Aggregator

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
இணையத்திலிருந்து ஆதாரம் எதுவும் இணைக்கவில்லை, ஆனால் வேறு உறவுகள் இணைத்துள்ளார்கள், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் என கருதுகிறேன். எனது கல்வித்தரத்தினை குறிப்பிட விரும்பாத கல்வி தரத்தினை கொண்ட என்னை ஒரு கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருடன் ஒப்பிட்டு யாழ் களத்தினை சிக்கலில் மாட்டி விடாதீர்கள். சாதாரண சம்பாசனைகளை கடந்து சாதாரணமாக கடந்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வக்காலத்து வாங்குகிறோம் என முட்டாப்பீசுகள் நினைத்துக்கொண்டு போராளிகளை நாறடிக்கிறாங்கள். ☹️

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

1 month 3 weeks ago
காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - மூன்றாவது தடவையாக வீட்டோ பயன்படுத்தியது அமெரிக்கா Published By: RAJEEBAN 21 FEB, 2024 | 11:36 AM காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் உடனடியுத்தநிறுதத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மூன்றாவது தடவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உடனடி யுத்தநிறுத்தம் பணயக்கைகதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. அல்ஜீரியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மாத்திரமே வாக்களித்துள்ளது - பிரிட்டன் வாக்களிப்பை தவிர்த்துள்ள அதேவேளை 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்காவின் நேசநாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவையே பிரதானமான விடயம் என இந்த நாடுகள் தெரிவித்;துள்ளன. 30,000த்திற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 2மில்லியன் மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ள வேளையில் உடனடி யுத்தநிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக பரந்துபட்ட கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலஸ்தீனியர்களிள் வாழ்வதற்கான உரிமைக்கு இந்த நகல் தீர்மானத்தை ஆதரிப்பது முக்கியம் என ஐநாவிற்கான அல்ஜீரிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது பாலஸ்தீன மக்கள் மீது சுமத்தப்பட்ட கொடுரமான வன்முறைக்கு கூட்டுதண்டனைக்கு ஒப்புதல் அளிப்பதாகும் எனவும் அல்ஜீரியா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176930

வாக்னர்: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் தங்கம், யுரேனியம் சுரங்கங்களை கைப்பற்றி என்ன செய்கிறது?

