Aggregator

இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கிடைக்கப்போகும் பலன் என்ன?

10 hours 1 minute ago
கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர். இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன. பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும். கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம். 1. யாழில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான இந்து ஆலயம் 2. Our hotel at Tricomalee after arriving here from Jaffna yesterday.

கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் செயலணி: பேரபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

10 hours 3 minutes ago
கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் செயலணி: பேரபாயத்தை எதிர்கொள்வது எப்படி? Johnsan Bastiampillai / 2020 மே 31 1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், 'புல்டோசர்' இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக் குளத்துக்குள் போடும்படி, கூறுகிறார். சிலநாள்களின் பின்னர், அந்தக் கற்றூண், அம்பாறையில் உள்ள கல்லோயா அபிவிருத்திச் சபையின் அலுவலகத்துக்கு முன்னால், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காரணம், அந்தக் கற்றூணில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட சாசனம் காணப்பட்டது. அதில், குளத்துநீரை நீர்ப்பாசனத்துக்காகப் பங்கிடுவது தொடர்பான விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லோயாப் பிரதேசம், சிங்கள மக்களின் பூர்வீகப் பிரதேசம். இத்தகைய, சிங்களவர்களின் பாரம்பரிய பிரதேசங்களை, தமிழர்கள் மறைக்க முற்படுகின்றனர் என்று, இச்சம்பவத்தின் பின்னர், பிரச்சாரம் ஒன்று சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட சம்பவம், கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்ட வேலைகளின்போது இடம்பெற்றதாகும். பின்னர், இக்கற்றூணிண் உள்ளடக்கங்கள் எவையும் வெளியிடப்படவில்லை; அது மறைக்கப்பட்டுவிட்டது. தமிழர் பகுதிகளில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை, சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காக அப்போது, மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியாகவே இது கருதப்படுகின்றது. ஆனால், கல்லோயா குடியேற்றப் பிரதேசம், பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி ஆகிய இடங்களை அண்டிய தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களை உள்ளடக்கியதாகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதேசங்கள் தமிழர்களின் பாரம்பரிய இடப்பகுதிகள் தான் என்பதை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் களஆய்வுநடத்தி, ஆதாரபூர்வமாகவும் விஞ்ஞானரீதியாகவும் நிரூபித்து, அவற்றை ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தப் பகுதிகளின் வரலாற்று ஆய்வுகள் குறித்துப் பார்வைசெலுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. 'ஒரு நாடு; ஒரு மொழி' என்ற தொனிபொருளில், இலங்கையை பௌத்த-சிங்கள நாடாக மாற்றும் கைங்கரியத்தில், சிங்களப் பேரினவாதம் ஈடுபட்டிருக்கின்றது. இதனை எதிர்த்துத் தனது மொழியையும் தனது இருப்பையும் பாதுகாக்கத் தமிழ்த் தேசியவாதம் போராடிக்கொண்டிருக்கின்றது. இன்றைய யதார்த்தத்தை, மிக எளிமையாக இவ்வாறுதான் சொல்ல முடியும். ஆனால், பிரித்தானியர் இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து, ஒரு நாடாக்கிய காலத்தில் இருந்து, 1930 வரையான காலப் பகுதி வரையில், சிங்கள-பௌத்த இயக்கங்களும் தமிழ்-இந்து இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கவில்லை. ஆங்கிலேய கொலனித்துவத்துக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்துக்கும் எதிராக, ஒன்றுக்கொன்று துணைபோனவையாகவே கைகோர்த்துப் பயணித்திருந்தன. இருந்தபோதிலும், சிங்கள-பௌத்த இயக்கங்கள், ஆங்கிலேயரிடமிருந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாகத் தாம்தான் கைப்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும், தமிழரின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, அவற்றில் சிங்கள மக்களைக் குடியேற்றுவது தொடர்பில், அப்போதிருந்தே காய்களை நகர்த்த ஆரம்பித்திருந்தன. உண்மையில், தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற குடியேற்றத் திட்டங்களை, பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட காணிக் கொள்கைகளுடன் ஒப்பிட முடியும். இரண்டுக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை. இலங்கை முழுவதையும் கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி இராட்சியத்தைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடினர். கண்டி இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முன்னர், அதன் எல்லைப் பிரதேசங்களை, ஏனைய பிரதேசங்களுடன் இணைத்து, கண்டியின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் அமைந்த காணிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே, வடக்கு-கிழக்கில் காணிகளை அபகரிக்கும் இலங்கை அரசின் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அதாவது, எல்லை ஓரங்களில் இருந்த தமிழரின் பூர்வீக பிரதேசங்களை, சிங்களப் பிரதேசங்களுடன் இணைப்பதன் மூலம், அதன் தனித்துவத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையையே அரசாங்கம், மிகநுட்பமான முறையில் மேற்கொண்டு வந்திருக்கின்றது. காணி அற்றோருக்கு காணி வழங்குதல், நெல், உப-உணவு உற்பத்தியைப் பெருக்கி வருமான மட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக வறுமையை நீக்குதல், கிராமிய மட்டத்தில் நிலவும் வேலையின்மையை நீக்குதல், சமூக, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் என காணிக் கொள்கையும் குடியேற்றத் திட்டங்களின் நோக்கங்களும் அமைந்திருந்தன. பிரதானமான ஏழு குடியேற்றத் திட்டங்களுக்கு, பின்வருமாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இத்திட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்டவையாகவே வெலிஓயா, கல்லோயா, துரித மாகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்திருந்தன. 1. நடுத்தர மட்டத்திலான நீர்ப்பாசன திட்டங்கள் 2. மழை நீர்ப்பாசன பண்ணை அபிவிருத்தி குடியேற்றத் திட்டங்கள் 3. அத்துமீறிய குடியேற்றங்களை ஒழுங்குபடுத்தல் 4. காணிக் கொடைகள் (சிறப்பு ஏற்பாடுகள்) 5. இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் 6. கிராம விரிவாக்க குடியேற்றத் திட்டங்கள் 7. உயர்நிலக் குடியேற்றத் திட்டங்கள் ஆனால், இத்தகைய குடியேற்றத் திட்டங்களால் அதன் நோக்கங்கள் அடையப்பெற்றனவா என்ற வினாவுக்கு விடை, இன்றுவரை குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் கிராமிய வறுமையும் தொழில் இன்மையும் மோசமடைந்து காணப்படுகின்றது என்பதாகவே உள்ளது. எனவே, அரசாங்கத்தால் பல்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத்த திட்டங்கள், தமது அபிவிருத்தி நோக்கங்களை அடையத் தவறிவிட்டன என்பதே உண்மை நிலையாகும். ஆனால், 1948ஆம் ஆண்டு முதல், பதவிக்கு வரும் எந்தவோர் அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களின் நடைமுறைகளை மாற்றாமல், இன்றுவரை காலநேரவர்த்தமானங்களுக்கு ஏற்ப, பின்பற்றி வருகின்றமைக்கான காரணம், வெளிப்படுத்த முடியாத வேறு நோக்கங்களில், அரசாங்கம் வெற்றி அடைந்திருக்கின்றது என்பதேயாகும். 1881ஆம் ஆண்டில், வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை, 7,326 (1.78 சதவீதம்) ஆகும். ஆனால், 1981ஆம் ஆண்டில், 278,829 (13.4 சதவீதம்) சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளார்கள். குறிப்பாகத் திருகோணமலையில், 1881ஆம் ஆண்டில் 935 சிங்களவரே வாழ்ந்துள்ளார்கள். 1946இல் இவர்களின் தொகை 11.850 (5.8 சதவீதம்) ஆக அதிகரித்து, 1981இல் 85,503 ஆக அதிகரிக்கச் செய்யப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்தாண்டு காலத்தில், அதாவது 1960இல் அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகி இருந்தார். இதேபோல், அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 1977இல் சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இருந்து, இரண்டு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் இருந்து நான்கு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். இவ்வாறு, தமிழ் இனத்தின் நிலப்பரப்பை, அதன் இருப்பை, ஆளுகையை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழிப்பதில், சிங்களப் பேரினவாதம் வெற்றிகண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். போர் ஓய்வுக்குப் பின்னர், சிங்களப் பௌத்த பேரினவாதம், இலட்சக்கணக்கில் சிங்கள மக்களை அழைத்துவந்து, அபிவிருத்தி என்ற பெயரில் குடியேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் அக்கறை செலுத்துகிறது. நிலங்களை அபகரித்துத் தக்கவைத்துக் கொண்டால், எப்பொழுதும் குடியேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது போலும். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களை இணைத்து, இன ஒற்றுமைக்கு உதவுதல் என்ற தொனிபொருளில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெளிநாடுகள் பெருமளவில் நிதிஉதவி செய்திருந்தன. ஆனால், போர்க்குற்றம், இனஒடுக்குமுறை போன்ற குற்றச்சாட்டுகள், இலங்கை அரசின் மீது படிந்திருப்தால், இப்போது தனது வழிமுறையை மாற்றி, மிகச் சூட்சுமமாக முன்னெடுத்துச் செல்ல எத்தனிக்கிறது. அதன் அடுத்தகட்ட வீரியமான செயற்பாட்டுக்கு ஏதுவாகவே, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தன தலைமையில் 'கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி விசேட செயலணி' ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணி, என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விக்கு அப்பால், இந்தச் செயலணியால் என்ன செய்ய முடியாது என்பது குறித்துப் பார்க்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில், பாதுகாப்புச் செயலாளர் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்த பதவியாகும். முப்படைகளையும் கட்டுப்படுத்தக் கூடிய பதவி இதுவாகும். கிழக்கில், பல அரச திணைக்களங்கள் ஊடாக அடையாளமிடப்பட்ட இடங்களில், மக்களின் கடும்எதிர்ப்புகள், போராட்டங்கள் காரணமாக, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல், கிடப்பில் இருக்கின்றன. எனவே, சக்தியும் அதிகாரமும் மிக்க ஒரு செயலணி ஊடாக, அடையாளப்படுத்தப்படுத்தப்பட்ட இடங்கள் சொந்தம் கொண்டாட முயற்சிக்கப்படவுள்ளன. மக்கள் ஒன்றுகூட முடியாத, சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் போன்ற சட்டங்கள், கொவிட்-19 இன் சூழலில் அமலில் உள்ளமையால், மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படலாம். இதனால், எதிர்ப்புப் போராட்டங்களை மக்கள் நடத்த முடியாமல்ப் போகும். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, 'செயலணி' காலூன்ற எத்தனிப்பதைத் தடுக்கமுடியாமல்ப் போகும். கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்ற இந்தப் பேரபாயத்தை, தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள். அதற்கான தந்திரோபாயங்கள் என்ன? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கில்-பௌத்த-சின்னங்களைப்-பாதுகாக்கும்-செயலணி-பேரபாயத்தை-எதிர்கொள்வது-எப்படி/91-251113

