Aggregator

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

1 month 3 weeks ago
இவர் கூறிய பச்சை இனவாத கருத்துக்களை தமிழ் மக்கள் அறிவர். தமிழ் மக்களை கொல்வதே இவரது நோக்கம். அதனையே செய்து முடித்தார். இப்போ சிங்கள மக்களுக்கு தான் ஒரு கீரோ என காட்ட முயல்கிறார்.

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி

1 month 3 weeks ago
தான் இருக்கும், வேலை மற்றும் சமூக நிலையில் இருந்து தனது பார்வையை செலுத்தியுள்ளார் என தெரிகிறது. இவரது பார்வைக்கு அப்பால், மிக வளர்ச்சி அடைந்த தமிழ் சமூகம் இருப்பது இவருக்கு தெரியவில்லை போலுள்ளது. இலங்கை தமிழ் சமூகம் போல எந்த சமூகமும் மிக குறைந்த காலத்தில், கல்வியில், வேலைவாய்ப்புகளில், வியாபார முயற்சிகளில், அரசியலில் முன்னேறி வரவில்லை என்பதை இவர் அறிந்திருப்பதாக தெரியவில்லை. அருகிவரும், பேசி முடிக்கும் திருமணங்கள் தவிர்த்து தாமே அமைத்துக் கொள்ளும் திருமணங்கள் சாதியவாதம் இல்லாமல் அல்லது புரியாமலே நடப்பதை இவர் புரிந்திருப்பதாக தெரியவில்லை. முதலில் டாக்டரான ஜரிஸ் வெள்ளையர் ஒருவரை டேட்டிங் செய்த டாக்டர் மகள், தாயாரின் தயக்கத்தை பார்த்து..... சில மாதம் கழித்து.... உங்கள் விருப்பப்படி இலங்கையர் ஒருவரை டேட் பண்ணுகிறேன், கலியாணம் செய்கிறேன் என்றார். அவர் சிங்களவர் என்று தாய் தந்தையர் சொன்னபோது, அதனால் என்ன, நாம் ஆங்கிலத்தில் தானே பேசுகிறோம் என்று சொல்லுமளவுக்கு அவர்கள் பார்வை உள்ளது. இந்த சாதீயம் புரியாத புதிய சமுக நிலை இவருக்கு தெரியவில்லை போலுள்ளது.

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

1 month 3 weeks ago
பொன்சேகாவுக்கும் பிரபாகரனுக்கும் தனிப்பட்ட பகையோ.. குடும்பப் பகையோ கிடையாது. இருந்தும்.. ஏன் பொன்சேகா.. பிரபாகரனை கொல்ல திட்டமிட்டார்..??! காரணம் ஒன்று தான்.. பிரபாகரன்.. தமிழ் மக்களுக்கான உரிமையை பற்றி உறுதியாக பேசியதாலும்.. கோரி நின்றதாலும். ஆக பிரபாகரனை கொல்ல திட்டமிட்டேன் என்று பகிரங்கமாக சரத் பொன்சேகா சொல்வதன் ஊடாக.. அவர் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் இருந்திருக்கிறார்.. என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. இதன் மூலம்.. இவர் தமிழினப் படுகொலையை திட்டமிட்டே அரங்கேற்றி இருக்கிறார். ஆகவே இவர் ஒரு இனப்படுகொலையாளி என்பது வெளிப்படை உண்மையாகி இருக்கிறது. 😯

காமத் தாழி - சி. சரவணகார்த்திகேயன்

1 month 3 weeks ago
சரி சரி விடம்மா .......இனி நீ சிரித்தால் தீபாவளிதான்.....கார் கீயையும் குடுத்து கட்டியவளுக்கும் கீ குடுத்து அனுப்பிய அத்தான்தான் இனி அழவேண்டும்......! 😉

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

1 month 3 weeks ago
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்

1 month 3 weeks ago
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் நாங்கள் வளர்ப்பதிலே.

