Aggregator

சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன்

1 month 4 weeks ago
எங்கடை சனம் எங்களை அறம்புறமாய் பேசினாலும் .... வேறை வழியில்லாமல் எங்கடை காலைத்தான் சுத்திக்கொண்டு நிக்குங்கள் எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சுவைச்சிருக்கிறார் சிங்கம். சோரம்,அழுத்தம்,அமுக்கம்,விலை பேசாது,சுயநலத்தை நாடாது,பொது நலம்,குரல் குடுக்கும் எண்ட கொஞ்ச சொல்லுகளைவைச்சு அரசியல் செய்யும்கூட்டம் உது..... அடைக்கலம்! ஒரு இடத்திலை இதுக்கு என்ன தமிழ் எண்டு கேக்கேக்கையே எனக்கு அஞ்சும் கெட்டு ஆறும் கெட்டுப்போச்சுது

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

1 month 4 weeks ago
வைபரும், வட்ஸ் அப்பும் செய்த கைங்கரியத்தைப் பாத்தனியளே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி! December 23, 2018 சனி முழுக்கு 22 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்.. ஒரு உதவியை மற்றவனிட்டைக் கேக்க முதல் அதை அவனாலை செய்யேலுமோ? அதுக்கு அவனிட்டை வசதி, வாய்ப்பு இருக்கோ? எண்டதைப் பற்றி ஒருக்கா, இரண்டு தரம் யோசிச்சுப் போட்டுத்தான் கேக்கலாமோ? எண்ட முடிவை எடுக்க வேணும்.இதை ஏன் இப்ப சொல்லுறனெண்டால் கன நாளைக்குப் பிறகு சரசக்கா நேற்றைக்கு வந்தவ. சரசக்கான்ரை மேன் கொழும்பிலை வேலை. ஒரு சின்ன பிளாற் எடுத்து குடும்பத்தோடை தங்கி இருக்கிறான். கவுண்மென்ற் வேலை எண்டால் பாருங்கோவன். எல்லாம் மட்டுமட்டுத்தானே. வீட்டு வாடகை, தண்ணி, கறன்ற், பிள்ளையள் படிப்பு போக்குவரத்து எண்டு தலைக்கு மேலை செலவோடை அவன் சீவிக்கிறதைப் பாத்திட்டு சரசக்கா இடைசுகம் தன்ரை பென்சனையும் அவனுக்கு அனுப்பித்தான் ஒரு மாதிரித் தேர் ஒடுது. இதுக்கை போன மாதம் அவன்ரை சிநேகிதன் ஒருத்தன், லண்டனிலை இருக்கிறவன், இடை சுகம் கூப்பிட்டுக் கதைச்சதுமில்லையாம். இப்ப வட்ஸ் அப், வைபர் எண்டு கோதாரியள் கனக்க வந்திருக்கெல்லே? அதிலை குழுக் குழுவாகச் சேர்த்துக் கதைக்கிறவையாம். அந்தக் குழுவிலையும் கனக்க இருக்காம். படிச்சவை, ஊர், வேலை செய்த இடம், யூனிவசிட்டி எண்டு கனக்க, கண்ணன் கோஷ்டி வைச்சு நடத்தின மாதிரி நடத்தினமாம். சரசக்காவின்ரை பெடியும் அதிலை ஒரு குழுவிலை அம்பிட்டிட்டான். அதிலை பாத்திட்டுத்தான் சரசக்கா வின்ரை மேனை அவன்ரை பள்ளிக்கூடச் சிநேகிதன் கூப்பிட்டவனாம். ரெலிபோன் எடுத்த வீச்சுக்கு “மச்சான் உன்னை நான் மிஸ் பண்ணுறன்டா. நீயும் நானும் ஒண்டாச் சேந்து துரை கடையிலை வடையும், நன்நாரிப் பிளேன்ரியும் குடிச்சதை மறக்கலாமோ? எத்தினை திருகுதாளத்தை அந்த நாளிலை செய்திருப்பம்…. அது இது எண்டு இவனைக் கதைக்க விடாமல் கதைச்சிட்டு நாள் நேரத்தைக் குடுத்துச் சொன்னானாம் “கட்டு நாயக்காவிலை வந்து என்னை கூட்டிக் கொண்டு போய் மற்ற நாள் யாழ்ப்பாணத்துக்கு ஏத்தி விடு.