Aggregator

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!

1 month 3 weeks ago
தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன. இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 ஆவது தேசிய மகாநாடு புதிய நிர்வாக தெரிவுகளில் போட்டி பொறாமை சண்டை எதிர்ப்பு விட்டுக்கொடுப்பின்மை என பல தடைகளை்தாண்டி புதிய 9 ஆவது தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல்தடவையாக ஒரு தேர்தல் வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார். கட்சித் தலைவர்கள் இதுவரை கட்சித் தலைவர்களாக, 1. சாமுவேல் ஜேம்ஷ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) யாழ்ப்பாணம் 2. குமாரசாமி வன்னியசிங்கம், யாழ்ப்பாணம். 3. அராலிங்கம் இராஜவோதயம்,-திருகோணமலை. 4. சின்னமுத்து மூத்ததம்பி இராசமாணிக்கம், மட்டக்களப்பு. 5. டாக்டர் இலங்கை முருகேசு விஜயரெத்தினம் நாகநாதன்,யாழ்ப்பாணம். 6. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்., 7. இராஜவரோதயம் சம்பந்தன். திருகோணமலை. 8. மாவை சோமசுந்தரம் சேனாதிராசா. யாழ்ப்பாணம் ஆகியோர் இருந்தனர், தற்போது 9.சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் தெரிவாகினார். சரித்திரத்தில் கடந்த 74 வருடமும் இடம்பெறாத நிலையில் தலைவர் தெரிவுக்காக பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் வேட்பு மனுக்களை கோரியதன் நிமிர்த்தம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் பொதுச்சபையின் ஆறு இயங்கு நிலை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டு அவர்களை வடகிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் சென்று பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார். ஏறக்குறைய 375, பொதுச்சபை உறுப்பினர்கள் மட்டும் தலைவரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் ஏன் மாவட்டங்களில் எல்லாம் சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்தது. ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு அதற்கு ஜனநாயகம் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியான செயல்பாடு என வியாக்கியானம் தலைவர் தெரிவில் போட்டியிட்ட வேட்பாளர்களால் கூறப்பட்டன. அதேவேளை இவ்வாறான போட்டித்தன்மை பின்னர் பொறாமையாக மாறி இரண்டு அணிகளாக கட்சிக்குள் குழப்பங்களை தோற்றுவிக்கலாம் என்ற கருத்துகளை பல ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர். இந்த சந்தேகங்களுக்கெல்லாம் வேட்பாளராக போட்டியிட்ட சுமந்திரன் அப்படி எதுவும் இடம்பெறாது தேர்தல் முடிவுற்றதும் இருவரும் சேர்ந்து பயனிப்போம் என்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால் அவரே பின்னர் பொதுச்செயலாளர் பதவி தமக்கு தரப்படவேண்டும் இல்லையேல் தமது அணிக்கு தரவேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு அணிகளாக தமிழ்சுக்கட்சி உள்ளதை நிருபித்தார். ஏற்கனவே வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தமது பிரசாரத்தை ஆரம்பித்தவர் சுமந்திரன், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழுமையாக செயல்பட்டார் அவரின் பிரசாரம் ஆரம்பித்து ஒரு வாரங்களுக்கு பின்னரே இரண்டாவதாக சிறிதரன் மூன்றாவதாக யோகேஷ்வரன் சிறிதரனுடன் இணைந்து பிரசாரத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர். சிறிதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், யோகேஷ்வரன். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் முழுமையாக பிரசாரங்களை மேற்கொண்டனர். யோகேஷ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் கடந்த ஜனவரி 21இல் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டில் யோகேஷ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது இதில் ஆச்சரியம் என்னவெனில் யோகேஷ்வனுக்கு எவருமே வாக்களிக்கவில்லை தப்பித்தவறி்யாராவது ஒவருவர் யோகேஷ்வரனன் பெயருக்கு நேரே புள்ளடி இட்டு இருந்தால் அவர் மீது வீண் சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் தாம் சிறிதரனை ஆதரிப்பதாக கூறிவிட்டு தானே தமது வாக்கை அவருக்கே போட்டிருப்பதாக அவர் மீது யாரும் குற்றம் கூறியிருப்பார்கள் நல்லவேளை்அப்படி நடக்கவவில்லை. இதில் இருந்து யோகேஷ்வரன் சிறிதரனை தாம் ஆதரிப்பதாக கூறிய கருத்து முழுமை பெற்றிருந்தது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை. வாக்கெடுப்பில் பொதுச்சபையில் கலந்துகொண்ட 321, உறுப்பினர்களில் சிறிதரன் 184, வாக்குகளையும், சுமந்திரன் 137, வாக்குகளையும் பெற்று சுமந்திரனை விட 47, மேலதிக வாக்குகளால் சிறிதரன் தெரிவானார். சிறிதரன் தமது பிரசாரங்களில் தாம் கூறிய தமிழ்த்தேசிய வாதி என்பதை நிருபித்தார் பொதுச்சபை உறுப்பினர்களில் 184, பேர் தமிழ்தேசிய கொள்கையை ஆதரித்தனர் எனபதும் 137 பேர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் இந்த வாக்கெடுப்பு தெரிவு மூலம் நிருபணமானது. ஒருகட்சி தலைவர் தெரிவை மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்யாமல் தலைவர் தெரிவு இடம்பெற்ற ஜனவரி 21இல் குறிப்பிட்ட மூவரையும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கருத்துக்களை கூறவிட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இரண்டு அணிகள் என்ற கருத்துக்கே இடம்வந்திராது என்பது எனது கருத்து இதை நான் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருந்தேன். தலைவர் தெரிவு அதைவிட தலைவர் தெரிவு இடம்பெற்ற அன்றே பொதுச்செயலாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தால் இரண்டு அணிகள் என்ற கதையே எழுந்திராது. வழமையாக கடந்த 16 ஆம் திகதி , தேசிய மகாநாடுகளிலும் தெரிவு ஒருநாளில் தான் இடம்பெற்றது வழமை ஆனால் இந்த முறை ஜனவரி 21 இல் தலைவர் தெரிவும் சரியாக ஒருவாரம் கழித்து ஜனவரி 27இல் பொதுச்செயலாளர் ஏனைய தெரிவுகளுக்கு பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் திகதி ஒதுக்கியதும் ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது. இதுவும் சுமந்திரன் பதில் பொதுச்செயலாளரிடமும், நிர்வாகச்செயலாளரிடமும் கூறியதால் அப்படி செய்ததாக பலரின் மத்தியில் கருத்தும் உண்டு ஒரே நாளில் இடம்பெறாமல் ஒருவாரம் பிற்போடப்பட்டு பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்றதும் குழப்பநிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. அந்த குழப்பம் போட்டி குரோதம் இன்று வெட்கம் இல்லாமல் நீதிமன்றத்தடைக்கு சென்றுள்ளது. மத்தியகுழு கூட்டம் கடந்த ஜனவரி 27இல் பொதுச்சபை கூடுவதற்கு முன்னர் மத்தியகுழு கூட்டப்பட்டது மத்திய குழுக்கூட்டம் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தால் அறிவிப்பு(கூட்ட அழைப்பு) விடுக்கப்படவில்லை மகாநாட்டு விழாக்குழு தலைவர் குகதாசனே மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார். உண்மையில் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் சுகவீன காரணமாக அவர் தலைவர் தெரிவிலும் அதன்பின்னர் நடந்த மத்தியகுழு பொதுச்சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை இதுவும் சில முரண்பாடுகளுகளை தோற்றுவித்தது மகாநாடு நடத்தி முடியும்வரை அதற்கான முழும்பொறும் பொதுச்செயலாளரே கையாளவேண்டும் ஆனால் இது யார் கூட்டத்தை நடத்தினார் என்பதே புரியாத புதிராகவே இருந்தது. இறுதியாக கடந்த ஜனவரி 27 இல் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்திம் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றபோது அவர் மத்தியகுழுவில் பொதுச்செயலாளர் தொடர்பான ஆலோசனைகளை கூறலாம் என கேட்டதற்கு இணங்க நான்(பா.