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிடைத்த ரஷ்ய அரசாங்க ஆவணங்கள் விவரிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூனில் ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ’வாக்னர்’ கூலிப்படையின் வணிகங்களை ரஷ்ய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் இது. `வாக்னர்` குழுவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நடவடிக்கைகள், தற்போது `ரஷ்யன் எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்` எனும் பெயரில் செயல்படுகின்றன. பிரிட்டன் தெருக்களில் நோவிசோக் எனும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி செர்ஜேய் ஸ்க்ரிபாலைக் கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைவழிப் போர் நிபுணரும் இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக் வாட்லிங் கூறுகையில், "இது ரஷ்ய அரசு அதன் ஆப்பிரிக்கக் கொள்கையின் நிழலில் இருந்து வெளிப்படுவதைக் காட்டுகிறது" என்றார். ஜூன் 2023-ல், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அநேகமாக உலகில் மிகவும் அஞ்சப்படும் பிரபலமான கூலிப்படை தலைவராக இருந்திருக்கலாம். அவரது வாக்னர் குழு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதேநேரத்தில், அக்குழுவின் போராளிகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மையமாக இருந்தனர். பின்னர், அவர் மாஸ்கோவில் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார் பிரிகோஜின். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் தலைவரை அகற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதுவரை யாரும் தராத அச்சுறுத்தல் அது. சில வாரங்களுக்குள் அவர் மிகவும் சந்தேகத்திற்கிடமான விமான விபத்தில் இறந்தார். வாக்னர் குழுவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அந்த நேரத்தில் பரவலான ஊகங்கள் இருந்தன. இப்போது, அதற்கு பதில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டம் என்ன? டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, "ப்ரிகோஜினின் கலகத்திற்குப் பிறகு கிரெம்ளினில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் வாக்னரின் ஆப்பிரிக்க நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-ன் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வரும் என்று முடிவு செய்யப்பட்டது" என்றார். யூனிட் 29155-ன் தலைவரான ஜெனரல் ஆண்ட்ரே அவெரியனோவிடம், 'குறிவைக்கப்பட்ட கொலைகள்' மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ரகசிய நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஜெனரல் அவெரியனோவின் புதிய பணி, அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதாக இல்லை. மாறாக, தங்களுக்குப் பணம் செலுத்தும் வரை ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் அரசைப் பாதுகாப்பதாகத் தெரிய வருகிறது. செப்டம்பர் தொடக்கத்தில், துணை பாதுகாப்பு அமைச்சர் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் உடன், ஜெனரல் அவெரியனோவ் ஆப்பிரிக்காவில் முன்பு நடந்த வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் லிபியாவில் போர்த் தளபதி ஜெனரல் கலீஃபா ஹஃப்தாரை சந்தித்தனர். அடுத்ததாக புர்கினா ஃபாசோவில் 35 வயதான தலைவர் இப்ராஹிம் ட்ரேரே அவர்களை வரவேற்றார். அதன் பிறகு, அவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு சென்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட வாக்னர் நடவடிக்கைகள் அங்குதான் செயல்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர், மாலிக்கு சென்று அங்குள்ள ராணுவ ஆட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள இந்த பேனரில், `ரஷ்யா வாக்னர், நாங்கள் ரஷ்யாவை நேசிக்கிறோம், வாக்னரை நேசிக்கிறோம்` என எழுதப்பட்டுள்ளது. இன்னும் ஆழமான நடவடிக்கைகள் அடுத்த பயணத்தில், கடந்த ஆண்டு நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ வீரர்களில் ஒருவரான ஜெனரல் சாலிஃபோ மோடியையும் அவர்கள் சந்தித்தனர். ப்ரிகோஜினின் மறைவு அவரது வணிக ஒப்பந்தங்களின் முடிவைக் குறிக்கவில்லை என்று, வாக்னரின் கூட்டாளிகளுக்கு இருவரும் உறுதியளித்தனர் என்பதை பல்வேறு சந்திப்புகள் நிரூபிக்கின்றன. புர்கினா ஃபாசோவின் தலைவர் இப்ராஹிம் ட்ரேரே உடனான சந்திப்பு பற்றிய அறிக்கைகள், "விமானிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் ராணுவ பயிற்சிக்கான" ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது. சுருக்கமாக, ப்ரிகோஜினின் மரணம் ரஷ்யாவுடனான ராணுவ ஆட்சிக்குழுவின் உறவின் முடிவைக் குறிக்கவில்லை. சில வழிகளில், அது இன்னும் ஆழமாகியுள்ளது. வாக்னருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர் மற்றும் புர்கினா ஃபாசோ, அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக்குள் சென்றன. பின்னர் அவர்கள் பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் (Ecowas) எனப்படும் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலிருந்து விலகுவதாகவும் தங்களுக்கென சொந்தமாக "சஹேல் நாடுகளின் கூட்டணியை" உருவாக்குவதாகவும் அறிவித்தன. கூலிப்படையினருடன் மிகவும் பின்னிப்பிணைந்த மாலிக்கு, முன்னதாக, பிரெஞ்சு ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையுடன் மினுஸ்மா எனப்படும் ஐ.நா. திட்டத்தின் வடிவத்தில் பாதுகாப்பு உதவி வந்தது. ஆனால் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மீது மாலி ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, ரஷ்ய ஆதரவுடன் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற வாக்னர் குழு முன்வந்தபோது, அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ’ஆம்பர் அட்வைசர்ஸ்’-க்காக பணிபுரியும் ஆப்பிரிக்க அரசியல் குறித்த ஆய்வாளர் எட்விஜ் சோர்கோ-டெபக்னே கூறுகையில், "பிரெஞ்சுக்காரர்கள் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக் கொள்ளப்பட்டனர்” என்றார். "சஹேலில் பயங்கரவாத நெருக்கடிக்கு உதவுவதற்கான பிரெஞ்சு திட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டது. எனவே, நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலம், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பது பயன்படவில்லை" என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு, எவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் நினைவாக இந்த மலர்கள் CAR-ல் உள்ள ரஷ்ய கூலிப்படையினரின் நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் மாலியில் நடைமுறைக்கு அப்பால், ஏக்கமும் இருந்தது. "இந்த நாடுகளில், ரஷ்யா ஒரு புதிய கூட்டாளி அல்ல. முன்பு 1970 மற்றும் 1980களில் இங்கு இருந்திருக்கிறது" என்கிறார் அவர். "இது பெரும்பாலும் ரஷ்யாவுடனான உறவுடன் தொடர்புடையது” என எட்விஜ் சோர்கோ கூறுகிறார். ஆனால், இந்த நாடுகளை இயக்கும் ராணுவ ஆட்சிக்குழுக்களுக்கு, ரஷ்யாவின் ராணுவ பரவல் வெளிப்படையான நன்மைகள் இருக்கின்றன. "ஆரம்பத்தில், இந்த ஆட்சியாளர்கள் இடைநிலைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தேர்தல்களை ஒழுங்கமைத்து ஜனநாயக நடைமுறைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் அவர். "ஆனால், இப்போது ரஷ்யக் கூலிப்படைகள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் விரும்பும் வரை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர்." பிரெஞ்சுப் படைகளை வெளியேறுமாறு மாலி ராணுவ ஆட்சிக் குழு உத்தரவிட்டது. இப்போது அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வாக்னரைச் சார்ந்துள்ளது. இது சாதாரண மாலியர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. "ரஷ்யா மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களுடன் கூடிய அதிரடிப் படையை வழங்கியது" என்கிறார் டாக்டர் வாட்லிங். "அவர்கள் பாரம்பரிய சோவியத் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். போராளிகளையும், போராளிகளுடன் தொடர்புடைய பொதுமக்களையும் தூக்கிலிடப்படுவதை நீங்கள் காணலாம்" என்கிறார் அவர். ஆப்பிரிக்க கண்டத்திலும், யுக்ரேன் மற்றும் சிரியாவிலும் வாக்னர் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக பல கூற்றுகள் உள்ளன. மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, மத்திய மாலி நகரமான மௌராவில் நடந்தது. ஐ.நா அறிக்கையின்படி, குறைந்தது 500 பேர் மாலி துருப்புக்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. "தெரியாத மொழி" பேசிய "ஆயுதமேந்திய வெள்ளையர்களால்" இவை நிகழ்த்தப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்”. இதற்கு சுயாதீன சரிபார்ப்பு சாத்தியமில்லை என்றாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறியப்படாத தாக்குதல்காரர்களை ரஷ்ய கூலிப்படையினர் என்று அடையாளம் கண்டுள்ளது. பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு, நூறு ரஷ்ய ராணுவ வல்லுநர்கள் கடந்த மாதம் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் புர்கினா ஃபாசோவிற்கு வந்தனர், மேலும் பலர் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வளங்களின் மூலம் வருவாய் மாலி, பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மரம் மற்றும் தங்கம் முதல் யுரேனியம் மற்றும் லித்தியம் வரையிலான இயற்கை வளங்கள் நிறைந்தது. சில மதிப்புமிக்கவை. மற்றவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை. டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, வாக்னர் கூலிப்படை நன்கு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தில் இயங்குகிறது: "ஒரு நிலையான ரஷ்ய செயல் முறை உள்ளது. செயல்பாட்டுக்கான செலவுகளை வணிக நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்வது. ஆப்பிரிக்காவில், அவை சுரங்கங்களால் ஈடுசெய்யப்படுகின்றன” என்றார். வாக்னர் குழு செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும், மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செலவுகளை மட்டும் ஈடுசெய்யாமல், கணிசமான வருவாயையும் ஈட்டுவதாக தெரிகிறது. பிளட் கோல்ட் ரிப்போர்ட்டின் படி, (Blood Gold Report) ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்துள்ளது, இது யுக்ரேனில் நடந்த போருக்கு நிதியளித்திருக்கலாம். இந்த மாதம், முன்பு வாக்னர் கூலிப்படையினராக இருந்த ரஷ்ய போராளிகள், புர்கினா ஃபாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள மாலியின் இன்டஹாகா தங்கச் சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். வடக்கு மாலியின் மிகப்பெரிய சுரங்கம், இப்பகுதியில் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளானது. ஆனால், புவிசார் அரசியல் முக்கியத்துவத்துடன் வேறு ஒன்று உள்ளது. "முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் மீதான மேற்கத்திய கட்டுப்பாட்டை யுக்தி ரீதியாக இடமாற்றம் செய்ய ரஷ்யர்கள் முயற்சிப்பதை நாங்கள் இப்போது கவனித்து வருகிறோம்" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். மாலியில், இயற்கை வளங்கள் மீது ராணுவ ஆட்சிக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக சுரங்கக் குறியீடு சமீபத்தில் மீண்டும் எழுதப்பட்டது. அந்த செயல்முறை ஏற்கனவே ஒரு ஆஸ்திரேலிய லித்தியம் சுரங்கம், குறியீட்டை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, அதன் பங்குகளின் வர்த்தகத்தை இடைநிறுத்தியுள்ளது. லித்தியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் முக்கியமானவை என்றாலும், டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, இன்னும் பெரிய மூலோபாய தலைவலி இருக்கலாம் என்கிறார் அவர். "நைஜரில் ரஷ்யர்கள் இதேபோன்ற சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றனர். இது யுரேனியம் சுரங்கங்களை பிரான்ஸ் பயன்படுத்துவதை தடுக்கும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மாலி நாட்டில் பலர் தங்க சுரங்கம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். "தீவிர அச்சுறுத்தல்" மாலியில் செய்யப்பட்டதை நைஜரில் அடைய முயற்சி செய்வதில் கவனம் செலுத்திய ரஷ்ய குறிப்புகளை இந்த அறிக்கை விவரிக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் யுரேனிய சுரங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை ரஷ்யா பெற முடிந்தால், ஐரோப்பா மீண்டும் ரஷ்ய "எனர்ஜி பிளாக்மெயில்" என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தலாம்" என்றார். உலகின் மற்ற எந்த நாட்டையும் விட பிரான்ஸ் அணுசக்தியை அதிகம் சார்ந்துள்ளது, 56 உலைகள் நாட்டின் ஆற்றலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. அதன் ஐந்தில் ஒரு பங்கு யுரேனியம் நைஜரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நைஜர் போன்ற நாடுகளை முன்னாள் காலனித்துவ சக்தி சுரண்டுகிறது என்ற கருத்துகளுடன், வர்த்தக விதிமுறைகள் குறித்து முன்பு புகார்கள் வந்துள்ளன. "மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறை அடிப்படையில் காலனித்துவமாக இருக்கின்றன என்ற கருத்தை ரஷ்யா முன்வைக்கிறது" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். "இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இந்த ஆட்சிகளைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பது போன்ற ரஷ்ய அணுகுமுறை தான் மிகவும் காலனித்துவமானது" என்றார். உண்மையில், "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" என்பது ரஷ்ய வெளியுறவுக் கொள்கைக்கான தீவிரமான புறப்பாட்டைக் காட்டிலும் "வாக்னர் 2.0" என்பது போலவே தோன்றுகிறது. ப்ரிகோஜின் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை உருவாக்கினார். எனவே, இந்த சிக்கலான வலையை அகற்றுவது கடினமாக இருக்கும். "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" அதே நாடுகளில், அதே கருவிகளுடன் அதே இறுதி இலக்குடன் செயல்படுகிறது. டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, அடிப்படை மாற்றம் "ரஷ்யா தனது கொள்கையைப் பின்பற்றும் வெளிப்படையான தன்மையில்" உள்ளது. ப்ரிகோஜினின் வாக்னர் குழுமம் எப்போதும் ரஷ்யாவிற்கு செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் செல்வாக்கு ஆகியவற்றில் நம்பத்தகுந்த உதவியை வழங்கியது. யுக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் ரஷ்யாவின் முகமூடி நழுவிவிட்டதாகக் கூறுகிறார்கள். "அவர்கள் செய்ய விரும்புவது சர்வதேச அளவில் நமது நெருக்கடிகளை அதிகப்படுத்துவதாகும். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தீயை மூட்ட முயற்சிக்கின்றனர், மேலும் ஏற்கனவே உள்ளவற்றை தீவிரப்படுத்தி பாதுகாப்பில்லாத உலகத்தை உருவாக்குகிறார்கள்," என்கிறார் டாக்டர் வாட்லிங். "இறுதியில், நாம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய போட்டியில் இது நம்மை பலவீனப்படுத்துகிறது. அதனால் தாக்கம் உடனடியாக உணரப்படாது. ஆனால் காலப்போக்கில், இது ஒரு தீவிர அச்சுறுத்தலாக மாறும்" என்றார் வாட்லிங். https://www.bbc.com/tamil/articles/crg9771dg6ko

