Aggregator

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: "நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா?" சிறுவனிடம் வினவிய டிரம்ப்

1 month 3 weeks ago
  •  
     
பின்லாந்துபடத்தின் காப்புரிமை Getty Images Image caption பின்லாந்து

யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுவன் ஒருவனிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செயல்படும் சாண்டாக்களின் இருப்பிடங்களை பதிவுசெய்து வரும் அமெரிக்க அரசு துறையான நோராடை, டிரம்பை தொடர்புகொள்வதன் மூலம் அடைய முடியும் என்ற எண்ணத்தில் அந்நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

"நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா?" சிறுவனிடம் கேள்வி கேட்ட டிரம்ப்படத்தின் காப்புரிமை Reuters

வெள்ளை மாளிகைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் பதிலளித்தனர்.

அப்போது நடந்த சில சுவாரசியமான உரையாடல்கள்:

கோல்மன் என்ற சிறுவனிடம் பேசிய டிரம்ப், "ஹலோ, இது கோல்மனா? இனிய கிறிஸ்துமஸ். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு எத்தனை வயதாகிறது? நன்றாக படிக்கிறாயா? நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு, கோல்மனின் பதில் தெளிவாக இல்லை.

சாண்டாவின் இருப்பு சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்ற நிலையில் டிரம்ப் ஏன் இதுபோன்ற கேள்வியை எழுப்பினார் என்று பலரும் அந்த உரையாடல் தொடர்பான காணொளியுடன் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதை கீழ்க்காணும் புகைப்படங்களில் காணலாம்.

மெக்ஸிகோபடத்தின் காப்புரிமை Getty Images Image caption மெக்ஸிகோ அமெரிக்காபடத்தின் காப்புரிமை Getty Images Image caption அமெரிக்கா

இந்நிலையில், டிரம்ப் மற்றும் மெலானியாவின் மற்ற உரையாடல்கள் எவ்வித சர்ச்சையுமின்றி வாழ்த்துக்களுடன் முடிவுற்றன.

"உங்களது கனவுகள் மெய்ப்படும் என்று நம்புகிறேன்" என்று மற்றொரு சிறுவனிடம் பேசிய மெலானியா கூறினார்.