அரியநேத்திரன்) மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்திருந்தேன். அதன்பின்னர் ஏற்கனவே நிருவாக செயலாளராக இருந்த குலநாயகம் தான் 1965, தொடக்கம் தமிழரசுகட்சியில் முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 2019, மகாநாட்டிலும் தாம் பொதுச்செயலாளர் பதவி கேட்டு தரப்படவில்லை இந்தமுறை தமக்கு தரவேண்டும் என குறிப்பிட்டார். அதன்பின்னர் சுமந்திரன் தம்மை தலைவர் சிறிதரன் சிரேஷ்ட தலைவராக செயல்படுமாறு கேட்டதாகவும் தாம் அந்த பதவியை ஏற்கவில்லை ஆனால் தற்போது இரண்டு அணிகள் உள்ளன சிறிதரன் அணி , சுமந்திரன் அணி என உள்ளது தலைவராக சிறிதரன் உள்ளதால் அவருக்கு எதிராக போட்டியிட்ட தமக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கினால் இரண்டு அணிகளையும் சமாளித்து ஒற்றுமையாக கட்சியை முன்னகர்த்தலாம் என்ற கருத்தை தெரிவித்தார். அடுத்ததாக கொழும்பு கிளை உறுப்பினர் இரத்தினவேல் தமது கருத்தில் வடக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்தால் கிழக்கை சேர்ந்தவர் பொதுச்செயலாளராக இருப்பது நல்லது அதனால் குலநாயகமும், சுமந்திரனும் வடக்கை சேர்ந்தவர்கள் விட்டுக்கொடுத்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பொதுச்செயலாளராக தெரிவது நல்லது என்ற கருத்தை கூறினார். இதன் பின்னர் மீண்டும் சுமந்திரன் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளன அதில் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன். அல்லது மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், அல்லது அம்பாறை மாவட்ட தலைவர் கலையரசன் இந்த மூவரில் ஒருவரை நியமித்தால் இரண்டு அணிகள் என்ற பிரச்சனை எழாது என்ற கருத்தை கூறினார். இதன்பின்னரே புதியதலைவர் சிறிதரன் ஶ்ரீநேசனிடம் அவருடைய இருக்கைக்கு சென்று குகதாசனுக்கு ஒருவருடம் விட்டுக்கொடுக்குமாறு கேட்டார் அதை பெரும் தன்மையாக ஶ்ரீநேசனும் சம்மதித்தார் ஆனால் ஒருவருடம் வரையறை செய்த விடயத்தை பொதுச்சபையில் சிறிதரன் கூறவில்லை. பொதுச்சபையில் பெரும்பாலானவர்கள் குகதாசனை பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை இதனால் சண்டை தகராறு குழு குழப்பம் அடைந்து பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டபோது ஒரு கட்டத்தில் பழைய தலைவர் மாவை சேனாதிராசா வாக்கெடுப்பு மறுநாள் 28ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்தார். அதனால் சில பொதுச்சபை உறுப்பினர்கள் வெளியேறினர் எஞ்சிய பல உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அடம்பிடித்தனர். இதனை ஏற்ற தலைவர் மாவை சேனாதிராசா இப்போது பொதுச்செயலாளருக்கான இரகசிய வாக்கெடுப்பை பதில் செயலாளர் இல்லாத காரணத்தால் உப செயலாளரான சுமந்திரன் நடத்துவார் என கூறினார். சுமந்திரன் பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை தவிர்த்து மத்தியகுழுவில் எடுத்த தீர்மானத்தை ஏற்பவர், எதிர்பவர்கள் என கூறி கையை உயர்த்தும் வாக்கைடுப்பை நடத்தி மேடையில் நின்று அவரே கணக்கெடுத்தார் அந்த எண்ணிக்கை 112, பேர் ஏற்பதாகவும்,104, பேர் எதிர்கதாகவும் முடிவை அறிவித்துவிட்டு சென்றார் அதன் பின்னர் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட தலைவர் மாவைசேனாதிராசா மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார். இந்த சிக்கல் நிலை கடந்த ஜனவரி 27 தொடக்கம் கடந்த பெப்ரவரி 11, வரை தொடர்தன மீண்டும் பொதுச்செயலளர் பதவி இரகசிய வாக்கெடுப்பில் நடத்தவேண்டும் என சிறிதரன் அணியை சேர்ந்தவர்களும், நடத்த கூடாது என சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களும் வாதப்பிரதிவாதங்களும் சமூகவலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகளும் தொடர்ந்தன. புதியதலைவராக தெரிவான சிறிதரன் தமது தலைவர் பதவியை முறைப்படி மகாநாட்டில் பதவி ஏற்று கட்சியை இயங்கு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாலும் பழைமையான தமிழரசுக்கட்சியை தொடர்ந்தும் ஒற்றுமையாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் கடந்த 11ஆம் திகதி வவுனியாவில் பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த சத்தியலிங்த்தின் வீட்டில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே 19ஆம் திகதி மாநாடு நடைபெற இருந்தது. அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது. இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27ஆம் திகதிஒத்திவைக்கப்பட்ட 17ஆவது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு 19 ஆம் திகதி மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம். தந்தை செல்வா 1949 இல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம் சி.மூ.இராசமாணிக்கம், இ. வ நாகநாதன், அ.அமிர்தலிங்கம். இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம், விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன் என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி ஆனால் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர். தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14 இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது. அதனால் தான் 2001இல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்த சங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது. 2004 இல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது. பவள விழா தந்தை செல்வா 1976 இல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது. கடந்த 1949, டிசம்பர்,18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18இல் 75 ஆவது பவள விழா நாளாகும். இந்த பவளவிழா ஆண்டில் 17ஆவது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும். https://tamilwin.com/article/ilangai-tamil-arasu-party-article-1708512862

