Aggregator

பாரை மீன் ரோஸ்ட் / Bake -நிழலி

1 month 4 weeks ago
முழு king fish (அறுக்குளா?) அளவில் பெரிசா இருக்குமே? சிவப்பு விளையை இப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்குமென என் சகளை சொன்னார். தலையை தனியாக வெட்டித்தான் வாங்கினனான். அடுத்த முறை தலையுடன் செய்து பார்க்க வேண்டும். தயார் செய்ய பெரியளவு நேரம் எடுக்காது, ஆனால் bake பண்ணத்தான் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் எடுத்தது. நான் லைட்டா ஒரு முட்டை பைத்தியம்..அத்துடன் வேறு ஒன்றும் மத்தியானத்து சாப்பிடவில்லை (சோறு கறி எதுவும் சாப்பிடவில்லை)

புட்டுக்குழல்

1 month 4 weeks ago
புட்டுக்குழல் “மடத்தர டிக்கெட் எறங்கிக்கொள்ளு” “ணங்க் ணங்க் ணங்க்” என்ற மணிச் சத்தத்தோடு ஜலதோசம் பிடித்த கனத்த குரல்.கடைசி இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாய் நல்ல உறக்கத்தில் இருந்தான் முத்தையா. கடைசி இருக்கைக்கும் அதற்கு முந்தைய இருக்கைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் பிளாஸ்டிக்,அலுமினிய பாத்திரங்கள் அடங்கிய சாக்குப்பை.சாக்கினுள் புட்டுக்குடம்,புட்டுக்குழல் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய பாத்திரங்கள்-எதெடுத்தாலும் இருபது ரூபாய். விளக்கொளி கொடுத்த கண்ணெரிச்சலோடு ஆங்காங்கே தலைகள் உருண்டன.மூன்றுமுறை சத்தம் கொடுத்த நடத்துனர் விறுவிறுவென கடைசி இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “ஈ பாண்டி மாருக்கு கண்ணடைச்சா பின்ன தொறக்குல்ல,”முனங்கிக்கொண்டே சென்று வாய் பிளந்து கிடந்தவனின் காலில் ஒரு தட்டு தட்டி எழுப்பினார்.சுற்றிலும் சாராய நெடி. “டா எனிக்கி” பட்டென்று விழித்த பதற்றம் உடலெங்கும் தொற்றிக்கொள்ள வழிந்த கோளையை சீசன் துண்டால் துடைத்துக்கொண்டு,அவிழ்ந்து கிடந்த சாரத்தைக் கட்டிக்கொண்டான். “இப்பந்தான் கண்ணு மூடுனமாதி இருந்துது அதுக்குள்ள கொண்டாந்துட்டாரய்யா சேட்டா,” சொல்லிக்கொண்டே பாத்திர மூட்டையை நடைபாதைக்கு நகர்த்தினான். ”டோ.வண்டி பிரேக் ஜாமாயி ரெண்டு மணிக்கொரு லேட்டு. வேகம் வா,”என்ற நடத்துனரின் அதட்டல் இன்னும் பரபரப்பாக்கியது. “லேட்டா…”எண்ணிக்கொண்டே, பாத்திர மூட்டையை தூக்க முடியாமல் மெல்ல நகர்த்திக்கொண்டு வந்தான்.பாதி தூரம் கடக்கையில் ஒரு காலை நடைபாதையில் நீட்டியவாறு உறங்கிக் கொண்டிருந்த தடித்த யுவதியின் காலில் இடித்து கண்டுகொள்ளாமல் முன் நகர்ந்தான். “எண்டம்மே ஏது பிராந்தம்மாரா,”என்று அபலக்குரல் கொடுத்த அந்தப் பெண்மணி கண் திறக்காமலே காலை உள்ளே இழுத்துக்கொண்டார்.திரும்பிப் பார்க்காமலே ஓட்டுநர் இருக்கை அருகேயிருந்த வாயிலை அடைந்தான். “என்ன டிராபிக் ஜாம் சேட்டா?” “எறங்குடா.சமயம் ஆவுன்னு,” வெடித்து விட்டார் ஓட்டுநர். இறங்கும் இடத்தில் சிறிய பள்ளத்தில் நீர் தேங்கியிருந்தது.”நல்ல மள போலுக்க”சாக்குப் பையை கீழே வைக்க வழியில்லாமல் அப்படியே தூக்கி வைத்துக்கொண்டு பள்ளத்தில் கால் வைக்கவும் வண்டி நகர்ந்தது.எதிர்பார்த்ததைவிட அரையடி ஆழம் கூட இருந்திருக்கும்.நிலைகொள்ளாமல் கால் பிசகி விழுந்தான்.பாத்திர மூட்டை பொத்தென்று தூரத்தில் போய் விழுந்தது.பாதி நனைந்த சாரத்தைத் தூக்கிக் கட்டிக்கொண்டு பதறியவனாய் மூட்டையை உற்று நோக்கினான். “பாத்திரத்துக்கு ஒன்றும் ஆகவில்லை.அதுவும் புட்டுக்குழலுக்கு ஒன்றுமில்லை”மனதிற்குள் ஆசுவாசம். அப்படியே அருகில் கிடந்த கல்லில் அமர்ந்து பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான்.குளிர்ந்த காற்றில் நீர்த்துளிகள் விரவியிருந்தன.கண்மூடி வான் நோக்கினான்.இரண்டு நிமிடத்தில் பத்துப் பதினைந்து துளிகள் விழுந்திருக்கும்.தூரத்தில் சுந்தரேட்டன் கடை மட்டும் விழித்திருந்தது.துண்டால் முகத்தைத் துடைத்துத் தலையில் கட்டிக்கொண்டு,பாத்திரச் சாக்கை மேலேற்றி சுந்தரேட்டன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். “சுந்தரேட்டன் என்ன இன்னும் கட அடைக்காம இருக்காவ. ஒரு கடுங்காப்பி குடிக்கலாம்.இல்லனா மீந்துன புரோட்டா கெடந்தாலும் திங்கலாம்,”சப்புக் கொட்டிக்கொண்டு வேகமான நடை. சாலையின் இருபக்கமும் மொத்தம் இருபது கடைகள் இருக்கலாம்.எதிர்த்த வரிசையின் கடைசிக் கடையான சுந்தரேட்டன் ஹோட்டலின் அழுக்கேறிய குண்டு பல்பின் வெளிச்சம் தவிர்த்து மூன்று தெரு விளக்குகளின் மினுக்கம்.அடைத்த கடைகளின் முன்னால் அழுக்குத் துணியால் மூடப்பட்ட சடலங்களாய் மனிதர்கள்.மூன்றாவது விளக்கடியில் ஒரு மெலிந்த நாய் வால் சுருட்டி குரைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றது.தடித்த மரக்கட்டைகள் ஏற்றிய சரக்கு லாரியொன்று நிதானமான உறுமலுடன் திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.உள்ளுக்குள் சட்டை களைந்த கருத்த இரு உருவங்கள். மூட்டையைக் கைப்பற்றியிருந்த இடத்தில் ஏதோ விசித்திரமாகத் தெரிய தடவிப் பார்த்தான்.பாத்திரத்தில் நெளிசல்.அய்யய்யோ புட்டுக் குழலாக இருக்குமோ”பதற்றம் தொற்றிக் கொண்டது.ஆயிஸா கருத்த முறுவிய இதழோடு ஒரு கணம் தோன்றி”சேட்டா எனிக்கொரு புட்டுக்கொழல் வாங்கித் தராமோ”என்று கூறி மறைந்தாள்.உடலெங்கும் சிலிர்த்தது.புட்டுக் குழலாக இருக்கக் கூடாது- வேண்டிக்கொண்டே கடையில் மூட்டையை இறக்கினான். தூரத்தில் வரும்போது தெளிவில்லாமல் கேட்ட சுந்தரேட்டன் மனைவியின் முனங்கல் அடங்கியிருந்தது. “ஆரு? முத்தானு.வா வா வா எந்து இத்தர லேட்டாயி”சுந்தரேட்டன் புன் முறுவினார். “எதோ டிராபிக் ஜாம்ன்னாங்க.என்னனு தெரியல சேட்டா. நா நல்லா ஒறங்கிட்டேன் பாத்துக்கிடுங்க.கட்டென் எதும் கெடக்கா”துண்டை உதறி பெஞ்சில் போட்டு அமர்ந்தான். “இப்பதா களுகி எடுத்து.வேணும்னா வச்சு தரான்”பீடி இழுத்துக்கொண்டே கூறியதால் கன்னம் இரண்டும் உட்புறம் ஒட்டி சேட்டனின் குரல் வித்தியாசமாயிருந்தது. “இல்லனா வுடுங்க.சவத்தப்போட்டு இப்பம் குடிச்சிக்கிட்டு.போயி ஒறங்க வேண்டியதான்.என்ன சேச்சி ஒண்ணும் பேச மிண்டுக்காவ” “எந்த பறயாம் முத்தே.ஒறக்கம் வருந்நு”என்றவளை நோக்கிய சேட்டனின் பார்வை விசித்திரமாய்த் தெரிய ஏதோ காரசாரமான விவாதம் நடந்திருக்க வேண்டும் என்று யூகித்தவனாய் கிளம்ப எத்தனித்தான்.சட்டென பேச்சை மாற்ற எண்ணிய சேட்டன் “எந்தா பாத்திரம் கொறவாணல்லோ” என்றார். “ஆமா சேட்டா.ஊருக்கு கொண்டு போன துட்டு ரெண்டே நாள்ல காலி.வரும்போது சேத்துப் போட்டிருந்த பழய பித்தளைய போட்டுதான் சரக்கெடுத்தேன்.தெங்காசில திரவியம் அண்ணாச்சி அந்த பித்தள போவ ஆயிரம் ரூவாக்கி சரக்கு தந்தாவ.இல்லனா இதும் கெடச்சிருக்காது.இதவச்சிதான் இந்த வாரத்த ஓட்டனும்” “அப்பிடி எந்தா செலவு” “நல்லா கேட்டிய.நா வாரேன்னு தெரிஞ்சாலே என் வீட்டுக்காரிக்கு மொதல்ல தெங்காசிக்கு போயி சாப்புடணும்.படம் பாக்கணும்.பெறவு பஜார்ல போயி சப்பு சவர்னு அள்ளிக் கெட்டிக்கிடுவா.வீட்டுக்கு வந்ததும் சீட்டு,வாரவட்டி,மஞ்ச மசால் எல்லாம் முடிஞ்சதும் மிச்சம் இருக்கத சரக்கெடுக்க கொண்டு வரலாம்னு பாத்தா ஊர்ல கெடக்க அவ்ள படுக்காளிப்பயலுவளும் குடிக்கணும்பானுவ.வேங்கி குடுக்காம இருக்க முடியுமா? பெறவு சரக்கெடுக்க எவன்ட்டயாது கடந்தான் வாங்கணும்.நல்ல வேளக்கி இந்ததடவ கொஞ்சம் பழய பித்தள கெடந்துது” இதைக் கூறி முடிப்பதற்குள் சேட்டன் மூன்றுமுறை கொட்டாவி விட்டிருந்தார்.சேட்டனின் மனைவி வேறெங்கோ முகம் திருப்பி அமர்ந்திருந்தார். “செரி சேட்டா போயி ஒறங்குதேன்.