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி

1 month 3 weeks ago
எந்த பள்ளியில் மட்டும் படித்தவர் என்பதை குறிப்பிட மறுக்கிறார் ..............! எப்படி புலம்பெயர் தமிழனுக்கு சாணி அடிப்பம் என்று திரிபவர் இம்முறை பிரான்ஸ் சாதி புளுகுடன் களம் இறங்கியுள்ளார் .

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்

1 month 3 weeks ago
ஐயோ கிருபன்! நீங்கள் இணைத்ததை குறை கூறவில்லை. அவமதிக்கவில்லை ஐயா. சாதரணமாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவரின் வழமையான அங்கலாய்ப்புகள்தான் இவை. இது தனிநபர் ஒருவரின் அவதானிப்புகள் அன்றி வேறொன்றுமில்லை.

இமையத்திற்கு இயல் விருது!

1 month 3 weeks ago
இமையத்திற்கு இயல் விருது – 2018 எழுத்தாளர் இமையம் இவ்வாண்டுக்கான இயல் விருதைப் பெற்றுள்ளார். கனடாவை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இயல்விருது தமிழ் இலக்கியவிருதுகளில் பெருமைமிக்கது. சுந்தர ராமசாமி தொடங்கி தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள் என்னும் நாவல் வழியாக தமிழில் அறிமுகமானவர். தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். தமிழில் 1990 களில் தலித் அரசியலும் தலித் பண்பாட்டாய்வும் உருவாகி வந்தன. தொடர்ந்து தலித் இலக்கிய அலை எழுந்தது. அந்த அலை உருவாக்கிய இரு பொரும்படைப்பாளிகள் இமையம், சோ.தர்மன். அடித்தளமக்களின் வாழ்க்கையை இயல்புவாத அழகியலுடன் சொல்லும் இவர்களின் கதைகள் சமூக விமர்சனமாக கூர்கொள்பவை. ஆனால் அதற்கும் மேலே சென்று மானுட வாழ்க்கை, வரலாறு சார்ந்து ஆழ்ந்த வினாக்களையும் எழுப்பிக்கொள்பவை. அவ்வகையில் எந்த ஒரு பெரும்படைப்பாளியின் படைப்புக்களையும்போல அழகியல் – சமூகவியல் அடையாளங்களைக் கடந்துசெல்பவை அவை. உதாரணமாக கோவேறுகழுதைகள். அதன் சமூகப்புலம், அது உருவாக்கும் உணர்ச்சிகள் சார்ந்து அது ஒரு தலித் நாவல். தலித் அழகியலை தமிழில்நிலைநாட்டிய ஆக்கம். ஆனால் ஒரு வாசகன் அதை உயிர்வாழ்தலுக்கும் இருப்புக்கும் இடையேயான வேறுபாட்டை உசாவும் படைப்பாகவும் வாசிக்கமுடியும். அந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெறுமே தங்கிவாழ்கிறது. விலங்குகளைப்போல. அதற்கான போராட்டங்களே அவர்களின் வாழ்க்கை. ஆனால் ஆரோக்கியம் மேலதிகமாக ஓர் இருப்பைக் கொண்டிருக்கிறாள். அது அவளுடைய அன்பினால், வாழ்க்கையினூடாக அவள் கனிந்தபடியே செல்வதனால் நிகழ்வது. அவ்வகையில் இமையம், சோ.தருமன் போன்றவர்களின் மேலோட்டமான தொடக்க அடையாளமே தலித் எழுத்தாளர்கள் என்பது. அவர்களை நாம் மேலும் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. முன்னரே இதை எழுதியிருக்கிறேன், விரிவாக எழுதவேண்டும். இமையம் தொடர்ச்சியாக தமிழில் எழுதிவரும் படைப்பாளி. ஆறுமுகம், செடல், எங்கதே போன்ற நாவல்கள். ஏராளமான சிறுகதைகள். தற்காலத் தமிழிலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இவ்விருது வாசகர்களும் சேர்ந்து அவருக்கு அளிப்பது. இமையத்துக்கு வாழ்த்துக்கள் இயல் விருது அறிவிப்பு தமிழ் இலக்கியத் தோட்டம், 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறது. எழுத்தாளர் இமையம் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும், வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களே இவர் கதைகளின் பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், சாதி, வகுப்பு, பால் பேதங்களால் அவர்கள் படும் அவலம் போன்றவற்றை அவர்களின் மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார். ”தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை” என்று அவரது முதல் நாவலான “கோவேறுக் கழுதைகள்” நூலை தமிழின் முன்னோடி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மனித மனங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளை தன் ஒவ்வொரு புனைவிலும் காத்திரமாக பதிவுசெய்துவரும் இமையம் தமிழ் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், சாதி ஆதிக்க மனோபாவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ஒருவராகவும் விளங்குகிறார். ‘இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளை சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளை பதிவு செய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்.’ இவ்வாறு இமையம் சொல்கிறார். இமையத்தின் கதைகள் ’இப்படிப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்கிறோம்’ என வாசகர்களை கண்ணீர் விடவும், கூச்சப்படவும் வைப்பவை. இவருடைய சிறுகதைகள் நம்மை புதுஉலகத்திற்குள் இட்டுச் செல்கின்றன. சாதி ஆணவக் கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என கருதப்படுகிறது. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப் பட்டு திருப்பதிப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் ஆகிய இவருடைய நாவல்களும், நாலு சிறுகதை தொகுப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்பட பல விருதுகள் இதுவரை பெற்றிருக்கிறார். இவருடைய மனைவி புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் விருத்தாசலத்தில் இவர் வசித்து வருகிறார். விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2019 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும். இயல்விருதுக்குழு கனடா http://www.tamilliterarygarden.com/ https://www.jeyamohan.in/116412#.XCH12C-nxR4

‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்!

1 month 3 weeks ago
‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்! ஆர்.அபிலாஷ் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் சமூக அங்கீகாரத்துக்காகத் தற்படங்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இது மிகையாக மாறும்போது தற்பட விரும்பிகளுக்குச் சமநிலை குலைகிறது. பல எடிட்டிங் ஆப்கள் மூலம் தம் தோற்றத்தை மெருகேற்றிப் பொய்யான பிரதியை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கு விருப்பக் குறிகள் அதிகமாக ஆக, உண்மைக்கும் பொய்க்கும் இடையே இடைவெளி அதிகமாகிறது. ஒரு நண்பர் இதை வேறுவிதமாய் முன்வைத்தார். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை மரபியல் ரீதியாய்ப் பெற்றிருக்கிறோம். இத்தோற்றத்தோடு உடன்பட முடியாமல் போகும்போது, மாற்று சுயத்தைக் கற்பிக்கும் வண்ணம் நாம் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறோம்; அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்கள் அங்கீகரிக்கும்போது புளகாங்கிதம் அடைகிறோம் என்றார். நான் அமைதியாக இருந்தேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நண்பரின் கருதுகோளில் ஏதோ ஒன்று முரணாய், இடறலாய் பட்டது. வெளியே வந்து கொஞ்ச நேரத்தில் புரிந்துபோனது. அழகற்றவர்களை விட அழகானவர்களே அதிகமாய் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். மிக “அசிங்கமான” முக அமைப்பு கொண்ட ஒருவர் தினமும் தற்படங்கள் வெளியிடுவதும் விருப்புக்குறிகளின் அங்கீகாரம் பெறுவதும் நடப்பதில்லை. ஓரளவுக்கு மேல் எடிட் செய்து தன் தோற்றத்தை முழுக்க மாற்ற முடியாது. மாநிறத்தைக் கொஞ்சம் சிவப்பாக்கலாம், பளிச்செனக் காண்பிக்கலாம், பருமனைச் சற்றே மறைக்கலாம். ஆனால், குரூரமான ஒருவரோ, அழகே இல்லாத ஒருவரோ தன்னை அழகனாக / அழகியாய் தற்படத்தில் சுலபத்தில் மாற்றிக் காண்பிக்க முடியாது. அழகு குறைவான ஒருவர் நன்றாய் மேக் அப் அணிந்தும் வாளிப்பாகத் தோன்றும் ஆடைகள் அணிந்தும் இதே அழகு மேம்பாட்டைச் செய்ய முடியும். களிம்புகளுக்குப் பின்னால், சிகை அலங்காரத்துக்குப் பின்னால் பலர் வேறு ஒருவராக இருக்கிறார்கள். ஆக, இதைத் தற்படத்தில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. தோற்றத்தை ஒருவர் திருத்துவது அழகின்மையை ஈடுகட்டுவதாக அல்லது தாழ்வு மனப்பான்மைக்கு மாற்றாக அன்றி, மற்றொரு தன்னிலையைக் கட்டமைப்பதாகவே