Aggregator

DNA சொன்னாலும் குழந்தைகள் செலவு எனதே - நையீரிய நீதிபதி!

1 month ago
DNA confirms three children from my ex-wife not mine – Judge The judge says he and his current wife have been wholly responsible for the well-being and the education of the three children, two of whom are university undergraduates. A judge of the Delta State High Court, Anthony Okorodas, has said DNA tests have recently revealed that he is not the biological father of three children from his marriage with his former wife. Mr Okorodas, who was appointed a judge in 2018, disclosed this in a statement which he issued on Thursday, January 28. The judge in the statement which only circulated online on Monday, said his former wife, Celia, walked away from the marriage when the youngest child, now 17 years old, was just six. Mr Okorodu, who described the development as traumatic, said he and his current wife had been wholly responsible for the well-being and the education of the three children, two of whom are university undergraduates, since their mother walked away 11 years ago. Mr Okorodas, who noted that he had had four children with his current wife, said he first got information from an anonymous source indicating that the three children were not his during the COVID-19 lockdown in April 2020. He, however, said he was only able to confirm the claim to be true through the DNA test in August 2020. He stated, “I have taken the decision to address the press in respect of certain traumatic developments that have arisen between me and my ex-wife, Barrister Celia Juliet Ototo of the Ototo Family of Ovom in Yenagoa Local Government Area of Bayelsa State. “It is now nearly 11 years since our separation and divorce. This press statement is important in order to prevent damaging speculations, half-truths and outright lies from persons who may want to cash in on the tragedy that has befallen my home. “Sometime during the coronavirus lockdowns early last year, I received information from an anonymous source that indicated that the last of the three children from my previous marriage was in fact not my biological child. “Due to the COVID 19 restrictions at the time, I had to wait until August 2020 to carry out a DNA test. “The DNA test result which came out in September 2020 confirmed that I was not the biological father of the child.” He said following the result of the first DNA result, he convened a joint meeting between his extended family on the one side, and Celta’s paternal and maternal families – the Ototo Family of Ovom Town and the Agbagidi Family of Yenagoa Town – on the other side, where he “confronted her with the paternity fraud allegation”. He added, “Although she initially strongly insisted that I was the biological father, she has since confessed to having the child with another man during the course of our marriage. “This repulsive act of my ex wife prompted me to conduct DNA tests in respect of the two other children. A few days ago, the results came out. Sadly, none of them is my biological child. “This abomination has caused excruciating mental trauma to me, my present wife, Barrister (Mrs) Ebi Okorodas and all of the innocent children involved.” ‘Four children from my current wife confirmed to be mine’ He said following the development his current wife, “had to agree to having DNA tests on the four children of our own marriage.” “Thankfully, the test results confirm each of them to be my biological child,” Mr Okorodas added. ‘I’ll not stop taking care of my ex-wife’s children’ He said despite the outcome of the DNA tests, he would continue to see to the wellbeing and the education of his ex-wife’s children. He stated, “It is important to state that Celia walked away from the marriage when her youngest child (who is now 17 years of age) was just six years old. “Since then, all of her children have lived with my wife, Ebi and I, and we have been wholly responsible for their wellbeing and education. “Friends who are close to my family would readily attest to the fact that unless specifically informed, no one could tell that the children were not the biological children of my present wife. “Ebi and I would continue to support the children in any way that we can. Indeed, even after the release of the first DNA test result which proved that I was not the biological father of the last child, we have continued to pay for his education in a private boarding school. “The two other children are University undergraduates. “The first, a female, will be a graduate later this year, and the second will soon enter his 4″ year of study. We pray for them to overcome the trauma and become responsible citizens of our country. “For Celia and her boyfriend or boyfriends, we leave them to their conscience.” https://www.premiumtimesng.com/news/headlines/440030-dna-confirms-three-children-from-my-ex-wife-not-mine-judge.html

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

1 month ago
இதற்கு நமது அரசியல்வாதிகளும் பலி ஆகின்றார்கள் அல்லது துணை போகின்றார்கள்.

சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு

1 month ago
சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2021 படக்குறிப்பு, அதிரம்பாக்கத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் வரையிலான மண் படிமங்கள் காணப்பட்டன. சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. சென்னையில் உள்ள ஷர்மா சென்டர் ஃபார் ஹெரிடேஜ் எஜுகேஷனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஷாந்தி பாப்பு மற்றும் குமார் அகிலேஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்திருக்கின்றன. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் அமைந்திருக்கிறது அதிரம்பாக்கம். இந்தப் பகுதியில் 1999ஆம் ஆண்டிலிருந்தே ஷாந்தி பாப்புவும் அவரது குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர். "முதலில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அங்கு மனிதர்கள் வசித்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்திருக்கின்றன. இவை 3 லட்சத்து 85 ஆயிரம் வருடங்களிலிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் வருடங்கள் வரை பழமையானவை. இதற்கு முன்பாக, இடைக்கற்காலம் என்பது இந்தியாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் துவங்கியது என்று கருதப்பட்டுவந்தது" என பிபிசியிடம் தெரிவித்தார் ஷாந்தி பாப்பு. படக்குறிப்பு, பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் தோன்றிய போது அங்கு வசித்தவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் மாற்றம் ஏற்பட்டது ஆனால், இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மனித எச்சங்கள் ஏதும் இதுவரை இங்கு கிடைக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமையன்று நேச்சர் இதழில் பதிப்பிக்கப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் இது குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கிறது. பொதுவாக நவீன மனிதர்களும் மனிதர்களின் மூதாதையர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவினார்கள் என்பது பொதுவான புரிதல். அவர்கள் எந்த காலகட்டத்தில் எந்தெந்த கண்டங்களுக்குப் பரவினார்கள் என்பது குறித்த விவாதத்தில், தற்போதைய கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது நாம் கருதுவதைவிட சுமார் 1 லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே இந்த இடம்பெயர்தல் நடந்திருக்கலாம் என்பதை தற்போது கிடைத்துள்ள கற்கருவிகள் சுட்டிக்காட்டுவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "நவீன மனிதர்கள் உருவான பிறகு அதாவது 1,25,000 வருடங்களுக்கு முன்புதான் இடைக்கற்கால மனிதர்கள் இங்கு வந்ததாக இதுவரை கருதப்பட்டுவந்தது. இருந்தபோதும் தற்போதைய கண்டுபிடிப்பை வைத்து உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்தியாவின் பல இடங்களிலும் கிடைத்திருக்கும் கற்கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்." என்கிறார் ஷாந்தி. 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம் மனித இன வளர்ச்சியில் பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் தோன்றிய காலகட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுமார் 3 லட்சம் வருடங்களுக்கும் 2 லட்சம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுவரை மிகப் பெரிய கற்கருவிகளைப் பயன்படுத்திவந்த மனித இனத்தின் மூதாதையர், சிறிய, திருத்தமான கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில்தான். படக்குறிப்பு, 1999லிருந்து இங்கு ஷாந்தி பாப்பு - அகிலேஷ் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர். தெற்காசியாவில் இதற்கு முன்பாக பல இடைக் கற்கால பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த இடைக்கற்கால கலாச்சாரத்தின் வயது, அந்தக் கலாச்சாரம் எப்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தது போன்றவை மிகக் குறைவாகவே ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. மரபியல் ரீதியான ஆய்வுகள், மனித எச்சங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலமாகக் கிடைத்த தகவல்களை வைத்து, நவீன மனிதர்களுக்கு முந்தைய ஹொமினின்களின் பரவலை உறுதிசெய்வதும் கடினமான காரியமாகவே இருக்கிறது. ஒரு கூற்றின்படி, இந்தியாவில் இடைக்கற்காலம் என்பது ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதர்கள் வெளியேறிய காலகட்டத்தை ஒத்தது என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டம் 1,30,000 வருடத்திற்கும் 80 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலமாக கருதப்படுகிறது. டோபா எரிமலைச் சீற்றத்திற்கு தப்பிய மாந்தர்களே இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், மற்றொரு கூற்று 71 வருடங்களுக்கும் 57 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பரவல் நடந்திருக்கலாம் என்று கூறுகிறது. இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் மிகப் பெரிய