Aggregator

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 3 weeks ago
டக்ளஸ் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றினை பயன்படுத்தி கல்விகற்க பழகவேண்டும் - இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர்

1 month 3 weeks ago
இவர் பதவி விலகி உள்ளதாக அல்லது விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு: எலான் மஸ்க் பெயர் பரிந்துரை

1 month 3 weeks ago
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். இதற்கிடையில், நோர்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/292864

அமைதிக்கான நோபல் பரிசு: எலான் மஸ்க் பெயர் பரிந்துரை

1 month 3 weeks ago
mask-300x188.jpg

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

இதற்கிடையில், நோர்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/292864

யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு : எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

1 month 3 weeks ago
யாழ். விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு; விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் Published By: DIGITAL DESK 3 22 FEB, 2024 | 12:51 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென விடுவிக்கப்பட்ட காணிகளில் 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகளின் அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கென மக்கள் மீள குடியேறியுள்ள வலி வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி J/242, கட்டுவன் J/238, கட்டுவன் மேற்கு J/239, குப்பிளான் வடக்கு J/211, மயிலிட்டி தெற்கு J/240 கிராமங்களில் காணி அளவீடுகள் இடம்பெறுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, குறித்த காணி அளவீடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 5ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தினால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 16 ஆம் திகதி அன்று நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இவ்விடயம் அங்கஜன் இராமநாதனால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177029

யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்?

1 month 3 weeks ago
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார். எனது வேலையைத் தொடங்கினேன். முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது. நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும். 85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார். தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர். மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால் எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே அன்று அவரிடம் இருந்து தப்பினேன். அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன். அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன். இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும். எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம். அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது. நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது. ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன். இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள். என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது. அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள். அம்முதியவரின் கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன. மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார். மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன். தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார். மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன. அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது, கைகளை மெதுவாய் நீவிவிட்டேன். அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார். மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது. ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு. எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது. நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று. இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா. http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html

யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்?

1 month 3 weeks ago
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா?
 
 

என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில்  நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும்  தொழில் செய்துகொண்டிருந்தேன்.

அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து  உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன்.

மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும்,  நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார்.
எனது வேலையைத் தொடங்கினேன்.

முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும்.

85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை  மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார்.  தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர்.

மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால்  எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே  அன்று அவரிடம் இருந்து தப்பினேன்.

அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன்.

அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன்.

இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும்.

எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம்.

அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது.

ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன்.

இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள்.

என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது.

அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை

அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அம்முதியவரின்  கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன.

மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார்.
மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன்.

தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார்.

மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன.

அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது,  கைகளை மெதுவாய் நீவிவிட்டேன்.

அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது.

ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு.

எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது.

நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.
இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா.

http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 3 weeks ago
எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3 22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது. IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன், படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177023 அவர்கள் அப்பாவிகள் அல்ல அண்ணை, தமது முதலாளிகளின் பேராசையால் தமிழக மீன் வளங்களை அழித்து தற்போது எமது கடலில் உள்ள மீன் வளங்களைத் தேடி வருகிறார்கள். லைலா வலை போன்ற சிறிய மீன்களையும் விட்டு வைக்காத மீன்பிடி முறைகளைக் கைவிடாத வரை எங்களுக்கும் நிம்மதி இல்லை, அவர்களுக்கும் மீட்சி இல்லை.

மோட்டார் சைக்கிள் கொள்ளை

1 month 3 weeks ago
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் - யாழில் சம்பவம் 22 FEB, 2024 | 11:58 AM வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177022

மோட்டார் சைக்கிள் கொள்ளை

1 month 3 weeks ago
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் - யாழில் சம்பவம்  
22 FEB, 2024 | 11:58 AM
image

வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.

அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து  தப்பியோடியுள்ளார். 

அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177022

ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்?

