Aggregator

தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: சீ.வி.கே.

1 month 3 weeks ago
தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: சீ.வி.கே. தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வட.மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் திணைக்களம், மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இவற்றினை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் இன்று (திங்கட்கிழமை) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் வட.மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வன்னி பெருநிலபரப்பில் இடம்பெறுவதால் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. எங்கெங்கே மலைப்பகுதி காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பௌத்த ஆலயங்களை அடாத்தாக அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபுறமும் தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலய பிரதேசங்களை பௌத்த பிரதேசங்களாக மாற்றுவதும் அவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதுமாகவே இத் திணைக்களத்தின் செயற்பாடுகள் உள்ளன. உதாரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலர் பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் பற்றி குறிப்பிடலாம். தமிழ் மக்களின் வரலாறு மற்றும் உணர்வுகள் கணக்கில் எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. எனவே இத் திணைக்களங்களின் இரண்டாம் நிலை உயர் அதிகாரி கட்டாயமாக ஒரு தமிழராக இருப்பது உறுதி செய்யப்படுதல் வேண்டும். தொல்பொருளியல் திணைக்களம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எந்த ஒரு இடத்தையும் தொல்லியல் ஒதுக்கு பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு அல்லது தலையிடுவதற்கு முன்பு அந்தந்த பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் கலாச்சார உத்தியோகத்தர் மூலம் மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரின் ஒத்திசைவை பெற்றுக்கொள்வது அவசியமானது. இவற்றை அரசாங்கத்தின் நிர்வாகப் பணிப்புரைகள் மூலம் நிறைவேற்ற முடியும் என்பதால் அவற்றிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தமிழர்களின்-வரலாற்றைச்-ச/

எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

1 month 3 weeks ago

•எப்படி ஈழத் தமிழினம்
இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.

நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.

கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?

ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.

இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

 

 

 

எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

1 month 3 weeks ago
•எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது? சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம். நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள். ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர். கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது? ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம். இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

சுயாதீனமான நீதித்துறை ; ஜனநாயகத்துக்கான தஞ்சம்

1 month 3 weeks ago
சுயாதீனமான நீதித்துறை ; ஜனநாயகத்துக்கான தஞ்சம் அமீர் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் அவரது கூட்டத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சதிமுயற்சியினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஜனநாயகம் அழிவின் விளிம்பில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் காப்பாற்றப்பட்டது. அமைதியாக ஆனால் தீர்க்கமான முறையில் பொதுமக்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பும் நீதித்துறையின் குறிப்பாக பெருமதிப்புக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சுயாதீனமான செயற்பாடுகளும் சேர்ந்தே அவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாத்தன. நீதித்துறையின் மீதான ஜனாதிபதியின் வெறுப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தரங்குறைத்து அவர் வெளியிட்ட கருத்தின் மூலமாக வெளிவெளியாகத் தெரிந்தது. அதாவது தனக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையிலான தகராறை அவர் கிராமத்து விகாரையொன்றின் பிக்குவுக்கும் சிரேஷ்ட பௌத்த பிக்குவுக்கும் இடையிலான தகராறு போன்று ஒப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.அவரது ஒப்பீடு உச்சபட்ச கண்டனத்துக்குரியதாகும்.சட்டத்தின் கடுஞ்சிக்கல்கள் குறித்து எந்தளவுக்கு அறியாமைகொண்டவராக ஜனாதிபதி இருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. அரசியலமைப்புப் பேரவையை மலினப்படுத்துவதன் மூலமாக ஜனாதிபதி சிறிசேன நீதித்துறை மீதான தனது அவமதிப்பை ஆபத்தான ஒரு மட்டத்துக்குக் கொண்டுசெல்கின்றார். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தன்னால் விதந்துரைக்கப்பட்டவர்களை அங்கீகரிக்குமாறு அரசியலமைப்புப் பேரவையை அவர் நிர்ப்பந்திக்கிறார்.இந்த விடயத்தில் அவர் தற்போதைய அதிகாரப்போட்டியில் தன்னுடன் சேர்ந்து தோல்வி கண்டவரான மகிந்த ராஜபக்சவுடன் கூட்டாகச் செயற்படுகின்றார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. சதி முயற்சிகளின் குகையாக ஜனாதிபதியின் அலுவலகம் மாறிவிட்டதா? தனது விருப்பத்துக்கேற்ற முறையில் மாத்திரமே காரியங்கள் நடக்கவேண்டும் என்றும் தனது செயற்பாடுகளுக்குக் குறுக்கே யாரும் வரக்கூடாது என்று நினைக்கும் ஜனாதிபதி அதறக்கு இசைவாக தனக்கு சர்வாதிகார அதிகாரங்கள் வேண்டும் என்று ஆசைப்படுகின்றார் என்பதுமிகவும் தெளிவானது. அவர் ஜனநாயகத்துடனும் அதன் அரசியலமைப்பு ரீதியான பாதுகாவலருடனும் மோதல்போக்கில் சென்றுகொண்டிருக்கிறார்.சுயாதீனமான நீதித்துறையே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு கடைசிமுடிவான கோட்டையாகும்.ஜனநாயகத்தின் கடைமுடிவான புகலிடமும் நீதித்துறையேயாகும். எனவே ஜே.ஆரின் ' பொல்லாங்கான பிள்ளையான ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவி அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்கப்படும்வரை நாட்டு மக்கள் மெத்தனமாக இருக்கமுடியாது.ஜனநாயகத்துக்கான போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) எடுத்திருக்கும் நிலைப்பாடு சிறிசேனவின் சூழ்ச்சித்தனமான வியூகங்களை எதிர்க்கின்ற சகலரினாலும் ஆதரிக்கப்படவேண்டியதாகும்.ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி பரிவாரங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சகல சிறுபான்மையினங்களினதும் பிரதிநிதிகளும் அந்தப் பணியை நிறைவேற்ற ஜே.வி.பி.யின் பின்னால் அணிதிரளவேண்டும் .நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்தபின்னர் மாத்திரமே நாடு அடுத்த தேர்தல்களுக்குச் செல்லவேண்டும்.இல்லாவிட்டால், பைத்தியக்காரன் ஒருவன் ஜனாதிபதியாக வருவது குறித்து லங்கா சமசமாஜ கட்சியின் காலஞ்செனற தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரா விடுத்திருந்த எச்சரிக்கை சாத்தியமாகக்கூடிய ஆபத்து தொடர்ந்து இருக்கவே செய்யும். ஜனாதிபதியின் முன்னைய செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழுந்தது. நீதித்துறையை மலினப்படுத்துவதற்கு அவர் முன்னெடுக்க எத்தனிக்கின்ற இரண்டாவது வியூகத்தினால் மீண்டும் பொருளாதாரம் கீழ்நோக்கிப்போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.அரசியல் உறுதிப்பாடின்மையை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஜனாதிபதி தொடர்ந்து ஈடுபடுவாரேயானால், பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும்.இலங்கை திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அதனால், அதன் வாய்ப்புகள் நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டில் வௌநாட்டு முதலீட்டாளர்களும் வர்த்தகத்துறையினரும் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதி சிறிசேன மற்றும் அவரது கூட்டுச்சதிகாரர்களின் கீழ் இப்போது எதிர்நோக்கப்படுவதைப் போன்ற இருப்பு அச்சுறுத்தலை ஜனநாயகம் முன்னர் ஒருபோதும் எதிர்நோக்கியதில்லை. ஜனநாயகம் இல்லாமல் போகுமேயானால் பொருளாதாரமும் அதனுடன் சேர்ந்து போய்விடும்.ஜனாதிபதியைப் பதவிநீக்குவதற்கு அரசியல் குற்றப் பிரேரணை கொண்டுவருவது குறித்து ஏற்கெனவே பேச்சுக்கள் கிளம்பியிருந்தன.இன்னொரு பொருளாதார நெருக்கடியை அவர் தோற்றுவிப்பாரேயானால், அரசியல் குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுவதற்கான சாத்தியங்கள் மேலும் பலமாக அதிகரிக்கும். இன்னொரு ஆபத்து குறித்து நாம் முக்கியமாக கவனத்தில் எடுக்கவேண்டியிருக்கிறது.அதாவது நாட்டில் இன்னொரு இனவாத இரத்தக்களரி ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி / ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எதற்கும் துணிந்த அரசியல்வாதிகள் முயற்சிக்கக்கூடும்.ஏற்கெனவே விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை சம்பந்தனும் ஹக்கீமும் அவர்களது சகாக்களும் பணயமாக வைத்திருப்பதாக ராஜபக்ச ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் அபத்தமானது. அவ்வாறு பேசுவதன் மூலமாக மகிந்த ராஜபக்ச கும்பல் தற்போதைய நெருக்கடியை தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்றும் அவர்களின் இந்த தந்திரத்துக்கு விக்கிரமசிங்க அரசாங்கம் பலியாகிக்கிடக்கிறது என்றும் சிங்கள மக்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.சிறுபான்யமயினத்தவர்கள் ராஜபக்சவுக்கு எதிராக திரும்பிய காரணத்தினால்தான் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார் எனபதை எவரும் மறந்துவிடலாகாது. இப்போது கூட அந்தச் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக கடுமையான வன்மத்தை அவர் கொண்டிருக்கிறார். வெற்றியைத் தங்களுக்குக் கொண்டுவரும் என்று ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நம்புவார்களேயானால் இந்த இனவாதத் துருப்புச்சீட்டை அவர்கள் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை. அண்மைய அரசியல் நிகழ்வுப்போக்குகளினால் விரக்திக்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேனவும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தான் ஜனாதிபதியாக வருவதற்கு உதவக்கூடியது என்று கருதுவாரேயானால், இந்த இனவாதப்போக்கை பெரிதும் வரவேற்கக்கூடும்.இத்தகைய கெடுதியான வியூகங்களை அம்பலப்படுத்தவும் தற்போதைய போராட்டம் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் அனுகூலங்களைக் கொண்டுவருவதற்கானதல்ல. மாறாக எதிர்காலத்தில் சர்வாதிகாரியாக மாறக்கூடியவர்களின் கைகளில் தேசம் வீழ்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கானதே என்று மக்கணை நம்பச்செய்யவும் உறுதியான பிரசாரங்களை ஜே.வி.பி.முடுக்கிவிடவேண்டும்.இது விடயத்தில் ஜே.வி.பி.யில் இருக்கக்கூடிய உறுதியானதும் அர்ப்பணிப்புச் சிந்தையுடையதுமான தேசபக்த தலைமைத்துவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்யுமாக இருந்தால் கட்சியின் கடந்த காலம் குறித்து இன்னமும் சிலரால் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டில் ருந்து விடுபட்டுக்கொள்ளமுடியும். http://www.virakesari.lk/article/46901

அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள்

1 month 3 weeks ago
அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பை எவராவது கொண்டிருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களினால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அரசாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. 2015 ஜனவரியில் தனக்கு மக்கள் அளித்த பிரதான ஆணை ராஜபக்ச ஆட்சியை பதவி கவிழ்ப்பதே என்பதை ஜனாதிபதி சிறிசேன முற்றாகவே மறந்துவிட்டார். ஆனால் நான்கு வருடங்கள் கூட முற்றாகக் கடந்துவிடமுன்னரே தந்திரமான வழிவகைகளின் மூலமாக ராஜபக்சவை மீண்டும் பதவியில் அமர்த்த துணிந்துவிட்டார். பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை அறிவித்த ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்தபோது இலங்கையின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.புதிய பிரதமரும் அவரது அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் செயற்படமுடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவு ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் பெரும் அவமானமாக அமைந்தது. கடனைத் திருப்பிச்செலுத்துகின்ற சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்றமுடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு கிரேக்கம் அல்லது ஆர்ஜன்டீனாவின் அந்தஸ்துக்கு சென்றுவிடக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலேயே பதவியில் இருந்துவிலக ராஜபக்ச நிர்ப்பந்திக்கப்பட்டார். கடந்த வாரம் கணக்கு வாக்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்டிருக்காவிட்டால், அரசாங்கத்தின் முழுச்செயற்பாடுகளுமே ஸ்தம்பிதநிலைக்கு வந்திருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு சட்டரீதியான முறையில் சம்பளத்தைக் கொடுக்கமுடியாமல்போயிருக்கும். அத்தியாவசிய சேவைகள் முடங்கிப்போயிருக்கும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஆதரவளித்தால் கூட அவரைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அவருடன் தன்னால் பணியாற்ற முடியாது என்றும் ஆக்ரோஷமாகப் பேசிய ஜனாதிபதி சிறிசேன தான் கூறிய வார்த்தைகளைத் திரும்ப விழுங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவரையே மீண்டும் பிரதமராக நியமித்தார். அந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் நடைமுறைக்கு பொருந்தாதவை என்பதை முன்கூட்டியே ஜனாதிபதி உணர்ந்து நிதானமாகப் பேசப்பழகியிருக்கவேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் தானும் தனது குடும்பத்தினரும் நிலத்தில் 6 அடிக்கு கீழேபோயிருப்போம் என்று உச்சத்தொனியில் அன்று கூறியவர் சிறிசேன. அதே சிறிசேனதான் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருவதற்கு தனக்கு உதவியவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு ராஜபக்சவை நியமித்தார். அரசியல் நெருக்கடியின்போது தங்களுக்கு ஆதரவாகத்திரண்ட மக்கள் தங்கள் மீது விரும்புகிறார்கள் என்றோ அல்லது கடந்த மூன்றரை வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை மெச்சுகிறார்கள் என்றோ விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி ( அல்லது முன்னணி )யும் எந்தவிதமான மருட்சியையும் கொண்டிருக்கக்கூடாது. இவ்வருடம் பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு தெளிவாகக்கூறியிருந்த செய்தியை ஐ.தே.க. விளங்காமல் இருக்கமுடியாது. அந்த தேரதலில் ராஜபக்சாக்களின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மகத்தான வெற்றியே அடுத்த சுற்றுத் தேர்தல்களில் வெற்றிபெறக்கூடிய ' குதிரையாக ' நோக்கப்படுகின்ற மகிந்த ராஜபக்ச மீது பணத்தைக் கட்டுவதற்கு சிறிசேனவைத் தூண்டியது. தவறான சட்டஆலோசனையின் கீழ் ஜனாதிபதி 2020 ஆகஸ்டில் நடத்தவேண்டிய பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே 2019 ஜனவரியில் நடத்தமுடியும் என்று நம்பி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அது தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.இந்த பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட பொது அபிப்பிராயம் ஐ.தே.க.வுக்கு சார்பானதல்ல, ஜனநாயகத்துக்குச் சார்பானது. தங்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தங்களின் இறைமையை அப்பட்டமாக மீறுவதை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஜனாதிபதியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு உடனடியாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிய சிறிசேன இன்னும் ஒரு வருட காலத்திற்குள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக ராஜபக்சவின் உதவியை நாடிநிற்கிறார் என்பது தெளிவானது. பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக கொழும்பில் ஆற்றிய உரையில் மகிந்த ராஜபக்ச தனது எதிர்கால அரசியல் தந்திரோபாயம் எவ்வாறானதாக இருக்கும் எனபதற்கான சமிக்ஞையை தெளிவாகக் காட்டியிருந்தார். ஐ.தே.க.வும் அதன் நேச அணிகளும் தங்களது அதிகார இருப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே தங்கியிருக்கின்றன அவர்கள் தமிழ் கட்சியின் பணயக்கைதிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார். கிராமப்புற பௌத்த சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன ஐ.தே.க.வின் வாக்கு வங்கியுடன் சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவையும் பெற்றதன் காரணத்தினாலேயே தன்னைத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது என்பதையும் நன்கு தெரிந்துகொண்ட ராஜபக்ச இனவாதப் போக்கில் தனது பிரசாரங்களை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத்தெரிகின்றன. அதிகாரத்துக்காக எதையும் அவர்கள் செய்வார்கள். கட்சி மாறுபவர்களின் பாராளுமன்ற ஆசனங்களைப் பறிப்பதன் மூலமாக கட்சித்தாவல்களுக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன. கட்சித்தாவல்களை ஊக்குவிக்கும் கைங்கரியத்தை இரு பிரதான அரசியல் கட்சிகளுமே வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தன.தொடர்ந்தும் அந்த வேலையைச் செய்துகொண்டேயிருக்கின்றன. கடந்த வாரங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கூறப்பட்ட ' விலை 'யைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் மலைத்துப்போனார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய எந்த வழிமுறையையும், கொள்கை கோட்பாடு என்ற எதைப்பற்றியும் கிஞ்சித்தும் அக்கறைப்படாமல் கடைப்பிடிப்பதே இன்றைய அரசியலாகிவிட்டது. தனது கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தரப்புக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேன கூறுகிறார். விக்கிரமசிங்கவுக்கு அல்லது அவரது அரசாங்கத்துக்கு எந்த வழியிலும் உதவுவதில்லை என்று கடுமையான மனநிலையில் சிறிசேன இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் இந்த கடும் நிலைப்பாட்டின் விளைவாகத் தோன்றக்கூடிய முட்டுக்கட்டை நிலையை வெற்றிகொள்வதற்கு பிரதமரும் அரசாங்கமும் வகுக்கக்கூடிய தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே இன்று விடைவேண்டி நிற்கும் முக்கியமான கேள்வி. ( வீகேசரி இணையத்தள உள்நாட்டு அரசியல் ஆய்வுக்களம்) http://www.virakesari.lk/article/46872

அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள்

1 month 3 weeks ago
அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள்  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பை எவராவது கொண்டிருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களினால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அரசாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

       mahinda.jpg

2015 ஜனவரியில் தனக்கு மக்கள் அளித்த பிரதான ஆணை ராஜபக்ச ஆட்சியை பதவி கவிழ்ப்பதே என்பதை ஜனாதிபதி சிறிசேன முற்றாகவே மறந்துவிட்டார். ஆனால் நான்கு வருடங்கள் கூட முற்றாகக் கடந்துவிடமுன்னரே தந்திரமான வழிவகைகளின் மூலமாக ராஜபக்சவை மீண்டும் பதவியில் அமர்த்த துணிந்துவிட்டார். பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை அறிவித்த ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்தபோது இலங்கையின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.புதிய பிரதமரும் அவரது அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் செயற்படமுடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவு ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் பெரும் அவமானமாக அமைந்தது.

 கடனைத் திருப்பிச்செலுத்துகின்ற சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்றமுடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு கிரேக்கம் அல்லது ஆர்ஜன்டீனாவின் அந்தஸ்துக்கு சென்றுவிடக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலேயே பதவியில் இருந்துவிலக ராஜபக்ச நிர்ப்பந்திக்கப்பட்டார். கடந்த வாரம் கணக்கு வாக்கு பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்ட்டிருக்காவிட்டால், அரசாங்கத்தின் முழுச்செயற்பாடுகளுமே ஸ்தம்பிதநிலைக்கு வந்திருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு சட்டரீதியான முறையில் சம்பளத்தைக் கொடுக்கமுடியாமல்போயிருக்கும். அத்தியாவசிய சேவைகள் முடங்கிப்போயிருக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஆதரவளித்தால் கூட அவரைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அவருடன் தன்னால் பணியாற்ற முடியாது என்றும் ஆக்ரோஷமாகப் பேசிய ஜனாதிபதி சிறிசேன தான் கூறிய வார்த்தைகளைத் திரும்ப விழுங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவரையே மீண்டும் பிரதமராக நியமித்தார். அந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் நடைமுறைக்கு பொருந்தாதவை என்பதை முன்கூட்டியே ஜனாதிபதி உணர்ந்து நிதானமாகப் பேசப்பழகியிருக்கவேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் தானும் தனது குடும்பத்தினரும் நிலத்தில் 6 அடிக்கு கீழேபோயிருப்போம் என்று உச்சத்தொனியில் அன்று கூறியவர் சிறிசேன. அதே சிறிசேனதான் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருவதற்கு தனக்கு உதவியவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு ராஜபக்சவை நியமித்தார்.

அரசியல் நெருக்கடியின்போது தங்களுக்கு ஆதரவாகத்திரண்ட மக்கள் தங்கள் மீது விரும்புகிறார்கள் என்றோ அல்லது கடந்த மூன்றரை வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை மெச்சுகிறார்கள் என்றோ விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி ( அல்லது முன்னணி )யும் எந்தவிதமான மருட்சியையும் கொண்டிருக்கக்கூடாது. இவ்வருடம் பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு தெளிவாகக்கூறியிருந்த செய்தியை ஐ.தே.க. விளங்காமல் இருக்கமுடியாது. அந்த தேரதலில் ராஜபக்சாக்களின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மகத்தான வெற்றியே அடுத்த சுற்றுத் தேர்தல்களில் வெற்றிபெறக்கூடிய ' குதிரையாக ' நோக்கப்படுகின்ற மகிந்த ராஜபக்ச மீது பணத்தைக் கட்டுவதற்கு சிறிசேனவைத் தூண்டியது.

தவறான சட்டஆலோசனையின் கீழ் ஜனாதிபதி 2020 ஆகஸ்டில் நடத்தவேண்டிய பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே 2019 ஜனவரியில் நடத்தமுடியும் என்று நம்பி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அது  தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.இந்த பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட பொது அபிப்பிராயம் ஐ.தே.க.வுக்கு சார்பானதல்ல, ஜனநாயகத்துக்குச் சார்பானது. தங்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தங்களின் இறைமையை அப்பட்டமாக மீறுவதை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஜனாதிபதியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு உடனடியாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில்  மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிய சிறிசேன இன்னும் ஒரு வருட காலத்திற்குள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக ராஜபக்சவின் உதவியை நாடிநிற்கிறார் என்பது தெளிவானது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக கொழும்பில் ஆற்றிய உரையில் மகிந்த  ராஜபக்ச தனது எதிர்கால அரசியல் தந்திரோபாயம் எவ்வாறானதாக இருக்கும் எனபதற்கான சமிக்ஞையை தெளிவாகக் காட்டியிருந்தார். ஐ.தே.க.வும் அதன் நேச அணிகளும் தங்களது அதிகார இருப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே தங்கியிருக்கின்றன அவர்கள் தமிழ் கட்சியின் பணயக்கைதிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார். கிராமப்புற பௌத்த சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன ஐ.தே.க.வின் வாக்கு வங்கியுடன்  சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவையும் பெற்றதன் காரணத்தினாலேயே தன்னைத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது என்பதையும் நன்கு தெரிந்துகொண்ட ராஜபக்ச இனவாதப் போக்கில் தனது பிரசாரங்களை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத்தெரிகின்றன. அதிகாரத்துக்காக எதையும் அவர்கள் செய்வார்கள்.