காலகட்டம் இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கதிர்வீச்சு ஆய்வுக்குட்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் தெற்காசியப் பகுதிகளில் மனித எச்சங்கள் இல்லாமல் இருப்பதும்தான் இந்த காலகட்டத்தை நிர்ணயம்செய்வதில் பெரும் தடையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். படக்குறிப்பு, சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் அதிரம்பாக்கம் தொல்லியல் மேடு. தற்போது அதிரம்பாக்கத்தில் கிடைத்திருக்கும் முடிவுகள், இந்தத் திசையில் ஓரளவுக்கு உதவக்கூடும். ஷர்மா மையத்தைச் சேர்ந்த ஷாந்தி பாப்பு, அகிலேஷ் உள்ளடங்கிய குழுவினர் கொசஸ்தலை ஆற்றின் கிளை நதி ஒன்றுக்கு அருகில் 1999ல் இந்த ஆய்வைத் துவங்கினர். பல்வேறு இடங்களில் 4 முதல் 9 மீட்டர் அளவுக்கு குழிகள் தோண்டப்பட்டன. இந்தக் குழிகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குழிகளில் உள்ள மண் படிவுகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 8 முதல் 6 வரையிலான பிரிவு பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது. இவை, 17 லட்சம் முதல் 10 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. 5 முதல் 1வது பிரிவு வரையிலான படிவுகள் இடைக்கற்காலத்தைச் சேர்ந்தவை. இந்தப் பகுதியில் கிடைத்த கற்கருவிகளை ஆராய்ந்தபோது, கற்காலத்தைச் சேர்ந்தவர்களைப்போலவே, இடைக்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களும் அந்தப் பகுதியில் கிடைத்த கற்களை வைத்தே தங்கள் கற்கருவிகளைச் செய்திருக்கின்றனர் என்பதை அறியமுடிந்தது. இதுதவிர பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் துவங்குவதற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் ஏதும் இங்கு கிடைக்கவில்லை. இது டோபோ எரிமலை வெடித்த காலத்தோடு ஒத்துப்போவதால், பருவநிலை மாற்றத்தால் இங்கிருந்தவர்கள் வெளியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பிந்தைய - பழைய கற்காலப் பகுதிகளைச் சேர்ந்த கருவிகள் கிடைக்கும் நிலையில், இங்கு அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கருவிகள் ஏதும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு, இடைக் கற்காலத்தில் சிறிய, திருத்தமான கருவிகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதிரம்பாக்கத்தைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த கற்கருவிகளை வைத்து இங்கு வசித்தவர்கள் நவீன மனிதர்களா அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. நர்மதா நதிக்கரையில் கிடைத்த ஒரு மண்டை ஓட்டைத் தவிர, இந்தியாவில் இதுவரை மனித எச்சங்கள் ஏதும் கிடைக்கவில்லை. "ஆனால், தற்போது கிடைத்திருக்கும் கருவிகளை வைத்து, இந்தியாவில் இடைக்கற்கால மனிதர்கள் 3.85 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து 1.72 லட்சம் வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்குவர முடியும்" என்கிறார் அகிலேஷ். அதிரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளின் காலம் அகமதாபாதில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியில் கணிக்கப்பட்டது. பொதுவாக அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் கார்பன் டேட்டிங் முறையில் காலக் கணிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், லட்சக்கணக்கான வருடங்கள் பழைய பொருட்களை காலக் கணிப்புச் செய்ய அந்த முறை உதவாது. ஆகவே, Luminescence dating என்ற முறை கையாளப்படுகிறது. அதாவது ஒரு பொருளில் ஒளிகடைசியாக எப்போது பட்டது என்பதை வைத்து அதன் காலத்தைக் கணிக்கும் முறை. அதிரம்பாக்கத்தில் கிடைத்த பொருட்கள் இம்மாதிரியான சோதனைக்கே உட்படுத்தப்பட்டன. படக்குறிப்பு, அதிரம்பாக்கத்தில் வசித்த மக்கள், அங்கு கிடைத்த கற்களிலேயே கருவிகளைச் செய்தனர். இதற்கு ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.கே. சிங்கி பெரிதும் உதவினார் என்று குறிப்பிடுகின்றனர் ஷாந்தியும் அகிலேஷும். மிகச் செலவுபிடிக்கும் இந்த முறையிலான காலக்கணிப்பை, தன் செலவிலேயே செய்து கொடுத்திருக்கிறார் ஏ.கே. சிங்வி. அதிரம்பாக்கம் அகழ்வாராய்ச்சித் தலம் என்பது சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளாகவே தொல்லியளாளர்களின் கவனத்தை ஈர்த்துவந்திருக்கிறது. 1863ல் முதன் முதலில் ராபெர்ட் ப்ரூஸ் ஃபூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோரால இந்த இடம் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 1930களிலும் 60களிலும் இந்த இடம் ஆய்வுசெய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் இங்கிருந்து எடுக்கப்பட்ட கற்காலக் கருவிகள் உலகமெங்கும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதும் அதிரம்பாக்கம் பகுதியில் சுமார் 50,000 மீட்டர் பரப்பளவுக்கு கற்காலக் கருவிகள் சிதறிக்கிடக்கின்றன. சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு - BBC News தமிழ் ✂️

