Aggregator

தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

1 month 3 weeks ago
diplomatis-750x375.jpg தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கடக்கமான தொகையினரை அவர் திண்ணை விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும் பொழுது சிவாஜிலிங்கம் என்னிடம் கேட்டார்…. “அடுத்த கிழமை இதுதான் கட்டுரையா?” என்று. நான் சொன்னேன் “இல்லை இது பகிரங்கச் சந்திப்பு அல்ல. மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பு. இங்கு நான் ஒரு ரிப்போர்ட்டராக வரவில்லை. ராஜதந்திரிகளுடனான சந்திப்பு மூடிய அறைக்குள் நடக்கின்றது என்றால் அதன் பொருள் எல்லாவற்றையும் வெளியே கதைப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்பதுதான்” என்று.

ஏற்கனவே விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில், கனேடியத் தூதுவரோடு நடந்த உரையாடலை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியதாக ஒரு விமர்சனம் வந்தது. தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் மூடிய அறைகளுக்குள் தாங்கள் கதைப்பவற்றை வெளியே கூறுகிறார்கள் என்ற ஒரு விமர்சனம் ஒருபகுதி ராஜதந்திரிகள் மத்தியில் உண்டு.

ஒரு சிறிய அரசற்ற இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விடையங்கள் தொடர்பில்,ரிப்போர்ட்டிங் செய்யும்போது அதிகம் நிதானம் வேண்டும். ஊடகத்தின் பார்வையாளர் தொகையை அதிகப்படுத்துவதற்காக;சுடச்சுடச் செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக;பரபரப்பிற்காக ச்செய்திகளை அறிக்கையிடுவது வேறு.ஒரு தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கான செய்தி அறிக்கையிடல் வேறு.

ஒரு கட்சியை அல்லது ஓர் அரசியல்வாதியை அல்லது ஒரு நிதி அனுசரணையாளரை மகிழ்விப்பதற்காக அல்லது பார்வையாளர்களை கவர்வதற்காக செய்தியை அறிக்கையிடுவது வேறு.தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிக்கையிடுவது வேறு.

அதிலும் குறிப்பாக இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல்.யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்?எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்?எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்?இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்?ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா?
தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம், பழைய பூங்கா வீதியில் காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார்.அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர்,பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார்.அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர்.ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா?

அது ஒரு தகவல் பிழை.ஆனால் மற்றொரு தொகுதி யுடியூப்பர்கள் அரசியல் விமர்சனம் என்று கூறி கற்பனைகளையும் ஊகங்களையும் பரப்புகிறார்கள். தான் கூற வரும் கருத்தைக் குறித்து ஆழமான வாசிப்போ கிரகிப்போ ஆய்வு ஒழுக்கமோ இல்லாத ஒரு யுடியூப் தலைமுறை உருவாகிவிட்டது. அவர்களில் அநேகரிடம் தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொறுப்புணர்ச்சி கிடையாது.இவ்வாறு விளக்கம் குறைந்த அல்லது பொறுப்பு குறைந்த அல்லது விவகார ஞானம் இல்லாத யுடியூப்பர்களின் காலத்தில் ஒரு தேசமாகத் திரள்வது எப்படி?

அண்மையில் கொழும்புக்கான புதிய இந்தியத் தூதர் யாழ்ப்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு தொகையினரைச் சந்தித்தார்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழகப் பிரமுகர்கள் கருத்துருவாக்கிகள் போன்றவர்கள் அடங்குவர்.சந்திப்பின் போது அதில் அழைக்கப்பட்டவர்கள் ஐந்துக்கும் குறையாத மேசைகளை சுற்றி அமர்ந்திருந்தார்கள். தூதுவர் ஒவ்வொரு மேசையாகச் சென்று அவர்களோடு உரையாடினார்.அதில் ஒவ்வொரு மேசையிலும் என்ன உரையாடப்பட்டது என்பது அடுத்த மேசையில் இருந்த எல்லாருக்கும் தெரியாது. சந்திப்பு முடிந்ததும் ஊடகங்களுக்கு சில அரசியல்வாதிகள் தெரிவித்த தகவல்களை வைத்து ஊடகங்களும் ஊடகங்களும் யுடியூப்பர்களும் வியாக்கியானங்களை முன் வைத்தார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் பிரதிநிதிகளை அல்லது குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் தூதரக அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்புகளைத்தான் சந்திப்பார்கள்.

