Aggregator

ஏமனில் அமெரிக்க கூலிப்படை பணத்திற்காக என்ன செய்கிறது தெரியுமா? பிபிசி புலனாய்வு

2 months ago
பிழையான விடயங்களை யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவதுதான் நேர்மையாளர்களுக்கு அழகு. தனக்கு விருப்பமானவர்கள் செய்யும் தவறான விடயங்களை மூடி மறைத்தும் கண்டும் காணாலும் விடுதல் அவர்களின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படித்தும்.

இரண்டாம் பயணம்

2 months ago
கரவெட்டி இல்லை. நம்ம ஊர் கரணவாய்.😀 ஆனால் உள்ளொழுங்கை, குச்சொழுங்கை, பனங்கூடல் ஒற்றையடிப் பாதைகள் என்று சைக்கிளில் உழக்கியதால் இந்தப் பிரதேசங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும்🤓 ஆனால் யாழ்ப்பாணம் நகரம் இப்பவும் தெரியாது

இரண்டாம் பயணம்

2 months ago
காலை 7 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து சேர்ந்தது. வாகனத்தின் சாரதிக்கு அருகில் மைத்துனரின் மகன் அமர்ந்துகொள்ள நானும் மைத்துனரும் பின் இருக்கைகளில் வசதியாக அமர்ந்துகொண்டோம். வாகனம் கண்டிவீதியூடாக கிளிநொச்சி நோக்கிப் பயணித்தது. வழிநெடுகிலும் முள்ளிவாய்க்கால் குறித்த பேச்சுத்தான். உணர்ச்சிகள் கொந்தளிக்கப் பேசுவதும் பின்னர் அமைதியாவதும் மீண்டும் பேசுவதுமாக கண்டிவீதியில் ஓடிக்கொண்டிருந்தோம். வீதியோரங்களில் அவ்வப்போது தவறாமல் கண்களையும் மனதையும் புண்படுத்திய இராணுவ முகாம்களைக் கடந்துசென்றபோது இயல்பாகவே எழும் ஆற்றாமையும், விரக்தியும் பேச்சுக்களில் கோபமாகக் கொப்புளித்தது. இவர்கள் ஏன் இங்கு இருக்கிறார்கள்? எனும் கேள்வி திரும்பத் திரும்ப மனதிற்குள் வந்துபோனது. கொடிகாமத்திலிருந்து பச்சிலைப்பள்ளி வரையான பகுதியில் இராணுவ முகாம்களும் அவற்றோடு அவர்களின் விவசாய நிலங்களும் தெரிந்தன. கொல்லப்பட்டவர்கள் போக, விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளில் ஆக்கிரமிப்பு இராணுவம் அடாத்தாகத் தங்கியிருப்பது மட்டுமன்றி தமிழரின் நிலவளத்தைச் சுரண்டிக்கொண்டும் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனையிறவை நாம் அடைந்தபோது இடதுபுறத்தில் ராணுவ முகாமை ஒட்டி மண்டபம் போன்றதொரு கட்டடம் காணப்பட்டது. முற்பகுதியில் இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை அமைந்திருக்க தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களவர்கள் பலர் அப்பகுதியில் அமர்ந்திருந்து உணவு உட்கொள்வதும், இன்னும் ஒரு பகுதியினர் தமது இராணுவ வெற்றியின் அடையாளத்தைப் பார்வையிடுவதுமாக இருந்தனர். எமது வண்டியைக் கண்டதும் தடைமுகாமில் வீதியோரத்தில் நின்ற ஆக்கிரமிப்பாளன் மறித்தான். சாரதியிடம் "எங்கே போகிறீர்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டான். கிளிநொச்சி என்று சொன்னதும் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பார்த்துக்கொண்டே "எத்தனைபேர் போகிறீர்கள்?" என்று கேட்டான். நால்வர் என்றதும் சரி என்று வழிவிட்டான். "வழமையாகவே மறிப்பார்களோ?" என்று நான் கேட்டபோது, "இல்லை, மாவீரர் நாள் முடிந்த கையோடு கெடுபிடி அதிகமாக இருக்கிறது" என்று சாரதி சொன்னார். ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய பயணம் மனதிற்கு கடும் அழுத்தத்தைத் தந்தது. இப்பகுதிகளை மீட்டெடுக்க மாவீரர் கொடுத்த உயிர்க்கொடையும், போராளிகளின் இழப்புக்களும் இன்று வீண்போய்விட்டதே என்கிற ஆதங்கம் மனதில் தவிர்க்கமுடியாமல் வந்துபோனது. கிளிநொச்சியை அடையும்போது காலையுணவை அங்கே உட்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். சாரதியும் அம்மாச்சி உணவகத்தினருகே வீதியோரத்தில் வண்டியை நிறுத்தினார். அக்காலை வேளையிலும் உணவகம் மக்களால் நிரம்பியிருந்தது. நியாயமான விலைக்கு தரமான சைவ உணவு. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று அனைத்து வகை உணவுகளும் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் மக்கள் அங்கே உணவருந்திக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக ஓடர் செய்து உண்டோம். சுடச்சுட பரிமாறப்பட்ட உணவு பசிக்கு அமிர்தமாக இருந்தது. உணவை முடித்துக்கொண்டு இஞ்சி போட்ட தேநீர் அருந்தினோம். பணத்தைச் செலுத்திவிட்டு உணவகத்திற்குள்ளேயே இருக்கும் பனம்பொருள் விற்கும் சிறிய கடையில் சத்துமாவும், ஒடியல்மாவும் வாங்கிக்கொண்டேன். தாயகத்தில் வாழும் பெண்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் விசேடமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதுமட்டுமல்லாமல் அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம்

