Aggregator

மதம் பிடித்த பிராந்தியங்கள்

1 month ago
மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம் புதினப்பணிமனைDec 11, 2019 | 4:56 by in ஆய்வு கட்டுரைகள் இலங்கைத் தீவில் தமிழர்கள் மத்தியில் இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறீஸ்தவமதமும் உள்ளன. இருந்த போதிலும் அரசியல் நோக்கம் கொண்ட மதவாத சர்ச்சைகள் தமிழர்கள் மத்தியிலே என்றும் தன்னிச்சையாக எழுந்ததே கிடையாது. 1948 காலகட்டத்திலிருந்து தமிழ் மக்கள் மத்தியிலே மத பிரிவினை இருந்ததில்லை என்பதை பல்வேறு சமூக ஆய்வாளர்களும் கூறி வந்துள்ளனர் அரசியல் தேவைகளுக்காக இலங்கைத்தீவு இரு கூறாக பிளவுபட்டு போவதை தடுக்கும் நோக்கத்திற்காக, தமிழ் மக்களிடையே மதப்பிரிவினையை உருவாக்கும் பொறி முறை, மிகவும் இரகசியமான- முக்கியமான பாரிய திட்டமாக கையாளப்பட்டது . கையாளப்பட்டு வருகிறது. ஆயுதப்போராட்ட காலத்திலும் மத நல்லினக்கத்தை பேணுவதில் போராட்ட தலைமை மிக முக்கிய கவனம் செலுத்தியதை காண கூடியதாக இருந்தது. சிங்கள பௌத்த அரசின் சதித்திட்டங்களின் பலனாக, ஆயுத போராட்ட காலத்தில் பல்வேறு சிக்கல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது என்பது இஸ்லாமிய ஆய்வாளர்கள் சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலை தமிழ் மக்களின் தேசிய விடுதலையை இடையூறு செய்து மேலைத்தேய பார்வையாளர்களையும் பல நாடுகளையும் திசைமாற்றம் செய்யும் வகையில் சிறிலங்கா அரச தரப்பு தேசிய இனப்பிரச்சனையை சிக்கல் நிறைந்த மூன்ற பிரிவான சர்ச்சையாக காட்டுவதில் மிக முக்கிய கவனம் செலுத்தியது என்பதிலிருந்து வெளியாகிறது. சிங்களம், தமிழ் என இரு மொழிகளுக்கிடையிலான சிக்கலாக பார்க்காது, தமிழ் பேசும் மக்களை இரு கூறுகளாக இந்து தமிழர்கள், இஸ்லாமியர்கள் என பிரிப்பதன் மூலம் – மூன்று மதங்களுக்கு இடையிலான பிரச்சினையாக காட்டுவதன் மூலம் இந்த சிக்கலாக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், மேலைத்தேய அரசியல் கோட்பாட்டாளர்களின் பார்வையில் பல்லின சமுதாய அரசில் இரண்டு தேசியங்களுக்கு இடையிலான பிரச்சனையை தீர்த்து வைப்பதிலும் பார்க்க மூன்று அலகுகளுக்கு இடையில் எழுந்துள்ள பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு மிகவும் கடினமான , சிக்கலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்படும். இதற்கு ஏற்ற வகையில் சிக்கலான அரசியலை உருவாக்கி விடும் நோக்குடன் சிறிலங்கா அரசு செயற்பட்டு வந்துள்ளது. அடுத்து மேலைநாட்டு அரசியல் சித்தாந்தத்தில் ஒரு நாடு ஜனநாயக முறையில் ஆளப்படுகிறது என்று தெரிந்தாலே அந்த நாட்டில் அது பிரிக்கப்பட்டாலும் இனைந்திருந்தாலும் அனைத்து சமூகங்களும் சமஉரிமையும் சுதந்திரமும் உடையனவாகவே இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை யாகி விடுகிறது . இஸ்லாமிய மக்களை மத ரீதியாக பிரிக்கும் செயற்பாடு மூர் என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொற்பத்தின் ஊடாக, மூர்களுக்கும் அடையாளம் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையிலாக வாய் பேச்சுகளும் பத்திரிகை கட்டுரைகளும் வெளி வந்தன. தமிழ் பிரிவினையை உண்டு பண்ண கூடிய சிறிலங்கா அரச மற்றும் பெரும்பான்மை சார்பு அலகுகளால் இஸ்லாத்தை தழுவும் தமிழர்கள் பெருமைக் குள்ளாக்கப்பட்டனர். மேலும் அரச ஊட்டத்தின் பெயரில் உழைக்கும் ஒரு சில தமிழ் மொழியை அல்லது தமிழ் பெயர்களை தமதாக கொண்டவர்களாலும் தமிழரை பிரிக்கும் வகையிலான கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஏற்றவாறு வரலாறும் உருவாக்கம் பெற்றது. இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இலங்கைத்தீவில் எந்த ஒரு சிறு ஊரை எடுத்து கொண்டாலும் சங்க காலத்திலிருந்தும் பகவத்கீதை காலத்திலிருந்தும் பௌத்த மத வருகையின் போதிருந்தும் அராபியர்களின் வருகையின் போதிருந்தும், சீனர் வருகையிலிருந்தும், போர்த்து கீசியர்கள் வருகையின் போதிருந்தும் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலப்பகுதியிலிருந்தம் ஒரு வரலாறை உருவாக்கலாம். அந்த ஊரில் வாழும் எல்லோருக்கும் அவர் என்ன மதமாயினும் என்ன இனமாயினும் புனைகதைகளின் ஆதாரம் கொண்டு, தனது வரலாற்றை ஒரு ஆதிகால வரலாறாக கூற எவ்வாறோ வரலாற்று ஆதாரம் கிடைத்து விடும் என்பது தான் உண்மை. இந்த நிலையில் தான் இலங்கைத்தீவு இன்று உள்ளது. இன்றைய நடைமுறை அரசியலில் இஸ்லாமியர்களை அவர்களது எந்த கோலத்திலும், அதாவது அவர்கள் ஆதிவாசிகளாக இருந்தாலும் மூர்களாக இருந்தாலும் அராபியர்களாக இருந்தாலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் விவகாரத்தில் அவர்களுக்கான உரிமையும் கடமையும் கொண்ட சாதாரண தமிழ் மக்களாக வாழ்வதிலோ பொது வாழ்வில் ஈடுபடுவதிலோ எந்த வகையிலும் விலக்கப்பட்டிருக்க முடியாது இன்றைய வடக்கு கிழக்கு அரசியல் நிலைமையின் பிரகாரம் ஈழத் தமிழ் மக்களிடையே உள்ள அரசியல் ஆய்வாளர்கள் பலர் இஸ்லாமியரை இன்னமும் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்து நோக்கும் நிலையை பார்க்கும் பொமுது அவர்களுடைய பார்வை எந்த அளவு எதிர்கால ஆரோக்கிய வாழ்வை கொண்டது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ் மக்கள் தமது உள்ளக கட்டமைப்பில் ஜனநாயக போக்கையும் சர்வதேச பார்வைக்கு ஒரு தமிழ் தேசிய அரசியல் செய்வதுவும் இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் வெளியுலகிற்கு ஈழத்தமிழர்களாக தம்மை காட்டி கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் மதஅரசியலை தூண்டும் வகையில் இஸ்லாமிய மத பிரிவை அரசியல் ஆதாரமாக கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டிலே திராவிடம் பேசி சாதி அரசியலை வாக்கு வங்கிகளாக வைத்திருக்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையில் குறிப்பிட்ட ஒரு ஒற்றுமை இருப்பது சரியானதாகவே தெரிகிறது. (ஆதாரம் கடந்த கட்டுரை தமிழகம்) இதற்கு ஒரு நல்ல உதாரணம் இவ்வருடம் ஜூன் மாதம். இடம் பெற்ற, காலம் சென்ற திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழாவில் ஒரு ஈழத்தமிழனாக கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , அங்கே கருணாநிதியின் வரலாற்றை எடுத்து கூறி மிகப்பெரும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அதே