இவ்வாறான சந்திப்புகளில் கலந்து கொள்ளும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்லது மதத் தலைவர்கள் அல்லது சிவில் சமூகப் பிரதிநிதிகள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுவாக மூன்று விதமான போக்குகளைப் பிரதிபலிப்பார்கள். முதலாவது போக்கு முறையிடுவது.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை முன் வைப்பது. இரண்டாவது,உதவி கேட்பது. அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்று கூறி உதவி கேட்பது.மூன்றாவது வெளித் தரப்புகள் அரசாங்கத்தோடு நிற்கின்றன அல்லது தமிழ் மக்களுக்குப் பொருத்தமான விதங்களில் உதவவில்லை என்று கூறி வெளிநாடுகளின் மீது விமர்சனங்களை முன் வைப்பது.

இதில் முதல் இரண்டு போக்குகளும்தான் தூக்கலாக இருக்கும். குறிப்பாக அபிவிருத்தி மைய அரசியலை ஏற்றுக் கொள்பவர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றவர்கள் அநேகமாக உதவிகளைக் கேட்பார்கள். என்னென்ன விடயங்களில் குறிப்பிட்ட நாடு தமிழ் மக்களுக்கு உதவலாம் என்று கோரிக்கைகள் அடங்கிய பட்டியலோடும் வருவார்கள். அவர்கள் பெரும்பாலும் உரிமை மைய அரசியலை முன்வைக்கும் குடிமக்கள் சமூகங்கள் தங்களுடைய உரையாடலை திசை திருப்புகிறார்கள் என்று எரிச்சல் அடைவதுண்டு.

இதில் மூன்றாவது வகை அதாவது வெளிநாடுகளை விமர்சிக்கும் தரப்பு மிகவும் குறைவு.குறிப்பிட்ட வெளிநாடு அரசாங்கத்தோடு நிற்கின்றது அல்லது தமிழ் மக்களுக்கு உதவவில்லை போன்ற கருத்துக்களை முன்வைத்து அந்த நாட்டின் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் அநேகமாகக் குறைவு.ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவது.ராஜதந்திரிகளுடன் முரண்பட்டால் சில சமயம் அடுத்தமுறை சந்திக்கமாட்டார்கள்.அதாவது தொடர்ந்து என்கேஜ் பண்ண முடியாது.எனினும்,சில அரசியல்வாதிகளும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கும்பொழுது நாசுக்காகவும் சில சமயங்களில் நேரடியாகவும் அப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பதுண்டு.

எனினும் பொதுப் போக்கு முறையிடுவதும் உதவி கேட்பதுந்தான்.அதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் வெளியாருக்காகக் காத்திருப்பவர்கள்தான் அதிகம் என்ற ஓர் உணர்வே வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஏற்படும்.

இவ்வாறு தீர்வுக்காக அல்லது உதவிகளுக்காக அல்லது மீட்சிக்காக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் போக்கை அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பிரதிபலிக்கும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு சந்திப்பில்,புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியது.

இந்தியா ஈழத் தமிழர்களைக் கைவிட்டு விட்டது என்ற பொருள்பட செய்திகள் வெளிவந்தன.ஏனெனில் இந்திய தூதுவர் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிப்பதில் தங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்தும் விதத்தில் சந்திப்பின்போது பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.இந்தியா ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.அதனால், ஈழத் தமிழர்கள் இந்தியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று அண்மையில் மனோ கணேசன் மின்னல் நிகழ்ச்சியின்போது தெரிவித்திருந்தார்.