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை

1 month ago
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஜனவரி 2021 படக்குறிப்பு, 1968ல் ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லி வேதிப் பொருளை சாய்கோன் என்ற பகுதியில் காடுகளின் மீது தூவியபடியே பறந்து செல்லும் அமெரிக்க விமானப்படை ஜெட் விமானம். வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்டு எழுதிய டிரான் டோ ங்கா என்ற 78 வயது வியட்நாமிய - பிரெஞ்சு பெண் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை போரில் பயன்படுத்தியது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவித்ததாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்படுத்தியதற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடிமக்களில் ஒருவரது வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்வது இதுவே முதல் முறை. 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்றால் என்ன? 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்பது மிகக் கொடிய நச்சுத்தன்மை உள்ள தாவரக் கொல்லி வேதிப் பொருள். வியட்நாம் மீது அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமித்தபோது, அதை எதிர்த்துப் போராடிய 'வியத்காங்' என்ற உள்நாட்டுப் படையினர் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டனர். வியத்காங் படையினர் காடுகளில் ஒளிந்திருந்தது அமெரிக்காவின் வலிமையான ராணுவத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது. விமானத் தாக்குதல் நடத்துவதென்றால், வியத்காங்குகள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவேண்டும். ஆனால், வியட்நாமின் அடர்ந்த காடுகள் விமானத்தில் இருந்து கண்காணித்து அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைப் பார்க்கத் தடையாக இருந்தது. அதற்காக ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற தாவரக் கொல்லியை அந்தக் காடுகள் மீது விமானம் மூலம் தூவியது அமெரிக்கா. இதனால், அடர்ந்து சடைத்த தாவரங்கள், மரங்கள் கருகி வியத்காங்குகள் பதுங்கியிருந்த இடங்கள் தெரியத் தொடங்கின. பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, தன் சிறுவயதில் ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலை எதிர்கொண்ட கம்போடியத் தாயும், முட்டிக்கு கீழே கால்களும், ஒரு கையும் இல்லாத அவரது குழந்தையும். 1962 முதல் 1971 வரை போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியில், 'டயாக்சின்' என்ற கொடிய நச்சுப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மிக அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஏஜெண்ட் ஆரஞ்ச் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் புற்றுநோயும், குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதும் அதிகரித்ததற்கு இந்த டயாக்சின்தான் காரணம் என்று கூறப்பட்டது. பத்து லட்சக் கணக்கான மக்கள் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும், 1. 5 லட்சம் குழந்தைகள் மோசமான பிறவிக் குறைபாடுகளோடு பிறந்ததாகவும் வியட்நாம் கூறுகிறது. இது வியட்நாமியர்களை மட்டுமல்ல அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தினரையும், அவர்களது சந்ததிகளையும்கூட கடுமையாகப் பாதித்தது. வழக்கில் சொல்லப்படுவது என்ன? ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்கள் மீது 2014ம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார் ட்ரான் டோ ங்கா. திங்கள்கிழமை (2021 ஜனவரி 25) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பட மூலாதாரம்,HOANG DINH NAM/AFP/GETTY IMAGES படக்குறிப்பு, 2013ல் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். தன் தாத்தா ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலை எதிர்கொள்ள நேர்ந்ததால், இந்தக் குழந்தை லின் சி கைகள் இல்லாமல் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப் போல ஏராளமான குழந்தைகள் வியட்நாமில் பிறக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட 14 நிறுவனங்களில் பிரபல பன்னாட்டு நிறுவனமான மான் சான்டோ, டௌ கெமிகல் ஆகிய நிறுவனங்களும் உள்ளன. இந்த வேதிப் பொருளின் பயன்பாட்டால் தமது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்காகவும், தனது குழந்தைகள் உள்ளிட்ட மற்றவர்களின் உடல் நலப் பாதிப்புகளுக்காகவும் இழப்பீடு கேட்டுள்ளார் ட்ரான் டோ ங்கா. இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலால் தாவரங்கள் அழிந்தன, விலங்குகள் உடலில் நஞ்சு ஏறியது, வியட்நாமின் மண்ணும், ஆறுகளும் மாசுபட்டன. எனவே, இந்த தாவரக் கொல்லியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை அங்கீகரிக்கவேண்டும் என்றும் தனது வழக்கில் கோரியுள்ளார் அவர். வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள் - நினைவுகள் வியட்நாம் போர் விட்டுச் சென்ற வடுக்கள் - காணொளி "நான் எனக்காக மட்டும் போராடவில்லை. என் குழந்தைகளுக்காகவும், பாதிக்கப்பட்ட பல பத்துலட்சம் பேருக்காகவும் நான் போராடுகிறேன்" என்று வழக்கு விசாரணைக்கு முன்பாக கூறினார் ட்ரான் டோ ங்கா. புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்சனைகளால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதயம் கோளாறான முறையில் அமைந்திருந்த காரணத்தால் இவரது சகோதரி ஒருவர் இறந்துவிட்டார். "பாதிக்கப்பட்ட வியட்நாமிய குடிமக்களின் பிரச்சனையை அங்கீகரிப்பது ஒரு சட்ட முன்மாதிரியை ஏற்படுத்தும்" என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார் வேலரி கேபன்ஸ் என்ற பன்னாட்டு சட்ட வல்லுநர். அமெரிக்க முன்னாள் படையினருக்கு மட்டும் இழப்பீடு ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதல் மூலம் பாதிப்புக்குள்ளான அந்நாள் அமெரிக்கப்படையினருக்கு மட்டும் அமெரிக்கா இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், வியட்நாமியக் குடிமக்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை. ஆனால், அமெரிக்க ராணுவமே அந்த ஏஜென்ட் ஆரஞ்சை வடிவமைத்து உருவாக்கியதாகவும், அது எப்படி போரில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் குற்றம்சாட்டப்பட்ட கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் எந்த அளவுக்கு நச்சுத்தன்மை உள்ளது என்ற விஷயத்தில் அமெரிக்க அரசாங்கத்தை இந்த நிறுவனங்களே தவறான தகவல்களைத் தந்து வழிநடத்தின என்று ட்ரான் டோ ங்காவின் வழக்குரைஞர்கள் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜென்ட் ஆரஞ்சின் நச்சுத்தன்மை மிகவும் அபாயகரமானது என்று சட்ட வல்லுநர் கேபன்ஸ் தெரிவித்தார். 8 கோடி லிட்டர் வேதிப் பொருள் வியட்நாம் போரில் அமெரிக்கப் படையினர் மொத்தம் 8 கோடி லிட்டர் ஏஜென்ட் ஆரஞ்ச் வேதிப் பொருளை தூவியிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த வேதிப் பொருளை நுகர நேர்ந்ததால் 1960களில் இருந்து வியட்நாமில் பிறவிக் குறைபாடு, புற்றுநோய் போன்றவை பெரிய அளவில் அதிகரித்ததை அந்நாட்டு மருத்துவர்கள் கவனித்தநர். இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்பாட்டை அமெரிக்கா 1971ம் ஆண்டு நிறுத்தியது. 1975ம் ஆண்டு வியட்நாமில் இருந்தே பின்வாங்கியது. இது முடிந்து கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்குப் பிறகும் பல்லாயிரம் குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் பிறவிக் குறைபாடுகளோடு பிறப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை - BBC News தமிழ்

விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு

1 month ago
விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,ENDAGEREX உலகிலேயே மிகச் சிறிய ஊர்ந்து செல்லும் உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பச்சோந்தி இனத்தின் உள்ளினத்தை சேர்ந்த அந்த உயிரினம் ஒரு விதையின் அளவுக்குத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இரண்டு பல்லிகளை ஜெர்மனி மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ஆய்வுக் குழு ஒன்று மடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ளது. ஆண் ப்ரூகேசியா நானா அல்லது நானோ பச்சோந்தி என்று அழைக்கப்படும் அவற்றின் உடலின் நீளம் வெறும் 13.5 மில்லி மீட்டர் தான் இருக்கிறது. எனவே, ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருக்கும், 'பவாரியன் ஸ்டேட் கலெக்‌ஷன் ஆஃப் சுவாலஜி' என்கிற அமைப்பின் படி, 11,500 ஊர்ந்து செல்லும் உயிரினத்தில், இந்த நானோ பச்சோந்தி மிகவும் சிறிய உயிரினம் என்கிற இடத்தைப் பிடிக்கிறது என்கிறது இதை கண்டறிந்த ஆய்வுக்குழு. தலை முதல் கால் வரையில் இவற்றின் மொத்த நீளமே 22 மில்லி மீட்டர்தான். பெண் பச்சோந்தி இதை விட கூடுதல் நீளம் கொண்டதாக, 29 மில்லிமீட்டர் நீளத்தோடு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "இந்த நானோ பச்சோந்திகளின் வாழ்விடம் காடழிப்புக்கு இலாக்காகி இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த உயிரினம் வாழும் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டதால், இனி இவை அங்கு தொடர்ந்து வாழும்" என ஹாம்பெர்க்கில் உள்ள 'சென்டர் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி' என்கிற அமைப்பைச் சேர்ந்த ஆலிவர் ஹாலிட்ஸ்செக் என்கிற விஞ்ஞானி கூறியுள்ளார். பட மூலாதாரம்,ENDAGEREX இந்த பச்சோந்தி, மழைக்காடுகளின் தரையில் மைட்ஸ் எனப்படும் சிறிய பூச்சிகளை வேட்டையாடுகிறது. எதிரிகளால் வேட்டையாடப்படாமல் இருக்க, புற்களுக்கு மத்தியில் மறைந்து கொள்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். "இந்த ப்ரூகேசியா உயிரினம் வாழும் வனப் பகுதி, அத்தீவின் வடக்குப் பகுதி முழுக்க மற்ற வனப் பகுதிகளோடு நன்றாகவே இணைந்திருக்கிறது" என்கிறார் இந்த உயிரினம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானியான மார்க் செர்ஸ். "இந்த புதிய சிறிய நானோ பச்சோந்தி, தீவில் இருக்கும் மிகச் சிறிய உயிரினங்களுக்கான வடிவங்களை மீறி இருக்கிறது. வேறு ஏதோ விஷயம் தான் இந்த நானோ பச்சோந்தியை இத்தனை சிறியதாக இருக்க அனுமதிக்கிறது" என்றார் மார்க். பச்சோந்திகள் விரைவில் அழியக் கூடிய உயிரினங்களில் ஒன்றாக இருக்கிறது என 'இன்டர்நேஷ்னல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்ஸ்'-ல் பட்டியலிடப்பட வேண்டும், அதையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கைகளில் கூறியுள்ளனர். விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு - BBC News தமிழ்

