Aggregator

’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

17 hours 43 minutes ago
’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது. செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம். ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம். இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு.,,,,,’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ ‌- மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு. படித்ததில் பிடித்தது.

’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

17 hours 43 minutes ago
’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது. செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம். ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம். இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு.,,,,,’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ ‌- மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு. படித்ததில் பிடித்தது.

வடமராட்சியில் எம்.ஏ. சுமந்திரனின் படம் நிறம்பூசி மறைக்கப்பட்டுள்ளது

18 hours 1 minute ago
இணைந்த வடக்கு கிழக்கு இல்லாமல் அதுவும் குறைந்த பட்ச எங்கள் தீர்வை தர முடியாத சிங்களம் 50 களில் உள்ள மாதிரியே இருக்கிறது . நாம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , உறுதியாக இருக்க வேண்டும் . இது ஆயுத போராடடம் அல்ல சர்வதேசம் அழிப்பதட்கு . தமிழ் மக்கள் எப்பவுமே கூட இருப்பார்கள் எங்கள் தேவைகளை அரசியல் ரீதியாக கேட்பதட்கு .

மோடிக்கு மாற்று யார்? – எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க. கேள்வி

18 hours 1 minute ago
மோடிக்கு மாற்று யார்? – எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க. கேள்வி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார்? என எதிர்க்கட்சிகளிடம் பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளால் மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது என அக்கட்சியின் முத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகா‌ஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். மராட்டிய மாநிலம், புனேயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இக்கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. அப்படியென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்? அவர்களால் மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது. எனவே மோடி இல்லையென்றால் நாட்டில் அராஜகமே இருக்கும். கடந்த காலத்தில் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், தேவேகவுடா தலைமையிலான கூட்டணி அரசுகளை பார்த்திருக்கிறோம். அந்த பலவீனமான அரசுகளால் மக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். மற்றொரு பக்கம் பலம் வாய்ந்ததும், கொள்கைகளின் அடிப்படையிலானதுமான மோடி தலைமையிலான அரசினால் பல நன்மைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். எனவே வரக்கூடிய தேர்தலில், பலம் வாய்ந்த ஒரு அரசு வேண்டுமா? அல்லது பலவீனமான அரசு வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். கொல்கத்தா பொதுக்கூட்டம், எதிர்க்கட்சிகளின் பதற்றத்தைக் காட்டியது. அவர்களால் தேர்தல் அறிக்கையையோ அல்லது குறைந்தபட்ச செயற்திட்டத்தையோ தயாரிக்க ஒரு குழுவைக்கூட அமைக்க முடியவில்லை. காங்கிரஸூம், ஏனைய எதிர்க்கட்சிகளும் ஒரு பலவீனமான அரசையே விரும்புகின்றனர். அப்போதுதான் அவர்களால் ஊழல் செய்ய முடியும். ஆனால் மக்களோ நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும், ஊழலில் தொடர்புடைய யாரையும் விட்டுவிடாத மோடி அரசைப் போன்ற பலம் வாய்ந்த அரசையே விரும்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். http://athavannews.com/மோடிக்கு-மாற்று-யார்-எதி/

கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்!

18 hours 5 minutes ago
கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்! கொங்கோ குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயுலூ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றதாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தநிலையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தூண்டிவிடும் விதமாக தானே ஜனாதிபதி தேர்தலில் அதிகபடியாக வாக்குகளை பெற்றுள்ளதாக ஃபயுலூ குறிப்பிட்டுள்ளார். “தவறான தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியலமைப்பு சதித்திட்டம்” என்று அவர் இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது குற்றம்சுமத்தியுள்ளார். ஏற்கனவே, வெலிக்ஸ் ஷிசெகெடி அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக இன்று அறிவித்தது. அவரது எதிராக இருந்த இரண்டு சவால்கள் முடியறிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கொங்கோவின்-எதிர்க்கட்சி/ அட... இலங்கை அரசியல் போலுள்ளது.

கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்!

18 hours 5 minutes ago
download-2-2-720x450.jpg கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்!

கொங்கோ குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயுலூ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.

அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றதாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தூண்டிவிடும் விதமாக தானே ஜனாதிபதி தேர்தலில் அதிகபடியாக வாக்குகளை பெற்றுள்ளதாக ஃபயுலூ குறிப்பிட்டுள்ளார்.

“தவறான தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியலமைப்பு சதித்திட்டம்” என்று அவர் இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது குற்றம்சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே, வெலிக்ஸ் ஷிசெகெடி அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக இன்று அறிவித்தது. அவரது எதிராக இருந்த இரண்டு சவால்கள் முடியறிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொங்கோவின்-எதிர்க்கட்சி/

அட... இலங்கை அரசியல் போலுள்ளது.

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

18 hours 9 minutes ago
இது தான் நடக்கப்போகின்றது.......இருந்தும் ஒரு நப்பாசை எங்களுக்கு தீர்வு கிட்டும் என்று.....மகிந்தா மீண்டும் ஜனதிபதியாக வந்தவுடன் தமிழ்மக்களுக்கு நல்ல தீர்வை கொண்டுவர புதிய அரசியல் யாப்பை உருவாக்குவார் அத‌ற்கு இன்னுமோர் தமிழ் அரசியல் தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.....

எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் .!