இந்திய தூதர் அப்படிச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை.எந்த ஒரு வெளிநாடும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துத் தராது. தமிழ் மக்கள் அதற்காகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் பேரபலத்தை அதிகப்படுத்தும் போது வெளிநாடுகள் தமிழ் மக்களை நோக்கி வரும். ஜேவிபிக்கு பேரபலம் அதிகரித்திருக்கிறது. என்பதனால் தான் இந்தியா ஜேவிபியை புதுடெல்லிக்கு அழைத்தது.

ரணில் விக்கிரமசிங்க, எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.எனவே அவரைக் கையாள்வதில் உள்ள நெருக்கடிகளை இந்தியா உணர்ந்திருக்கிறது. அதனால் கையாள இலகுவான ஒரு கூட்டை உருவாக்க இந்தியா விரும்பலாம். அவ்வாறு ரணிலுக்கு எதிராக ஏற்படக்கூடிய ஒரு கூட்டுக்குள் எதிர்காலத்தில் இணையக்கூடிய ஜேவிபியை இந்தியா அங்கீகரித்துப் பேச அழைத்திருக்கலாம்.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவோ,சீனாவோ எந்த ஒரு பேரரசாக இருந்தாலும், ஏன் சிற்றரசாக இருந்தாலும், அரசியலரங்கில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகளைத்தான் ஆர்வத்தோடு பார்ப்பார்கள். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன.துணிந்து புகுந்து விளையாடும் போது தான் பேரமும் அதிகரிக்கும். எனவே தமிழ் மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடுத்து வெளியார் தங்களை நோக்கி வரக்கூடிய விதத்தில் போராட வேண்டும். காய்களை நகர்த்த வேண்டும். பிராந்திய மற்றும் பூகோள சூழலை வெற்றிகரமாகக் கையாள வேண்டும். தமிழ் மக்களுக்காகக் கொழும்பைப் பகைக்கலாம் என்ற நம்பிக்கையை வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு வெளிநாடும் எந்த ஒரு சிறிய அரசற்ற மக்கள் கூட்டத்திற்கும் தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுப்பதில்லை. இந்த பூமியிலே போராட்டத்துக்கு உதவினாலும் சரி சமாதானத்துக்கு உதவினாலும் சரி தீர்வுகளுக்காக உழைத்தாலும் சரி எல்லாவற்றிற்கும் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருக்கும்.ராணுவ பொருளாதார நலன்கள் இருக்கும்.

எனவே தமிழ் மக்கள் தங்களுடைய பேரபலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இந்தியா எங்களை கைவிட்டு விட்டது; அமெரிக்கா கைவிட்டு விட்டது; ஐநா கைவிட்டுவிட்டது;சீனா தொடர்பான இந்தியாவின் சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகப்படுத்துவதன்மூலம் இந்தியாவை நெருங்கி செல்லலாம்…..என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக அரசியல் களத்தில் செயல்படும் ஒரு தரப்பாக தமிழ் மக்கள் தங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அப்படிக் கட்டியெழுப்பும் போது தங்களைச் சந்திக்க வரும் ராஜ தந்திரிகளிடம் முறைப்பாடுகளையும் வேண்டுகோள்களையும் முன்வைப்பதற்குப் பதிலாக நிபந்தனைகளை முன் வைக்கலாம்; பேரம் பேசலாம்.

https://athavannews.com/2024/1371208

மாலத்தீவு சென்றுள்ள சீன கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்? இந்தியா என்ன செய்கிறது?

