Aggregator

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

2 months ago
அநேகமாக ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

சமனற்ற நீதி ? – நிலாந்தன்.

2 months ago
ராஜ் ராஜரட்னத்தின் கைது என்பது தமிழர் புனர்வாழ்வு கழகத்துடன் தொடர்பு பட்ட ஒரு சம்பவம். அவரும் குடும்பமும் நீண்ட காலமாக தமிழ் தேசியத்துடன் வாழ்ந்தவர்கள். நன்றாக திட்டமிட்டு கைது பண்ணி உள்ளே தள்ளிவிட்டார்கள்.

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

2 months ago
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம் நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்கி வெடித்துச் சிதறியதாகவும் இதனாலேயே இவ்விழப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஐப்பசி 7 ஆம் திகதி நடத்திய பயங்கவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நேரடியாக யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களை விடவும் மேலும் அமெரிக்க சீல் விசேட படைகளின் இரு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் கடல் விபத்தொன்றில் அண்மையில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினை காசாவிற்குள் மட்டுப்படுத்திவிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வாறான தாக்குதல்கள் பரந்த மத்திய கிழக்குப் போராக மாற்றிவிடக் கூடியன என்று கருதப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து ஈரான் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் அமெரிக்க செனட்டர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

2 months ago

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்கி வெடித்துச் சிதறியதாகவும் இதனாலேயே இவ்விழப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஐப்பசி 7 ஆம் திகதி நடத்திய பயங்கவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நேரடியாக யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களை விடவும் மேலும் அமெரிக்க சீல் விசேட படைகளின் இரு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் கடல் விபத்தொன்றில் அண்மையில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினை காசாவிற்குள் மட்டுப்படுத்திவிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வாறான தாக்குதல்கள் பரந்த மத்திய கிழக்குப் போராக மாற்றிவிடக் கூடியன என்று கருதப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து ஈரான் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் அமெரிக்க செனட்டர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

2 months ago
நிச்சயமாக இல்லை. போராட்டம் என்றால் எதிர் தரப்பின் ரகசியங்களை அறிய மறு தரப்பு ஒரு சிலரை உளவாளிகளாக பயன்படுத்துவது உலக வழமை. அவ்வாறு உளவாளிகளாக செயற்பட்ட பலர் தண்டிக்கப்பட்டார்கள். அதை விட காட்டி கொடுப்போர் துரோகிகள் என்ற பெயரில் எத்தனையோ அப்பாவி மக்களும் பலியிடப்பட்டது அனைவரும் அறிந்த உண்மையே. மக்கள் மீது பழி போடுவது தவறானது. மக்கள் தமது சக்திக்கு மீறி தமக்கு மேல் சுமத்தப்பட்ட எல்லா சுமைகளையும் தாங்கி அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். மக்கள் போராட்டத்தைக்கு அளித்த பங்களிப்பு அபரிமிதமானது. மக்ககளின் அதியுர் பங்களிப்பே தமிழர்களின் பேரம் பேசும் வலுவை உயர்ததியது. ஆனால் அதன் பலனாக அவர்களுக்கு கிடைத்தது……… அரசியல் ரீதியான இன்றைய அவல நிலை. பாவம் இனியும் இப்படியான உசுபேற்றி அரசியல்வாதிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் செய்தது போலவே எதிர் காலத்திலும் இவர்கள் தமது நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பு கூற மாட்டார்கள். மக்கள் மீது பழி கூறி விட்டு தப்பித்து கொள்வார்கள்.

புது வரவு

2 months ago
நன்றி இணையவன் ஓம் நிறையப் புது முகங்கள் நேரம்கிடைக்கும்போது எட்டிப்பார்த்துட்டு போனதால பல பழைய முகங்கள் இன்னும் மறக்கவில்லை உங்கள் பதிவுகள்கூட வாசிச்சிருக்கிறன் 👍 வணக்கம் சிறியார் எப்படி இருக்கிறீங்க? வணக்கம் வரவேற்புக்கு நன்றி 🙏🏽 வரவேற்புக்கு நன்றி ஏராளன் 🙏🏽

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

2 months ago
மாவைக்கு முதல் பல ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தர் தலைவராக இருந்தார். அதன் பின் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தர்தான் இருக்கிறார். அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பிறகு கடந்த 10 வருடங்களாக மாவை தலைவராக இருக்கிறார். மாவை தலைவராக இருந்தாலும் தமிழருக்கட்சிக்குள் முடிவெடுக்கும் நபராக சுமத்திரனே சம்பந்தரின் தயவில் தொடர்ந்து இருந்து வந்தார்.கடந்த தேர்தலின் போது கட்சித்தலைவர் மாவைக்குத் தெரியாமலேயே தெசியப்பட்டியல் உறுப்பினராக சம்பந்தரோடு பேசி சுமத்திரன் கலையரசனை தேர்வு செய்தார். அதற்கு சிறிதரனும் உடந்தையாக இருந்தார்.

