Aggregator
யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்
12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்
12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்
ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள்
ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள்
விடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்
விடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்
குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள்
குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள்
குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள்
-
2 மணி நேரங்களுக்கு முன்னர்

விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள குழந்தை, டூரின் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆதரவின்றி கைவிடப்பட்டுள்ளது என்று இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தடிமனான தோலுடன் பிறந்த ஜியோவானினோ என்ற ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதமாகியுள்ள நிலையில், இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைக்கு தோல் தடிமனாகவும், உலர்ந்த நிலையிலும் இருப்பது மரபணு பாதிப்பால் ஏற்படும் பிரச்சனையாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் இந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து செவிலியர்கள் கவனித்து வருகின்றனர். ஆனால் சில வாரங்களில் மருத்துவமனையில் இருந்து குழந்தையை அனுப்பியாக வேண்டும்.
குழந்தையின் பெற்றோரை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை அல்லது குழந்தையை எடுத்துச் செல்ல அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
- குழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்
- தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?
''காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. குழந்தை கைவிடப்பட்டுள்ளது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது,'' என்று சான்ட் அன்னா மருத்துவமனையில் இந்தக் குழந்தையைக் கவனித்து வரும் செவிலியர்களில் ஒருவர் கூறினார் என்று இத்தாலியின் லா ஸ்டாம்ப்பா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை.
உள்ளூர் அதிகாரிகள் இந்தச் சூழ்நிலை பற்றி அறிந்துள்ளனர். பெற்றோர்களின் எண்ணத்தை அறிவதற்காக, அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குழந்தையை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் குழந்தைக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பிறந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜியோவானினோ வைக்கப்பட்டுள்ளார். தோல் உலர்ந்து போகாமலும், வெடிப்பு ஏற்படாமலும் தடுப்பதற்காக, சூரிய வெளிச்சம் படாமல் குழந்தையை வைத்து, தினமும் பல முறை ஈரப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
''அழகான அந்தக் குழந்தை சிரிக்கிறது. வார்டில் சுற்றிலும் எடுத்துச் செல்வதை விரும்புகிறது,'' என்று லா ரிபப்ளிக்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சிகிச்சைப் பிரிவின் தலைமை அதிகாரி டேனியல் பாரினா கூறியுள்ளார். ''இசை கேட்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் குழந்தை மகிழ்ச்சி அடைகிறது,'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் குழந்தையைப் பற்றிய செய்தி புதன்கிழமை வெளியான சில மணிநேரங்களில், நிறையப் பேர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு, தத்தெடுத்துக் கொள்ள முன்வந்தனர். தங்கள் வீட்டுக்கு வரவேற்க எந்த அளவுக்கு ஆயத்தமாக இருக்கிறோம் என்று சிலர் உருக்கமான கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
அனைத்துக் கோரிக்கைகளையும் தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அந்தக் குழந்தையை வளர்ப்பதில் எந்த அளவுக்கு தனித்துவமான கவனத்தை அவர்களால் தர முடியும் என ஆய்வு செய்வதாகவும் வடக்கு இத்தாலியில் உள்ள டூரின் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நோயைப் பற்றி...
பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு harlequin ichthyosis என்ற இந்த பாதிப்பு ஏற்படும். மரபணு கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
தோலின் பழைய செல்கள் உதிர்வதற்கு அதிக அவகாசம் எடுத்துக் கொள்வது அல்லது புதிய செல்கள் குறுகிய அவகாசத்தில் உருவாதல் காரணமாக பல அடுக்குகள் உருவாகி, தோல் தடிமனாகிவிடுகிறது.
தோலில் செதில் போன்ற அடுக்குகள் உருவாகி, விரிசல்கள் உருவாகும். முகத்தோற்றத்தை இது பாதிக்கும். கைகள், கால்களை அசைக்கும்போது அசௌகரியம் ஏற்படும்.