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!

1 month 3 weeks ago

தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன.

 

 

 

இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 ஆவது தேசிய மகாநாடு புதிய நிர்வாக தெரிவுகளில் போட்டி பொறாமை சண்டை எதிர்ப்பு விட்டுக்கொடுப்பின்மை என பல தடைகளை்தாண்டி புதிய 9 ஆவது தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல்தடவையாக ஒரு தேர்தல் வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

கட்சித் தலைவர்கள்

இதுவரை கட்சித் தலைவர்களாக,

1. சாமுவேல் ஜேம்ஷ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) யாழ்ப்பாணம்

2. குமாரசாமி வன்னியசிங்கம், யாழ்ப்பாணம்.

3. அராலிங்கம் இராஜவோதயம்,-திருகோணமலை.

4. சின்னமுத்து மூத்ததம்பி இராசமாணிக்கம், மட்டக்களப்பு.

5. டாக்டர் இலங்கை முருகேசு விஜயரெத்தினம் நாகநாதன்,யாழ்ப்பாணம்.

6. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்.,

7. இராஜவரோதயம் சம்பந்தன். திருகோணமலை.

8. மாவை சோமசுந்தரம் சேனாதிராசா. யாழ்ப்பாணம் ஆகியோர் இருந்தனர், தற்போது 9.சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் தெரிவாகினார்.

சரித்திரத்தில் கடந்த 74 வருடமும் இடம்பெறாத நிலையில் தலைவர் தெரிவுக்காக பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் வேட்பு மனுக்களை கோரியதன் நிமிர்த்தம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் பொதுச்சபையின் ஆறு இயங்கு நிலை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டு அவர்களை வடகிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் சென்று பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

ஏறக்குறைய 375, பொதுச்சபை உறுப்பினர்கள் மட்டும் தலைவரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் ஏன் மாவட்டங்களில் எல்லாம் சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்தது.

ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு

அதற்கு ஜனநாயகம் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியான செயல்பாடு என வியாக்கியானம் தலைவர் தெரிவில் போட்டியிட்ட வேட்பாளர்களால் கூறப்பட்டன.

அதேவேளை இவ்வாறான போட்டித்தன்மை பின்னர் பொறாமையாக மாறி இரண்டு அணிகளாக கட்சிக்குள் குழப்பங்களை தோற்றுவிக்கலாம் என்ற கருத்துகளை பல ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சந்தேகங்களுக்கெல்லாம் வேட்பாளராக போட்டியிட்ட சுமந்திரன் அப்படி எதுவும் இடம்பெறாது தேர்தல் முடிவுற்றதும் இருவரும் சேர்ந்து பயனிப்போம் என்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால் அவரே பின்னர் பொதுச்செயலாளர் பதவி தமக்கு தரப்படவேண்டும் இல்லையேல் தமது அணிக்கு தரவேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு அணிகளாக தமிழ்சுக்கட்சி உள்ளதை நிருபித்தார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

ஏற்கனவே வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தமது பிரசாரத்தை ஆரம்பித்தவர் சுமந்திரன், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழுமையாக செயல்பட்டார் அவரின் பிரசாரம் ஆரம்பித்து ஒரு வாரங்களுக்கு பின்னரே இரண்டாவதாக சிறிதரன் மூன்றாவதாக யோகேஷ்வரன் சிறிதரனுடன் இணைந்து பிரசாரத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர். 

சிறிதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், யோகேஷ்வரன். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் முழுமையாக பிரசாரங்களை மேற்கொண்டனர். 

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

யோகேஷ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் கடந்த ஜனவரி 21இல் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டில் யோகேஷ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது இதில் ஆச்சரியம் என்னவெனில் யோகேஷ்வனுக்கு எவருமே வாக்களிக்கவில்லை தப்பித்தவறி்யாராவது ஒவருவர் யோகேஷ்வரனன் பெயருக்கு நேரே புள்ளடி இட்டு இருந்தால் அவர் மீது வீண் சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் தாம் சிறிதரனை ஆதரிப்பதாக கூறிவிட்டு தானே தமது வாக்கை அவருக்கே போட்டிருப்பதாக அவர் மீது யாரும் குற்றம் கூறியிருப்பார்கள் நல்லவேளை்அப்படி நடக்கவவில்லை. இதில் இருந்து யோகேஷ்வரன் சிறிதரனை தாம் ஆதரிப்பதாக கூறிய கருத்து முழுமை பெற்றிருந்தது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.

வாக்கெடுப்பில் பொதுச்சபையில் கலந்துகொண்ட 321, உறுப்பினர்களில் சிறிதரன் 184, வாக்குகளையும், சுமந்திரன் 137, வாக்குகளையும் பெற்று சுமந்திரனை விட 47, மேலதிக வாக்குகளால் சிறிதரன் தெரிவானார். சிறிதரன் தமது பிரசாரங்களில் தாம் கூறிய தமிழ்த்தேசிய வாதி என்பதை நிருபித்தார் பொதுச்சபை உறுப்பினர்களில் 184, பேர் தமிழ்தேசிய கொள்கையை ஆதரித்தனர் எனபதும் 137 பேர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் இந்த வாக்கெடுப்பு தெரிவு மூலம் நிருபணமானது.

ஒருகட்சி தலைவர் தெரிவை மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்யாமல் தலைவர் தெரிவு இடம்பெற்ற ஜனவரி 21இல் குறிப்பிட்ட மூவரையும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கருத்துக்களை கூறவிட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இரண்டு அணிகள் என்ற கருத்துக்கே இடம்வந்திராது என்பது எனது கருத்து இதை நான் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

தலைவர் தெரிவு

அதைவிட தலைவர் தெரிவு இடம்பெற்ற அன்றே பொதுச்செயலாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தால் இரண்டு அணிகள் என்ற கதையே எழுந்திராது.

வழமையாக கடந்த 16 ஆம் திகதி , தேசிய மகாநாடுகளிலும் தெரிவு ஒருநாளில் தான் இடம்பெற்றது வழமை ஆனால் இந்த முறை ஜனவரி 21 இல் தலைவர் தெரிவும் சரியாக ஒருவாரம் கழித்து ஜனவரி 27இல் பொதுச்செயலாளர் ஏனைய தெரிவுகளுக்கு பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் திகதி ஒதுக்கியதும் ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

இதுவும் சுமந்திரன் பதில் பொதுச்செயலாளரிடமும், நிர்வாகச்செயலாளரிடமும் கூறியதால் அப்படி செய்ததாக பலரின் மத்தியில் கருத்தும் உண்டு ஒரே நாளில் இடம்பெறாமல் ஒருவாரம் பிற்போடப்பட்டு பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்றதும் குழப்பநிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. அந்த குழப்பம் போட்டி குரோதம் இன்று வெட்கம் இல்லாமல் நீதிமன்றத்தடைக்கு சென்றுள்ளது.

மத்தியகுழு கூட்டம்

கடந்த ஜனவரி 27இல் பொதுச்சபை கூடுவதற்கு முன்னர் மத்தியகுழு கூட்டப்பட்டது மத்திய குழுக்கூட்டம் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தால் அறிவிப்பு(கூட்ட அழைப்பு) விடுக்கப்படவில்லை மகாநாட்டு விழாக்குழு தலைவர் குகதாசனே மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.

உண்மையில் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் சுகவீன காரணமாக அவர் தலைவர் தெரிவிலும் அதன்பின்னர் நடந்த மத்தியகுழு பொதுச்சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை இதுவும் சில முரண்பாடுகளுகளை தோற்றுவித்தது மகாநாடு நடத்தி முடியும்வரை அதற்கான முழும்பொறும் பொதுச்செயலாளரே கையாளவேண்டும் ஆனால் இது யார் கூட்டத்தை நடத்தினார் என்பதே புரியாத புதிராகவே இருந்தது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

இறுதியாக கடந்த ஜனவரி 27 இல் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்திம் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றபோது அவர் மத்தியகுழுவில் பொதுச்செயலாளர் தொடர்பான ஆலோசனைகளை கூறலாம் என கேட்டதற்கு இணங்க நான்(பா.அரியநேத்திரன்) மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்திருந்தேன்.

அதன்பின்னர் ஏற்கனவே நிருவாக செயலாளராக இருந்த குலநாயகம் தான் 1965, தொடக்கம் தமிழரசுகட்சியில் முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 2019, மகாநாட்டிலும் தாம் பொதுச்செயலாளர் பதவி கேட்டு தரப்படவில்லை இந்தமுறை தமக்கு தரவேண்டும் என குறிப்பிட்டார்.