2 months ago
இலங்கையில் எனக்குத் தெரிந்து... தைப்பொங்கல் என்று சொல்லியே கொண்டாடினார்கள். இப்ப என்ன புதுசாய்... சமத்துவ பொங்கல், தேசியப் பொங்கல் என்று. ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். இருக்கின்ற பிரச்சினைக்குள் இவர்கள் மேலும் மக்களை போட்டு குழப்புவது ஏன். மற்ற மொழிக்காரன் தமது கொண்டாட்டத்தை அதன் பாரம்பரியம் அழியாமல் அதே பெயருடன் தான் அழைப்பான். தமிழனுக்குத்தான்.... பொங்கல் என்றாலும் பிரச்சினை, புது வருசம் என்றாலும் பிரச்சினை, தீபாவளி என்றாலும் பிரச்சினை கிழப்ப என்றே அரசியலில் உள்ள சிலர் விசமத்தனமான வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இரண்டாம் பயணம்

2 months ago
கார்த்திகை 29. நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம். 2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும். காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன். இலங்கைக்கான பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது. மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months ago
வணக்கம் வாத்தியார்........! ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும் வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் உன் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே சேந்துருக்கு கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டகள ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லி தந்தாங்களா வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது மனம் தானே தடையாச்சு அதை ஏனோ அறியேனே......! --- ராசாத்தி மனசுல ---

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று

2 months ago
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் குழப்பம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பின்னர் கூடிய பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது. அப்போது, கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பான மத்திய குழுவின் தீர்மானத்தை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து, ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று (27) திருகோணமலை-முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் தெரிவுகளுக்காக பொதுச்சபையை கூட்டுவதற்கு முன்னதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆலோசித்திருந்தது. மத்தியகுழுவின் ஆலோசனைக்கமைய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் குகதாசன், சிரேஷ்ட உபதலைவராக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இணை பொருளாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கனகசபாபதி, துணைத் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இணை செயலாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் என 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் பொதுச்சபையைக் கூட்டி மத்திய குழு எடுத்த தீர்மானங்கள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் பொதுச்சபையில் அங்கம் வகிக்கின்ற சில உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவின் இந்த முடிவை ஏற்க மறுத்ததுடன், பொதுச்சபையில் வாக்கெடுப்பை நடாத்தி பதவிகளுக்கான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகத் தெரிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367323

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று

2 months ago
இந்த பதவிகளுக்கு. ஏன் அடிபடுகிறீர்கள். மக்கள் நேரடியாக தெரிவு செய்ய சந்தர்ப்பங்களை வழங்கலாம் அதாவது கிராமிய மட்டத்திலான வாக்குப்பதியும். பொறிமுறையின் மூலம் தெரிவு செய்யலாம் இதை ஒழுங்காக செய்ய முடியவில்லை என்றால் சுயாட்சி எப்படி பெறப் போகிறீர்கள்?? சிங்களவர்களுடன் எப்படி ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும்?? மேலும் மற்றைய தமிழ் கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது??

போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்

2 months ago
போதமும் காணாத போதம் – 16 பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து பட்டியடிக்கு ஓடினேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வருகிற குச்சொழுங்கையில் அரைக்கட்டை நடந்தால் பட்டியடி சிவன் கோவில் வரும். அதற்குப் பின்னாலிருக்கும் பாழடைந்த வீட்டில்தான் சந்திப்பதாகவிருந்தது. நான் சென்றடைவதற்கு முன்பாகவே யசோ வந்திருந்தாள். பீத்தல் விழுந்த குடையொன்றை ஏந்தி நின்றாள். பீத்தல் புகுந்து அவளை நனைக்கும் மழைத்துளிகள் பேறுடையன. ஆயிரம் கண்களுடைய மயில் தோகையை நினைவுபடுத்தும் வடிவமைப்பிலான ஆடை அணிந்திருந்தாள். ஈரம் விழுந்து துளிர்த்த தளிரென குளிர்பதுக்கி நின்ற யசோவை கட்டியணைத்து முத்தமிட்டேன். விசுக்கென தள்ளி விலக்கினாள். என் யாக்கையின் மாண்பு திகைத்து திணறியது. மீண்டும் முன்நகர்ந்து அவளை இறுக அணைத்து முத்தமிட விழைந்தேன். அவள் விளையமறுத்த நிலமென முகத்தை பலகோடுகளாய் கோணலாக்கி இறுக்கியிருந்தாள். “யசோ! என்ன நடந்தது? ஏதேனும் பிரச்சனையோ!” கேட்டேன். சடை பின்னப்பட்டிருந்த கூந்தலை அவிழ்த்து விரித்தாள். காமக் களிறை உருவேற்றும் பெண் கூந்தலில் காட்டுப் பூ வாசனை. அவளுடைய கண்களில் பெருகும் கள்ளம் என்னை ஆணாக அறிவித்தது. அவளருகே என்னை அழைத்தாள். வசியமிடப்பட்ட அடிமை நான். எத்தனை சவுக்குகளையும் என்னில் வீசும் உரிமை படைத்தவள். ஆயிரம் கண்கள் கொண்ட மயில் தோகையை கழற்றி வீசினாள். பீத்தல் கூடையை சுருக்கி வைத்தாள். எப்போதும் சுருக்கவியலாத மேகமெனும் பிரமாண்டமான குடையில் எத்தனை பீத்தல்கள். யசோ! பருவத்தின் காற்றில் அசைந்து வளரும் பூக்களும், காய்களும், கனிகளும் கொண்டவள். என்னை முத்தமிட்டு முத்தமிட்டு களிகூர்ந்தாள். என் ஆடைகளை உருவி எறிந்தாள். மழையில் நிர்வாணம் பூத்து நின்றோம். “மழையில் கூடல், உடலுக்கு சுதி, உனக்கு எப்பிடி” என்று கேட்டேன். அவளுக்கு களைப்பாய் இருந்தது. அடிவயிற்றில் குளிரளித்து நின்றது சுக்கிலத்து ஈரம். யசோ எழுந்து ஆடைகளை அணிந்தபடி “நான் இண்டைக்கு வரமாட்டேன் என்று நினைத்தாய் அல்லவா” என்று கேட்டாள். “பின்ன, மழை பெய்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சந்திக்கத்தான் வேண்டுமா. ஆனாலும் நீ வந்திருப்பாய் என்று மனம் சொன்னது” என்றேன். “சரி நேரம் போய்ட்டுது. ஆடுகளை பட்டியிலிருந்து சாய்த்துவிடவேண்டும். வெளிக்கிடுகிறேன்” “இன்றைக்குப் பின்னேரம் சந்திக்கிறோமா” “வாய்ப்பில்லை. எங்கட சொந்தக்காரர் வீட்டு விஷேசம். அங்க போகவேண்டும்” “எந்த இடத்தில” “அதுவோ… உருத்திரபுரம். ஏன் வரப்போறியளோ” “இல்லையில்லை. நீ போய்ட்டு வா. நாளைக்குப் பார்க்கலாம்.” “ஏன் நாளைக்கும் மழை பெய்யுமோ” என்று கேட்டபடி அங்கிருந்து ஓடிச்சென்றாள். பட்டியில் ஆடுகள் நனைந்து நின்றன. அவள் திறந்ததும் பழக்கப்பட்ட திசைவழியில் ஓடின. வழிமாறிய ஆடுகளை மேய்த்தபடி பாழடைந்த வீட்டைப் பார்த்தாள். கூரைவரை உயர்ந்தேறிய கொடியில் மஞ்சள் பூக்கள் அசைய வானம் குனிந்து பார்த்தது. அங்கிருந்து வீட்டிற்குப் போகும் வழியிலேயே இருந்த வாய்க்காலில் குளித்தேன். ஆயிரம் புரவிகளில் ஏறித்திரிந்த கம்பீரத்தின் தினவு உடல் புகுந்திருந்தது. தண்ணீரில் நின்று கண்களை மூடினால், யாவும் அளிக்கும் ஒரு அமிழ்தக் கொடியாக நிலத்தில் படர்ந்திருக்கிறாள் யசோ. அடிவயிற்றில் மீன்களின் தீண்டல். பாதங்களை உய்விக்கும் பாசிகளின் அசைவு. தண்ணீரில் கொதிக்கும் என்னுடல். யசோ! உன்னுடைய கானகத்தின் பாதையில் திக்கற்று நிற்கும் என்னை எங்ஙனம் தாங்குவாய் சொல்! யசோவுக்கும் எனக்குமிடையே காதல் மலர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அவளுடைய தாயார் இறந்துபோன அன்றைக்குத்தான் முதன்முறையாக என்னுடைய கைகளைப் பிடித்து, வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். “உன்னை விட்டால் எனக்கினி யார்” என்பதைப் போல என்னுடைய விரல்களைப் பற்றினாள். போராளியாக களமுனையிலிருந்த யசோவின் சகோதரி அடுத்தநாள் காலையிலேயே வரமுடியும் என்பதால் அன்றிரவு முழுதும் தாயின் பூதவுடல் வீட்டில் கிடத்தப்பட்டிருந்து. மூன்று பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் பந்தல் ஒளிர்ந்தது. கடதாசிக் கூட்டம் விளையாடுபவர்கள், பீடி