கட்சி மாறுபவர்களின் பாராளுமன்ற ஆசனங்களைப் பறிப்பதன் மூலமாக கட்சித்தாவல்களுக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன. கட்சித்தாவல்களை ஊக்குவிக்கும் கைங்கரியத்தை இரு பிரதான அரசியல் கட்சிகளுமே வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தன.தொடர்ந்தும் அந்த வேலையைச் செய்துகொண்டேயிருக்கின்றன. கடந்த வாரங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கூறப்பட்ட ' விலை 'யைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் மலைத்துப்போனார்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய எந்த வழிமுறையையும், கொள்கை கோட்பாடு என்ற எதைப்பற்றியும் கிஞ்சித்தும் அக்கறைப்படாமல் கடைப்பிடிப்பதே இன்றைய அரசியலாகிவிட்டது. தனது கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தரப்புக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேன கூறுகிறார். விக்கிரமசிங்கவுக்கு அல்லது அவரது அரசாங்கத்துக்கு எந்த வழியிலும் உதவுவதில்லை என்று கடுமையான மனநிலையில் சிறிசேன இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஜனாதிபதியின் இந்த கடும் நிலைப்பாட்டின் விளைவாகத் தோன்றக்கூடிய முட்டுக்கட்டை நிலையை வெற்றிகொள்வதற்கு பிரதமரும் அரசாங்கமும் வகுக்கக்கூடிய தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே இன்று விடைவேண்டி நிற்கும் முக்கியமான கேள்வி.

 ( வீகேசரி இணையத்தள உள்நாட்டு அரசியல் ஆய்வுக்களம்)

 

http://www.virakesari.lk/article/46872

 

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி

1 month 3 weeks ago
ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வலிந்து காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்ளோம். இப்பேரணினை நடத்த அரச சார்பற்ற அமைப்புக்கள், சகல அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள், ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், என எல்லோரும் எம்முடன் இணைந்து நீண்ட காலமாக காணாமல் போன எம் உறவுகளை தொலைத்து விட்டு தேடும் முயற்சிக்கு எல்லோரும் முன் வந்துள்ளோம். எனவே எமது இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்டத்தின் இணைப்பாளர். இன்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களையும், அவர்களுக்கு பக்க பலமாக இணைந்து வலுச்சேர்க்கின்ற உறவுகளையும் சந்தித்திருந்தோம். எமது இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு வருடத்தை நெருங்கவுள்ள நிலையில், வருகின்ற மார்ச் மாதம் ஜெனிவாவிலே மனித உரிமைக்கான 40வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. எங்களது கோரிக்கைகளை அம்மன்றத்திலே எமது தேடலும், எமது உறவுகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்திருந்தோம். மேலும் இலங்கையிலே பல தரப்பட்ட அமைப்புக்களை சந்த்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து மகஜரினை கையளித்திருந்தோம். அப்போது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. எங்களுக்கான தீர்வினை பல முறைகளில் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளின் விடுதலையையும் எங்களுக்கான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார். http://www.virakesari.lk/article/46900

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி

1 month 3 weeks ago
ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி

எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வலிந்து காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார்.

DSC02967.JPG

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்ளோம். இப்பேரணினை நடத்த அரச சார்பற்ற அமைப்புக்கள், சகல அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள், ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், என எல்லோரும் எம்முடன் இணைந்து நீண்ட காலமாக காணாமல் போன எம் உறவுகளை தொலைத்து விட்டு தேடும் முயற்சிக்கு எல்லோரும் முன் வந்துள்ளோம். எனவே எமது இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்டத்தின் இணைப்பாளர்.

இன்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களையும், அவர்களுக்கு பக்க பலமாக இணைந்து வலுச்சேர்க்கின்ற உறவுகளையும் சந்தித்திருந்தோம். எமது இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு வருடத்தை நெருங்கவுள்ள நிலையில், வருகின்ற மார்ச் மாதம் ஜெனிவாவிலே மனித உரிமைக்கான 40வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. எங்களது கோரிக்கைகளை அம்மன்றத்திலே எமது தேடலும், எமது உறவுகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்திருந்தோம். 

snapshot.png

மேலும் இலங்கையிலே பல தரப்பட்ட அமைப்புக்களை சந்த்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து மகஜரினை கையளித்திருந்தோம். அப்போது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. 

எங்களுக்கான தீர்வினை பல முறைகளில் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளின் விடுதலையையும் எங்களுக்கான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் என  தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/46900

 

திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்

1 month 3 weeks ago
116 - + Subscribe to THE HINDU TAMIL YouTube Subscribe கிம் கி டுக் இயக்கிய ஹியூமன், ஸ்பேஸ், டைம் அன்ட் ஹியூமன் திரைப்படத்தில் ஒரு காட்சி Published : 24 Dec 2018 19:25 IST Updated : 24 Dec 2018 19:36 IST இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்று சிலவற்றைத்தான் சொல்லமுடியும். உலகின் பல்வேறு திரைவிழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளை பெற்றால்தான் சிறந்த படமா? ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டால்தான் முக்கிய சினிமாவா என்றெல்லாம் ஆதங்கம் எழுகிறது என்றாலும் உலக சினிமா என்ற வரலாற்றுத் தடத்தில் இடம்பெற்ற தகுதிவாய்ந்த புதிய படங்களைப் பற்றி இங்கு பேசித்தான் ஆக வேண்டும். தவறவிடாதீர் முதலில் புகழ்பற்ற இயக்குநர்களின் சில படங்களைப் பார்ப்போம். கொரிய இயக்குநர் கிம் கி டுக், துருக்கிய இயக்குநர் நுூரே பில்கே செலான், ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹி ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின. கிம் கி டுக், நூரே பில்கே செலான், ஜாபர் பனாஹி கிம் கி டுக் சமீப வருடங்களாக பலகோடி ரசிகர்களை தன்படங்களைப் பற்றி பேசவைத்த தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய புதிய படம் Human, space, time, time and human. அவரது முந்தைய படங்களுக்கே உண்டான புதுமையும் அதிர்ச்சியும்மிக்க ஒரு வினோதமான கதை இதிலும் உண்டு. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்க் கப்பலில் பலதரப்பட்ட மக்கள் உல்லாச சுற்றுலா செல்பவர்களின் பயணம் எவ்வளவு வித்தியாசமாக எதிர்பாராத அனுபவங்கள் உணர்வுகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஒரு நவீன ஓவியம்போல கிம் கி டுக் இப்படத்தில் தீட்டிக்காட்டியுள்ளார். தனது முந்தைய படங்களுக்கு பெருமளவில் விருதுகளை பெற்றதைப்போல் இப் புதிய படம் விருதுகள் எதையும் பெறவில்லையெனறாலும் கிம் கி டுக் படங்களின் மீதான காதல், அனைத்துலக சினிமா ரசிகர்களுக்கும் இன்னும் ஒரு போதையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கும் கிம்கிடுக் விரைவில் ஹாலிவுட் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. நூரி பில்கே செலானின் கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம் டி ஓர் விருது பெற்ற மிகச் சிறந்த இயக்குநர் நூரி பில்கே செலானின் புதிய படம் The wild pear tree. இவருடைய பழைய படங்களான த்ரி மங்கிஸ், ஒன்ஸ் டைம் ஆப் அனடோலியா, விண்டர் ஸ்லிப்ஸ் போன்றவற்றின் மூலம் மிகவும் தனது வித்தியாசமான ரசிகர்களைத் தக்கவைத்துக் கொண்டவர் இவர். The wild pear tree 'தி வொயில்ட் பியர் ட்ரீ' திரைப்படம் பெரிய அளவில் ஏமாற்றம் தரவில்லை என்றே தோன்றுகிறது. இப்படம், எழுத்தாளராக உருவாக வேண்டும் என்று கனவில் இருக்கும் இளைஞனைப் பற்றியது. தனது படைப்பை பதிப்பிக்கத் தேவையான பணத்தைத் திரட்ட கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது தந்தை வைத்துவிட்டுப் போன கடன் பிரச்சினைகள் தொடர்கின்றன. கடன்களை அடைக்க சினான் முயற்சிக்கும் அதே நேரத்தில் தனது விதியும் தனது அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை சினான் உணர்கிறான். மிகச் சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களை அபரிதமான நிலப்பரப்பு காட்சிகளைத் தருவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இப்படத்திலும் காமிரா அழகுக் காட்சிகள் நம் கண்ணைக் கவர்ந்து இதயத்தைத் தொடுகின்றன. கிராண்ட் ப்ரீ, பாம் டி ஓர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது. ஜாபர் பனாஹி உலகத் திரைப்பட பாதையில் ஈரான் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட இடம் மிகமிக முக்கியமானது. உலகின் சிறந்த இயக்குநர்களாகவே திகழும் ஈரானிய திரைப்பட இயக்குநர்களான அப்பாஸ் கியராஸ்டமி, மக்மல்பஃப், தாருஹ் மெஹ்ருஜ், மஜீத் மஜீதி போன்றவர்களின் பாதையில் ஒரு புதிய தடத்தைப் பதித்து வருபவர் இயக்குநர் ஜாபர் பனாஹி. அவர் திரைப்படம் எடுக்க தடை இருப்பதால் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லாதப் படங்களை ஆவணப் படம்போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார். 3 faces பெரும்பாலும் ஒவ்வொரு படத்திலும் அவர் அவராகவே தோன்றுவார். அதில் புனைவுக்கான திரைக்கதை எதுவுமின்றி உண்மைத்தன்மையுடன் காட்சிகள் படமாக்கப்படும். இத்தகைய அவரது பல படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் துரதிஷ்டம் என்னவெனில் அவருக்கு விருதுகள் கிடைத்தால் அதை எந்த நாட்டுக்கும் சென்று அதை பெற முடியாது. அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது. படங்களைத் திரையிடவும் விருதுகள் பெறவும் அவரது பிரதிநிதிகளே செல்கிறார்கள். அத்தகைய ஒரு பாணியில் வெளிவந்திருப்பதுதான் ''த்ரீ ஃபேசஸ்'' திரைப்படம். 3 faces நடிப்பின்மீது ஆர்வம்கொண்டு டெஹ்ரான் நாடகப் பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண்ணை, அவருடைய குடும்பத்தினர் அழைத்துக் கொண்டுபோய் விடுகின்றனர். அந்தப் பெண் உதவி கேட்டு அழும் வீடியோவைப் பார்க்கிறார் பெஹ்னஸ் ஜஃபரி. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநர் ஜாஃபர் பனாஹியுடன் கிளம்புகிறார் பெஹ்னஸ். வடமேற்கிலுள்ள கிராமத்துக்கு காரில் பயணம் செய்து, அந்த இளம்பெண்ணின் மலைக்கிராம மக்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். பழங்கால மரபுகள் இன்னும் கடினமாகிவிட்டன என்பதை அந்தப் பயணத்தின் மூலம் இருவரும் உணர்ந்து கொள்கின்றனர். அண்டால்யா கோல்டன் ஆரஞ்சு திரைவிழாவில் இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் ஜாபர் பனாஹி பெற்றுள்ளார். 4 விருதுகள் 5 பரிந்துரைகளைப் பெற்ற படம் இது. விருதுகளை அள்ளிக்குவித்த 'தி ஹெய்ரெஸஸ்' (The Heiresses) பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் தென்அமெரிக்க கண்டத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது பராகுவே. வரைபடத்தில் பொலிவியாவுக்கும் சிலிக்கும் பொதுவான இடத்தில், அவற்றின் அருகிலேயே தொற்றிக்கொண்டு நிற்கட்டுமா போகட்டுமா என்றிருக்கும் அந்த நாட்டிலிருந்து வந்த ஒரு படம்தான் 'தி ஹெய்ரெஸஸ்' உலகின் பல நாட்டு திரைவிழாக்களுக்கும் சென்று 31 விருதுகளையும் 25 பரிந்துரைகளையும் பெற்று திரும்பியிருக்கிறது. The Heiresses இப்படத்தின் இயக்குர் மெர்செல்லோ மார்டினிஸி லண்டன் பிலிம் ஸ்கூலில் படித்தவர். இவரது படங்கள் நினைவுகள், அடையாளம் மனித உரிமை ஆகியவற்றை கலவையாகக் கொண்டிருக்கும். இப்படமும் குடும்பத்திலிருந்து தனியே பிரிந்திருக்கும் 60 வயதைக் கடந்த இரு பெண்களின் அடையாளச் சிக்கலை அவர்களது நினைவுகளைப் பேசுகிறது. தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார். பல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம். விருதுகள் பெற்றால்தான் முக்கியமான படமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. விருதுகள் பெறாமலேயே நல்ல படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் விருதுகள் பெறும்போதுதான் ஒரு படம் உலகின் கவனத்தை தன்வசம் திருப்புகிறது. அத்தகைய சீரிய உத்திகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடும் சுவாரஸ்யத்தோடும் ஒரு திரைப்படம் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். ''தி ஹெரஸஸ்ஸஸ்'' அந்த இலக்கணத்திற்கு தகுதிவாய்ந்த ஒரு படைப்பே. ஆஸ்கர் போட்டிக்குச் செல்லும் Yomeddine சினிமா உலகின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்போதும் ஒரு படம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. “யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும். பேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர். Yomeddine தனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார். ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச் சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும். எகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது Yomeddine படத்தின் சிறப்பாகும். வாழ்வின் சிடுக்குளையும் வலிகளையும் உள்வாங்கிய மனிதனின் வாழ்க்கையை, காலம் வழங்கிய அருவருப்பான தோற்றத்தை ஏற்று வாழ்க்கையை உலகை ரசித்தபடியே அலாதியாக நடைபோடும் ஒரு மனிதனின் கதையை உள்ளார்ந்த மனித உணர்வுகளோடும் சூழல்அழகோடும் துணிச்சலோடும் சொன்ன படம் என்பதால், திரையிட்ட சர்வதேச திரைவிழாக்கள் எங்கும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் இப்படம் பெற்று வருகிறது. இப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றுள்ளது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது. https://tamil.thehindu.com/cinema/world-cinema/article25819974.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்

1 month 3 weeks ago
  •  
 
humanjpg

கிம் கி டுக் இயக்கிய ஹியூமன், ஸ்பேஸ், டைம் அன்ட் ஹியூமன் திரைப்படத்தில் ஒரு காட்சி

Published : 24 Dec 2018 19:25 IST
Updated : 24 Dec 2018 19:36 IST

இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்று சிலவற்றைத்தான் சொல்லமுடியும்.

உலகின் பல்வேறு திரைவிழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளை பெற்றால்தான் சிறந்த படமா? ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டால்தான் முக்கிய சினிமாவா என்றெல்லாம் ஆதங்கம் எழுகிறது என்றாலும் உலக சினிமா என்ற வரலாற்றுத் தடத்தில் இடம்பெற்ற தகுதிவாய்ந்த புதிய படங்களைப் பற்றி இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.

தவறவிடாதீர்

முதலில் புகழ்பற்ற இயக்குநர்களின் சில படங்களைப் பார்ப்போம். கொரிய இயக்குநர் கிம் கி டுக், துருக்கிய இயக்குநர் நுூரே பில்கே செலான், ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹி ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின.

3-directorsjpg

கிம் கி டுக், நூரே பில்கே செலான், ஜாபர் பனாஹி

 

கிம் கி டுக்

சமீப வருடங்களாக பலகோடி ரசிகர்களை தன்படங்களைப் பற்றி பேசவைத்த தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய புதிய படம் Human, space, time, time and human. அவரது முந்தைய படங்களுக்கே உண்டான புதுமையும் அதிர்ச்சியும்மிக்க ஒரு வினோதமான கதை இதிலும் உண்டு.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்க் கப்பலில் பலதரப்பட்ட மக்கள் உல்லாச சுற்றுலா செல்பவர்களின் பயணம் எவ்வளவு  வித்தியாசமாக எதிர்பாராத அனுபவங்கள் உணர்வுகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஒரு நவீன ஓவியம்போல கிம் கி டுக் இப்படத்தில் தீட்டிக்காட்டியுள்ளார்.