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

2 months ago
சும்மா பேசுவதற்காக அல்லது உங்கள் எழுத்து திறமையை காட்ட இங்கே பொய்களை எழுத வேண்டாம். சமாதான காலத்தில் மட்டும் எம் இனத்தால் காட்டிக் கொடுப்பட்டு கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன போராளிகள் எத்தனை பேர்?? இது எமது இனத்தின் சாபக்கேடு. இது இருக்கும் வரை விமோசனம் இல்லை. எவரும் எமக்காக வரப் போவதுமில்லை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று

2 months ago
நேற்றைய தமிழரசுக் கட்சி சர்ச்சைக்கு காரணம் என்ன? இரகசியத்தை போட்டு உடைத்த சாணக்கியன்

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

2 months ago
62 ரன்னுக்கு 7 விக்கெட்: இந்திய அணியின் வெற்றியை இங்கிலாந்து அறிமுக வீரர் தட்டிப் பறித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை ஐதராபாத்தில் இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆலி போப் பேட்டிங்கில் வலு சேர்க்க டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் இந்திய அணியை சுருட்டியிருக்கிறார். என்ன நடந்தது? இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஐதராபாத்தில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இந்தியா 436 ரன்களை சேர்த்தது. யசஷ்வி ஹெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86, ஜடேஜா 87 ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் தனி ஆளாக சாதித்த ஆலி போப் 190 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஒருபக்கம் இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுபுறம் களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தார் ஆலி போப். அவரைத் தவிர்த்து இங்கிலாந்து தரப்பில் எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. நிதானமாக விளையாடி சதத்தை பதிவு செய்தார் ஆலி போப். இந்திய அணியின் பவுலர் ஆலி போப்பை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டாகத்தான் அவரை இந்திய வீரர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. அப்போது ஆலி போப் 196 ரன்களை விளாசியிருந்தார். பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டான அவர் வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை நழுவவிட்டார். ஆலி போப்பின் சிறந்த பங்களிப்பால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களை சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் அசத்திய அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே 231 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார் இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே. யஷஸ்வி ஹெய்ஷ்வால், சுப்மன் கில், ரோஹித் சர்மா, அக்சர் படேல் என அவர் வரிசையாக விக்கெட்டுகளை சாய்த்தார். 42 ரன்னில் தொடக்க விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி அடுத்த 78 ரன்களில் 7 விக்கெட்டுகளை தாரை வார்த்துவிட்டது. மிடில் ஆர்டரில் வந்த வீரர்களாலும் நிலைத்து ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பர் பரத்தும் ஆல் ரவுண்டர் அஷ்வினும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஆனால் அந்த கூட்டணியையும் உடைத்துவிட்டார் டாம் ஹாட்லே. இந்தியாவின் இறுதி நம்பிக்கையாக அஷ்வின் மட்டுமே இருந்தார். அவரும் டாமின் பந்துவீச்சில் அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். பும்ராவும் சிராஜும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் டாம் ஹார்ட்லே மூலம் விக்கெட் எடுக்கச் செய்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஆலி போப் இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல்முறை. இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே அறிமுக ஆட்டத்திலேயே கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லே 131 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை அளித்தார். வெறும் 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி 5 மெய்டன் ஓவர்களை வீசியதோடு 7 இக்கெட்களையும் சாய்த்து அமர்க்களப்படுத்தினார். இதேபோல, சரிவில் இருந்து அணியை மீட்டு பேட்டிங்கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலி போப் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்திய மண்ணில் 2வது இன்னிங்ஸ்களில் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே 230 ரன்களை சேசிங் செய்ய முடிந்திருக்கிறது. கேப்டன் ரோகித் பேசியது என்ன? முதல் டெஸ்டில் கிடைத்த தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, டாப் ஆர்டர் சரிந்ததே தோல்விக்கு காரணம் என்றார். "190 ரன்கள் முன்னிலையில் இருந்தவரை ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ஆலி போப் மிகச் சிறப்பாக விளையாடினர். நான் பார்த்ததிலேயே இந்திய ஆடுகளத்தில் அவர் ஆடியது சிறப்பான ஆட்டங்களில் ஒன்று. 230 ரன்களை எடுத்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் முடியவில்லை. எங்கள் பேட்டிங் நன்றாக இருக்கவில்லை. லோயர் ஆர்டரில் வந்தவர்கள் போராடினார். டாப் ஆர்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்த்தினர்" என்று ரோகித் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் கருத்து இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியில் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "நான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த வெற்றிகளிலேதே இந்த வெற்றிதான் மகத்தானது" என்று தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. https://www.bbc.com/tamil/articles/cd1942034plo