காலைல காணூரு போணும் கச்சோடத்துக்கு”என்றவன் சாக்கு மூட்டையைத் தலையில் தூக்கிக்கொண்டு தூரத்தில் தெரிந்த கடைசி தெருவிளக்கு கடந்து இருட்டிற்குள் நுழைந்தான்.சற்று தூரம் சென்றதும் முஸ்லீம் ஜமாத் மஸ்ஜீத்தின் சிறிய விளக்கொளி.அது கடந்து தலை குப்புற இறங்கும் பள்ளத்தில் அரை கிலோமீட்டர் நடை.முதலாளி வீட்டின் துறுவேறிய கருத்த அகலமான கம்பி கேட்டின் மேல் சிறிய மஞ்சள் விளக்கொளி.உள் தாட்பாள் விலக்கி நுழைந்து மீண்டும் தாட்பாளிட்டான்.ஈரக்காற்றில் பறந்தது விசித்திரமான துருவேறிய கதவொலி.விறுவிறுவென முதலாளி வீட்டையொட்டிய இடுக்குவழி புறவாசலடைந்தான்.புற வாசலுக்கு எதிரே அவன் தங்கும் தேங்காய் அடைத்து வைக்கும் அறை.அதையொட்டி செம்புரைக்கல்லால் கட்டப்பட்ட மேற்கூரையற்ற கழிப்பறை.பூசாத சுவரெங்கும் பாசி பற்றியிருந்தது.அறைக்குள் நுழைந்ததும் கடந்த வாரம் பறித்துப் போட்ட தேங்காய் குவியல் பரப்பிய மணம் விகாரமாயிருந்தது.சுவரெங்கும் பாத பித்த வெடிப்புகளாய் பரவியிருந்த வெடிப்புகளில் பூஞ்சை பிடித்திருந்தது.மூட்டையை மெல்ல இறக்கி திண்டு போலிருந்த கல்லில் வைத்தான். புற வாசல் கதவு விளக்கு மினுக்கத்துடன் திறந்தது.முதலாளி மனைவி. “எந்தா முத்தே.இத்திர லேட்டாயி”கண் கசக்கினாள். “ஈ பஸ்ஸு கேடாயி.அதான் லேட்டு.நீங்க போயி ஒறங்குங்க” “நல்ல சமயத்து வந்நு.சேட்டன் திருவனந்தபுரத்து போயி.ஞான் தன்னயா” “செரி அப்பம் நான் வாசலுல படுத்துக்கிடுதேன்” “ம்ம்ம்”புறவாசல் கதவடைந்தது. ஆயிஸாக் குட்டிக்காக மெனக்கெட்டு புட்டுகுழல் வாங்கிக் கொண்டுவந்தது திடீரென நினைவில் வந்ததும் வெட்கத்துடன் உடல் சிலிர்த்தது.சாக்குப்பையைத் திறந்து புட்டுக்குழலை எடுத்தான்.குடம் பளபளவென மின்னியது ஆயிஸாக் குட்டியின் கன்னமென.ஆனால் புட்டுக்குழலின் உச்சியிலிருந்த சிறிய நெளிசல் கண்டு மனம் சுருங்கியது.”ஆயிஸாக் குட்டி கொஞ்சம் பொறுத்துக்கிடணும்”அடுத்த கணமே புன்சிரி. பரணில் கிடந்த போர்வையை எடுத்துக்கொண்டு வந்து முன்வாசல் வந்து திண்டில் விரித்தான்.திண்டுக்கடியில் கிடந்த பலாப்பழ வாசம் மழை நீர் வாசத்தோடு கலந்து சுகந்தமாய் பரவியிருந்தது.இழுத்துமூடி படுத்ததும் கருத்த மை பூசிய கண் தாழ்த்தி சிரித்தாள் ஆயிஸா.”வா சக்கக்கறியுண்டு.கயிச்சுட்டுப்போ”என்கிறாள்.முத்தையாவிற்கு மூச்சு முட்டியது.சுருண்டு படுத்துக்கொண்டான்.அவளிடம் சந்தித்த பொழுதுகள் ஒவ்வொன்றாக மனதை ஆக்கிரமித்தன. வெயில் வெடித்து மஞ்சள் நிற ஒளி பரப்பியிருந்த நண்பகல் வேளையில் பச்சை மரங்களினூடே தெரிந்தது அந்தச் சிறிய ஓட்டுவீடு.சுற்றிலும் மூங்கில் வேய்ந்த வேலி.வீட்டின் பின்னால் சிறிய கிணறு.அதையொட்டி அடுக்களை.தூரத்தில் விலக்கி வைத்ததுபோல் பூசாத சுவருடைய கழிப்பறை. ”எதெடுத்தாலும் இருவது.எதெடுத்தாலும் இருவது”தூரத்தில் குரல் கேட்கவும் கழுவிக்கொண்டிருந்த மீனைப் பாதியிலேயே போட்டுவிட்டு வாசலில் வந்து நின்றுகொண்டாள் ஆயிஸா.சந்தன நிறத்தில் பூப்பூவாய் நைட்டி.தலையில் சிறிய துண்டு.முட்டுவரை நைட்டியை தூக்கிப்பிடித்து நின்றிருந்தாள்.முட்டிவரை மீன் செதில்கள் ஒட்டியிருந்த கையில் முறிந்துபோன மீன் பொறிக்கும் கரண்டி.தூரத்தில் முத்தையா இரண்டு பெண்களுக்கு பாத்திரம் கொடுத்துக்கொண்டிருந்தான்.இன்னொரு வாடிக்கையாளர் கிடைத்ததில் தூரத்தில் நிற்கையிலேயே முத்தையாவுக்கு மகிழ்ச்சி. ”எப்படியும் இந்த ஊர்லேயே இன்னக்கி மொதல எடுத்துறலாம் போலுக்க”எண்ணிக்கொண்டே அவசர அவசரமாக ஆயிஸாவை நோக்கி நடந்தான்.வியாபாரக் கூடை குலுங்கியது.ஆயிஸா கண் விலக்காமல் நின்றிருந்தாள்.சிறிய நாய்க்குட்டியொன்று ஆர்வமாய் வந்து அவனுடைய காலை நுகர்ந்து பின் விலகிச் சென்றது. “சேச்சிக்கு என்ன வேணும்”கூடையை இறக்கி மேல் முடிப்பை அகற்றி காண்பித்தான். “இதப்போலொரு செறிய கரண்டி வேணும்”முற்றத்தில் காய்ந்து கிடக்கும் முற்றிய தேங்காயின் மினுக்கம் கன்னத்தில் குழைந்து சிரித்தது.தடித்த குருதிச்செம்மை உதடுகளில் சொற்கள் கொஞ்சிக் குலாவின. “ஓ.இருக்கே.எடுத்துக் காட்டினான்” “கொறச்சி வலிதானல்லோ” முகத்தை வளைத்தொரு ஏளனச்சிரி. “அவ்ள பெருசுலாம் இல்ல.அருமையா இருக்கும் பொறிக்க வைக்க.கைப்பிடிய நோக்கு எவ்ள வளவளனு இருக்கு” கரண்டியைவிட அந்த பேச்சு பிடித்துவிட்டதா? முறிந்த கரண்டி கொடுத்தது போக எவ்வளவு தரவேண்டும் என்றவள் குனிந்து நின்று வேறு பாத்திரங்களை ஆவலுடன் நோக்கினாள். சந்தன நிற உள்ளாடைக்குள் திமிறிக் கிடந்த பெண்மை அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து நிறுத்தியது.பேச்சை நீட்டிக்க வேண்டும் அல்லது அங்கேயே ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உந்தல் காசு கேட்கவில்லை.மாறாக வீட்டில் வேறு ஏதும் பழைய பாத்திரம் உள்ளதா என்று கேட்டது. “இவிட கொறச்சி பிளாஸ்டிக் உண்டு.நோக்கு”கூறிக்கொண்டே வீட்டு வாசலையொட்டி அடுக்களைக்குச் செல்லும் சிறிய சந்திற்குள் சென்றாள்.பின் பக்கம் மூட்டுவரை திரண்டிருந்த சதைத் திரள்ச்சியில் மென்மயிர் பூத்துக்கிடந்தது.பின் தொடர்ந்தான்.உடைந்த சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை குனிந்து பொறுக்கி எடுத்தாள்.வாங்கிக்கொண்டு சும்மா ஒரு சிரிப்பு. “மதியோ” “ம்ம் போதும் போதும்.குடிக்க ஏதாது இருக்கா” “தராம்”வீட்டிற்குள் துள்ளலான நடை. குடம்புளி போட்டு விளக்கிய பித்தளைச் செம்பில் கொண்டுவந்த தெளிந்த நீர் தேவாமிர்தமாய் தொண்டைக் குழிக்குள் கிணுக் கிணுகென இறங்கியது. “நீங்க தனியாதான் இருக்கிய.வீட்டுல சேட்டன் இல்லியா” “புள்ளி சவுதிலா.ரெண்டு மக்களுண்டு.மக்களு அம்ம வீட்டுக்குப்போயி”ஏகாந்தமான ராகத்தில் வார்த்தைகள் குழைந்தன. “வேற எதுவும் வேணுமா” “ எண்ட புட்டுக்குழல் லூசாயி.துணி கட்டியானு புட்டு அவிக்கின்னது.அடுத்த பிராசியம் புட்டுக்குழல் கொண்டுவராமோ” “கண்டிப்பா அடுத்த தடவ வாங்கிட்டு வாரேன் கவலைப்படாதீங்க” “அப்பம் சரி” கூடையைக் கட்டி எடுத்துக்கொண்டு கிளம்புகையில்,”சேச்சிட பேரு எந்தா?” “ஆயிஸா பேஹம்”மௌனச்சிரியில் வார்த்தைகள் மயங்கி நின்றன. “அப்பம் வரேன்”வீட்டைக்கடந்து சிறிய பள்ளத்திற்குள் பாயும் ஒத்தையடிப்பாதை தூரத்தில் தெரிந்த சிறிய கிராமத்திற்குச் சென்றது.பாதைத் தவிர எங்கும் பச்சை.மரவள்ளிக்கிழங்குச் செடி காற்றிலாடியது.பாதையைப் பார்க்காமல் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தவனின் கால் பெருவிரலில் ஆங்காரமாய் மோதியது பாதையில் குத்தி நின்ற கருத்தக் கல். “ஆஆஆ….”சாரத்தை உதறி உற்க்கத்திலிருந்து எழுந்தமர்ந்து புகைத்தான்.அந்தக் குளிரிலும் வியர்த்திருந்தது.பலாப்பழ வாசம் சுகந்தமாய் பரவி நிற்க அப்படியே உறங்கிப்போனான். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் மஸ்ஜித்தில் பாங்கு ஒலித்தது.குளிர்ந்த காற்றில் அடர்த்தியாக எழுந்து பரவிய அந்தக் கரகர குரலொலியின் ராகம் இதயத்தைக் குழைத்தது.எழும்பி கழிப்பறை சென்று வந்து விறுவிறுவென சுந்தரேட்டன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். முஸ்லீம் ஜமாத் மஸ்ஜீத்தில் தொழுகை முடிந்து வெளிவந்தது வெள்ளை முண்டுடுத்திய சிறு கூட்டம்.டீக்கடையில் காலை நேர சங்கீத ராகம் ரேடியோவில் மெல்லிய குரலில் ஒலிக்க பாய்லரின் முன்னால் நின்று புகைத்துக் கொண்டிருந்தார் சேட்டன்.”சேட்டா ஒரு சாயா” ஐந்து நிமிடத்தில் சாயா குடித்து இறங்கி நடந்தான்.வீட்டில் விளக்கு எரிந்தது.