உன்ரை வீட்டிலைதான் மச்சான் தங்க வேணும். நானும், மனுசியும், பிள்ளையும் தான்” எண்டு கட கட வெண்டு சொல்லிப் போட்டு போனை வைச்சிட்டு சரசுவின்ரை பெடியின்ரை ரெலிபோனுக்குத் தான் வாற விபரங்களை செய்தியாப் போட்டுவிட்டவனாம். இப்ப சரசுவின்ரை பெடி இதைத் தன்ரை மனுசிக்கு எப்பிடிச் சொல்லுறது? அவள் கத்தத் துவங்கிவிடுவளே. ஏனெண்டால் வீடு சின்னன். படுக்கப் பெரிசா ஒரு வசதியும் கிடையாது.இனிப் பெடி பெட்டையளின்ரை படிப்பும் குழம்பிப்போம். எண்டு பலதையும் சொல்லித்தான் அவள் அபிஷேகம் செய்வள் எண்டு பெடிக்குப் பயம்.இருந்தாலும் அவளுக்குச் சொல்லாமல் ஒண்டும் செய்யேலாது. எப்பிடியும் ஒரு அறையை ஒதுக்கத்தான் வேணும் எண்டு மெல்ல ஒரு பிளான் போட்டு இரவு போய் நல்ல கோழிக் கொத்தொண்டை வேண்டிக் கொண்டு வந்து வைச்சிட்டுக் கதையைத் துவங்கினால், சனசுவின்ரை மேன் எதிர்பார்த்ததுக்கு எதிர் மாறாக் கிடந்திதாம் அவளின்ரை மறுமொழி. “பாருங்கோவன் நீங்களும் இருக்கிறியள்தானே? ஒருக்காத்தன்னும் அந்தாளின்ரை நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட்டிருக்கலாம். அங்கை லண்டனிலை அவையள் தலைகால் தெறிக்க ஒடுத்திரியிறவைக்கு எங்களை மாதிரி நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட நேரம் இருக்காது. இருந்தும் பாத்தனியளே? வெளிக்கிட்டு வரேக்கை எங்களை யோசிச்சிருக்கிதுகள். ஓம் எண்டு சொல்லுங்கோ. இரண்டு நாள்தானே. ஒரு மாதிரி சரிகட்டலாம்” எண்டு சரசுவின்ரை மேன் பெண்சாதி சொன்னதும் அவன் கெலிச்சுப் போனானாம். எண்டாலும் அவனுக்குத் தெரியும் தன்ரை மனிசீன்ரை நோக்கம். கனகாலமா அவள் தன்ரை பெடியை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேணும் எண்டும் அதுக்கு ஆராவது உதவி செய்ய வருவினமோ எண்டும் எதிர்பாத்திருந்தவள். இப்பிடிக் கிடைச்ச சந்தர்பத்தை விடுவளோ! அதைவிட அவள் எதிர்பார்த்தது வெளி நாட்டிலை இருந்து வாறவை வெறுங்கையோடை வராயினம். வரேக்கை எதையாவது கொண்டுதான் வருவினம். போயேக்கையும் அங்கத்தைக் காசு சின்னனா எண்டாலும் சுருட்டிக் கையுக்கை வைப்பினம். இஞ்சை உள்ளவைக்கு அது பெரிசுதானே? இனி இப்பிடிப்பட்ட உறவு இண்டையோடை நிக்கப் போகுதே? – எண்டு அவளின்ரை எண்ணம். அவள் தங்கடை இரண்டு அறையளிலை ஒண்டை அமளியாத் துப்பரவாக்கி. அதுக்கை பான் ஒழுங்கா வேலைசெய்யுதோ எண்டதைப் பாத்து. கட்டில், தலையணி, பெட் சீற், அலுமாரி எண்டு எல்லாத்தையும் ரெடி பண்ணி அதோடை வாறவைக்குச் சாப்பிட