புகைப்பவர்கள், வெற்றிலை போடுபவர்கள், அரசியல் கதைப்பவர்கள் என எல்லோருக்கும் மத்தியிலும் பூதவுடல் தனிமையிலிருந்தது. யசோ, தாயின் தலைமாட்டிலிருந்து வேப்பிலையால் பூச்சிகளை விரட்டினாள். சோர்வும் தனிமையும் அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தன. அழுது அடைத்திருந்த குரலோடு, முகம் காய்ந்திருந்தது. அவளருகே சென்று “எப்பனாய் சாப்பிடுங்கோ யசோ” என்றேன். அவள் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு தாயின் பூதவுடலில் விழுந்து ஊர்ந்த சக்கரபாணி வண்டைத் தூக்கி எறிந்தாள். நள்ளிரவு இரண்டு மணிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். ரத்தச் சொந்தங்களில் சிலர் இழவு காத்தனர். தயாரின் மூத்த சகோதரி நேரம் பிசகாமல் ஒப்பாரி பாட விழித்திருந்தாள். “என்னையழைத்த யசோ “எனக்குத் துணையாக வரமுடியுமா” என்று கேட்டாள். “எங்கே போகவேண்டும்” கேட்டேன். “எனக்கு சுகமில்ல, துணிமாத்த வேணும். வீட்டுக்குப் பின்னாலவுள்ள மறைப்புக்குத்தான்” “ஆரும் பார்த்தால் பிழையாய் நினைப்பினம்” என்று தயங்கினேன். “இனைச்சால் இனைக்கட்டும். என்னோட வாங்கோ” கையிலிருந்த டோர்ச் லையிற் வெளிச்சத்தோடு யசோவை கூட்டிச்சென்றேன். வீட்டுக்குப் பின்பக்கத்தில் அவள் சொன்னது மாதிரி மறைப்பு ஏதும் இல்லை. அவளின் பின்னால் நடந்து சென்றேன். கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த டோர்ச் லையிற்றை வாங்கியவள் ஒருமரத்தின் கீழே எதையோ சுற்றுமுற்றும் தேடினாள். பிறகு அங்கேயே அமர்ந்து என்னையும் அப்படியே பணித்தாள். “யசோ…துணி மாத்தேல்லையோ, நீங்கள் மாத்துங்கோ நான் நிக்கிறன்” என்றேன். என்னை இறுக கட்டியணைத்து மூச்சொலி தெறிக்க முத்தமிட்டு ஆடைகளைக் களைந்தாள். வெறுமையிருள் பிளந்து இனிமை சுரக்கும் சுடர் ஏந்தி என்னை ஆட்கொண்டாள். வாய்க்காலின் நீர்ப்பெருக்கு புதிய இச்சைகளோடு சப்தமிட்டது. யசோ வானத்துக்கும் பூமிக்கும் பறந்து விழுகிற உக்கிரத்தோடு இயங்கினாள். அழிவற்ற கண்ணீருக்கு அங்குண்டு பீடம். உடல் எழுந்து பறையென அதிர்கிறது. மலையிருந்து நிலமோடி வருகிற நீர்த்தடத்தின் வெளிச்சமென யசோவும் நானும் அங்கே துய்த்து நிறைந்தோம். “உன்னுடைய அம்மா, அங்கே தனித்திருக்கிறாள். எழுந்து செல்வோம் யசோ” “அப்பாவை ஆர்மியிடம் பறிகொடுத்த நாளிலிருந்து இற்றைக்கு இருபதாண்டுகளாக அம்மா இப்படித்தான் இரவுகளைப் போக்கினாள். அவளுக்கு நிம்மதிமிக்க இரவு இன்றுதான் வாய்த்திருக்கிறது. அதையெண்ணி நீ கவலைப்படாதே” “ஆனாலும், போகலாம். ஆராவது உன்னைத் தேடி வந்தால் பிழையாகிவிடும். நீயேன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தாய்” “அது பொய்யில்லை. உண்மைதான். ஆனால் இப்ப ஒண்டையும் காணேல்ல” யசோ சிரித்தாள். இருவரும் வாய்க்காலில் இறங்கி உடலைக் கழுவினோம். யசோ அடிவயிற்றில் மீன்களைப் போல தீண்டி இரையாடினாள். காணும் போகலாம் என்றேன். “அமைதியாக இரு. கொம்புத்தேன். வெறுமையையும் துக்கத்தையும் எரிக்கிறது. தண்ணீரில் நீ விறைத்து நிற்கிறாய். உன்னுடைய உடலில் சுடரும் நிலவின் வெளிச்சம் என்னை மோகிக்கிறது. துண்டு துண்டாகி சிதறிக்கிடக்கும் உளத்தை சிறுசிறு அகல் விளக்காக மாற்றும் இந்தச் சுகத்தை நீ எனக்குத் தராமல் போகாதே. கொம்புத்தேன் உருகட்டும்” என்றாள். நாங்களிருவரும் பந்தலுக்குள் நுழையும் போது இன்னும் சிலர் உறங்கியிருந்தனர். கடதாசிக் கூட்டம் விளையாடிக்கொண்டிருப்பவர்கள் அளவில் குறைந்திருந்தனர். தாயின் தலைமாட்டில் போய் அமர்ந்தாள். அடிக்கடி என்னைப் பார்த்து கண்களை மருளச் செய்தாள். யசோவிடம் ஏதோவொரு மூர்க்கம் பெருகி நிற்கிறது. அவளினுள்ளே தணல் மூண்டிருக்கும் தீயின் சடசடப்பை அறியக் காத்திருந்தேன். அதிகாலையிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். களமுனையிலிருந்து யசோவின் சகோதரி வந்திருந்தார். தாயின் பூதவுடலைக் கட்டியணைத்து அழுதார். அம்மா.. அம்மாவென்ற அரற்றல் சுருக்கமாகவே தீர்ந்தது. அதன்பிறகு யசோவும் நானும் பலதடவைகள் சந்தித்துக் கொண்டோம். எங்களிடம் தீர்ந்து போகாத தாழிகளில் காமம் நொதித்து கள்ளென வழிந்தது. கலவியிலிருந்த கணமொன்றில் கண்கள் பனித்து “ இப்பிடி இருக்கேக்க மட்டும்தான் எங்கட நாட்டில யுத்தம் நடக்கிறதே மறந்து போகுது. ஒரு அஞ்சு