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

2 months ago
வெஸ்ட் இண்டீசில் இருந்து அடுத்த வேகப்புயல் - அறிமுக தொடரிலேயே ஆஸ்திரேலியாவை சாய்த்தது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர்? என்ன நடந்தது?. காபா மைதானத்தில் ஒருவித நிசப்தம். ஆஸ்திரேலிய கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. 2வது டெஸ்டை வெல்ல 9 ரன்கள் மட்டுமே தேவை. 91 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் தனி ஆளாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தார். அதுவரை ஸ்மித் எதிர்கொண்டிருந்த அந்த ஓவரின் 5வது பந்தை ஹேசில்வுட் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துல்லியமாக பந்தை வீசினார் ஷமர் ஜோசஃப். பந்து பேட்டை கடந்து ஸ்டம்புகளை சிதறடித்தது. 27 ஆண்டுகள்... ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையிலேயே வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு 27 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. போட்டியை வென்ற உற்சாகத்தில் ஷமர் ஜோசஃப் உணர்ச்சிப்பெருக்கில் காபா மைதானத்தை சுற்றி ஓட, வீரர்களையும் அவரை ஆரத்தழுவி வெற்றியை கொண்டாடினர்.. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கள் குளமாகிப்போனதையும் காண முடிந்தது. கார்ல் ஹூப்பர் அழுதேவிட்டார். ஆதம் கில்கிறிஸ்ட் வர்ணணை அரங்கில் இருந்தவாறு வெஸ்ட் இண்டீசை மனதார பாராட்டினார். 24 மணி நேரத்திற்கு முன்பு பெருவிரலில் அடிபட்டு வெளியேறிய அதே ஷமர் ஜோசஃப் வெஸ்ட் இண்டீசுக்கு வரலாற்று வெற்றியை தேடித் தந்திருக்கிறார். முதல் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கி தான் வீசிய முதல் பந்திலேயே தலைசிறந்த டெஸ்ட் ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றி பலரையும் பிரமிக்க வைத்த ஷமர் இந்த முறை 11.5 ஓவர்கள் மட்டுமே வீசி ஒன்றல்ல இரண்டல்ல 7 விக்கெட்களை சாய்த்து ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றிருக்கிறார். காயத்தில் பாதிக்கப்பட்ட போதும் தனது அணியை வெற்றிபெற வைத்துள்ளார் ஷமர் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி காபா டெஸ்ட் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை படைத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் ஆட்டம் காபாவில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 289 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. பேட்டிங்கின்போது ஸ்டார்க் வீசிய அதி வேக யார்க்கர் பந்து ஷமர் ஜோசஃப் பெருவிரலை பதம் பார்க்க, வலியில் துடித்த ஷமர், விளையாட முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவர் விளையாடுவது சந்தேகம் என்றே முதலில் பேசப்பட்டது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. வலியை பொருட்படுத்தாது பந்துவீச்சுக்கு தயாரானார் ஷமர் ஜோசஃப். 11.5 ஓவர்களை வீசி அடுத்தடுத்து 7 விக்கெட்களை அவர் சாய்க்க, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ். இதுகுறித்து பேசிய ஷமர் ஜோசஃப், உண்மையை சொல்ல வேண்டும் எனில், காலையில் இருந்தே நான் இந்த மைதானத்தின் பக்கம் வரவே இல்லை. என் மருத்துவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் விரலை அவர் ஏதோ செய்தார். நிச்சயமாக அவர் என்ன செய்தார் எனத் தெரியாது. நான் களத்திற்குச் சென்றேன். என் அணியை வெற்றிபெற வைத்தேன் என போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் என் கண்கள் குளமாகின. ஆனால் நான் ஏற்கனவே முதல் டெஸ்டில் அழுதுவிட்டேன் என ஷமர் ஜோசஃப் கூறினார். முதல் டெஸ்டிலும் ஷமர் ஜோசஃப் 5 விக்கெட்களை சாய்த்திருந்தார். ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைதொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர். ஷமர் ஜோசஃப் பின்னணி என்ன? முன்னணி கிரிக்கெட் ஊடகமான கிரிக்பஸ் இணையதளத்தின் படி, ஷமர் ஜோசஃப் 1999ம் ஆண்டு பிறந்தவர். கயானாவில் பரகாரா எனும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர். தந்தையுடன் மர வேலைக்குச் செல்வதும், கட்டட தொழில், காவலாளி என கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார் ஷமர் ஜோசப். "எங்கள் கிராமத்தில் வசதிகள் குறைவு. தரமான கிரிக்கெட் பந்துகள் கிடைக்காது. நாங்கள் பழங்களையும் சில சமையம் பிளாஸ்டிக் பாட்டில்களை உருக்கி அதை பந்து வடிவத்திற்கு கொண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவோம்" என்கிறார் ஷமர் ஜோசஃப்பின் உறவினரான ஓர்லாண்டோ டான்னர்(Orlando Tanner). ஷமர் ஜோசஃப் உள்பட பரகாராவில் உள்ள எந்த குழந்தைகளுக்கும் பெரியளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வசதிகள் இருந்ததில்லை என்றும் ஓர்லாண்டோ டான்னரை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "2018 வரை இண்டெர்நெட் என்றால் என்ன வென்றே தெரியாது. நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஸ்மார்ட் ஃபோன்களைக் கண்டு என்ன இது என ஆச்சரியப்பட்டேன். சிறிது பணத்தை சேகரித்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கி அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருந்தது" என ஷமர் ஜோசஃப் கிரிக்பஸ் இணையளத்திற்கு தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துளார். பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல என கூறியுள்ளார் ஷமர் கிரிக்கெட் வாய்ப்பு 2023-ல் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஜோசஃப் ஷமருக்கு கிடைத்தது. அதுதான் அவரது முதல் தர கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட்களை கைப்பற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார். 2023 கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் நெட் பவுலராகும் வாய்ப்பு ஷமருக்கு கிடைத்தது. அப்போது அவருக்கு பயிற்சியாளரும் கிரிக்கெட் வல்லுநருமான இந்தியாவைச் சேர்ந்த பிரசன்னா உடன் தொடர்பு ஏற்பட்டது. பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல. சிபிஎல்லில் நெட் பவுலராக இருக்கும்போது அவரை சந்தித்தேன். நான் இரண்டு பந்துகள் தான் வீசியிருப்பேன். பிரசன்னா என்னிடம் வந்து நீ ஏன் கயானா அணியில் இல்லை என கேட்டார். நான் திகைத்துப்போனேன். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. சிபிஎல் தொடரிலும் டெஸ்ட் ஆட்டத்திலும் நீ விரைவில் விளையாடுவாய் என பிரசன்னா கூறியதை கிரிக்பஸ் உடனான நேர்காணலில் பகிர்ந்தார் ஜோசஃப் ஷமர். இதே விஷயத்தை பிரசன்னாவும் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நெட் பவுலராக வந்த ஷமரை அணியில் எடுக்கும்படி கூறினேன். என் மீது நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தார்கள். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக வருவார் என இரண்டே பந்துகளில் கணித்தேன் என பிரசன்னா கூறினார். ஒரு மாதத்திற்கு முன்பு, ரவிச்சந்திரன் அஷ்வினுடனான கலந்துரையாடலிலும் ஷமர் ஜோசஃப்பின் திறமைகள் குறித்து பிரசன்னா பேசினார். "ஷமர் ஜோசஃப் அடுத்த ஒரு வருடத்தில் எங்கிருப்பார் என்பதை பாருங்கள். ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஐபிஎல் ஏலத்தின்போது என்னிடம் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளரை பரிந்துரைக்கச் சொன்னார். நான் ஷமர் ஜோசஃபை பரிந்துரைத்தேன்." என்றார் அவர். மிக குறுகிய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்த ஷமர் ஜோசஃப் இன்று தனக்கான வரலாறையும் ஆஸ்திரேலியாவில் படைத்திருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cldqe5kdkvgo

தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்

2 months ago
நான் வேறு ஓருவர் என்ற எனது விருப்பத்தைத் தெரிவு செய்திருந்தேன். ஆனால் சுமத்திரன் சிறிதரன் என்று வரும் போது எனது தெரிவு சிறிதரன் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.