Aggregator

யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்

1 year 1 month ago
"2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதுடன்.." மூன்று பேர் ஒரு மோட்டார் உருளியில் வந்துள்ளார்கள் என தெரிகின்றது. நிச்சயம் காவல் துறை கண்டுபிடிக்காது இந்த சூத்திரதாரிகளை. அவர்களுக்கு இவர்களை நிச்சயம் 'தெரியாது'.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துக் கருத்துக் கூறிய போது காஷ்மீரை சுட்டிக்காட்டிய மஹிந்த

1 year 1 month ago

வட இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பிறகு முதற்தடவையாக அதுகுறித்து அரசியல் ரீதியில் கருத்துத் தெரிவித்த இலங்கை அரசியல் தலைவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவே.

mhinda_rajabaksha.jpg

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான சாத்தியப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த போது, இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக் கவனத்திற்கொண்டே இலங்கையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வீரகேசரி நாளிதழுக்கு நேற்றைய தினம் ராஜபக்ஷ வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி இந்தியாவின் பிரபல தேசிய தினசரிகளில் ஒன்றான 'த இந்து' நேற்று செய்தியொன்றை வெளியிட்டிருக்கிறது.

நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி பின்வருமாறு கூறியிருக்கிறார்:

'இருவகையான அபிப்பிராயங்கள் தற்போது நிலவுகின்றன. சிலர் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர்.

 வேறு சிலர் சமஷ்டி அடிப்படையிலான ஏற்பாடு ஒன்று வேண்டுமென விரும்புகின்றார்கள். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வே போதுமானது என்று இன்னும் சிலர் கூறுகின்றார்கள். 

ஆனால் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் பாருங்கள். இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டு தான் நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது'.

https://www.virakesari.lk/article/62396

திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது…

1 year 1 month ago
"கொலையுண்ட ஏனைய மாணவர்களின் குடும்பத்தவர்களும் சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர்களும் கூட இலங்கையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாலும், சாட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டின் குற்றச்செயல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது." இது நடக்காது. சர்வதேசத்தையும் பாதிக்கப்பட்ட உறவுகளின் எதிர்பார்ப்புக்களை இழுத்தடிக்கும் நோக்கமே இதில் உள்ளது.

இனித்திடும் இனிய தமிழே....!

1 year 1 month ago
நல்லதொரு தமிழ் சிந்தனை.கடந்து சென்று விட்ட தமிழனின் பண்பும் வீரமும்.......! 👍 இது முதலாவது , மேலுள்ளது இரண்டாவது அவசியம் கருதி இணைத்துள்ளேன்.....!

கணனி பயில்வோம் August 09, 2019

1 year 1 month ago
கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உதவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் நாமாகவே கணனியில் நிறுவிக்கொள்ள முடியும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன். ” நன்றி ” தொகுப்பு. ஆசிரியர் சி.பிரதீபன் விழிப்புலன் மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் தகவல்தொழிநுட்பத்தின் பங்கு அறிமுகம் உலகில் வாழும் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு தொழில்நுட்பம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்று வளர்ச்சியடைந்து வருகின்றது. அதில் பிரதான இடத்தை வகிக்கின்ற கணனியும் அதனை சார்ந்த இலத்திரணியல் சாதனங்களும் விழிப்புலன் மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைஇங்கு பார்ப்போம். கணனி என்பது குறித்த கட்டளையின் படி செயற்படத்தக்கதும் தரவுகளை கட்டளைகளாக மாற்றக்கூடியதும் சேமிப்புத் திறன் உடையதும் பின்னர் அவற்றை மீள வழங்கக்கூடியதுமான ஓர் இலத்திரணியல் சாதனமே கணனி ஆகும்.இது வன்பொருள், மென்பொருள், உயிர்ப்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு எனவும் கூறலாம். கணனியையும் அதன் பாவணையாளரையும் (user) இணைக்கும் ஒரு ஊடகமாகவே மென்பொருட்கள் (software) தேவைப்பட்டன. இவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க புதிய பல மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இவை அனைவருடைய பாவனைக்கும் உகந்ததாகவும் இலகுவான முறையில் கையாளத் தக்கதாகவும் வெளிவந்துள்ளன.அனைவரும் பாவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உருவாக்கப்படும் மென்பொருட்களில் சில, விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்டவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 01. திரைப் படிப்பான்(Screen Readers) 02. ஸ்கான் செய்து வாசிப்பது (Scanning and Reading Software) 03. இணையத் தேடல் பகுதியை வாசிப்பது (Internet Browser Readers) 04. பல வகைப்பட்ட மென்பொருட்கள் (Miscellaneoussoftware’s) அடுத்து நாம் மேற்குறிப்பிட்ட வகைகள் தொடர்பாக விரிவாக ஆராய்வோம் திரைப்படிப்பான் (Screen Reader) இம் மென்பொருள் கணனியை பாவிக்கும் போது அதன் ஒவ்வொரு விசையினதும் செயற்பாட்டுக்கு ஏற்ப ஒலியின் உதவியுடன் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும். அதாவது திரையில் தோன்றுபவற்றை ஒலி வடிவில் எமக்கு அறியத் தருகின்றன. தற்போது திரைப்படிப்பானாக பின்வரும் மென்பொருள்கள் உலகலாவிய விழிப்புல மாற்றாற்றல் உடையவர்களால் கணனியில் நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. Windows eye, Hal, Jaws, Nvda, System Access (Windows), Apple VoiceOver போன்றவை அவற்றுல் சிலவாகும். தொடரும் https://vizhichchaval.blogspot.com/2019/08/blog-post_9.html?spref=fb&fbclid=IwAR1vE-z2vubija1srdD6xYL5K8MyslJXFQff6v3tKDo2o7CHuxvuiW-e3is