https://www.bbc.com/tamil/global-46678521

இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம்

1 month 3 weeks ago
இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம் மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள் மின்னலை அடுப்பு போன்றவை. மின்னணு இசைக்கருவிகள்,தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குக்கருவிகள் கணினி மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள் உலகை அச்சுறுதலுக்கு உள்ளாக்கும் இலத்திரனியல் கழிவுகள் தகவல் தொழில்நுட்ப புரட்ச்சியினைத் தொடர்ந்து உலகு எங்கும் இலத்திரனியல் சாதனங்கள் பல்கிப் பெருகின.இவற்றின் மேம்பட்ட பதிப்புகள் குறுகிய காலத்திற்குள் சந்தைகைளை ஆக்கிரமிப்பதால் காலவதியான பொருட்கள் குப்பை மேடுகளில் நிரம்பி வழிவதால் பூமிபந்தின் தூய்மை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.இவற்றினை ஒழுங்கு படுத்தவது அரசுகளிற்கும் சுற்றுசூழல் ஆர்வலா்களிற்கும் பெரும் தலையிடியாக உள்ளது. வரவிலக்கணம்-இலத்திரனியல் கழிவுகள் மனிதர்களால் பாவனைக்கு உட்படுத்தி கைவிடப்பட்ட இலத்திரனியல் பொருட்களை இ.கழிவு என வரவிலக்கணப்படுத்தலாம்.சுருங்கக்கூறின் கைவிட்ப்பட்ட இலத்திரனியல் சாதனங்களே இ.கழிவுகள் ஆகும்.இங்கு இலத்திரியல் சாதனங்கள் என்பது தொலைபேசிகள்இகணனிகள்இதொலைக்காட்சிப் பெட்டிகள்இகுளிர்சாதனம் பெட்டிகள் போன்றவற்றைக் குறிக்கிறது.. இலத்திரனியல் கழிவு வெளியேற்றத்தில் உலக நாடுகளின் வகிபாகம் 2006 ஆண்டில் இருந்து ஜ.நாவின் சுற்று சூழல் நிகழ்ச்சித்திட்டம் இ.கழிவுகள் தொடர்பான மதிப்பீட்டினை ஆரம்பித்தது.இவ் மதிப்பீட்டின் பிரகாரம் ஆண்டுதோறும் 20-50 மில்லியன் கழிவுகள் உருவாக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகளாவான கழிவுகளை ஜரோப்பாஇஅமெரிக்காஇஅவுஸ்ரேலியா போன்ற நாடுகள் வெளியிடுகின்றன. எனினும் அண்மைகாலங்களில் துரிதமாக வளா்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட சீனாஇஇலத்தீன் அமெரிக்க நாடுகள்இகிழக்கு ஜரோப்பிய நாடுகள் அதிகளவான இ.கழிவுகளை வெளியிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியா இ.கழிவு வெளியேற்றத்தில் 5 ம் இடத்தில் உள்ளது ஆசியநாடுகளில் சீனா இயப்பான் நாடுகள் அதிகளாவன கழிவுகளை வெளியிடுகின்றன.ஆபிரிக்க நாடுகள் மிகவும் குறைந்தளவான கழிவுகளையே உற்பத்தி செய்கின்றன. பல அபிவிருத்தியடைந்த நாடுகள் அன்பளிப்பு என்ற போர்வையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு தமது இலத்திரனியல் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றன.இதனால் குறைவிருத்தி நாடுகள் இ.கழிவு தொடர்பான முகாமைத்துவத்தில் மேலதிகமான சுமைகளையும் தாங்க வேண்டியுள்ளது. இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் ஏனைய கழிவுகள் போலல்லாது இ.கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.பெரும்பாலான இ.குப்பைகளில் ஈயம்இபாதரசம்இநிக்கல்இகேட்பியம் போன்ற வேதிப் பொருட்டகள் காணப்படுகின்றன .இவற்றைவிட மிக கொடிய விளைவினைத் தரும் பொலிபுறோமைற்றட் பினைல் எதர் (Pடீனுநுள) என்ற வேதிப்பொருள் எரிபற்று நிலையினை குறைப்பதற்காக இலத்திரனியல் சாதனங்களில் 30 வீதம் வரை பயன்படுத்தப்படுகின்று.இதனால் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் ஏனைய வேதிப்பொருட்களால் ஏற்படும் தாக்கத்தினைவிட பல்மடங்கு அதிகமானது. பொதுவாக கீழ்வரும் பாதிப்புக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகிறது 1.நீர் நிலைகள் மாசுபடல் 2.விவசாய நிலங்கள் மாசுபடல் 3.இ.கழிவுகளை எரியூட்டுவதால் வளி மாசடைதல் 4.புற்றுநோய் ஏற்படல் 5.தையரொக்சன் பிரச்சனைகள் 6.கருவளவீதம் குறைவடைதல் 7.வயதுக்கு முன்பு பூப்படைதல் இலத்திரனியல் கழிவு முகாமை மீள் பயன்பட்டிற்கு இ.கழிவுகளை உட்படுத்துவது சிறந்த கழிவு முகாமைத்துவம் ஆகும்.பெரும்பாலான கழிவுகளில் பெறுமதி மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.எனினும் விருத்தியடைந்த நாடுகள் இது செலவு கூடிய நடவடிக்கை எனக் கருதி அபிவிருத்தியடைந்த நாடுகளிற்கு இக் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக சீனா உலக இ.கழிவுகளில் 80 வீதத்தினை கொள்வனவு செய்கிறது இதனைவிட இந்தியா, பாகிஸ்தான், வியட்னாம், பிலிப்பையின்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகளை இவ் நாடுகளே மீள் சுழற்ச்சி செய்கின்றன. மீள் சுழற்ச்சிக்கு நவீன நுட்டபங்களை பயன்படுத்தல் சிறந்ததாகும்.அனேகமான இ.கழிவுகள் ஆபத்தானவை ஆபத்தில்லாதவை என்னற பாகுபாடுஇன்றி மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன.உண்மையில் இக் குப்பைகள் உயர் தரத்தில் பரீட்ச்சிக்கப்பட்டு கேடு விளைவிக்காத பொருட்கள் மட்டும் மண்ணில் புதைக்கப்படவேண்டும். மக்களிற்கு இ.கழிவுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டுதல் அவசியமாகும்.இதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அனர்த்தத்தினை கணிசமான அளவு குறைத்துக் கொள்ளலாம். உலகில் மின்னணுக் கழிவுகள்... பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள், உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் (டீயளநட யுபசநநஅநவெ) உள்ளது இந்த ஒப்பந்தத்தின் பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயற்றிட்டத்தின் (டீயளநட யுஉவழைn நேவறழசம) அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவில் உருவாகும் கழிவுகளில் 50 - 80 வீதம் வரை வளர்முக நாடுகளுக்கு மறுசுழற்சி செய்வதற்காக அனுப்பிவைக்கப் படுகின்றது. அதிகமாக மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் வளர்முக நாடுகளின் வரிசையில் சீனா இந்தியா ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன. மேலைத்தேய நாடுகளால் வெளியிடப்படும் மொத்த மின்னணுக் கழிவுகளில் ஏறத்தாள 90 வீதம் ஆனவை சீனாவையே வந்தடைகின்றன. இதில் 20 - 30 வீதம் ஆனவை மீள் சுழற்சி செய்யப்பட ஏனையவை குப்பைத் தொட்டிக்கே செல்கின்றன. இதேபோன்று சென்ற ஆண்டுகளில் இந்தியாவிற்கும் சுமார் ஒன்பது இலட்சம் தொன் அளவான இலத்திரனியல் கழிவுப் பொருட்களை ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் வழங்கியுள்ளன. பொருளடக்கம்ஜமறைஸ 1 இன்றைய கைத்தொழில் 2 நவீன தொழில்நுட்ப விருத்தி 3 பொருட்களின் பாவனை 4 மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாழ்வது இன்றைய கைத்தொழில் இன்றைய கைத்தொழில் மயமான யுகத்தில் புவியானது பல்வேறுபட்ட சூழல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. ஆந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் புவிச்சூழலி;ன் இயல்பு நிலைக்கு பெரிதும் அச்சுறுத்தலாக அமையும். மாசாக்கிகளின் வரிசையில் புதிய வரவாக இம் மின்னணுக் கழிவுகள் அமைகின்றன. மின்னணுக் கழிவுகள் என்பது பல்வேறுபட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் கருவிகள் என்பன உடமையாளர்களுக்கு பயன்படாதுபோகும் பட்சத்தில் அவை மின்னணுக் கழிவுகளாக மாறுகின்றன. இன்று பெரிதும் பாவனையில் இருக்கின்ற மின்னணுப் பொருட்களுக்கான உதாரணங்களின் பட்டியல் தொலைக்காட்சிப்பெட்டி, கணணி மற்றும் அதுசார் பொருட்கள், குளிர்சாதனப்பெட்டி, குளிஷரூட்டி, கையடக்கத் தொலைபேசி என நீண்டுகொண்டே செல்லும். இவற்றுள் சந்தையில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக நாளுக்கொரு புதியவகை என உருவாகிக் கொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசிகள் கணணிகள் என்பன புவியை மாசாக்குவதில் அதிக பங்களிப்பினை வழங்கி வருகின்றமை அறியப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப விருத்தி நவீன தொழில்நுட்ப விருத்தியின் விளைவாக மனிதனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், வேலைகளை இலகுவாக்கிக் கொள்வதற்கும், சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் மின்னணுப் பொருட்களும் கருவிகளும் அதிகளவில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதுடன், இன்றைய சனத்தொகைப் பெருக்கத்தின் விளைவாக இப்பொருட்களுக்கான கேள்வியும் அதிகரித்து வருவதனால் மின்னணுப் பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பாவனைக்கும் வந்துசேர்கின்றன. இவ்வாறு பயன்பாட்டிற்குள் ஊடுருவும் மின்னணுப் பொருட்கள் சிறிது காலத்திலேயே மின்னணுக் கழிவுகளாக வெளியேறுகின்றன. அதாவது இத்தகய கருவிகள் பொதுவாக பழையதாகி செயலிழந்து விடுவதன் காணைமாகவோ அல்லது அவற்றினை விடவும் வினைத்திறண் மிக்க கருவிகளை பயனாளர்கள் கொள்வனவு செய்வதனாலோ இவை கழிவுகளாக வெளியேற்றப் படுகின்றன. சாதாரணமாக நோக்கில் இன்று பாவனைக்கு உட்படுத்தப்படும் இம் மின் உபகரணங்களின் பாவனை ஆயுட்காலம் மிகவும் குறுகியதாக இருப்பதுடன், அவை பழுதடைந்துவிட்டால் திருத்தம் செய்து பாவனைக்கு உட்படுத்துவதை விட புதிதாக ஒன்றை கொள்வனவு செய்தல் இலகுவானதாகவும், திருப்தி மிக்கதாகவும் அமைகின்றது. அதுமட்டுமன்றி பொருளாதார ரீதியில் குறைவான வசதி கொண்ட மக்களும் பெற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் சந்தையில் இவற்றின் மலிவான கிடைப்பனவும் மின்னணுக் கழிவுகளின் துரித வெளியீட்டை தூண்டுகின்றன. சுருங்கக்கூறின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ப மின்னணுக் கழிவுகளின் வெளியீடும் தற்காலத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருட்களின் பாவனை பொருட்களின் பாவனையின்போது உள்ளீடு இருப்பின் வெளியீடு இருப்பது நியதி எனினும் இவ்வாறு வெளியிடப்படும் மின்னணுக் கழிவுகள் பல்வேறு வகையான இரசாயன, நச்சுப் பொருட்களை கொண்டிருப்பதாலேயே இவற்றினால் ஏற்படும் சூழல் தாக்கம் பற்றி நாம் சிந்திக்கவேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதாவது இவ் மின்னணுக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் வாயுக்கள் காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தல், வளிமண்;டல வாயுக்கூட்டுக்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் பலவற்றை ஏற்படுவததல்; எனபதோடு உயிரின சுவாசத்திற்கும் கேடானதாக மாறுகின்றது. மேற்படி கழிவுகளை புதைப்பதனால் மண்ணின்; இயல்புநிலை, மண்நீர் மண்வளம்; என்பன பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவற்றை நீர்நிலைகளில் விடுவதன்மூலம் நீரில் இரசாயன சேர்க்கைக்கு உள்ளாவதுடன், நீர்வாழ் அங்கிகளைப் பாதிப்பது மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீர்க்கோளச் சூழலையே பாதிப்பதாக அமையும். உலகரீதியில் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக ஐந்து கோடி தொன் எனும் அளவில் மின்னணுக் கழிவுகள் சேர வாய்ப்பிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றபோதிலும் இதில் 20மமூ ஆனவையே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. மீதி 80மூ ஆனவை ஏனைய கழிவுகளுடன் இணைந்து சூழலை மாசுபடுத்தும் பணியில் இறங்கி விடுகின்றன. வளர்முக நாடுகளில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் இப்போது இருக்கும் மின்னணுக்கழிவுகளைளளப் போன்று மூன்று மடங்கு கழிவுகளினால் பல்வேறு சிக்ல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இவ்வாறு எந்த வகையிலும் முகாமைத்துவம் செய்யக் கடினமான