Aggregator
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது
நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது
100 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதன் இரகசியம்.
100 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதன் இரகசியம்.
’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’ - எம்.ஏ. சுமந்திரன்
’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’ - எம்.ஏ. சுமந்திரன்
’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’ - எம்.ஏ. சுமந்திரன்
எச்.எம்.எம்.பர்ஸான்
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து, இரண்டாவது நாளாகவும் இன்று (04) நடைபெற்ற பேரணியில், ஓட்டமாவடியில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “முஸ்லிம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரதான பிரச்சினை ஜனாஸா எரிப்பு விவகாரம். முஸ்லிம்களுடன் இணைந்து அதற்கு கடுமையான நாம் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். அதேபோல, தமிழ் மக்களுக்கு காலாகாலமாக நீண்ட பிரச்சினைகள் இருக்கின்றன.
“ அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணமால் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்யப்பட்ட வேண்டும், எங்கள் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும், வழிபாட்டுத் தளங்கள் உடைக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும்.
“அதேபோன்று, மலையகத் தமிழ் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வென்று சொல்லிச் சொல்லி எத்தனையோ காலமாக இழுத்தடிக்கின்றார்கள். இப்படியாக பல பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த நாட்டில் இடம்பெறுகிறது.
“எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த பேரினவாதத்துக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுசேர்ந்து திரண்டு நின்றால் மாத்திரம்தான் முகங்கொடுக்க முடியும்.
“இதுவரை காலமும் தனித்தனியாக எங்களைக் கையாண்டார்கள். இனிமேல் எங்களை தனித்தனியாக பிரித்து ஆள முடியாது என்ற செய்தியை இந்தப் போராட்டத்தின் மூலம் நாங்கள் சொல்லுகின்றோம். இந்த ஒற்றுமையை தொடர்ந்து நீடிக்க வைக்க வேண்டும். தமிழ் பேசுகின்ற மக்கள் என்கின்ற வகையில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும்” என்றார்.
Tamilmirror Online || ’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’
கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் – இலங்கை ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளது – ஜப்பான்
கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் – இலங்கை ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளது – ஜப்பான்
கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் – இலங்கை ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளது – ஜப்பான்
இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கையிலிருந்து இலங்கை விலகியிருப்பது ஒருதலைப்பட்சமான வருந்தத்தக்க நடவடிக்கை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
முத்தரப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதை தொடர்ந்து ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மேலதிக விபரங்களை எதிர்பார்த்துள்ளதாக புதுடில்லியில் ஜப்பானிய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இது குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அறிவித்துள்ளமை வருந்தத்தக்க விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடி வவுனியாவில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு
சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடி வவுனியாவில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு படையினரை கொண்டு செல்வதை எதிர்க்கின்றோம் - சம்பிக்க
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு படையினரை கொண்டு செல்வதை எதிர்க்கின்றோம் - சம்பிக்க
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு படையினரை கொண்டு செல்வதை எதிர்க்கின்றோம் - சம்பிக்க
(எம்.மனோசித்ரா)
இலங்கையில் பாரதூரமான பிரிவினைவாத யுத்தம் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்களை கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டதோடு , காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை இல்லாதொழித்த பாதுகாப்பு துறையினரை சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுமானால் அதனை நாம் எதிர்ப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
இலங்கையில் பாரதூரமான பிரிவினை வாத யுத்தம் நடைபெற்றது. பல தலைவர்களை கொல்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதோடு சிலர் கொல்லப்பட்டனர்.
எனவே இவ்வாறான அடிப்படைவாதிகளை அழிப்பதற்கு பாதுகாப்பு துறையினர் முன்னெடுத்த முயற்சிகளை குற்றங்களாகக் குறிப்பிட்டு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால் ஏதேனுமொரு நபர் தனிப்பட்ட ரீதியில் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் அவர் எந்த நிலையிலிருந்தாலும் அது குறித்து உள்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அரசாங்கம் மாத்திரமல்ல. நாமும் இவ்வாறான சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றோம்.
பிரபாகரனை தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் தலைவர் , அதன் அங்கத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்ற நிலையில் , சிறு சிறு குற்றங்களால் விடுதலை புலிகள் அமைப்பிலுள்ள சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எந்தளவிற்கு அறிவு பூர்வமானது என்பது தெளிவாகிறது.
எனவே 12 வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த யுத்தத்தை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்காமல் அனைத்தையும் மறந்து சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.
தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்
தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்
தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்
(ஆர்.யசி)
இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது.
பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு பிரதானி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது பரியார், பிரதம நீதியரசர் மற்றும் அவரது பரியார், சபாநாயகர் மற்றும் அவரது பரியார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது பாரியார், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் அவரது பரியார் ஆகியோர் முறையே அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.
மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனை அடுத்து தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டதுடன், 45 பாடசாலை மாணவ, மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் ஜயமங்கள கீதம் பாடப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளுக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதமாக 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
இதனை அடுத்தே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் மரியாதை அணிவகுப்புகளும் அதனை தொடர்ந்து கலாசார அனுவகுப்புகளும் இடம்பெற்றன.
இந்நிலையில் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே கொழும்பு சுதந்திர சதுக்க வளாகம் பலத்த பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் பெளத்த கொடிகளும், சௌபாக்கியத்தை வெளிப்படுத்தும் கடுஞ்சிவப்பு சிங்கள கொடிகளும், முப்படைகளின் ஒவ்வொரு படையணியையும் வெளிப்படுத்தும் இராணுவ கொடிகளும் அளவுக்கு அதிகமாக பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த கொடிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே இலங்கையின் தேசிய கொடிகளும் மிகக் குறைவாக பறந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக நேற்றைய சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் கட்டுப்பாட்டுடன், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றன.
ஒவ்வொரு சுதந்திரதின நிகழ்வுகளின் போதும் பொதுமக்கள் நிகழ்வுகளை பார்வையிட அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை அவை அனைத்துமே நிறுத்தப்பட்டு வெறுமனே அதிதிகளுடன் மாத்திரம் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம் | Virakesari.lk