அதன்பின்னர் சுமந்திரன் தம்மை தலைவர் சிறிதரன் சிரேஷ்ட தலைவராக செயல்படுமாறு கேட்டதாகவும் தாம் அந்த பதவியை ஏற்கவில்லை ஆனால் தற்போது இரண்டு அணிகள் உள்ளன சிறிதரன் அணி , சுமந்திரன் அணி என உள்ளது தலைவராக சிறிதரன் உள்ளதால் அவருக்கு எதிராக போட்டியிட்ட தமக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கினால் இரண்டு அணிகளையும் சமாளித்து ஒற்றுமையாக கட்சியை முன்னகர்த்தலாம் என்ற கருத்தை தெரிவித்தார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

அடுத்ததாக கொழும்பு கிளை உறுப்பினர் இரத்தினவேல் தமது கருத்தில் வடக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்தால் கிழக்கை சேர்ந்தவர் பொதுச்செயலாளராக இருப்பது நல்லது அதனால் குலநாயகமும், சுமந்திரனும் வடக்கை சேர்ந்தவர்கள் விட்டுக்கொடுத்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பொதுச்செயலாளராக தெரிவது நல்லது என்ற கருத்தை கூறினார்.

இதன் பின்னர் மீண்டும் சுமந்திரன் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளன அதில் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன். அல்லது மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், அல்லது அம்பாறை மாவட்ட தலைவர் கலையரசன் இந்த மூவரில் ஒருவரை நியமித்தால் இரண்டு அணிகள் என்ற பிரச்சனை எழாது என்ற கருத்தை கூறினார்.

இதன்பின்னரே புதியதலைவர் சிறிதரன் ஶ்ரீநேசனிடம் அவருடைய இருக்கைக்கு சென்று குகதாசனுக்கு ஒருவருடம் விட்டுக்கொடுக்குமாறு கேட்டார் அதை பெரும் தன்மையாக ஶ்ரீநேசனும் சம்மதித்தார் ஆனால் ஒருவருடம் வரையறை செய்த விடயத்தை பொதுச்சபையில் சிறிதரன் கூறவில்லை.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

 

பொதுச்சபையில் பெரும்பாலானவர்கள் குகதாசனை பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை இதனால் சண்டை தகராறு குழு குழப்பம் அடைந்து பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டபோது ஒரு கட்டத்தில் பழைய தலைவர் மாவை சேனாதிராசா வாக்கெடுப்பு மறுநாள்  28ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்தார். அதனால் சில பொதுச்சபை உறுப்பினர்கள் வெளியேறினர் எஞ்சிய பல உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அடம்பிடித்தனர்.

இதனை ஏற்ற தலைவர் மாவை சேனாதிராசா இப்போது பொதுச்செயலாளருக்கான இரகசிய வாக்கெடுப்பை பதில் செயலாளர் இல்லாத காரணத்தால் உப செயலாளரான சுமந்திரன் நடத்துவார் என கூறினார்.

சுமந்திரன் பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை தவிர்த்து மத்தியகுழுவில் எடுத்த தீர்மானத்தை ஏற்பவர், எதிர்பவர்கள் என கூறி கையை உயர்த்தும் வாக்கைடுப்பை நடத்தி மேடையில் நின்று அவரே கணக்கெடுத்தார் அந்த எண்ணிக்கை 112, பேர் ஏற்பதாகவும்,104, பேர் எதிர்கதாகவும் முடிவை அறிவித்துவிட்டு சென்றார் அதன் பின்னர் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட தலைவர் மாவைசேனாதிராசா மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

இந்த சிக்கல் நிலை கடந்த ஜனவரி 27 தொடக்கம் கடந்த பெப்ரவரி 11, வரை தொடர்தன மீண்டும் பொதுச்செயலளர் பதவி இரகசிய வாக்கெடுப்பில் நடத்தவேண்டும் என சிறிதரன் அணியை சேர்ந்தவர்களும், நடத்த கூடாது என சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களும் வாதப்பிரதிவாதங்களும் சமூகவலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகளும் தொடர்ந்தன.

புதியதலைவராக தெரிவான சிறிதரன் தமது தலைவர் பதவியை முறைப்படி மகாநாட்டில் பதவி ஏற்று கட்சியை இயங்கு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாலும் பழைமையான தமிழரசுக்கட்சியை தொடர்ந்தும் ஒற்றுமையாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் கடந்த 11ஆம் திகதி வவுனியாவில் பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த சத்தியலிங்த்தின் வீட்டில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே 19ஆம் திகதி மாநாடு நடைபெற இருந்தது.

அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

 

இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27ஆம் திகதிஒத்திவைக்கப்பட்ட 17ஆவது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு 19 ஆம் திகதி மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம்.

தந்தை செல்வா 1949 இல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம் சி.மூ.இராசமாணிக்கம், இ. வ நாகநாதன், அ.அமிர்தலிங்கம். இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம், விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன் என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை.

தமிழர் விடுதலைக்கூட்டணி

ஆனால் கடந்த ஜனவரி மாதம்  21ஆம் திகதி வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14 இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது.

அதனால் தான் 2001இல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்த சங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது.

2004 இல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது.

பவள விழா 

தந்தை செல்வா 1976 இல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது. 

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

கடந்த 1949, டிசம்பர்,18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18இல் 75 ஆவது பவள விழா நாளாகும். இந்த பவளவிழா ஆண்டில் 17ஆவது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும்.

https://tamilwin.com/article/ilangai-tamil-arasu-party-article-1708512862

பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்

1 month 3 weeks ago
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும். சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது. இந்தத் தொகையில் உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு முதலீட்டாளர் கேட்டிருந்தார். அரச தலைமை மதிப்பீட்டாளரிடம் கோரிக்கை மனு அளித்து, பின்னர் அவர்கள் மீண்டும் அரசின் மதிப்பீட்டு தொகையை உறுதி செய்துள்ளனர். அதன்படி செயல்படுமாறு முதலீட்டாளருக்கு தெரிவித்துள்ளோம். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அந்நிய கையிருப்பு பற்றாக்குறைதான் நம் நாட்டின் முக்கிய பிரச்சினை. கோவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினர். போராட்டத்தால், முதலீடு வராமல் நின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம். ஆனால் தற்போது இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருகிறார்கள். அவர்கள் விரும்பும் செயல்முறையை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-government-income-1708783865

பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்

1 month 3 weeks ago

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும்.

சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது.

பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் | Sri Lanka Government Income

 

இந்தத் தொகையில் உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு முதலீட்டாளர் கேட்டிருந்தார். அரச தலைமை மதிப்பீட்டாளரிடம் கோரிக்கை மனு அளித்து, பின்னர் அவர்கள் மீண்டும் அரசின் மதிப்பீட்டு தொகையை உறுதி செய்துள்ளனர். அதன்படி செயல்படுமாறு முதலீட்டாளருக்கு தெரிவித்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அந்நிய கையிருப்பு பற்றாக்குறைதான் நம் நாட்டின் முக்கிய பிரச்சினை.  

கோவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினர்.  போராட்டத்தால், முதலீடு வராமல் நின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம். ஆனால் தற்போது இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருகிறார்கள். அவர்கள் விரும்பும் செயல்முறையை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/sri-lanka-government-income-1708783865

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

1 month 3 weeks ago
வீரகேசரியின் ஒப்பீட்டில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. ஸ்ரெல்த் வகை அதிவேக வெடிமருந்து கடற்கலங்களை களத்தில் வடிவமைத்து வெற்றிகரமாகப் பாவித்த பெருமை புலிகளையே சாரும். அந்த வடிவமைப்பு சிங்களத்தால் போரின் பிற்பாடு விற்கப்பட்டிருக்கலாம். உக்ரைனிடமும் அது போய் சேர்ந்திருக்கும். ஏனெனில்.. தமிழினப் படுகொலையில்.. உக்ரைன் கூட்டுக் கொலையாளிகளில் ஒன்று. நேரடியாக களத்தில் சிங்களப் படைகளோடு நின்ற நாடுகளில் ஒன்று. எங்கள் வரலாற்றை நாமே மறைக்க முற்படும் போது.. நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியான். நாம் பாவிக்கும் போது பயங்கரவாதம்.. உக்ரைன் பாவிக்கும் போது.. ஆகோ ஓகோ. எம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து எவரும் வரத்தேவையில்லை. நம்மாக்களே போதும். புலமை வித்துவத்தை காட்டுறன் என்ற போர்வையில் சொந்த இனத்தை சிறுமைப்படுத்திச் சீரழிக்க. அது சோள வரலாறு தொடங்கி புலிகள் வரை இதே தான் கதி.

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

1 month 3 weeks ago
வீரகேசரி தனது வாசகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து அதற்கேற்ப வியாபாரம் செய்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

1 month 3 weeks ago
இது புலிகளது வடிவமைப்பு. இது உக்ரைனது. புலிகளை பிரதி செய்த உக்ரைன் Published By: DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM https://www.virakesari.lk/article/137295 ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிமருந்து நிரப்பப்பட்ட அந்தப் படகை, ரஷ்ய கடற்படையினர் பின்னர் நடுக்கடலில் வெடிக்க வைத்து அழித்தனர். இந்தப் படகின் வடிவமைப்பும், பயன்பாட்டு நோக்கமும், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகளை முன்மாதிரியாவை கொண்டிருந்தது. உக்ரேனின் இந்தப் புதிய ஆயுதம், ரஷ்ய கடற்படையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான கடற்புலிகள் கையாண்ட போர் உத்திகளை, உக்ரேன் தனக்குரிய பாணியில்- தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையாளத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணம். இலங்கைக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள், பயன்படுத்திய கரும்புலிப் படகுகள் ஆட்களால் இயக்கப்படுவது. பெரும்பாலும் அவை வெளியிணைப்பு இயந்திரங்களைக் கொண்டது. ஆனால் செவஸ்டபோல் துறைமுகம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உக்ரைன் படகு, ஆட்களின்றி பயணம் செய்யக் கூடியது. ‘வோட்டர் ஜெட்’ எனப்படும் ஒற்றை நீருந்து விசை இயந்திரத்தினால் செயற்படக் கூடியது. ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் உடையார்கட்டுப் பகுதியில், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கடற்புலிகளின் படகு கட்டுமான மையத்தில் இதே வடிவத்தை கொண்ட மற்றும் நீருந்து விசையில் இயங்கும் ஒற்றை இயந்திர படகுகள் வடிவமைப்பு நிலையில் மீட்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட பெரும்பகுதி மூழ்கிய நிலையில், பயணம் செய்யக் கூடியதாக இந்தப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் முனையில், குண்டுத் தலையாக (war head) ஆட்டிலறி குண்டு அல்லது மோட்டார் குண்டு, பொருத்தப்பட்டது. படகில் நிரப்பப்பட்ட வெடிபொருளை வெடிக்கச் செய்வதற்கு அதுவே வெடிப்பு ஊக்கியாக இருந்தது. ஆனால், காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது மோதிய கரும்புலிப்படகு வெடிக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது குண்டுத் தலை செயலிழந்தால், அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இதன் பின்னர் கடற்புலிகள் தங்களின் கரும்புலிப் படகுகளில் இரண்டு குண்டுத் தலைகளைப் பொருத்தினர். செவஸ்டபோல் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உக்ரேனின் ஆளில்லா குண்டுப் படகிலும், அதேபோன்று இரண்டு குண்டுத் தலைகளே பொருத்தப்பட்டிருந்தன. கடற் கரும்புலிகளின் படகுகளில் இல்லாத நவீன சோனார் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் அதில் பொருத்தப்பட்டிருந்தன. உக்ரேன் இந்த படகுகளை எப்போது வடிவமைத்தது என்று தெரியவில்லை. ஆனால், இதனை உக்ரேனின் புதிய ஆயுதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனினும், இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே, விடுதலைப் புலிகள் இந்த வகை குண்டுப் படகுகளை கடற்படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் இந்தப் படகுகளை கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தது இத்தாலி தான். இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானிய கடற்படைக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு, வெடிமருந்து நிரப்பிய படகுகளை இத்தாலி பயன்படுத்தியது. ஆனால் ஜப்பானிய விமானப்படையின் ‘கமிகாசி’ எனப்படும் தற்கொலைப்படை விமானிகளைப் போல, இத்தாலிய கடற்படையினர், செயற்படவில்லை. அவர்கள் ஆறு சிறிய படகுகளில் 330 கிலோ வெடிபொருட்களை நிரப்பி, சுடா குடாவில் (Suda Bay) பிரித்தானிய கடற்படையின் 3 கப்பல்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ‘யோர்க்’ என்ற பிரித்தானிய கடற்படையின் பாரிய போர்க்கப்பலின் மீது இரண்டு படகுகள் மோதி வெடித்தன. மூன்றாவது படகு எண்ணெய் தாங்கி கப்பல் மீது மோதி வெடித்தது. ஏனைய மூன்று படகுகளும், தொழில்நுட்ப காரணங்களாரோ மனித காரணங்களாலோ வெடிக்கவில்லை. இந்த தாக்குதலை நடத்திய இத்தாலிய கடற்படையினர், பிரித்தானிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள், போரில் எதிரியிடம் சிக்கும் மரபைக் கொண்டிராதவர்கள். அவர்கள், கடற்படைக் கப்பலின் மீது மோதி வெடித்து, சாகும் வகையில்- தங்களின் உத்தியை வடிவமைத்தனர். இத்தாலிக்குப் பின்னர் 1948இல், எகிப்தின் அமீர் பாரூக் என்ற போர்க்கப்பலை இஸ்ரேலியப் படையினர் சிறிய வெடிபொருள் படகு ஒன்றை வெடிக்க வைத்து மூழ்கடித்திருந்தனர். அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளே இந்த போர் உத்தியைக் கையாண்டிருந்தனர். பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியில், குறைந்தளவு வசதிகள், தொழில்நுட்பங்களைக் கொண்டு தான், விடுதலைப் புலிகள் கரும்புலிப் படகுகளை வடிவமைத்தனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் போர் உத்திகளை, பல நாடுகளின் கடற்படையினர் ஆர்வத்துடன் அறிந்து கொள்வதற்கு முயன்றனர். பல நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் இதுபற்றி கேட்டறிந்துள்ளனர். கடற்புலிகளின் படகுகளின் திறன் மற்றும் வடிவமைப்பு குறித்து, அவர்கள் நேரிலும் ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். உக்ரைனிய கடற்படை அதிகாரிகள் அல்லது நிபுணர்களும் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொண்டனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் வடிவமைப்பு மற்றும் உத்திகளைப் பிரதி செய்திருக்கின்றனர் அல்லது அதனை முன்னோடியாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள், தங்களின் படகில், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கு இரண்டு குண்டுத் தலைகளை, படகுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறார்கள். ஆனாலும், அந்தப் படகு இலக்குத் தவறி ரஷ்யப் படைகளிடம் சிக்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், வெடிபொருள் நிரப்பிய படகுகளைப் பயன்படுத்தியவர்கள், யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான். சவூதி அரேபிய கடற்படைக்கு எதிராக அவர்கள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி அவர்களின் ஆயுத அணிவகுப்பு ஒன்றில் ஆளில்லா வெடிமருந்துப் படகுகளும் இடம்பெற்றிருந்தன. இந்தப் படகுகளிலும் நவீன தொழில்நுட்பம் காணப்படுகிறது. இதனை, வடிவமைத்துக் கொடுத்திருப்பது ஈரான் தான் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஈரான், ஆளில்லா விமானங்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. அவற்றை தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்புகளில் திருத்தங்களைச் செய்திருக்கிறது. அதுபோவே ஆளில்லா தாக்குதல் படகுகளையும் ஈரான் வடிவமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எவ்வாறாயினும், இவ்வாறான வெடிபொருள் நிரப்பிய படகுகளை கொண்டு தாக்கும் உத்திகளை கையாண்ட, அதில் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்றவையெல்லாம் நாடுகளாகவே இருந்து வருகின்றன. விடுதலைப் புலிகள் மட்டுமே, அதிலிருந்து வேறுபட்டு விளங்குகின்றனர்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
நன்றி, இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை) நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம். இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