Johnsan Bastiampillai   / 2020 மே 31

image_7029178ba9.jpg

1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், 'புல்டோசர்' இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக் குளத்துக்குள் போடும்படி, கூறுகிறார்.

சிலநாள்களின் பின்னர், அந்தக் கற்றூண், அம்பாறையில் உள்ள கல்லோயா அபிவிருத்திச் சபையின் அலுவலகத்துக்கு முன்னால், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காரணம், அந்தக் கற்றூணில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட சாசனம் காணப்பட்டது. அதில், குளத்துநீரை நீர்ப்பாசனத்துக்காகப் பங்கிடுவது தொடர்பான விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லோயாப் பிரதேசம், சிங்கள மக்களின் பூர்வீகப் பிரதேசம். இத்தகைய,  சிங்களவர்களின் பாரம்பரிய பிரதேசங்களை, தமிழர்கள் மறைக்க முற்படுகின்றனர் என்று, இச்சம்பவத்தின் பின்னர், பிரச்சாரம் ஒன்று சிங்கள மக்கள்  மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட சம்பவம், கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்ட வேலைகளின்போது இடம்பெற்றதாகும்.

பின்னர், இக்கற்றூணிண் உள்ளடக்கங்கள் எவையும் வெளியிடப்படவில்லை; அது மறைக்கப்பட்டுவிட்டது. தமிழர் பகுதிகளில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை, சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காக அப்போது, மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியாகவே இது கருதப்படுகின்றது. 

ஆனால், கல்லோயா குடியேற்றப் பிரதேசம், பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி ஆகிய இடங்களை அண்டிய தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களை உள்ளடக்கியதாகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதேசங்கள் தமிழர்களின் பாரம்பரிய இடப்பகுதிகள் தான் என்பதை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் களஆய்வுநடத்தி, ஆதாரபூர்வமாகவும் விஞ்ஞானரீதியாகவும் நிரூபித்து, அவற்றை ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தப் பகுதிகளின் வரலாற்று ஆய்வுகள் குறித்துப் பார்வைசெலுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

'ஒரு நாடு; ஒரு மொழி' என்ற தொனிபொருளில், இலங்கையை பௌத்த-சிங்கள நாடாக மாற்றும் கைங்கரியத்தில், சிங்களப் பேரினவாதம் ஈடுபட்டிருக்கின்றது. இதனை எதிர்த்துத் தனது மொழியையும் தனது இருப்பையும் பாதுகாக்கத் தமிழ்த் தேசியவாதம் போராடிக்கொண்டிருக்கின்றது. இன்றைய யதார்த்தத்தை, மிக எளிமையாக இவ்வாறுதான் சொல்ல முடியும்.

ஆனால், பிரித்தானியர் இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து, ஒரு நாடாக்கிய காலத்தில் இருந்து, 1930 வரையான காலப் பகுதி வரையில், சிங்கள-பௌத்த இயக்கங்களும் தமிழ்-இந்து இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கவில்லை. ஆங்கிலேய கொலனித்துவத்துக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்துக்கும் எதிராக, ஒன்றுக்கொன்று துணைபோனவையாகவே கைகோர்த்துப் பயணித்திருந்தன.

இருந்தபோதிலும், சிங்கள-பௌத்த இயக்கங்கள், ஆங்கிலேயரிடமிருந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாகத் தாம்தான் கைப்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும், தமிழரின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, அவற்றில் சிங்கள மக்களைக் குடியேற்றுவது தொடர்பில், அப்போதிருந்தே காய்களை நகர்த்த ஆரம்பித்திருந்தன.

உண்மையில், தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற குடியேற்றத் திட்டங்களை, பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட காணிக் கொள்கைகளுடன் ஒப்பிட முடியும். இரண்டுக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை. இலங்கை முழுவதையும் கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி இராட்சியத்தைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடினர்.

கண்டி இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முன்னர், அதன் எல்லைப் பிரதேசங்களை, ஏனைய பிரதேசங்களுடன் இணைத்து, கண்டியின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் அமைந்த காணிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே, வடக்கு-கிழக்கில் காணிகளை அபகரிக்கும் இலங்கை அரசின் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அதாவது, எல்லை ஓரங்களில் இருந்த தமிழரின் பூர்வீக பிரதேசங்களை, சிங்களப் பிரதேசங்களுடன் இணைப்பதன் மூலம், அதன் தனித்துவத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையையே அரசாங்கம், மிகநுட்பமான முறையில் மேற்கொண்டு வந்திருக்கின்றது.

காணி அற்றோருக்கு காணி வழங்குதல், நெல், உப-உணவு உற்பத்தியைப் பெருக்கி வருமான மட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக வறுமையை நீக்குதல், கிராமிய மட்டத்தில் நிலவும் வேலையின்மையை நீக்குதல், சமூக, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் என காணிக் கொள்கையும் குடியேற்றத் திட்டங்களின் நோக்கங்களும் அமைந்திருந்தன.

பிரதானமான ஏழு குடியேற்றத் திட்டங்களுக்கு, பின்வருமாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இத்திட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்டவையாகவே வெலிஓயா, கல்லோயா, துரித மாகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்திருந்தன.

1.            நடுத்தர மட்டத்திலான நீர்ப்பாசன திட்டங்கள்

2.            மழை நீர்ப்பாசன பண்ணை அபிவிருத்தி குடியேற்றத் திட்டங்கள்

3.            அத்துமீறிய குடியேற்றங்களை ஒழுங்குபடுத்தல்

4.            காணிக் கொடைகள் (சிறப்பு ஏற்பாடுகள்)

5.            இளைஞர் குடியேற்றத் திட்டங்கள்

6.            கிராம விரிவாக்க குடியேற்றத் திட்டங்கள்

7.            உயர்நிலக் குடியேற்றத் திட்டங்கள்

ஆனால், இத்தகைய குடியேற்றத் திட்டங்களால் அதன் நோக்கங்கள் அடையப்பெற்றனவா என்ற வினாவுக்கு விடை, இன்றுவரை குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் கிராமிய வறுமையும் தொழில் இன்மையும் மோசமடைந்து காணப்படுகின்றது என்பதாகவே உள்ளது. எனவே, அரசாங்கத்தால் பல்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத்த திட்டங்கள், தமது அபிவிருத்தி நோக்கங்களை அடையத் தவறிவிட்டன என்பதே உண்மை நிலையாகும்.

ஆனால், 1948ஆம் ஆண்டு முதல், பதவிக்கு வரும் எந்தவோர் அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களின்  நடைமுறைகளை மாற்றாமல், இன்றுவரை காலநேரவர்த்தமானங்களுக்கு ஏற்ப, பின்பற்றி வருகின்றமைக்கான காரணம், வெளிப்படுத்த முடியாத வேறு நோக்கங்களில், அரசாங்கம் வெற்றி அடைந்திருக்கின்றது என்பதேயாகும்.