நிமிஷம் அப்பிடிச் சுகமாய் இருக்கு” என்றாள் யசோ. “நல்லாயிருக்கு உங்கட கதை. நாங்கள் ரெண்டு பேரும் சந்தோசமாய் இருக்கேக்க, எத்தின பேர் நாட்டுக்காக உயிரை விடுகினமோ!” என்றேன். “இதுவும் ஒரு போராட்டம் தானே. யுத்தத்தை மறக்க ஒரு உபாயம். அப்பாவை ஆர்மிக்காரன் பிடிச்சிட்டு போன நாளிலயிருந்து அம்மா பட்ட கஷ்டங்களில இதுதான் பெரிசு. உன்ர கொப்பர் கனவில வந்து கொஞ்சச் சொல்லி அடிக்கடி கேக்கிறாரடி என்பாள் அம்மா. அப்பிடியொரு கனவு வருகிற கணங்கள் மட்டும்தான் அம்மாவோட உளம் இந்த யுத்த அவலங்களை மறந்திருக்கும். இல்லையோ!” “துயரம் தான் யசோ” “கவலைப்பட எதுவுமில்லை. ஆனால் இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரிகளில குழந்தைகள் பிறக்கினம் தானே. யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடமிதுதான்” “அடிசக்கை… இதை நீங்கள் எங்கட தவபாலன் அண்ணைக்கு சொன்னியள் எண்டால், ரெண்டுநாள் பெரிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்” “இப்பிடியொரு உண்மையை இயக்கத்தின்ர ரேடியோவில சொல்லுறதால அதைப் பொய்யெண்டு நம்பவும் வாய்ப்பிருக்கு. அதை நானே வைச்சுக் கொள்கிறேன்” என்றாள். ஆடுகளை மேய்த்துவந்து பட்டியில் அடைத்து அந்தியின் சிவந்த ஒளியில் வியர்வை சிந்த எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் பெய்த மழையில் நம்வெள்ளம் நீந்தியதை அவளுக்கு நினைவுபடுத்தினேன். உணவை சட்டியில் போட்டுக் கொடுத்து “அம்மா வீட்டில் இல்லை, இரணைமடு வரைக்கும் போயிருக்கிறா” என்றேன். அதே ஆயிரம் மயில் கண்கள் திறந்த சட்டை. ஆட்டு மந்தையின் மொச்சை மணம் ஏறிய கிளர்ச்சி. வெயிலில் காய்ந்த யசோ தகித்திருந்தாள். எங்கிருந்தோ எம்மைத் தேர்ந்தடுக்கும் இந்த உணர்வை இறையிருக்கையில் அமர்த்தி பூசிக்கவேண்டும். யுத்தம் பொல்லாத செருக்கின் அநீதி. ஆனாலும் நானும் யசோவும் உடல்களை இழைத்து யுத்தத்தை மூடினோம். அது தருவித்த தழும்புகளில் ஒரு வழித்தோன்றலை உருவாக்க எண்ணினோம். யசோவை வீட்டினுள்ளே அழைத்தேன். அவள் வேண்டாமென மறுத்தாள். என்னுடைய கைகளைப் பற்றி முத்தமிட்டு, வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்றாள். இப்போதே, இக்கணமே நாம் யுத்தத்தை மறக்கவேண்டுமென தோன்றுகிறது என்றேன். நாம் யுத்தத்தை சில கணங்கள் மறப்போமாக! அது நம்மீது சுமத்திய காயங்களை எடையற்ற இறகுகளாக ஊதிப் பறக்க விடுவோமாக! என்று சொல்லியபடி நிலத்தின் மீது கொடியெனப் படர்ந்து பூவின் அதழ்களைத் திறந்தாள். இயங்கி முயங்கும் அந்திப்பொழுதில் முன்நிலவு மேலெழுந்து வானறைந்தது. “ஆராவது வந்துவிடப் போகிறார்கள், நிறுத்திக்கொள்ளலாம்” யசோ சொன்னாள். “அம்மா வருவதற்கு நேரம் செல்லும். நீ ஏன் புதிதாகப் பயப்படுகிறாய்” என்று கேட்டேன். “யுத்தத்தை மறக்கலாம். ஆனால் இது சனங்களுக்குத் தெரிஞ்சால் மானக்கெடுத்து போடுங்கள்” “இதைத்தானே நான் அண்டைக்கு இரவும், வாய்க்காலடியில வைச்சு சொன்னான்” “எண்டைக்கு இரவு” “உங்கட அம்மா செத்த அண்டைக்கு, வாய்க்காலுக்கு கூட்டிக்கொண்டு போனியளே” “அங்கே, ஏன் நான் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு என்ன விசரே” “நல்ல கதையாய் இருக்கே. கூட்டிக்கொண்டு போய் செய்யாத வேலையெல்லாம் செய்துபோட்டு, இப்ப அப்பாவி மாதிரி, வேஷம் போடுறியள்” “சத்தியமாய் நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல. விடியும் வரை அம்மாவின்ர தலைமாட்டில இருந்து வேப்பிலையால விசுக்கி கொண்டெல்லே இருந்தனான்” “அய்யோ, இதென்ன பொய். உங்களுக்கு சுகமில்லை. துணி மாத்தவேணும். வா எண்டு என்னைக் கூட்டிக்கொண்டு போனியளல்லே” “சத்தியமா இல்ல” “அப்ப, நான் சொல்லுறது பொய். அப்பிடித்தானே” “நான் சொன்னானோ எனக்குத் தீட்டு எண்டு?” யசோவின் இந்தக் கேள்வியிலிருந்த தீவிரம் சூழலுக்கு மிக அந்நியமாய் இருந்தது. ஆனாலும் நான் ஓமென்று தலையசைத்தேன். “அம்மா செத்த அண்டைக்கு அவாவுக்கு தான் மூன்றாம் நாள் தீட்டு லேசாய் இருந்தது” என்ற யசோ என்னை இறுக அணைத்தாள். “யசோ, நீ என்ன சொல்லுகிறாய்?” “இருபது வருஷத்துக்கு பிறகு அம்மா அண்டைக்கு நிம்மதியாய் உறங்கியிருக்கிறாள். அவளும் சில கணங்கள் யுத்தத்தை மறந்து இருந்திருக்கிறாள்” என்று சொல்லியபடி யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கினாள். https://akaramuthalvan.com/?p=1664

மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்

2 months ago
பாமரரை எதிர்கொள்வது… jeyamohanDecember 31, 2023 பாமரர் என்று நாம் மொழியாக்கம் செய்து பயன்படுத்தும் சொல் கடைக்கோடிக் குடிமகன் என்னும் பொருளில் மேலைநாட்டு ஜனநாயக விவாதங்களில் பயன்படுத்தப்பட்டது. ஜான் ரஸ்கினின் Unto This Lastஎன்னும் நூலில் இருந்து உருவான கருதுகோள் அது. அரசு என்பது கடைக்கோடி மனிதனுக்கும் நலம்புரிவதாக, அவனையும் கருத்தில்கொள்வதாக அமையவேண்டும் என அன்றைய ஜனநாயகவாதிகள் சொன்னார்கள். அது ஓர் உயர்ந்த சிந்தனை. ஜனநாயகத்தின் அடிப்படைக் கருதுகோள். ஒரு குடிமகன் படிக்காதவனாக, பண்படாதவனாக, தன் உரிமைகள் என்ன என்பதையே அறியாதவனாக இருக்கலாம். அப்போதும் ஜனநாயகம் அவனை ஒதுக்கிவிடக்கூடாது. அவனுக்காகவும் அது நிலைகொள்ளவேண்டும். அவனுக்கும் உரிமைகளில் எந்த பாகுபாடும் இருக்கலாகாது. அதற்கு அடுத்த படியில் இடதுசாரிகள் பாமரர்களை கற்பனாவாத நெகிழ்வுடன் மகிமைப்படுத்தலானார்கள். படித்தவர்கள் படித்த படிப்பென்பது நிலவுடைமைச் சமூகத்தின் கல்வி. அல்லது முதலாளித்துவச் சமூகத்தின் கல்வி. அக்கல்வியால் அவர்கள் கறைபட்டவர்கள். பாமரர் அந்த கறையேதும் இல்லாத தூய குடிமகன். மக்கள் என்பவர்கள் உண்மையில் பாமரர்களே என அவர்கள் வாதிட்டனர். அந்தப் பாமரர்களை வழிநடத்தவேண்டியவர்கள் புரட்சிக்கல்வி கற்றவர்களாகிய தாங்கள் என்றனர். (மார்க்ஸியர்களான மாவோ சே துங்கும் போல்பாட்டும் பாமரர் அல்லாதவர்களை கொன்று குவித்து சமூகத்தை தூய்மைப்படுத்தியதும் உண்டு) பாமரரை புனிதப்படுத்துதல் என்பது இடதுசாரிச் சிந்தனையின் ஒரு பகுதியாக நம் இலக்கியங்களில் ஊடுருவியது. தொடக்ககால எழுத்துக்களின் மையக்கருவே பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகளை விதந்தோதுவதுதான். ஆரம்பத்தில் அது விந்தையான ஒரு புதியசிந்தனையாக இருந்தது. பின்னர் ஏற்பு பெற்றது. பின்பு அரசியல்சரிநிலையாக ஆகியது. இன்று பாமரன் என்றாலே நல்லவன், பண்பானவன் என்று சொல்லவேண்டும் என்பது ஒரு அறிவுத்தளக் கெடுபிடி. பாமரனை கொண்டாடவேண்டுமே ஒழிய விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். பாமரனை கொண்டாடும் இந்த மனநிலை முன்னர் மதங்களில் இருந்தது. இந்தியப் பக்தி இயக்கம் பாமரர்களை கொண்டாடுவதை காணலாம். அறிஞர்களுக்கு காணக்கிடைக்காத கடவுள் மூர்க்கமான பக்தி கொண்ட பாமரனுக்கு அருள்கிறார் என பக்திக்கதைகள் சொல்கின்றன. கிறிஸ்தவ மரபிலும் கல்வி சாத்தானுடன் தொடர்புபடுத்தப்பட்டது, கல்லாமை நேரடியாக ஏசுவுக்கு அணுக்கமானதாக கொண்டுசெல்லும் என்று சொல்லப்பட்டது. ஏசு பாவிகளை மீட்கவே வந்தார் என்னும் நம்பிக்கையானது அவ்வாறு மீட்டமைக்கப்பட்டது. கிறிஸ்தவம் , பக்தி இயக்கத்தின் சைவ வைணவப் பெருமதங்கள் முதலியவை பாமரரைக் கொண்டாடுவதன் வழியாக பாமரரைக் கவர்ந்து பெரிய அமைப்புகளாக மாறின. அதையே பின்னர் இடதுசாரி புரட்சிகர அமைப்புகள் செய்தன. அவையும் பாமரரை புகழ்ந்து பாமரரை ஒருங்குதிரட்டி ஆற்றல்கொண்டவையாக ஆயின. அந்த வழியையே இன்று அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். அவர்கள் பாமரரை புகழ்வது பாமரர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே. ஓர் அறிவியக்கவாதி ஒருபோதும் பாமரரைப் புகழமுடியாது. அது அவன் செயல்படும் அறிவியக்கத்தையே அவன் நிராகரிப்பது போன்றது. மானுடகுலம் உருவானபோதே தோன்றி இன்று வரை நீடிக்கும் மானுட அறிவு என்னும் மாபெரும் சக்தியை மறுப்பது போன்றது. மனிதகுலம் பிற உயிர்களில் இருந்து வேறுபட்டிருப்பது அந்த அறிவியக்கத்தால்தான். மனிதகுலம் உருவாக்கியுள்ள சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், கலைப்படைப்புகள் அனைத்தும் அதன் அறிவியக்கத்தின் உருவாக்கங்கள்தான். பாமரர் என்றால் யார்? ‘சமூகத்தில் நிகழும் அறிவியக்கத்துடன் எவ்வகையிலும் பிரக்ஞைபூர்வமாக தொடர்பு கொள்ளாத ஒருவர்’ என பொதுவாக வரையறை செய்யலாம். அந்த அறிவியக்கத்துடன் இருவகையில் தொடர்புகொள்ள முடியும். அதை அறிந்துகொள்ளுதல், அதில் பங்களித்தல். இரண்டையுமே செய்யாதவர் பாமரர். அப்படி, அறிவியக்கத்துடன் தொடர்பே அற்றவர்கள் உண்டா என்று கேட்கலாம்.