1 month 3 weeks ago
சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ ரூட்; அறிமுக வீரர் தீப் அபாரம், அஷ்வின் மைல்கல் சாதனை Published By: VISHNU 23 FEB, 2024 | 10:25 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தோடரில் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரஞ்சி விளையாட்டரங்கில் நான்காவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்ட இங்கிலாந்து, முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட்டின் அற்புதமான சதத்தின் உதவியுடன் சிறந்த நிலையை அடைந்துள்ளது. photo:- akash deep getting family blessings இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆகாஷ் தீப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் ஆசி பெறுவதைப் படத்தில் காணலாம். இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய ஜோ ரூட் இந்தப் போட்டியில் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி தனது 31ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார். அதேவேளை, இந்த டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு வழங்கப்பட்ட ஜஸ்ப்ரிட் பும்ராவுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற அறிமுக வீரர் ஆகாஷ் தீப் எதிரணியின் முதல் 3 வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்து அணியினரின் பாராட்டைப் பெற்றார். ஆனால், அதன் பின்னர் அவரால் சாதிக்க முடியாமல் போனது. இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். ஜொனி பெயாஸ்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 வீக்கெட்களை வீழ்த்திய முதலாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் நிலைநாட்டினார். ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட் (11) ஆகிய இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் ஆகாஷ் தீப்பினால் வீழ்த்தப்பட்டன. மூன்றாவதாக ஆட்டம் இழந்த ஸக் க்ரோவ்லி 42 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையெ ஒலி போப் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோ ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஜொனி பெயாஸ்டோ (38), அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (3) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (112 - 5 விக்.) இதன் காரணமாக இந்திய அணியினர் பூரிப்பில் மிதந்தனர். ஆனால், ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 113 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். பென் ஃபோக்ஸ் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 126 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் நுழைந்த டொம் ஹாட்லி 13 ஓட்டங்களுடன் வெளியேற இங்கிலாந்து மீண்டும் ஆட்டம் கண்டது. ஆனால், ஜோ ரூட், ஒலி ரொபின்சன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர். ஜோ ரூட் 226 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் உட்பட 106 ஓட்டங்களுடனும் ஒலி ரொபின்சன் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177160 STUMPS 4th Test, Ranchi, February 23 - 27, 2024, England tour of India England 353 India (73 ov) 219/7 Day 2 - India trail by 134 runs. Current RR: 3.00 • Last 10 ov (RR): 15/0 (1.50)

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்

1 month 3 weeks ago
விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த WPL ஆரம்பப் போட்டியில் கடைசிப் பந்தில் வென்றது மும்பை 24 FEB, 2024 | 01:19 PM (நெவில் அன்தனி) பெங்களூரில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த 2024 மகளிர் பிறீமியர் லீக் (WPL) கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் கடைசிப் பந்தில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இந்தப் போட்டியில் தனது முதல் பந்தையும் போட்டியில் கடைசிப் பந்தையும் எதிர்கொண்ட அறிமுக வீராங்கனை சஜீவன் சஜானா வெற்றிக்கு தேவைப்பட்ட 5 ஓட்டங்களை சிக்ஸ் மூலம் பெற்று மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதி செய்தார். இரண்டு அணிகளினதும் விளையாட்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தது. அந்த அணிகளின் ஆரம்பங்கள் சிறப்பாக அமையாததுடன் தலா 3 வீராங்கனைகளின் சிறப்பான துடுப்பாட்டங்களே மொத்த எண்ணிக்கைகளுக்கு வலு சேர்த்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். ஆனால், அணித் தலைவி மெக் லெனிங்குடன் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தார். கெப்சி 53 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 24 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் லெனிங் 31 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களைவிட மாரிஸ்ஆன் கெப் 16 ஓட்டங்களைப் பெற்றார். மும்பை பந்துவீச்சில் நெட் சிவர் ப்றன்ட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமேலியா கேர் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஹெய்லி மெத்யூஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் மும்பையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. எனினும் நெட் சிவர் ப்றன்ட், யஸ்டிக்கா பாட்டியா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். நேட் சிவர் ப்றன்ட் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோருடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை பாட்டியா பகிர்ந்தார். பாட்டியா 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களை விளாசினார். தொடர்ந்து ஹாமன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கேர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (160 - 5 விக்.) ஆனால், மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹாமன்ப்ரீத் கோர் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கடைசிப் பந்துக்கு முந்திய பந்தில் 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் கடைசிப் பந்தை எதிர்கொண்ட சஜீவன் சஜானா எல்லா சக்தியையும் பிரயோகித்து கெப்சியின் பந்தை சுழற்றி அடித்து சிக்ஸாக்கி மும்பைக்கு அபார வெற்றியை ஈட்டடிக்கொடுத்தார். பந்துவீச்சில் அலிஸ் கெப்சி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177189