உடன்கட்டை ஏறுதலும் இந்துமதமும்

1 year 1 month ago
குடிலுக்குள் நுழைந்ததும் மாத்ரி “அக்கா” என மெல்லிய குரலில் அழைத்தாள். குந்தியை அக்குரல் காரணமின்றி நடுங்கச்செய்தது. “நான் மணக்கோலம்பூண்டு எரிசெயலுக்குச் செல்ல வேண்டும்” என்றாள். குந்தியின் உடல் சிலிர்த்தது. பின்னால் நின்றிருந்த சேடியர் உடல்களிலும் ஓர் அசைவெழுந்து அணிகளும் உடைகளும் ஒலித்தன. குந்தி தன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தியபடி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். கண்களால் அவளை விலக்கி “நான் அவருடன் செல்வதே முறை. முன்பு நிமித்திகர் உடலில் வந்த கிந்தமர் சொன்ன வரிகளை இப்போது புரிந்துகொள்கிறேன். அவருடன் சென்று அவர் விண்நுழையும் வாயில்களை நான்தான் திறந்துகொடுக்கவேண்டும்” என்றாள் மாத்ரி. “அவருடன் அரியணை அமர்ந்தவள் நான். அரசமுறைப்படி சிதையேறவேண்டியவளும் நானே” என்று குந்தி சொன்னாள். “அரசர் எங்கு சென்றாலும் தொடர்ந்து செல்லவேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றியவள் நான்.” ஆனால் மாத்ரி திடமான குரலில் “நீங்கள் இல்லையேல் நமது மைந்தர்கள் உரிய முறையில் வளரமுடியாது அக்கா. வரப்போகும் நாட்களில் அவர்களுக்குரிய அனைத்தையும் நீங்கள்தான் பெற்றுத்தரவேண்டும். அரசரும் நானும் ஆற்றவேண்டியவற்றையும் சேர்த்து ஆற்றும் வல்லமை உங்களுக்கு உண்டு. என்னுடைய மைந்தர்களை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் என்றும் தங்கள் தமையன்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். அன்னையில்லாததை அவர்கள் ஒருகணமும் உணரப்போவதுமில்லை” என்றாள். தன்னுடைய சொற்களனைத்தும் மாத்ரியிடம் வீணாகிவிடும் என்று குந்தி உணர்ந்தாள். “வேண்டாம் தங்கையே. அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட்டும்தான். நான் காஸ்யபரிடமே கேட்டுச்சொல்கிறேன்” என்று சொல்லி அனகையை நோக்கித்திரும்பினாள். மாத்ரி “அதை நானும் அறிவேன் அக்கா. நான் நூல்நெறி கருதி இம்முடிவை எடுக்கவில்லை” என்றாள். “உனக்கு பெருந்தோள்கொண்டவனாகிய தமையன் இருக்கிறான். இரு அழகிய மைந்தர்கள் இருக்கிறார்கள். நீ உன் விழிகளால் அவர்களின் வெற்றியையும் புகழையும் பார்க்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்…” என்றாள் குந்தி. “நான் என் முடிவை எடுத்துவிட்டேன் அக்கா. இவ்வுலகிலிருந்து செல்லும் ஒவ்வொருவரும் முடிக்கப்படாதவையும் அடையப்படாதவையுமான பல்லாயிரம் முனைகளை அப்படியே விட்டுவிட்டு அறுத்துக்கொண்டுதான் செல்கிறார்கள். எவர் சென்றாலும் வாழ்க்கை மாறிவிடுவதுமில்லை.” குந்தி அவளுடைய முகத்தையே நோக்கினாள். அவள் அதுவரை அறிந்த மாத்ரி அல்ல அங்கிருப்பது என்று தோன்றியது. உடலென்னும் உறைக்குள் மனிதர்கள் மெல்லமெல்ல மாறிவிடுவதை அவள் கண்டிருக்கிறாள். அப்போது அறியாத தெய்வமொன்று சன்னதம் கொண்டு வந்து நிற்பதைக் கண்டதுபோலிருந்தது. அதை உணர்ந்ததுமே அவள் எடுத்திருக்கும் முடிவை முன்னோக்கிச்சென்று கண்முன் நிகழ்வாகக் கண்டுவிட்டது அவள் அகம். உடல் அதிர “இல்லை, நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. என் ஒப்புதல் ஒருபோதும் இதற்கில்லை” என்று கூவினாள். “அக்கா, உங்கள் ஒப்புதலின்றி நான் சிதையேறமுடியாது. ஆனால் நான் மேலும் உயிர்வாழமாட்டேன் என்று