பயணத்தில் ஒரு பகுதியாக தமிழ் நாட்டு யூரியூப் ஒளிபரப்பு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், பெரியாரிய பகுத்தறிவு கோட்பாடு சமயம் சார்ந்த விடயம் அல்ல பகுத்தறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளில் முஸ்லீம்கள் பாதிக்கப்படவில்லை. முஸ்லீம்கள் மத்தியிலே சமய உணர்வை விட தமிழன் என்ற உணர்வு மேலோங்கியது என்று கூறினார். மேலும் அந்த பேட்டியிலே அவர் கூறிய வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலவந்தமாக பிரிக்கப்பட்டதா அல்லது பலவந்தமாக இணைக்க முனைகிறார்களா என்பதில் மிகவும் தெளிவற்ற ஒரு நிலை உள்ளது . இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது சரியானதாக தெரியவில்லை . ஏனெனில் தமிழ் என்பது ஒரு மதம் அல்ல, தமிழர்களை இந்துகளாக பார்ப்பது ஹக்கீம் அவர்களின் தனிப்பட்ட அரசியல் இலாப நோக்கம் கொண்ட தாகவே தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழனாகவும், ஈழத்தில் முஸ்லீமாகவும் பார்ப்பதானது, தமிழ் மக்களை இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் பிரித்து வைப்பதன் மூலமே ஹக்கீம் அரசியலில் தனது நிலையை தக்க வைத்து கொள்ளலாம் . இதுவே அவரது நோக்கமாக தெரிகிறது. முன்னுக்குப்பின் முரணான விவாதங்களை வைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மீதான தனது ஆளும் உரிமையை தேட முனைகிறார் என்பது வெளிச்சமாக தெரிகிறது. சிறிலங்காவை பொறுத்தவரையில் இதர மத நம்பிக்கைகளை சிங்கள பௌத்தம் என்றும் நசுக்கி விடவே முயற்சித்துள்ளது. உதாரணமாக இஸ்லாமிய உணவுமுறை ஆடை முறை அதிகாலையிலும் இரவிலும் இடம் பெறும் பிரார்த்தனைகள் குறித்த விவகாரம் என சமூக வாழ்விற்கு எதிரான அழுத்தங்களை மறைமுகமாக மதவாத சக்கதிகளின் விருப்பத்திற்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது. ஆனால் தமிழ் அப்படியான சமூக வாழ்வில் தலையிடுவது இல்லை . அது ஒரு மொழியாகவே உள்ளது. இஸ்லாமிய இலக்கியங்களை கூட போற்றி அதன் அடையாளங்களை தனித்துவமாக எடுத்து காட்டி உள்ளது. மேலும் சிங்கள தரப்பு இன்று இஸ்லாத்தின் மீது ஒரு பெரும் பயங்கரவாத முலாம் பூசுவதில் மிக கவனமாக செயற்பட்டு வருகிறது. மத ரீதியான விவகாரங்களை திரிபு படுத்தி கூறுவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு தமது வியாபார நோக்கங்களுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் இஸ்லாமிய அரசியல் தலைவர்களே உடந்தையாக உள்ளனர் . இந்த நிலையானது எந்தப் பொழுதிலும் இலங்கைத்தீவில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கூடிய வகையில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆட்சி உரிமை பெற்ற ஒரு தரப்பாகவே சிறிலங்கா தரப்பை உயர்த்தி உள்ளது. மதம் பிடித்த அதீத இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் ஏப்ரல் மாதத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு களின் பின்பு கைது செய்யப்பட்டும் பின்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் அரசின் நன்மதிப்பை பெறும் பொருட்டு இன்னமும் தமது சமூகத்தின் மத்தியிலேயே பிளவை உண்டு பண்ணுவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.` இது மத அடிப்படையிலான முத்தரப்பு பிச்சினையாக்குவதில் அரசிற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. மட்டுமன்றி மேலும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நிலைக்கே இட்டு செல்லும் ஈழத்து இந்துவாதம் ஈழத்து இந்து மதவாதிகளும் அண்மைக் காலங்களில் மத அடிப்படையிலான வாதங்களை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளின் மத்தியில் உள்ள இந்து கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அனுதாப உருவாக்கல் பிரசாரங்களில் ஈடுபட்டிருப்பதை காண கூடியதாக உள்ளது. இந்தியாவின் மதவாத அடிப்படையிலான அரசாங்கத்தின் அனுதாபத்தை பெறும் பொருட்டு, பௌத்தத்திற்கு எதிரான பிரசாரம் வெற்றி யை தரக்கூடியதாக இருந்தாலும் அவர்களுடைய நிலைப்பாட்டை இந்திய மட்டத்திலேயே வைத்து கொள்ளும் வகை யில் கையாள வேண்டிய நிலையே உள்ளது. ஏனெனில் எந்த மதவாத சிந்தனையாளர்களும், இந்திய உள்நாட்டு அரசியலில் இருக்கக் கூடிய மதவாத கருத்துகளுக்கும், மத சார்பற்ற கருத்து வேறுபாடுகளுக்கும் இடையிலான பிரிவுகளால் உந்தப்பட்ட நிலையை தமிழ்ப் பகுதிகளுக்கு பரவ செய்வது அரசியல் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது. பௌத்த மத சார்பு தமிழர்கள் அதேபோல மதவாதத்தை மனதார ஏற்று கொண்ட கல்விமான்கள் சிலர் இலங்கைத்தீவு சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்ற விம்பத்தை உருவாக்குவதை தமது தொழில் நலன், பதவி நலன், அரசியல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணியாக கொண்டுள்ளனர். மேலைத்தேய கல்வி கற்ற இவர்களை அரசு தனது கைக்குள் வைத்திருக்கிறது. மேலைத்தேய ஆய்வு முறைகளின் படி, வாத, பிரதி வாதங்களை முன் வைத்து ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் இவர்கள், தம்மை நடுவு நிலை ஆய்வாளர்கள் என்ற பெயரில் உலகிற்கு உண்மையை உளறி விடுவார்கள் என்பதினாலே இவர்களை, கட்டிவைத்து சோறு போடுவதற்கு நாய்குட்டிகளாக தம்முடன் இருப்பார்கள் என்ற நோக்கிலேயே ஆகும். இவர்கள் கொழும்பின் புகழ் பாடல் இராஜதந்திரத்திற்கு மயங்கியவர்களாக காணப்படுவது தமிழினத்திற்கு பெரும் கேடு ஆகவே தெரிகிறது. நேரிலே நண்பர்களாகவும் பண்பாகவும் இத்தகைய அரசியல்வாதிகளுடன் பழகும் கொழும்பு அரசியல்வாதிகள் பத்திரிகைகளில் அவர்களை பிரிவினைவாதிகளாக சித்தரிப்பதன் மூலம் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகளாக தமது காலடியில் வைத்திருக்கும் தன்மையை பல இடங்களில் காணலாம் இவ்வாறு தமிழால் இணைந்திருக்க கூடிய இந்து மதமும் இஸ்லாமிய மதமும் தமிழ் உணர்வு இல்லாத நிலையில் பல கோணங்களில் பிரிந்து சிங்கள பௌத்தத்தின் கட்டு பாட்டிற்குள் இருக்கின்றன. இதனால் அரச நிறுவன அதிகாரங்களையும் இதனூடாக சர்வதேச அங்கீகாரத்தை இலகுவாக பெற்று கொள்ள கூடிய சந்தர்பங்களை கொண்ட சிங்கள பௌத்தத்திடம் தமது விதியை கையளித்து விட்டிருக்கின்றன. -லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி http://www.puthinappalakai.net/2019/12/11/news/41505