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

1 month ago
லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மருத்துவர் லீ வெண்லியாங் கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில், லீ வெண்லியாங்கின் உடல்நிலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள், சீன அரசு ஊடகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அவர் வேலை பார்த்த மற்றும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வுஹான் மருத்துவமனை கூறியது. 34 வயதான லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சக மருத்துவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் குறித்த செய்திகளைப் பரப்ப முயற்சித்தார். மூன்று நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு காவலர்கள் வந்து வைரஸ் குறித்த வேலைகளை நிறுத்தக் கூறினார்கள். லீ வெண்லியாங் மீண்டும் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளி மூலம் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்கு மூன்று வார காலத்துக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மருத்துவர் லீ வெண்லியாங் தன் கதையை, மருத்துவமனையின் படுக்கையில் இருந்த படியே சீனாவின் சமூக வலைதளமான வைபோவில் பதிவிட்டார். பட மூலாதாரம்,WEIBO "எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் லீ வெண்லியாங், நான் வுஹான் மத்திய மருத்துவமனையில் கண் மருத்துவராக இருக்கிறேன்..." என அப்பதிவு தொடங்கும். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப வாரங்களில் வுஹான் உள்ளூர் அதிகாரிகள் எத்தனை அலட்சியமாகச் செயல்பாட்டார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது அப்பதிவு. மருத்துவர் லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க மையமாக கருதப்படும் வுஹானில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு வகையான வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேரை அவர் கண்டபோது, அது 2003-ம் ஆண்டு உலகை ஆட்டிப்படைத்த சார்ஸ் என நினைத்தார். ஹுவானன் மீன் சந்தையிலிருந்து வுஹான் முழுவதும் இந்த வைரஸ் வந்ததாக நம்பப்பட்டது. அப்போது, நோயாளிகள் லீ வெண்லியாங் பணியாற்றி வந்த மருத்துவமனையில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள் கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி, தன்னோடு பணியாற்றிய சக மருத்துவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி செயலி குழு மூலம் வைரஸ் பரவுவது குறித்த ஒர் எச்சரிக்கைச் செய்தியை இவர் அனுப்பினார். அதோடு தங்களைத் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் அவர் கூறினார். அப்போது பரவிக் கொண்டிருந்தது கொரோனா வைரஸ் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பட மூலாதாரம்,LI WENLIANG நான்கு நாட்களுக்குப் பிறகு சீனாவின் பொது பாதுகாப்புத் துறையிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அங்கு லீ வெண்லியாங்கை ஒரு கடிதத்தில் கையெழுத்திடக் கூறினார்கள். தவறான கருத்துக்களைக் கூறுவதாகவும், சமூக ஒழுங்கை சீர்குலைப்பதாகவும், தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் லீ வெண்லியாங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனவும் அக்கடிதத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அதன் கீழ் "ஆம் நான் அதை ஆமோதிக்கிறேன்" என அவரது கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. மருத்துவர் லீ வெண்லியாங், அக்கடிதத்தை வைபோவில் பதிவிட்டு என்ன நடந்தது என விளக்கினார். விலங்குகளோடு தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்படும் என கடந்த ஆண்டு ஜனவரியின் முதல் சில வாரங்களில் வுஹான் உள்ளூர் நிர்வாகம் கூறியது. அதோடு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது எனக் கூறப்பட்டது. இது முற்றிலும் தவறானது என நமக்கு இப்போது தெரியும். இந்த அலட்சியத்தால், மருத்துவர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க எந்த விதிமுறைகளும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. மருத்துவர் லீ வெண்லியாங்கை காவலர்கள் வந்து எச்சரித்துச் சென்ற பிறகு, குளுக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்தார் மருத்துவர் லீ வெண்லியாங். மேலும், அந்த பெண் கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம் கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர், மிரட்டிய போலீஸ் தன் வைபோ பதிவில், தான் எப்படி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் இருமல் ஏற்படத் தொடங்கியது எனவும், அடுத்த நாள் தனக்கு எப்படி காய்ச்சல் இருந்தது எனவும், இரு நாட்களுக்குப் பிறகே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவர் விளக்கி இருந்தார். மேலும், அவரது பெற்றோர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு, அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி, சீனா கொரோனாவை ஓர் அவசர பிரச்சனையாக அறிவித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஓர் உலக பெருந்தொற்றாக அறிவித்தது. இப்படி அறிவித்த போது, அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது கிட்டத்தட்ட எதார்த்தத்தில் சாத்தியமில்லாததாகிப் போனது. மருத்துவர் லீ வெண்லியாங் பல முறை கொரோனா பரிசோதனை செய்த போதும், ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என்றே வந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,WEIBO கடந்த 2020 ஜனவரி 30-ம் தேதி சமூக வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "இன்று நியூக்லிக் ஆசிட் சோதனை செய்தேன், அதில் பாசிட்டிவ் வந்திருக்கிறது. குழப்பங்கள் தீர்ந்து தற்போது தொற்று உறுதியாகி இருக்கிறது" என்றார். அப்பதிவுக்கு ஆயிரக்கணக்கான கருத்துகளும், ஆதரவு வார்த்தைகளும் வந்தன. "மருத்துவர் லீ வெண்லியாங் ஒரு ஹீரோ" என ஒருவர் பதிவிட்டிருந்தார். "வருங்காலத்தில் ஏதாவது தொற்று நோய்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆரம்ப நிலையிலேயே எச்சரிக்கை விடுக்க பயப்படுவார்கள்" என மற்றொருவர் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். "ஒரு பாதுகாப்பான பொது சுகாதார சூழல் உருவாக, லட்சக்கணக்கான லீ வெண்லியாங்குகள் தேவை" என மற்றொருவர் எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, 34 வயதான மருத்துவர் லீ வெண்லியாங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மரண செய்தி வெளியான போது கோபத்திலும், துக்கத்திலும் சீன சமூக வலைதளமான வைபோ மூழ்கியது. "வுஹான் அரசு மருத்துவர் லீ வெண்லியாங்கிடம் மன்னிப்பு கோர வேண்டும்", "எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும்" என இரண்டு ஹேஷ்டேக்குகள் பெரிய அளவில் டிரெண்டாகின. "நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த கோபத்தை மறந்துவிடாதீர்கள். இப்படி மீண்டும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என ஒருவர் தன் கருத்தைப் பதிவுச் செய்திருந்தார். சீனா இந்த பிரச்சனையை சமாளிக்க பல கருத்துக்களை தணிக்கை வளையத்துக்குள் கொண்டு வந்தது. பல வாரங்கள், மாதங்கள் கழித்து, மருத்துவர் லீ வெண்லியாங்கின் மரணத்துக்கு தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் உணர்ந்ததாகத் தெரிகிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு, லீ வெண்லியாங்கின் பதிவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன. மக்கள் அவரின் சமூக வலைதளப் பக்கத்துக்குச் சென்று காலை வணக்கம் கூறுகிறார்கள். அவர்களது சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மருத்துவர் லீ வெண்லியாங் இறந்து ஓராண்டாகிவிட்டது, சீனாவும் கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டது. ஆனால், லீ வெண்லியாங்கின் சமூக வலைதள பக்கத்தில் குவிந்து வரும் கருத்துகள் தொடர்ந்து நம்பிக்கை ஒளியை வீசி கொண்டிருக்கின்றன. லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு - BBC News தமிழ்