அறையில் நுழைகையில் முதலாளியின் மனைவி பேச்சுக் கொடுத்தார். ” கச்சோடம் கழிஞ்சு இன்னு உச்சைக்கு வரணும் கேட்டோ முத்தே.கொறச்சி தேங்ங பறிக்கணும்” “அதுக்கென்ன சேச்சி.இன்னைக்கு காணுர்தான் போறேன்.ரெண்டு மணிக்குலாம் வந்து பறிச்சிபுடுவேன்” முதன்முதலில் தோட்ட வேலைக்குத்தான் முதலாளியிடம் சேர்ந்திருந்தான்.நாளடைவில் ஊர்க்காரர்கள் சிலர் பாத்திர வியாபாரத்தின் சூட்சமங்களைக் கூற முத்தையாவிற்கும் ஆசை துளிர்த்தது.முதலாளியிடம் மதியம் வரை வியாபாரத்திற்குச் செல்வதாகவும்,அதன்பின் வந்து தோட்ட வேலை செய்வதாகவும் கூறினான். மூன்று வேளை சாப்பாடு,தங்க இடம் போக ஐந்தாயிரம் ரூபாய் என்று இருந்த சம்பளத்தை இரவு சாப்பாடு,தங்க இடம் போக இரண்டாயிரமாக சுருக்கி முதலாளியும் ஒத்துக் கொண்டார்.முதலாளியின் ஒரே செல்ல மகள் பெங்களுரில் படிப்பிலிருந்தாள். “பின்ன.ஆ புட்டுக்குடம் கொள்ளால்லோ” “காணுர்ல ஒரு ஆளு கேட்டிச்சினு வாங்கியாந்தன் பாத்துக்கிடுங்க.நல்லாருக்கோ” “ம்ம்ம்.எனிக்கொண்ணு வேணும்”அதன் அர்த்தம் அதை என்னிடம் கொடுத்துவிடு என்பதை அறியாதவனல்ல முத்தையா.என்றாலும் அடுத்தமுறை வாங்கி வருவதாகக் கூறி சமாளித்தான்.மூங்கில் கூடைகளில் பாத்திரத்தைக் கட்டி தலையில் தூக்கிக்கொண்டு வாசல் கடக்கையில் துருவேறிய இரும்பு கேட்டில் ரப்பர் மரங்களினூடே பாய்ந்து வந்து வெப்பத்தை உமிழ்ந்தது காலைச் சூரியன். பிரதான சாலையிலிருந்து பிரிந்து காணுர் செல்லும் சிறிய கிளைச்சாலையில் நடக்க ஆரம்பித்தான்.இரு புறமும் விண்ணை முட்டி நிற்கும் ரப்பர் மரங்களில் கட்டப் பட்டிருந்த கருப்பு நிற ரப்பர் குவளைகளில் பால் பெருகி நின்றது.தலையில் சிறிய முண்டு கட்டிய பெண்கள் இடுப்பில் குடத்தை இடுக்கிக்கொண்டு நிரம்பிய பாலை சேகரித்துக்கொண்டிருந்தனர்.சாலையின் இருபுறமும் தெளிந்த நீர் எந்த இலக்குமில்லாமல் சென்றுகொண்டிருந்தது. நான்கு மைல் நடந்தாயிற்று.சிறிது நேரம் நின்று அந்த வெள்ளோட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே ரப்பர் பாலை திடமாக்கும் சிறிய இயந்திரங்களுடைய தொழிற்சாலை மட்டும்.ஒரு சிறிய திருப்பத்தில் நான்கு வீடுகள் தள்ளித் தள்ளி இருந்தன. அடித்தொண்டையிலிருந்து உறுமினான்.”எதெடுத்தாலும் இருவதே” எந்த சலனமும் இல்லாமல் அப்படியே இருந்தது அந்தப் பகுதி.பாதி ஓடு உடைந்த இடத்தில் கருத்த பிளாஸ்டிக் சாக்கு கட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து,முண்டு கட்டிய வயதான பெண்மணி தலைய நீட்டி கை காண்பித்தாள்.நெருங்கிச் சென்றான்.தென்னை மட்டைகள் அடைந்து கிடந்த தொழுவத்தில் பழைய பாத்திரங்கள் மண்ணிற்குள் புதைந்தும் புதையாமலும் கிடந்தன.”நல்ல சரக்கு கெடக்கு.எப்பிடியும் ரேட் கம்மியா பேசி வேங்கிரணும்”.நொடியில் முடிவெடுத்திருந்தான். “புட்டுக் கொழலுண்டோ” திடுக்கிட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கையில், “மோனே.புட்டுக்கொழலுண்டோ”என்று மீண்டும் அந்த அபலைக்குரல். ஆயிஸாக் குட்டியின் கள்ளமில்லா சிரிப்பும் வார்த்தைக் குழைவும் அவனை வேரோடு பிடுங்கி எடுத்தது. “அடுத்த வாரம் கொண்டாரேன் சேச்சி.இப்பம் இல்ல.வேற ஏதாது வேணுமா” “வேற ஒண்ணும் வேண்டாம்”என்று பாத்திரக் கூடையை நோக்கியவளின் கண்ணில் புட்டுக்குழல் மின்னியது. ”தோ புட்டுக்குழல் உண்டல்லோ” “அது வேற ஆளுக்கு கொண்டு போறேன்.அடுத்த வாரம் கண்டிப்பா கொண்டாரென்.ஈ பழய பாத்திரங்கள தருமோ?” “இன்னல நிங்கட நாட்டாரனும் இதயே சோதிக்கின்னு.ஞான் கொடுக்குல்ல” “வேற எவன் வந்துருப்பான் இங்க.ஒருவேள முருகன் வந்துருப்பானோ.அந்தப் பய்யட்ட இந்த ஊரப்பத்தி சொன்னது தப்பா போச்சே”எண்ணிக்கொண்டே விடைபெற்றான்.வாசலில் நின்று அவன் செல்வதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். “எதெடுத்தாலும் இருவதே” உற்சாகமான குரல். மீண்டும் அதே சாலையில் ஒரு கிலோமீட்டர் நடை.காணூர் என்று மலையாளத்தில் எழுதியிருந்த சிவப்புப் பலகை சிதிலமடைந்து காட்டுக்கொடி படர்ந்து நின்றிருந்தது.ஊரின் துவக்கத்தில் ஒரு சிறிய பெட்டிக்கடை.கடைக்குள் அரை கண் மூடிய நிலையில் வானொலியில் ஒலிக்கும் ஏதோ ஒரு பழைய பாட்டில் சொக்கியிருந்தார் வயதான சேட்டன்.வெளியில் கருத்த பழக்கொலையொன்று பாதி காலியாகிய நிலையில் கொசு மொய்த்துக் கிடந்தது.சர்பத் போடுவதற்கான பிளாஸ்டிக் பாத்திரத்தில் காய்ந்துபோன இரண்டு எலுமிச்சைகள் வாழ்வைத் தொலைத்துக் கிடந்தன. “சேட்டா சாப்பிட எதுனா இருக்கா”குரல் கேட்டு சேட்டனின் இமைகள் விலகிய பதட்டமில்லாத பார்வை முத்தையாமேல் கவிந்தது.என்ன வேண்டும் என்பதுபோன்ற ஒரு பாவனை. “சாப்பிட ஏதாது இருக்கா”செய்கையில் கூறினான். “பழமுண்டு.சர்பத்துண்டு.பொறிச்ச பத்திரியுண்டு.எந்தா வேண்டே”வார்த்தைகள் பாதி காற்றாகவும் பாதி இறுகிய குரலாகவும் வந்து விழுந்தன. “பழம் காஞ்சி போயில்லா கெடக்கு.ஒரு பத்திரி தாங்க பாப்போம்” சிறிய கண்ணாடி பீரோவிற்குள்ளிருந்து வெளிச்சுற்று இறுகிய பத்திரி வந்தது.ஒரு கடி.”சேட்டா ஒரு சர்பத்” காய்ந்த எலுமிச்சை உயிர் பெற்று நீராகி,சுருண்டு கிடந்த முத்தையாவின் குடலின் தளர்ச்சியைக் களைந்தது.சிறிய மஞ்சள் புள்ளி தெரிந்த ஒரு பழம் அத்துடன்.முடிந்ததும் துட்டு கொடுத்துவிட்டு கிளம்பினான். சிறிய தென்ன ஓலை வேய்ந்த குடிலில் மூன்று சேட்டன்கள் புகைத்துக் கொண்டிருந்தனர்.முன்னால் சிவப்பு நிற கொடிக்கம்பம்.சற்று முன் நகர்ந்தால் அடர் பச்சை நிற மிகச் சிறிய பள்ளிவாசல்.அதைத்தாண்டி ஆங்காங்கே வீடுகள்.நகர்கையில் தூரத்தில் தெரிந்தது ஆயிஸாக் குட்டியின் மூங்கில் வேய்ந்த வேலியுடைய ஓட்டு வீடு.கடந்த முறை பாத்திரம் வாங்கிய வீட்டை உற்று நோக்கி,”எதெடுத்தாலும் இருவதே”என்று நீட்டி முழக்கினான். சலனமில்லை.மூன்று நான்கு முறை தெருவில் நின்று கூவினான்.ஆங்காங்கே நின்ற பெண்கள்,புகைத்து நின்ற சேட்டன்மார்,முன்னால் மீன் விற்றுச் சென்ற கூடைக்காரி என எல்லோரும் ஒருமுறை அவனைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டனர். வேகமாக நடந்து ஆயிஸாக் குட்டி வீட்டையடைந்தான்.வாசலில் நின்று “எதெடுத்தாலும் இருவதே”குரலில் ஆனந்தப் பரவசம்.இடுப்பில் குழந்தையை இடுக்கிக்கொண்டு ஒரு முதிய பெண்மணி வெளிவந்தாள்.முற்றத்தில் கட்டியிருந்த கொடியில் அன்று ஆயிஸா உடுத்தியிருந்த நைட்டியும் உள்ளாடையும் காற்றிலாடியது.நீரை சுவற்றில் அடிப்பது போன்ற சத்தம் தூரத்தில் கேட்டது. “புட்டுக்குழல் கேட்டாவ போன வாரம்.அதான் கொண்டு வந்து” “அய்யோ.மோனே இன்னல நிங்கட நாட்டாரன் புட்டுக்கொழல் கொண்டு வந்து கொடுத்தல்லோ.எந்தா செய்யான்” இதயச் சுவர்களில் படிந்திருந்து கிளர்த்திய ஆயிஸாக் குட்டியின் புன் முறுவலும்,ராகம் குழைத்து உதிர்த்த சொற்களும் முட்டி மோதி வெடித்தன.இதயமே சுக்கு நூறாய் நொறுங்குவது போலிருந்தது.மனக் குமுறலை அடக்கிக்கொண்டு ”நீங்க” என்றான். “எண்ட மோளானு ஆயிஸா.பொறகில் குளிக்கின்னு” அடுத்த கணமே சலசல என்று ஆயிஸாக் குட்டி குளிக்கும் சத்தம் ஏகாந்தமாய் மனதிற்குள் பரவி அவனை அங்கிருந்து நகர விடாமல் செய்தது. ” வேற ஏதாது வேணுமான்னு உங்க மகள்ட்ட கேளுங்க” “ஒன்னும் வேண்டாம்”என்ற முதியவளின் கடுத்த குரல் கதவு பட்டென்று அடைபடும் சத்தத்திற்கு பின்னால் ஒலிக்கையில் பள்ளத்திற்குள் குப்புற பாயும் ஒத்தையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தான். https://solvanam.blog/2015/05/31/புட்டுக்குழல்/