பிரமிள்: தனியொருவன் – பாலா கருப்பசாமி

1 month ago
பிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி May 22, 2019 இதுவரை விரிவாகப் பார்த்த கட்டுரைகளைப் போல 1971க்குப் பிறகு சில கட்டுரைகளே இலக்கியம் சார்ந்து வினையாற்றலோடு பிரமிள் எழுதியிருக்கிறார். மற்றவை எதிர்வினைகளாகவே அமைந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது மதிப்பீட்டு இயக்கத்தைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பேச்சிற்கும் பதில் சொல்லியிருக்கிறார். அக்கட்டுரைகளுக்குள் நுழைந்து வருவதென்றால் அதேயளவுக்காவது அவற்றை விரித்துச் சொல்ல வேண்டியிருக்குமென்பதால் அவற்றைத் தவிர்த்து விடலாம். தேவைப்படின் தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். சென்ற கட்டுரையில் ஜெனே குறித்து ‘கசடதபற’ இதழில் பிரமிள் எழுதியிருந்ததைப் பார்த்தோம். அது பிப்ரவரி 1971ல். அதேயாண்டு ஜூன் மாதம் ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்ற தலைப்பில் அதேயிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதை புனித ஜெனேவுக்கு எதிரான ஒரு கேள்வியாகச் சொல்லலாம். ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை ஒரு கேள்வியை எழுப்புகிறது. ‘கலை உணர்வோ, கலாச்சார உணர்வோ, மனிதனின் உன்னதத் தன்மையுடன்சம்பந்தமுள்ளதா?’ இப்போதும் எழுத்தாளர்களிடம் பேட்டி எடுக்கும் போது ‘படைப்பு வாசிப்பவனை மேம்படுத்துமா?’ என்று கேட்டு வைக்கிறார்கள். இது ஒரு பொத்தாம்பொதுவான கேள்வியானாலும் பொது ஜனங்களுக்கு தாங்கள் செய்வது தன்னை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் என்ற நம்பிக்கை தேவையாக இருக்கிறது. மேலும் எழுத்தாளரும் சிந்தனையாளரும் சமூக மேம்பாட்டுக்கு உதவுபவர்கள் என்ற போதனையம்சமும் அவர்கள் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் கவிஞர் பிரான்சிஸ் கிருபா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுதலையான நிலையில் ஒரே நாளில் வெளியான கருத்து நிலைகள் தான் எத்தனை! சித்தர்கள் தங்களை பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்ளாது அடையாளத்தை மறைத்து சாமானியரைப் போல வாழ்வார்களாம். இன்னார் என்பது தெரிந்தால் பொதுஜனம் என்ன செய்யும் என்பது கண்கூடு. இங்கே பெருவாரியானோர், படைப்பு மனநிலையை எவ்விதத்திலும் புரிந்துகொண்டவர்களாக இல்லை. மிக அணுக்கமான எழுத்தைக் கூட எழுத்தாளரின் சிந்தனைத் திறன், மொழிவன்மை என்ற மேலோட்ட ரீதியாகவே எண்ணுகின்றனர். ஓர் அனுபவத்தைப் பெறாமல் அந்த அனுபவம் குறித்து எப்படி படைப்பாளி தன் படைப்பில் சித்தரிக்கிறான், அது எப்படி தத்ரூபமாக தன் வாழ்வோடு பொருந்துகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. Sensitivity. அதேபோல் ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்றொரு கேள்வியைக் கேட்டும் பக்கத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். இப்படி எளிமையான சமூக எதிர்பார்ப்பின் அழுத்தம் ஒருபக்கம் என்றால், இன்னொரு புறம், நவீன இலக்கியத்தின் முன் ஒரு வாசகன் உள்ளே நுழையவே முடியாதபடி சமகால எழுத்துக்கள் பல முடிச்சுகளோடு மூடிக்கொண்டு இருக்கின்றன. இது வெகுவாக வாசகப் பரப்பைக் குறைத்து விட்டிருக்கிறது. கலாரசனையுள்ள மனிதன் மேம்பட்ட மனிதன் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமுண்டா? இல்லை என்பதற்கு ஆதாரங்களை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் பிரமிள். படைப்பு வேறு படைப்பாளி வேறு என்பதற்கு ஒரு நிரூபணமாகவும் இதைச் சொல்லலாம். ஒரு சமூகம் யாரை ஆதர்சமாகக் கொள்கிறதோ அவர் மிருக இயல்பற்ற உன்னதமானவராக இருக்க வேண்டும். ஒரு துறையில் சாதித்தவர் முன்னிறுத்தப்படும் போது எல்லா வகைகளிலும் அவரை முன்னுதாரணமாக, கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு நம்மிடையே உண்டு. ஊடகங்கள் பிம்பங்களை வளர்த்தெடுக்கின்றன. பிம்பங்கள் நம்மை ஆள்கின்றன. இங்கு ஓஷோ அளவுக்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி பிரபல்யமடையாமல் (வாசிக்கப்படாமல்) போனதற்கு காரணம் ஜி.கி. பந்தை கேள்வியெழுப்பியவரிடமே தள்ளிவிட்டார். ஓஷோ சாய்வதற்கு இடம் கொடுத்தார். பின்பற்ற சரணாகதி அடைய ஒரு பாதையை உருவாக்கினார். ஜி.கி. எதுவும் செய்யவில்லை. தானே சிந்தித்து தானே விடை கண்டறிய வலியுறுத்தினார். சுய சிந்தனையைப் போல பயமுறுத்துவது வேறில்லை. இங்கு பெரும்பாலானோர் அவரவர் சிந்தனா சக்திக்கேற்ப ஏதாவது ஒன்றைப் பின்பற்றுபவராகத் தானே உள்ளனர். “எவ்வித மறுமலர்ச்சியும், சமூகக் கட்டுக்குள்ளிருந்து பிறப்பதில்லை. சமூகத்தின்க்ஷீணதசையை உணர்ந்து, அதிலிருந்து – அதன் பிரதிபிம்பமான தன்னிலும் இருந்து – விடுதலை அடையும் தனி மனிதர்கள் மூலமே உண்டாகிறது. சமூகம், மனிதன் என்றஇரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து, ஒன்றைச் சார்ந்து ஒன்று நிற்கிறது என்றஉண்மையை இது மறுப்பதாகாது. ஆனால் சமூகம், பூரண மனிதனிடமிருந்து சுவீகரித்தமதிப்புகளை வற்புறுத்தலாக்குகிறது; எனவே, அம்மதிப்புகளை வெளிப்படையாகமட்டுமே திருப்திப்படுத்தி, உள்ளூர அழுகிக் கொண்டு போகும் நிலைமைக்குஆளாகிறது. அதோடு இனி வரும் தனிமனிதனை–அவனது உன்னத இயல்புகளை–இதே தன் அபத்தத்தைக் கொண்டு நசுக்குகிறது.” கோணல்கள் – அஃக், அக்டோபர், 1972 இந்த ஒன்றரையாண்டுகளோடு கசடதபற-வுடனான உறவையும் முறித்துக் கொண்டார் பிரமிள். கோணல்கள் ஒரு நீள் கட்டுரை. தமிழ் நவீன இலக்கியத்தில் நேர்ந்திருக்க வேண்டிய தான் எதிர்பார்த்திருந்த மாற்றங்களோ வளர்ச்சியோ நிகழாமல் கீழிறங்கிய தளத்தில் பரவலாக அடுத்த தலைமுறையினர் செயல்படுவதை இதில் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார். இவை இலக்கியப் படைப்புகளாக அல்லாது இலக்கியத் தயாரிப்புகளாக உள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். கல்லூரிக் காலத்திலேயே எனக்கு ஜெயகாந்தன் படைப்புகள் மீது ஒவ்வாமை உண்டு. அப்போது அதற்கான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. நடைமுறை வாழ்க்கையோ, மனிதர்களோ ஜெயகாந்தன் பாத்திரங்களில் பிரதிபலிப்பதில்லை. அவை ஆதர்சமான உருவாக்கங்கள். இலட்சியவாத பிம்பங்கள். இயல்பாக முற்போக்குவாதமுடையவை. எனவே சமூகத்தின் மாதிரிக் குறியீடாக பெருவாரிகளுடன் உரையாடல் நிகழ்த்துபவராக ஆனார். ஜெயகாந்தனை ஒப்பிட தி.