எண்டு பத்தும் பலதையும் வேண்டினதோடை காசாகவும் ஒரு ஐயாயிரத்தை எடுத்து வைச்சிட்டு தன்ரை புருசன்ரை சிநேகிதன் வாற அண்டு, பொங்கல் தீவாளிக்கு வேளைக்கு எழும்பி ஆயுத்தம் செய்யிற மாதிரி மணிக்கூட்டிலை எலார்ம் வைச்சு எழும்பி ஓரே தடல் புடலாக்கிடந்ததாம். ஆனால் அவனுக்குத் தான் தலையிடியாப் போச்சு. அந்த மாதம் கறண்ட்டுக்கும், தண்ணிக்கும், வீட்டு வாடகைக்கும் எண்டு சேத்து வைச்ச காசைத்தான் அவன்ரை மனுசி எடுத்து விளையாடினவள். கேட்டதுக்குச் சொன்னவளாம் அவை போயேக்கை தாறதிலை அதுகளையெல்லாம் கட்டலாம் தானே எண்டு. இப்பிடி ஒரு மாதிரி லண்டனிலை இருந்து வந்த சிநேகிதன்ரை குடும்பத்தை கட்டு நாயக்காவிலை போய் கூட்டிக்கொண்டு வந்து வடிவாக் கவனிச்சவளாம். அவையும் வந்த உடனை ஒரு பைக்கற் சொக்கிலேட்டும், அவனுக்கு முகம் சவரம் பண்ணுற பிளேட்டுப் பைக்கற்றும் குடுத்தவனாம். ஒரு போத்திலை எடுத்துக் காட்டிச் சொன்னானாம் “நீ மச்சான் குடிக்கிறேல்லை எண்டு கேள்விப்பட்டனான். அதாலைதான் உனக்கு வேண்டிக்கொண்டு வரேல்லை” எண்டு சமாளிச்சிட்டுப் போட்டானாம். நிண்ட இரண்டு நாளும் வடிவாத் திண்டு குடிச்சிட்டு வெளிக்கிட்டு யாழ்ப்பாணம் போயேக்கை பஸ்ஸுக்கு சீற் புக் பண்ணின காசை எவ்வளவு எண்டு கேட்டுக் குடுத்தவனேயல்லாமல் ஒரு வெள்ளிக்காசும் கூடக் குடுக்கேல்லை. அதுக்குள்ளை அவன் வந்து நிண்டதாலை சரசுவின்ரை மேனுக்கு ஆறு ஏழு செலவாப்போச்சாம். சரி வந்து திரும்பிப் போயேக்கை செய்வனாக்கும் எண்டு மனமாறி இருக்கு போயேக்கையும் சொல்லாமல் கொள்ளாமல் போற தினத்துக்கு முதல் நாள் வந்திறங்கி முன்னம் வந்து நிக்கேக்கை செய்த மாதிரியான செயற்பாட்டோடை லண்டனுக்கு வெளிக்கிட்டுப் போயிட்டானாம். “கனகாலத்துக்குப் பின்னாலை வந்தது பெருஞ் செலவாப்போச்சுது” எண்டு சொல்லி அன்னம் பாறினவனாம். இப்ப சரசுவின்ரை பெடி தன்ரை மனுசியின்ரை காப்பொண்டை அடைவு வைச்சுத்தான் வீட்டுச் செலவைச் சமாளிச்சிருக்கிறானெண்டு சரசுவந்து மண்ணள்ளிப் போட்டுத் திட்டினவள். போனவன் போனதுக்கு ஒரு கோல் எடுத்துச் சொன்னவனாம் “தாங்ஸ் மச்சான். லண்டனுக்கு வந்தால் என்னட்டைக் கட்டாயம் வா” எண்டு. அவனுக்குத் தெரியும் சரசுவின்ரை பெடி கடைசிவரைக்கும் லண்டனுக்குப் வரமாட்டான் எண்டு. அந்தத் தைரியத்தலைதான் அவன் வா எண்டு சொல்லி இருக்கிறான். அப்ப பாருங்கோ.சும்மா சிவனே எண்டு தன்ரை கஷ்டம் தன்னோடை இருக்கட்டும் எண்டு இருந்தவனை லண்டனிலை இருக்கிற சிநேகிதன் வைபர் குழுவுக்குள்ளாலை தொடர்பு கொண்டு கதைக்கப்போய் நடந்த வில்லங்கத்தைப் பாத்தனியள்தானே? பொஸிற்றிவ் பொன்னம்பலம்.. http://globaltamilnews.net/2018/107598/