வவுனியாவில் பெண்களின் ஆடைகளை விற்பதற்கு -ஆண்களுக்கு அனுமதியில்லை!!

1 month 4 weeks ago
வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகயுளுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பகுதிக்கு பெண் ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்று சிலர் வேண்டுகோள் முன்வைத்திருந்தனர். அதற்கமைவாக கலாசாரத்தை பெணிப்பாதுகாப்பதற்கும்,பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தவிர்த்துகொள்வதற்கும் ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதே சிறந்தது. இதற்கு சில வர்த்தகர்களும் ஒத்துழைப்பதற்கு தயாராகவுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வவுனியா வர்த்தகசங்கம், வர்த்தகர்நலன்புரிசங்கம் ஆகியவற்றுடன் பேச்சு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் பெண்களின் ஆடைகளை விற்பதற்கு -ஆண்களுக்கு அனுமதியில்லை!!

1 month 4 weeks ago

வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகயுளுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பகுதிக்கு பெண் ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்று சிலர் வேண்டுகோள் முன்வைத்திருந்தனர்.

அதற்கமைவாக கலாசாரத்தை பெணிப்பாதுகாப்பதற்கும்,பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தவிர்த்துகொள்வதற்கும் ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதே சிறந்தது.

இதற்கு சில வர்த்தகர்களும் ஒத்துழைப்பதற்கு தயாராகவுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வவுனியா வர்த்தகசங்கம், வர்த்தகர்நலன்புரிசங்கம் ஆகியவற்றுடன் பேச்சு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வேளை உணவிற்காக கையேந்தும் நிலையில் முன்னாள் போராளியின் குடும்பம்

1 month 4 weeks ago
நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து ஆடம்பரமான இந்நாளில்சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில் படுத்துரங்கும் நிலையும் உண்டு. அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதினொன்றாக கடந்து போகும் பல்வேறு கதாப் பாத்திரங்கள் எம்மிடையே உள்ளனர்.. அவர்கள் எல்லோருமே எமது வாழ்வில் தாக்கத்தை செலுத்துவதில்லை.எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் அடங்குவர். வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என எண்ணாதீர்கள். அதில் சிலர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கனே. ஒரு சிலர் நமக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஒரு சிலர் தாம் பெற்ற பிள்ளைகளை ஈழ போராட்டத்திற்காக அர்பணித்தவர்கள். மௌனிக்கப்பட்ட யுத்தம் அவர்களை நம்மிடம் கையேந்த வைத்து விட்டது. அவர்களில் சிலர் நாம் அருகில் சென்றதும் கை நீட்டி யாசகம் கேட்கின்றனர். நம்மில் எத்தனை பேர் அவர்களை திரும்பி பார்கின்றோம். உதவ நினைக்கின்றோம். ஒரு சில நபர்களே அவ்வாறு அதிகம். மக்கள் புலக்கம் அதியமுள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் என்றும் மழை என்றும் பாராது நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிளும் வீதி சுற்று வட்டங்களிளும் கத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதும் ஏமாற்றமே மீதமாகின்றது. அவசர உலகில் நிற்க கூட நேரம் இல்லாத மக்களை கை நீட்டுபவர்களை நிர்கதியாய் நிற்கவிட்டு நகர்கின்றோம். அதே போன்று கடந்து போகும் ஒரு நபருடைய கதை முல்லைதீவில் இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் நிர்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளனர். இவர்களின் நிலைக்கும் எதோ ஒரு வகையில் நாமமும் ஒரு காரணம். ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இப் பெரியவர் ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும் மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய். எப்போதும் இவர்களை இந்நிலைக்கு ஆழாக்கிய சாபம் பின் தொடரும் . இவ்வாறனவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏளனமாக பார்க்கும் உங்கள் பார்வை எப்போதும் பசியைவிட கொடுமையானது. என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/46955

ஒரு வேளை உணவிற்காக கையேந்தும் நிலையில் முன்னாள் போராளியின் குடும்பம்

1 month 4 weeks ago

நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து  ஆடம்பரமான இந்நாளில்சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில் படுத்துரங்கும் நிலையும் உண்டு.

IMG_9640.JPG

அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதினொன்றாக கடந்து போகும் பல்வேறு கதாப் பாத்திரங்கள் எம்மிடையே உள்ளனர்..

 அவர்கள் எல்லோருமே எமது வாழ்வில் தாக்கத்தை செலுத்துவதில்லை.எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் அடங்குவர்.

வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என எண்ணாதீர்கள். அதில் சிலர் ஒரு காலத்தில்  சிறப்பாக வாழ்ந்தவர்கனே.

IMG_9631.JPG

 ஒரு சிலர் நமக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஒரு சிலர் தாம் பெற்ற பிள்ளைகளை ஈழ போராட்டத்திற்காக அர்பணித்தவர்கள்.

மௌனிக்கப்பட்ட   யுத்தம் அவர்களை நம்மிடம் கையேந்த வைத்து விட்டது.  அவர்களில் சிலர் நாம் அருகில் சென்றதும் கை நீட்டி யாசகம் கேட்கின்றனர். 

நம்மில் எத்தனை பேர் அவர்களை திரும்பி பார்கின்றோம். உதவ நினைக்கின்றோம். ஒரு சில நபர்களே அவ்வாறு அதிகம்.

 மக்கள் புலக்கம் அதியமுள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் என்றும் மழை என்றும் பாராது நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிளும் வீதி சுற்று வட்டங்களிளும் கத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதும் ஏமாற்றமே மீதமாகின்றது.

IMG_9650.JPG

அவசர உலகில் நிற்க கூட நேரம் இல்லாத மக்களை கை நீட்டுபவர்களை நிர்கதியாய் நிற்கவிட்டு நகர்கின்றோம். 

அதே போன்று கடந்து போகும் ஒரு நபருடைய கதை முல்லைதீவில் இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் நிர்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளனர்.

இவர்களின் நிலைக்கும் எதோ ஒரு வகையில் நாமமும் ஒரு காரணம்.

ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இப் பெரியவர் ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும்  மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய்.

IMG_9653.JPG

 எப்போதும் இவர்களை இந்நிலைக்கு ஆழாக்கிய சாபம் பின் தொடரும் .

இவ்வாறனவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏளனமாக பார்க்கும் உங்கள் பார்வை எப்போதும் பசியைவிட கொடுமையானது. என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/46955

"மஹிந்த பிரதமராக இருப்பதை விட எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே எமக்கு பலம்"

1 month 4 weeks ago
(ஆர்.யசி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம் உறுப்பினர் டிலான் பெரேரா, மைத்திரி -மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்ற நிலையில் தேர்தல் குறித்தும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைக்க மாட்டார். அவருக்கு சாதாரண மக்களின் நிலைமைகள் என்னவென்பது தெரியாது. அதேபோல் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளை தோட்டத்தொழிலாளர் பிரச்சினைகள் அனைத்தையும் அடுத்து அமையும் எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/46948

"மஹிந்த பிரதமராக இருப்பதை விட எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே எமக்கு பலம்"

1 month 4 weeks ago

(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம் உறுப்பினர் டிலான் பெரேரா, மைத்திரி -மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எனவும் தெரிவித்தார். 

dilan_perera.jpg

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்ற நிலையில் தேர்தல் குறித்தும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைக்க மாட்டார். அவருக்கு சாதாரண மக்களின் நிலைமைகள் என்னவென்பது தெரியாது. அதேபோல் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளை தோட்டத்தொழிலாளர் பிரச்சினைகள் அனைத்தையும் அடுத்து அமையும் எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/46948

கிறிஸ்துமஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா?

1 month 4 weeks ago
படத்தின் காப்புரிமை Universal History Archive Image caption கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர் அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள். ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள். டிசம்பர் மாதத்தில் உற்சாகமாக குழுவாக இணைந்து மது அருந்துவார்கள், வணிக கடைகள் விரைவிலேயே சாத்தப்படும். நெருங்கிய நண்பர்கள், குடும்பங்கள் இணைந்து சிறப்பு உணவுகளை அருந்துவார்கள். வீடுகள் பசுமையான தாவரங்களால் அலங்கரிக்கப்படும். தெருக்களில் உணர்ச்சிகரமாக பாடுவார்கள். 'உண்மை' கிறித்தவர்கள் யார்? 1964-ம் ஆண்டு ஆங்கிலேய கிறித்துவ தூய்மைவாதிகள் கிறிஸ்துமஸை ஒழிக்க முடிவு செய்தார்கள். ப்ரொட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் கடுமையான மத விதிகளின் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். கிறித்துவ தூய்மைவாத அரசு கிறிஸ்துமஸை ஒரு 'பாகன்'பண்டிகையாக கருதியது. ஏனெனில் டிசம்பர் 25-ம் தேதிதான் இயேசு பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் விளக்கம் இல்லை என்றார்கள். படத்தின் காப்புரிமை Getty Images Image caption 19-வது நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் குறித்த ஆங்கிலேயர்களின் விளக்கப்படம் ''எங்களின் கிறிஸ்துமஸை திரும்பக்கொடுங்கள்'' 1960 வரை அனைத்து கிறிஸ்துமஸ் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது. டிசம்பர் 25 அன்று அனைத்து கடைகள் திறக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. தேவாலயங்கள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கிறிஸ்துமஸ் சேவையை வழங்குவது சட்டத்து புறம்பான ஒன்றாக பார்க்கப்பட்டது. அந்தத்தடை எளிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் குடிக்கவும், பாட்டு பாடவும், களிப்படைவதற்கான சுதந்திரம் வேண்டும் எனக்கூறி போராட்டங்கள் நடந்தன. ஆனால் இரண்டாம் சார்லஸ் அரசராக பதவியேற்றபிறகுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டது. கொண்டாட்டமும் விருந்தும் அமெரிக்க தூய்மைவாதிகளாலும் தடை செய்யப்பட்ட காலமுண்டு. ஆம். அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் தடை செய்யப்பட்டது. மஸாசுஷெட்சில் இங்கிலாந்தில் சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக 1659 - 1681 வரை கிறிஸ்துமஸ் பண்டிகையே இல்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதிலும், பல தூய்மைவாதிகளும் டிசம்பர் திருவிழாவை பாகன் மீதான வெறுப்பாகவே கருதினார்கள். படத்தின் காப்புரிமை Getty Images உண்மையாக கிறிஸ்து பிறந்ததினம் எது? உண்மையில் கிறிஸ்து பிறந்த தினம் குறித்த துல்லியமான சரியான ஒருமித்த தகவல்கள் இல்லை. சில இறையியலார்கள் கிறிஸ்து பிறந்தது வசந்தகாலமாக இருக்கக்கூடும் என எண்ணுகிறார்கள். ஏனெனில் மேய்ப்பர்கள் வயல்களில் தங்களது மந்தைகளை கவனித்துக்கொண்டிருந்த குறிப்புகள் உள்ளன. அல்லது, அது இலையுதிர் காலமாகவும் இருந்திருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள். ஆனால் விவிலியத்தில் தேதிகள் கொடுக்கப்படவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ரோமானியர்கள் நல்லதொரு விருந்தை விரும்பியதை விவரிக்குமாறு 19-வது நூற்றாண்டில் ஆங்கிலேயரால் தீட்டப்பட்ட படம் பாகன் சடங்குகள் ரோமன் காலத்திலிருந்தே பாகன் சடங்குககளில் ஒரு பகுதியாக டிசம்பரின் இறுதிப் பகுதிகளில் வலுவான விருந்துகளை கொண்ட விழா காலம் இருந்தது நமக்குத் தெரியும். அறுவடை கால திருவிழாவின் சாராம்சமாக மற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன, வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. பெரும் உணவுகளும் அதிகப்படியான மதுவும் விருந்தின் மைய அம்சங்களாக இருந்தன. வரலாற்று ஆசிரியரான சைமன் செபாக் மான்டிஃபோர் கருத்துப்படி ''ஆரம்பகால கிறிஸ்துவர்கள் சமூக அளவில் பாகன் மரபு வழக்கங்களில் இருந்த கேளிக்கைகளுடன் போட்டியிட வேண்டியிருந்தது'' குறிப்பிட்ட காலம் வரை, ரோமானியர்கள் இரண்டு மரபுகளையும் கொண்டாடினார்கள். நான்காவது நூற்றாண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தின் 14 நாள்களில் பாகன் சடங்குகளும் கிறித்துவமும் இணைந்து கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் மோதல்களில்லாமல் இல்லை. வென்றது யார்? படத்தின் காப்புரிமை Getty Images Image caption கிறிஸ்துமஸ் விருந்து கார்ட்டூன் இறுதியில், கிறித்தவம் வென்றது. பாகன் மரபு வழக்கங்களின் சுவடுகளாக தூய்மைவாதிகள் கிறிஸ்துமசை கருதியதால் 17-ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் விழாவை ஒழிக்க முயற்சி நடந்தது. ஆனால் இன்று உங்களைச் சுற்றி நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கவனித்தீர்களே ஆயின், தூய்மைவாதிகள் தோற்றது தெளிவு. ஆகவே, உலகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மரத்தின் அருகே கிறிஸ்தவர்கள் வான்கோழியை கடிப்பதும், கோப்பைகளில் மது ஊற்றி அருந்துவதும், அவர்ளின் பண்டிகையும் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. https://www.bbc.com/tamil/global-46671900

அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு 'ராமர் கதை' - சர்ச்சையான சொற்பொழிவு

1 month 4 weeks ago
பாலியல் தொழில் செய்பவர்களை விட அவர்களை அந்த நிலைக்கு தள்ளுபவர்களுக்கே அறிவுரை தேவை.தேவையேற்பட்டால் தண்டனையும் கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: "நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா?" சிறுவனிடம் வினவிய டிரம்ப்

