Aggregator

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

1 month 3 weeks ago
நூறுநாள் நல்லாட்சி மைத்திரியும் சுமந்திரன் கொம்பனிக் கதை தெரியுமோ? அல்லது இன்னொரு கதை சொல்லட்டா?

கொரியாவும் தமிழ் இளவரசியும்

1 month 3 weeks ago
செவ்விந்தியர் வாழ்ந்த மண்ணில் அவர்களை அழித்து விட்டு........அதில் குடியேறிய சமுதாயம் இது எமது நாடு மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில்.....மாண்பும் பண்பும் எவ்வளவு தூரம் செல்லும்? அது வரைக்கும் தமிழினம் தாக்கு பிடிக்குமா?

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள்

1 month 3 weeks ago
விடிய வெள்ளன நித்திரைப்பாயாலை எழும்பினவுடனை கண்டகளிசறையளை வாசிச்சுப்போட்டு அதை லைக் பண்ணி பேஸ்புக்கிலை ஏத்தி வெளிச்சம் காட்டிப்போட்டு வேலைக்குப்போற எங்கடை சனங்களும் எக்கச்சக்கம்... உதாரணத்துக்கு இப்பிடியொரு தலையங்கம். "உங்களுக்கு அந்த பிரச்சனையா???? உடனே இதைபடியுங்க"

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, றிசாத் என்ன செய்யப்போகிறார்...?

1 month 3 weeks ago
சரியாச்சொன்னியள்.... ஆனால் குடியேற்றுறதுக்கு சனம் வேணுமெல்லோ......புலம்பெயர் நாட்டுதமிழர் வருவியளோ எண்டு கேக்கிற ஆக்கள் இஞ்சையும் இருக்கினம்...

புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA….

1 month 3 weeks ago
கடைசியில் சாவகச்சேரியைச்சேர்ந்த நடராஜா ரவிராஜ்ஜையும் இயக்கம் போட்டுத்தள்ளியது என முடித்துவிட்டார். தவிர சரோஜினி யோகேஸ்வரனைப்போடும்போது அதிகால ஐந்துமணிக்கு மேல்ல் இருக்கும் அந்தவேளையில் மாவை சேனாதிராஜாவின் குடும்பம் இந்தியாவில் சுடப்படும்போது மாவையர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்களது வீட்டில்தான் நின்றார் அவருக்குச் சூடுபட்டதும் பின்னாலை மதில் பாய்ந்து தப்பி ஓடியதாக ஒருதகவல்

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள்

1 month 3 weeks ago
தமிழ் இணையம்களே கொப்பி பேஸ்ட் கூட்டம் அதுக்குள்ளே இவை தமிழ்வின் காரர் பறந்து பறந்து எல்லா இணையத்தையும் கொப்பி பண்ணுவினம் நாங்களும் எல்லாத்தையும் மேயாமல் பிள்ளையார் கணக்காய் அங்கிருந்து நேரே கொப்பி பண்ணி போடுவது உண்டு என்ன அவர்களின் பக்க்ம்கள் திறக்க திறக்க விளம்பரம் மூலம் காசு மழை கொட்டும் அதிகபடியான பார்வையாளர்களை பக்கம்களை திறக்க வைக்க இப்படி தூண்டில் வசனம்களை போடுவினம் உள்ளே ஒன்றும் இருக்காது ஆனால் தேவையில்லாத விளம்பரங்கள் கிடக்கும் அதை தவிர்க்க ஒன்லி ரீடர்ஸ் மூட் அந்த இணையம் படிக்க மட்டும் என பிரவ்சரில் செட்டிங் செய்யனும் அவ்வளவும் காணும் . newjaffna.com இங்கு யாழில் தடை செய்யபட்டுள்ளது .

இனித்திடும் இனிய தமிழே....!

1 month 3 weeks ago
இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்.. குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ??? கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப் பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப் போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன் வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங் கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால் இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப் பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான் பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, றிசாத் என்ன செய்யப்போகிறார்...?

1 month 3 weeks ago
காத்தான் குடியில் 50/50 வீத தமிழட்களையும் குடியேற்ற வேன்ன்டும்....கல்முனையில் சந்திக்கு சந்தி பிள்ளைய்யர் சிலை வைக்க்வேண்டும்....மன்னரில் முசுலிம் பகுதியில் 50 வீத தமிழர் குடியேற்றா வேண்டும்....

மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது

1 month 3 weeks ago
இன்னும் அமைதியாக இருபகுதியும் இருப்பது அதிசயம் .நான் நினைக்கிறன் சிங்களவர்கள் பயந்து விட்டார்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழை தூக்கிஎறிந்து சிங்களம் படிப்பம் என்று கண்டி முஸ்லிம்கள் வெளிக்கிட்டவுடன் சிங்களவர்கள் அடன்கியிட்டான்கள் போல் உள்ளது . நல்ல விடயம் தானே .😏

மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது

1 month 3 weeks ago
மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது. சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மககளிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது. மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே. http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html

மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது

1 month 3 weeks ago

மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது.

சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது.

மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே.

http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html

 

 

புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA….

1 month 3 weeks ago
விடுதலைப்புலிகள் ஜனநாயக தலைவர்களை கொன்றார்கள்; அவர்களுடன் டீல் போடவே கூட்டமைப்பு உருவானதாம்: வரலாற்றை உருட்டிப்பிரட்டிய சயந்தன்! December 25, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் உருவாகவில்லை, விடுதலைப்புலிகளுடன் டீல் செய்து உருவாக்கப்பட்டது என கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாதென பகிரங்கமாக போட்டுடைத்துள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன். சமய சொற்பொழிவுகளை நடத்திவரும் கொழும்பு கம்பன்கழகம், அண்மையில் அரசியல்கட்சிகளை உள்ளடக்கி, எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் யார் என்ற கருத்தாடற்களம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், பல கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை. தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மாத்திரமே அதில் கலந்து கொண்டிருந்தன. இதையடுத்து, மக்களின் கேள்விகளிற்கு, அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளிக்கும் நிகழ்ச்சியாக அது மாற்றப்பட்டது. இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது? கொள்கையின் அடிப்படையல் உருவானதா?, ஏதும் நோக்கத்துடன் உருவானதா?, அல்லது வெறும் தேர்தல் கூட்டா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே, இப்படி தப்பும்தவறுமாக பதிலளித்தார் கே.சயந்தன். அவர் அதற்கு பதிலளிக்கும்போது- “கூட்டமைப்பு உருவானது, விடுதலைப்புலிகளுடன் செய்யப்பட்ட டீல். ஜனநாயக தேர்தலில் போட்டியிடுபவர்கள் வரிசையாக இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன், தங்கத்துரை என வரிசையாக கொல்லப்பட்டனர். தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க விடுதலைப்புலிகளுடன் ஒரு டீலுக்கு போக வேண்டியிருந்தார்கள். விடுதலைப்புலிகள் தாமே ஏகபிரதிநிதிகள் என்று கூறினாலும், அதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்பின் ஊடாக அதை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களிற்கும் இருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலில் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்த பின்னர், விடுதலைப்புலிகளே ஏகபிரதிநிதிகள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. இதைதவிர, கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் எதுவும் கிடையாது“ என குறிப்பிட்டார். இதன்பின்னர் உரையாற்றிய நீண்டகால அரசியல் செயற்பட்டாளரான ரெலோவின் எம்.கே.சிவாஜிலிங்கம், சயந்தன் கூறியவை தவறு என்பதை குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் வரலாற்று பின்னணியை புரிய வைத்திருந்தார். http://www.pagetamil.com/29700/

செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்!

1 month 3 weeks ago
செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருண்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாத தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி சார்பில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரில் இமாம்-உல்-ஹக் ஓட்டங்களை பெறாமலும் பகர் சமான் 12 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்தனர். அத்தோடு பகர் சமான் இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென் ஆபிரிக்கா வீரர் என்ற சாதனையைப் ஸ்டென் படைத்தார். இதனை அடுத்து ஷான் மசூத் 19, ஆசாத் ஷபிக் 7, என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 86 ஓட்டங்களை அணி பெற்றபோது அசார் அலி 36 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அணித்தலைவர் சப்ராஸ் அகமட் (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. மறுமுனையில் நிலைத்திருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 178 இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஹசன் அலி 21 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. தென் ஆபிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் பின்னர் தென் ஆபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது. http://athavannews.com/செஞ்சூரியன்-டெஸ்ட்-தென்/

செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்!

1 month 3 weeks ago
செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்!
DvQYjebX4AAjLMh.jpg

செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருண்டது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாத தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி சார்பில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரில் இமாம்-உல்-ஹக் ஓட்டங்களை பெறாமலும் பகர் சமான் 12 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்தனர்.

அத்தோடு பகர் சமான் இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென் ஆபிரிக்கா வீரர் என்ற சாதனையைப் ஸ்டென் படைத்தார்.

இதனை அடுத்து ஷான் மசூத் 19, ஆசாத் ஷபிக் 7, என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 86 ஓட்டங்களை அணி பெற்றபோது அசார் அலி 36 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த அணித்தலைவர் சப்ராஸ் அகமட் (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

மறுமுனையில் நிலைத்திருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 178 இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஹசன் அலி 21 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. தென் ஆபிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில் பின்னர் தென் ஆபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

 

http://athavannews.com/செஞ்சூரியன்-டெஸ்ட்-தென்/