1 month 3 weeks ago
இந்தியாவின் எதிர்ப்பை மீறி மாலைதீவில் நங்கூரமிட்டது சீனக் கப்பல்! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதுடன், தனது கடும் கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராந்திய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின் Xiang Yang Hong 3 ஆராய்ச்சிக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த சீனக் கப்பல் வஜியம் செய்துள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த சீனக்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவின் எதிர்ப்பினையடுத்து குறித்த ஆய்வுக் கப்பலிற்கு இலங்கை அனுமதி மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371192

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை வலியுறுத்தினார் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர்

1 month 3 weeks ago
Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 10:40 AM உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்குறித்த விசாரணகளின் அவசியத்தை அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி உத்தேபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நல்லிணக்கம் போன்றவழமையான விவகாரங்களிற்கு அப்பால் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணகள் குறித்தும் வெர்மா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போதும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் ரிச்சட்உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் குறித்து ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் தனக்கு தெரிந்த ஒருவரை வெர்மா இழந்தார் எனவும் இதன் காரணமாக விசாரணைகள் குறித்து தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளிற்காக அமெரிக்காவின் உதவியை நாடியதாகவும் தனது தரப்பிலிருந்து விசாரணைகள் முடிவடைந்து விட்டன என அமெரிக்கா அறிவித்துள்ளதாகவும் இலங்கை தரப்பிலிருந்து அமெரிக்க அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது எனினும் அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாவதை விரும்புவதாக தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/177229 ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை கோரிய அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 11:00 AM இலங்கைக்குவிஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதியை சந்திப்பதற்காக வந்த ரிச்சட் வெர்மா தனிப்பட்ட சந்திப்பொன்றிற்காக வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கியதுடன் மூடிய கதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கும் பிரசன்னமாகியிருந்தார். உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாகவும் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பயங்கரவாதத்தை எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த புதிய நாடாளுமன்றத்தின் காலம்வரை பிற்போடப்படும் என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவரிடமும் ஜனாதிபதி இதனையே தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/177234

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை வலியுறுத்தினார் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர்

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN   25 FEB, 2024 | 10:40 AM

image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்குறித்த விசாரணகளின் அவசியத்தை அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி  இராஜாங்க செயலாளர்  ரிச்சட் வெர்மா வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி உத்தேபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நல்லிணக்கம் போன்றவழமையான விவகாரங்களிற்கு அப்பால்  2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணகள் குறித்தும் வெர்மா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போதும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும்  ரிச்சட்உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள்  குறித்து ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் தனக்கு தெரிந்த ஒருவரை வெர்மா இழந்தார் எனவும் இதன் காரணமாக விசாரணைகள் குறித்து தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளிற்காக அமெரிக்காவின் உதவியை நாடியதாகவும் தனது தரப்பிலிருந்து விசாரணைகள் முடிவடைந்து விட்டன என அமெரிக்கா அறிவித்துள்ளதாகவும் இலங்கை தரப்பிலிருந்து அமெரிக்க அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது எனினும் அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாவதை விரும்புவதாக தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/177229

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை கோரிய அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர்

Published By: RAJEEBAN   25 FEB, 2024 | 11:00 AM

image

இலங்கைக்குவிஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  தனிப்பட்ட சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியை சந்திப்பதற்காக  வந்த ரிச்சட் வெர்மா  தனிப்பட்ட சந்திப்பொன்றிற்காக வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கியதுடன் மூடிய கதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

தனிப்பட்ட சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கும் பிரசன்னமாகியிருந்தார்.

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாகவும் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பயங்கரவாதத்தை எதிர்ப்பு சட்டமூலம்  அடுத்த புதிய நாடாளுமன்றத்தின் காலம்வரை பிற்போடப்படும் என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவரிடமும் ஜனாதிபதி இதனையே தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/177234

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
பொதிகளை தீரவுகளை. ஒரு தனி நபர் எழுதி என்ன பிரயோஜனம்??? பாராளுமன்றம் அங்கீகரிக்க மாட்டாது என்று அனைவருக்கும் தெரியுமில்லையா. ?? இதனை விட சிறந்த தீர்வினை எழுத முடியும் ....எழுதி என்ன பலன்??

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது.