மருத்துவர் லீ வெண்லியாங்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

மருத்துவர் லீ வெண்லியாங்

கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில், லீ வெண்லியாங்கின் உடல்நிலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள், சீன அரசு ஊடகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அவர் வேலை பார்த்த மற்றும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வுஹான் மருத்துவமனை கூறியது.

34 வயதான லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சக மருத்துவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் குறித்த செய்திகளைப் பரப்ப முயற்சித்தார். மூன்று நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு காவலர்கள் வந்து வைரஸ் குறித்த வேலைகளை நிறுத்தக் கூறினார்கள்.

லீ வெண்லியாங் மீண்டும் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளி மூலம் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்கு மூன்று வார காலத்துக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மருத்துவர் லீ வெண்லியாங் தன் கதையை, மருத்துவமனையின் படுக்கையில் இருந்த படியே சீனாவின் சமூக வலைதளமான வைபோவில் பதிவிட்டார்.

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

பட மூலாதாரம்,WEIBO

"எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் லீ வெண்லியாங், நான் வுஹான் மத்திய மருத்துவமனையில் கண் மருத்துவராக இருக்கிறேன்..." என அப்பதிவு தொடங்கும். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப வாரங்களில் வுஹான் உள்ளூர் அதிகாரிகள் எத்தனை அலட்சியமாகச் செயல்பாட்டார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது அப்பதிவு.

மருத்துவர் லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க மையமாக கருதப்படும் வுஹானில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு வகையான வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேரை அவர் கண்டபோது, அது 2003-ம் ஆண்டு உலகை ஆட்டிப்படைத்த சார்ஸ் என நினைத்தார். ஹுவானன் மீன் சந்தையிலிருந்து வுஹான் முழுவதும் இந்த வைரஸ் வந்ததாக நம்பப்பட்டது. அப்போது, நோயாளிகள் லீ வெண்லியாங் பணியாற்றி வந்த மருத்துவமனையில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி, தன்னோடு பணியாற்றிய சக மருத்துவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி செயலி குழு மூலம் வைரஸ் பரவுவது குறித்த ஒர் எச்சரிக்கைச் செய்தியை இவர் அனுப்பினார். அதோடு தங்களைத் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் அவர் கூறினார்.

அப்போது பரவிக் கொண்டிருந்தது கொரோனா வைரஸ் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

பட மூலாதாரம்,LI WENLIANG

நான்கு நாட்களுக்குப் பிறகு சீனாவின் பொது பாதுகாப்புத் துறையிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அங்கு லீ வெண்லியாங்கை ஒரு கடிதத்தில் கையெழுத்திடக் கூறினார்கள்.

தவறான கருத்துக்களைக் கூறுவதாகவும், சமூக ஒழுங்கை சீர்குலைப்பதாகவும், தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் லீ வெண்லியாங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனவும் அக்கடிதத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அதன் கீழ் "ஆம் நான் அதை ஆமோதிக்கிறேன்" என அவரது கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

மருத்துவர் லீ வெண்லியாங், அக்கடிதத்தை வைபோவில் பதிவிட்டு என்ன நடந்தது என விளக்கினார்.

விலங்குகளோடு தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்படும் என கடந்த ஆண்டு ஜனவரியின் முதல் சில வாரங்களில் வுஹான் உள்ளூர் நிர்வாகம் கூறியது. அதோடு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது எனக் கூறப்பட்டது. இது முற்றிலும் தவறானது என நமக்கு இப்போது தெரியும்.

இந்த அலட்சியத்தால், மருத்துவர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க எந்த விதிமுறைகளும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. மருத்துவர் லீ வெண்லியாங்கை காவலர்கள் வந்து எச்சரித்துச் சென்ற பிறகு, குளுக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்தார் மருத்துவர் லீ வெண்லியாங். மேலும், அந்த பெண் கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

தன் வைபோ பதிவில், தான் எப்படி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் இருமல் ஏற்படத் தொடங்கியது எனவும், அடுத்த நாள் தனக்கு எப்படி காய்ச்சல் இருந்தது எனவும், இரு நாட்களுக்குப் பிறகே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவர் விளக்கி இருந்தார். மேலும், அவரது பெற்றோர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

பத்து நாட்களுக்குப் பிறகு, அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி, சீனா கொரோனாவை ஓர் அவசர பிரச்சனையாக அறிவித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஓர் உலக பெருந்தொற்றாக அறிவித்தது. இப்படி அறிவித்த போது, அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது கிட்டத்தட்ட எதார்த்தத்தில் சாத்தியமில்லாததாகிப் போனது.