அறிவியக்கத்தால் தொடப்படாத ஓர் மானுட உயிர் பூமியில் இருக்க முடியாது. ஏனென்றால் ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள், மதம், அறிவியல் எல்லாமே அறிவியக்கத்தால் உருவானவைதான். கல்வி எதுவானாலும் அறிவியக்க அறிமுகம்தான். ஆனால் பாமரர் என்பவர் அறிவியக்கம் பற்றி அறியாமல், தனக்கு புகட்டப்பட்டதை மட்டும் அறிந்திருப்பார். தன் உயிர்வாழ்தலுக்குத் தேவையானவற்றை மட்டும் கற்றிருப்பார். அதற்குமேல் அக்கறையே அற்றவராக இருப்பார். அத்தகையோரை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். அத்தகைய பாமரர்கள் பயனற்றவர்கள் என்றோ, அவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்றோ எந்த அறிவியக்கவாதியும் சொல்ல மாட்டான். அறிவியக்கம் பாமரர்களுக்கு எதிரானது அல்ல. பாமரர்களுக்கும் அவர்களுக்குரிய சமூகப்பங்களிப்பு உண்டு. அவர்கள் அறிவியக்கத்தின் ஆராய்ச்சிக்குரிய மூலப்பொருட்கள், அறிவியக்கத்தின் பேசுபொருட்கள் மட்டுமே. அவர்கள் சமூகத்தின் பகுதியினர் என்பதனால் அறிவியக்கம் அவர்களின் நலனையும் கருத்தில்கொண்டே செயல்படமுடியும். ஆனால் அறிவியக்கத்தின் பார்வையில் அவர்களின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவேண்டியவை அல்ல. அவர்களை அறிவியக்கம் ஒரு தரப்பாகக் கொள்ளாது. அவர்கள் அறிவியக்கம் மீது கொண்டுள்ள அச்சம், இளக்காரம் ஆகியவை எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்மறை விசைகள். அவர்களிடமிருந்து அறிவியக்கம் பாதுகாக்கப்படவேண்டும். இன்று, சமூகவலைத்தளச் சூழலில் பாமரர்களுக்கு ஊடகம் அமைந்துள்ளது. அவர்களின் கருத்துக்கள் திரண்டு ஆற்றல் கொண்டவை ஆகியுள்ளன. இன்று அந்த பாமரர் அறிவியக்கத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகத் திரண்டுள்ளனர். அந்த புரிதல் அறிவியக்கத்தில் செயல்படுபவர்களுக்குத் தேவை. சென்ற காலகட்டத்தில் ஜனநாயகத்தை முன்வைத்த அறிவியக்கவாதிகளும் இடதுசாரிகளும் பாமரர் பற்றி கொண்டிருந்த கற்பனாவாத நெகிழ்வுடன் இன்று அவர்களை அணுகுவது அறிவியக்கத்தின் அழிவுக்கே வழிவகுக்கும். பாமரர் என்ற சொல்லை இரண்டு வகைகளில் மேலும் பகுத்து விரித்துக்கொள்ள வேண்டியுள்ளது. துறைசார் பாமரர்கள் இன்று உண்டு. ஏனென்றால் இன்று எல்லா அறிவுத்துறைகளும் பிரம்மாண்டமாக பெருகி வளர்ந்து தனி உலகங்களாக மாறிவிட்டிருக்கின்றன. முறையான பயிற்சியின்றி எந்த அறிவுத்துறைக்குள்ளும் நுழைய முடியாது. ஆகவே ஒரு துறை அறிஞர் இன்னொரு துறையில் பாமரர் ஆக இருக்க முடியும். முன்புபோல எல்லாத்துறைகளிலும் ஓர் அறிதல் இன்று இயல்வது இல்லை. நான் கணிதம் அல்லது கணிப்பொறியியல் போன்ற ஏராளமான துறைகளில் பாமரனே. அங்கே சென்று என் கருத்துக்களைச் சொல்ல மாட்டேன். எனக்கு புரியாதவை என்பதனால் அவற்றை இகழ மாட்டேன். எனக்கு என்ன தெரியும், எங்கு நான் கருத்து சொல்லலாம் என்று தெரிந்திருப்பதே இன்று ஓருவனின் அடிப்படைத் தகுதி. அது இல்லாதவர் பாமரர். ஒரு துறையில் நீங்கள் எந்நிலையில் நின்று கருத்து சொல்கிறீர்கள் என்பதை நீங்களே வரையறை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக நான் பங்குச்சந்தையில் வெறும் எளிய முதலீட்டாளனாக மட்டுமே எதையேனும் சொல்லமுடியும். நிபுணனாக அல்ல. ஆனால் இன்று சமூகவலைத்தளச் சூழலில் கணிப்பொறியியலில் உயர்தகுதி கொண்ட ஒருவர் மருத்துவத்தில் புகுந்து கருத்துச் சொல்வது சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. ஒரு கணித நிபுணர் தொல்லியல் தேவையற்றது என இகழ்வதை கண்டுள்ளேன். அவர்கள் அந்ததந்த களங்களில் பாமரர்களே. இன்னொரு வகை பாமரர்களை ‘படித்த பாமரர்’ என்று சொல்லலாம். இன்று கல்வி பரவலாக ஆகியுள்ளது. தொழில் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஊடகம் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. ஆகவே ஏராளமானவர்களுக்கு தங்கள் துறைகளின் தேர்ச்சி உண்டு. செய்திகளை தெரிந்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களும் ஒருவகை பாமரர்களாக இருக்கக்கூடும். ஒருவர் இன்றுள்ள ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ என்ற மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் மூளைக்குள் திணிக்கப்பட்டவற்றை மட்டுமே அறிந்து, அவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர் என்றால் அவர் படித்த பாமரரே. தனக்குரிய சுயமான தேடலுடன், தனக்குரிய களத்தில் படித்தும் அறிந்தும் முன்செல்லாதவர் அனைவருமே பாமரர்கள்தான். ஏதேனும் ஒருவகையில் மெய்யான அறிவியக்கத்துடன் தொடர்புகொண்டிராதவர் பொதுக்களத்தில் என்ன அறிந்திருந்தாலும் பாமரரே.