நோய்த் தொற்று பிரச்சனையைத் தடுப்பதிலும் சிக்கல் உருவாகும். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் பிறப்பின்போதோ அல்லது, பிறந்த முதல் ஓராண்டுக்குள்ளோ தோன்றும்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில்
-
4 மணி நேரங்களுக்கு முன்னர்

நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பார்த்ததாகவும், அதற்கு பின்னர் அதை கோட்டாபய ராஜபக்ஷவிடமே பார்ப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் சஜித் பிரேமதாஸ ஆகிய முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக காரணத்தை தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை முன்னதாகவே அறிவித்திருந்த பின்னணியில், தமிழர்களின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கு 10 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே தமது நிலைப்பாட்டை வெளியிட்டது.
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.
தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்தது.
குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலுக்காக 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதான இரண்டு வேட்பாளர்களிடம்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ ஆகியோர்தான் இந்த இரண்டு முக்கிய வேட்பாளர்கள்.
இந்த நிலையில், பெரும்பாலான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன.
குறிப்பாக, தமிழர்களின் பிரதான கட்சியாக திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன.
இந்த நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நிபந்தனையுடனான ஆதரவை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேஷன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பலரும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவை தெரிவிக்கின்றனர்.
சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க காரணம்?
பிரதான வேட்பாளர்கள் இருவரும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளின்படி, சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதென புளோட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கின்றார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரை சூழவுள்ள தரப்பினரை தம்மால் நம்ப முடியாத நிலைமையும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவிற்கே முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கன் சித்தார்த்தன் கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரிடம் நிபந்தனை அல்லது உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குகின்றமை போலியான விடயம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.
மாறாக, தாம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியாக ஒருவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிபந்தனைகள் அல்லது உடன்படிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தியே தாம் தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தமது கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுடனான ஜனநாயக போராளிகள் கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது என்று அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி நிலைமை நீடிக்கவும், சர்வதேசத்துடன் இணைந்து செயற்படக்கூடியதுமான ஆளுமை சஜித் பிரேமதாஸவிற்கு மாத்திரமே காணப்படுவதாக க.துளசி தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்முஸ்லிம்களின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சஜித் பிரேமதாஸவிற்கே ஆதரவை வழங்குகின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக இந்த இரண்டு கட்சிகளும் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க காரணம்?
இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, தாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளான சம்பளம், கல்வி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சாதகமான பதிலொன்றை பெற்றுக் கொடுத்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வல்லமை கோட்டாபய ராஜபக்ஷவிடமே காணப்படுவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு அதிகளவிலான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த முறை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கும் வரும் பட்சத்தில், தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதற்கு தானே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழர்களுக்காக தீர்வை வழங்கக்கூடிய ஒரே வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே எனவும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
மலையக தேசிய முன்னணியின் நிலைப்பாடு
நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அவதானித்ததாகவும், அதன் பின்னர் நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடமே அவதானிப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவிக்கின்றார்.
அத்துடன், சர்வதேச நாடுகளுக்கு இணையாக நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவங்கள் இல்லாமையினால், நிர்வாக அதிகாரி என்ற விதத்தில் புதிய சிந்தனைகளுடனும், பாரம்பரிய அரசியல் முறைமைக்கு அப்பாற் சென்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான இயலுமை அவரிடமே காணப்படுவதாக ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிடுகின்றார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு
இலங்கையின் பாதுகாப்பு தற்போது அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகர்ந்துக்கொண்டுள்ளதாகவும், அதனை பாதுகாக்கும் இயலுமை கோட்டாபய ராஜபக்ஷ வசம் காணப்படுவதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் நாடு பின்நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை மீள கட்டியெழுப்புவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இயலுமை உள்ளதாகவும் கருணா அம்மான் பிபிசி தமிழிடம் கூறினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரசாரம் செய்து வருகின்றது.
பௌத்த மயமாக்கல், சமஷ்டிக்கு (கூட்டாட்சி) இணக்கம் தெரிவிக்காமை உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தியே தாம் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்ததாக தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.
இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ள பின்னணியில், தாம் எவரையும் ஆதரிக்க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை தொடருமானால், தமிழர் தேசம் அழிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அதற்கு தாம் ஒப்புதல் வழங்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.
https://www.bbc.com/tamil/sri-lanka-50384521
தேர்தல் வந்ததும் போதும்.....
இன்னும் என்னவெல்லாம் சொல்லுவாங்களோ!