ஜானகிராமன் எவ்வளவோ மனதுக்கு நெருக்கமாக இருந்தார். ஒருநாளின் ஒரு கணம் இன்னொன்றாக இருப்பதில்லை. ஒரு புள்ளியில் கணமும் நில்லாது தட்டழியும் மனம். எத்தனை வித மனோ நிலைகள். எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன? தேன் தடவப்பட்ட சாத்தியமில்லா ஓர் உயர்குணத்தை பாத்திரத்தின் மீது ஏற்றிவைத்து, வாழ்வின் போக்குகளால் சிறிதும் பிசகின்றி அக்குணாம்சத்தின்படி நடப்பவர் எந்த இலோகத்தில் இருக்கிறார். எதிர்கொள்ள வேண்டியவை அனைத்தும் உள்ளே தான் உள்ளன. அகச் சிக்கல்கள் சிறிதும் அணுகாத பாத்திரங்கள் போலியானவை. ஜெயகாந்தனின் கதைகள் ஒரு முன்மாதிரி இலட்சிய வடிவத்தை மனதில் கொண்டு குறிப்பிட்ட வாழ்வியல் சம்பவங்களை அப்பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதங்களை வலிந்து படைப்புகளாக உருவாக்கி ஒரு வாழ்வியல் நெறியை போதிக்கின்றன. “புதுமைப்பித்தனது உக்கிரப்பார்வை, ஒரு பாஷனாக ஜெயகாந்தன் கையில்உருப்பெற்றது. ஜெயகாந்தனின் எழுத்தில் பத்திரிகைத் தேவைக்காகஎழுதுபவர்களிடமுள்ள போலித்தனம் ஒன்று தலைகாட்டுகிறது; கலையுருப்பெறமுடியாத அரை வேக்காட்டுத் ‘தத்துவங்கள்’ தென்படுகின்றன. சாமான்யஇரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் களேபரமாக வெளியிடுவது கலையல்ல; ஆசிரியரது மேற்படி தத்துவங்களின் நூலிழுப்பில் ஆடும் பொம்மைகளாக, ஏற்கெனவேவரையறுக்கப்பட்ட இயல்புகளுடன் இயங்கும் பாத்திரங்கள், உயிருள்ளபாத்திரங்களுமல்ல. கதாபாத்திரங்களின் செய்கைகளும் கூற்றுக்களும், ஒருகொள்கையையோ ‘தத்துவத்தை’யோ பறைசாற்றவென்றே தொழிற்படுவதன் மூலம், மனித வாழ்க்கையானது பிரதிபலிக்காது; குறிப்பிட்ட கொள்கையும் தத்துவமுமேபிரதிபலிக்கும். இப்படி, உயிர்ப்பொருளின் பலியில் பிறப்பது பிரசாரமே. ஜெயகாந்தன்எந்த வகையான கருத்துக்களுக்குக் கூடாகக் கதாபாத்திரப் பொம்மைகளைத்தயாரிக்கிறரோ, அவ்வகைக் கருத்துகள், மனிதனின் அடிப்படைப் பலவீனங்களின்முன்னால் தவிடுபொடியாகின்றன என்று காணத்தக்க தீட்சண்யம் புதுமைப்பித்தனுக்குஇருந்தது.” இந்தக் கோணல் எழுத்துவிலேயே தொடங்கி விட்டதாக பிரமிள் சந்தேகிக்கிறார். சி.சு.செ. புதிய வகை எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல் பழைமையில் ஊறிப் போயிருந்தது, ஓர் அறிவு எதிர்ப்பு வாதத்தின் இழை என்கிறார். உதாரணத்திற்கு வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் எழுத்து இதழில் தத்துவம், ஓவியம் ஆகிய துறைகளுக்கும் விரித்து அடிப்படைகளை ஆராய வசதி கேட்டதற்கு சி.சு.செ. மறுத்திருக்கிறார். இந்தக் கட்டுரையில் ஜெயகாந்தனை மட்டுமின்றி அசோகமித்திரனையும் சாடுகிறார். இவர்கள் இருவருமே யந்திர எழுத்தாளர்கள். தேவையற்ற வெற்று விவரணைகள், கதையில் உருவாக்கப்படும் தெளிவின்மை (மௌனி கதைகளில் காணப்படும் தெளிவின்மைக்கும் இதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு) கலைத்தன்மையைச் சிதைப்பதாக உள்ளது என்கிறார். இதற்கு அடுத்ததாக உள்ள கட்டுரையில் அ.மி.யின் ‘பிரயாணம்’ என்ற சிறுகதை ஜாக் லண்டனின் கதையைத் திருடி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இரண்டு கதைகளையும் வாசித்தவன் என்ற முறையில் எனக்கு இது ஏற்கும்படியாகத் தோன்றவில்லை. அந்தக் கதையின் தூண்டுதலால் எழுதியது என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரது மற்ற கதைகளில் இருந்து இந்தக் கதை தனித்து நிற்பது என்னவோ உண்மை. இந்தக் கோணல்களுடன் உள்ள எழுத்துக்களை இலக்கியத் தயாரிப்புகள் என்கிறார் பிரமிள். இது ஒரு பிரமாதமான சொற்பிரயோகம். இலக்கியத் தயாரிப்பு என்றால் என்ன? தன்னெழுச்சியோடு படைப்போடு ஒன்றி படைப்பு மனநிலையில் எழுதப்படாது, எழுத்து வன்மையை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கதையைத் தானே தோதுக்குத் தகுந்தபடி உற்பத்தி செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலை இலக்கியத் தயாரிப்பு என்று சொல்லலாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கியத் தயாரிப்புக்கும் வித்தியாசம் காண்பது எளிதென்றாலும் எழுத்தாளர் மீதான அபிமானத்தால், ஏற்கெனவே இரசனை ரீதியாக ப்ரீதியை எழுத்தாளர் மேல் வாசகர் ஏற்படுத்திக் கொள்வதால் இதை உணர்வது சிரமமாகி விடுகிறது. இது மட்டுமின்றி வாசகரின் தகுதி நிலையையும் பொருட்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் தன் கைக்கெட்டும்படி பறிக்கக் கிடைக்கும் பழமே சுவையானது என்று சாதிப்பவர்கள். மேலும் உலக மயமாக்கல் படைப்பை ஒரு நுகர்பொருளாக ஆக்கிவிட்டது. அதிக விற்பனை, பெருவாரியானோர் ஆதரவு, சந்தை இவையே தர நிர்ணயக் காரணிகளாகிப் போயின. இதில் யாரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி திகிலூட்டுவதாயும் அயற்சியளிப்பதாகவுமே உள்ளது. ஓர் எழுத்தாளர் அல்லது வாசகர் ஒருவரின் படைப்பைக் கொண்டாடுவதன் காரணங்கள்: 1) அவரால் அது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது 2) அவரது வாழ்வனுபவத்தோடு நெருக்கமாய் இருக்கிறது 3) படைப்பாளியின் உணர்வுத் தளத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது 4) குறிப்பிட்ட எழுத்தாளரோடு தனிப்பட்ட முறையில் உள்ள பழக்கம் 5) அரசியல் நிலைப்பாடு. இன்னும் பல காரணிகளை அடுக்கலாம். ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் புகழ்வதைக் கொண்டு பாராட்டும் எழுத்தாளரின் வாசகர்களும் அதையே பின்பற்றுகின்றனர். எழுத்தாளர் தனது உள்வாங்கும் திராணிக்கேற்பவோ அல்லது தனது அரசியலுக்கு ஏற்பவோ தான் ஒரு படைப்பைப் பற்றிப் பேசுகிறார். இது ஒரு போதாமை இன்னொரு போதாமையை முன்னிறுத்தி, அப்படி முன்னிறுத்தப்பட்டவர் அதனினும் கீழான ஒரு படைப்பை/படைப்பாளியை முன்னிறுத்தி ஒரு தொடர் சங்கிலியை உருவாக்குகிறது. இது இலக்கியச் சூழலை மேலும் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் செயல் தொடர். இந்தத் தொடர் கட்டுரைகளில் சிலநேரம் இதில் தனியே சொல்ல என்ன இருக்கிறது, இந்தக் கட்டுரையை அப்படியே தான் எடுத்து எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதே போல் ஏற்கெனவே வாசித்ததைத் திரும்ப வாசிக்கையில் புதிதாக வாசிப்பது போலும் தோன்றியிருக்கிறது. பிரமிள் விமர்சனங்கள் இலக்கிய பாராயணத்துக்கு உரியவை. எழுத்தாளர்கள், எழுத முனைபவர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள் அவசியம் பிரமிள் தொகுப்புகளை வாசிக்க வேண்டும். இப்படியான ஒரு கட்டுரைதான் ’ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்’ (ஞானரதம், மார்ச் 1973). இந்தக் கட்டுரையில் செல்லப்பாவின் இலக்கியப் பங்களிப்பை குறிப்பாக ஒரு பதிப்பாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் எழுத்து இதழ் வழி அவரது சாதனைகளை விரிவாக விளக்குகிறார். க.நா.சு. ஆரம்பம் முதலே அபிப்பிராயங்களும், பட்டியல் போடுவதையுமே விமர்சனமாகக் கொண்டிருந்தபோது சி.சு.செ. ஆதாரப்பூர்வமான விமர்சனத்தைக் கைக்கொண்டார். தமிழில் விமர்சனம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் க.நா.சு. என்றாலும் அவர் செல்லப்பாவின் ஆய்வுமுறையை அநுசரிக்கவில்லை. “எழுத்து–வில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர், விமர்சனம் என்பது கலைப் படைப்பைத் தொட்டும் தொடாமலும் பூனைக்குட்டி ஒரு பொருளைத் தொடுவது போல தொட்டுப் பார்ப்பது தான் என்று எழுதினார். ஆனால், இந்தத் தொட்டும்தொடாத நிலை என்பது அபிப்ராயம் சொல்வதோ, பட்டியல் போடுவதோ அல்ல; கலைப்படைப்பையே தீண்டி ஆராய்வது தான். எவ்வளவு தான் ஆழ்ந்து அலசிஆராய்ந்தாலும், அது இந்தத் தொட்டும் தொடாமலும் சென்ற அளவுதான். ஏனெனில், எத்தகைய விமர்சனமும் கலைப்படைப்பை அப்பிப்பிடித்து ஒட்டி இழுத்து விடமுடியாது. தொட்டுக்காட்டிவிட்டு, விலகி நிற்பது தான் விமர்சனம். க.நா.சு.வின்அடிப்படையற்ற அபிப்ராயங்கள் அவரது செல்வாக்கின் தளத்தில் பிறந்தவையானாலும், இன்று, க.நா.சு.வை மறந்து விட்டு அவரது கட்டுரைகளை மட்டும் படிப்பவனுக்கு, ‘நான் சொல்கிறேன் கேள், இவர்கள் தான் இலக்கியாசிரியர்கள்’ என்றதொனியாகவே அவை சப்திக்கும்.” இப்படி ஆய்வுப்பூர்வமாக செல்லப்பா விமர்சித்ததினால் தான் உண்மையான இலக்கியத்தின் ஆழமும் அகலமும் இனம் காணப்பட்டு ஜனரஞ்சக எழுத்தாளர்களை அவர்கள் இடத்தில் வைக்க முடிந்தது. மேலும், இலக்கிய உலகில் ஒருவருடன் நட்பை வளர்த்துக் கொள்வது, அன்னாரிடமிருந்து முன்னுரை, பின்னட்டை வரிகள், தன்னைப் பற்றி சில வரிகள் எழுத வைப்பது, குறைந்தபட்சம் எதிர்மறைக் கருத்துகள் வரவிடாமல் செய்வது என்ற அளவில் தான் உள்ளது. படைப்புக்காக எழுத்தாளருடன் நேர்மையாய்ப் பழக வாசகராலேயே சாத்தியப்படுகிறது. “கருத்துலகில், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ, செஞ்சோற்றுக் கடனுக்கோஇடமில்லை. அதெல்லாம், கருத்துலகிற்குப் புறம்பான பிதிர் வழிபாட்டுமனப்பான்மைகள். இது கருத்துலக தர்மம். விமர்சனத் துறையில் மனிதர்களல்லமுக்கியம் – மதிப்பீடுகள் தான்.” ரசனை என்று எதைச் சொல்கிறோம்? ஒரு புதினம் பிரமாதமாய் இருக்கிறது என்ற அபிப்பிராயத்தில், அந்தக் கதை ஒரு துன்பியலாக இருக்கையிலும் இதையே சொல்கிறோம். இது வார்த்தைச் சிக்கலா இல்லை படைப்பாளியின் நடை இலாவகத்தை மட்டும் பார்த்து அது தரும் வாழ்வனுபவத்தைத் தவற விடுவதால் வரும் வார்த்தையா? ரசனை என்பது ஒருவித மேட்டுக்குடித்தனத்தோடும், கலையை நுகர்வுபொருளாகவும் கொள்ளும் அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. காஃப்கா, தஸ்தயோவ்ஸ்கியின் படைப்புகளைக் கடப்பது எத்தனை படபடப்பானது. மனதை உலுக்கியெடுக்கும் படைப்பை ஒருவர் அருமையாக இருக்கிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது? “கலைத்துறை எதுவாயினும், இலக்கியம் உட்பட, உண்மைக்கு வசப்பட்டது. நிதர்சனஇயல்புகளையே அடிப்படையாகக் கொண்டது. வாழ்வின் கதியும் மனித இயல்பும், மனிதன் இவற்றை எதிர்த்து, இவற்றுக்கு அடிமைப்பட்டு, ஈடுகட்டி, வென்று, தோற்று, வாழ்ந்து சமைக்கும் நிதர்சனமும் கலையுருப் பெறும்போது அது மனதைக் கவராது; படிப்பவனின் மனதைத் தாக்கும். விழிப்பூட்டும். அவனைத் தன்னுள் ஆழ்த்தி எடுத்துஉலுக்கி விடும். இந்த இயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், ‘பாதிப்பு’ என்ற ஓர்அதிர்ச்சியே நேர்ந்திராது. இந்தப் பாதிப்பின் விளைவு தான் பாரம்பரியம். இந்தஇயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், மனித அறிவின் வரலாறே இன்று நாம்அறிந்துள்ள வகைக்கு வந்திராது. தஸ்தயேவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்களையும்குற்றமும் தண்டனையுமையும் கதைக்காகப் படித்து ‘ரசிப்பவர்’களை எனக்குத்தெரியும். தஸ்தயேவ்ஸ்கி எழுப்பும் நிதர்சனம் இவர்கள் மீது இறங்கும் போது, எருமைமாட்டின் முதுகில் பெய்த மழையாகத்தான் முடியும்.” கோணல்கள், இலக்கியத் தயாரிப்பு குறித்து பார்க்கையில் ஜெயகாந்தன் மீதான பிரமிளின் விமர்சனத்தைப் பார்த்தோம். இது ஒருவகையில் அவர் அடிப்படையில் கம்யூனிஸ்டாக இருந்ததின் காரணமாக இருக்கலாம் என்கிறார் பிரமிள். வெளிப்படையான, சட்ட திட்டங்களுக்குட்பட்ட விஷயங்களில் பிய்த்து உதறும் இந்த மெட்டீரியலிஸ்ட்கள் அகவயமாய்ப் போவதாய் இருந்தால் தட்டுத் தடுமாறி பாவ்லா காட்டி ஏமாற்றி விடுவார்கள். ஸ்தூலங்கள் எளிமையானவை. 