மின்னணுக் கழிவுகளும் அதன் தாக்;கமும் தொழில்நுட்ப விருத்தியடைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளை விட வளர்முக நாடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் முன்னணி வகிப்பினும் மின்னணுக்கழிவுகள் அதிகளவில் வந்துசேரும் இடங்களாக வளர்முக நாடுகளே காணப்படுகின்றன. வளர்முக நாடுகள் மட்டும் ஏன் இம் மின்னணுக் கழிவுத் தொட்டியாக்கப்பட வேண்டும்? என்ற கேள்வி எம்மிடம் எழ வாய்ப்புண்டு இதற்கு காரணம் வளர்முக நாடுகள் நன்கொடை, அன்பளிப்பு, மீள் சுழற்சி ஊக்குவிப்பு என்ற போர்வைகளில் பெரும்பாலான கழிவுகளை வளர்முக நாடுகளுக்கு நாடு கடத்துகின்றன. இதனை மீள் பயன்பாடு என்றநோக்குடன் பெற்றுக் கொள்ளும் வளர்முக நாடுகளில் இத்தகைய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு ஓரிரு ஆண்டுகள் அல்லது மாதங்கள் மாத்திரமேதான் பின்னர் அவை சர்வ சாதாரணமாக தூக்கி வீசப்படுகின்றன. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இவ்வண்ணமே இலத்திரனியல் கழிவுகள் உருவாகின்றன. மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாழ்வது இக் கழிவுகள் தொடர்பான சிக்கல்கள் அனைத்து நாடுகளிலும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்பட இருக்கின்ற போதிலும் குறிப்;பாக இலங்கையும் மீள் சுழற்சி, நன்கொடை என்ற பெயரில் அதிகளவான இலத்திரனியல் கழிவுகளை அபிவிருத்தியடைந்த நேச நாடுகளிடமிருந்து பெற்று வருகின்றதன் பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்காரணமாக கொழும்பு நகரம் இன்று இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினைக்கு உள்ளகி இருக்கின்றது. ஏனெனில் இன்றைய அதிகரித்த கணணிப் பாவனை, இலத்திரனியல் சாதனங்களின் தொடர்ச்சியான கொள்வனவு என்பன எதிர்கால இலத்திரனியல் பிரச்சினைக்கு அத்திவாரமிடல் எனறே கூறவேண்டும். காரணம் கணணிக் கழிவுகளும், மற்றும் ஏனைய இலத்தினியல் கழிவுகளும் அனைத்து குப்பைத் தொட்டிகளையும் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலை அனைத்து நகரங்களிலும் உணரப்பட்டிருப்பினும்;; இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய அவசியம் உணரப்படவில்லை என்றே கூறவேண்டும். இவ் நச்சு வாயுக்களை வெளியிடக்கூடிய மின்னணு சாதனங்களின் கழிவுகளை எவ்வாறு கையாழ்வது என்பது குறித்த மாகாநாடு ஒன்று ஜூன் - 23 - 2008 அன்று இந்தோனேசியாவின் தலைநகரான பாலியில் நடைபெற்றது. இதில் 170 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனிதன் உள்ளிட்ட சகல உயிரினங்களுக்கும், தாவரங்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தாக உருவாகி வரும் இந்த நச்சுக் கழிவுகளை எவ்வாறு அழிப்பது அல்லது குறைப்பது என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சுற்றுச் சூழலை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக இந்த நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் விவகாரம் உருவாகி வருவதாக இந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதனை எங்ஙனம் கையாழ்வது என்பது குறித்தும் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதேபோன்ற மின்னணுக் கழிவுகள் பற்றிய மாநாடுகளும் விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்பட்ட வண்ணம் இருப்பினும் இம் மின்னணுக் கருவிகளின் உருவாக்கமும் பாவனையும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைக்கப் படவில்லை காரணம் இன்றைய நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மின்னணுப் பொருட்கள் மாறியுன்னமையே ஆகும். எது எவ்வாறிருப்பினும் மின்னணுக் கருவிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாதுவிடினும் அதன் கழிவுகளைக் கையாழ்வதற்கு சிறந்த நெறிமுறை ஒன்று அவசியமாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இவற்றை மீள்சுழற்சி அல்லது மீள் பயன்பாடு செய்வதற்கு இவ் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற நாடுகளும், நிறுவனங்களும் முன்வரவேண்டும். இப்படிப்பட்ட கழிவுகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில் மறுசுழற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என க்ரீன் பீஸ் (புசநநn pநயஉநள) என்ற அமைப்பும் வேண்டிநிற்கின்றது. அத்துடன் விற்பனை செய்யும்போதே அதன் மறுசுழற்சிக்கான விலையையும் அந்தப் பொருளில் சேர்த்துவிடலாம் என்றும் அப்பொருளின் ஆயட்காலம் முடிந்ததும் அந்தந்த நிறுவனங்களே பெற்று மறுசுழற்சி செய்யலாம் எனவும் இந்த அமைப்பு மேலும் வலியுறுத்திவருகின்றது. எனவே மேற்குறித்த அம்சங்களை நோக்கில் இந்த இலத்திரனியல் வளர்ச்சிகண்ட உலகில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியையோ, உபயோகத்தையோ தடைசெய்ய முடியாது. இதனால் மின்னணுக் கழிவுகளின் உருவாக்கமும் தடைசெய்ய முடியாத ஒன்றாகும். இருப்பினும் மின்னணுக்கழிவுகள் குறித்து கவலைகொள்ள வேண்டிய கட்டத்திலும் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்படடிருக்கின்றது. எனவே இதற்கு சரியான தீர்வானது அனைத்து நாடுகளின் அரச கொள்கைகளிலும் மக்கள் அனைவரின் மனநிலையிலேயுமே தங்கியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. முடிவுரை இ.கழிவுகள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாதவை ஆகும் எனவே இவற்றை எவ்வாறு முகாமை செய்ய வேண்டும் மற்றும் இதன் பாதிப்பில் இருந்து சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற பொறிமுறையினை நாடுகள் சரியாக பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும் http://kalviulagam45.blogspot.com/2016/10/blog-post_19.html

