Aggregator

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

7 hours 59 minutes ago
கடற்படையைச் சேர்ந்த 836 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11,709 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இதுவரை வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடற்படையைச் சேர்ந்த 836 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 420 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கடறபடயச-சரநத-836-பர-வரஸ-தறறல-பதபப/175-251418

கேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம்

8 hours 1 minute ago
யானையைக் கொன்ற வழக்கில் 3 பேரிடம் விசாரணை; திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம்; மாநிலத்தின் சுய மரியாதை கேள்விக்குள்ளாவதை ஏற்கமுடியாது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ. திருவனந்தபுரம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சில்வர் வேலி வனப்பகுதியில் கர்ப்பிணி யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதேசமயம், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி மாநிலத்தின் மரியாதையைச் சிதைக்கும் பிரச்சாரமும் நடக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன இந்தச் சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றித்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை. அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி, ஆளுநர் ஆஃரிப் கான் உள்ளிட்டோர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் போன்றோர் சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டம் எனத் தெரிவித்தனர். ஆனால், பாலக்காடு மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் பிரபலங்கள், வனவிலங்கு நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க கேரள வனத்துறையின் வனக்குற்றப்பிரிவு தனிப்படையை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் 3 பேர் மீது வலுத்த சந்தேகம் எழுந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும், இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''யானையைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவா்கள். அனைவரும் எழுப்பும் கவலைகள், அக்கறைகள் வீணாகாது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதுவரை 3 பேர் மீது வலுத்த சந்தேகம் அடைந்து அவர்களை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், இருவரையும் தேடி வருகிறார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொன்றது கண்டிக்கத்தது, கொடூரமானதுதான். ஆனால் இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் மலப்புரம் மாவட்டத்தின் பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சரே ஈடுபட்டு அறிக்கை விடுகிறார். இது துரதிர்ஷ்டமானது. இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டத்தில் அல்ல, பாலக்காடு மாவட்டம். ஆனால், மலப்புரம் என்று பிரச்சாரம் செய்யபப்டுகிறது. ஆனால் இந்தத் தவறைச் சரிசெய்ய மத்திய அமைச்சர் கூட தயராக இல்லை. திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வெறுப்பைப் பரப்ப முயற்சிப்பதை சகிக்க முடியாது, ஏற்க முடியாது. எங்கள் மாநிலத்தின் சுயமரியாதையைக் கேள்வி கேட்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கரோனா வைரஸால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள இந்தநேரத்தில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவறு செய்தவர்கள் அதைச் சரிசெய்யத் தயாராக இல்லையென்றால், அது திட்டமிட்டு செய்யும் முயற்சியாகும்''. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார். https://www.hindutamil.in/news/india/557943-elephant-death-in-kerala-cm-says-3-suspects-under-scanner-rues-campaign-to-tarnish-state-s-image-2.html

பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்

8 hours 3 minutes ago
பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள் பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05, 2020 08:57 AM புதுடெல்லி மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவற்றை காணலாம். நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும். அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம். சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும். முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும். வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும். இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும். சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை. ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும். பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது. சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும். கழிவறைகள், கை - கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05085714/No-Prasad-Holy-Water-Or-Singing-In-Religious-Places.vpf

ஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு

8 hours 4 minutes ago
ஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு முகமது ஹுசைன் பத்து வருடங்களுக்கு முன்பு, கணினித் துறையில் அனைவருக்கும் வேலை கிடைத்தது. இன்றைய நிலை அப்படியில்லை. கணினித் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கே இன்று வேலை எளிதில் கிடைப்பதில்லை. பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து தனித்துக் காட்ட வேண்டியது அவசியம். அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண்டாம். படிக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால் செலவு எதுவும் செய்யாமலேயே உங்களால் படிக்க முடியும். என்ன படிக்கலாம்? கணினித் துறை என்றவுடன் பெரும்பாலோர் மென்பொருள் வடிவமைப்பிலும் புரோகிரமிங் லாங்க்வேஜ்களிலும் தங்களைச் சுருக்கிக்கொள்கின்றனர். ஆனால், கணினி வடிவமைப்பு, ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுதல், நெட்வொர்க் வடிவமைப்பு, தரவுகளைப் பாதுகாத்தல், இணையத்தில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துதல் என்று அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். இதில் தற்போது மிகுந்த தேவையும் ஆள் பற்றாக்குறையும் நிலவும் துறையாகத் திகழும் இணையப் பாதுகாப்பைப் பற்றிப் படிக்கலாம். இணையப் பாதுகாப்பு இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள இன்றைய நவீன உலகில், உங்கள் தனிமையையும் அந்தரங்கத்தையும் தீர்மானிப்பது நீங்கள் வசிக்கும் வீடோ அணிந்திருக்கும் உடையோ அல்ல. அவற்றைத் தீர்மானிப்பது இணையப் பாதுகாப்புதான். உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத்தையும் குலைப்பது இப்போது மிகவும் எளிது. உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உங்கள் மின்னஞ்சலின், சமூக வலைத்தளங்களின் கடவுச்சொல் திருடப்பட்டிருந்தாலோ உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், இன்றும் பெரும்பாலோர் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ சோம்பேறித்தனத்தாலோ கணினிக்கும் கைப்பேசிக்கும் எளிதான கடவுச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். உதாரணத்துக்கு 1234, குழந்தையின் பெயர், மனைவியின் பெயர் போன்றவை. இன்னும் சிலரோ கடவுச்சொல்லே இல்லாமலும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இணையப் பாதுகாப்பு பற்றிய படிப்பு, உங்கள் கணினிக்கு என்னென்ன ஆபத்து நேரச் சாத்தியமுள்ளது என்பதையும் அந்த ஆபத்துகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும் கற்றுத் தரும். மேலும், இணையத்தில் உங்கள் தரவுகளுக்கு இருக்கும் ஆபத்துகளையும் அந்தத் தரவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கற்றுத் தரும். கற்றுத் தரப்படுபவை முதலில் இணையப் பாதுகாப்பின் எல்லைகள், பின்பு அங்கு இருக்கும் ஆபத்துகளின் வகைகள் கற்றுத் தரப்படும். இணையத்திலிருந்து உங்கள் நெட்வொர்க் பாதுகாப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதும் ஆபத்து நேராமல் அதை எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும். மேலும், கணினிக்குள் நுழைந்த வைரசை எப்படிக் களைய வேண்டும், அது நுழையாமல் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும். முக்கியமாக நீங்கள் உருவாக்கி இருக்கும் பாதுகாப்பு வளையக் கோட்டையில் இருக்கும் ஓட்டைகளை எப்படி அறிவது என்பதும் அந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்பதும்கூடக் கற்றுத் தரப்படும். எங்கே படிக்கலாம்? Edx எனும் இணைய வகுப்பறை (edx.org) மிகப் பிரபலமானது. இதன் சிறப்பு என்னவென்றால் இங்கு அனைத்துப் பாடங்களும் இலவசமாகவே கற்றுத் தரப்படுகின்றன. உங்கள் படிப்புக்கு அங்கீகாரச் சான்றிதழ் வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே, அதற்குச் சிறு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஹார்வர்டு, எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்கூட இலவசக் கல்வியை இணைய வகுப்பில் நடத்துகின்றன. தேடி வரும் வேலை இணையப் பாதுகாப்பு பொறியாளருக்கான தேவை வருங்காலத்தில் மிக அதிகமாக இருக்கும். இணையப் பாதுகாப்பு இப்போது மிகவும் முக்கியத் துறையாக இருப்பதுடன் ஆள் பற்றாக்குறை காரணமாகச் சற்றுத் தடுமாறிக்கொண்டும் உள்ளது. பொறியியல் படிக்கும்போதே இணையப் பாதுகாப்பில் கொஞ்சம் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டால், பட்டதாரியான பின் வேலையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம், வேலை உங்களைத் தேடிவரும். ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றலாமே! கரோனாவுக்குப் பிந்தைய ஊரடங்கு, மாணவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. சும்மாவே வீட்டிலிருப்பது மாணவர்களுக்குச் சலிப்பின் உச்சமாக மாறிவிட்டது. ஆனால், உருப்படியாகச் செய்வதற்கு எதுவும் இல்லையென்றால்தானே இந்தச் சலிப்பும் அலுப்பும் ஏற்படும். தரமான கல்வி இன்று இணையத்தின் வழியாக எளிதாகக் கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்தி ஏன் இந்த ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றக் கூடாது? https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/557446-curfew-courses-4.html