இலங்கை மனிதப் புதைகுழி போர் நடைபெற்ற காலத்தை சேர்ந்தது – அறிக்கை கூறும் அதிர்ச்சித் தகவல்

1 month 3 weeks ago
நீங்கள் எழுதுவதை பார்த்தல் புலிகளையே நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். சோதியா அணி எந்த பகுதியை சேர்ந்தது? வன்னி படையணியுடன் இணைந்ததா? மன்னர் நகர் மனித புதை குழி எத்தனையோ காலத்துக்கு முட்பட்ட்து. அதை நூற்றுக்கு நூறு வீதம் கூறலாம். அங்குள்ள மக்களும் அதைத்தான் கூறுகிறார்கள்.

சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

1 month 3 weeks ago
இனி தமிழரசு கடசியெல்லாம் கிடையாது. இந்த கட்சியும் இப்போது டெலோ, புளொட் , ஈபீ, EPRLF போன்ற ஒரு இயக்கம்தான். இனிஅவர்களால்தனியாக இயங்க முடியாது. எப்படியும் அவர்களுடன் கூடடணி வைத்து ஒரு கட்சியாக பதிவு செய்யத்தான் போகிறார்கள். எனவே தமிழரசு கட்சியின் கதை முடியாதான் போகின்றது. எல்லோரும் சேர்ந்து கேட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகி மீண்டும் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய போகின்றார்கள். அவர்கள் பிழைப்பு பரவாயில்லை. பாவம் அப்பாவி ஏழை தமிழ் மக்கள். நம்பி நம்பி ஏமாறும் ஒரு கூடடம்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!

1 month 3 weeks ago
இனி தமிழரசு கடசியெல்லாம் கிடையாது. இந்த கட்சியும் இப்போது டெலோ, புளொட் , ஈபீ, EPRLF போன்ற ஒரு இயக்கம்தான். இனிஅவர்களால்தனியாக இயங்க முடியாது. எப்படியும் அவர்களுடன் கூடடணி வைத்து ஒரு கட்சியாக பதிவு செய்யத்தான் போகிறார்கள். எனவே தமிழரசு கட்சியின் கதை முடியாதான் போகின்றது. எல்லோரும் சேர்ந்து கேட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகி மீண்டும் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய போகின்றார்கள். அவர்கள் பிழைப்பு பரவாயில்லை. பாவம் அப்பாவி ஏழை தமிழ் மக்கள். நம்பி நம்பி ஏமாறும் ஒரு கூடடம்.

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' - ராமதாஸ் கண்டனம்

1 month 3 weeks ago
ஐயாவின் ஆலோசனை நன்றாக இருக்கிறது. எல்லா கட்சிகளும் ஒன்றிய அரசிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி முடித்தால்தான் உண்டு. அதாவது இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இலங்கை எல்லைக்குள்ளும் மீன்பிடிக்கும் அதிகாரத்தை கொடுப்பதுடன் , எல்லை மீறி போவாரை கைது செய்வதட்கும் ஆலோசனை வழங்கினால் பிரச்சினை முடிந்து விடும்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 3 weeks ago
உங்கள் கருத்தை வரவேட்கிறோம். இலங்கைமக்கள் பக்கம் இருக்கும்நியாயத்தை இந்திய மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தப்பி ஓடினாலும் பரவாயில்லை. சிலர் ஓடும்போது மக்கள் கொடுத்த பணம் , நகை நாட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இல்லையா ஓடி விடடார்கள். எப்படியோ அவர்கள் நன்றாக வாழட்டும். இன்னுமாடா இவர்கள் இயக்கங்களுக்கு வெள்ளையடிக்கிறார்கள்? ஒவ்வொரு இரவு விடியும்போதும் தூண்களில் பிணங்களை கணடவர்கள் நாங்கள். அந்த திறதுக்குள்ள ஒரு விளக்கமும் எழுதி வைத்திருப்பார்கள். அந்த அப்பாவிகளின் ரத்தம் இவர்களை சும்மா விடாது. நிச்சயமாக பழிவாங்கும்.