கள் நிறுவ விரும்புவது சமத்துவமான இந்து மதத்தை அல்ல.பார்ப்பன மேலாதிக்கத்தையும் வருணாசிரமத்தையும் ஏற்றுக்கொண்ட இந்து அடிமைகளைத்தான். ஈழத்தமிழரை இந்துக்களாக பார்ததைவிட கீழ்ஜாதியினராகவே இந்தி ஆளும் வர்க்கத்தினர் பார்ததார்கள். ஈழத்தமிழர்கள் கிறிஸதவர்களாக இருந்து பக்கத்தில் இந்தியா போல ஒரு கிறிஸதவ நாடு இருந்திருந்தால் நிச்சயமாக எம்மை மதத்துக்காகவேனும் ஆதரித்து எமது நியாயபூர்வ உரிமைகளை பெற்றுத் தந்திருப்பார்கள். ஆனால் இந்து மதத்தில் அவர்கள் கடவுளை விட தமது பார்பன மேலாண்மையை அதிகம் இரும்புவதால் அவர்கள் பூசை செய்யும் கடவுளுக்கு கூட பயப்பட மாட்டார்கள். (ஏனென்றால் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தான் எம்மை விட நன்றாக தெரியும்)

பிரியங்கா காந்தியின் கணவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

15 hours 38 minutes ago
தமிழ் பழமொழி ஒன்று... ஆடான ஆடெல்லாம் குலைக்கு அழ, சொத்தி ஆடு எதுக்கோ அழுத்திச்சாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.... நேருவின் பூட்டி, இந்திராவின் பேத்தி, ராஜீவின் மகள்..... இது பெரிய இடமப்பா என்று ஆனான ஆடுகள் எல்லாம் விலத்திப் போக... சொத்தி ஆடுபோல, பிரியங்காவின் ரூமுக்கு, பீரோ டெலிவரி செய்ய வந்தவர் தான் இந்த மனிதர். அப்படியே, பீரோவை பூட்டி தருவதாகவும் இலவச மேலதிக சேவையும் கொடுத்து, அங்க, வைக்கிறதா, இங்க வைக்கிறதா என்று பேச்சுக் கொடுத்து..... சொத்தி ஆடு.... எதுக்கோ அழுது.... அதை எடுத்துக் கொண்டு விட்டது...

புல்வாமா தாக்குதல்: தண்டனை நிச்சயம் - சூளுரைத்த நரேந்திர மோதி

16 hours 3 minutes ago
மீண்டும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்காக கொஞ்சப்பேரை இந்தியாவே மிகவும் திட்டமிட்டுப் பலியாக்கிவிட்டினம் மற்றும்படி ஒன்றுமில்லை வெடித்தது 350 கிலோ வெடிமருந்து எனக்கூறும்போகே தெரியவில்லையா உங்களுக்கு என்ன தற்கொலைக்குண்டுதாரி துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுத்திட்ட செத்தவன் இவ்வ்ளவு நிறை என அந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுசெய்யும் அந்த ஊர் ஜெயராஜா கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க இந்தியாவால் திரைமறைவில் இயக்கப்படும் ஒரு தீவிரவாதக்குழுவால் இந்திய அரசாங்கத்தின் மறைவுவேலையால் செய்யப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் இன்னும் சில வாரத்திலோ மாதத்திலோ நாம் எல்லொரும் இதைப்பத்தி மறந்திருக்கும்வேளை இந்திய இராணுவம் ஒரு சேர்ஜிகல் ஸ்ராக் செய்தது என சினிமா செற்போல ஒரு செற்றைப்போட்டு அங்கு நிருபர்களைக் கண்ணைக்கட்டிக்கூட்டிக்கொண்டுபோய் சுத்தவர நிக்கவைச்சிட்டு ஒரு நாடகம் ஆடுவாங்கள் கஸ்மீரும் பாகிச்தானும் பச்சையாகவும் இந்தியா மஞ்சளாகவுமா காட்சியளிக்குது எல்லா நிலமும் அந்தப்பகுதியில் ஒரேமாதிரித்தான் இருக்கும் சுண்ணாகத்தை ப் படமெடுத்துவிட்டு இணுவில் என்று சொன்னால் நம்பமாட்டியளோ அதுபோல்தான் இதுவும்.

விக்னேஸ்வரனுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு- வியாழன்று விசாரணை ஆரம்பம்

16 hours 5 minutes ago
இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில்.... மகிழ்ச்சி தரும் இந்த 21ஆம் நாள் அன்று எங்கள் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் அனைவருக்கும் கிரிபத் வழங்கப்படும்.

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!

16 hours 44 minutes ago
தன்னை முழுமையாக நம்பி சக தோழனாக மதித்து பழகிய தோழி மீது பாலியல்வன்முறை புரிந்தத அந்த ஆணின் மீது தவறு இல்லையா?

ஜிகாதி மனைவி திரும்ப UK அரசு அனுமதிக்குமா?

16 hours 51 minutes ago
நாடுகளின் அரசியல் பார்வையில் போராளிகளா,பயங்கரவாதிகளா என்பது அவர்கள் நலனிற்கேற்ப மாறுபடலாம். ஆனால் மனித நீதியின் பார்வையில் மதவெறியனாகி மதத்துக்காக வன்முறையில் இறங்குபவன் பயங்கரவாதிதான். அதன்படி தற்போதய உலகில் முதலாவது இடத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகளும்,பிராந்திய ரீதியில் இந்து பயங்கரவாதிகளும் உள்ளனர்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை….

17 hours 43 minutes ago
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை…. February 16, 2019 அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் பிறப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்ததனால், பொறுமை இழந்த ட்ரம்ப் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்துள்ளனர். இதேவேளை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் ஆகியோரைத் தடுக்க இந்தச் சுவர் மிகவும் அவசியமானதாகும். இந்தத் திட்டம் மிகப்பெரியது, சிறப்பு வாய்ந்தது. நிதிஒதுக்கீடு மூலம் இந்தத் திட்டத்தை தான் விரைந்து முடிப்பேன் என நேற்றையதினத் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாக பெறப்பட்ட பணம், ராணுவ கட்டுமானப் பணிகளுக்கான நிதி, போதைப் பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ட்ரம்ப் சுவர் எழுப்ப ஒதுக்குவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஜக் ஸ்குமர் ஆகியோர் கூட்டாக வழங்கிய பேட்டியில், அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்ப் அவசரநிலையை அறிவித்தது சட்டவிரோதம் எனவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை எனவும் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2019/113481/

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை….

17 hours 43 minutes ago
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை….

February 16, 2019

 

donald-trump-fired.jpg?resize=672%2C504

அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்ததனால், பொறுமை இழந்த ட்ரம்ப் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் ஆகியோரைத் தடுக்க இந்தச் சுவர் மிகவும் அவசியமானதாகும்.
இந்தத் திட்டம் மிகப்பெரியது, சிறப்பு வாய்ந்தது. நிதிஒதுக்கீடு மூலம் இந்தத் திட்டத்தை தான் விரைந்து முடிப்பேன் என நேற்றையதினத் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாக பெறப்பட்ட பணம், ராணுவ கட்டுமானப் பணிகளுக்கான நிதி, போதைப் பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ட்ரம்ப் சுவர் எழுப்ப ஒதுக்குவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஜக் ஸ்குமர் ஆகியோர் கூட்டாக வழங்கிய பேட்டியில், அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்ப் அவசரநிலையை அறிவித்தது சட்டவிரோதம் எனவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை எனவும் தெரிவித்தனர்.

 

http://globaltamilnews.net/2019/113481/