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

8 hours 28 minutes ago
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி! ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும். தேரர் அவர்களின் வருகை இலங்கைத் தீவில் சமயம், கலாசாரம், சமூக மற்றும் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் பண்பாட்டு ரீதியான மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர் மஹிந்த தேரருக்கும் அப்போதைய அரசராக இருந்த தேவநம்பியதிஸ்ஸ மன்னருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். எமது சமூக பெறுமானங்கள், பொருளாதாரம், இலக்கியம், கலைகள் மட்டுமன்றி கைவினை முறைமைகள் கூட புதிய பரிமாணத்தை பெற்றது. வானளாவ உயர்ந்த தாகபைகள், பெரும் சமுத்திரங்களை ஒத்த குளங்கள், நாட்டை தன்னிறைவடையச் செய்த விவசாய கலாசாரம், உலகமே வியக்கும் கலைப் படைப்புகள், இவற்றுக்கெல்லாம் மேலாக புத்த பெருமானின் அட்டாங்க மார்க்கம் என்ற எண்வகை நெறிகளால் போசிக்கப்பட்ட, நீர், நிலம், தாவரங்கள், சூழல் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் நீதி செலுத்தும், மிதவாத வாழ்க்கை முறையை கொண்ட, இலங்கை பௌத்தர்கள் உருவானதும் இந்த சமூக, கலாசார புரட்சியின் மூலமாகவேயாகும். மஹிந்த தேரர் போதித்த சமய மற்றும் வாழ்க்கை நெறியின் அடிப்படையிலேயே நாம் ஒரு கீர்த்திமிக்க தேசமாக முன்னோக்கிப் பயணித்திருக்கின்றோம். ஈருலகினதும் நன்மைக்காக சமய நன்நெறிகளின் அடிப்படையிலான ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை உருவாக்குவதற்கும் அது அடித்தளமாக அமைந்தது. எனவே, கடந்த காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்கும் நாம் ஒரு தேசமாக பெற்றுள்ள பெறுமதிவாய்ந்த மரபுரிமையான பௌத்த சமயம் எமக்குக் கிடைக்கப்பெற்ற உன்னத தினம் பொசன் நோன்மதி தினமாகும் என்பது அனைத்து உள்ளங்களிலும் ஆழப் பதிந்துள்ளது. வரலாற்றிலிருந்து பெற்ற அனுபவங்கள் மற்றும் பௌத்த சமயத்தின் மூலம் கிடைத்த செல்வாக்கிற்கு அமைவாகவே நாம் ஒரு சுபீட்சமான தேசத்தை நோக்கி நாட்டை வழிநடத்துகின்றோம். ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும். இந்த அடிப்படையிலிருந்தே எனது அரசாங்கம் நிகழ்காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது என்பதை குறிப்பிட வேண்டும். நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான அந்த தத்துவத்திலிருந்து விலகிடவில்லை. மேற்குறித்த அடிப்படையிலல்லாத ஒரு பயணம் இலங்கையர்களான எமக்கு இல்லை. இவ்வருட பொசன் பண்டிகை காலம் சமூகத்தையும் வாழ்க்கையையும் பௌத்த சமய போதனைகளுக்கு ஏற்ப யதார்த்தமாக பார்ப்பதற்கும், அகிம்சாவாத பௌத்த சமயத்தின் புகழை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்குமான சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்வதே மஹிந்த தேரருக்கு செய்யக்கூடிய உயர்ந்த கௌரவமாகும் என நான் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் புண்ணியமிகு பொசன் பண்டிகை வாழ்த்துக்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஆன்மீக-ரீதியாகவும்-ஒழுக்/

gotta-720x450.jpg ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும்.

