Aggregator

இலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா

12 hours 7 minutes ago
இலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா தென்னிந்திய நகரமான பெங்களுரில் இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான ' இந்து' வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்தவாரம் சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ராஜபக்சவின் அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று நாள் நடைபெற்ற 2019 உலக நிலைபேறான அபிவிருத்தி உச்சிமகாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்தவாரம் புதுடில்லிக்கு சென்றிருந்தார். தீவிர அரசியலில் இல்லையென்றாலும், குமாரதுங்க தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு முக்கியமான ஒருவராக நோக்கப்படுகின்றார்.ஏனென்றால் வெளியுலகுடன் குறிப்பாக இந்தியாவுடனும் மேற்கு நாடுகளுடனும் நெருக்கமான தொடர்புகளை அவர் கொண்டிருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிரணியின் பொதுவேட்பாளராக 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேனவை இணங்கவைத்து ராஜபக்சவைத் தோாற்கடிப்பதற்கான வியூகத்தை வகுப்பதில் குமாரதுங்க முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்திருந்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்புலத்தில், குமாரதுங்க வகிக்கின்ற பாத்திரம் என்வென்று தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் குறிப்பாக , ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதியுடன் மீண்டும் சேர்ந்துகொண்டுள்ளதை அடுத்து மிகுந்த ஜாக்கிரதையாக இந்தியா நடந்துகொள்கிறது. இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தையும் இலங்கையின் 71 வது சுதந்திரதினத்தையும் முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை-- இந்திய சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய உயர்ஸதானிகர் தரன்ஜித் சிங் சந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் சிற்பி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் சிற்பியாக விக்கிரமசிங்க இருந்துவந்திருக்கிறார்.ஏனென்றால், 2017 ஏப்ரலில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முக்கியத்துவம்வாய்ந்த விஜயத்தின்போதே பொருளாதாரத் திட்டங்களில் ஒத்துழைத்துச் செயற்படுவது தொடர்பான உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன.அந்த உடன்படிக்கை இலங்கை -- இந்திய அபிவிருத்தி கூட்டுப்பங்காண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டவரைவை வழங்கியது என்றும் உயர்ஸ்தானிகர் சந்து தமதுரையில் கூறினார். இவ்வருட இறுதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்றது.இதை மனதிற்கொண்டே வெகு ஜாக்கிரதை உணர்வுடன் இந்தியா சகல இலங்கைத் தலைவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் ' கயிற்றின் மேல் நடக்கும் ' காரியத்தில் இறங்கியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுகின்ற கட்சி இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் செயற்திட்டங்ளுக்கு அனுசரணையாக இருக்கும் அல்லது தடுக்கும் என்று கருதப்படுகிறது. ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிங்கள பௌத்தர்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டதாக இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் பெரும்பான்மையான வாக்குகளைத் தனதாக்கிக்கொள்ளும் என்று கருதப்படுகின்ற அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறக்கப்படும் பட்சத்தில் தேர்தலில் அந்த கட்சியின் வெற்றிவாய்ப்பை முழுவதுமாக நிராகரிக்கமுடியாமலும் போகலாம்.அதனால் தற்போது வீடமைப்பு அமைச்சராக இருக்கும் அவரின் வீடமைப்புத்திட்டங்களை ஆதரிப்பதில் இந்தியா முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது. 2015 ஆண்டில் இருந்ததைவிடவும் இந்தியா இப்போது விவேகமானதாக இருக்கிறது.ஒரு தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்துவிட்டால் அவர் மறக்கப்பட்டுவிடுவார் என்று நம்பிக்கைகொண்டு 2015 ஆம் ஆண்டில் தவறிழைத்த இந்தியா ' எதிரிகள் எவரையும் உருவாக்குவதில்லை' என்ற சிந்தனையைப் பின்பற்றுகின்றது. மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் பெங்களுரில் நிகழ்த்திய உரையில் ஒத்துக்கொண்டதைப் போன்று 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியிழந்தபோது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தடங்கல் ஏற்பட்டது.அன்றைய ராஜபக்ச அரசாங்கத்துடன் ஆரோக்கியமான உறவுகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி வைத்திருந்தது. பிறகு பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் உறவுகளைச் சீர்செய்ய சற்று காலம் எடுத்தது.இறுதியில் இந்தியா ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து 2015 ஆம் ஆண்டில் ஜனதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக சிறிசேன களமிறக்கப்பட்டார். ஆனால், 2017 அளவில் இந்தியா அதன் தவறை புரிந்துகொண்டது.2017 மார்ச்சில் பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மகிந்த ராஜபக்சவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான அவரது சகோதரர் கோதாபய ராஜபக்சவையும் சந்தித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உயரஸ்தானிகர் சந்து இந்தியா இலங்கையுடன் விதியால் இணைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இலங்கைத்தீவல் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு எதிராக இந்தியா மிகுந்த விழிப்புடன் இருக்கிறது.