1881ஆம் ஆண்டில், வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை, 7,326 (1.78 சதவீதம்) ஆகும். ஆனால், 1981ஆம் ஆண்டில், 278,829 (13.4 சதவீதம்) சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளார்கள். குறிப்பாகத் திருகோணமலையில், 1881ஆம் ஆண்டில் 935 சிங்களவரே வாழ்ந்துள்ளார்கள். 1946இல் இவர்களின் தொகை 11.850 (5.8 சதவீதம்) ஆக அதிகரித்து, 1981இல் 85,503 ஆக அதிகரிக்கச் செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்தாண்டு காலத்தில், அதாவது 1960இல் அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகி இருந்தார். இதேபோல், அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 1977இல் சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 

2015ஆம் நடைபெற்ற தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இருந்து, இரண்டு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் இருந்து நான்கு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறு, தமிழ் இனத்தின் நிலப்பரப்பை, அதன் இருப்பை, ஆளுகையை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழிப்பதில், சிங்களப் பேரினவாதம் வெற்றிகண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

போர் ஓய்வுக்குப் பின்னர், சிங்களப் பௌத்த பேரினவாதம், இலட்சக்கணக்கில்  சிங்கள மக்களை அழைத்துவந்து, அபிவிருத்தி என்ற பெயரில் குடியேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் அக்கறை செலுத்துகிறது. நிலங்களை அபகரித்துத் தக்கவைத்துக் கொண்டால், எப்பொழுதும் குடியேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது போலும்.

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களை இணைத்து, இன ஒற்றுமைக்கு உதவுதல் என்ற தொனிபொருளில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெளிநாடுகள் பெருமளவில் நிதிஉதவி செய்திருந்தன. ஆனால்,  போர்க்குற்றம், இனஒடுக்குமுறை போன்ற குற்றச்சாட்டுகள், இலங்கை அரசின் மீது படிந்திருப்தால், இப்போது தனது வழிமுறையை மாற்றி, மிகச் சூட்சுமமாக முன்னெடுத்துச் செல்ல எத்தனிக்கிறது. 

image_57eb31c129.jpg

அதன் அடுத்தகட்ட வீரியமான செயற்பாட்டுக்கு ஏதுவாகவே, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தன தலைமையில் 'கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி விசேட செயலணி' ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலணி, என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விக்கு அப்பால், இந்தச் செயலணியால் என்ன செய்ய முடியாது என்பது குறித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், பாதுகாப்புச் செயலாளர் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்த பதவியாகும். முப்படைகளையும் கட்டுப்படுத்தக் கூடிய பதவி இதுவாகும்.

கிழக்கில், பல அரச திணைக்களங்கள் ஊடாக அடையாளமிடப்பட்ட இடங்களில், மக்களின் கடும்எதிர்ப்புகள், போராட்டங்கள் காரணமாக, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல், கிடப்பில் இருக்கின்றன. எனவே, சக்தியும் அதிகாரமும் மிக்க ஒரு செயலணி ஊடாக, அடையாளப்படுத்தப்படுத்தப்பட்ட இடங்கள் சொந்தம் கொண்டாட முயற்சிக்கப்படவுள்ளன.

மக்கள் ஒன்றுகூட முடியாத, சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் போன்ற சட்டங்கள், கொவிட்-19 இன் சூழலில் அமலில் உள்ளமையால், மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படலாம். இதனால், எதிர்ப்புப் போராட்டங்களை மக்கள் நடத்த முடியாமல்ப் போகும். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, 'செயலணி'  காலூன்ற எத்தனிப்பதைத் தடுக்கமுடியாமல்ப் போகும். கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்ற இந்தப் பேரபாயத்தை, தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள். அதற்கான தந்திரோபாயங்கள் என்ன?

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கில்-பௌத்த-சின்னங்களைப்-பாதுகாக்கும்-செயலணி-பேரபாயத்தை-எதிர்கொள்வது-எப்படி/91-251113

வடக்கின் மீது கண் வைக்கிறதா பாகிஸ்தான்?

10 hours 12 minutes ago
-சுபத்ரா இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார். மறுநாளும் அங்கேயே தங்கியிருந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலையும் வெளிப்புறத்தில் இருந்து பார்வையிட்டிருக்கிறார். உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, யாரும் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டிருந்த சூழலில், ஆலயத்தின் முகப்புப் பகுதியில் நின்று எடுத்த படத்தை வெளியிட்டிருக்கிறார் பாகிஸதான் தூதுவர். இவர் தனது யாழ்ப்பாணப் பயணம் குறித்து - குறிப்பாக, சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு செய்த அன்பளிப்புகள் குறித்து பேஸ்புக்கில் இட்ட பதிவுகளுக்கு அதிகளவான பாகிஸ்தானியர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அவரது செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். தங்களின் நாட்டுக்கான சிறந்த பணியை ஆற்றுவதாக பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள். திடீரென - பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட இந்தப் பயணம் பலரதும், புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது. அவரது பயணத்துக்கான ஒழுங்குகளை ஆளுநர் செயலகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ருவிட்டர் பதிவில் அதற்காக அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் தூதுவராக முகமட் சாட் ஹட்டக் கடந்த ஜனவரி 15ஆம் திகதி பொறுப்பேற்றார். அதற்குப் பின்னர், ஜனவரி 20ஆம் திகதி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சான்றுப் பத்திரங்களைக் கையாளித்தார். அதற்குப் பிறகு, அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை, வர்த்தக சமூகத்தினரை, முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்த போதும், எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரையும் சந்திக்கவில்லை. அவ்வாறான நிலையில், அவரது கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது குறித்து ஆச்சரியம் கொள்வது தவிர்க்க முடியாதது. பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர். பிரெஞ்சு இராணுவ இளநிலை அதிகாரிகள் கற்கையையும், பிரித்தானியாவில் பாதுகாப்பு புலனாய்வு பணிப்பாளர் கற்கையையும், மேற்கொண்டவர். அரசியல் விஞ்ஞானம், போர்க் கற்கைகளில் முதுமாணிப் பட்டமும், சர்வதேச உறவுகள் தொடர்பான முதுதத்துவமாணி பட்டமும் பெற்றுள்ளவர். பாகிஸ்தானில் எப்போதும, குண்டுச் சத்தங்கள் கேட்கின்ற பலுசிஸ்தானிலும், கைபர் பக்துன்வா பள்ளத்தாக்கிலும், கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்ற இவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிந்தனைக் குழாம்களுடன் இணைந்து இயங்கியவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த இவர், அச்சு ஊடகங்களிலும், கட்டுரைகளை எழுதி வந்தார். இத்தகைய பின்புலத்தைக் கொண்ட பாகிஸ்தான் தூதுவர் இதற்கு முன்னர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில்- எதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை. யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கத்தோலிக்க பாதிரியார்களினால் நடத்தப்படும் ஒரு பழம்பெரும், புகழ் பூத்த பாடசாலை. தமது நாட்டிலும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி புகழ்பெற்று விளங்குகிறது என்றும், அதனாலேயே, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை தாம் தேடி வந்ததாகவும், பாகிஸ்தான் தூதுவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் கராச்சியில கத்தோலிக்க பாதிரியார்களால் நடத்தப்படும் சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை மற்றும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி (பல்கலைக்கழகம்) என்பன, மிகப் புகழ்பெற்றவை. 1861இல் தொடங்கப்பட்ட இந்த சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை கராச்சியில் உள்ள இரண்டாவது பழைமையாக பாடசாலை. இதனை விடப் பழைமையானது, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி. இது 1850ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானின் இரண்டு ஜனாதிபதிகள், இரண்டு பிரதமர்களை மத்திரமன்றி, இந்தியாவின் துணைப் பிரதமர் ஒருவரையும் உருவாக்கியது கராச்சி சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை தான். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களான சௌகத் அசீஸ், மொகமட் கான் ஜூனேயோ, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆசிவ் அலி சர்தாரி, பர்வேஸ் முஷாரப், போன்றவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தான். சிந்து மாகாணத்தின், நான்கு முதலமைச்சர்கள், பாகிஸ்தான் அமைச்சர்கள், போன்றவர்களை மாத்திரமன்றி, ஜாவிட் மியான்டட், டனிஸ் கனேரியா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்களையும் உருவாக்கியிருக்கிறது. அவ்வாறான ஒரு பாடசாலையின் இணைப் பாடசாலையாக கருதி, யாழ்ப்பாணத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் வந்திருப்பது அதிகம் ஆச்சரியமானது அல்ல. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் அவ்வாறாயின் அவர் 2000ஆம் ஆண்டளவில், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அது விடுதலைப் புலிகளுடன் கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, பாகிஸ்தானின் இராணுவ உதவிகளை இலங்கை இராணுவம் பெற்றிருந்தது.  யாழ்ப்பாண குடாநாட்டை புலிகளிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் உதவிகளை வழங்கியது. அதில் தற்போதைய பாகிஸ்தான் தூதுவருக்கு பங்கு இருந்ததா என்ற கேள்வியும் உள்ளது, இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது, கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பகுதியாக இருந்த கடந்த வாரமே திறந்து விடப்பட்ட கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் வந்தவர்கள், சுயதனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த சூழலில், பாகிஸ்தான் தூதுவர் எந்த கட்டுப்பாடுகளுமின்றி யாழ்ப்பாண நகரில் நடமாடியிருக்கிறார். கொரோனாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் என்று எதுவும் கிடையாது. இந்திய தூதுவர் கோபால் பாக்லே கொழும்பு வந்து, இரண்டு வாரங்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே, வழக்கமான பணிகளை ஆரம்பித்தார். அவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறைகளில் இருந்து விலக்களிப்பு பெற்றது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அவரது பயணத்துக்கு அரசாங்க ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. ஏனென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து விட்டு, தனது மகளை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் வீட்டுக்குச் சென்று, பொலிசாரும், சுகாதார அதிகாரிகளும், சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனால், பாகிஸ்தான் தூதுவர் அரசாங்க பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, அவரைத் தனிமைப்படுத்தவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தான் தூதுவரின் இந்தப் பயணம், தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்துடன் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், தமிழ் அரசியல் தரப்புகளுடன் அவர் பெரிதாக எந்த சந்திப்புகளையும் நடத்தவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். இலங்கையின் வடகுப் பகுதியில், பாகிஸ்தானின், நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டது இல்லை. ஏனென்றால், பாகிஸ்தானுக்கு எப்போதுமே, இன்னொரு முகம் இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது, இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர்களாக பெரும்பாலும், இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களும், தூதுரகப் பணிகளுக்கு அமர்த்தப்படும், ஐஎஸ்ஐ எனப்படும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும், இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதிலேயே கவனம் செலுத்துவதாக புதுடெல்லி நம்புகிறது. இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் தூதுவரின் வடக்கிற்கான பயணத்தை, இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார். தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார். இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது. புதிய இந்திய தூதுவர், மறைந்த ஆறுமுகன் தொண்டமானை தவிர, தமிழர் தரப்பில் வேறெவருடனும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், சந்திப்புகளை நடத்தவில்லை. மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார். பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும். கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம். https://www.virakesari.lk/article/83121