தேரர் அவர்களின் வருகை இலங்கைத் தீவில் சமயம், கலாசாரம், சமூக மற்றும் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் பண்பாட்டு ரீதியான மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர் மஹிந்த தேரருக்கும் அப்போதைய அரசராக இருந்த தேவநம்பியதிஸ்ஸ மன்னருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். எமது சமூக பெறுமானங்கள், பொருளாதாரம், இலக்கியம், கலைகள் மட்டுமன்றி கைவினை முறைமைகள் கூட புதிய பரிமாணத்தை பெற்றது.

வானளாவ உயர்ந்த தாகபைகள், பெரும் சமுத்திரங்களை ஒத்த குளங்கள், நாட்டை தன்னிறைவடையச் செய்த விவசாய கலாசாரம், உலகமே வியக்கும் கலைப் படைப்புகள், இவற்றுக்கெல்லாம் மேலாக புத்த பெருமானின் அட்டாங்க மார்க்கம் என்ற எண்வகை நெறிகளால் போசிக்கப்பட்ட, நீர், நிலம், தாவரங்கள், சூழல் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் நீதி செலுத்தும், மிதவாத வாழ்க்கை முறையை கொண்ட, இலங்கை பௌத்தர்கள் உருவானதும் இந்த சமூக, கலாசார புரட்சியின் மூலமாகவேயாகும்.

மஹிந்த தேரர் போதித்த சமய மற்றும் வாழ்க்கை நெறியின் அடிப்படையிலேயே நாம் ஒரு கீர்த்திமிக்க தேசமாக முன்னோக்கிப் பயணித்திருக்கின்றோம். ஈருலகினதும் நன்மைக்காக சமய நன்நெறிகளின் அடிப்படையிலான ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை உருவாக்குவதற்கும் அது அடித்தளமாக அமைந்தது.

எனவே, கடந்த காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்கும் நாம் ஒரு தேசமாக பெற்றுள்ள பெறுமதிவாய்ந்த மரபுரிமையான பௌத்த சமயம் எமக்குக் கிடைக்கப்பெற்ற உன்னத தினம் பொசன் நோன்மதி தினமாகும் என்பது அனைத்து உள்ளங்களிலும் ஆழப் பதிந்துள்ளது.
வரலாற்றிலிருந்து பெற்ற அனுபவங்கள் மற்றும் பௌத்த சமயத்தின் மூலம் கிடைத்த செல்வாக்கிற்கு அமைவாகவே நாம் ஒரு சுபீட்சமான தேசத்தை நோக்கி நாட்டை வழிநடத்துகின்றோம்.

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும். இந்த அடிப்படையிலிருந்தே எனது அரசாங்கம் நிகழ்காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.

நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான அந்த தத்துவத்திலிருந்து விலகிடவில்லை. மேற்குறித்த அடிப்படையிலல்லாத ஒரு பயணம் இலங்கையர்களான எமக்கு இல்லை.

இவ்வருட பொசன் பண்டிகை காலம் சமூகத்தையும் வாழ்க்கையையும் பௌத்த சமய போதனைகளுக்கு ஏற்ப யதார்த்தமாக பார்ப்பதற்கும், அகிம்சாவாத பௌத்த சமயத்தின் புகழை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்குமான சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்வதே மஹிந்த தேரருக்கு செய்யக்கூடிய உயர்ந்த கௌரவமாகும் என நான் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் புண்ணியமிகு பொசன் பண்டிகை வாழ்த்துக்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஆன்மீக-ரீதியாகவும்-ஒழுக்/