சீனா தயாரிக்கும் கிரேன்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது ஏன்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் பைடன் அரசாங்கம், உள்நாட்டிலேயே கிரேன்களை தயாரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய்) செலவிடவுள்ளதாக கூறியது. மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்தது. உலகின் மிகப்பெரிய கிரான் ஏற்றுமதியாளரான சீனா கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், துறைமுகங்களில் கொள்கலன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வது, கப்பல்களில் அவற்றை ஏற்றி இறக்குவது போன்ற பணிகளுக்கு கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'டவர் கிரேன்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச வர்த்தகத்தில் பணிகளை விரைவுபடுத்த இத்தகைய ராட்சத கிரேன்களுக்கான இடம் இன்றியமையாதது. சமீப காலங்களில், தானியங்கி கிரேன்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தங்களின் வேலையை விரைவாக செய்து முடிக்கின்றன. ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலக சந்தையில் கிரேன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் இருந்தன. பட மூலாதாரம்,WWW.FMPRC.GOV.CN படக்குறிப்பு, மாவோ நிங் சீனா கூறியது என்ன? பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் சீனாவில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தேச பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். "தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துவதையும், சீன தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார். "பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகளை ஆயுதமாக பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆபத்தானது என்பதோடு பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று கூறிய அவர், சந்தை பொருளாதாரத்தின் கோட்பாடுகளையும் நியாயமான போட்டிகளையும் அமெரிக்கா மதிக்க வேண்டும். சீன நிறுவனங்கள் செயல்பட நியாயமான, பாரபட்சமற்ற சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவும் அவற்றின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் சீன தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மாவோ நிங் கூறியுள்ளார். ராட்சத கிரேன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீன கிரேன்களின் பயன்பாட்டை நிறுத்துவது உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,CAROLINE BREHMAN/EPA-EFE/REX/SHUTTERSTOCK என்ன நடந்தது? சமீபத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில், பைடன் நிர்வாகம் உள்நாட்டிலேயே கிரேன்கள் தயாரிக்கப் பல பில்லியன் டாலர்களை (பல நூறு கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று கூறியிருந்தது. இதற்கிடையே, அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பைடன் நிர்வாகம் அறிவித்தது. இந்த வாரம், பிப்ரவரி 21 அன்று, பைடென் நிர்வாகம் அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை அறிவித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை (1.65 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது. அமெரிக்காவில் உள்ள புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சீன கிரேன்கள் தொடர்பான சைபர் பாதுகாப்பு குறித்த கடல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அமெரிக்க கடலோர காவல்படை வெளியிடும் என்றும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய கிரேன்களின் உரிமையாளர்களும் அதனை இயக்குபவர்களும் புதிதாக வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ப கிரேன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரேன்கள் குறித்து கவலை ஏன்? சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நவீன மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அமெரிக்கா அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்களைப் பயன்படுத்த விரும்புவதாக சீனாவின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டது. கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'சீனாவால் அச்சுறுத்தல் என்று சில அரசியல்வாதிகள் பூதாகரமாக கூறி வருகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் தேச பாதுகாப்பு என்ற பெயரில் சீனாவில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே' என்று கூறியதாகவும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. இசட்.பி.எம்.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரேன்களை ட்ரோஜன் ஹார்ஸ் உடன் ஒப்பிட்டு அவற்றில் கொள்கலன்களின் சேருமிடத்தை பதிவு செய்து கண்காணிக்கும் அதிநவீன சென்சார்கள் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பெண்டகன் அதிகாரிகள் சிலர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டதாகவும் தனது செய்தியில் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது. ஷாங்காய் ஜினஹாவ் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (ZPMC) என்பது துறைமுகங்களுக்கான கிரேன்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கிரேன் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சீன நிறுவனம் சுவிஸ் நிறுவனமான எபிபி உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிரேன்களில் எபிபி நிறுவனத்தின் கருவுகளை பொருத்தி அனுப்புகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த இரண்டு நிறுவனங்களின் பணியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகின்றன. சீ ட்ரேட் மேரிடைம் நியூஸ் (Seatrade Maritime News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'நாங்கள் பல நாடுகளுக்கு கிரேன்களுக்கான மென்பொருளை வழங்குகிறோம், சீனா உட்பட உலகின் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிரேன்களில் அவற்றை நிறுவுகின்றன. அனைவருக்கும் ஒரேமாதிரிதான் வேலை செய்கிறோம்' என எபிபி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகமான நகோயாவில் பணம் பறிக்கும் நோக்குடன் ஒரு இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துறைமுகத்தின் பணிகள் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன. இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் கடல்சார் தொழில் குறித்து கவலை தெரிவித்ததோடு, சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இந்தத் தொழில் முழுமையாக தயாராக இல்லை என்று கூறினர். வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட 200 கிரேன்கள் அமெரிக்காவில் உள்ளதாகவும் இது அமெரிக்காவில் உள்ள மொத்த கிரேன்களின் எண்ணிக்கையில் 80% என்றும் என்.பி.ஆர் ஊடகம் கூறுகிறது. கடலோர காவல்படை சைபர் செக்யூரிட்டி கமாண்டின் தலைவரான அட்மிரல் ஜே வான் கருத்துப்படி, தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடலோர காவல்படை அவற்றின் பாதுகாப்பை சரிபார்த்து வருகிறது, மேலும் அவை தொடர்பாக சில விதிகளை உருவாக்க வேண்டும் என்கிறார். சி.என்.என் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழுவிடம், 'சீன ஹேக்கர்கள் அமெரிக்க உள்கட்டமைப்பில் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்க குடிமக்களுக்கு அழிவையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரேன் சந்தை கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, விநியோகச் சங்கிலி சீரானது, கட்டுமானத் துறையில் ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு போன்றவை காரணமாக கிரேன்களின் தேவை அதிகரித்தது. ஜப்பான், சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவை உலகின் மிகப்பெரிய கிரேன் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. 2022-இன் தரவுகளின்படி, கிரேன்கள் இறக்குமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்றவை காரணமாக அந்நாட்டில் கிரேன்களுக்கான தேவை அதிகரித்தது. 2022-இல் அமெரிக்கா $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கிரேன்களை வாங்கியது. அதே காலகட்டத்தில் இந்தியா 700 மில்லியன் டாலர் (சுமார் 5,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள கிரேன்களையும், ஜெர்மனி 600 மில்லியன் டாலர் ( சுமார் 4,900 கோடி ரூபாய் ) மதிப்பிலான கிரேன்களையும் வாங்கியது. எனினும் 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கிரேன் இறக்குமதியில் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckrdxg8g537o

சீனா தயாரிக்கும் கிரேன்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது ஏன்?

1 month 3 weeks ago
சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார்.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் பைடன் அரசாங்கம், உள்நாட்டிலேயே கிரேன்களை தயாரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய்) செலவிடவுள்ளதாக கூறியது.

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்தது.

 
உலகின் மிகப்பெரிய கிரான் ஏற்றுமதியாளரான சீனா

கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், துறைமுகங்களில் கொள்கலன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வது, கப்பல்களில் அவற்றை ஏற்றி இறக்குவது போன்ற பணிகளுக்கு கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 'டவர் கிரேன்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

சர்வதேச வர்த்தகத்தில் பணிகளை விரைவுபடுத்த இத்தகைய ராட்சத கிரேன்களுக்கான இடம் இன்றியமையாதது. சமீப காலங்களில், தானியங்கி கிரேன்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தங்களின் வேலையை விரைவாக செய்து முடிக்கின்றன.

ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலக சந்தையில் கிரேன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருந்தது. ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் இருந்தன.

சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,WWW.FMPRC.GOV.CN

படக்குறிப்பு,

மாவோ நிங்

சீனா கூறியது என்ன?

பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் சீனாவில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தேச பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார்.

"தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துவதையும், சீன தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார்.

"பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்னைகளை ஆயுதமாக பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆபத்தானது என்பதோடு பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று கூறிய அவர், சந்தை பொருளாதாரத்தின் கோட்பாடுகளையும் நியாயமான போட்டிகளையும் அமெரிக்கா மதிக்க வேண்டும். சீன நிறுவனங்கள் செயல்பட நியாயமான, பாரபட்சமற்ற சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவும் அவற்றின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் சீன தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மாவோ நிங் கூறியுள்ளார்.

