Aggregator

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
முதலில் அவர் எழுதியது தீர்வு திட்டம் இல்லை ....பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிறைப்படுத்தி. ஆயுதங்களை களையும் திட்டம் அதாவது இவர்களின் தீர்மானங்களின்படி ஆயுதமேந்தி போராட்டம் நடத்த துணிந்து பெற்றோர்களை உடன்பிறப்புகளை விட்டுட்டு வந்தவர்களை கொலை செய்யும் திட்டம்

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
சந்திரிக்கா தோல்வியை தழுவவில்லை புத்தன். 1999 ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார். யாழ்பாணத்தில் கூட கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். 1999 ல் அவரை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்று பயங்கரவாதிகள் என்ற அரசின் பிரச்சாரத்துக்கு எம்மவர் துணை புரிந்தார்கள்.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
இல்லை இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம் அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள். 2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
சுருக்கமான கேள்வி. தீர்வுத்திட்டத்தை தயாரித்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டது சரியானதா? ஆம் / இல்லை ஆம் என்றால் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் நியாயமானவை என்று நீங்கள் வாழும் ஜேர்மன் நாட்டு பத்திரிகையில் எழுதி அதை ஜேர்மன் மக்களால் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா? ஏன் ஜேர்மன் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் நாங்கள் தமிழர்கள் அல்லவா என்று விதண்டாவாமன பதில் வேண்டாம். ஏனெனில் ஒரு நாட்டை அமைப்பதென்றால் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் அதை அமைக்க முடியாது. உங்களை மட்டும் கேட்கவில்லை இங்கு கொலைகளை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டு மக்களை அரசாங்கங்களை அதனை ஏற்றுக் கொள்ள வைக்க முடியுமா? மேலே எத்தனை செயல்கள் கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறவா?

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

1 month 3 weeks ago
புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தீர்வுப்பொதி பற்றிய தகவலுக்கு நன்றி ஐயனே. நீலன் துதி போக, நீங்கள் பொதி தொடர்பில் எழுதியுள்ள கருத்துக்களில் சில தவறுகள் உள்ளன. -------------------------------------------------

கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

1 month 3 weeks ago
இந்த ஆய்வில் - ஆய்வைச் செய்தவர்களே ஒப்புக் கொண்டிருப்பது போல- பல குறைபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பதிவு செய்யப் பட்ட பக்க விளைவுகளை எடுத்து ஒன்றாகக் கூட்டி இந்த 100 மில்லியன் தரவுப் புள்ளிகளை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகளில், மக்களினங்களில் இருக்கக் கூடிய மாறிகள், விகாரங்கள், பழக்க வழக்கங்கள், என்பவற்றால் ஏற்படும் விளைவுகள் எவையும் கணக்கிலெடுக்கப் படவில்லை.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு. இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது! சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன் ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும் நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை ஒரு கிராம சபைக்கு கூட சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் ஈழம். தான் தீர்வு இனி பேசி பயனில்லை’ ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி என்று அறிவிக்க முதல் நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று போராடிக்கொண்டு இருக்கும் போது சீமாட்டி சந்திரிக்கா நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது தீர்வு எழுதுகிறார் யாருக்கு??? ஆயுதமேத்திய ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள் தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை இது அரசியல் மருத்துவம் இல்லை தயவுசெய்து இதை வாசித்து குழப்பமடையவேண்டாம் தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம் இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான்

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தவறுகள்,...பாகம்… 3 1,.. தந்தை செல்வா-பண்டா. ஒப்பந்தம் தமிழருக்குகான. தீர்வு என்பது தவறு காரணம் அமுல் செய்யப்படவில்லை 2,. தந்தை செல்வா - டட்லி ஒப்பந்தம் தமிழர்கள் பிரச்சனைக்கான. தீர்வு என்பது தவறு காரணம் நடைமுக்கு வரவில்லை 3,.ஏடுகளில் எழுதப்படுவாவை எல்லாம் நடைமுறையில் அமுலில் வரதா போது தீர்வு என்று அழைப்பது. தவறு