Aggregator

யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக விபத்து சிகிச்சை பிரிவு

2 months ago
யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக விபத்து சிகிச்சை பிரிவு
January 16, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Jaffna-hospital.jpg?resize=550%2C413

யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவு எதிர்வரும் 07ஆம் திகதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விபத்து சிகிச்சை பிரிவில் 100 கட்டில் வசதிகளுடன் , 3 சத்திர சிகிச்சை கூடங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

விபத்துக்களுக்கு உள்ளாவோர் நேரடியாகவே இந்த பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கபட்டு , அவர்கள் குணமடைந்த பின்னர் அவர்கள் அங்கிருந்தே வெளியேற கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

குறித்த சிகிச்சை பிரிவினை எதிர்வரும் 7ஆம் திகதி மத்திய சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னவினால் திறந்து வைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

 
 
 

புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…

2 months ago
புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன… January 15, 2019 தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்வை மண்ணில் பறக்கவிடப்பட்டது.அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் “செய் அல்லது செத்துமடி ” எனும் வாசகத்துடன் அங்கயற்கண்ணி (பெண் கடற்கரும்புலி) என பெயர் பொறிக்கப்பட்ட படகு, சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்ட யுத்த டாங்கி, இராட்ச எறும்பு , தையல் இயந்திரத்தில் தைக்கும் பெண் , சமயலறை, விளையாட்டு மைதானம் போன்ற வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் ஏற்றப்பட்டன. http://globaltamilnews.net/2019/110069/

புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…

2 months ago
புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன…

January 15, 2019

 

 

 

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்வை மண்ணில் பறக்கவிடப்பட்டது.அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது.

அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் “செய் அல்லது செத்துமடி ” எனும் வாசகத்துடன் அங்கயற்கண்ணி (பெண் கடற்கரும்புலி) என பெயர் பொறிக்கப்பட்ட படகு, சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்ட யுத்த டாங்கி, இராட்ச எறும்பு , தையல் இயந்திரத்தில் தைக்கும் பெண் , சமயலறை, விளையாட்டு மைதானம் போன்ற வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் ஏற்றப்பட்டன.

IMG_5133.jpg?resize=800%2C600

1-4.jpg?resize=800%2C6002.jpg?resize=800%2C6003.jpg?resize=800%2C6004.jpg?resize=800%2C600

IMG_5139.jpg?resize=800%2C600IMG_5211.jpg?resize=800%2C600IMG_5301.jpg?resize=800%2C516

http://globaltamilnews.net/2019/110069/

சவேந்திர சில்வா  விவகாரம் – நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார் சம்பந்தன்