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா? உண்மை என்ன? பிபிசி ஆய்வு

1 month 3 weeks ago
பிரசாந்த் சாஹல் உண்மை கண்டறியும் குழு, பிபிசி படத்தின் காப்புரிமை AFP Image caption ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன. 'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன. ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. 'அரசு எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், ஹரியானாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏனெனில், இந்துக்களின் மாமிசத்தை உண்பவர்கள் மேவாரில் தங்கியுள்ளனர்' என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமை VIRAL POST இந்த செய்தி, டிவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ்ஸிலும் பகிரப்படுகிறது. இந்த அதிர்ச்சியான செய்திகளை வாட்ஸ்-அப் செயலிலும் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். 'தைனிக் பாரத் நியூஸ்' என்ற வலைதளத்தில் 'ஆஜ் தக் குட்காவ்' பத்திரிகையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மேவாதின் உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்து இளைஞர் ஒருவரின் மாமிசத்தை சாப்பிட்டபோது, பிடிக்கப்பட்டதாக இந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாதில் கள ஆய்வு மேற்கொண்டது. மேவாத் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கலிடம் பேசினோம். இதுபோன்ற குற்றச்சாட்டு குருகிராமில் பதிவாகியிருக்கிறதா என்று அவரிடம் கேட்டோம். எங்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், "இது முற்றிலும் தவறான செய்தி. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று தெளிவாக கூறிவிட்டார். பிறகு எந்த அடிப்படையில் இதுபோன்ற செய்தி வெளியானது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, 'ஆஜ் தக் குர்காவ்' பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு சென்றதும் எங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின. இந்த செய்தியை எழுதியது பத்திரிகை ஆசிரியர் சத்பீர் பரத்வாஜ் என்பது முதல் தகவல். 'ஆஜ் தக் குர்காவ்' பத்திரிகைக்கும், இந்திய டுடே குழுமத்தின் 'ஆஜ் தக்' ஊடகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் சத்பீர் பரத்வாஜிடம் பேசினோம். படத்தின் காப்புரிமை DBN.COM 'ஆஜ் தக் குர்காவ்' மற்றும் 'பஞ்சாப் கேஸரி' பத்திரிகையின் குர்காவ் பதிப்பின் செய்திப்பிரிவுத் தலைவராகவும் பணியாற்றுகிறார் சத்பீர் பரத்வாஜ் பத்திரிகைத்துறையில் 28 ஆண்டு கால அனுபவம் கொண்டிருக்கும் சத்பீர் பரத்வாஜ் குற்றச் சம்பவங்களையும் பற்றி எழுதி வருகிறார். பிபிசியிடம் பேசிய சத்பீர் பரத்வாஜ், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறுகிறார். "ஹரியானாவின் இந்துக்களின் மாமிசத்தை உண்ணும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்தது. மேவாத் மற்றும் துவாரகா எக்ஸ்பிரஸ்-வே வழித்தடத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளில் தங்கியிருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நேரில் சந்தித்து பேச முடிவுசெய்தேன்" என்று கூறுகிறார் சத்பீர் பரத்வாஜ். படத்தின் காப்புரிமை AAJ TAK GURGAON ஹரியானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான மேவாதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அங்கு 75% முஸ்லிம்கள் வசிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கிராமங்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு,, மேவாதில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், உள்ளூர் தலைவர்கள் சிலர் அவர்களுக்கு கம்பளிகளை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் சத்பீர் பரத்வாஜ் தெரிவித்தார். மேவாத் மாவட்டத்தில் மொத்தம் 1356 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கியிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கல் தெரிவித்தார். 'காஷிஃப்' என்ற இளைஞர் கூறியதன் அடிப்படையிலேயே, 'இந்து மாமிசத்தை உண்ணும்' மனிதர்கள் பற்றிய கட்டுரையை எழுதியதாகவு, அதை தனது பத்திரிகையில் 10-16 டிசம்பர் இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டதாகவும் சத்பீர் பரத்வாஜ் தெரிவித்தார். ஆனால் காஷிஃப்பை எங்கே சந்தித்தார்? மேவாத் அல்லது குருகிராமத்தின் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் இது பற்றி பேசினாரா? அல்லது இந்த விவகாரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வேறு யாரிடமாவது பேசினாரா? என்ற கேள்விகளுக்கு சத்பீர் பரத்வாஜிடம் சரியான பதில் இல்லை. பகிரப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பிபிசி மேற்கொண்ட ஆய்வில், அது போலிச் செய்தி என்று தெரிய வந்தது. மேலும், சத்பீர் பரத்வாஜ் பகிரப்பட்ட புகைப்படம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருப்பதால் அந்த புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று பிபிசி முடிவெடுத்தது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் பகிரப்பட்டது. திபெத் மக்களின் இறுதிச் சடங்குகள் பற்றிய புகைப்படம் இது என்று அதில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சடலத்தை காட்டுப் பறவைகளுக்கு உணவாக கொடுக்கும் நடைமுறை என்று புகைப்படத்துடன் பகிரப்பட்டிருக்கும் செய்தியில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர @PhramahaPaiwan என்ற பேஸ்புக் பயன்பாட்ட்டாளர் இந்த செய்தியை 2014 ஆகஸ்ட் மாதம் பகிர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டில், இந்த புகைப்படம் சில டிவிட்டர் பயனர்களால் பகிரப்பட்டுள்ளது. அதிலும் திபெத்தியர்களின் மரண இறுதிச் சடங்குகள் என்ற மோற்கோளுடன், இந்த புகைப்படங்கள் திபெத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திபெத்திய மக்களின் இறுதி சடங்குகளின் யூ டியூப் வீடியோக்களும் உள்ளன. அதில், சடலங்கள் கழுகு போன்ற பறவைகளுக்கு இரையாக போடப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-46673679

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

1 month 3 weeks ago
மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன் இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர். இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது. தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார். http://athavannews.com/மஹிந்தவின்-கைகளுக்குள்-ம/

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

1 month 3 weeks ago
மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்
sumanthiran-2.jpg

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.

அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார்.

 

http://athavannews.com/மஹிந்தவின்-கைகளுக்குள்-ம/

 

வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ள இரத்தினபுரம் முதிய தம்பதியினர்!

1 month 3 weeks ago
வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ள இரத்தினபுரம் முதிய தம்பதியினர்! December 25, 2018 1 Min Read அண்மையில் கிளிநொச்சியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் அரச திணைக்களங்களாலும், சுயாதீன அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த இலட்சுமணன் தம்பதியினருக்கு எந்த நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளப் பெருக்கின்போது, இராணுவத்தினால் மீட்கப்பட்ட 83 வயதான இலட்சுமணனும், அவரது மனைவி 82 வயதான கன்னியம்மாவும் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தனர். வயது முதிர்ந்த நிலையில் தமது தேவைகள் எதனையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத வயதில், உறவினரது ஒத்துழைப்புடனேயே இவர்கள் தமது நாட்களை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அவ் உறவினர் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். இக் கிராமத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட, வறிய நிலையில் இருப்பவர்களின் லட்சுமணனன் – கன்னியம்மாள் குடும்பமும் ஒன்று. வீட்டுத்திட்டம் முதல் எந்த உதவிகளும் கிடைக்காத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ள நிவாரணமும் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் தமக்கும் வழங்குமாறு இவர்கள் கேட்டுள்ளனர். இராணுவத்தின் படகில் வந்து பாடசாலையில் தங்கியிருந்தால்தான் நிவாரணம் என்றும் எந்த உதவியும் இவர்களுக்கு வழங்க முடியாது என்றும் கிராம சேவையாளர் கூறியுள்ளார். பாடசாலை – இடைத்தங்கல் முகாமில் வந்து தங்கியிருக்க கூடிய உடல் நிலை தமக்கு இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் தமக்கும் வழங்க வேண்டும் என்றும் இதற்கு மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரியுள்ளனர். இதேவேளை அண்மையில் குடும்ப தலைவரை இழந்த ஒரு குடும்பமும் வெள்ளத்தின்போது வீட்டிற்குள் பரணி அமைத்து தங்கியுள்ளனர். இவர்களுடன் இராணுவத்தினர் அழைத்தபோது, வீட்டை விட்டு வெளியேற மறுத்த முன்னாள் போராளி குடும்பத்திற்கும்வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/107823/

வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ள இரத்தினபுரம் முதிய தம்பதியினர்!

1 month 3 weeks ago
வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ள இரத்தினபுரம் முதிய தம்பதியினர்!

December 25, 2018

1 Min Read

Irathnapuram3.jpg?resize=800%2C450

அண்மையில் கிளிநொச்சியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் அரச திணைக்களங்களாலும், சுயாதீன அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த இலட்சுமணன் தம்பதியினருக்கு எந்த நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளப் பெருக்கின்போது, இராணுவத்தினால் மீட்கப்பட்ட 83 வயதான இலட்சுமணனும், அவரது மனைவி 82 வயதான கன்னியம்மாவும் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தனர். வயது முதிர்ந்த நிலையில் தமது தேவைகள் எதனையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத வயதில், உறவினரது ஒத்துழைப்புடனேயே இவர்கள் தமது நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் அவ் உறவினர் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். இக் கிராமத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட, வறிய நிலையில் இருப்பவர்களின் லட்சுமணனன் – கன்னியம்மாள் குடும்பமும் ஒன்று. வீட்டுத்திட்டம் முதல் எந்த உதவிகளும் கிடைக்காத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ள நிவாரணமும் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் தமக்கும் வழங்குமாறு இவர்கள் கேட்டுள்ளனர். இராணுவத்தின் படகில் வந்து பாடசாலையில் தங்கியிருந்தால்தான் நிவாரணம் என்றும் எந்த உதவியும் இவர்களுக்கு வழங்க முடியாது என்றும் கிராம சேவையாளர் கூறியுள்ளார். பாடசாலை – இடைத்தங்கல் முகாமில் வந்து தங்கியிருக்க கூடிய உடல் நிலை தமக்கு இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் தமக்கும் வழங்க வேண்டும் என்றும் இதற்கு மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரியுள்ளனர். இதேவேளை அண்மையில் குடும்ப தலைவரை இழந்த ஒரு குடும்பமும் வெள்ளத்தின்போது வீட்டிற்குள் பரணி அமைத்து தங்கியுள்ளனர். இவர்களுடன் இராணுவத்தினர் அழைத்தபோது, வீட்டை விட்டு வெளியேற மறுத்த முன்னாள் போராளி குடும்பத்திற்கும்வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது.