இந்நூற்றாண்டு உருவாக்கிய ஒருவகை நவீனப்பாமரர்கள் இவர்கள். இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அறிவியக்கத்தில் செயல்படுபவர் உணர்ந்தாகவேண்டும். இவர்களை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறோம். ‘படிச்சவனா தெரியறான் சார், ஆனா….’ என்று அடிக்கடி நாம் சொல்ல நேர்கிறது. ஆனால் அவர்களை நம்மால் வரையறை செய்துகொள்ள முடிவதில்லை. அதனால் பல இடர்கள் நம் சிந்தனையிலேயே உருவாகின்றன. என் இளம் நண்பர் ஒருவர் சொன்னார். ‘எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கான் சார். ஆனா அரசியல் கட்சிக்கு அடியாள் மாதிரி மூர்க்கமாப் பேசிட்டிருக்கான்… கல்லத்தூக்கி வீசுற தொண்டனைவிட கேவலமா இருக்கான்’. இங்கே ஒரு பாமரர் ஒரு பட்டம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை உருவாக்குகிறது. பாமரர்களின் இயல்பு அவர்களுக்கு புகட்டப்பட்டவற்றில் அப்படியே மூழ்கிவிடுவது. அதன் விளைவாக அரசியல், மதம், இனவாதம், மொழிவாதம், தனிநபர் வழிபாடு போன்றவற்றில் கண்மூடித்தனமாக இருப்பது. சில அடிப்படை நம்பிக்கைகளை வெறியுடன் சொல்லிக்கொண்டிருப்பது. இன்னொரு நண்பர் புதியவாசகர் சந்திப்பின்போது சொன்னார். ‘நல்ல படிச்சிருக்காங்க. அரசியல் சினிமா எல்லாம் பேசுறாங்க. ஆனா உங்கள ஒருத்தன் அடிச்சப்ப புளிச்சமாவுன்னு சொல்லி இளிப்பான் போட்டுட்டு இருந்தாங்க. இப்பவும் எங்க போனாலும் அதைச் சொல்லி ஒரு இளிப்பான் போடுறாங்க…இவங்களை எப்டிசார் எடுத்துக்கிடுறது?’ அதேதான் இங்கும் பிரச்சினை. பாமரர்கள், அறிவியக்கத் தொடர்பே அற்றவர்கள். ஆனால் கூடவே இங்கே மூன்று களங்களில் பிரச்சாரம் செய்யப்படும் பொதுவான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் படித்த பாமரர் என வரையறை செய்கிறோம் இதை எழுதும் இன்று இரண்டுபேரை சந்தித்தேன். பிராமணச் சாதியில், மிக உயர்ந்த பொருளியல் சூழல் கொண்ட குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகப்பெரிய கல்வி கற்று மிகமிக வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர் ஒருவர். ஒரு மணி நேரம் அவர் பேசினார். நூறாண்டுகளுக்கு முன் ஓர் அக்ரஹாரத்தில் கல்வியறிவே அற்ற ஒருவர் என்னென்ன பேசுவாரோ அதையேதான் நிறைய ஆங்கிலம் கலந்து ஒருவகை மழலையில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆசாரமூடத்தனம், மதமூடத்தனம், சாதிப்பெருமிதம், அதன் விளைவான அரசியல் மூர்க்கம். கூடவே எல்லாவற்றுக்கும் அபத்தமான அறிவியல் விளக்கம். நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன். இந்தவகைப் பாமரர்கள் சூழ வாழும் சூழல் இன்று அறிவியக்கவாதிக்கு அமைகிறது. நண்பர்கள், தொழிலில் உடனிருப்பவர்கள், ரயிலில் சந்திப்பவர்கள். இவர்களை கடந்துசெல்லும் பொறுமை இன்றியமையாதது. சமூகவலைத்தளங்களில் இவர்களே திரண்டு ‘கருத்துத்தூண்’ மாறியிருக்கையில் நாம் இவர்களின்மேல் சென்று முட்டிக்கொள்ளக்கூடாது. ‘கருத்துமூட்டம்’ ஆக இவர்கள் திரண்டிருக்கையில் நாம் மூச்சுத்திணறலாகாது. இவர்களை கடந்து நம் சிந்தனையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாமரரை கையாளத் தெரியாமல் இந்நூற்றாண்டில் இனி எவரும் சிந்தனைக் களத்தில் செயல்பட முடியாது. அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஆனால் தேவையானபோது சொல்லியே ஆகவேண்டும், பாமரர் என்பவர் பாமரரே. பாமரராக இருப்பதில் பெருமை ஏதுமில்லை. பாமரர் என்பது புனிதமான ஒரு நிலை அல்ல. பாமரரை எந்த வகையிலும அறிவியக்கவாதி நிறைவுசெய்யவேண்டிய தேவை இல்லை. அறிவியக்கவாதி பாமரரை நிமிர்வால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். தன்னுடைய அறிவுத்தகுதி பற்றியும் அறிவியக்கத்தில் தன் பங்களிப்பு பற்றியும் மானுடச் சிந்தனை வரலாற்றில் ஒரு துளியாகவேனும் தனக்கு ஒரு இருப்பு உண்டு என்பது குறித்தும் அவன் பெருமிதம் கொண்டிருக்கவேண்டும். அதை பாமரர் மேட்டிமைவாதம் என்பார்கள். அப்படியென்றால் அப்படியே வைத்துக்கொள், நீ பாமரன், என்றேனும் நீ மேலெழுந்து வந்தாலொழிய உன்னிடம் எனக்கு உரையாடல் இல்லை என்றே அறிவியக்கவாதி பதில் சொல்லவேண்டும். அந்த நிமிர்வால் பாமரர் சீண்டப்படுவார்கள். கூச்சலிடுவார்கள். கூட்டாக சூழ்ந்துகொண்டு ஏளனமும் வசையும் பொழிவார்கள். ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கு தாங்கள் மெய்யாகவே பாமரர் என்று தெரியவரக்கூடும். அந்த தன்னுணர்வால் அவர்கள் அறிவியக்கம் நோக்கி வரக்கூடும். அந்த மிகச்சிலருக்காக பாமரரை நோக்கி நீ பாமரன் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும். (நிறைவு) https://www.jeyamohan.in/195323/