1+1=2 என்ற கணக்கைப் போல குழந்தைகூட எளிதில் கற்றுக்கொள்ளும். மனதையும் ஆழ்மனதையும் கற்றுத்தரப் போவது யார்? இதனோடல்லவா ஒவ்வொரு மனித ஜீவனும் போராடிக் கொண்டிருக்கிறது. மனதுக்கு எதிரான, சமூகத்தால் அடக்கப்பட்ட ஆழ்மனம் இவற்றுக்கு எதிராகவல்லவா இருக்கிறது. உலோகாயதத் தேவைகளை பூர்த்தி பண்ணிவிட்டால் மனிதன் சமாதானம் பெற்று தன்னிறைவை அடைந்துவிடுவானா? புறத்தை மட்டுமே அணுகுவதில் ஒரு மழுங்கல் இருக்கிறது. ஒருவித உணர்திறன் (sensitivity) குறைபாடு. தீயும் பிரச்சாரமும் (சதங்கை, ஆகஸ்ட் 1973) இதழில் இதை மார்க்ஸியத்தின் மீதான குறையாக முன் வைக்கிறார் பிரமிள். “உளவியல் என்பதே உள்மனம் பற்றிய கொள்கையின் பெருக்கமாகும். அது விழிப்பின் போது செயல்படும் மனத்துடன் முரண்படுகிறது. ஆனால் விழிப்பு நிலையின்தேவையான பொருளாதாரத் தேவை தான் மனிதனின் பூரணமான நோக்கு என்றுஅறுதியிட்டுக் கூறும் மார்க்ஸியம், இதை ஒப்புக்கொள்ளாது. ஒப்புக்கொண்டால், மார்க்ஸியம் பொருள்முதல்வாதத் தத்துவமில்லை. ஃப்ராய்டுக்கும்மார்க்ஸுக்குமிடையில் உள்ள அடிப்படை முரண்பாடு இது. மார்க்ஸ் மனித மனத்தின்பேராழத்தை, அதன் எதிர்பாராத தன்மைகளை, இருட்குகைத் தேவைகளைநிராகரித்த அல்லது அறியாத தத்துவவாதி என்பது பிரசித்தமானது. அவர் ஒரு பெரியதார்மீகவாதி. உலக அரசியலில் ஒரு பெரிய வியாதியைத் தீர்ப்பதற்காக அவர் செய்தரணசிகிட்சை, வேறொரு பெரிய வியாதிக்குக் காரணமாகி விட்டது. அதுதான்ஆன்மீக வறட்சி.” காந்தி கூட இதை ஓரிடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேவைக்கதிகமான உற்பத்தி, தேவைக்கதிக நுகர்வைக் கொண்டு வரும். இது மனிதனிடம் ஆன்மா என்ற ஒன்றை மறைத்து விடும் என்றார். நாத்திகவாதிகளும் மார்க்ஸியவாதிகளும் ஒட்டிக்கொள்வது இதுமாதிரியான சில புள்ளிகளில் தான். ஆன்மீக வறட்சி, ஒருவித மேம்போக்கான ஆழமற்ற, சென்சிடிவிடி இல்லாத குணாம்சம் இத்யாதிகள் ஒன்றாய்ச் சேர்ந்து ஓரினமாகி விடுகின்றனர். “சமையலின் போது கத்தி வெட்டும், நெருப்பு சுடும்; கத்தி சுடாது, தீ வெட்டாது. முயன்றால், சமையலே நடக்காது. இது போலத்தான், அரசியல் வாழ்வுத் துறையில்பிரச்சாரத்தின் வேலையும் கலையின் வேலையும். பிரச்சாரம் பிரச்சாரமாகவும், கலைகலையாகவும் இருப்பதுதான், அரசியலுக்கும் வாழ்வுக்கும் செம்மை தரும்.” ”இங்கு கம்யூனிஸம் கலைஞனிடமிருந்து கௌரவத்தைப் பெற வேண்டுமானால், இந்தியாவில் அது காட்டிவரும் குருட்டுத் தன்மைகளிலிருந்து விழிப்படைய வேண்டும். இல்லாவிட்டால், சிந்தனா சக்தியோ எழுத்தாற்றலோ இல்லாத சந்தர்ப்பவாதிகளின்தற்காப்புக்காகவே கம்யூனிஸ இலக்கிய சித்தாந்தம் பயன்படும் – தற்போதுதமிழ்நாட்டில் நடப்பதுபோல.” (சதங்கை, செப்டம்பர் 1973) சதங்கை இதழில் (பிப். 1974) பிரமிளின் உளவியல் குறித்த கட்டுரைக்கு வந்த திரு. தமிழவனின் எதிர்வினைக்குப் பதில் சொல்கிறார் பிரமிள். தமிழவனின் கேள்விகள்: ‘உள்மனம் பற்றிய கொள்கை கண்டுபிடிக்கப்பட்ட 1885ஆம் ஆண்டுக்கு முந்தி, உளவியலே இல்லையா?’ ‘பிராய்டு தன்னை பொருள்முதல்வாதி என்றுதானே சொல்லிக் கொண்டார்?’ ‘உள்மனம் ஆன்மீகமானது அல்ல; விஞ்ஞானப்பூர்வமாய் நிரூபிக்கப்படக்கூடியஉண்மை’ உள்மனம் (ஆழ்மனம்/அடிமனம்) வெளிமனத்துக்கு நேரெதிரானது. விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபிக்கப்பட்டது. ஆனால் ஏன் ஒருவருக்குள் இருவேறு எதிரெதிர் மனங்கள்? ஏனெனில், புற உலகத்தோடு ஒத்த மனத்தோடு நம்மால் இயங்க முடிவதில்லை. பிளவு இயல்பாகவே உருவாகிறது. குழந்தை சாக்லேட் கேட்டால் அது மறுக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. குழந்தையின் ஆசை உள்ளுக்குள் அழுத்தப்படுகிறது. அது கனவு நிலையில் வெளிப்படுகிறது. இவ்வாறே சொல்லிய சொல்லாத, ஆசைகள், கோபங்கள், இயலாமைகள் இன்னும் என்னென்னவோ உள்ளே இருளுக்குள் திரிகின்றன. தியான நிலையில் ஏற்படும் ஒருமித்த மனநிலையில் இரு மனங்களும் ஒன்றாகின்றன. வெளிமனம் மௌனிக்கும் போது அடிமனம் மேலேறி வருகிறது. அந்நேரம் அதைக் கட்டுப்படுத்தாமல் அப்படியே அனுமதிக்கும் போது இரு மனங்களும் ஒரேகதிக்கு இயங்க ஆரம்பித்து தன் விழிப்பு சாத்தியமாகிறது. இது ஆன்மீகம். “உள்மனம் ஆன்மீகமானது என்று நான் கூறவில்லை என்பதும், உள்மனம் – வெளிமனம்என்ற பாகுபாடு இல்லாநிலையில் கிடைக்கும் தரிசனமே ஆன்மீகமானது என்பது தான்என் நோக்கு என்பதை, திரு. தமிழவனுக்கு எனது பதில் புலப்படுத்தியிருக்கும். உள்மனத்தை நிரூபிக்கத்தான் விஞ்ஞானத்தால் முடிகிறது. ஆனால் உள்மனம் – வெளிமனம் என்ற பாகுபாட்டை, விஞ்ஞானம் மனித மனத்திலிருந்து களைந்து விடவில்லை என்பதையும் அப்படிக் களைய integration என்ற ஒன்றிப்பு வேண்டும்என்பதையும், சில நவீன மனவியல்வாதிகள் Alan W. Watts, Eyesenk போன்றோர்வலியுறுத்துகின்றனர் என்பதையும், திரு. தமிழவனுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இந்த integration-க்கு விஞ்ஞானம் துணை செய்ய முடியாது என்பதும், தனிமனிதனேதன்னையறிய முயல வேண்டும் என்பதும்தான், பிராய்டிலிருந்து இன்றுவரைதெரியவந்துள்ள உண்மை.” கனவில் செயல்படும் உள்மனம், விழிப்பு நிலையிலுள்ள மனத்தோடு முரண்படுவதாகக் கூறுவதை மறுப்பதாகவும் தமிழவன் கூறுகிறார். அதாவது ‘புற உலகோடு ஏற்படும் தொடர்பால்’ Idக்கு (அடிப்படைத் தேவையும் நினைவும்) Ego உண்டாகிறது என்கிறார் தமிழவன். இங்கே தொடர்பு என்ற வார்த்தை சரியானதல்ல. தொடர்பு என்பது ஒப்பந்தம் போன்ற நேர்மறையான அர்த்தம் கொடுப்பது. குழந்தையின் ஐடி நிலையின் தேவையும் வேளியுலகு அதற்கு விதிக்கும் தடைகளும் ‘தொடர்பு’ என்ற வார்த்தைக்குள் வராது. முரண்நிலையே உருவாகும் என்கிறார் பிரமிள். http://tamizhini.co.in/2019/05/22/பிரமிள்-தனியொருவன்-பகுத-3/