2 months ago
சிங்கள நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரு அமைப்பல்ல. எப்பக்கம் அதிகாரம் இருக்கின்றதோ, அப்பக்கம் சார்ந்து செயற்படக்கூடியது. ஆகவே, சவீந்திர சில்வா எனும் போர்க்குற்றவாளிக்கெதிரான வழக்கென்பது, சிங்கள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடும் என்பதை நம்பமுடியாது. 2009 இனவழிப்புப் போரில் இவனது படுகொலைகள் விசாரிக்கப்பட முடியுமென்றால், கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துப் படுகொலைகளும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரின் குடும்பத்தாரின் படுகொலைகளைகளின் சூத்திரதாரிகளின் மீதான விசாரணையைத்தவிர வேறு எந்தச் சிங்கள ராணுவக் கொலையாளிகளும் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே சுமந்திரனால் எதுவுமே செய்ய முடியாது. சிங்களவரின் தயவுடனான ஒரு அரசியல் தீர்வைப் பெறவேண்டும் என்கிற உறுதியில் செயற்பட்டு வரும் சுமந்திரனால், ரணில் அரசிற்கு கீழ்ப்படாத ராணுவத்திற்கெதிரான ஒரு வழக்கை கொண்டு நடத்தமுடியுமென்பது இயலாத காரியம். இது, அவரது தீர்விற்கான முயற்சிகளை முற்றாகவே கலைத்துப் போட்டுவிடும். இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. 2001 ரணில் புலிகள் பேச்சுவார்த்தையில், அப்போது சனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா, தொடர்ச்சியான முட்டுக்கட்டைகளை சமாதான முயற்சிகளுக்கு எதிராகப் போட்டு வந்ததுபோல, இன்றைய ரணில் அரசிற்கும் மைத்திரி செய்துவருகிறார். மகிந்த எனும் இனக்கொலையாழியின் உத்தரவின்பேரில் செயற்பட்டுவரும் மைத்திரியின் இன்றைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் சவீந்திர எனும் போர்க்குற்றவாளியின் பதவி நியமனமும். அதுமட்டுமல்லாமல், ஐ. நா வினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதென்கிற முடிவிற்கெதிராகச் செயற்பட மைத்திரி முடிவெடுத்திருப்பதும் இதன் ஒரு அங்கம்தான். கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கான அமெரிக்க பரிந்துரையை உதாசீனம் செய்திருக்கும் மைத்திரி, மகிந்தவின் ஆலோசனையின்படி செயற்பட்டு மேற்குலகினை இலங்கையில் ஓரங்கட்டி வருகிறார். போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து மகிந்த, கோத்தா மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் முதல், சாதாரண சிப்பாய்கள் வரையானவர்கள் எல்லோருமே தப்பிக்க, மேற்குலகினை விட்டு சீனாவின் பக்கம் மைத்திரி சென்றுகொண்டிருக்கிறார். சுமந்திரனுக்கும் சம்பந்தருக்கும் இன்னொரு வழியிருக்கிறது. சிங்களத்துடன் உடன்பட்டுப் போகாமல், நேரடியாக சர்வதேசத்திடம் நீதிகேட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றங்களுக்கெதிரான வழக்கொன்றைப் பதிவுசெய்யலாம். ஆனால், அது சிங்களத்துடனான அனைத்துக் கதவுகளையும் மூடி விடும். அதன்பிறகு, சமரசம் என்கின்ற பேச்சிற்கு இடமிருக்காது. மேற்குலகு, தமிழரின் நலனுக்காக இறங்கிவந்து, சிங்களப் போர்க்குற்றவாளிகளை தண்டித்து எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்பது நம்பமுடியாதது. ஏனென்றால், போர்க்குற்றங்கள் நடைபெற்றபோது, அதற்குத் தேவையான அனுசரணையை வழங்கி, தமிழர்களை அழிக்கத் துணைபோய், அதை ஆமோதித்தவர்களே இந்த மேற்குலகுதான்.

ஹேப்பி பொங்கல் சொன்ன தமிழர்களே இதை படிங்கப்பா !

2 months ago
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்".. ஆஹா.. "ஹேப்பி பொங்கல்" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா! ஒட்டாவா: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற அழகிய தமிழ் வார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உதிர்க்க அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.கனடாவில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும் எப்போதுமே இந்தியர்கள் மீது தனி பாசம்.அவர் இந்திய மற்றும் தமிழ்ப் பண்டிகைகளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு குறிப்பாக இந்திய மக்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் அவருக்கு நம் நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ்கள் உண்டு. குத்து விளக்கேற்றினார் 2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தீபாவளிக்கு, கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி அந்த பண்டிகையை கொண்டாடினார். வேட்டி சட்டை அதேபோல, கடந்த பொங்கல் பண்டிகைக்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். எப்பவுமே கோட்-சூட்டுடன் இருக்கும் ஜஸ்டின், அன்று நம்முடைய பாரம்பர்ய உடையான வேட்டி சட்டைஅணிந்திருந்தார். தமிழ் வணக்கம் இந்த வருடமும் ஜஸ்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்குகிறார் ஜஸ்டின். சர்க்கரை பொங்கல் பிறகு ஆங்கிலத்தில் தமிழர்களின் சிறப்பை எடுத்து கூறி இறுதியாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று மழலை தமிழிலேயே சொல்லி முடிக்கிறார். ஜஸ்டினின் இந்த சர்க்கரை பொங்கல் பேச்சு வைரலாகி வருகிறது. ஜஸ்டினின் தமிழ் வாழ்த்து கன்னல் கரும்பாக இனிக்கவே செய்யும் https://tamil.oneindia.com/news/international/canadian-prime-minister-justin-trudeau-s-pongal-wish-338944.html டிஸ்கி : இதில் ஹிந்தியன் எங்கு வந்தான் ? செம்பு தட்ஸ்தமிழின் கிந்திய யால்ரா ஒரு வரைமுறை இல்லாமல் போய்கொண்டுள்ளது ..! 😝