இராணுவ ஆட்சிக்கு எதிரான குரல்கள்

10 hours 13 minutes ago
இராணுவ ஆட்சிக்கு எதிரான குரல்கள் கே. சஞ்சயன் / 2020 மே 31 முன்னொரு போதும் இல்லாதளவுக்கு, இலங்கையில் இராணுவ ஆட்சி பற்றிய கதைகள், இப்போது அதிகளவில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. முப்பதாண்டுப் போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பிந்திய ஆறு ஆண்டுகளிலும் சரி, இல்லாதளவுக்கு இராணுவ ஆட்சி பற்றி இப்போது பேசப்படுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அரச நிர்வாகக் கட்டமைப்புகளில் இராணுவப் பின்புலம் கொண்டவர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளதே, இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று கொண்டிருப்பதான விமர்சனங்கள் அதிகளவில் வெளியாகி வருவதற்குக் காரணம் ஆகும். கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்ட போதே, அவர் வெற்றி பெற்றால், நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவார் என்று, அப்போது ஆளும்கட்சியாக இருந்த இப்போதைய எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. அப்போது, அந்த எச்சரிக்கைகளைத் தற்போதைய ஆளும்கட்சி முற்றாகவே மறுத்திருந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனநாயக ரீதியாகவே செயற்படுவார் என்று உறுதியும் அளித்திருந்தது. ஆனால், ஆரம்பத்தில் சற்று ஜனநாயகவாதியாகக் காண்பித்துக் கொண்டாலும், இப்போது, தன்னை ஓர் இராணுவ ஆட்சியாளரைப் போல காட்டிக் கொள்வதையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரும்புகிறார். முக்கிய நிகழ்வுகளில் அவர், சிவில் உடையில் இராணுவ விருதுகளை அணிந்து கொண்டு, தனக்குள் இருக்கும் 'இராணுவ மிடுக்கை' அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். முன்னர் அவர் மீது, ஒரு ஜனநாயகவாதி என்ற போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அது, அவர் தனக்குத் தானே போர்த்திக் கொண்டதா அல்லது, அவரது அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால், போர்த்தப்பட்டதா என்ற வினாக்கள் உள்ளன. அந்த ஜனநாயகப் போர்வைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நீண்டகாலத்துக்கு ஒளித்திருக்க முடியவில்லை. அதனால் தான் அவர், அந்தப் போர்வைக்குள் இருந்து கணிசமாக இப்போது வெளிவந்து விட்டார். அவர், இப்போது தனக்கு விசுவாசமான சிவில் அதிகாரிகளைத் தேடுவதை விட, இராணுவ அதிகாரிகளைத் தன்னருகில் வைத்திருப்பதைத் தான் அதிகம் விரும்புகிறார். இராணுவ அதிகாரிகளைக் கொண்டே, தான் நினைத்தவற்றைச் சாதிக்கலாம், தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார். அதற்காக அவர், எங்கெல்லாம் தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும்; தான் நினைத்தவாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ, அங்கெல்லாம், சீருடை அதிகாரிகளை நிறுத்தத் தொடங்கி விட்டார். இதன் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி வருகிறார். அவர், பொதுஜன பெரமுனவின் உறுப்பினரோ, அந்தக் கட்சியின் மீது அதிகாரம் செலுத்தக் கூடிய தலைவரோ அல்ல. அவ்வாறான ஒருவர், அரசியலில் நிலைபெறுவது கடினம். உறவுரீதியாக அதிகாரம் செலுத்தும் நிலை இருந்தாலும், அரசியலில் எதிரிகளும் நண்பர்களும் எப்போது உருவாகுவார்கள் என்பதை, யாராலும் கணிக்க முடியாது. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னைச் சுற்றி ஒரு சீருடைக் கூட்டத்தை வைத்திருப்பதன் மூலம், பாதுகாப்பான நிலையில் இருக்க முடியும் என்று நம்புவதில் ஆச்சரியமில்லை. அரசியல்வாதிகளை விட, அதிகாரிகள் தான் முக்கியமானவர்கள். அதிகாரிகளின் கைகளில் உள்ள அதிகாரமும் அதைப் பயன்படுத்துவதற்கேற்ற தருணத்தை, அவர்களே சரியாகத் தெரிந்தவர்களாக இருப்பதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமானது அல்ல. அதனால் தான், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகள் மத்தியில், அதிகளவில் சீருடைத் தரப்பினரை உட்புகுத்திக் கொண்டு வருகிறார். இது, இரண்டு விதமான தரப்புகளுக்கு, எரிச்சலைக் கொடுக்கக் கூடியது. முதலாவது, கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பதவியில் அமர்த்துவதற்குக் காரணமான அரசியல் சக்திகள். இரண்டாவது, அரசாங்க நிர்வாகத்தை நடத்தும் சிவில் அதிகாரிகள். ஆட்சியைப் பிடிக்கின்ற எல்லாக் கட்சிகளுமே, அரச நிர்வாகத் துறைகளில் தமது ஆதரவாளர்கள், தமக்கு நெருக்கமானவர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறான பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அரசியல் கட்சிகளுடன் ஒட்டிக் கொள்பவர்கள் அதிகம். அதிகாரத்தைப் பிடித்தால், குறிப்பிட்ட பதவிக்குப் பேரம் பேசப்படுவதும் உண்டு. அதை நம்பி, தேர்தலில் ஆதரவு அளிப்பது, வாக்குகளைப் பெறுவதற்காகப் பிரச்சாரம் செய்வது, பிரச்சாரச் செலவுகளைச் செய்வது என்று, பல்வேறு வகைகளில் உதவுவோர் இருப்பார்கள். அதைவிட, அரசியல்வாதிகளின் உறவினர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் பல்வேறு செல்வாக்கான பதவிகளைக் குறிவைத்துச் செயற்படுவார்கள். அரச திணைக்களங்கள், அதிகார சபைகள், நிறுவனங்களின் தலைவர் பதவிகள், பணிப்பாளர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளைப் பிடிப்பது தான், இவர்களின் இலக்காக இருக்கும். அதைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளில், அவர்கள் எதிர்பார்ப்பதை அடைந்து விட முடியும். தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதற்காகப் பாடுபட்ட பலரும், அவ்வாறான இலக்குடன் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்களுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகள், திருப்தியைக் கொடுத்திருக்காது. முக்கியமான துறைகளில், அவர் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளையும் சேவையில் உள்ள படை அதிகாரிகளையும் நியமித்து வருவதால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. நாடு இராணுவ ஆட்சி சூழலுக்குள் செல்வது பற்றி, அவர்களைப் பொறுத்தவரையில் கவலைக்குரிய விடயம் அல்ல. ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள், இந்த இராணுவ மயமாக்கலால் பாதிக்கப்படுகிறது. அது, அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதுபோலவே, ஒரு நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில், அரசியல்வாதிகளை விட, சிவில் அதிகாரிகளுக்குத் தான் பங்கு அதிகம். அவர்கள் தான், திட்டமிடல்களைச் செய்வது தொடக்கம், நடைமுறைப்படுத்துவது வரைக்கும் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடியவர்கள். கடும் போட்டிகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டு, போராடிப் போராடி மேல்நிலைக்கு வரும் நிர்வாக சேவை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகள், எப்போதும் அவர்களுக்கு ஓர் இலக்காகவே இருந்து வரும். அவர்களின் கல்வி, அனுபவம், முதிர்ச்சி ஆகியவற்றுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளாகவே, அவர்கள் அவற்றைக் கருதுகிறார்கள். அதற்கான தகுதியும் திறமையும் தமக்கு இருக்கிறது என்று, உறுதியாக நம்புகிறார்கள். அவ்வாறானவர்களுக்குத் தற்போதைய அரசாங்கத்தின், குறிப்பாக ஜனாதிபதியின் நடவடிக்கைள் திருப்தியைக் தராது. ஏனென்றால், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளை, இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தட்டிப் பறித்துக் கொண்டு போகிறார்கள். இந்த நிலை நீடித்தால், ஒட்டுமொத்தச் சிவில் நிர்வாகப் பதவிகளும் சீருடை அதிகாரிகளால் நிரப்பப்பட்டு விடும். அவர்களுக்குக் கீழ், தாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டிய நிலை வந்து விடும் என்பது, சிவில் அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டு தரப்புகளையும் பகைத்துக் கொண்டு தான், அரசாங்கம் சிவில் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகிறது. இந்தநிலையில் தான், இராணுவ ஆட்சிக்குள் நாட்டைக் கொண்டு செல்கிறார் கோட்டா என்ற குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். உண்மையில், நாட்டின் பிற பகுதிகளை, வடக்கில் தான் கூடுதல் இராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றும் கூட. போர்க்காலத்தில் இருந்து, போர் முடிவுக்கு வந்த பின்னரும், கடுமையான இராணுவ ஆட்சிக்குள் இருந்து வந்தது வடக்குத் தான். 2015இற்குப் பின்னர், கொஞ்சம் தளர்வுகள் இருந்தாலும், மீண்டும் அந்தப் பழைய சூழலுக்குள், நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி. அதற்குக் கொரோனா வைரஸும் கைகொடுத்திருக்கிறது. இப்போது, வடக்கில் இராணுவ ஆட்சி பற்றிப் பெரிதாக யாரும் குரல் எழுப்புவதில்லை. அவ்வாறு குரல் எழுப்புகின்றவர்களையும் தேர்தலுக்காகக் கொக்கரிக்கிறார்கள் என்று கருதுகின்ற சூழலும் இருக்கிறது. ஆனால், தெற்கில் தான் இப்போது இராணுவ ஆட்சி பற்றி, அதற்கு எதிராக அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்; குரல் எழுப்புகிறார்கள். இராணுவத்தில் பெரும்பான்மையாகச் சிங்களவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையின மக்களைப் பெரும்பாலும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் கூட, இராணுவ ஆட்சியை எதிர்க்கின்றன. அங்கு இராணுவ ஆட்சி பற்றிக் கூறப்படும் எச்சரிக்கைகளை, வெறும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டாகப் பலரும் பார்க்கின்ற நிலை உள்ளது. அதில், நியாயம் இருந்தாலும் உண்மையான இராணுவ சூழலுக்குள் நாடு தள்ளப்பட்டு வருகிறது என்ற உண்மையை, யாரும் மறுக்க முடியாது. இந்த இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, இப்போது தெற்கில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகள், சிங்களப் பேரினவாத வாக்காளர்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப்படப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் போது, அதற்குச் சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பு எவ்வாறாக இருக்கப் போகிறது? இந்தக் கேள்விக்கான விடை, தேர்தலில் வெளிப்படும். அது, தற்போதைய அரசாங்கத்துக்கு சாதகமானதாக இருந்தால், இராணுவ ஆட்சிக்கு சிங்கள மக்கள் பச்சைக் கொடி காண்பித்து விட்டனர் என்று அர்த்தப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இராணுவ-ஆட்சிக்கு-எதிரான-குரல்கள்/91-251111