Irathnapuram2.jpg?resize=800%2C450Irathnapuram1.jpg?resize=800%2C450

 

http://globaltamilnews.net/2018/107823/

கேமராவில் சிக்கிய குமாரசாமி: "என் கட்சிக்காரரை கொன்றவரை சுட்டுத் தள்ளுங்கள்"

1 month 3 weeks ago
இம்ரான் குரேஷி படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஹெச்.டி.குமாரசாமி தமது கட்சிக்காரர் ஒருவரை கொலை செய்த நபர்களை இரக்கமின்றி சுட்டுத்தள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய காட்சி, கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களிலும் வைரலாகப் பரவியது. இது சர்ச்சையானதை அடுத்து குமாரசாமி தமது பேச்சு குறித்து விளக்கம் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. தன் தடாலடிப் பேச்சுகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் குமாரசாமியின் இந்த சமீபத்திய பேச்சின் பின்னணி என்ன? கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் வட்டத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹொன்னலகிரி பிரகாஷ் (48) சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமான இவர் மாண்டியா மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெறக் காரணமாக இருந்தவர் என்று கூறப்பட்டது. இவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. பரபரப்பான பெங்களூரூ - மைசூரூ நெடுஞ்சாலையில் பல மணி நேரம் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து புறப்படும் முன்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் செல்பேசியில் உரையாடிய முதல்வர் குமாரசாமி "அவர் நல்ல மனிதர். இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் இதைக் கையாளப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இது உங்கள் பொறுப்பு. இரக்கமில்லாமல் அவர்களைக் கொல்லுங்கள். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்குக் கவலையும் இல்லை" என்று பேசியுள்ளா். புகைப்பட காப்புரிமை @ANI @ANI <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @ANI: #WATCH Karnataka CM HD Kumaraswamy caught on cam telling someone on the phone 'He(murdered JDS leader Prakash) was a good man, I don't know why did they murder him. Kill them (assailants) mercilessly in a shootout, no problem. (24.12.18) " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/ANI/status/1077399726478233601~/tamil/india-46680168" width="465" height="526"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @ANI</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@ANI</span> </span> </figure> இந்தப் பின்னணியில் மத்தூர் வட்டத்தில் இரண்டு- மூன்று கொலைகள் நடந்துள்ளன என்றும், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் முதல்வர் குமாரசாமி கூறியதும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் கேட்டது. இந்த விவகாரம் சர்ச்சையானபிறகு இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட குமாரசாமி, "அது போலீஸ் அதிகாரியிடம் இருந்து தகவல்களைக் கோரியபோது வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான எதிர்வினை. அது உத்தரவெல்லாம் இல்லை" என்று தெரிவித்தார். குமாரசாமியின் பேச்சு பொறுப்பற்றது என்றும், அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார். இது குறித்து மாநில பாஜக-வும் ட்வீட் செய்தது. விவசாயிகள் இறந்தபோதோ, அரசு ஊழியர்கள் கொல்லப்பட்டபோதோ, பெருமளவு ஊழல் நிகழ்ந்தபோதோ, வளர்ச்சித் திட்டங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கோ, தலித்துகள் அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டபோதோ எதிர்வினையாற்றாத, எதிர்வினையாற்ற முன்வராத குமாரசாமி தமது கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டபோது மட்டும் உடனே குற்றவாளிகளை சுட்டுத்தள்ளவேண்டும் என்கிறார் என்று அந்த ட்வீட் விமர்சித்தது. புகைப்பட காப்புரிமை @BJP4Karnataka @BJP4Karnataka <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @BJP4Karnataka: Farmers died - No emotionsGovt officials killed - Doesn’t matterMassive Corruption - That’s okNo development programs - I don’t print noteDalits pushed to Slavery - hmmmJDS Karyakartha murdered - Orders cops to immediately shootFor Kumaraswamy all that matters is JDS" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/BJP4Karnataka/status/1077437700460834823~/tamil/india-46680168" width="465" height="470"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @BJP4Karnataka</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@BJP4Karnataka</span> </span> </figure> இந்த ட்வீட் ஓரளவு மிகைப்படுத்தப்பட்டது என்றபோதும், தடாலடியாகப் பேசி சர்ச்சையில் சிக்குவது குமாரசாமிக்குப் புதியதில்லை. கடந்த மாதம் சட்டமன்றம் கூடும் பெலகாவியில் உள்ள சுவர்ண சௌதா வளாகத்தின் வாயிற்கதவுகளை உடைத்துத் திறக்க விவசாயிகள் முயன்றபோது, அது பற்றிப் பேசிய குமாரசாமி "அவர்களை விவசாயிகள் என்றா அழைக்கிறீர்கள்? என் பொறுமைக்கும் எல்லை உண்டு. எனது அரசு விவசாயிகளுக்காக உள்ளது. இவர்களை விவசாயிகள் என்பது விவசாயிகளுக்கு அவமானம்" என்று பேசினார். கடந்த நான்கு ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் கரும்பு பாக்கிப் பணத்தைத் தரவில்லை என்று ஒரு பெண் விவசாயி புகார் செய்ததைக் குறிப்பிட்டுப் பேசிய குமாரசாமி "தாயீ, நான் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் முதல்வரானேன். நான்காண்டுகளாக நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த நான்காண்டுகளும் எங்கே தூங்கிக்கொண்டிருந்தீர்கள்?" என்றார். ஜூலை மாதம் நடந்த மதச்சார்பற்ற ஜனதா தள மாநாட்டில் பேசிய குமாரசாமி தங்கள் சகோதரன் முதல்வரானது கட்சித் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், கூட்டணி ஆட்சியின் விஷத்தை அருந்திய சிவனாகத் தாம் இருப்பதாகவும் அவர் பேசினார். படத்தின் காப்புரிமை Getty Images காங்கிரஸ் இல்லாத இந்தியாவைப் படைக்கப்போவதாக பாஜக அடிக்கடி கூறுவதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, அவரது கட்சிக்கு வெறும் 37 எம்.எல்.ஏ.க்களே இருந்தபோதும் காங்கிரஸ் கட்சி குமாரசாமிக்கு முதல்வர் பதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிய குமாரசாமி, "என்னுடையது சுதந்திரமான அரசாங்கம் அல்ல. மக்களைத் தவிர வேறெவரது அழுத்தத்தையும் ஏற்கக்கூடாது என்பதற்காக, மக்களிடம் எனக்கு வாக்களிக்கும்படி கோரினேன். ஆனால், இப்போது காங்கிரஸ் தயவில் இருக்கிறேன். மாநிலத்தின் 6.5 கோடி மக்களின் நேரடி அழுத்தத்தில் நான் இல்லை" என்ற பொருளில் பேசினார். இந்த அறிக்கை சர்ச்சையானதும், அதற்கு அவர் விளக்கம் அளித்தார். "இன்று எனக்கு மக்களின் ஆசி இல்லாவிட்டாலும், ராகுல்காந்தி என்ற புண்ணியாத்மா என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்" என்று அவர் கூறினார். பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் கடன் தள்ளுபடி கோரிய விவசாயிகள் குறித்து அவர் பேசியது: "கொப்பல் விவசாயிகள் முழு கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோருகிறார்கள். வாக்களிக்கும்போது மட்டும் ஏன் இவர்கள் குமாரசாமிக்கு வாக்களிப்பதில்லை என்று கேட்க விரும்புகிறேன். ஜாதி, பணம் பார்க்காமல் வாக்களித்திருந்தால் உங்களுக்கு முழு கடன் தள்ளுபடி கோரும் உரிமை இருந்திருக்கும்" என்றார் அவர். https://www.bbc.com/tamil/india-46680168