1 month 4 weeks ago
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பின்லாந்து யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுவன் ஒருவனிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செயல்படும் சாண்டாக்களின் இருப்பிடங்களை பதிவுசெய்து வரும் அமெரிக்க அரசு துறையான நோராடை, டிரம்பை தொடர்புகொள்வதன் மூலம் அடைய முடியும் என்ற எண்ணத்தில் அந்நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். படத்தின் காப்புரிமை Reuters வெள்ளை மாளிகைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் பதிலளித்தனர். அப்போது நடந்த சில சுவாரசியமான உரையாடல்கள்: கோல்மன் என்ற சிறுவனிடம் பேசிய டிரம்ப், "ஹலோ, இது கோல்மனா? இனிய கிறிஸ்துமஸ். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு எத்தனை வயதாகிறது? நன்றாக படிக்கிறாயா? நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு, கோல்மனின் பதில் தெளிவாக இல்லை. சாண்டாவின் இருப்பு சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்ற நிலையில் டிரம்ப் ஏன் இதுபோன்ற கேள்வியை எழுப்பினார் என்று பலரும் அந்த உரையாடல் தொடர்பான காணொளியுடன் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதை கீழ்க்காணும் புகைப்படங்களில் காணலாம். படத்தின் காப்புரிமை Getty Images Image caption மெக்ஸிகோ படத்தின் காப்புரிமை Getty Images Image caption அமெரிக்கா இந்நிலையில், டிரம்ப் மற்றும் மெலானியாவின் மற்ற உரையாடல்கள் எவ்வித சர்ச்சையுமின்றி வாழ்த்துக்களுடன் முடிவுற்றன. "உங்களது கனவுகள் மெய்ப்படும் என்று நம்புகிறேன்" என்று மற்றொரு சிறுவனிடம் பேசிய மெலானியா கூறினார். https://www.bbc.com/tamil/global-46678521

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: "நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா?" சிறுவனிடம் வினவிய டிரம்ப்

1 month 4 weeks ago
  •  
     
பின்லாந்துபடத்தின் காப்புரிமை Getty Images Image caption பின்லாந்து

யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுவன் ஒருவனிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செயல்படும் சாண்டாக்களின் இருப்பிடங்களை பதிவுசெய்து வரும் அமெரிக்க அரசு துறையான நோராடை, டிரம்பை தொடர்புகொள்வதன் மூலம் அடைய முடியும் என்ற எண்ணத்தில் அந்நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

"நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா?" சிறுவனிடம் கேள்வி கேட்ட டிரம்ப்படத்தின் காப்புரிமை Reuters

வெள்ளை மாளிகைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் பதிலளித்தனர்.

அப்போது நடந்த சில சுவாரசியமான உரையாடல்கள்:

கோல்மன் என்ற சிறுவனிடம் பேசிய டிரம்ப், "ஹலோ, இது கோல்மனா? இனிய கிறிஸ்துமஸ். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு எத்தனை வயதாகிறது? நன்றாக படிக்கிறாயா? நீங்கள் சாண்டாவை நம்புகிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு, கோல்மனின் பதில் தெளிவாக இல்லை.

சாண்டாவின் இருப்பு சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்ற நிலையில் டிரம்ப் ஏன் இதுபோன்ற கேள்வியை எழுப்பினார் என்று பலரும் அந்த உரையாடல் தொடர்பான காணொளியுடன் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதை கீழ்க்காணும் புகைப்படங்களில் காணலாம்.

மெக்ஸிகோபடத்தின் காப்புரிமை Getty Images Image caption மெக்ஸிகோ அமெரிக்காபடத்தின் காப்புரிமை Getty Images Image caption அமெரிக்கா

இந்நிலையில், டிரம்ப் மற்றும் மெலானியாவின் மற்ற உரையாடல்கள் எவ்வித சர்ச்சையுமின்றி வாழ்த்துக்களுடன் முடிவுற்றன.

"உங்களது கனவுகள் மெய்ப்படும் என்று நம்புகிறேன்" என்று மற்றொரு சிறுவனிடம் பேசிய மெலானியா கூறினார்.