தனது முந்தைய படங்களுக்கு பெருமளவில் விருதுகளை பெற்றதைப்போல் இப் புதிய படம் விருதுகள் எதையும் பெறவில்லையெனறாலும் கிம் கி டுக் படங்களின் மீதான காதல், அனைத்துலக சினிமா ரசிகர்களுக்கும் இன்னும் ஒரு போதையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கும் கிம்கிடுக் விரைவில் ஹாலிவுட் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நூரி பில்கே செலானின்

கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம் டி ஓர் விருது பெற்ற மிகச் சிறந்த இயக்குநர் நூரி பில்கே செலானின் புதிய படம் The wild pear tree. இவருடைய பழைய படங்களான த்ரி மங்கிஸ், ஒன்ஸ் டைம் ஆப் அனடோலியா, விண்டர் ஸ்லிப்ஸ் போன்றவற்றின் மூலம் மிகவும் தனது வித்தியாசமான ரசிகர்களைத் தக்கவைத்துக் கொண்டவர் இவர்.

the-wild-pear-treejpg

The wild pear tree

 

'தி வொயில்ட் பியர் ட்ரீ' திரைப்படம் பெரிய அளவில் ஏமாற்றம் தரவில்லை என்றே தோன்றுகிறது. இப்படம், எழுத்தாளராக உருவாக வேண்டும் என்று கனவில்  இருக்கும் இளைஞனைப் பற்றியது. தனது படைப்பை பதிப்பிக்கத் தேவையான பணத்தைத் திரட்ட கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது தந்தை வைத்துவிட்டுப் போன கடன் பிரச்சினைகள் தொடர்கின்றன.

கடன்களை அடைக்க சினான் முயற்சிக்கும் அதே நேரத்தில் தனது விதியும் தனது அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை சினான் உணர்கிறான்.

மிகச் சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களை அபரிதமான நிலப்பரப்பு காட்சிகளைத் தருவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இப்படத்திலும் காமிரா அழகுக் காட்சிகள் நம் கண்ணைக் கவர்ந்து இதயத்தைத் தொடுகின்றன.

கிராண்ட் ப்ரீ,  பாம் டி ஓர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது.

ஜாபர் பனாஹி

உலகத் திரைப்பட பாதையில் ஈரான் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட இடம் மிகமிக முக்கியமானது.

உலகின் சிறந்த இயக்குநர்களாகவே திகழும் ஈரானிய திரைப்பட இயக்குநர்களான அப்பாஸ் கியராஸ்டமி, மக்மல்பஃப், தாருஹ் மெஹ்ருஜ், மஜீத் மஜீதி போன்றவர்களின் பாதையில் ஒரு புதிய தடத்தைப் பதித்து வருபவர் இயக்குநர் ஜாபர் பனாஹி.

அவர் திரைப்படம் எடுக்க தடை இருப்பதால் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லாதப் படங்களை ஆவணப் படம்போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார்.

faces-threejpg

3 faces

 

பெரும்பாலும் ஒவ்வொரு படத்திலும் அவர் அவராகவே தோன்றுவார். அதில் புனைவுக்கான திரைக்கதை எதுவுமின்றி உண்மைத்தன்மையுடன் காட்சிகள் படமாக்கப்படும். இத்தகைய அவரது பல படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதில் துரதிஷ்டம் என்னவெனில் அவருக்கு விருதுகள் கிடைத்தால் அதை எந்த நாட்டுக்கும் சென்று அதை பெற முடியாது. அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது.

படங்களைத் திரையிடவும் விருதுகள் பெறவும் அவரது பிரதிநிதிகளே செல்கிறார்கள். அத்தகைய ஒரு  பாணியில் வெளிவந்திருப்பதுதான் ''த்ரீ ஃபேசஸ்'' திரைப்படம்.

3 faces

நடிப்பின்மீது ஆர்வம்கொண்டு டெஹ்ரான் நாடகப் பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண்ணை, அவருடைய குடும்பத்தினர் அழைத்துக் கொண்டுபோய்  விடுகின்றனர். அந்தப் பெண் உதவி கேட்டு அழும் வீடியோவைப் பார்க்கிறார் பெஹ்னஸ் ஜஃபரி. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநர் ஜாஃபர் பனாஹியுடன் கிளம்புகிறார் பெஹ்னஸ்.

வடமேற்கிலுள்ள கிராமத்துக்கு காரில் பயணம் செய்து, அந்த இளம்பெண்ணின் மலைக்கிராம மக்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். பழங்கால மரபுகள் இன்னும் கடினமாகிவிட்டன என்பதை அந்தப் பயணத்தின் மூலம் இருவரும் உணர்ந்து கொள்கின்றனர்.

அண்டால்யா கோல்டன் ஆரஞ்சு திரைவிழாவில் இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் ஜாபர் பனாஹி பெற்றுள்ளார். 4 விருதுகள் 5 பரிந்துரைகளைப் பெற்ற படம் இது.

விருதுகளை அள்ளிக்குவித்த 'தி ஹெய்ரெஸஸ்' (The Heiresses)

பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் தென்அமெரிக்க கண்டத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது பராகுவே.

வரைபடத்தில் பொலிவியாவுக்கும் சிலிக்கும் பொதுவான இடத்தில், அவற்றின் அருகிலேயே தொற்றிக்கொண்டு நிற்கட்டுமா போகட்டுமா என்றிருக்கும் அந்த நாட்டிலிருந்து வந்த ஒரு படம்தான் 'தி ஹெய்ரெஸஸ்'

உலகின் பல நாட்டு திரைவிழாக்களுக்கும் சென்று 31 விருதுகளையும் 25 பரிந்துரைகளையும் பெற்று திரும்பியிருக்கிறது.

the-hairesessjpg

The Heiresses

 

இப்படத்தின் இயக்குர் மெர்செல்லோ மார்டினிஸி லண்டன் பிலிம் ஸ்கூலில் படித்தவர். இவரது படங்கள் நினைவுகள், அடையாளம் மனித உரிமை ஆகியவற்றை கலவையாகக் கொண்டிருக்கும்.

இப்படமும் குடும்பத்திலிருந்து தனியே பிரிந்திருக்கும் 60 வயதைக் கடந்த இரு பெண்களின் அடையாளச் சிக்கலை அவர்களது நினைவுகளைப் பேசுகிறது.  தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார்.

பல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம்.

விருதுகள் பெற்றால்தான் முக்கியமான படமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. விருதுகள் பெறாமலேயே நல்ல படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் விருதுகள் பெறும்போதுதான் ஒரு படம் உலகின் கவனத்தை தன்வசம் திருப்புகிறது. அத்தகைய சீரிய உத்திகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடும் சுவாரஸ்யத்தோடும் ஒரு திரைப்படம் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். ''தி ஹெரஸஸ்ஸஸ்'' அந்த இலக்கணத்திற்கு தகுதிவாய்ந்த ஒரு படைப்பே.

ஆஸ்கர் போட்டிக்குச் செல்லும் Yomeddine

சினிமா உலகின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்போதும் ஒரு படம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.

“யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும்.

பேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர்.

yammadinejpg

Yomeddine

 

தனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார். ஒரு கழுதை  பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச்  சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும்.

எகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக  தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது Yomeddine படத்தின் சிறப்பாகும்.

வாழ்வின் சிடுக்குளையும் வலிகளையும் உள்வாங்கிய மனிதனின் வாழ்க்கையை, காலம் வழங்கிய அருவருப்பான தோற்றத்தை ஏற்று வாழ்க்கையை உலகை ரசித்தபடியே அலாதியாக நடைபோடும் ஒரு மனிதனின் கதையை உள்ளார்ந்த மனித உணர்வுகளோடும் சூழல்அழகோடும் துணிச்சலோடும் சொன்ன படம் என்பதால், திரையிட்ட சர்வதேச திரைவிழாக்கள் எங்கும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் இப்படம் பெற்று வருகிறது.