பார்க்க வேண்டி உள்ளது. உதாரணமாய், மேக் அப் அணிய விரும்பாமல் வெளியிடங்களுக்கு வரும் அழகிய பிரபல நடிகைகள் இருக்கிறார்கள். இவர்கள் தமது பிரபல, அன்றாடத் தன்னிலைகள் என இரண்டு தன்னிலைகளை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இரண்டையும் சமமாகப் பார்க்கிறார்கள். இயல்பிலேயே அழகான பெண்கள் மேக் அப் அணிய அவசியமே இல்லை. ஆனாலும் ஏன் செய்கிறார்கள் என்றால் தம் உடலைத் திருத்தி ஓர் ஓவியத்தைப் போல வரைய அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது நீங்கள் ஓர் அழகிய பெண்ணென்றால் உங்கள் உடலே நீங்கள் வரையும் ஓவியம் ஆகிறது. ஓரளவு அழகானவர் தன்னைத் திருத்தித் தற்படம் வெளியிடுகையில் அவர் ஒரு மாற்றுத் தன்னிலையை உருவாக்கி அதை தானே ரசித்து வலைதளங்கள் வழி சமூக அங்கீகாரமும் பெறுகிறார். ஓர் அழகி தற்படங்களால் தன் பிரதிபிம்பங்களைப் பெருக்கும்போது, அவை “பிரதிபிம்பங்கள்” அல்ல, அப்பெண்ணின் தன்னிலை நீட்டிப்பு. தற்படம் ஒருவரின் இரட்டையாக மாறுகிறது. இரட்டை பின்னர் நான்காக, எட்டாக, பதினாறாகப் பெருகுகிறது. எந்தப் பெண்ணிடமும் சென்று “நீங்கள் அழகுதான். ஆனால், உங்கள் தற்படம் அசிங்கமாக உள்ளது” என சொல்ல முடியாது. அது அவரைக் காயப்படுத்தும். அவர் தன் உடலையும் தன் தற்படத்தையும் சமநிலையாக வைத்தே பார்க்கிறார். இது பிறழ்வு அல்ல. தன் பிம்பத்தைத் தானாக நினைப்பதன் பிரச்சினை அல்ல. ஒரு மனிதன் தனது தன்னிலையைத் தொடர்ந்து பற்பல வடிவங்களில் பெருக்கிட விரும்புகிறான், அதன் வழி ஒரு பேரனுபவத்தைப் பெறுகிறான். மனிதனின் ஆதார மையம் என்ற ஒன்றும் அதன் பிரதிபலிப்புகள் என மற்றொன்றும் உள்ளதாய் நம்புவது புராதனச் சிந்தனை; பின்நவீனத்துவத்தில் நிராகரிக்கப்பட்ட சிந்தனை அது. மனிதன் மொழிக்குள் தன்னைப் பெருக்கியபடியே இருக்கிறான், அதுவே அவனது இருப்பு என்பதே இன்றைய தத்துவம். இதற்கான கச்சித உதாரணமாகத் தற்படங்கள் உள்ளன. இப்படி ஒருவர் தன்னைப் பண்பாட்டுக்குள், மொழிக்குள், உரையாடல்கள் வழி பெருக்கித் தன் படைப்பான தன்னழகையும் ரசிக்கிறார். இதைச் சுய-பெருக்க விருப்பம் என விளக்கலாம். அவர் தன்னை மேம்படுத்தத்தான் அப்படிச் செய்கிறார் என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் அவர் தூங்கி வழிந்தும், களைத்துப்போயும், மேக் அப் அணியாமலும்கூடத் தற்படங்களை வெளியிடுவார். நிஜ உலகிலும் அவர் மேக் அப் இன்றித் தெரிவார். ஆக, அழகு மேம்பாடு