முன்னாள் ஜனாதிபதிக்காக இருந்த 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றம்

1 month ago
முன்னாள் ஜனாதிபதிக்காக இருந்த 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்திட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்பொழுது பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவர்களில், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களை ஏனைய அரச நிறுவனங்களுக்கு நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும் பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/194113/

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்திட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தற்பொழுது பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவர்களில், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்களை ஏனைய அரச நிறுவனங்களுக்கு நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும் பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். 

http://www.dailyceylon.com/194113/

முன்னாள் ஜனாதிபதிக்காக இருந்த 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றம்

1 month ago
முன்னாள் ஜனாதிபதிக்காக இருந்த 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்திட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய 500 பேர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்பொழுது பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவர்களில், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களை ஏனைய அரச நிறுவனங்களுக்கு நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும் பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/194113/

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

1 month ago
நான் கூறியது அதுவல்ல சே . இதனை எத்தகைய சூழலில் தூக்கிப்பிடித்து பிரச்சனை ஆக்குகிறார்கள் என்பதும் அதன் காரணமாக சமூகத்திற்கு ஏற்படும் மீளமுடியாத, அழிவு / தாக்கம் / சேதம் என்ன என்பதுதான் நான் கூறவந்தது..

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் டிஏபி-யை மட்டும் தனியே பிரித்துக் குற்றம் சாட்டுவது ஏன்?- கிள்ளான் எம்பி

1 month ago
செய்தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் டிஏபி-யை மட்டும் தனியே பிரித்துக் குற்றம் சாட்டுவது ஏன்?- கிள்ளான் எம்பி கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு எல்டிடிஇ விவகாரத்தில் வழக்குரைஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா டிஏபி-யை மட்டும் தனியே குற்றஞ்சாட்டுவது ஏன் என்று வினவுகிறார். டிஏபி தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் போலீஸ் விசாரணையைக் குறைசொல்லுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் , அது அரசாங்கமே விசாரணையில் குறுக்கீடு செய்வதாகக் கருதப்படலாம் என்று ஹனிப் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக சந்தியாகு அவ்வாறு வினவினார். “என் சகாக்கள் தவிர்த்து வேறு யாரும் 2012 பாதுகாப்புக் குற்ற(சிறப்பு நடவடிக்கை) சட்ட(சொஸ்மா)த்தை அல்லது எல்டிடிஇ-தொடர்பான கைதுகளைக் குறைசொல்லவில்லையா? “இது என்ன டிஏபி மேற்கொள்ளப்படும் ம்ற்றொரு பலி வேட்டையா? இதுவரை நடந்தது போதாதா? ”, என்று சந்தியாகு இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “சொஸ்மா ஒரு கொடிய சட்டம். அதன்கீழ் ஒருவரைத் தடுத்து வைப்பது அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்பதை ஒரு வழக்குரைஞரான ஹனிப் உணர்ந்தே இருப்பார். “அதேபோன்று ஹனிப் டிஏபி தலைவர்களை வாயை மூடிக்கொண்டிருக்கச் சொல்வதும் அவர்களின் பேச்சுரிமையை மீறும் செயல் என்பதை உணர வேண்டும்”, என்றாரவர். https://malaysiaindru.my/180399