ஆழிப்பேரலை- நினைவேந்தலுக்கு தயார் படுத்தப்படும் நினைவுச் சதுக்கம்!!

1 month 4 weeks ago
ஆழிப்பேரலை- நினைவேந்தலுக்கு தயார் படுத்தப்படும் நினைவுச் சதுக்கம்!! பதிவேற்றிய காலம்: Dec 23, 2018 ஆழிப்பேரலையால் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை உயிர்நீத்த மக்கள் அடக்கம் செய்யப்பட்ட ஆழிப்பேரலை நினைவுச் சதுக்கத்தில் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கு வர்ணம் பூசல், கல்லறைகள் அமைத்தல், வளாகம் மற்றும் கல்லறைகள் உள்ள இடங்களை துப்பரவு செய்தல் என மக்கள் ஈடுபட்டு வருகின்றனர், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை நினைவு நாள் கடைப்பி்டிக்கப்படவுள்ளது. https://newuthayan.com/story/15/ஆழிப்பேரலை-நினைவேந்தலுக்கு-தயார்-படுத்தப்படும்-நினைவுச்-சதுக்கம்.html

ஆழிப்பேரலை- நினைவேந்தலுக்கு தயார் படுத்தப்படும் நினைவுச் சதுக்கம்!!

1 month 4 weeks ago
ஆழிப்பேரலை- நினைவேந்தலுக்கு தயார் படுத்தப்படும் நினைவுச் சதுக்கம்!!
பதிவேற்றிய காலம்: Dec 23, 2018

ஆழிப்பேரலையால் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை உயிர்நீத்த மக்கள் அடக்கம் செய்யப்பட்ட ஆழிப்பேரலை நினைவுச் சதுக்கத்தில் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கு வர்ணம் பூசல், கல்லறைகள் அமைத்தல், வளாகம் மற்றும் கல்லறைகள் உள்ள இடங்களை துப்பரவு செய்தல் என மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்,

எதிர்வரும் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை நினைவு நாள் கடைப்பி்டிக்கப்படவுள்ளது.

IMG20181223113641.jpgIMG20181223113156.jpgIMG20181223113055.jpgIMG20181223112948.jpgIMG20181223113655.jpg

 

 

https://newuthayan.com/story/15/ஆழிப்பேரலை-நினைவேந்தலுக்கு-தயார்-படுத்தப்படும்-நினைவுச்-சதுக்கம்.html

சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன்

1 month 4 weeks ago
எம்மை வைத்து எமது கண்ணையே குத்த வைக்க அங்கயன், டக்ளஸ், மகேஸ்வரி என ஆட்கள் இருக்கும் போது சிங்கள கட்சிகள் ஆட்சி என்பது சாத்தியமானது தான். ரனில் மகேஸ்வரி அவர்களை அமைச்சரவையில் ஒரு கண் துடைப்புக்கு நீக்கி விட்டு பின்னர் அமைச்சர் ஆக்கியதில் இருந்து தெரிய வேண்டாம் அவரின் உசுப்பு பேச்சால் வடக்கு மக்களின் வாக்குகளை சூறையாடலாம் என்பதாக கூட இருக்கலாம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