மட்டும் காரணமல்ல. அழகின்மையை ஈடுகட்டுவதும் தற்படம் எடுப்பதன் ஒரே நோக்கமல்ல. இணையத்தில் கிடைக்கும் கேத்ரினா கைஃப்பின் தற்படங்களைப் பாருங்கள். மிகுதியான மேக் அப்புடன், மேக் அப் இன்றித் தூங்கி வழிந்தபடி, டல்லாக எனப் பல விதங்களில் அவர் தற்படங்கள் வெளியிடுகிறார். ஏற்கனவே கொண்டாடப்படும் அழகியாக இருக்கும் ஒரு நடிகை ஏன் தற்படம் எடுக்க வேண்டும்? இத்தகைய அழகிகளின் / அழகர்களின் தற்படங்களுக்கே கூடுதல் அங்கீகாரமும் கவனமும் கிடைக்கின்றன. ஆகையால் அத்தகையோரே கூடுதலாய் தற்படங்கள் எடுக்கத் தூண்டப்படுகிறார்கள். உலகமே சிலாகிக்கும் அழகு முகம் கொண்ட பெண் தற்படம் எடுத்துத் தன்னைச் சமூக வலைதளங்களில் பெருக்கிக்கொள்ளும்போது அவர் தனது எந்தக் குறையையும் நிவர்த்தி செய்வதாக அர்த்தமில்லை. தன் அழகைக் கூட்டிக்கொள்ளவோ, அப்படிச் சித்திரிக்கவோ கேத்ரினாவுக்கு அவசியமில்லை. மாறாக அவரைப் போன்ற பிரபலம் ஜெராக்ஸ் எந்திரத்தைப் போல மாறுகிறார். அவர் எண்ணற்ற முறை தன்னைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறார். இதை ஒருவிதப் படைப்பூக்க மனநிலை என்றும் பார்க்கலாம். சச்சினும் கோலியும் மோடியும் தற்படங்கள் எடுக்கும் போதும் இதுவே நடக்கிறது. அவர்கள் கூடுதலாய்ப் பெற இனி ஒன்றும் மீதமில்லை. தற்படங்கள் மூலம் ஒரு பிரபலம் சமூகத்துடன் அணுக்கமான ரீதியில் உறவாட முடிகிறது. இது ஊடகங்களில் வெளிவரும் முறைசார் புகைப்படங்களில் சாத்தியமாகாது. மோடியின் தற்பட விருப்பத்தைச் சமூக அணுக்கமாதல் திட்டமாகவே பார்க்கிறேன். ஆனால், தற்படங்களின் உளவியல் அந்தரங்கமான சமூகமாக்கத்துடன் முடிவதில்லை. நாம் அனைவருக்கும் நம்மைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்ளும் விருப்பம் இன்று உள்ளது. இன்று நாம் கூடுதலாய் நம்மைப் பற்றிப் பேசுகிறோம், நம்மைப் பற்றி எழுதுகிறோம், நம்மை ரசிக்கிறோம், கொண்டாடுகிறோம், நம்மிடம் உள்ள ஒரு குறையினால் தூண்டப்பட்டு, தாழ்வுணர்வால் இதைச் செய்வதில்லை. தன்னை வெறுக்கிறவன் தன்னை எப்படி ரசிக்கவும் முன்வைக்கவும் முடியும்? தன்னை ஒருவர் பெருக்கும்போது அவர் தன்னை நகலெடுப்பதில்லை. மாறாக, தனது தன்னிலை ஒன்றைப் புதிதாய் உருவாக்கிக்கொள்கிறார். 