கே. சஞ்சயன்   / 2020 மே 31

முன்னொரு போதும் இல்லாதளவுக்கு, இலங்கையில் இராணுவ ஆட்சி பற்றிய கதைகள், இப்போது அதிகளவில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

முப்பதாண்டுப் போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பிந்திய ஆறு ஆண்டுகளிலும் சரி, இல்லாதளவுக்கு இராணுவ ஆட்சி பற்றி இப்போது பேசப்படுகிறது.

முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அரச நிர்வாகக் கட்டமைப்புகளில் இராணுவப் பின்புலம் கொண்டவர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளதே,  இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று கொண்டிருப்பதான விமர்சனங்கள் அதிகளவில் வெளியாகி வருவதற்குக் காரணம் ஆகும்.

கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்ட போதே, அவர் வெற்றி பெற்றால், நாட்டில்  இராணுவ ஆட்சியை  ஏற்படுத்துவார்  என்று, அப்போது ஆளும்கட்சியாக இருந்த இப்போதைய எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.

அப்போது, அந்த எச்சரிக்கைகளைத் தற்போதைய ஆளும்கட்சி முற்றாகவே மறுத்திருந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனநாயக ரீதியாகவே செயற்படுவார் என்று உறுதியும் அளித்திருந்தது.

ஆனால், ஆரம்பத்தில் சற்று ஜனநாயகவாதியாகக் காண்பித்துக் கொண்டாலும், இப்போது, தன்னை ஓர் இராணுவ ஆட்சியாளரைப் போல காட்டிக் கொள்வதையே  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரும்புகிறார்.

முக்கிய நிகழ்வுகளில் அவர், சிவில் உடையில் இராணுவ விருதுகளை அணிந்து கொண்டு, தனக்குள் இருக்கும் 'இராணுவ மிடுக்கை' அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

முன்னர் அவர் மீது, ஒரு ஜனநாயகவாதி என்ற போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அது, அவர் தனக்குத் தானே போர்த்திக் கொண்டதா அல்லது, அவரது அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால், போர்த்தப்பட்டதா என்ற வினாக்கள் உள்ளன.

அந்த ஜனநாயகப் போர்வைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நீண்டகாலத்துக்கு ஒளித்திருக்க முடியவில்லை. அதனால் தான் அவர், அந்தப் போர்வைக்குள் இருந்து கணிசமாக இப்போது வெளிவந்து விட்டார்.

அவர், இப்போது தனக்கு விசுவாசமான சிவில் அதிகாரிகளைத் தேடுவதை விட, இராணுவ அதிகாரிகளைத் தன்னருகில் வைத்திருப்பதைத் தான் அதிகம் விரும்புகிறார்.

இராணுவ அதிகாரிகளைக் கொண்டே, தான் நினைத்தவற்றைச் சாதிக்கலாம், தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார். அதற்காக அவர், எங்கெல்லாம் தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும்; தான் நினைத்தவாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ, அங்கெல்லாம், சீருடை அதிகாரிகளை நிறுத்தத் தொடங்கி விட்டார். இதன் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி வருகிறார்.

image_b1f2e38978.jpg

அவர், பொதுஜன பெரமுனவின் உறுப்பினரோ, அந்தக் கட்சியின் மீது அதிகாரம் செலுத்தக் கூடிய தலைவரோ அல்ல. அவ்வாறான ஒருவர், அரசியலில் நிலைபெறுவது கடினம்.

உறவுரீதியாக அதிகாரம் செலுத்தும் நிலை இருந்தாலும், அரசியலில் எதிரிகளும் நண்பர்களும் எப்போது உருவாகுவார்கள் என்பதை, யாராலும் கணிக்க முடியாது.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னைச் சுற்றி ஒரு சீருடைக் கூட்டத்தை வைத்திருப்பதன் மூலம், பாதுகாப்பான நிலையில் இருக்க முடியும் என்று நம்புவதில் ஆச்சரியமில்லை.

அரசியல்வாதிகளை விட, அதிகாரிகள் தான் முக்கியமானவர்கள். அதிகாரிகளின் கைகளில் உள்ள அதிகாரமும் அதைப் பயன்படுத்துவதற்கேற்ற தருணத்தை, அவர்களே சரியாகத் தெரிந்தவர்களாக  இருப்பதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமானது அல்ல. அதனால் தான், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகள் மத்தியில், அதிகளவில் சீருடைத் தரப்பினரை உட்புகுத்திக் கொண்டு வருகிறார்.

இது, இரண்டு விதமான தரப்புகளுக்கு, எரிச்சலைக் கொடுக்கக் கூடியது. முதலாவது, கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பதவியில் அமர்த்துவதற்குக் காரணமான அரசியல் சக்திகள். இரண்டாவது, அரசாங்க நிர்வாகத்தை நடத்தும் சிவில் அதிகாரிகள்.

ஆட்சியைப் பிடிக்கின்ற எல்லாக் கட்சிகளுமே, அரச நிர்வாகத் துறைகளில் தமது ஆதரவாளர்கள், தமக்கு நெருக்கமானவர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறான பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அரசியல் கட்சிகளுடன் ஒட்டிக் கொள்பவர்கள் அதிகம். அதிகாரத்தைப் பிடித்தால், குறிப்பிட்ட பதவிக்குப் பேரம் பேசப்படுவதும் உண்டு.

அதை நம்பி, தேர்தலில் ஆதரவு அளிப்பது, வாக்குகளைப் பெறுவதற்காகப் பிரச்சாரம் செய்வது, பிரச்சாரச் செலவுகளைச் செய்வது என்று, பல்வேறு வகைகளில் உதவுவோர் இருப்பார்கள்.

அதைவிட, அரசியல்வாதிகளின் உறவினர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் பல்வேறு செல்வாக்கான பதவிகளைக் குறிவைத்துச் செயற்படுவார்கள்.