மதம் பிடித்த பிராந்தியங்கள் -8 DEC 22, 2019by புதினப்பணிமனைin ஆய்வு கட்டுரைகள் சர்வதேச அரங்கிலே அரசியல் மாற்றங்கள் பல்வேறு கோணங்களில் நிகழ்வது போல் தென்படுவதாக இருந்தாலும், அனைத்து நகர்வுகளும் மேலைத்தேய முதலாளித்துவ ஜனநாயக நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே இடம் பெற்று வருகிறது என்பதை, இந்த இறுதி எட்டாவது கட்டுரை பிரதிபலித்து நிற்கிறது. மத்திய கிழக்கு, மேற்காசியப் பிராந்தியத்திலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் மட்டுமல்லாது, மதத்தின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க பிராந்தியங்களிலும் அரசியல் நடத்தப்படுகிறது. மத தேசியவாதம் என்றும் மத அடிப்படைவாதம் என்றும் மத பயங்கரவாதம் என்றும் அரசியல் கொதி நிலையின் தேவைக்கு ஏற்ற வகையில் மதம் பயன்படுத்தப்படுகிறது . மத்திய கிழக்கு நாடுகளில் இதன் கொதி நிலை அதிகமாக காணப்படுவதையும் இதர பகுதிகளிலும் மத தேவையின் கொதி நிலை அதிகமாக இருந்தாலும் ஆளும்தரப்பினால் உபயோகப்படுத்தக் கூடிய வகையில் தேசியவாதமாக காட்டப்படுகிறது . பல்தேசிய சமூகங்களை கொண்ட பிராந்தியங்களில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள், தமது ஆட்சி அதிகாரப் போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது மத கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பரப்பும் பொருட்டு பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை பின்புலத்தில் கொண்டிருக்கின்றனர். புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தாக்கங்களை விளைவித்து வருகின்றனர். கல்வி தலையீடுகள், வேலைவாய்ப்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும் மத அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் ஆட்சியாளர்கள் உள்ளனர். இந்த கட்டுரைகள் வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற கொழும்பு குண்டு வெடிப்புகளுடன் ஆரம்பமானது ,இப்பொழுது வருட இறுதியில் இலண்டன் கத்தி குத்து சம்பவங்களில் வந்து நிறைவு பெறுகிறது. இவை இரண்டிற்கும் இடையிலே இஸ்லாமிய மத அடிப்படைவாத தலைமையான ஐஎஸ் ஐஎஸ் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் பெருமையுடன் கூறிய நிலையையும் நாம் அறிவோம். இது ட்ரம்ப் அவர்களின் அடுத்த தேர்தல் குறித்து நகர்வுக்கான ஒரு முத்தாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், 1990 களில் இருந்து ரஷ்யாவின் வளர்ச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் அதன் தலையீடுகளும் அமெரிக்க மூலோபாய முனைப்புகளுக்கு தடைக்கல்லாக இருக்கிறது. இதன் காரணமான பெரும் பின்னடைவுகளை சந்திக்கும் நிலையில் அமெரிக்க பின்வாங்கல்களும் நிகழ்ந்துள்ளன. இதனாலேயே அல் பக்தாதி கொல்லப்பட்டிருப்பதையும் பல அறிக்கைகள் கூறுகின்றன. இவை குறித்து பின்பு மதங்களுக்கு அப்பால் ஆய்வு செய்யும் கட்டுரைகளில் காணலாம். ஆனாலும், லண்டன் பிறிஜ் அருகே இடம் பெற்ற கத்தி குத்துகளுக்குப் பின்பு இன்றைய நிலையிலிருந்து பார்க்கும் பொழுது மதத்தின் பெயரால் இத்தகைய தாக்குதல்கள் மேலும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதியாக கூற முடியாது. கொழும்பு குண்டு தாக்குதல்களின் எதிரொலியாக, இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதா கட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தலில் பல காரணிகள் முன் வைக்கப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலான காரணிகள் மதம் சார்ந்தவையாகவே இருந்தன. அதேபோல சிறிலங்காவில் அதிபர் தேர்தலில் அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி கொள்ளும் நிலைக்கும் மதத்தை முன்நிறுத்திய பயங்கரவாத பிரசாரமும் அடிப்படைவாதமுமே காரணம் என் சர்வதேச பத்திரிகைகள் பலவும் கூறி உள்ளன. இந்த வகையில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் இம்மாதம் 12ஆம் திகதி நாள் இடம்பெற்றது. பிரித்தானியாவில் உள்ள இரு பெரும் கட்சிகளில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் அவர்களின் போக்கு நேற்ரோ அமைப்புக்கும் அணுஆயுத பலப்படுத்தல் களுக்கும் எதிரானது. இஸ்லாமிய அமைப்புகளுடன் மென் போக்கை கொண்டிருப்பவர் மேலைத்தேய முதலாளித்த்துவத்தை சாடுபவர். சர்வதேச அளவல் அடக்கப்பட்ட மக்களின் பால் அனுதாபம் கொண்டவர். செமிட்டிச எதிர்ப்பு என்று கூறக் கூடிய யூத இன எதிப்பு போக்கிற்கு உரியவர் என்ற குற்றம் சாட்டப்பட்டவர். இவ்வாறான பல்வேறு தன்மைகளையும் கொண்ட ஜெரமி கோபின் அவர்களின் வரவை தவிர்க்கும் பாங்கில். மத்தின் பெயரால் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மத வெறுப்பை உண்டாக்கும் போக்கு கொண்டதோ என்று எண்ணவும் தோன்று கிறது இதன் மூலம் ஜனரஞ்சகவாத போக்கையும் முதலாளித்துவ கொள்கைகளையும் கொண்ட பொறிஸ் ஜோன்சன் அவர்களின் வரவு நல்லதோ கெட்டதோ முதலாளித்துவ, பழமைவாத, ஏகாதிபத்திய வாத்தை சீர்திருத்தும் வகையில் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தாத நிலை இருந்தால் போதும் என்ற பார்வை ஒன்று தெரிகிறது. பிரதமர் போறிஸ் இந்த கட்டுரை எழுதி கொண்டிருக்கம் போதே பொறிஸ் ஜோன்சன் அவர்கள் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்றை பிரித்தானிய மக்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். பிரதமர் மாகிரட் தாட்சர் எவ்வளவு அதிகாரத்துடன் செயற்பட கூடிய ஒரு அரசாங்கத்தை மக்கள் 1980 களின் நடுப்பகுதியில் வழங்கி இருந்தார்களோ அதேபோல இன்று அதே கட்சியை சார்ந்த பொறிஸ் ஜேன்சனுக்கும் வழங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாது பல தொழிற்கட்சி கோட்டைகாளாக கருதப்பட்ட இடங்களில் கூட, பொறிஸ் ஜேன்சனின் பழமை வாதகட்சி தனது இடங்களை பிடித்திருக்கிறது இது ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாது பிரித்தானியா விலகிக் கொள்வதற்கான ஆணையாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது பாரிய நிதிப்பளுவை பிரித்தானியா மீது ஏற்படுத்தினாலும் பரவாயில்லை, விலகு என்பது முடிந்த முடிவாகி இருக்கிறது . அடுத்து இந்த தேர்தல் முதலாளித்துவ ஜனரஞ்சகவாதிகளின் அதிக ஆதரவை கொண்ட அரசாங்கத்திற்கு அதீத பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் பலருக்கும் பொறிஸ் ஜோன்சன் அவர்கள் அதீத ஜனரஞ்சக வாதியாக தெரிய வில்லை என்பதுவே உண்மையாகும் பிரித்தானியா தனது பொருளாதாரத்தை முன்னிறுத்தி சர்வதேச அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் நிச்சயமாக முன்னைநாள் காலனித்துவ பொதுநலவாய நாடுகளுடன் அதீத உறவில் இருப்பதன் மூலமே ஆரம்பிக்க முடியும் ஆகவே இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் என ஆசிய நாடுகளுடன் முக்கிய உறவை வளர்த்து கொள்வதுடன் ஆபிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகளுடனும் கூட தனது உறவுகளை உருவாக்கி கொள்ளும் தேவை உள்ளது.. ஆனால் சர்வதேச அளவில் மதவாதத்தை தமது தேவைக்கு ஏற்றவகையில் கையாளும் சக்திகள் மேலைத்தேய நலன்களையும் அதன் விழுமியங்களையும் விட்டு விலகும் நாடுகள் மீது , அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது . கடந்த கால குண்டு வெடிப்புகள் யுத்தமுனைப்புகள் என பலவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது “கண்ணுக்குப் புலப்படாத கை “ சர்வதேச அரசியலில் அரசுகளுக்கும் அப்பாற்பட்ட வகையில் உலக அளவில் செயற்படுகின்றதா என்ற ஒரு கேள்வியை கேட்டு நிற்கிறது. கண்ணுக்கு புலப்படாத கை என்பது பொருளாதாரத்துவத்தில் தன்னிச்சையாக செயற்பட கூடிய சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை நகர்த்தும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் ஒரு உருவகமாகும். தனிப்பட்ட நலன் மற்றும் உற்பத்தி சுதந்திரம் மற்றும் நுகர்வு மூலம், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் தேவைகளும் நலன்களும் பூர்த்தி செய்யப்படும் . அரசியல் பார்வையில் “கண்ணுக்குப் புலப்படாத கைகள்“ என்ற பதம் அரசுகளின் மக்கள் மீதான மறைமுகமாக உருவகப் படுத்தப்பட்ட விதிமுறை அதிகாரத்தையும் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தி இறையாண்மையை வலியுறுத்தும் சக்தியையும் குறிப்பிடபடுகிறது. இது மேலைத்தேய அரசியல் தத்துவத்தில் குறிப்பிடப்படும் ஒரு முறையாகும் இந்த கட்டுரைகளின் படி கேள்வி ஒன்று எழுகிறது. இன்னும் ஒரு கண்ணுக்கு புலப்படாத கை ஒன்று சர்வதேச அரசியலில் உள்ளதா? ஏகாதிபத்திய பண்பை காத்து நிற்கக் கூடிய மேலைத்தேய முதலாளித்துவம் சார்பாக அரசாங்கங்களை உலகளவில் உருவாக்கும் வகையில் மக்களின் மனதை மதத்திற்கு எதிரான பயத்தை உருவாக்கவதன் மூலம் முதலாளித்துவம் சார்பாக தூண்டும் அல்லது அதற்கு எதிராக எழக்கூடிய வர்களை திசை திருப்பும் சக்தி ஒன்று செயற்படுகிறதா என்ற ஒரு கேள்வி தான் அது. -லண்டனில் இருந்து லோகன் பரமசாமி கட்டுரையாளருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள -loganparamasamy@yahoo.co.uk http://www.puthinappalakai.net/2019/12/22/news/41676