1 month 4 weeks ago
உண்மையை கதைப்போமாயின் .. கூத்தமைப்பில் அரசியல்/சட்டம் தெரிந்தவர்கள் இன்று சம்பந்தரும், சுமந்திரரும் மட்டும்தான்! .... அதில் ஒன்றுக்கு சேடம் இழுக்க தொடங்குகிறது, மற்றதை "மீண்டும் புலி முகமூடி போட்டு சிங்கள தேவைக்காக போடப்படுமாயின் ... .... மிகுதி இருப்பது என்னையும், மாவையும் போன்ற மாங்காய்களும் தேங்காய்களும்தான்!

பூரண தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது!

1 month 4 weeks ago
கைப்பற்றப்பட்ட போது மதுபானப் போத்தல்கள் 113. நீதிமன்றுக்குக் கொண்டுசெல்லப்போவது 47. 66 மதுபானப் போத்தல்களுக்கு என்னதான் நடந்திருக்கும்.....

கடவுள் உண்டா?

1 month 4 weeks ago
கடவுள் இருக்கின்றார் அல்லது இல்லை அல்லது எங்கயாவது போய்விட்டார் என்பதுக்கு அப்பால் சமயம் அது சார்ந்து மொழி பண்பாடு கட்டிடக்கலை வரலாறு சித்தர்கள் இயற்க்கை மருத்துவம் அறநெறிகள் போன்ற பல விசயங்கள் கடவுள் என்ற கருவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. அதே நேரம் சாதியம் ஏற்றதாழ்வுகள் மூட நம்பிக்கைகள் போன்ற பல எதிர்மறை விசயங்களும் பின்னப்பட்டுள்ளது. கடவுள் உண்டா இல்லையா அவரை நேசிப்பதா வெறுப்பதா என்ற அணுகுமுறை பொருந்தாது. மாறாக இக்கேள்விகளுடன் கடவுள் என்ற ஒரு விசயத்தை நன்மைக்காக பயன்படுத்துவது ஆரோக்கியமானது. ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணாஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள்மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதேமாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளேநாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதைநாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனேதேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனேசேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே.......... சொல் விளக்கம் .........ஏவினை நேர்விழி ... அம்பினை நிகர்க்கும் கண்களை உடையமாதரை மேவிய ஏதனை ... மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை,மூடனை நெறி பேணா ஈனனை ... மூடனை, ஒழுக்கம் இல்லாதஇழிந்தோனை,ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை,மோழையை ... மடையனை,அகலா நீள் மாவினை மூடிய ... என்னைவிட்டு நீங்கா தீவினைமூடியுள்ளநோய்பிணி யாளனை ... நோயும் பிணியும் கொண்டவனை,வாய்மை யிலாதனை ... உண்மை இல்லாதவானை,இகழாதே ... இகழ்ந்து ஒதுக்காமல்மாமணி நூபுர சேதள தாள் ... சிறந்த மணிகளாலான சிலம்புள்ளஉன் பாதங்களை,தனி வாழ்வுற ... ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெறஈவதும் ஒருநாளே ... தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ... புலவர்கள் பாடியநூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்புகல் குற மாதை ... முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியைநாடியெ கானிடை கூடிய சேவக ... விரும்பிச் சென்று காட்டிலேகூடிய வீரனேநாயக மாமயில் உடையோனே ... தலைவனே சிறந்த மயில்வாகனனேதேவி மநோமணி ஆயிப ராபரை ... தேவி, மனோன்மணி,அன்னை, பராபரை,தேன்மொழி யாள்தரு சிறியோனே ... தேன் மொழியாள் உமையின்சிறுமகனேசேணுயர் சோலையின் ... விண்வரை உயர்ந்த சோலைகளின்நீழலி லேதிகழ் ... நிழலினிலே வளங்கும்சீரலை வாய் வரு பெருமாளே. ... திருச்செந்தூரில் அமர்ந்தபெருமாளே. (மூலம்: http://www.kaumaram.com/thiru/nnt0036_u.html)