அரச திணைக்களங்கள், அதிகார சபைகள், நிறுவனங்களின் தலைவர் பதவிகள், பணிப்பாளர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளைப் பிடிப்பது தான், இவர்களின் இலக்காக இருக்கும்.

அதைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளில், அவர்கள் எதிர்பார்ப்பதை அடைந்து விட முடியும்.

தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதற்காகப் பாடுபட்ட பலரும், அவ்வாறான இலக்குடன் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், அவர்களுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகள், திருப்தியைக் கொடுத்திருக்காது.

முக்கியமான துறைகளில், அவர் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளையும் சேவையில் உள்ள படை அதிகாரிகளையும் நியமித்து வருவதால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.

நாடு இராணுவ ஆட்சி சூழலுக்குள் செல்வது பற்றி, அவர்களைப் பொறுத்தவரையில் கவலைக்குரிய விடயம் அல்ல. ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள், இந்த இராணுவ மயமாக்கலால் பாதிக்கப்படுகிறது. அது, அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அதுபோலவே, ஒரு நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில், அரசியல்வாதிகளை விட, சிவில் அதிகாரிகளுக்குத் தான் பங்கு அதிகம். அவர்கள் தான், திட்டமிடல்களைச் செய்வது தொடக்கம், நடைமுறைப்படுத்துவது வரைக்கும் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடியவர்கள்.

கடும் போட்டிகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டு, போராடிப் போராடி மேல்நிலைக்கு வரும் நிர்வாக சேவை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகள், எப்போதும் அவர்களுக்கு ஓர் இலக்காகவே இருந்து வரும்.

அவர்களின் கல்வி, அனுபவம், முதிர்ச்சி ஆகியவற்றுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளாகவே, அவர்கள் அவற்றைக் கருதுகிறார்கள். அதற்கான தகுதியும் திறமையும் தமக்கு இருக்கிறது என்று, உறுதியாக நம்புகிறார்கள்.

அவ்வாறானவர்களுக்குத் தற்போதைய அரசாங்கத்தின், குறிப்பாக ஜனாதிபதியின் நடவடிக்கைள் திருப்தியைக் தராது.

ஏனென்றால், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளை, இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தட்டிப் பறித்துக் கொண்டு போகிறார்கள். இந்த நிலை நீடித்தால், ஒட்டுமொத்தச் சிவில் நிர்வாகப் பதவிகளும் சீருடை அதிகாரிகளால் நிரப்பப்பட்டு விடும். அவர்களுக்குக் கீழ், தாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டிய நிலை வந்து விடும் என்பது, சிவில் அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு தரப்புகளையும் பகைத்துக் கொண்டு தான், அரசாங்கம் சிவில் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகிறது.

இந்தநிலையில் தான், இராணுவ ஆட்சிக்குள் நாட்டைக் கொண்டு செல்கிறார் கோட்டா என்ற குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

உண்மையில், நாட்டின் பிற பகுதிகளை, வடக்கில் தான் கூடுதல் இராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றும் கூட.

போர்க்காலத்தில் இருந்து, போர் முடிவுக்கு வந்த பின்னரும்,  கடுமையான இராணுவ ஆட்சிக்குள் இருந்து வந்தது வடக்குத் தான்.

2015இற்குப் பின்னர், கொஞ்சம் தளர்வுகள் இருந்தாலும், மீண்டும் அந்தப் பழைய சூழலுக்குள், நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி. அதற்குக்  கொரோனா வைரஸும் கைகொடுத்திருக்கிறது.

இப்போது, வடக்கில் இராணுவ ஆட்சி பற்றிப் பெரிதாக யாரும் குரல் எழுப்புவதில்லை. அவ்வாறு குரல் எழுப்புகின்றவர்களையும் தேர்தலுக்காகக் கொக்கரிக்கிறார்கள் என்று கருதுகின்ற சூழலும் இருக்கிறது.

ஆனால், தெற்கில் தான் இப்போது இராணுவ ஆட்சி பற்றி, அதற்கு எதிராக அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்; குரல் எழுப்புகிறார்கள்.

இராணுவத்தில் பெரும்பான்மையாகச் சிங்களவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையின மக்களைப் பெரும்பாலும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் கூட, இராணுவ ஆட்சியை எதிர்க்கின்றன.

அங்கு இராணுவ ஆட்சி பற்றிக் கூறப்படும் எச்சரிக்கைகளை, வெறும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டாகப் பலரும் பார்க்கின்ற நிலை உள்ளது. அதில், நியாயம் இருந்தாலும் உண்மையான இராணுவ சூழலுக்குள் நாடு தள்ளப்பட்டு வருகிறது என்ற உண்மையை, யாரும் மறுக்க முடியாது.

இந்த இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, இப்போது தெற்கில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகள், சிங்களப் பேரினவாத வாக்காளர்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப்படப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் போது, அதற்குச் சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பு எவ்வாறாக இருக்கப் போகிறது? இந்தக் கேள்விக்கான விடை, தேர்தலில் வெளிப்படும்.

அது, தற்போதைய அரசாங்கத்துக்கு சாதகமானதாக இருந்தால், இராணுவ ஆட்சிக்கு சிங்கள மக்கள் பச்சைக் கொடி காண்பித்து விட்டனர் என்று அர்த்தப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இராணுவ-ஆட்சிக்கு-எதிரான-குரல்கள்/91-251111