அதனால்தான் வேறு எந்த ' வெளியாரினாலும் ' பதிலீடுசெய்யமுடியாத பிணைப்புகளை கொழும்பும் புதுடில்லியும் கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காக வரலாற்றை இந்தியா நினைவூட்ட விரும்பியது என்பதை சந்துவின் கூற்று வெளிக்காட்டியது. கொழும்பில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதாக இருந்தாலும் கூட 2017 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ( இலங்கையில் 15 க்கும் மேற்பட்ட இந்திய செயற்திட்டங்கள் தொடர்பான) உடன்படிக்கைகள் தொடர்ந்தது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதிலேயே புதுடில்லி இப்போது கவனத்தைக் குவித்திருக்கிறது. கொழும்புக்கு வெளியே கெரவலப்பிட்டியவில் திரவ இயற்கை வாயு ஆலையை அமைப்பதற்கான இந்திய -- ஜப்பான் கூட்டுத் திட்டத்தைத் தவிர இந்தியாவின் சில திட்டங்கள் தடங்கலுக்குள்ளாகியிருக்கின்றன.மறுபுறத்தில் சீனா இலங்கையில் தான் விரும்புகிற திட்டங்களை ( பெரும்பாலானவை தனியார் கட்டிட நிர்மாணத்துறை சார்ந்தவை) பெற்றுக்கொள்கிறது. சமூகத்துக்கு பொருத்தமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதிலேயே ஈடுபட்டிருப்பதாக இந்தியா வாதாடுகிறது." இலங்கையில் இலவசமாக 47,000 வீடுகளை நிர்மாணித்துக்கொடுத்த ஒரு நாடு இருக்குமென்றால் அது இந்தியாதான்.இன்னொரு 16,000 வீடுகளை இலங்கை பூராவும் நாம் கட்டிக்கொடுப்போம்.இலங்கையின் சகல பாகங்களிலும் அனேகமாக சகல துறைகளிலும் நன்கொடையில் 71 அபிவிருத்தி திட்டங்களை பூர்த்திசெய்த ஒரு நாடு இருக்குமென்றால் அது இந்தியாவே.இலங்கையின் கீரீடத்தில் இருக்கும் ஆபரணமான பௌத்தமதத்தை வழங்கிய நாடு ஒன்று இருக்குமென்றால் அது இந்தியாவே. இலங்கை இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் எல்லாம் சில மணித்தியாலங்களில் ஆட்களையும் பொருட்களையும் அனுப்பி உதவிசெய்திருக்கக்கூடிய நாடு என்றால் அதுவும் இந்தியாவே" என்று கொழும்பில் இந்திய குடியரசுதின வைபவத்தில் சந்து குறிப்பிட்டார். இந்தியாவின் பல உதவிகள் நன்கொடைகளே தவிர கடன்களை அடிப்படையாகக் கொண்டவையல்ல என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்த கூற்று சீனாவை நேரடியாகத் தாக்குவது போன்று அமைந்திருந்தது.சீனா அதன் திட்டங்களின் மூலமாக இலங்கையை பொறிக்குள் தள்ளுகிறது என்று பரவலாக கருதப்படுகின்ற பின்புலத்தில் சந்துவின் இந்தக்கருத்தை நோக்கவேண்டும். " நண்பர்களே, இலங்கைக்கு பல நண்பர்களும் பங்காளிகளும் இருக்கிறார்கள்.அவர்களில் சிலர் புதிய உலகொன்றைக்காட்டுவதாக உறுதியளித்துக்கொண்டு பிரகாசமான கனவுகளை விற்பனை செய்கிறார்கள்.ஆனால், இலங்கையுடன் விதியால் இணைந்திருக்கும் ஒரு நாடு என்றால் அது இந்தியாவே " என்று இலங்கை -- இந்திய சங்கத்தின் நிகழ்வில் சந்து கூறினார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் இலங்கைக்குள் சீனா பிரவேசித்தபோது இந்தியா பின்னரங்கத்துக்குச் சென்றது. புதிய இந்திய செயற்திட்டங்களுக்கான அத்திபாரம் 2017 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டது. அபிவிருத்திக்கு பெருமளவுக்கு தொடர்பும் பொருளாதார ஒருங்கிணைப்புமே முக்கியமானவை என்று எப்போதும் நம்பிக்கைகொண்டுள்ள தூரநோக்குடைய அரசியல் ஞானி என்று உயர்ஸ்தானிகர் சந்துவினால் வர்ணிக்கப்பட்ட பிரதமர் விக்கிரமசிங்கவினாலேயே அந்த இந்திய செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டன. இலங்கை -- இந்திய சங்கத்தின் நிகழ்வில் உரையாற்றிய விக்கிரமசிங்க இலங்கையையும் இந்தியாவையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வர்ணித்தார்.எமக்கிடையிலான உறவுகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதிலேயே அபிவிருத்தியின் முன்னேற்றவேகம் தங்கியிருக்கிறது என்றும் மகத்தான வாய்ப்பு இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வாணிப ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரை இலங்கையும் இந்தியாவும் மற்றைய நாடுகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் ; உதாரணமாக இருக்கமுடியும் என்றும் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையில் சீனாவுக்கு எதிராக இருக்கக்கூடிய உணர்வுகளை விடவும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் வலுவானவையாக இருப்பதன் பின்புலத்திலேயே விக்கிரமசிங்க இத்தகைய கருத்தை முனவைத்திருக்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.என்றாலும், பல்வேறு காரணிகளைச் சுட்டிக்காட்டி இலங்கையர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பியக்கங்களே இந்தியாவின் ஆதரவுடனான செயற்திட்டங்கள் பலவற்றுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பியக்கங்களை அடுத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச பொருளாதார -- தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ( சவுத் ஏசியன் மொனிட்டர்) http://www.virakesari.lk/article/50181