ராட்சத கிரேன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருந்தாலும், சீன கிரேன்களின் பயன்பாட்டை நிறுத்துவது உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

 
சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,CAROLINE BREHMAN/EPA-EFE/REX/SHUTTERSTOCK

என்ன நடந்தது?

சமீபத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி ஒன்றில், பைடன் நிர்வாகம் உள்நாட்டிலேயே கிரேன்கள் தயாரிக்கப் பல பில்லியன் டாலர்களை (பல நூறு கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று கூறியிருந்தது.

இதற்கிடையே, அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பைடன் நிர்வாகம் அறிவித்தது. இந்த வாரம், பிப்ரவரி 21 அன்று, பைடென் நிர்வாகம் அமெரிக்கத் துறைமுகங்களில் இணைய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை அறிவித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை (1.65 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சீன கிரேன்கள் தொடர்பான சைபர் பாதுகாப்பு குறித்த கடல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை அமெரிக்க கடலோர காவல்படை வெளியிடும் என்றும் வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய கிரேன்களின் உரிமையாளர்களும் அதனை இயக்குபவர்களும் புதிதாக வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ப கிரேன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
கிரேன்கள் குறித்து கவலை ஏன்?

சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்களில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நவீன மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறும் அமெரிக்கா அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்களைப் பயன்படுத்த விரும்புவதாக சீனாவின் அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டது.

கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'சீனாவால் அச்சுறுத்தல் என்று சில அரசியல்வாதிகள் பூதாகரமாக கூறி வருகிறார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் தேச பாதுகாப்பு என்ற பெயரில் சீனாவில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே' என்று கூறியதாகவும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.

இசட்.பி.எம்.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரேன்களை ட்ரோஜன் ஹார்ஸ் உடன் ஒப்பிட்டு அவற்றில் கொள்கலன்களின் சேருமிடத்தை பதிவு செய்து கண்காணிக்கும் அதிநவீன சென்சார்கள் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பெண்டகன் அதிகாரிகள் சிலர் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டதாகவும் தனது செய்தியில் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருந்தது.

ஷாங்காய் ஜினஹாவ் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (ZPMC) என்பது துறைமுகங்களுக்கான கிரேன்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கிரேன் உற்பத்தி நிறுவனமாகும். இந்த சீன நிறுவனம் சுவிஸ் நிறுவனமான எபிபி உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிரேன்களில் எபிபி நிறுவனத்தின் கருவுகளை பொருத்தி அனுப்புகிறது.

 
சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த இரண்டு நிறுவனங்களின் பணியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகின்றன.

சீ ட்ரேட் மேரிடைம் நியூஸ் (Seatrade Maritime News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'நாங்கள் பல நாடுகளுக்கு கிரேன்களுக்கான மென்பொருளை வழங்குகிறோம், சீனா உட்பட உலகின் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிரேன்களில் அவற்றை நிறுவுகின்றன. அனைவருக்கும் ஒரேமாதிரிதான் வேலை செய்கிறோம்' என எபிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜப்பானின் மிகப்பெரிய துறைமுகமான நகோயாவில் பணம் பறிக்கும் நோக்குடன் ஒரு இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துறைமுகத்தின் பணிகள் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் கடல்சார் தொழில் குறித்து கவலை தெரிவித்ததோடு, சைபர் தாக்குதலை எதிர்கொள்ள இந்தத் தொழில் முழுமையாக தயாராக இல்லை என்று கூறினர்.

 

வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட 200 கிரேன்கள் அமெரிக்காவில் உள்ளதாகவும் இது அமெரிக்காவில் உள்ள மொத்த கிரேன்களின் எண்ணிக்கையில் 80% என்றும் என்.பி.ஆர் ஊடகம் கூறுகிறது.

கடலோர காவல்படை சைபர் செக்யூரிட்டி கமாண்டின் தலைவரான அட்மிரல் ஜே வான் கருத்துப்படி, தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும் என்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடலோர காவல்படை அவற்றின் பாதுகாப்பை சரிபார்த்து வருகிறது, மேலும் அவை தொடர்பாக சில விதிகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.

சி.என்.என் வெளியிட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு குழுவிடம், 'சீன ஹேக்கர்கள் அமெரிக்க உள்கட்டமைப்பில் வலுவான பிடிப்பை கொண்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்க குடிமக்களுக்கு அழிவையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கிரேன்களுக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
கிரேன் சந்தை

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, விநியோகச் சங்கிலி சீரானது, கட்டுமானத் துறையில் ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பு போன்றவை காரணமாக கிரேன்களின் தேவை அதிகரித்தது. ஜப்பான், சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவை உலகின் மிகப்பெரிய கிரேன் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. 2022-இன் தரவுகளின்படி, கிரேன்கள் இறக்குமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்பு போன்றவை காரணமாக அந்நாட்டில் கிரேன்களுக்கான தேவை அதிகரித்தது. 2022-இல் அமெரிக்கா $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள கிரேன்களை வாங்கியது.

அதே காலகட்டத்தில் இந்தியா 700 மில்லியன் டாலர் (சுமார் 5,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள கிரேன்களையும், ஜெர்மனி 600 மில்லியன் டாலர் ( சுமார் 4,900 கோடி ரூபாய் ) மதிப்பிலான கிரேன்களையும் வாங்கியது.

எனினும் 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கிரேன் இறக்குமதியில் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckrdxg8g537o

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு கண்டுபிடிப்பு!

1 month 3 weeks ago
24 FEB, 2024 | 06:08 PM சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப் பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது . இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/177196

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு கண்டுபிடிப்பு!

1 month 3 weeks ago
24 FEB, 2024 | 06:08 PM
image

சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான  ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . 

இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . 

ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப்   பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக  இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது . 

இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/177196

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 3 weeks ago
இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது; நாட்டின் சட்டத்துக்கமையவே கைதுகள் இடம்பெறுகின்றன - கடற்படைத் தளபதி Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 06:22 PM (இராஜதுரை ஹஷான்) மீனவர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சனிக்கிழமை (24) நிறைவடைந்தது. திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய மீனவர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சட்டத்துக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அடுத்த திருவிழாவுக்கு முன்னர் முரண்பாடற்ற தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் வழமை போல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/177207

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

1 month 3 weeks ago
இரத்தினபுரி வெப்பமாக மாறுகிறது! காற்றின் ஓட்டம் குறைந்ததன் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 36c டிகிரியாகவும், கண்டியில் 30c மற்றும் நுவரெலியாவில் 21c டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காற்றின் ஓட்டம் குறைந்ததால் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது வழமையான நிகழ்வு எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/293029

இந்திய - இலங்கை கடல் எல்லையில் போராட்டத்துக்கு மீனவ சமூகம் அழைப்பு!

1 month 3 weeks ago
அந்நியப்படுத்தலை வெகு கச்சிதமாக அணில் அரசு செய்கிறது..ஒன்று டங்கிமூலம் மீனவர் பிரச்சினை...இரண்டு..தமன்னா பிரச்சினை மூலம் தமிழ்நாட்டு ,ஈழத்தமிழரிடையே கசப்பு உணர்வை தூண்டிவிடுகிறது....நடக்கட்டும் நாமதான் பலிக்கடா..

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

1 month 3 weeks ago
இதில் அவிப்பது யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள். 100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......