96 படம் ஓர் உதாரணம். அதில் பாத்திரங்களும், பாத்திரங்களைக் கண்டு சிலாகித்து அவர்கள் வழியாகப் பார்வையாளர்களும் காலத்தில் பின்னோக்கிச் சென்று நினைவேக்கத்தில் தம்மைப் பெருக்குகிறார்கள். அந்த நினைவேக்கத்தில் தோன்றும் தன்னிலை “நாம் அல்ல” என நாம் நினைப்பதில்லை. தற்படம் எடுக்கையிலோ நாம் முன்னோக்கிச் சென்று நம்மையே பெருக்குகிறோம். தற்படத்தை நகல் எனப் பார்க்கவும், நகலுக்குச் சொந்தக்காரரான நாமே நிஜம் என்றும் பார்க்கவும் அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த உலகில் யாரும் நகலை விரும்புவதில்லை; அப்படி இருக்க, சுயநகலை மட்டும் ரசித்துக் கொண்டாடிப் பகிரவா போகிறார்கள்? தன்னை விரும்பித் தன்னைப் பெருக்குபவன் தன்னில் இருந்து கடந்து சென்றுகொண்டே இருக்கிறான். அவன் தன் பிரக்ஞையின் பாரத்திலிருந்து விடுதலை கொண்டவன். சுயவிருப்பத்திலிருந்து, சுயபெருக்கத்திலிருந்து சுயவிடுதலையைப் பெற முடியாதபோது மட்டுமே அது துன்பமாகிறது. அது பெரும்பாலானோருக்கு நடப்பதில்லை. அதனால்தான் நாம் தற்படத்தை நோக்கிப் புன்னகைக்கிறோம். கண்ணீருடன் தற்படம் எடுத்தால்கூட அதைப் பின்னர் கண்டு புன்னகைக்கிறோம். நம்மையே தற்படத்தில் நாம் நோக்குவதும், பின்னர் அப்படி நோக்கிக்கொண்ட தற்படத்தைக் கண்டு நாம் புன்னகைப்பதும் எதைக் காட்டுகிறது? நாம் நம்மை இருவராய் பார்க்க விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. ஒன்றிலிருந்து இரண்டாகப் பரிணமித்து, இரண்டிலிருந்து நான்காக, எட்டாகத் தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் ஒருவர் ஒற்றை சுய பிம்பத்திலிருந்து தப்பிக்கிறார். தன் அசல் என தான் நம்பிய ஒன்றுடன் பிணைந்துகொள்ளாமல் பறந்து போகிறார். இது விடுதலை அல்லவா? தற்படம் எடுப்பதை நான் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கிறேன். அதை தன்னைப் பற்றிப் பேசுவது, தன்னை எழுதுவது, தன்னை நினைத்துப் பார்ப்பது, படைப்புப் பணியில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு இணையாகவே (தரத்தில் அல்ல, நோக்கத்தில்) பார்க்கிறேன். தன்னை விரும்புகிறவனே கண்ணாடியில் முகம் பார்க்கிறான்; தன்னை விரும்புகிறவனே தன்னைப் பற்றிப் பேசவும் எழுதவும் செய்கிறான். தன்னை விரும்புகிறவனே படைப்பாளி ஆகிறான். தன்னை விரும்புகிறவனே தற்படமும் எடுக்கிறான். சமூகம் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் தன்னை விரும்புகிறவன் தொடர்ந்து தன்னை விரும்புவான். தன்னை விரும்புகிறவனே தன்னிலிருந்து விடுதலையும் பெறுகிறான். தற்படம் எடுங்கள்! https://www.minnambalam.com/k/2018/12/24/7?fbclid=IwAR3tTJcXAO9tBlnA8-bNvBHa7Fz8z2xPeNn9DrwTYNlICgH4X5pXBVIzgbo