மருத்துவர் லீ வெண்லியாங் பல முறை கொரோனா பரிசோதனை செய்த போதும், ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என்றே வந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

லீ வெண்லியாங்

பட மூலாதாரம்,WEIBO

கடந்த 2020 ஜனவரி 30-ம் தேதி சமூக வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "இன்று நியூக்லிக் ஆசிட் சோதனை செய்தேன், அதில் பாசிட்டிவ் வந்திருக்கிறது. குழப்பங்கள் தீர்ந்து தற்போது தொற்று உறுதியாகி இருக்கிறது" என்றார். அப்பதிவுக்கு ஆயிரக்கணக்கான கருத்துகளும், ஆதரவு வார்த்தைகளும் வந்தன.

"மருத்துவர் லீ வெண்லியாங் ஒரு ஹீரோ" என ஒருவர் பதிவிட்டிருந்தார். "வருங்காலத்தில் ஏதாவது தொற்று நோய்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆரம்ப நிலையிலேயே எச்சரிக்கை விடுக்க பயப்படுவார்கள்" என மற்றொருவர் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

"ஒரு பாதுகாப்பான பொது சுகாதார சூழல் உருவாக, லட்சக்கணக்கான லீ வெண்லியாங்குகள் தேவை" என மற்றொருவர் எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, 34 வயதான மருத்துவர் லீ வெண்லியாங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மரண செய்தி வெளியான போது கோபத்திலும், துக்கத்திலும் சீன சமூக வலைதளமான வைபோ மூழ்கியது.

"வுஹான் அரசு மருத்துவர் லீ வெண்லியாங்கிடம் மன்னிப்பு கோர வேண்டும்", "எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும்" என இரண்டு ஹேஷ்டேக்குகள் பெரிய அளவில் டிரெண்டாகின.

"நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த கோபத்தை மறந்துவிடாதீர்கள். இப்படி மீண்டும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என ஒருவர் தன் கருத்தைப் பதிவுச் செய்திருந்தார்.

சீனா இந்த பிரச்சனையை சமாளிக்க பல கருத்துக்களை தணிக்கை வளையத்துக்குள் கொண்டு வந்தது. பல வாரங்கள், மாதங்கள் கழித்து, மருத்துவர் லீ வெண்லியாங்கின் மரணத்துக்கு தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் உணர்ந்ததாகத் தெரிகிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு, லீ வெண்லியாங்கின் பதிவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன.

மக்கள் அவரின் சமூக வலைதளப் பக்கத்துக்குச் சென்று காலை வணக்கம் கூறுகிறார்கள். அவர்களது சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மருத்துவர் லீ வெண்லியாங் இறந்து ஓராண்டாகிவிட்டது, சீனாவும் கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டது. ஆனால், லீ வெண்லியாங்கின் சமூக வலைதள பக்கத்தில் குவிந்து வரும் கருத்துகள் தொடர்ந்து நம்பிக்கை ஒளியை வீசி கொண்டிருக்கின்றன.

அண்டங்களிற்கு ஆன திறவுகோல் (அனுராதபுரத்தில் காணப்படும் உலக அதியங்களில் ஒன்று)

1 month ago
இனவாத சிங்களம் உள்ள இடமெல்லாம் விகாரை கட்டுறது பக்தி முத்தியெண்டே நினைக்கிறியள் சிறித்தம்பி? 😎

அண்டங்களிற்கு ஆன திறவுகோல் (அனுராதபுரத்தில் காணப்படும் உலக அதியங்களில் ஒன்று)

1 month ago
இனவாத சிங்களம் உள்ள இடமெல்லாம் விகாரை கட்டுறது பக்தி முத்தியெண்டே நினைக்கிறியள் சிறித்தம்பி? 😎

DNA சொன்னாலும் குழந்தைகள் செலவு எனதே - நையீரிய நீதிபதி!

1 month ago
நாதமுனி அண்ணை, தான் ஏமாந்ததை உணர்ந்த பின்னரும் கூட வேறொருவர் பிள்ளைகளுக்குத் தொடர்ந்தும் கல்விக்கான உதவியைத் தொடர எண்ணிய அந்த மனதைத் தான் நல்ல உள்ளம் எனக் குறிப்பிட்டேன். வழக்கைத் தொடர்ந்து அதில் அவர்கள் தனது பிள்ளைகள் இல்லை என நிரூபிக்கத் தெரிந்தவர், மேலும் ஒரு படி சென்று அந்தப் பிள்ளைகளுக்கான கல்விச் செலவைத் தொடராது நிறுத்தியிருக்கலாம். இத்தனை ஏமாற்றங்களுக்கும் பின்னர் சாதாரணமான ஒருவருக்கு உதவியைத் தொடரும் மனம் இருக்காது. இவருக்கு இருக்கிறது. இப்படி ஏமாந்தும் உதவியைத் தொடரும் நல்ல உள்ளம் இருக்கே... அது தானுங்க கடவுள்! எனவே தான் அவர் நல்லா வாழ வேணும் என வாழ்த்தி எழுதினேன்! 🙂