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

12 hours 9 minutes ago
இங்கிலாந்தின் பழைய கல்விமுறையில் secondary school பல forms ஆகப் பிரிக்கப்பட்டிருந்தது. First form - Year 7 second form - year 8 third form - Year 9 fourth form - Year 10 fifth form - Year 11 sixth form - Year 12 & 13 ( A Levels)

"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்": சி.வி.விக்னேஸ்வரன்

13 hours 7 minutes ago
நாங்கள் எல்லாம் பல பொறுக்கிகளை பாத்திட்டம் ஆனால் இவர்கள் கைகளில் ரத்தம் இல்லை பி கு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பொறுக்கிகள் என்று அழைக்கும் பொறுக்கிகளை யாழ் நிர்வாகத்திடம் விட்டுவிட்டு விலகுகின்றேன்.

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

13 hours 27 minutes ago
நீங்கள் நாசாவில் இருந்து ஆதராங்களை முன்வைத்தாலும் சரி ஹர்வார்ட் யுனிவெர்சிட்டியில் இருந்து முன்வைத்தாலும் இல்லை வேறு எந்த நாட்டிலிருந்தும் ஏகாதிபத்திய சுரண்டல்வாதிகளின் கைக்கூலிகளாக விஞ்ஞானிகள் அறிக்கைகளை விட்டாலும் சரி அவைமீதான் சந்தேகங்கள் அதன் பின்னால் உள்ள சுரண்டல் அரசியல் சூழ்ச்சிகள் குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டுக்கொண்டே இருக்கும்.. அவை சாமான்ய மனிதர்களால் எழுப்பப்படும்.. அறிவியலும் , விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முதலில் முதலாளித்துவத்தின் மூலதனங்கள் தவிர இவ்வுலகில் மானுடர்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும் என்று மனிதநேய நோக்கில் கண்டுபிடிக்கப்படுவதில்லை. ஒரு சிறு உதாரணத்திற்கு ஒரு கைதொலைபேசிவாங்க சாமான்யன் ஒருவனின் ஒருமாத சம்பளம் வேறுபல நாடுகளின் ஒரு வருட சம்பளம் என்னும் சில நாடுகளின் சாமான்யனால் வாங்க வாய்ப்பே இல்லை. அதன் சேவைக்கு ஒரு நாள் சம்பளம்.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சிறு அலகே எவ்வளவு உழைப்பை உறிஞ:சுகின்றது !! இவ்வாறு விவசயாயம் எண்ணைவளங்கள் மருத்துவம் ராணுவம் போர்கள் என அனைத்திலும் இந்த வளர்ச்சி சுரண்டுபவனின் விருபத்திற்கு உட்பட்டே இருக்கின்றது. பல லட்சம் உயிர்களை ஆண்டுதோறும் காவுவாங்கிக்கொண்டிருக்கின்றது. நீங்கள் அறிவியலை கடவுளாக அணுகினால் நான் அதை சாத்தான் ஓதும் வேதமாக அணுகுகின்றேன். நீங்கள் பிரமிப்பாக உற்சாகத்தோடு பார்த்தால் நான் அதை அறத்திற்கு எதிரானதாக அச்சத்தோடு பாரக்கின்றேன். யார்வேண்டுமானாலும் பேசினால் இணையம் குப்பைமேடா ? யார் யார் எல்லாம் பேசவேண்டும் ? முதலாளிள் அவர்களின் அடிவருடிகள் கோட்டுசூட்டுபோட்டவன் இப்படி யாரின் கையில் இருக்கவேண்டும் குப்பைமேடு