இப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றுள்ளது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது.

https://tamil.thehindu.com/cinema/world-cinema/article25819974.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

கர்ப்பிணிப் பெண்ணின் தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் ; யாழில் சம்பவம்

1 month 3 weeks ago
யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கர்ப்பிணிப் பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற திருடர்கள் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி விட்டு தாலிக்கொடியினை அபகரித்து சென்றுள்ளனர். இதன்போது குறித்த பெண் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அண்மையிலும் மீசாலைப்பகுதியில் நான்கு வழிப்பறிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/46911

கர்ப்பிணிப் பெண்ணின் தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் ; யாழில் சம்பவம்

1 month 3 weeks ago

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது. 

theef.jpg

இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கர்ப்பிணிப் பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற திருடர்கள் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி விட்டு தாலிக்கொடியினை அபகரித்து சென்றுள்ளனர். 

இதன்போது குறித்த பெண் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அண்மையிலும் மீசாலைப்பகுதியில் நான்கு வழிப்பறிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/46911

2018-இல் கண்டுபிடிக்கப்பட்ட 10 புதிய வகை தாவரங்கள்

1 month 3 weeks ago
மனிதன் இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், அனைத்து தாவரங்கள், விலங்குகளை இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தவில்லை. ஆம், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2,000 புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு பிரிட்டனிலுள்ள ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 100 புதிய தாவரங்களை அடையாளம் கண்டுள்ளனர். அதிலுள்ள 10 சிறப்பு பண்புகளை கொண்ட தாவரங்களின் அறிமுகத்தை இங்கு காண்போம். மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பூ படத்தின் காப்புரிமை MT MARTINEZ பொலிவியாவின் மலைப்பகுதியில் மட்டும் காணப்படுகிறது இந்த வகை பிங்க் பூக்கள். நீர்வீழ்ச்சியில் கண்டறியப்பட்ட மூலிகை படத்தின் காப்புரிமை RBG KEW மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியரா லியோன் நாட்டின் நீர் வீழ்ச்சி ஒன்றில், பாறையை பற்றிக்கொண்டிருந்த வித்தியாசமான தாவரத்தை ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த பேராசிரியர் ஐயா லேப்பி கண்டறிந்ததால் இதற்கு லெபீயா கிராண்டிஃப்லோரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்கள் மற்றும் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இந்த தாவரம் இதே நிலை தொடர்ந்த இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய வகை பூச்சிப்பிடிக்கும் தாவரம் படத்தின் காப்புரிமை MARTIN CHEEK, RBG KEW உலகில் ஏற்கனவே 150 வகையான பூச்சி பிடிக்கும் தாவரங்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்தோனீசியாவிலுள்ள வடக்கு கடலோர தீவான பயாக்கில் நெபெந்தெஸ் பயாக் என்னும் புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தாவரம், அந்த தீவிற்கு வரும் சுற்றுலா கப்பல்கள் செயல்பாட்டினால் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பூ புற்றுநோய்க்கு தீர்வாக அமையலாம் படத்தின் காப்புரிமை MARTIN CHEEK காபி தாவரங்களின் குடும்பத்தை சேர்ந்த புதிய தாவரமான கிண்டியா கங்கனை படிவுப்பாறை ஒன்றில் ராயல் தாவரவியல் தோட்ட ஆராய்ச்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளனர். இந்த தாவரத்தை ஆய்வு செய்து பார்த்ததில் புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆர்க்கிட் தாவரம் படத்தின் காப்புரிமை ADUNYADETHLUANGAPHAY லாவோஸ் தலைநகர் வியன்டியனில், காடுகளிலிருந்து சட்டவிரோதமாக திருடப்பட்டு விற்கப்பட்ட தாவரத்தை ஆய்வு செய்தபோது அது முன்னெப்போதும் கண்டறியப்படாத ஒருவகை ஆர்க்கிட் தாவரம் என்பதை கண்டறிந்தனர். பாபியோபிடியம் பாபிலியோ-லாடிகஸ் என்று அச்சுறுத்தலில் உள்ள இந்த புதிய தாவரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சேனைக்கிழங்கு படத்தின் காப்புரிமை GARETH CHITTENDON ராயல் தாவரவியல் தோட்டத்துக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, தென்னாப்பிரிக்காவின் ஆறு இடங்களில் மட்டுமே காணப்படும் ஒரு புதிய வகை சேனைக்கிழங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தவுடன் அதற்கு டயாஸ்கோரியா ஹர்ட்டரி என்று பெயரிட்டுள்ளனர். வியட்நாமில் கண்டெடுக்கப்பட்ட வித்தியாசமான பூ படத்தின் காப்புரிமை SADIE BARBER ஆரஞ்சு நிறத்தில் வித்தியாசமான வடிவத்தில் காணப்படும் புதிய வகை பூ ஒன்று வியட்நாமில் கண்டெடுக்கப்பட்டதுடன் அதற்கு ஓரியோசரீஸ் ட்ரிப்ரசேட்டியாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மரம் படத்தின் காப்புரிமை MARTIN CHEEK பொதுவாக செடிகள், பூக்களே புதிதாக கண்டெடுக்கப்படும் நிலையில் அரிதான நிகழ்வாக மிகப் பெரிய புதிய வகை மரம் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இலையுதிர்காலத்தின்போது பிங்க் நிற பூக்களை உதிர்க்கும் இந்த மரத்திற்கு டால்போட்டில்லா சீக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது. வாசனை மரம் படத்தின் காப்புரிமை THAISVASCONSCELOS3 உணவு மற்றும் அழகுசாதன பொருட்களில் முக்கிய கூட்டுப்பொருளாக பயன்படும் தாவர வகையை சேர்ந்த இதற்கு பிமென்தா பெரிசில்லியே என்று பெயரிடப்பட்டுள்ளது. அழிந்துப்போய்விட்டதா இது? கேமரூன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட வெப்ரிஸ் பாலி என்னும் மரம் வாழிடங்கள் அழிக்கப்படுதலின் காரணமாக அழித்துப்போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. https://www.bbc.com/tamil/science-46666903

தண்ணீரில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த மதுரை இளம் விஞ்ஞானி :

1 month 3 weeks ago
தண்ணீரில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த மதுரை இளம் விஞ்ஞானி :

December 24, 2018

 

Mathurai.png?zoom=3&resize=335%2C232

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ள மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானியான முருகன் என்பவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த மோட்டார் சைக்கிளை இயக்கிக் காட்டி பாராட்டை பெற்றுள்ளார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அதற்கான செயல்விளக்கத்தை வழங்கியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன், மதுரை அரசு ஐடிஐ கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்று வருகிறார்.

சிறிய வயதிலேயே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அவர் தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசல்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளாhர். தண்ணீர் மேல் செலுத்தும் துவிச்சக்கர வண்டியையும் இவர் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

‘தண்ணீர் மோட்டார் வண்டி’ குறித்து முருகன் கூறியதாவது:

இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம். 2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதை சென்னையில் பெற்றேன். அதைத் தொடர்ந்து, ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினேன். சாதாரண பயன்பாடு, மாற்றுத் திறனாளிகள், விவசாயம் என முப்பரிமாணப் பயன்பாட்டுக்காக உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை. என்னிடம் இதுபோல பல செயல் முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று என் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/107625/

 

தண்ணீரில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த மதுரை இளம் விஞ்ஞானி :

1 month 3 weeks ago
தண்ணீரில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த மதுரை இளம் விஞ்ஞானி : December 24, 2018 தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ள மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானியான முருகன் என்பவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த மோட்டார் சைக்கிளை இயக்கிக் காட்டி பாராட்டை பெற்றுள்ளார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அதற்கான செயல்விளக்கத்தை வழங்கியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன், மதுரை அரசு ஐடிஐ கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்று வருகிறார். சிறிய வயதிலேயே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அவர் தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசல்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளாhர். தண்ணீர் மேல் செலுத்தும் துவிச்சக்கர வண்டியையும் இவர் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‘தண்ணீர் மோட்டார் வண்டி’ குறித்து முருகன் கூறியதாவது: இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம். 2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதை சென்னையில் பெற்றேன். அதைத் தொடர்ந்து, ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினேன். சாதாரண பயன்பாடு, மாற்றுத் திறனாளிகள், விவசாயம் என முப்பரிமாணப் பயன்பாட்டுக்காக உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை. என்னிடம் இதுபோல பல செயல் முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று என் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/107625/