18 hours 21 minutes ago
செல்லூர் ராஜு... அடித்து சொல்வதைப் பார்த்தால், 18 மாதங்களில்... மதுரையை, சிட் னி போல் மாத்தி விடுவார் போல இருக்கே.... ஆமா... அடுத்த 18 மாதங்களுக்கு, இவரின் ஆட்சி தாக்குப் பிடிக்குமா? 😛

எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் .!

19 hours 13 minutes ago

எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ

sellur-raju567-1547972177.jpg

சென்னை: என்னை எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே அங்கு ஒரு பஞ்சாயத்து ரெடியாக இருக்கும்.

அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மதுரை மாவட்டம் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.அவ்வளவுதான் நெட்டிசன்கள் இரவு பகல் பாராது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே #சிட்னி க்கும் பேமஸ் என அமைச்சரை கலாய்த்து வந்தனர்.

அமைச்சர்கள்

இந்நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்றம் இல்லை

அப்போது செல்லூர் ராஜூ பேசுகையில் சில மாதங்களுக்கு முன்பு, மதுரை சர்வதேச தரத்தில் சிட்னியாக மாறும் என்றேன். எல்லாரும் எள்ளி நகையாடினர். சமூக வலைத்தளங்களில் என்னை கொச்சைப்படுத்தினர். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால், நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை.

சுற்றுலா பயணிகள்

6 அடுக்கு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை சர்வதேச தரத்தில் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரியார் பஸ் நிலையத்தில் 6 அடுக்கு அதிநவீன பஸ் நிலையம், மீனாட்சியம்மன் கோயில், நாயக்கர் மகால் போன்ற முக்கிய தலங்கள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளன.

உலக தரத்தில்

பெரியார் பஸ் நிலையத்தின் கீழ் தளத்தில் பெரிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுகிறது. அதனால், சுற்றுலாத் தலங்களுக்கு இனி எளிதாக மக்கள் சென்று வரலாம். சாலைகளும் உலக தரத்தில் மேம்படுத்தப்படுகிறது. 18 மாதங்கள் வைகை ஆறு, மதுரையின் கலாசார மையமாக மாற்றப்படுகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் மதுரை கண்டிப்பாக சிட்னி நகராக மாறும். அதற்கு இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருங்கள் என்றார் செல்லூர் ராஜூ."

https://tamil.oneindia.com/news/chennai/sellur-raju-says-that-madurai-will-become-sydney-18-months/articlecontent-pf348755-339196.html

டிஸ்கி :

sidney1.jpeg

மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் .. 😊 எங்களையும் ஒரு மெல்போர்ன் அளவுக்கு உயர்த்த ஒரு அமைச்சர் இல்லையே . ! 🤔போகட்டும் சிட்னி லெவலுக்கு இல்லையென்றாலும் ஒரு "சட்னி" அளவிற்காவது முன்னேற்றி விடுங்கப்பா 😢 

 

எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் .!

19 hours 13 minutes ago
எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ சென்னை: என்னை எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே அங்கு ஒரு பஞ்சாயத்து ரெடியாக இருக்கும். அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மதுரை மாவட்டம் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.அவ்வளவுதான் நெட்டிசன்கள் இரவு பகல் பாராது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே #சிட்னி க்கும் பேமஸ் என அமைச்சரை கலாய்த்து வந்தனர். அமைச்சர்கள் இந்நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றம் இல்லை அப்போது செல்லூர் ராஜூ பேசுகையில் சில மாதங்களுக்கு முன்பு, மதுரை சர்வதேச தரத்தில் சிட்னியாக மாறும் என்றேன். எல்லாரும் எள்ளி நகையாடினர். சமூக வலைத்தளங்களில் என்னை கொச்சைப்படுத்தினர். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால், நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. சுற்றுலா பயணிகள் 6 அடுக்கு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை சர்வதேச தரத்தில் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரியார் பஸ் நிலையத்தில் 6 அடுக்கு அதிநவீன பஸ் நிலையம், மீனாட்சியம்மன் கோயில், நாயக்கர் மகால் போன்ற முக்கிய தலங்கள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளன. உலக தரத்தில் பெரியார் பஸ் நிலையத்தின் கீழ் தளத்தில் பெரிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுகிறது. அதனால், சுற்றுலாத் தலங்களுக்கு இனி எளிதாக மக்கள் சென்று வரலாம். சாலைகளும் உலக தரத்தில் மேம்படுத்தப்படுகிறது. 18 மாதங்கள் வைகை ஆறு, மதுரையின் கலாசார மையமாக மாற்றப்படுகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் மதுரை கண்டிப்பாக சிட்னி நகராக மாறும். அதற்கு இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருங்கள் என்றார் செல்லூர் ராஜூ." https://tamil.oneindia.com/news/chennai/sellur-raju-says-that-madurai-will-become-sydney-18-months/articlecontent-pf348755-339196.html டிஸ்கி : மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் .. 😊 எங்களையும் ஒரு மெல்போர்ன் அளவுக்கு உயர்த்த ஒரு அமைச்சர் இல்லையே . ! 🤔போகட்டும் சிட்னி லெவலுக்கு இல்லையென்றாலும் ஒரு "சட்னி" அளவிற்காவது முன்னேற்றி விடுங்கப்பா 😢

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்

21 hours 1 minute ago
நீங்கள் இப்படியே சண்டித்தனம் விட்டுக்கொண்டுனிருங்கோ, வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணம் போல் பறிபோய்விடும்.