புனிதமாவதற்கு ? இறுதியாக ஒன்றைக் கூறுகின்றேன்: இங்கே விஞ்ஞானத் தரவுகள் ஆதராங்கள் அதன் மீதான சரிபிழை பார்த்தல்கள் எனது கருத்துக்களின் கருப்பொருள் இல்லை. யார் முன்வைக்கின்றார்கள் அவர்களின் அறம் மனிதநேயம் சார்ந்த வழித்தடம் என்ன இவைகள் மனிதகுலத்திற்கு எற்படுத்திய ஏற்படுத்தும் நன்மை தீமைகள் என்ன என்ற நோக்கே என்னிடம் உள்ளது. ஆதலால் அடிப்படை அணுகுமுறையிலேயே கருத்துக்கள் முரண்படுகின்றது. இருந்தபோதும் நீங்கள் முன்வைக்கும் அறிவியல் சார்ந்த கருத்துக்ள் நியாயங்களை உள்வாங்கிக்கொள்கின்றேன். உங்களிடம் இருந்து நிறய விசயங்களை இத்திரியில் மட்டுமல்லாதது ஏனைய திரிகளிலும் அறிந்துகொள்ள முடிகின்றது. நன்றிகள்.

மனதைதொட்ட காட்சிகள்

13 hours 47 minutes ago
படம்: உயர்ந்த மனிதன் கணவன் மனைவி இடையேயான ஊடலும் சமாதானமும்.., சிவாஜியும், சௌகார் ஜானகியும் வாழ்ந்து காட்டியிருப்பார்கள் இந்த காட்சியில்.

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

13 hours 50 minutes ago
என்ன சுவியர் ரொம்ப சுவாரசியமா இருக்குதே! அனுபவங்களை உண்மையா எழுதுவது இதுதான் எதையுமே பொய்யாக இல்லாமல், திரிக்காமல் எழுதும் உங்கள் எழுத்துநடை பிடித்திருக்கு. தொடருங்கள்.

ஹிந்திய இராணுவமென்று சொல்லி விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி.

14 hours 4 minutes ago
நாங்களும் அழுதோம் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் பட்டாளம் என்றால் கும்பலாக பஸ்களில் போகப்பிடாது என்று ராணுவ தலைமைகளுக்கு தெரியாதா? இதில் அரசியல் பின்னணிகள் இருக்கலாம்.

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

14 hours 10 minutes ago
வணக்கம் தாரகம் உங்கள் வரவு நல்வரவாகுக! இன அழிப்பை லெளிப்படுத்த, தேசியத்தை வலுப்படுத்த வெளிவரும் ஒரு தமிழ்ச் செய்தி வலயத்தின் பெயரும் தாரகம். எங்கள் புதிய உறவு தாரகம் அவர்களின் செயற்பாடுகளும் அந்த செய்திவலயம்போன்று இருக்கலாம் என்று நம்புகிறேன்.

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)

14 hours 58 minutes ago
ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் நல்லாயிருக்குது தொடருங்கள் உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும் பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம். நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

15 hours 16 minutes ago
என் பள்ளி நண்பனொருவன், கணிதப் பிரிவில் இலங்கையில் 4 ஏ எடுத்தவன். இப்போது இந்த 6th form college என்ற ஒரு தனியர் கல்லூரியில் படிப்பிப்பதாக அறிந்தேன். அதென்ன 6th form என்று தான் விளங்கவில்லை!