இந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

1 month 3 weeks ago
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும் மின்னஞ்சல் இதை பகிர மின்னஞ்சல் ஃபேஸ்புக்கில் இதை பகிர ஃபேஸ்புக்கில் Messenger இதை பகிர Messenger Messenger இதை பகிர Messenger டுவிட்டரில் இதை பகிர டுவிட்டரில் கூகிள்+ல் இதை பகிர கூகிள்+ல் வாட்ஸ்அப் இதை பகிர வாட்ஸ்அப் இந்த இணைப்பை பிரதியெடுக்க https://www.bbc.com/tamil/global-46669404 பகிர்வது பற்றி இந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும் பகிர்தலுக்கான பகுதியை மூடவும் படத்தின் காப்புரிமை NurPhoto இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் எரிமலை வெடிப்புக்கு பிறகு ஏற்பட்ட பேரலைகளின் காரணமாக குறைந்தது 281 பேர் கொல்லப்பட்டனர் . மேலும் 1016 பேர் காயமடைந்தனர். படத்தின் காப்புரிமை SONNY TUMBELAKA ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது. சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையே உள்ள சுந்தா நீரிணையில் இந்த எரிமலை வெடிப்பு தொடர்பாக சார்டர் விமானம் ஒன்று எடுத்த காணொளி பதிவு இந்த பேரிடரின் தாக்கத்தை பதிவு செய்வதாக அமைந்துள்ளது. மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சத்தால் மக்களை கடற்கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்கரை மற்றும் தேசிய பூங்காவுக்கு புகழ்பெற்ற ஜாவாவில் உள்ள பண்டெக்லாங் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். படத்தின் காப்புரிமை Ed Wray சுமத்ராவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில், பேண்ட் குழுவினர் பாடிக்கொண்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்று தாக்குபடியான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. "எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது" என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். படத்தின் காப்புரிமை Anadolu Agency 1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது. பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். 'இரு பெரும் அலைகள்' எரிமலை வெடிப்புகளை படம் எடுக்கும், நார்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆய்ஸ்டன் லண்ட் ஆண்டர்சன் இரு பெரும் அலைகள் உண்டானதாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images "நான் கடற்கரையில் தனியாக இருந்தேன். எரிமலை வெடிப்பை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது இரு பெரும் அலைகள் எழுந்தன. ஆனால், முதல் அலை அவ்வளவு வலிமையானதாக இல்லை. " மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா? இந்தோனீசியாவின் பேரிடர் மேலாண்மை முகமையின் செய்திதொடர்பாளர், "முதலில் அது சுனாமி அல்ல, கடல் கொந்தளிப்பு என்றும் எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டது" என்று தெரிவித்தார். பிறகு நிலநடுக்கம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக அவர் மன்னிப்பு கோரினார். இதற்கிடையில் ஞாயிறன்று தவறுதலாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை, மக்களிடையே பெரும் பலத்த பீதியை ஏற்படுத்தியது. https://www.bbc.com/tamil/global-46669404

இந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

1 month 3 weeks ago
புதிய சுனாமி தாக்கக்கூடும் : அச்சத்தில் இந்தோனீசிய தீவுகள்படத்தின் காப்புரிமை NurPhoto

இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் எரிமலை வெடிப்புக்கு பிறகு ஏற்பட்ட பேரலைகளின் காரணமாக குறைந்தது 281 பேர் கொல்லப்பட்டனர் . மேலும் 1016 பேர் காயமடைந்தனர்.

புதிய சுனாமி தாக்கக்கூடும் : அச்சத்தில் இந்தோனீசிய தீவுகள்படத்தின் காப்புரிமை SONNY TUMBELAKA

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.

சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையே உள்ள சுந்தா நீரிணையில் இந்த எரிமலை வெடிப்பு தொடர்பாக சார்டர் விமானம் ஒன்று எடுத்த காணொளி பதிவு இந்த பேரிடரின் தாக்கத்தை பதிவு செய்வதாக அமைந்துள்ளது.

மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சத்தால் மக்களை கடற்கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை மற்றும் தேசிய பூங்காவுக்கு புகழ்பெற்ற ஜாவாவில் உள்ள பண்டெக்லாங் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

புதிய சுனாமி தாக்கக்கூடும் : அச்சத்தில் இந்தோனீசிய தீவுகள்படத்தின் காப்புரிமை Ed Wray

சுமத்ராவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில், பேண்ட் குழுவினர் பாடிக்கொண்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்று தாக்குபடியான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

"எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது" என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

புதிய சுனாமி தாக்கக்கூடும் : அச்சத்தில் இந்தோனீசிய தீவுகள்படத்தின் காப்புரிமை Anadolu Agency

1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

'இரு பெரும் அலைகள்'

எரிமலை வெடிப்புகளை படம் எடுக்கும், நார்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆய்ஸ்டன் லண்ட் ஆண்டர்சன் இரு பெரும் அலைகள் உண்டானதாகக் கூறுகிறார்.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமை Getty Images

"நான் கடற்கரையில் தனியாக இருந்தேன். எரிமலை வெடிப்பை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது இரு பெரும் அலைகள் எழுந்தன. ஆனால், முதல் அலை அவ்வளவு வலிமையானதாக இல்லை. "

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

இந்தோனீசியாவின் பேரிடர் மேலாண்மை முகமையின் செய்திதொடர்பாளர், "முதலில் அது சுனாமி அல்ல, கடல் கொந்தளிப்பு என்றும் எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டது" என்று தெரிவித்தார்.

பிறகு நிலநடுக்கம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக அவர் மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையில் ஞாயிறன்று தவறுதலாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை, மக்களிடையே பெரும் பலத்த பீதியை ஏற்படுத்தியது.

https://www.bbc.com/tamil/global-46669404

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு.

1 month 3 weeks ago
தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு..

December 24, 2018

sulthan.jpg?zoom=3&resize=335%2C191

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கின்றது

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17-ம் திகதி முதல் கோவை, திருப்பூர், திண்டுக்கல் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகள் தூக்கு போட்டு போராட்டம், ஒப்பாரி போராட்டம், கருப்பு துணி கட்டி போராட்டம் என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

7-வது நாளான நேற்று முதல் விவசாயிகள் சுல்தான்பேட்டை உள்பட அனைத்து காத்திருப்பு போராட்ட மையங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/2018/107657/

 

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு.

1 month 3 weeks ago
தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. December 24, 2018 தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கின்றது தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17-ம் திகதி முதல் கோவை, திருப்பூர், திண்டுக்கல் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் தூக்கு போட்டு போராட்டம், ஒப்பாரி போராட்டம், கருப்பு துணி கட்டி போராட்டம் என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 7-வது நாளான நேற்று முதல் விவசாயிகள் சுல்தான்பேட்டை உள்பட அனைத்து காத்திருப்பு போராட்ட மையங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/2018/107657/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன

1 month 3 weeks ago
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன
December 24, 2018

thoothukudi.jpg?zoom=3&resize=335%2C242

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், பின்னால் இருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பதாகவும் அவர்களது பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ரொய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே 22ஆம் திகதியன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட பேரணியின் போது வன்முறையை தூண்டியதாக கூறி காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் பரிசோதனையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் நேற்றையதினம் வெளியிட்ட செய்தியில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின்போது, 17 வயதான ஸ்னோலின் என்ற சிறுமியின் பின்பக்கத் தலை வழியாகக் குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியேறியுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் எட்டு பேரின் உடலில், பின்புறமாகத் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. 40 வயதான ஜான்சி என்ற பெண், கடற்கரை அருகேயுள்ள தனது வீட்டில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் சுடப்பட்டுக் கிடந்தார். அவரது காதில் குண்டு பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து, ஊடகத்தினரின் கேள்விகளுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ, மாநில காவல் துறையோ இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2018/107628/