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி

1 month 3 weeks ago
இந்தக் கதையை நான் அறியவில்லை. அனஸ் என்றுதான் தீபத்தில் இருந்தார்!

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

1 month 3 weeks ago
இவர் கூறிய பச்சை இனவாத கருத்துக்களை தமிழ் மக்கள் அறிவர். தமிழ் மக்களை கொல்வதே இவரது நோக்கம். அதனையே செய்து முடித்தார். இப்போ சிங்கள மக்களுக்கு தான் ஒரு கீரோ என காட்ட முயல்கிறார்.

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி

1 month 3 weeks ago
தான் இருக்கும், வேலை மற்றும் சமூக நிலையில் இருந்து தனது பார்வையை செலுத்தியுள்ளார் என தெரிகிறது. இவரது பார்வைக்கு அப்பால், மிக வளர்ச்சி அடைந்த தமிழ் சமூகம் இருப்பது இவருக்கு தெரியவில்லை போலுள்ளது. இலங்கை தமிழ் சமூகம் போல எந்த சமூகமும் மிக குறைந்த காலத்தில், கல்வியில், வேலைவாய்ப்புகளில், வியாபார முயற்சிகளில், அரசியலில் முன்னேறி வரவில்லை என்பதை இவர் அறிந்திருப்பதாக தெரியவில்லை. அருகிவரும், பேசி முடிக்கும் திருமணங்கள் தவிர்த்து தாமே அமைத்துக் கொள்ளும் திருமணங்கள் சாதியவாதம் இல்லாமல் அல்லது புரியாமலே நடப்பதை இவர் புரிந்திருப்பதாக தெரியவில்லை. முதலில் டாக்டரான ஜரிஸ் வெள்ளையர் ஒருவரை டேட்டிங் செய்த டாக்டர் மகள், தாயாரின் தயக்கத்தை பார்த்து..... சில மாதம் கழித்து.... உங்கள் விருப்பப்படி இலங்கையர் ஒருவரை டேட் பண்ணுகிறேன், கலியாணம் செய்கிறேன் என்றார். அவர் சிங்களவர் என்று தாய் தந்தையர் சொன்னபோது, அதனால் என்ன, நாம் ஆங்கிலத்தில் தானே பேசுகிறோம் என்று சொல்லுமளவுக்கு அவர்கள் பார்வை உள்ளது. இந்த சாதீயம் புரியாத புதிய சமுக நிலை இவருக்கு தெரியவில்லை போலுள்ளது.

“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா

1 month 3 weeks ago
பொன்சேகாவுக்கும் பிரபாகரனுக்கும் தனிப்பட்ட பகையோ.. குடும்பப் பகையோ கிடையாது. இருந்தும்.. ஏன் பொன்சேகா.. பிரபாகரனை கொல்ல திட்டமிட்டார்..??! காரணம் ஒன்று தான்.. பிரபாகரன்.. தமிழ் மக்களுக்கான உரிமையை பற்றி உறுதியாக பேசியதாலும்.. கோரி நின்றதாலும். ஆக பிரபாகரனை கொல்ல திட்டமிட்டேன் என்று பகிரங்கமாக சரத் பொன்சேகா சொல்வதன் ஊடாக.. அவர் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் இருந்திருக்கிறார்.. என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. இதன் மூலம்.. இவர் தமிழினப் படுகொலையை திட்டமிட்டே அரங்கேற்றி இருக்கிறார். ஆகவே இவர் ஒரு இனப்படுகொலையாளி என்பது வெளிப்படை உண்மையாகி இருக்கிறது. 😯

காமத் தாழி - சி. சரவணகார்த்திகேயன்

1 month 3 weeks ago
சரி சரி விடம்மா .......இனி நீ சிரித்தால் தீபாவளிதான்.....கார் கீயையும் குடுத்து கட்டியவளுக்கும் கீ குடுத்து அனுப்பிய அத்தான்தான் இனி அழவேண்டும்......! 😉