ஹேப்பி பொங்கல் சொன்ன தமிழர்களே இதை படிங்கப்பா !

2 months ago

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்".. ஆஹா.. "ஹேப்பி பொங்கல்" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா!

justin344-1547613982.jpg

ஒட்டாவா: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற அழகிய தமிழ் வார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உதிர்க்க அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.கனடாவில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும் எப்போதுமே இந்தியர்கள் மீது தனி பாசம்.அவர் இந்திய மற்றும் தமிழ்ப் பண்டிகைகளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு குறிப்பாக இந்திய மக்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் அவருக்கு நம் நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ்கள் உண்டு.

குத்து விளக்கேற்றினார்

2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தீபாவளிக்கு, கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி அந்த பண்டிகையை கொண்டாடினார். 

வேட்டி சட்டை 

அதேபோல, கடந்த பொங்கல் பண்டிகைக்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். எப்பவுமே கோட்-சூட்டுடன் இருக்கும் ஜஸ்டின், அன்று நம்முடைய பாரம்பர்ய உடையான வேட்டி சட்டைஅணிந்திருந்தார்.

தமிழ் வணக்கம்

இந்த வருடமும் ஜஸ்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்குகிறார் ஜஸ்டின்.

சர்க்கரை பொங்கல்

பிறகு ஆங்கிலத்தில் தமிழர்களின் சிறப்பை எடுத்து கூறி இறுதியாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று மழலை தமிழிலேயே சொல்லி முடிக்கிறார். ஜஸ்டினின் இந்த சர்க்கரை பொங்கல் பேச்சு வைரலாகி வருகிறது. ஜஸ்டினின் தமிழ் வாழ்த்து கன்னல் கரும்பாக இனிக்கவே செய்யும்

https://tamil.oneindia.com/news/international/canadian-prime-minister-justin-trudeau-s-pongal-wish-338944.html

டிஸ்கி :

இதில் ஹிந்தியன் எங்கு வந்தான் ? செம்பு தட்ஸ்தமிழின் கிந்திய யால்ரா ஒரு வரைமுறை இல்லாமல் போய்கொண்டுள்ளது ..! 😝

 

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று!

2 months ago
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று! எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த காற்று வீசுவதன் காரணமாக கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படுமென்பதால், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. http://athavannews.com/நாட்டின்-பல-பகுதிகளில்-எ/

2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

2 months ago
2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதுதொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் ‘மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு, பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக 2000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறனாற்றல் அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது http://athavannews.com/2000-மில்லியன்-ரூபாய்-செலவில/

2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

2 months ago
download-18-720x450.jpg 2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

இதுதொடர்பில் அமைச்சரவையில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில் ‘மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்தோடு, பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக 2000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறனாற்றல் அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

http://athavannews.com/2000-மில்லியன்-ரூபாய்-செலவில/

இலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இரு அகதிகள் கைது

2 months ago
இலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இரு அகதிகள் கைது தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் கண்ணாடிப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த காவற்படையினர், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர். இதன்போது, சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்புகுமரன் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற குறித்த இருவரும், மதுரை ஆனையூர் முகாமில் தங்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/இலங்கைக்குத்-திரும்ப-முற/