பொருளாதாரச் சுமையால் உருவாகும் அரசு மீதான வெறுப்பு

10 hours 22 minutes ago
பொருளாதாரச் சுமையால் உருவாகும் அரசு மீதான வெறுப்பு -இலட்சுமணன் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமையின் இழுபறி நிலையும் சட்டரீதியான ஆக்கபூர்வமான தீர்வுகாணாச் சட்டச் சிக்கல்களும் இலங்கைத் தேர்தல் நிலைவரத்தைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு அரசையும் தேர்தல் ஆணைக்குழுவையும் இட்டுச் சென்றுள்ளது. இந்நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைந்த, கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று, கடந்த 67 நாள்களாக இலங்கைத் தீவையும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும், இலங்கைத் தீவு இச்சூழ்நிலைச் சவாலை வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. சர்வதேச ரீதியில், இத்தொற்றுக் காரணமாகக் கணக்கிடப்பட்ட உயிர் இழப்புகளை, இலங்கையில் ஏற்பட்ட இழப்புக்களின் அளவோடு ஒப்பிடும்போது, இச்சவாலை முன்னேற்றகரமாக வெற்றி கொண்ட முறைமை துலாம்பரமாகும். இச் சூழ்நிலைக்கு முன்னதான கடந்த ஆண்டு ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளும் 2018இல், உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் வளர்ச்சி கண்ட இலங்கை பொருளாதார துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் பணவீக்கத்தின் அளவு அதிகரிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகள், உல்லாசப் பயணத்துறை என்பன, கணிசமான பின்னடைவைச் சந்தித்தது. இதன் காரணமாக, பெருமளவு அந்நியச் செலாவணி வீழ்ச்சி கண்டது. இத்தகையதொரு சூழ்நிலையில், இலங்கை அரசானது யுத்தம் காரணமாகவும் யுத்தத்துக்குப் பின்னரான புதிய அபிவிருத்தி தொடர்பான சிந்தனை காரணமாகவும் வெளிநாடுகளில் பெற்ற நீண்டகால, குறுகியகால கடன்களையும் அதற்கான வட்டி செலுத்த முடியாத சூழ்நிலையை கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் சந்திக்க ஆரம்பித்தது. இத்தகைய நிலைவரம் என்பது, மக்கள் மீது அதிக வரிச் சுமையைத் தூண்டுவதற்கும் ஏதுவாக அமைந்தது. பெட்ரோலிய பொருள்களின் சர்வதேச சந்தை அனுகூலங்களை மக்கள் அனுபவிக்க முடியாத அளவுக்கு, விலை குறைப்புகளை மேற்கொள்ளாமல் அதில்வரும் இலாபத்தின் மூலம் பெருமளவு நிதியைத் திரட்டுவதற்கு உத்தேசித்தது. எனினும், கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னரான அரசாங்கத்தின் சூழ்நிலையானது, ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருந்ததால், கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியுடன் இவ்வாண்டும் தேர்தல் ஆண்டாகவே கருத வேண்டிய அல்லது எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இலங்கை மக்களுக்கு ஏற்பட்டது. எனினும், எதிர்பாராத விதமாகச் சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம், சீனாவில் ஆரம்பித்து உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியதோடு, பெரும் உயிர்கொல்லி நோயாக விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக, உலக நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸ் மூலம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து, பெரும்பாலான உயிரிழப்புகளையும் தொற்றுகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வகையில், இலங்கைத் தீவும் இதன் இலாப நட்டங்களை மேலும் ஒருபடி மேலாக அனுபவிக்கத் தொடங்கியது. இதன் வெளிப்பாடாகவே, தனியார் தொழிற்றுறை ஊழியர் குறைப்பு, புதிய நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளமை என்பவற்றுடன் மேலும் வெளிநாட்டுக் கடன் உதவி பெறுவதற்கான முயற்சிகளும் சீனா, இந்தியா முதலான நாடுகளுடனான கடன் உதவி நகர்வுகளும் அதன் ஊடான அரசியல் காய்நகர்த்தல்கள் ஒருபுறம் நிகழ மறுபுறம் மேலும், ஒருபடி விலை வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணெய் இலாபத்தை மேலும் மக்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றினூடாக இழந்த பொருளாதாரத்தையும் துண்டு விழும் தொகையையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இலங்கையில் தேர்தல் சூழல் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்றத் தீர்மானங்கள், ஜனாதிபதிக்கு இடையிலான அரசியல் ஜனநாயக ஆட்சி அதிகார இலாப நட்ட கணக்குகளும் தேர்தல் விடயத்தில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலைக்கு, இலங்கை அரசியல் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நிலைமைகளுடன் இலங்கை எதிர்க்கட்சி அரசியல் சூழலின் கையறுநிலை, கடந்த காலங்களை விட ஒருபடி மேலான நிலைக்குத் தள்ளியுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் கட்டியெழுப்ப அதிகார சூழலை விரும்புகின்றமை வெளிப்படையாகும். அப்போதுதான் தாம் நீண்டகால நிலையான ஆட்சி முறைமை ஒன்றை ஏற்படுத்துவதுடன் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை மூலம் தமக்குச் சாதகமான முறையில் அரசியல் யாப்பைத் திருத்துவதுடன் 19ஆவது திருத்தத்தைச் செயலிழக்கச் செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது. இந்த வகையில், பழையது கழிதலும் புதியன புகுவது போல் உலகில் மாற்றம் என்ற சொல்லைத் தவிர வேறு ஒன்றும் மாறாதது. இயற்கை என்பது அளிக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர் பெறும் என்பது இந்தக் கொரோனா வைரஸ் தொற்றில் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொற்று மூலம் இக்காலகட்டத்தில் உலகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் உலகம் முழுவதும் இயங்கவில்லை. போக்குவரத்துகள் மிகமிக அரிதாக இடம்பெற்றன. உலக நாடுகள் முழுவதும் விவசாய உற்பத்திகள் தவிர ஏனையவை இடை நிறுத்தப்பட்டன. ஊர்கள் அடங்கின; அடக்கப்பட்டன; மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். உலகமே தனிமைப்படுத்தப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதிகள் நாணயப் புழக்கங்கள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் அதிக அளவில் தொற்று நீக்கப்பட்டது. வளிமண்டலம் சுத்தமடைந்தது; நீர் தூய்மை ஆகியது. இரசாயன உற்பத்திகள் தடுக்கப்பட்டன. உலகமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது. இது இலங்கைத் தீவுக்கும் பொருந்தும். இது நாணயத்தின், இரு பக்கம் போன்றது. நன்மை ஒரு பக்கம், தீமை ஒரு பக்கம் என்பது போல் அமைந்திருப்பது உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது. இவ்வாறான சூழ்நிலையில், அரசு நிவாரணங்களை வழங்குவதாக அறிவித்து, அந்த அறிவிப்பில் ரூபாய் 5,000 பெற்றவர்களைத்தவிர ஏனையவர்கள் அரச உத்தியோகத்தர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் என்பது, வங்கிகளில் அவர்கள் பெற்ற கடன் தொகையைப் பின்நோக்கிப் போட்டு வட்டியும் முதலுமாக அறவிட்டதுடன் கடன் எல்லை நிறைவடையும் காலம் மூன்று மாதம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மூன்று மாத கால வட்டித் தொகையுடன் வட்டியும் முதலும் கழிக்கப்படும்போது, இந்த உண்மை, கடன் பெற்றவர்களுக்குப் புரியும். இவற்றைவிட அத்தியாவசியப் பொருள்கள் சலுகை விலையில் சதோச நிறுவனத்திலும் ஒரு சில சில்லறைக் கடைகளிலும் சலுகை விலையில் இக்காலத்தில் விற்கப்பட்டன. இதை அனுபவித்தவர்கள் இலங்கையில் 25 சதவீதத்துக்கும் குறைவானவர்கள். மேலும், மே மாதம் மூன்றாம் வாரத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பும் அரசுக்கு இலாபமாயினும் அன்றாட உழைப்பில் கடன், வட்டி, வாழ்க்கைச் செலவு என வாழும் மத்தியதர, பாமர மக்களின் சம்பள அதிகரிப்பு அற்ற இந்தத் திடீர் செயலொழுங்கு, இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தற்காலிகமாகத் தவிர்க்க உதவினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகப் போகின்றது. மேலும், பதவிநிலை உத்தியோகத்தர்கள் 15,000 ரூபாய் முகாமைத்துவக் கொடுப்பனவு நிறுத்தம், வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டமை போன்ற அழுத்தங்கள் தங்கள் தொழில் உரிமை, வாழும் உரிமை மறுக்கப்படுவதோடு பெருமளவு பொருளாதார அழுத்தத்தை ஈடுசெய்ய அளவற்ற வரிகள், வட்டிகள், இடைக்காலத் தடைகள் மூலம் இறுக்கமான நிலைக்குக் கொண்டு வருவது என்பது, அரசாங்கம் தமது ஆட்சி அதிகாரத்தை, மக்கள் செல்வாக்கை இழக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும். எனவே, அரசின் இத்தகைய அணுகு முறைகள் தொடருமானால், ஆட்சி அதிகாரத்தை, அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, அரசு, மக்கள் நிலைமையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படத் தவறின் மக்களின் பொருளாதார வளம் என்பது பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதோடு பலவீனமுற்றுள்ள எதிர்க்கட்சிகள் பலம் உள்ள திட்டத்துடன் முன்னகரும்போது, ஆட்சி மாற்றம் மீண்டும் ஏற்படும். கடன் சுமையைத் தவிர்க்க, ஏற்கெனவே கடன் சுமையுடன் வாழும் மக்கள் மீது, பொருளாதாரச் சுமைகளைச் சுமத்துவது, அரசு மீதான வெறுப்பைத் தவிர வேறு ஒன்றையும் அரசு வெற்றி கொள்ளாது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொருளாதாரச்-சுமையால்-உருவாகும்-அரசு-மீதான-வெறுப்பு/91-251106

-இலட்சுமணன்

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமையின் இழுபறி நிலையும் சட்டரீதியான ஆக்கபூர்வமான தீர்வுகாணாச் சட்டச் சிக்கல்களும் இலங்கைத் தேர்தல் நிலைவரத்தைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு அரசையும் தேர்தல் ஆணைக்குழுவையும் இட்டுச் சென்றுள்ளது.

இந்நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைந்த, கொரோனா வைரஸின் உலகளாவிய  தொற்று, கடந்த 67 நாள்களாக இலங்கைத் தீவையும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும், இலங்கைத் தீவு இச்சூழ்நிலைச் சவாலை வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. சர்வதேச ரீதியில், இத்தொற்றுக் காரணமாகக் கணக்கிடப்பட்ட உயிர் இழப்புகளை, இலங்கையில் ஏற்பட்ட இழப்புக்களின் அளவோடு ஒப்பிடும்போது, இச்சவாலை முன்னேற்றகரமாக வெற்றி கொண்ட முறைமை துலாம்பரமாகும்.

இச் சூழ்நிலைக்கு முன்னதான கடந்த ஆண்டு ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளும் 2018இல், உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் வளர்ச்சி கண்ட இலங்கை பொருளாதார துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் பணவீக்கத்தின் அளவு அதிகரிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகள், உல்லாசப் பயணத்துறை என்பன, கணிசமான பின்னடைவைச் சந்தித்தது.

 இதன் காரணமாக, பெருமளவு அந்நியச் செலாவணி வீழ்ச்சி கண்டது. இத்தகையதொரு சூழ்நிலையில், இலங்கை அரசானது யுத்தம் காரணமாகவும் யுத்தத்துக்குப் பின்னரான புதிய அபிவிருத்தி தொடர்பான சிந்தனை காரணமாகவும் வெளிநாடுகளில் பெற்ற நீண்டகால, குறுகியகால கடன்களையும் அதற்கான வட்டி செலுத்த முடியாத சூழ்நிலையை கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் சந்திக்க ஆரம்பித்தது. இத்தகைய நிலைவரம் என்பது, மக்கள் மீது அதிக வரிச் சுமையைத் தூண்டுவதற்கும் ஏதுவாக அமைந்தது. பெட்ரோலிய பொருள்களின் சர்வதேச சந்தை அனுகூலங்களை மக்கள் அனுபவிக்க முடியாத அளவுக்கு, விலை குறைப்புகளை மேற்கொள்ளாமல் அதில்வரும் இலாபத்தின் மூலம் பெருமளவு நிதியைத் திரட்டுவதற்கு உத்தேசித்தது.

எனினும், கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னரான அரசாங்கத்தின் சூழ்நிலையானது, ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருந்ததால், கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியுடன் இவ்வாண்டும் தேர்தல் ஆண்டாகவே கருத வேண்டிய அல்லது எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இலங்கை மக்களுக்கு ஏற்பட்டது. எனினும், எதிர்பாராத விதமாகச் சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம், சீனாவில் ஆரம்பித்து உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியதோடு, பெரும் உயிர்கொல்லி நோயாக விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக, உலக நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸ் மூலம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து, பெரும்பாலான உயிரிழப்புகளையும் தொற்றுகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வகையில், இலங்கைத் தீவும் இதன் இலாப நட்டங்களை மேலும் ஒருபடி மேலாக அனுபவிக்கத் தொடங்கியது.