https://www.bbc.com/tamil/global-46678521

இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம்

1 month 4 weeks ago
இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம் மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள் மின்னலை அடுப்பு போன்றவை. மின்னணு இசைக்கருவிகள்,தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குக்கருவிகள் கணினி மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள் உலகை அச்சுறுதலுக்கு உள்ளாக்கும் இலத்திரனியல் கழிவுகள் தகவல் தொழில்நுட்ப புரட்ச்சியினைத் தொடர்ந்து உலகு எங்கும் இலத்திரனியல் சாதனங்கள் பல்கிப் பெருகின.இவற்றின் மேம்பட்ட பதிப்புகள் குறுகிய காலத்திற்குள் சந்தைகைளை ஆக்கிரமிப்பதால் காலவதியான பொருட்கள் குப்பை மேடுகளில் நிரம்பி வழிவதால் பூமிபந்தின் தூய்மை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.இவற்றினை ஒழுங்கு படுத்தவது அரசுகளிற்கும் சுற்றுசூழல் ஆர்வலா்களிற்கும் பெரும் தலையிடியாக உள்ளது. வரவிலக்கணம்-இலத்திரனியல் கழிவுகள் மனிதர்களால் பாவனைக்கு உட்படுத்தி கைவிடப்பட்ட இலத்திரனியல் பொருட்களை இ.கழிவு என வரவிலக்கணப்படுத்தலாம்.சுருங்கக்கூறின் கைவிட்ப்பட்ட இலத்திரனியல் சாதனங்களே இ.கழிவுகள் ஆகும்.இங்கு இலத்திரியல் சாதனங்கள் என்பது தொலைபேசிகள்இகணனிகள்இதொலைக்காட்சிப் பெட்டிகள்இகுளிர்சாதனம் பெட்டிகள் போன்றவற்றைக் குறிக்கிறது.. இலத்திரனியல் கழிவு வெளியேற்றத்தில் உலக நாடுகளின் வகிபாகம் 2006 ஆண்டில் இருந்து ஜ.நாவின் சுற்று சூழல் நிகழ்ச்சித்திட்டம் இ.கழிவுகள் தொடர்பான மதிப்பீட்டினை ஆரம்பித்தது.இவ் மதிப்பீட்டின் பிரகாரம் ஆண்டுதோறும் 20-50 மில்லியன் கழிவுகள் உருவாக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகளாவான கழிவுகளை ஜரோப்பாஇஅமெரிக்காஇஅவுஸ்ரேலியா போன்ற நாடுகள் வெளியிடுகின்றன. எனினும் அண்மைகாலங்களில் துரிதமாக வளா்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட சீனாஇஇலத்தீன் அமெரிக்க நாடுகள்இகிழக்கு ஜரோப்பிய நாடுகள் அதிகளவான இ.கழிவுகளை வெளியிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியா இ.கழிவு வெளியேற்றத்தில் 5 ம் இடத்தில் உள்ளது ஆசியநாடுகளில் சீனா இயப்பான் நாடுகள் அதிகளாவன கழிவுகளை வெளியிடுகின்றன.ஆபிரிக்க நாடுகள் மிகவும் குறைந்தளவான கழிவுகளையே உற்பத்தி செய்கின்றன. பல அபிவிருத்தியடைந்த நாடுகள் அன்பளிப்பு என்ற போர்வையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு தமது இலத்திரனியல் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றன.இதனால் குறைவிருத்தி நாடுகள் இ.கழிவு தொடர்பான முகாமைத்துவத்தில் மேலதிகமான சுமைகளையும் தாங்க வேண்டியுள்ளது. இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் ஏனைய கழிவுகள் போலல்லாது இ.கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.பெரும்பாலான இ.குப்பைகளில் ஈயம்இபாதரசம்இநிக்கல்இகேட்பியம் போன்ற வேதிப் பொருட்டகள் காணப்படுகின்றன .இவற்றைவிட மிக கொடிய விளைவினைத் தரும் பொலிபுறோமைற்றட் பினைல் எதர் (Pடீனுநுள) என்ற வேதிப்பொருள் எரிபற்று நிலையினை குறைப்பதற்காக இலத்திரனியல் சாதனங்களில் 30 வீதம் வரை பயன்படுத்தப்படுகின்று.இதனால் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் ஏனைய வேதிப்பொருட்களால் ஏற்படும் தாக்கத்தினைவிட பல்மடங்கு அதிகமானது. பொதுவாக கீழ்வரும் பாதிப்புக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகிறது 1.நீர் நிலைகள் மாசுபடல் 2.விவசாய நிலங்கள் மாசுபடல் 3.இ.கழிவுகளை எரியூட்டுவதால் வளி மாசடைதல் 4.புற்றுநோய் ஏற்படல் 5.தையரொக்சன் பிரச்சனைகள் 6.கருவளவீதம் குறைவடைதல் 7.வயதுக்கு முன்பு பூப்படைதல் இலத்திரனியல் கழிவு முகாமை மீள் பயன்பட்டிற்கு இ.கழிவுகளை உட்படுத்துவது சிறந்த கழிவு முகாமைத்துவம் ஆகும்.பெரும்பாலான கழிவுகளில் பெறுமதி மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.எனினும் விருத்தியடைந்த நாடுகள் இது செலவு கூடிய நடவடிக்கை எனக் கருதி அபிவிருத்தியடைந்த நாடுகளிற்கு இக் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக சீனா உலக இ.கழிவுகளில் 80 வீதத்தினை கொள்வனவு செய்கிறது இதனைவிட இந்தியா, பாகிஸ்தான், வியட்னாம், பிலிப்பையின்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகளை இவ் நாடுகளே மீள் சுழற்ச்சி செய்கின்றன. மீள் சுழற்ச்சிக்கு நவீன நுட்டபங்களை பயன்படுத்தல் சிறந்ததாகும்.அனேகமான இ.கழிவுகள் ஆபத்தானவை ஆபத்தில்லாதவை என்னற பாகுபாடுஇன்றி மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன.உண்மையில் இக் குப்பைகள் உயர் தரத்தில் பரீட்ச்சிக்கப்பட்டு கேடு விளைவிக்காத பொருட்கள் மட்டும் மண்ணில் புதைக்கப்படவேண்டும். மக்களிற்கு இ.கழிவுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டுதல் அவசியமாகும்.இதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அனர்த்தத்தினை கணிசமான அளவு குறைத்துக் கொள்ளலாம். உலகில் மின்னணுக் கழிவுகள்... பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள், உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் (டீயளநட யுபசநநஅநவெ) உள்ளது இந்த ஒப்பந்தத்தின் பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயற்றிட்டத்தின் (டீயளநட யுஉவழைn நேவறழசம) அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவில் உருவாகும் கழிவுகளில் 50 - 80 வீதம் வரை வளர்முக நாடுகளுக்கு மறுசுழற்சி செய்வதற்காக அனுப்பிவைக்கப் படுகின்றது. அதிகமாக மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் வளர்முக நாடுகளின் வரிசையில் சீனா இந்தியா ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன. மேலைத்தேய நாடுகளால் வெளியிடப்படும் மொத்த மின்னணுக் கழிவுகளில் ஏறத்தாள 90 வீதம் ஆனவை சீனாவையே வந்தடைகின்றன. இதில் 20 - 30 வீதம் ஆனவை மீள் சுழற்சி செய்யப்பட ஏனையவை குப்பைத் தொட்டிக்கே செல்கின்றன. இதேபோன்று சென்ற ஆண்டுகளில் இந்தியாவிற்கும் சுமார் ஒன்பது இலட்சம் தொன் அளவான இலத்திரனியல் கழிவுப் பொருட்களை ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் வழங்கியுள்ளன. பொருளடக்கம்ஜமறைஸ 1 இன்றைய கைத்தொழில் 2 நவீன தொழில்நுட்ப விருத்தி 3 பொருட்களின் பாவனை 4 மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாழ்வது இன்றைய கைத்தொழில் இன்றைய கைத்தொழில் மயமான யுகத்தில் புவியானது பல்வேறுபட்ட சூழல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. ஆந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் புவிச்சூழலி;ன் இயல்பு நிலைக்கு பெரிதும் அச்சுறுத்தலாக அமையும். மாசாக்கிகளின் வரிசையில் புதிய வரவாக இம் மின்னணுக் கழிவுகள் அமைகின்றன. மின்னணுக் கழிவுகள் என்பது பல்வேறுபட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் கருவிகள் என்பன உடமையாளர்களுக்கு பயன்படாதுபோகும் பட்சத்தில் அவை மின்னணுக் கழிவுகளாக மாறுகின்றன. இன்று பெரிதும் பாவனையில் இருக்கின்ற மின்னணுப் பொருட்களுக்கான உதாரணங்களின் பட்டியல் தொலைக்காட்சிப்பெட்டி, கணணி மற்றும் அதுசார் பொருட்கள், குளிர்சாதனப்பெட்டி, குளிஷரூட்டி, கையடக்கத் தொலைபேசி என நீண்டுகொண்டே செல்லும். இவற்றுள் சந்தையில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக நாளுக்கொரு புதியவகை என உருவாகிக் கொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசிகள் கணணிகள் என்பன புவியை மாசாக்குவதில் அதிக பங்களிப்பினை வழங்கி வருகின்றமை அறியப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப விருத்தி நவீன தொழில்நுட்ப விருத்தியின் விளைவாக மனிதனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், வேலைகளை இலகுவாக்கிக் கொள்வதற்கும், சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் மின்னணுப் பொருட்களும் கருவிகளும் அதிகளவில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதுடன், இன்றைய சனத்தொகைப் பெருக்கத்தின் விளைவாக இப்பொருட்களுக்கான கேள்வியும் அதிகரித்து வருவதனால் மின்னணுப் பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பாவனைக்கும் வந்துசேர்கின்றன. இவ்வாறு பயன்பாட்டிற்குள் ஊடுருவும் மின்னணுப் பொருட்கள் சிறிது காலத்திலேயே மின்னணுக் கழிவுகளாக வெளியேறுகின்றன. அதாவது இத்தகய கருவிகள் பொதுவாக பழையதாகி செயலிழந்து விடுவதன் காணைமாகவோ அல்லது அவற்றினை விடவும் வினைத்திறண் மிக்க கருவிகளை பயனாளர்கள் கொள்வனவு செய்வதனாலோ இவை கழிவுகளாக வெளியேற்றப் படுகின்றன. சாதாரணமாக நோக்கில் இன்று பாவனைக்கு உட்படுத்தப்படும் இம் மின் உபகரணங்களின் பாவனை ஆயுட்காலம் மிகவும் குறுகியதாக இருப்பதுடன், அவை பழுதடைந்துவிட்டால் திருத்தம் செய்து பாவனைக்கு உட்படுத்துவதை விட புதிதாக ஒன்றை கொள்வனவு செய்தல் இலகுவானதாகவும், திருப்தி மிக்கதாகவும் அமைகின்றது. அதுமட்டுமன்றி பொருளாதார ரீதியில் குறைவான வசதி கொண்ட மக்களும் பெற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் சந்தையில் இவற்றின் மலிவான கிடைப்பனவும் மின்னணுக் கழிவுகளின் துரித வெளியீட்டை தூண்டுகின்றன. சுருங்கக்கூறின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ப மின்னணுக் கழிவுகளின் வெளியீடும் தற்காலத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருட்களின் பாவனை பொருட்களின் பாவனையின்போது உள்ளீடு இருப்பின் வெளியீடு இருப்பது நியதி எனினும் இவ்வாறு வெளியிடப்படும் மின்னணுக் கழிவுகள் பல்வேறு வகையான இரசாயன, நச்சுப் பொருட்களை கொண்டிருப்பதாலேயே இவற்றினால் ஏற்படும் சூழல் தாக்கம் பற்றி நாம் சிந்திக்கவேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதாவது இவ் மின்னணுக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் வாயுக்கள் காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தல், வளிமண்;டல வாயுக்கூட்டுக்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் பலவற்றை ஏற்படுவததல்; எனபதோடு உயிரின சுவாசத்திற்கும் கேடானதாக மாறுகின்றது. மேற்படி கழிவுகளை புதைப்பதனால் மண்ணின்; இயல்புநிலை, மண்நீர் மண்வளம்; என்பன பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவற்றை நீர்நிலைகளில் விடுவதன்மூலம் நீரில் இரசாயன சேர்க்கைக்கு உள்ளாவதுடன், நீர்வாழ் அங்கிகளைப் பாதிப்பது மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீர்க்கோளச் சூழலையே பாதிப்பதாக அமையும். உலகரீதியில் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக ஐந்து கோடி தொன் எனும் அளவில் மின்னணுக் கழிவுகள் சேர வாய்ப்பிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றபோதிலும் இதில் 20மமூ ஆனவையே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. மீதி 80மூ ஆனவை ஏனைய கழிவுகளுடன் இணைந்து சூழலை மாசுபடுத்தும் பணியில் இறங்கி விடுகின்றன. வளர்முக நாடுகளில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் இப்போது இருக்கும் மின்னணுக்கழிவுகளைளளப் போன்று மூன்று மடங்கு கழிவுகளினால் பல்வேறு சிக்ல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இவ்வாறு எந்த வகையிலும் முகாமைத்துவம் செய்யக் கடினமான மின்னணுக் கழிவுகளும் அதன் தாக்;கமும் தொழில்நுட்ப விருத்தியடைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளை விட வளர்முக நாடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் முன்னணி வகிப்பினும் மின்னணுக்கழிவுகள் அதிகளவில் வந்துசேரும் இடங்களாக வளர்முக நாடுகளே காணப்படுகின்றன. வளர்முக நாடுகள் மட்டும் ஏன் இம் மின்னணுக் கழிவுத் தொட்டியாக்கப்பட வேண்டும்? என்ற கேள்வி எம்மிடம் எழ வாய்ப்புண்டு இதற்கு காரணம் வளர்முக நாடுகள் நன்கொடை, அன்பளிப்பு, மீள் சுழற்சி ஊக்குவிப்பு என்ற போர்வைகளில் பெரும்பாலான கழிவுகளை வளர்முக நாடுகளுக்கு நாடு கடத்துகின்றன. இதனை மீள் பயன்பாடு என்றநோக்குடன் பெற்றுக் கொள்ளும் வளர்முக நாடுகளில் இத்தகைய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு ஓரிரு ஆண்டுகள் அல்லது மாதங்கள் மாத்திரமேதான் பின்னர் அவை சர்வ சாதாரணமாக தூக்கி வீசப்படுகின்றன. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இவ்வண்ணமே இலத்திரனியல் கழிவுகள் உருவாகின்றன. மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாழ்வது இக் கழிவுகள் தொடர்பான சிக்கல்கள் அனைத்து நாடுகளிலும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்பட இருக்கின்ற போதிலும் குறிப்;பாக இலங்கையும் மீள் சுழற்சி, நன்கொடை என்ற பெயரில் அதிகளவான இலத்திரனியல் கழிவுகளை அபிவிருத்தியடைந்த நேச நாடுகளிடமிருந்து பெற்று வருகின்றதன் பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்காரணமாக கொழும்பு நகரம் இன்று இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினைக்கு உள்ளகி இருக்கின்றது. ஏனெனில் இன்றைய அதிகரித்த கணணிப் பாவனை, இலத்திரனியல் சாதனங்களின் தொடர்ச்சியான கொள்வனவு என்பன எதிர்கால இலத்திரனியல் பிரச்சினைக்கு அத்திவாரமிடல் எனறே கூறவேண்டும். காரணம் கணணிக் கழிவுகளும், மற்றும் ஏனைய இலத்தினியல் கழிவுகளும் அனைத்து குப்பைத் தொட்டிகளையும் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலை அனைத்து நகரங்களிலும் உணரப்பட்டிருப்பினும்;; இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய அவசியம் உணரப்படவில்லை என்றே கூறவேண்டும். இவ் நச்சு வாயுக்களை வெளியிடக்கூடிய மின்னணு சாதனங்களின் கழிவுகளை எவ்வாறு கையாழ்வது என்பது குறித்த மாகாநாடு ஒன்று ஜூன் - 23 - 2008 அன்று இந்தோனேசியாவின் தலைநகரான பாலியில் நடைபெற்றது. இதில் 170 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனிதன் உள்ளிட்ட சகல உயிரினங்களுக்கும், தாவரங்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தாக உருவாகி வரும் இந்த நச்சுக் கழிவுகளை எவ்வாறு அழிப்பது அல்லது குறைப்பது என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சுற்றுச் சூழலை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக இந்த நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் விவகாரம் உருவாகி வருவதாக இந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதனை எங்ஙனம் கையாழ்வது என்பது குறித்தும் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதேபோன்ற மின்னணுக் கழிவுகள் பற்றிய மாநாடுகளும் விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்பட்ட வண்ணம் இருப்பினும் இம் மின்னணுக் கருவிகளின் உருவாக்கமும் பாவனையும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைக்கப் படவில்லை காரணம் இன்றைய நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மின்னணுப் பொருட்கள் மாறியுன்னமையே ஆகும். எது எவ்வாறிருப்பினும் மின்னணுக் கருவிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாதுவிடினும் அதன் கழிவுகளைக் கையாழ்வதற்கு சிறந்த நெறிமுறை ஒன்று அவசியமாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இவற்றை மீள்சுழற்சி அல்லது மீள் பயன்பாடு செய்வதற்கு இவ் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற நாடுகளும், நிறுவனங்களும் முன்வரவேண்டும். இப்படிப்பட்ட கழிவுகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில் மறுசுழற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என க்ரீன் பீஸ் (புசநநn pநயஉநள) என்ற அமைப்பும் வேண்டிநிற்கின்றது. அத்துடன் விற்பனை செய்யும்போதே அதன் மறுசுழற்சிக்கான விலையையும் அந்தப் பொருளில் சேர்த்துவிடலாம் என்றும் அப்பொருளின் ஆயட்காலம் முடிந்ததும் அந்தந்த நிறுவனங்களே பெற்று மறுசுழற்சி செய்யலாம் எனவும் இந்த அமைப்பு மேலும் வலியுறுத்திவருகின்றது. எனவே மேற்குறித்த அம்சங்களை நோக்கில் இந்த இலத்திரனியல் வளர்ச்சிகண்ட உலகில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியையோ, உபயோகத்தையோ தடைசெய்ய முடியாது. இதனால் மின்னணுக் கழிவுகளின் உருவாக்கமும் தடைசெய்ய முடியாத ஒன்றாகும். இருப்பினும் மின்னணுக்கழிவுகள் குறித்து கவலைகொள்ள வேண்டிய கட்டத்திலும் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்படடிருக்கின்றது. எனவே இதற்கு சரியான தீர்வானது அனைத்து நாடுகளின் அரச கொள்கைகளிலும் மக்கள் அனைவரின் மனநிலையிலேயுமே தங்கியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. முடிவுரை இ.கழிவுகள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாதவை ஆகும் எனவே இவற்றை எவ்வாறு முகாமை செய்ய வேண்டும் மற்றும் இதன் பாதிப்பில் இருந்து சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற பொறிமுறையினை நாடுகள் சரியாக பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும் http://kalviulagam45.blogspot.com/2016/10/blog-post_19.html