வாக்னர்: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் தங்கம், யுரேனியம் சுரங்கங்களை கைப்பற்றி என்ன செய்கிறது?

1 month 3 weeks ago
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி
  • பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிடைத்த ரஷ்ய அரசாங்க ஆவணங்கள் விவரிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூனில் ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ’வாக்னர்’ கூலிப்படையின் வணிகங்களை ரஷ்ய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் இது.

`வாக்னர்` குழுவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நடவடிக்கைகள், தற்போது `ரஷ்யன் எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்` எனும் பெயரில் செயல்படுகின்றன. பிரிட்டன் தெருக்களில் நோவிசோக் எனும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி செர்ஜேய் ஸ்க்ரிபாலைக் கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

 

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைவழிப் போர் நிபுணரும் இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக் வாட்லிங் கூறுகையில், "இது ரஷ்ய அரசு அதன் ஆப்பிரிக்கக் கொள்கையின் நிழலில் இருந்து வெளிப்படுவதைக் காட்டுகிறது" என்றார்.

ஜூன் 2023-ல், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அநேகமாக உலகில் மிகவும் அஞ்சப்படும் பிரபலமான கூலிப்படை தலைவராக இருந்திருக்கலாம். அவரது வாக்னர் குழு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதேநேரத்தில், அக்குழுவின் போராளிகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மையமாக இருந்தனர்.

பின்னர், அவர் மாஸ்கோவில் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார் பிரிகோஜின். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் தலைவரை அகற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதுவரை யாரும் தராத அச்சுறுத்தல் அது.