இதன் வெளிப்பாடாகவே, தனியார் தொழிற்றுறை ஊழியர் குறைப்பு, புதிய நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளமை என்பவற்றுடன் மேலும் வெளிநாட்டுக் கடன் உதவி பெறுவதற்கான முயற்சிகளும் சீனா, இந்தியா முதலான நாடுகளுடனான  கடன் உதவி நகர்வுகளும் அதன் ஊடான அரசியல் காய்நகர்த்தல்கள் ஒருபுறம் நிகழ மறுபுறம் மேலும், ஒருபடி விலை வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணெய் இலாபத்தை மேலும் மக்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றினூடாக இழந்த பொருளாதாரத்தையும் துண்டு விழும் தொகையையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், இலங்கையில் தேர்தல் சூழல் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்றத் தீர்மானங்கள், ஜனாதிபதிக்கு இடையிலான அரசியல் ஜனநாயக ஆட்சி அதிகார இலாப நட்ட கணக்குகளும் தேர்தல் விடயத்தில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலைக்கு, இலங்கை அரசியல் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நிலைமைகளுடன் இலங்கை எதிர்க்கட்சி அரசியல் சூழலின் கையறுநிலை, கடந்த காலங்களை விட ஒருபடி மேலான நிலைக்குத் தள்ளியுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் கட்டியெழுப்ப அதிகார சூழலை விரும்புகின்றமை வெளிப்படையாகும். அப்போதுதான் தாம் நீண்டகால நிலையான ஆட்சி முறைமை ஒன்றை ஏற்படுத்துவதுடன் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை மூலம் தமக்குச் சாதகமான முறையில் அரசியல் யாப்பைத் திருத்துவதுடன் 19ஆவது திருத்தத்தைச் செயலிழக்கச் செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

இந்த வகையில், பழையது கழிதலும் புதியன புகுவது போல் உலகில் மாற்றம் என்ற சொல்லைத் தவிர வேறு ஒன்றும் மாறாதது. இயற்கை என்பது அளிக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர் பெறும் என்பது இந்தக் கொரோனா வைரஸ் தொற்றில் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொற்று மூலம் இக்காலகட்டத்தில் உலகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் உலகம் முழுவதும் இயங்கவில்லை. போக்குவரத்துகள் மிகமிக அரிதாக இடம்பெற்றன. உலக நாடுகள் முழுவதும் விவசாய உற்பத்திகள் தவிர ஏனையவை இடை நிறுத்தப்பட்டன. ஊர்கள் அடங்கின; அடக்கப்பட்டன; மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். உலகமே தனிமைப்படுத்தப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதிகள் நாணயப் புழக்கங்கள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் அதிக அளவில் தொற்று நீக்கப்பட்டது. வளிமண்டலம் சுத்தமடைந்தது; நீர் தூய்மை ஆகியது. இரசாயன உற்பத்திகள் தடுக்கப்பட்டன. உலகமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது. இது இலங்கைத் தீவுக்கும் பொருந்தும். இது நாணயத்தின், இரு பக்கம் போன்றது. நன்மை ஒரு பக்கம், தீமை ஒரு பக்கம் என்பது போல் அமைந்திருப்பது உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது.

இவ்வாறான சூழ்நிலையில், அரசு நிவாரணங்களை வழங்குவதாக அறிவித்து, அந்த அறிவிப்பில் ரூபாய் 5,000 பெற்றவர்களைத்தவிர  ஏனையவர்கள் அரச உத்தியோகத்தர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் என்பது, வங்கிகளில் அவர்கள் பெற்ற கடன் தொகையைப் பின்நோக்கிப் போட்டு வட்டியும் முதலுமாக அறவிட்டதுடன் கடன் எல்லை நிறைவடையும் காலம் மூன்று மாதம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மூன்று மாத கால வட்டித் தொகையுடன் வட்டியும் முதலும் கழிக்கப்படும்போது, இந்த உண்மை, கடன் பெற்றவர்களுக்குப் புரியும். இவற்றைவிட அத்தியாவசியப் பொருள்கள் சலுகை விலையில் சதோச நிறுவனத்திலும் ஒரு சில சில்லறைக் கடைகளிலும் சலுகை விலையில் இக்காலத்தில் விற்கப்பட்டன. இதை அனுபவித்தவர்கள் இலங்கையில் 25 சதவீதத்துக்கும் குறைவானவர்கள். 

மேலும், மே மாதம் மூன்றாம் வாரத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பும் அரசுக்கு இலாபமாயினும் அன்றாட உழைப்பில் கடன், வட்டி, வாழ்க்கைச் செலவு என வாழும் மத்தியதர, பாமர மக்களின் சம்பள அதிகரிப்பு அற்ற இந்தத் திடீர் செயலொழுங்கு, இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தற்காலிகமாகத் தவிர்க்க உதவினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகப் போகின்றது.

மேலும், பதவிநிலை உத்தியோகத்தர்கள் 15,000 ரூபாய் முகாமைத்துவக் கொடுப்பனவு நிறுத்தம், வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டமை போன்ற அழுத்தங்கள் தங்கள் தொழில் உரிமை, வாழும் உரிமை மறுக்கப்படுவதோடு பெருமளவு பொருளாதார அழுத்தத்தை ஈடுசெய்ய அளவற்ற வரிகள், வட்டிகள்,  இடைக்காலத் தடைகள் மூலம் இறுக்கமான நிலைக்குக் கொண்டு வருவது என்பது, அரசாங்கம் தமது ஆட்சி அதிகாரத்தை, மக்கள் செல்வாக்கை இழக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

எனவே, அரசின் இத்தகைய அணுகு முறைகள் தொடருமானால், ஆட்சி அதிகாரத்தை, அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, அரசு, மக்கள் நிலைமையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படத் தவறின் மக்களின் பொருளாதார வளம் என்பது பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதோடு பலவீனமுற்றுள்ள எதிர்க்கட்சிகள் பலம் உள்ள திட்டத்துடன் முன்னகரும்போது, ஆட்சி மாற்றம் மீண்டும் ஏற்படும்.

கடன் சுமையைத் தவிர்க்க, ஏற்கெனவே கடன் சுமையுடன் வாழும் மக்கள் மீது, பொருளாதாரச் சுமைகளைச் சுமத்துவது, அரசு மீதான வெறுப்பைத் தவிர வேறு ஒன்றையும் அரசு வெற்றி கொள்ளாது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொருளாதாரச்-சுமையால்-உருவாகும்-அரசு-மீதான-வெறுப்பு/91-251106

இழப்புகளை சந்திப்பீர்கள் ; அதிர்ச்சியை தாங்க முடியாது ; இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.!

10 hours 23 minutes ago
இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.! பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள். இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள். முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மத்தியஸ்தம் இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் பேச விருப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் இதை சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. எச்சரிக்கை இந்த நிலையில் இந்தியாவிற்கும் சீனா தற்போது கடுமையான எச்சரிகைகளை விடுத்துள்ளது. அதில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சண்டையில் சிலர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். தவறான பேச்சுக்கள் இது போன்ற பேச்சுக்கள் தவறானது. இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவை தவறாக வழி நடத்தும். இது இந்தியாவிற்கு எதிரானது இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவுடன் சேர்ந்ததால் இந்தியாவிற்கு எதுவும் கிடைக்காது. இந்தியாவிற்கு பெரிய அளவில் இழப்புகள் தான் ஏற்படும். இதனால் பிரதமர் மோடியின் அரசு இந்த பிரச்னையை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வேண்டும். இந்தியா கவனமாக இருக்க வேண்டும். கூட்டு சேர கூடாது அமெரிக்கா, சீனா பிரச்சனையில் இந்தியா தலையிட கூடாது. இந்தியா இப்படி தலையிட்டால், அது பிரச்சனையை பெரிதாக்கும். அதோடு இந்தியாவிற்கு சிக்கலாக முடியும். அமெரிக்காவின் மத்தியஸ்தம் இதில் தேவை இல்லை. சீனா , இந்தியா இடையிலான பிரச்சனையை நாம்தான் சரி செய்ய வேண்டும். நமக்கு அந்த பலம் இருக்கிறது. அமெரிக்காவை இதில் உள்ளே அனுமதிக்க கூடாது. அதிர்ச்சியை தாங்க ஏலாது இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்தியாவால் மேலும் அதிர்ச்சிகளை தாங்க ஏலாது. அமெரிக்காவுடன் இந்தியா இணைவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவும் - சீனாவும் அண்டை நாடுகள். நாம் ராஜாங்க ரீதியாக பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் . அதை விடுத்து தேசிய கொள்கைக்கு எதிராக அண்டை நாடுகளை எதிர்க்க கூடாது, என்று சீனா கூறியுள்ளது . https://tamil.oneindia.com/news/international/more-to-lose-than-to-gain-china-warns-india-in-very-strong-words-387114.html டிஸ்கி : அண்ணை என்ன கதைக்கிறார் தெரியுமா.? றோட்டலா எல்லாத்தையும் மூட சொல்லுறார்..☺️..😊