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்

1 month 4 weeks ago
இவ் ஆக்கம் யாழ் கள உறவால் யாழில் எழுதிய ஆக்கமும் அல்ல, அவ் உறவால் யாழில் இணைக்கப்பட்ட பதிவும் அல்ல. இன்னொரு இணையத்தில் எழுதப்பட்ட கிருபனால் இணைக்கப்பட்ட பதிவு இது. அத்துடன் இப் பதிவையும் யாழ் களத்தில் எழுத பயன்படுத்தும் உறுப்பினர் பெயரில் அத் தளத்தில் எழுதப்படவும் இல்லை. புலப்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் தாயக மக்களையும் வரட்டுத்தனமான பார்வையினூடாக அணுகப்பட்ட ஒரு half boiled பதிவொன்றுக்கான என் கருத்தே அது. அதை எதிர்கொள்ள முடியாமல் ஒரு பொறுப்பாளர் எப்படி இப்படி எழுத முடியும் என நமுத்துப் போன கேள்வியை மட்டுமே உங்களால் கேட்க முடிகின்றது. அத்துடன் என் பதிலில் பண்பற்ற வார்த்தை பிரயோகம் எங்கிருக்கின்றது எனக் குறிப்பிட்டால் நல்லது.

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்!

1 month 4 weeks ago
ஆமியும் எவ்வளவு காலம் சும்மாய் இருக்கிறது?...அவர்களுக்கும் வேலை வேண்டும் அல்லவா

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்

1 month 4 weeks ago
அங்கிருந்து வெளி நாட்டுக்கு வந்தவுடன் ஒரு வித தயக்கம் வந்து விடுகிறது....ஊரில் இருப்பவர்களுடனான இணக்கப்பாடு குறைகிறது. இடை வெளி அதிகரிக்கின்றது .வேலை,குடும்ப பொறுப்புகள் இங்கிருப்பவர்கள் அங்கிருப்பவர்களோடு நேரத்தை செல விட முடியாமல் உள்ளது. அங்கிருப்பவர்களும்,வெளி நாட்டில் இருப்பவர்களை பணம் காய்சி மரமாய்த் தான் நினைக்கிறது ...அங்கிருப்பவர்களுக்கு எப்படித் தான் எடுத்துச் சொன்னாலும் நிலைமை புரியாது...இத்தனைக்கும் அங்கிருப்பவர்கள் எங்களை விட வசதியாக இருக்கிறார்கள்.. இனம் அழிய போகிறது,கலாச்சாரம் கெடுகிறது என்று கவலைப் படுகின்ற எத்தனை பேர் ஊரில் போய் இருக்க போறார்கள்?... இங்கே இருந்து போய் கெத்துக்😎 காட்டினால் அங்கிருப்பவர்கள் கணக்கெடுக்க மாட்டார்கள் தான்...அங்கே போய் இருக்க விரும்பினால் அமைதியாய் இருங்கள் இங்கே இருந்து கொண்டு எமது இனம் அழிய போகுது,கலாசாரம் கெடுகிறது என்று கவலைப்படுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை

இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை!

1 month 4 weeks ago
இந்தப் பாட்டுக்கும்,அவர்களது நடனத்திற்கும் சம்மந்தம் இல்லை...அது தான் நான் சொல்ல வந்தது....அரை குறை உடுப்பு அணிவது அவர்களது விருப்பம்...ஆனால் தங்களுக்கு பொருத்தமாய் இருக்குதா என்று பார்த்து உடுக்க வேண்டும்