சில வாரங்களுக்குள் அவர் மிகவும் சந்தேகத்திற்கிடமான விமான விபத்தில் இறந்தார். வாக்னர் குழுவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அந்த நேரத்தில் பரவலான ஊகங்கள் இருந்தன. இப்போது, அதற்கு பதில் இருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டம் என்ன?

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, "ப்ரிகோஜினின் கலகத்திற்குப் பிறகு கிரெம்ளினில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் வாக்னரின் ஆப்பிரிக்க நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-ன் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வரும் என்று முடிவு செய்யப்பட்டது" என்றார்.

யூனிட் 29155-ன் தலைவரான ஜெனரல் ஆண்ட்ரே அவெரியனோவிடம், 'குறிவைக்கப்பட்ட கொலைகள்' மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ரகசிய நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஜெனரல் அவெரியனோவின் புதிய பணி, அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதாக இல்லை. மாறாக, தங்களுக்குப் பணம் செலுத்தும் வரை ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் அரசைப் பாதுகாப்பதாகத் தெரிய வருகிறது.

செப்டம்பர் தொடக்கத்தில், துணை பாதுகாப்பு அமைச்சர் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் உடன், ஜெனரல் அவெரியனோவ் ஆப்பிரிக்காவில் முன்பு நடந்த வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

அவர்கள் லிபியாவில் போர்த் தளபதி ஜெனரல் கலீஃபா ஹஃப்தாரை சந்தித்தனர். அடுத்ததாக புர்கினா ஃபாசோவில் 35 வயதான தலைவர் இப்ராஹிம் ட்ரேரே அவர்களை வரவேற்றார்.

அதன் பிறகு, அவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு சென்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட வாக்னர் நடவடிக்கைகள் அங்குதான் செயல்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர், மாலிக்கு சென்று அங்குள்ள ராணுவ ஆட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள இந்த பேனரில், `ரஷ்யா வாக்னர், நாங்கள் ரஷ்யாவை நேசிக்கிறோம், வாக்னரை நேசிக்கிறோம்` என எழுதப்பட்டுள்ளது.

இன்னும் ஆழமான நடவடிக்கைகள்

அடுத்த பயணத்தில், கடந்த ஆண்டு நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ வீரர்களில் ஒருவரான ஜெனரல் சாலிஃபோ மோடியையும் அவர்கள் சந்தித்தனர்.

ப்ரிகோஜினின் மறைவு அவரது வணிக ஒப்பந்தங்களின் முடிவைக் குறிக்கவில்லை என்று, வாக்னரின் கூட்டாளிகளுக்கு இருவரும் உறுதியளித்தனர் என்பதை பல்வேறு சந்திப்புகள் நிரூபிக்கின்றன.

புர்கினா ஃபாசோவின் தலைவர் இப்ராஹிம் ட்ரேரே உடனான சந்திப்பு பற்றிய அறிக்கைகள், "விமானிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் ராணுவ பயிற்சிக்கான" ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது.

சுருக்கமாக, ப்ரிகோஜினின் மரணம் ரஷ்யாவுடனான ராணுவ ஆட்சிக்குழுவின் உறவின் முடிவைக் குறிக்கவில்லை. சில வழிகளில், அது இன்னும் ஆழமாகியுள்ளது.

வாக்னருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர் மற்றும் புர்கினா ஃபாசோ, அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக்குள் சென்றன. பின்னர் அவர்கள் பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் (Ecowas) எனப்படும் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலிருந்து விலகுவதாகவும் தங்களுக்கென சொந்தமாக "சஹேல் நாடுகளின் கூட்டணியை" உருவாக்குவதாகவும் அறிவித்தன.

கூலிப்படையினருடன் மிகவும் பின்னிப்பிணைந்த மாலிக்கு, முன்னதாக, பிரெஞ்சு ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையுடன் மினுஸ்மா எனப்படும் ஐ.நா. திட்டத்தின் வடிவத்தில் பாதுகாப்பு உதவி வந்தது.

ஆனால் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மீது மாலி ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, ரஷ்ய ஆதரவுடன் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற வாக்னர் குழு முன்வந்தபோது, அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

’ஆம்பர் அட்வைசர்ஸ்’-க்காக பணிபுரியும் ஆப்பிரிக்க அரசியல் குறித்த ஆய்வாளர் எட்விஜ் சோர்கோ-டெபக்னே கூறுகையில், "பிரெஞ்சுக்காரர்கள் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக் கொள்ளப்பட்டனர்” என்றார்.

"சஹேலில் பயங்கரவாத நெருக்கடிக்கு உதவுவதற்கான பிரெஞ்சு திட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டது. எனவே, நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலம், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பது பயன்படவில்லை" என அவர் தெரிவித்தார்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,

எவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் நினைவாக இந்த மலர்கள் CAR-ல் உள்ள ரஷ்ய கூலிப்படையினரின் நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டன.

மனித உரிமை மீறல்கள்

மாலியில் நடைமுறைக்கு அப்பால், ஏக்கமும் இருந்தது. "இந்த நாடுகளில், ரஷ்யா ஒரு புதிய கூட்டாளி அல்ல. முன்பு 1970 மற்றும் 1980களில் இங்கு இருந்திருக்கிறது" என்கிறார் அவர்.

"இது பெரும்பாலும் ரஷ்யாவுடனான உறவுடன் தொடர்புடையது” என எட்விஜ் சோர்கோ கூறுகிறார்.

ஆனால், இந்த நாடுகளை இயக்கும் ராணுவ ஆட்சிக்குழுக்களுக்கு, ரஷ்யாவின் ராணுவ பரவல் வெளிப்படையான நன்மைகள் இருக்கின்றன.

"ஆரம்பத்தில், இந்த ஆட்சியாளர்கள் இடைநிலைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தேர்தல்களை ஒழுங்கமைத்து ஜனநாயக நடைமுறைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் அவர்.

"ஆனால், இப்போது ரஷ்யக் கூலிப்படைகள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் விரும்பும் வரை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர்."