மட்டும் உணருங்கள்” என்றாள் மாத்ரி. அவள் குரல் உணர்ச்சியேதுமில்லாமல் ஓர் அறிவிப்புபோலவே ஒலித்தது. “நீ சொல்வதென்ன என்று உணர்ந்துகொள் தங்கையே. நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் தீராத பெரும்பழியையும் துயரத்தையும் அளித்துவிட்டுச் செல்கிறாய்…” என்று சொன்னதுமே குந்தி அக்கணம் வரை தடுத்துவைத்திருந்த உணர்வுகளை மீறவிட்டாள். அவள் கைகளைப்பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு “மாத்ரி, நீ அரண்மனைக்கு வந்த நாட்களில் ஒருமுறை என் கைகளைப்பற்றிக்கொண்டு என்னிடம் அடைக்கலம் புகுவதாகச் சொன்னாய். அன்றுமுதல் இக்கணம் வரை நீ எனக்கு சபத்னி அல்ல, மகள். உன்னை நான் எப்படி அதற்கு அனுப்புவேன்? அதன்பின் நான் எப்படி வாழ்வேன்?” என்றபோது மேலும் பேசமுடியாமல் கண்ணீர் வழிந்தது. அவளை அப்படியே இழுத்து தன் உடலுடன் சேர்த்து இறுக அணைத்தாள். உடல்நடுங்க கைகள் பதற அவளை நெரித்தே கொன்றுவிடுவதுபோல இறுக்கி “மாட்டேன்… நீ என்னைவிட்டுச்செல்ல நான் ஒப்பமாட்டேன்” என்றாள். “அக்கா, நான் சொல்வதைக்கேளுங்கள்… நான் உங்களிடம் மட்டும் பேசவேண்டும்” என்றாள் மாத்ரி மூச்சடைக்க. குந்தி அவளை விட்டுவிட்டு விலகி அப்படியே பின்னகர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தன் முகத்தை மூடிக்கொண்டாள். வெம்மையான கண்ணீர் தன் கைவிரல்களை மீறி வழிவதை அறிந்தாள். நெடுநாளைக்குப்பின் தன் கண்ணீரை தானே அறிவதை அவள் அகம் உணர்ந்தது. அந்தத் துயரிலும் அவளை அவளே கண்காணித்துக்கொண்டிருப்பதை அறிந்தபோது அவள் கண்ணீர் குறைந்தது. தன் மேலாடையால் முகத்தைத் துடைத்தாள். சேடியர் விலகியதும் மாத்ரி தரையில் அமர்ந்து அவளுடைய மடியில் தன் கைகளை வைத்து ஏறிட்டுப்பார்த்தாள். “அக்கா, அரசருடன் நான் சென்றேயாகவேண்டும். எனக்கு வேறுவழியே இல்லை” என்றாள். தெளிந்த விழிகளுடன் தடுமாறாத குரலில் “அவர் தன் காமத்தை முழுமைசெய்யவில்லை. நான் செல்லாமல் அவர் சென்றால் அவருக்கு நீத்தாருலகு இல்லை. வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே இருக்கும் வெளியில் ஊழிக்காலம் வரை அவர் தவிக்கவேண்டும். அதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? இது என் கடமை…” என்றாள். குந்தி தன் நடுங்கும் கரங்களால் மார்பைப் பற்றிக்கொண்டு பொருளில்லாமல் பார்த்தாள். “நான் அவருடன் எரிந்த மறுகணமே அவரை என்னுடன் இணைய முடியாமல் தடுத்த இந்த இரு வீண்உடல்களையும் துறந்துவிடுவோம். அதன்பின் எங்களுக்குத் தடைகள் இல்லை. எங்களை வாழ்த்துங்கள் அக்கா.” குந்தி தன் கைகளை அவள் தலைமேல் வைத்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க விம்மலுடன் ஏதோ சொல்லவந்தாள். “வாழ்த்துங்கள்” என்றாள் மாத்ரி. கம்மிய குரலில் “எனக்காகக் காத்திரு, நானும் வந்துவிடுகிறேன்” என்றாள் குந்தி. பின்னர் குனிந்து மாத்ரியை அள்ளி அணைத்துக்கொண்டாள். https://m.jeyamohan.in/54445#.XU6vdyXTVR4

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

1 year 1 month ago
ஏராளன்.... இலவச மனைவி, என்ற படியால்தான், பஸ் ரிக்கற் எல்லாம், வித்து முடிஞ்சது. மனைவிக்கு.... இலவசம் என்றால், பஸ் கண்ணாடி எல்லாம், கணவன்மாரால்... அடித்து நொருக்கப் பட்டிருக்கும். உங்கள் கேள்வியின்... அழகிய தமிழ் சூட்சுமத்தை, ரசித்தேன்.