1 month 3 weeks ago
ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை இருக்கிறது 53 நிமிடங்களுக்கு முன்னர் நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது. ஈரமான ஃபோனை அரிசிக்குள் வைத்தால் அதில் உள்ள சிறிய துகள்கள் ஃபோனை சேதப்படுத்தும் என்றும் அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செல்போன்கள் நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை நீரில் விழுந்த செல்போனை என்ன செய்யவேண்டும்? நீரில் செல்போன் விழுந்துவிட்டாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. அரிசிப் பைக்குள் போனை வைப்பதற்குப் பதிலாக, சார்ஜர் கனெக்டர் கீழ்நோக்கி இருக்கும் வகையில் போனை வைத்துக்கு கொண்டு மெதுவாகத் தட்ட வேண்டும் என்றும், உலர விட வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும்போதிலும், அவை நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் நீரில் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கும் புகைப்பட உலகில் இருந்து வந்தது. உலகின் வெப்பமான பகுதிகளில் கேமராக்கள் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கம் 1940 களில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அப்போது ஃபிலிம் சுருள்களுக்கும் இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பழக்கமே செல்போன்களுக்கும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக, அரசி உள்பட தானியங்களுக்குள் ஈரமான செல்போன்களை வைப்பது எந்த வகையிலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவாது என்று நிபுணர்கள் எச்சரித்து வந்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈரமான செல்போன்களை உலர்த்துவதற்கு வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றை சிலர் பயன்படுத்துகிறார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி என்ன சொல்கிறது? அரிசிப் பைக்குள் ஃபோனை வைப்பது ஒரு யோசனை என்றால், வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றைக் கொண்டு அதை உலர்த்துவதற்கு முயற்சிப்பது மற்றொரு வகை. ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி இந்த யோசனையையும் தவறு என்கிறது. ஹீட்டர்கள் அல்லது ஹேர் ட்ரையர்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்கிறது ஆப்பிள். ஈரம் இருப்பது தெரிந்தவுடன் பருத்தி அல்லது காகிதத் துண்டு போன்றவற்றை போனுக்குள் நுழைக்க முயல்வதும் தவறானது செயல் என ஆப்பிள் வழிகாட்டி எச்சரிக்கிறது. அதற்குப் பதிலாக, சார்ஜரில் மீண்டும் செருகுவதற்கு முன், செல்போனை "காற்றோட்டமான காய்ந்த பகுதியில்" வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரமான செல்போன் "முழுமையாக உலர 24 மணிநேரம் ஆகலாம்" என்று ஆப்பிள் தனது வழிகாட்டியில் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம் ஈரமான செல்போன்களில் என்ன செய்யக்கூடாது? ஐபோன்களைப் பொறுத்தவரை, சார்ஜர் கனெக்டரில் ஈரம் இருந்தால் உடனடியாக திரையில் எச்சரிக்கைச் செய்தி தோன்றும். மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், ஃபோன் மற்றும் சார்ஜர் இரண்டும் காயும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது. "ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம், அல்லது வேலை செய்வதை நிறுத்தலாம். இதன் விளைவாக உங்கள் ஐபோனின் செயலிழந்து போகலாம்”, என ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி குறிப்பிடுகிறது. ஆப்பிளின் புதிய வழிகாட்டி ஆவணத்தை முதன்முதலில் வெளியிட்ட மேக்வேர்ல்ட் இணையதளம், ஐபோன்களின் புதிய பதிப்புகள் அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஐபோன் 12 இல் தொடங்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஆறு மீட்டர் ஆழம் வரை, அதிகபட்சம் அரை மணி நேரம் வரை மூழ்குவதைத் தாங்கும் திறன் கொண்டவை. ஆனால் மற்ற போன் வைத்திருப்பவர்கள், போன் நீரில் நனையும்போது அரிசி வேலை செய்யாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c514494re9zo

ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்?

1 month 3 weeks ago
ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை
செல்போன், அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை இருக்கிறது

53 நிமிடங்களுக்கு முன்னர்

நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர்.

இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது.

ஈரமான ஃபோனை அரிசிக்குள் வைத்தால் அதில் உள்ள சிறிய துகள்கள் ஃபோனை சேதப்படுத்தும் என்றும் அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
ஈரமான செல்போனை என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

செல்போன்கள் நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை

நீரில் விழுந்த செல்போனை என்ன செய்யவேண்டும்?

நீரில் செல்போன் விழுந்துவிட்டாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

அரிசிப் பைக்குள் போனை வைப்பதற்குப் பதிலாக, சார்ஜர் கனெக்டர் கீழ்நோக்கி இருக்கும் வகையில் போனை வைத்துக்கு கொண்டு மெதுவாகத் தட்ட வேண்டும் என்றும், உலர விட வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும்போதிலும், அவை நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை.

ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் நீரில் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கும் புகைப்பட உலகில் இருந்து வந்தது. உலகின் வெப்பமான பகுதிகளில் கேமராக்கள் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கம் 1940 களில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அப்போது ஃபிலிம் சுருள்களுக்கும் இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தப் பழக்கமே செல்போன்களுக்கும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக, அரசி உள்பட தானியங்களுக்குள் ஈரமான செல்போன்களை வைப்பது எந்த வகையிலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவாது என்று நிபுணர்கள் எச்சரித்து வந்திருக்கிறார்கள்.

 
ஈரமான செல்போனை என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஈரமான செல்போன்களை உலர்த்துவதற்கு வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றை சிலர் பயன்படுத்துகிறார்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி என்ன சொல்கிறது?

அரிசிப் பைக்குள் ஃபோனை வைப்பது ஒரு யோசனை என்றால், வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றைக் கொண்டு அதை உலர்த்துவதற்கு முயற்சிப்பது மற்றொரு வகை.

ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி இந்த யோசனையையும் தவறு என்கிறது. ஹீட்டர்கள் அல்லது ஹேர் ட்ரையர்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்கிறது ஆப்பிள்.

ஈரம் இருப்பது தெரிந்தவுடன் பருத்தி அல்லது காகிதத் துண்டு போன்றவற்றை போனுக்குள் நுழைக்க முயல்வதும் தவறானது செயல் என ஆப்பிள் வழிகாட்டி எச்சரிக்கிறது.

அதற்குப் பதிலாக, சார்ஜரில் மீண்டும் செருகுவதற்கு முன், செல்போனை "காற்றோட்டமான காய்ந்த பகுதியில்" வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஈரமான செல்போன் "முழுமையாக உலர 24 மணிநேரம் ஆகலாம்" என்று ஆப்பிள் தனது வழிகாட்டியில் குறிப்பிடுகிறது.

 
ஈரமான செல்போனை என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம்

ஈரமான செல்போன்களில் என்ன செய்யக்கூடாது?

ஐபோன்களைப் பொறுத்தவரை, சார்ஜர் கனெக்டரில் ஈரம் இருந்தால் உடனடியாக திரையில் எச்சரிக்கைச் செய்தி தோன்றும். மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், ஃபோன் மற்றும் சார்ஜர் இரண்டும் காயும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.

"ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம், அல்லது வேலை செய்வதை நிறுத்தலாம். இதன் விளைவாக உங்கள் ஐபோனின் செயலிழந்து போகலாம்”, என ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி குறிப்பிடுகிறது.

ஆப்பிளின் புதிய வழிகாட்டி ஆவணத்தை முதன்முதலில் வெளியிட்ட மேக்வேர்ல்ட் இணையதளம், ஐபோன்களின் புதிய பதிப்புகள் அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஐபோன் 12 இல் தொடங்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஆறு மீட்டர் ஆழம் வரை, அதிகபட்சம் அரை மணி நேரம் வரை மூழ்குவதைத் தாங்கும் திறன் கொண்டவை.

ஆனால் மற்ற போன் வைத்திருப்பவர்கள், போன் நீரில் நனையும்போது அரிசி வேலை செய்யாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c514494re9zo

மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றினை பயன்படுத்தி கல்விகற்க பழகவேண்டும் - இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர்

1 month 3 weeks ago
இலங்கை மின்சார சபை பேச்சாளரின் கருத்து தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கண்டனம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு மின்சாரம் அவசியமில்லை, எண்ணெய் விளக்கு போதும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்த கருத்துக்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் உள்ளூர் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, தீர்வின்மையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த சிறுவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே நோயல் பிரியந்த இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், தனது கருத்துக்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்தார். வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மின்சார சபை நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் தனது எக்ஸ்’ பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது அரசாங்கத்தின் அல்லது இலங்கை மின்சார சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், அமைச்சு மற்றும் மின்சார சபையின் சார்பாக மன்னிப்பு கோரினார். “இலங்கை மின்சார சபை பேச்சாளரின் அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பலரின் உணர்வுகளுடன் நான் உடன்படுகிறேன்,” என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ‘X’ இல் பகிரப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அறிக்கையில், இலங்கை மின்சார சபை பேச்சாளரின் ‘முழு’ அறிக்கையும் அனுதாபம் இல்லாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளார். “ இதைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மின்சக்தி அமைச்சர் எடுப்பார் என நான் நம்புகிறேன், ஏனெனில் கௌரவ. அதிகாரியின் அதே கருத்தை அமைச்சரும் பகிர்ந்து கொள்கிறார், ”என அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/292817

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்

1 month 3 weeks ago
அதில் தவறு இல்லை இலங்கை என்றால் தமிழர் அல்லது சிங்கலவர் தான் அவர் ஜெய் ஹிந் என்றால் தான் தவறு. இலங்கை தமிழர்கள் கனடாவில் மொன்றியலில் உள்ளோர் பிரஞ்சுகாராகவும், ரொறென்ரோவில் ஆங்கில மொழிபேசுபவர்களாகவும் வாழ்கிறார்கள்.

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி!

1 month 3 weeks ago
22 FEB, 2024 | 11:58 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177025

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி!

1 month 3 weeks ago
22 FEB, 2024 | 11:58 AM
image

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார்.

யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார்.

இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33).  

இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177025

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
இவர் எழுதியது ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால் அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான் காரணம் போராடுவோர் இல்லை தீர்வு திட்டங்கள் எழுதுவது தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும் இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும் அதுவும் இனி பேசி பலனில்லை தமிழ் ஈழம் தான் முடிவு அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான் என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு மேலும் போராடியவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே

தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

1 month 3 weeks ago
அதே தான் சுமந்திரன் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் மட்டுமே அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தனது அனுதாபத்துக்குரிய பிரச்சனையை கேலிக்கூத்தாக்குகின்றது.

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு

1 month 3 weeks ago
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.