பிரெஞ்சுப் படைகளை வெளியேறுமாறு மாலி ராணுவ ஆட்சிக் குழு உத்தரவிட்டது. இப்போது அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வாக்னரைச் சார்ந்துள்ளது. இது சாதாரண மாலியர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

"ரஷ்யா மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களுடன் கூடிய அதிரடிப் படையை வழங்கியது" என்கிறார் டாக்டர் வாட்லிங்.

"அவர்கள் பாரம்பரிய சோவியத் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். போராளிகளையும், போராளிகளுடன் தொடர்புடைய பொதுமக்களையும் தூக்கிலிடப்படுவதை நீங்கள் காணலாம்" என்கிறார் அவர்.

ஆப்பிரிக்க கண்டத்திலும், யுக்ரேன் மற்றும் சிரியாவிலும் வாக்னர் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக பல கூற்றுகள் உள்ளன.

மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, மத்திய மாலி நகரமான மௌராவில் நடந்தது. ஐ.நா அறிக்கையின்படி, குறைந்தது 500 பேர் மாலி துருப்புக்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. "தெரியாத மொழி" பேசிய "ஆயுதமேந்திய வெள்ளையர்களால்" இவை நிகழ்த்தப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்”.

இதற்கு சுயாதீன சரிபார்ப்பு சாத்தியமில்லை என்றாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறியப்படாத தாக்குதல்காரர்களை ரஷ்ய கூலிப்படையினர் என்று அடையாளம் கண்டுள்ளது.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,

நூறு ரஷ்ய ராணுவ வல்லுநர்கள் கடந்த மாதம் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் புர்கினா ஃபாசோவிற்கு வந்தனர், மேலும் பலர் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளங்களின் மூலம் வருவாய்

மாலி, பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மரம் மற்றும் தங்கம் முதல் யுரேனியம் மற்றும் லித்தியம் வரையிலான இயற்கை வளங்கள் நிறைந்தது. சில மதிப்புமிக்கவை. மற்றவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, வாக்னர் கூலிப்படை நன்கு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தில் இயங்குகிறது: "ஒரு நிலையான ரஷ்ய செயல் முறை உள்ளது. செயல்பாட்டுக்கான செலவுகளை வணிக நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்வது. ஆப்பிரிக்காவில், அவை சுரங்கங்களால் ஈடுசெய்யப்படுகின்றன” என்றார்.

வாக்னர் குழு செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும், மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செலவுகளை மட்டும் ஈடுசெய்யாமல், கணிசமான வருவாயையும் ஈட்டுவதாக தெரிகிறது. பிளட் கோல்ட் ரிப்போர்ட்டின் படி, (Blood Gold Report) ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்துள்ளது, இது யுக்ரேனில் நடந்த போருக்கு நிதியளித்திருக்கலாம்.

இந்த மாதம், முன்பு வாக்னர் கூலிப்படையினராக இருந்த ரஷ்ய போராளிகள், புர்கினா ஃபாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள மாலியின் இன்டஹாகா தங்கச் சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். வடக்கு மாலியின் மிகப்பெரிய சுரங்கம், இப்பகுதியில் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், புவிசார் அரசியல் முக்கியத்துவத்துடன் வேறு ஒன்று உள்ளது.

"முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் மீதான மேற்கத்திய கட்டுப்பாட்டை யுக்தி ரீதியாக இடமாற்றம் செய்ய ரஷ்யர்கள் முயற்சிப்பதை நாங்கள் இப்போது கவனித்து வருகிறோம்" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார்.

மாலியில், இயற்கை வளங்கள் மீது ராணுவ ஆட்சிக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக சுரங்கக் குறியீடு சமீபத்தில் மீண்டும் எழுதப்பட்டது. அந்த செயல்முறை ஏற்கனவே ஒரு ஆஸ்திரேலிய லித்தியம் சுரங்கம், குறியீட்டை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, அதன் பங்குகளின் வர்த்தகத்தை இடைநிறுத்தியுள்ளது.

லித்தியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் முக்கியமானவை என்றாலும், டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, இன்னும் பெரிய மூலோபாய தலைவலி இருக்கலாம் என்கிறார் அவர். "நைஜரில் ரஷ்யர்கள் இதேபோன்ற சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றனர். இது யுரேனியம் சுரங்கங்களை பிரான்ஸ் பயன்படுத்துவதை தடுக்கும்" என்கிறார் அவர்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

மாலி நாட்டில் பலர் தங்க சுரங்கம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

"தீவிர அச்சுறுத்தல்"

மாலியில் செய்யப்பட்டதை நைஜரில் அடைய முயற்சி செய்வதில் கவனம் செலுத்திய ரஷ்ய குறிப்புகளை இந்த அறிக்கை விவரிக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் யுரேனிய சுரங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை ரஷ்யா பெற முடிந்தால், ஐரோப்பா மீண்டும் ரஷ்ய "எனர்ஜி பிளாக்மெயில்" என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தலாம்" என்றார்.

உலகின் மற்ற எந்த நாட்டையும் விட பிரான்ஸ் அணுசக்தியை அதிகம் சார்ந்துள்ளது, 56 உலைகள் நாட்டின் ஆற்றலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. அதன் ஐந்தில் ஒரு பங்கு யுரேனியம் நைஜரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நைஜர் போன்ற நாடுகளை முன்னாள் காலனித்துவ சக்தி சுரண்டுகிறது என்ற கருத்துகளுடன், வர்த்தக விதிமுறைகள் குறித்து முன்பு புகார்கள் வந்துள்ளன.

"மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறை அடிப்படையில் காலனித்துவமாக இருக்கின்றன என்ற கருத்தை ரஷ்யா முன்வைக்கிறது" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். "இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இந்த ஆட்சிகளைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பது போன்ற ரஷ்ய அணுகுமுறை தான் மிகவும் காலனித்துவமானது" என்றார்.

உண்மையில், "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" என்பது ரஷ்ய வெளியுறவுக் கொள்கைக்கான தீவிரமான புறப்பாட்டைக் காட்டிலும் "வாக்னர் 2.0" என்பது போலவே தோன்றுகிறது. ப்ரிகோஜின் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை உருவாக்கினார். எனவே, இந்த சிக்கலான வலையை அகற்றுவது கடினமாக இருக்கும்.

"எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" அதே நாடுகளில், அதே கருவிகளுடன் அதே இறுதி இலக்குடன் செயல்படுகிறது.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, அடிப்படை மாற்றம் "ரஷ்யா தனது கொள்கையைப் பின்பற்றும் வெளிப்படையான தன்மையில்" உள்ளது. ப்ரிகோஜினின் வாக்னர் குழுமம் எப்போதும் ரஷ்யாவிற்கு செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் செல்வாக்கு ஆகியவற்றில் நம்பத்தகுந்த உதவியை வழங்கியது.

யுக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் ரஷ்யாவின் முகமூடி நழுவிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

"அவர்கள் செய்ய விரும்புவது சர்வதேச அளவில் நமது நெருக்கடிகளை அதிகப்படுத்துவதாகும். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தீயை மூட்ட முயற்சிக்கின்றனர், மேலும் ஏற்கனவே உள்ளவற்றை தீவிரப்படுத்தி பாதுகாப்பில்லாத உலகத்தை உருவாக்குகிறார்கள்," என்கிறார் டாக்டர் வாட்லிங்.

"இறுதியில், நாம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய போட்டியில் இது நம்மை பலவீனப்படுத்துகிறது. அதனால் தாக்கம் உடனடியாக உணரப்படாது. ஆனால் காலப்போக்கில், இது ஒரு தீவிர அச்சுறுத்தலாக மாறும்" என்றார் வாட்லிங்.

https://www.bbc.com/tamil/articles/crg9771dg6ko

இரணைமடு குளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

1 month 3 weeks ago
21 FEB, 2024 | 12:45 PM கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது. இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ள பிரதேசவாசி ஒருவர் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது. மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை, பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்த நிலையில் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/176945

இரணைமடு குளத்தையும் வயல் நிலங்களையும் சட்டவிரோத மணல் அகழ்வோரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பிரதேச மக்கள் அவசர கோரிக்கை

1 month 3 weeks ago
21 FEB, 2024 | 12:45 PM
image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில்   மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத  மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு  ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில்  உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது.

இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ள பிரதேசவாசி ஒருவர்

இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது.

மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை, பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்த நிலையில் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/176945

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி விரையும் ஐரோப்பிய செயற்கைக்கோள் - எங்கே விழும்?

1 month 3 weeks ago
ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,

பூமியில் விழப் போகும் ERS - 2 செயற்கைக்கோள்

14 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு காலத்தில் முக்கியமானதாக கருதப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று எந்நேரமும் பூமியின் மீது விழலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.

ERS-2 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் 1995ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியான இது 2011ஆம் ஆண்டு செயலிழந்து போனது.

அதிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக பூமியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த செயற்கைக்கோள் தற்போது முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன் கிழமை மாலையில் எந்த நேரத்திலும் இது பூமியை அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியை நெருங்குவதற்கு முன்பே எரிந்து சாம்பலாகி விடும் என்று ஐரோப்பிய விண்வெளி மையம் கூறியுள்ளது.

இருப்பினும் அதன் சில பாகங்கள் பூமியின் சில பகுதிகளில் விழலாம் என்று அச்சம் உள்ளது. ஆனால், அது மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியில் விழுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளதால் இதன் பாகங்கள் தண்ணீரில் விழுந்து மூழ்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் புவி கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த மிர்கோ அல்பானி இதுகுறித்து பேசுகையில், "பூமிக்கு திரும்பி வரும் இந்த செயற்கைக்கோளின் பாகங்கள் கதிரியக்கம் அல்லது விஷத்தன்மை கொண்டவை இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

சில பேனல்கள் உள்ளிட்ட உட்பாகங்கள் மற்றும் சிறு வெளிபாகங்கள் மட்டுமே பூமியின் வெளிவட்ட பாதையிலேயே எரிந்து அழியாமல், இங்கு வந்து விழ வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,

தற்போது பூமியின் வெப்பநிலையை கண்காணிப்பதற்கு முன்னோடியாக இருந்தது ERS செயற்கைகோள்கள்தான்.

செயற்கைக்கோள்களுக்கு முன்னோடி

ஐரோப்பிய விண்வெளி முகமை 1990இல் ஒரே மாதிரியான இரண்டு தொலைதூர புவி கண்காணிப்பு (Earth remote sensing) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அவற்றின் பெயர் ERS-1 மற்றும் ERS-2.

அந்த சமயத்தில் இவைதான் அதிநவீன செயற்கைக்கோள்களாக பார்க்கப்பட்டது. இதில் நிலம், காற்று மற்றும் கடலை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இவை இரண்டும் வெள்ளத்தை கண்காணிப்பது, கடல் மற்றும் கண்டங்களின் வெப்பநிலையை அளவிடுவது, பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது மற்றும் பூகம்பத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்தன.

இதில், ERS-2 செயற்கைக்கோளுக்கு பூமியை சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் திறனும் இருந்தது.

இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுக்கு முன்னோடிகள் என்று அழைக்கப்பட்டன. அதில் ஒன்றான ERS-2 செயற்கைக்கோள்தான் தற்போது முதலில் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

 
ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம்,AIRBUS

படக்குறிப்பு,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும்.

விண்வெளி மாசு

இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட காலகட்டத்தில் செயலிழந்த செயற்கைகோள்களினால் விண்வெளியில் உருவாகும் மாசு குறித்து எந்த கடுமையான விதிமுறைகளும் இல்லை. செயலிழந்த செயற்கைக்கோள்களை 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.

ஆனால், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் குப்பைகளை உருவாக்கக் கூடாது. செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும்.

அதேபோல், எதிர்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களும் அதன் பணி முடிந்த பிறகு, பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் கூடுதல் எரிவாயு நிரப்பி அனுப்ப வேண்டும்.

காரணம், உலகளவில் அதிக செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

ERS-2 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 780 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

 
ஐரோப்பிய செயற்கைக்கோள்

பட மூலாதாரம்,HEO

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனம் ERS-2வை கண்காணித்து வருகிறது.

எஞ்சியிருந்த எரிவாயுவின் மூலம், இது 2011ஆம் ஆண்டு பூமிக்கு சற்று அருகில் 570 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக அந்த காலகட்டத்தில், இது கீழ் வளிமண்டலத்தில் நுழைந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அழிந்து விடும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கணிப்பு கிட்டத்தட்ட சரி என்பது இன்று நிரூபணம் ஆக உள்ளது.