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

15 hours 18 minutes ago
விஞ்ஞானிகளில் சிலர் தற்போதைய புவி வெப்பமடைதல் என்பது இயற்கையாக நடக்கின்றது. மனிதரின் செயற்பாடுகளால் இல்லை என்று உறுதியாக நிற்கின்றார்கள். ஆனால் புவி வெப்பமடைவது இயற்கையோ, செயற்கையோ தொடர்ந்தும் நடக்கின்றது. மனிதர்கள் வாழத் தேவையான நன்னீர் குறைவடையும்போது மனித இனம் ஆபத்துக்கு உள்ளாவது தவிர்க்கமுடியாது. ஆனால் வியாபாரிகள், முதலாளிகளுக்கு ஆபத்தான காலத்திலும் பணம் பார்க்க வழிதேவை. அதை அரசியல்வாதிகள் மூலம் பெற்றுக்கொள்ள சில விஞ்ஞானிகளும், சட்டவாதிகளும் கட்டாயம் உதவுவார்கள்.

புலன்

15 hours 35 minutes ago
ஒரு வித்தியாசமான கற்பனை....அது கிடக்கட்டும், ஒரு ஆணின் மார்பில் உள்ள நிப்பிளால் எந்த ஒரு பிரயோசனமும் இல்லையா.....எதிர்காலத்தில் இனம் கூர்ப்பு அடையும் போது அது இல்லாமலே மறைந்து போய் விடுமா....! 😒

இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் இனத்தை உருவாக்க முடியும் .

15 hours 36 minutes ago
இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், இதன்மூலம், தமிழர்களின் அடையாளத்தையும் இருப்பையும் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். வவுனியாவில் இன்று (17) நடைபெற்ற தேசிய முற்போக்குக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எங்களை நாமே தாழ்த்தி வைத்துக்கொண்டிருப்போம் என்றால், பெரும்பான்மை இனத்தவர்களிடம், சம உரிமையைக் கோருவதற்கான தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோம் என்று கூறிய அவர், எனவே, எம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார். இன்று உள்ள பாராபட்சங்கள், தள்ளிவைப்புகள் அனைத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருக்கவில்லை என்று கூறிய அவர், இன்று சமாதானம் வந்துவிட்டது, சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாகக் கூறினாலும், அன்று இருந்த சமத்துவம், இன்று காணாமல் போய்விட்டது என்றும் கூறினார். அப்படியானால், புலிகள் மீண்டும் வந்து, சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்றும் என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி அரசியல் செய்யும் பலர்கூட, மலையக மக்கள் மீது பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை இன்றும் முன்னெடுத்து வருவதாகவும் எனவே, இன்று உருவாகியுள்ள அமைப்பு, பிரதேசவாதத்தைத் தூண்டும் ஒரு அமைப்பாக இருக்ககூடாது என்றும் அவர் கூறினார். https://www.madawalaenews.com/2019/02/mno.html

இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் இனத்தை உருவாக்க முடியும் .

15 hours 36 minutes ago

%255BUNSET%255D

 

இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, 
ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், இதன்மூலம், தமிழர்களின் அடையாளத்தையும் இருப்பையும் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
வவுனியாவில் இன்று (17) நடைபெற்ற தேசிய முற்போக்குக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எங்களை நாமே தாழ்த்தி வைத்துக்கொண்டிருப்போம் என்றால், பெரும்பான்மை இனத்தவர்களிடம், சம உரிமையைக் கோருவதற்கான தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோம் என்று கூறிய அவர், எனவே, எம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
 
 
இன்று உள்ள பாராபட்சங்கள், தள்ளிவைப்புகள் அனைத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருக்கவில்லை என்று கூறிய அவர், இன்று சமாதானம் வந்துவிட்டது, சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாகக் கூறினாலும், அன்று இருந்த சமத்துவம், இன்று காணாமல் போய்விட்டது என்றும் கூறினார்.
 
 
அப்படியானால், புலிகள் மீண்டும் வந்து, சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்றும் என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
 
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி அரசியல் செய்யும் பலர்கூட, மலையக மக்கள் மீது பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை இன்றும் முன்னெடுத்து வருவதாகவும் எனவே, இன்று உருவாகியுள்ள அமைப்பு, பிரதேசவாதத்தைத் தூண்டும் ஒரு அமைப்பாக இருக்ககூடாது என்றும் அவர் கூறினார்.
https://www.madawalaenews.com/2019/02/mno.html