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா? உண்மை என்ன? பிபிசி ஆய்வு

1 month 4 weeks ago
பிரசாந்த் சாஹல் உண்மை கண்டறியும் குழு, பிபிசி படத்தின் காப்புரிமை AFP Image caption ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன. 'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன. ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. 'அரசு எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், ஹரியானாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏனெனில், இந்துக்களின் மாமிசத்தை உண்பவர்கள் மேவாரில் தங்கியுள்ளனர்' என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமை VIRAL POST இந்த செய்தி, டிவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ்ஸிலும் பகிரப்படுகிறது. இந்த அதிர்ச்சியான செய்திகளை வாட்ஸ்-அப் செயலிலும் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். 'தைனிக் பாரத் நியூஸ்' என்ற வலைதளத்தில் 'ஆஜ் தக் குட்காவ்' பத்திரிகையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மேவாதின் உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்து இளைஞர் ஒருவரின் மாமிசத்தை சாப்பிட்டபோது, பிடிக்கப்பட்டதாக இந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாதில் கள ஆய்வு மேற்கொண்டது. மேவாத் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கலிடம் பேசினோம். இதுபோன்ற குற்றச்சாட்டு குருகிராமில் பதிவாகியிருக்கிறதா என்று அவரிடம் கேட்டோம். எங்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், "இது முற்றிலும் தவறான செய்தி. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று தெளிவாக கூறிவிட்டார். பிறகு எந்த அடிப்படையில் இதுபோன்ற செய்தி வெளியானது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, 'ஆஜ் தக் குர்காவ்' பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு சென்றதும் எங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின. இந்த செய்தியை எழுதியது பத்திரிகை ஆசிரியர் சத்பீர் பரத்வாஜ் என்பது முதல் தகவல். 'ஆஜ் தக் குர்காவ்' பத்திரிகைக்கும், இந்திய டுடே குழுமத்தின் 'ஆஜ் தக்' ஊடகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் சத்பீர் பரத்வாஜிடம் பேசினோம். படத்தின் காப்புரிமை DBN.COM 'ஆஜ் தக் குர்காவ்' மற்றும் 'பஞ்சாப் கேஸரி' பத்திரிகையின் குர்காவ் பதிப்பின் செய்திப்பிரிவுத் தலைவராகவும் பணியாற்றுகிறார் சத்பீர் பரத்வாஜ் பத்திரிகைத்துறையில் 28 ஆண்டு கால அனுபவம் கொண்டிருக்கும் சத்பீர் பரத்வாஜ் குற்றச் சம்பவங்களையும் பற்றி எழுதி வருகிறார். பிபிசியிடம் பேசிய சத்பீர் பரத்வாஜ், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறுகிறார். "ஹரியானாவின் இந்துக்களின் மாமிசத்தை உண்ணும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்தது. மேவாத் மற்றும் துவாரகா எக்ஸ்பிரஸ்-வே வழித்தடத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளில் தங்கியிருக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நேரில் சந்தித்து பேச முடிவுசெய்தேன்" என்று கூறுகிறார் சத்பீர் பரத்வாஜ். படத்தின் காப்புரிமை AAJ TAK GURGAON ஹரியானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான மேவாதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அங்கு 75% முஸ்லிம்கள் வசிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கிராமங்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு,, மேவாதில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், உள்ளூர் தலைவர்கள் சிலர் அவர்களுக்கு கம்பளிகளை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் சத்பீர் பரத்வாஜ் தெரிவித்தார். மேவாத் மாவட்டத்தில் மொத்தம் 1356 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கியிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கல் தெரிவித்தார். 'காஷிஃப்' என்ற இளைஞர் கூறியதன் அடிப்படையிலேயே, 'இந்து மாமிசத்தை உண்ணும்' மனிதர்கள் பற்றிய கட்டுரையை எழுதியதாகவு, அதை தனது பத்திரிகையில் 10-16 டிசம்பர் இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டதாகவும் சத்பீர் பரத்வாஜ் தெரிவித்தார். ஆனால் காஷிஃப்பை எங்கே சந்தித்தார்? மேவாத் அல்லது குருகிராமத்தின் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் இது பற்றி பேசினாரா? அல்லது இந்த விவகாரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வேறு யாரிடமாவது பேசினாரா? என்ற கேள்விகளுக்கு சத்பீர் பரத்வாஜிடம் சரியான பதில் இல்லை. பகிரப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பிபிசி மேற்கொண்ட ஆய்வில், அது போலிச் செய்தி என்று தெரிய வந்தது. மேலும், சத்பீர் பரத்வாஜ் பகிரப்பட்ட புகைப்படம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருப்பதால் அந்த புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று பிபிசி முடிவெடுத்தது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் பகிரப்பட்டது. திபெத் மக்களின் இறுதிச் சடங்குகள் பற்றிய புகைப்படம் இது என்று அதில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சடலத்தை காட்டுப் பறவைகளுக்கு உணவாக கொடுக்கும் நடைமுறை என்று புகைப்படத்துடன் பகிரப்பட்டிருக்கும் செய்தியில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர @PhramahaPaiwan என்ற பேஸ்புக் பயன்பாட்ட்டாளர் இந்த செய்தியை 2014 ஆகஸ்ட் மாதம் பகிர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டில், இந்த புகைப்படம் சில டிவிட்டர் பயனர்களால் பகிரப்பட்டுள்ளது. அதிலும் திபெத்தியர்களின் மரண இறுதிச் சடங்குகள் என்ற மோற்கோளுடன், இந்த புகைப்படங்கள் திபெத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திபெத்திய மக்களின் இறுதி சடங்குகளின் யூ டியூப் வீடியோக்களும் உள்ளன. அதில், சடலங்கள் கழுகு போன்ற பறவைகளுக்கு இரையாக போடப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-46673679

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

1 month 4 weeks ago
மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன் இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர். இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது. தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார். http://athavannews.com/மஹிந்தவின்-கைகளுக்குள்-ம/

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

1 month 4 weeks ago
மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்
sumanthiran-2.jpg

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.

அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார்.

 

http://athavannews.com/மஹிந்தவின்-கைகளுக்குள்-ம/