அதே சமயம், ERS-1 செயற்கைக்கோளையும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் அதனுடனான தொடர்பு பாதியிலேயே அறுந்து விட்டது.

ERS-1 செயற்கைகோள் தற்போது பூமியிலிந்து 700 கிலோமீட்டர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது கீழே வந்து முழுமையாக அழிவதற்கு எப்படியும் 100 ஆண்டுகள் ஆகலாம்.

விண்வெளியை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காக இயங்கி வரும் அமைப்பான செக்யூர் வோர்ல்டு ஃபவுண்டேஷன் மற்றும் அமெரிக்க நிறுவனமான லியோலேப்ஸ், விண்வெளியில் தொடர்ந்து குப்பைகள் அதிகரித்து வருவதால், அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளன.

அவர்களது கூற்றுப்படி, ஏற்கனவே அங்கு அதிகளவிலான செயற்கைக்கோள்களால் உருவாக்கப்பட்ட குப்பைகள் சுற்றிக்கொண்டிருப்பதால், அவை உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான புதிய செயற்கைக்கோள்களை மோதி அழிக்க வாய்ப்புள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c2l775gwl89o

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி விரையும் ஐரோப்பிய செயற்கைக்கோள் - எங்கே விழும்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, பூமியில் விழப் போகும் ERS - 2 செயற்கைக்கோள் 14 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் முக்கியமானதாக கருதப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று எந்நேரமும் பூமியின் மீது விழலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. ERS-2 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் 1995ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிக்கும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியான இது 2011ஆம் ஆண்டு செயலிழந்து போனது. அதிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக பூமியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த செயற்கைக்கோள் தற்போது முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் கிழமை மாலையில் எந்த நேரத்திலும் இது பூமியை அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியை நெருங்குவதற்கு முன்பே எரிந்து சாம்பலாகி விடும் என்று ஐரோப்பிய விண்வெளி மையம் கூறியுள்ளது. இருப்பினும் அதன் சில பாகங்கள் பூமியின் சில பகுதிகளில் விழலாம் என்று அச்சம் உள்ளது. ஆனால், அது மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியில் விழுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளதால் இதன் பாகங்கள் தண்ணீரில் விழுந்து மூழ்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் புவி கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த மிர்கோ அல்பானி இதுகுறித்து பேசுகையில், "பூமிக்கு திரும்பி வரும் இந்த செயற்கைக்கோளின் பாகங்கள் கதிரியக்கம் அல்லது விஷத்தன்மை கொண்டவை இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார். சில பேனல்கள் உள்ளிட்ட உட்பாகங்கள் மற்றும் சிறு வெளிபாகங்கள் மட்டுமே பூமியின் வெளிவட்ட பாதையிலேயே எரிந்து அழியாமல், இங்கு வந்து விழ வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, தற்போது பூமியின் வெப்பநிலையை கண்காணிப்பதற்கு முன்னோடியாக இருந்தது ERS செயற்கைகோள்கள்தான். செயற்கைக்கோள்களுக்கு முன்னோடி ஐரோப்பிய விண்வெளி முகமை 1990இல் ஒரே மாதிரியான இரண்டு தொலைதூர புவி கண்காணிப்பு (Earth remote sensing) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அவற்றின் பெயர் ERS-1 மற்றும் ERS-2. அந்த சமயத்தில் இவைதான் அதிநவீன செயற்கைக்கோள்களாக பார்க்கப்பட்டது. இதில் நிலம், காற்று மற்றும் கடலை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை இரண்டும் வெள்ளத்தை கண்காணிப்பது, கடல் மற்றும் கண்டங்களின் வெப்பநிலையை அளவிடுவது, பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது மற்றும் பூகம்பத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்தன. இதில், ERS-2 செயற்கைக்கோளுக்கு பூமியை சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் திறனும் இருந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுக்கு முன்னோடிகள் என்று அழைக்கப்பட்டன. அதில் ஒன்றான ERS-2 செயற்கைக்கோள்தான் தற்போது முதலில் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,AIRBUS படக்குறிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும். விண்வெளி மாசு இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட காலகட்டத்தில் செயலிழந்த செயற்கைகோள்களினால் விண்வெளியில் உருவாகும் மாசு குறித்து எந்த கடுமையான விதிமுறைகளும் இல்லை. செயலிழந்த செயற்கைக்கோள்களை 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது. ஆனால், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் குப்பைகளை உருவாக்கக் கூடாது. செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும். அதேபோல், எதிர்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களும் அதன் பணி முடிந்த பிறகு, பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் கூடுதல் எரிவாயு நிரப்பி அனுப்ப வேண்டும். காரணம், உலகளவில் அதிக செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது. ERS-2 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 780 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,HEO படக்குறிப்பு, ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனம் ERS-2வை கண்காணித்து வருகிறது. எஞ்சியிருந்த எரிவாயுவின் மூலம், இது 2011ஆம் ஆண்டு பூமிக்கு சற்று அருகில் 570 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த காலகட்டத்தில், இது கீழ் வளிமண்டலத்தில் நுழைந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அழிந்து விடும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த கணிப்பு கிட்டத்தட்ட சரி என்பது இன்று நிரூபணம் ஆக உள்ளது. அதே சமயம், ERS-1 செயற்கைக்கோளையும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் அதனுடனான தொடர்பு பாதியிலேயே அறுந்து விட்டது. ERS-1 செயற்கைகோள் தற்போது பூமியிலிந்து 700 கிலோமீட்டர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது கீழே வந்து முழுமையாக அழிவதற்கு எப்படியும் 100 ஆண்டுகள் ஆகலாம். விண்வெளியை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காக இயங்கி வரும் அமைப்பான செக்யூர் வோர்ல்டு ஃபவுண்டேஷன் மற்றும் அமெரிக்க நிறுவனமான லியோலேப்ஸ், விண்வெளியில் தொடர்ந்து குப்பைகள் அதிகரித்து வருவதால், அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. அவர்களது கூற்றுப்படி, ஏற்கனவே அங்கு அதிகளவிலான செயற்கைக்கோள்களால் உருவாக்கப்பட்ட குப்பைகள் சுற்றிக்கொண்டிருப்பதால், அவை உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான புதிய செயற்கைக்கோள்களை மோதி அழிக்க வாய்ப்புள்ளது. https://www.bbc.com/tamil/articles/c2l775gwl89o

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 12:26 PM உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர். இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர். கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/176938

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    21 FEB, 2024 | 12:26 PM

image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19)  மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல  தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர்  வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர்,  கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு  தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

hl-39009514400.jpg

https://www.virakesari.lk/article/176938

அர்வி: அரபி எழுத்து, தமிழ் உச்சரிப்பு - அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி, மீட்டெடுக்கப்பட்ட வரலாறு

1 month 3 weeks ago
அர்வி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கமலா தியாகராஜன்
  • பதவி, பிபிசி டிராவல்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார்.

அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார்.

சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா?

எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என.

தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும்.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,AHAMED ZUBAIR

படக்குறிப்பு,

அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை

தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி

கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது.

வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன.

வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை.

அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார்.

"ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார்.

"இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார்.

தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள்.

"பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார்.

அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MAHMOOD KOORIA

படக்குறிப்பு,

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார்.

40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது.

இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது.

அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர்.

"தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர்.

அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார்.

 
அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம்

தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது.

குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார்.

"வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர்.

அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார்.

"நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன)

 
முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள்
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI

படக்குறிப்பு,

1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார்

காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார்.

"பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார்.

"முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார்.

இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன.

 
தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி

அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள்.

இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார்.

"எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார்.

"அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார்.

வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் .

மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார்.

இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார்.

"இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo

அர்வி: அரபி எழுத்து, தமிழ் உச்சரிப்பு - அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி, மீட்டெடுக்கப்பட்ட வரலாறு

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கமலா தியாகராஜன் பதவி, பிபிசி டிராவல் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார். அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார். சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா? எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என. தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும். பட மூலாதாரம்,AHAMED ZUBAIR படக்குறிப்பு, அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது. வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன. வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார். "ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார். "இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார். தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள். "பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார். அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு. பட மூலாதாரம்,MAHMOOD KOORIA படக்குறிப்பு, அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். 40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது. அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர். "தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர். அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார். அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது. குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார். "வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர். அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார். "நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன) முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள் பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI படக்குறிப்பு, 1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார் காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார். "பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார். "முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார். இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன. தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார். "எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார். "அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார். வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் . மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார். இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார். "இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo

தொழுநோயை கட்டுப்படுத்த இலங்கைக்கு வருகை தரவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்திய குழு

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 11:24 AM தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான வரைப்படத்தை உருவாக்க இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தொழுநோயாளிகளின் அதிகரித்துள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சிக்கு உதவுவதற்காக விசேட வைத்திய குழுவை மார்ச் மாதம் இங்கு அனுப்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எங்களுக்குத் அறிவித்துள்ளது. அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தொழுநோயை முற்றாக தடுக்க ஒரு வரைபடத்தை உருவாக்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176934

தொழுநோயை கட்டுப்படுத்த இலங்கைக்கு வருகை தரவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்திய குழு

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3    21 FEB, 2024 | 11:24 AM

image

தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக  கட்டுப்படுத்துவதற்கான  வரைப்படத்தை உருவாக்க  இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என  தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தொழுநோயாளிகளின்  அதிகரித்துள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சிக்கு உதவுவதற்காக விசேட வைத்திய குழுவை மார்ச் மாதம் இங்கு அனுப்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எங்களுக்குத் அறிவித்துள்ளது. அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தொழுநோயை முற்றாக தடுக்க ஒரு வரைபடத்தை உருவாக்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176934

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

1 month 3 weeks ago
21 FEB, 2024 | 01:13 PM மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள், ஐயாயிரம் பேர் வசிக்கின்றனர். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது. இக்கலந்துரையாடலின்போது, நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கிராம மக்களால் எடுத்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்ட வரைபை சமர்ப்பிக்குமாறும், நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணித்தார். தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஆளுநர் மேலும் கூறுகையில், இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இன, மத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இந்த கிராமத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான சிறந்த ஆரம்பம் என்றார். மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர், நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் கலத்துகொண்டனர். இதேவேளை தீவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மதத் தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது ஆளுநரின் பணிப்புரைக்கமைய, ‍வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நயினாதீவை முன்மாதிரி தீவாக மாற்றுவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பித்து, அதற்குரிய திட்ட வரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களுக்கு உறுதிபட தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176944

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

1 month 3 weeks ago
21 FEB, 2024 | 01:13 PM
image

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. 

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

IMG-20240220-WA0132.jpg

யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள், ஐயாயிரம் பேர் வசிக்கின்றனர். 

மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது. 

இக்கலந்துரையாடலின்போது, நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து  கிராம மக்களால் எடுத்துரைக்கப்பட்டது. 

IMG-20240220-WA0133.jpg

அதைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்ட வரைபை சமர்ப்பிக்குமாறும், நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மேலும் கூறுகையில், இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இன, மத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இந்த கிராமத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான சிறந்த ஆரம்பம் என்றார். 

மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர், நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர்  கலத்துகொண்டனர். 

இதேவேளை தீவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மதத் தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். 

இச்சந்திப்பின்போது ஆளுநரின் பணிப்புரைக்கமைய, ‍வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நயினாதீவை முன்மாதிரி தீவாக மாற்றுவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பித்து, அதற்குரிய திட்ட வரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களுக்கு உறுதிபட தெரிவித்தார். 

IMG-20240220-WA0136.jpg

IMG-20240220-WA0131.jpg

IMG-20240220-WA0137.jpg

IMG-20240220-WA0138.jpg

IMG-20240220-WA0139.jpg

IMG-20240220-WA0141.jpg

https://www.virakesari.lk/article/176944

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள் யாதர்த்தம் தெரியவர வேண்டும் இங்கே உள்ள நிலமை தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️