Aggregator

போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள்

1 year 1 month ago

Representational Image

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு முன்னர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த இதோ சில குறிப்புகள்.

செயல்திறன் மேம்பட:

# 01. நமது போனின் முகப்புத் திரையில் (Home Screen -ல்) ஆப்ஸ்களாக வைத்து குவிக்காமல், அதை வெறுமனே வைப்பது அல்லது மிக முக்கியமான ஆப்களை மட்டும் வைத்துக்கொள்வது சிறந்தது. இதன்மூலம், நம் மொபைல் செயல்திறனில் ஒரு பெரிய வித்தியாசம் கிடைக்கும்.

# 02. மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது நமது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அவசியம்.

# 03. தூசிகள் மற்றும் அழுக்குகள் நமது போனை பாதிக்கக்கூடும் என்பதால், அடிக்கடி மென்மையான துணியால் சுத்தம் செய்யலாம்.

# 04. அழுக்குகள், கீறல்கள், தூசிகள் போன்றவற்றில் இருந்து நமது போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல தரமான, உறுதியான மொபைல் கவர்களைப் பயன்படுத்த வேண்டும்.

Representational Image
 
Representational Image Unsplash

# 05. வாரத்திற்கு ஒருமுறை மொபைலை Restart செய்வது நல்லது. மொபைலை அதிகம் பயன்படுத்துவோர், வாரம் இருமுறை Restart செய்யலாம்.

# 06. மொபைல் நிறுவனம் அளிக்கும் Software Update-களையும், அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களின் Update-களையும் உடனுக்குடன் செய்துவிடுவது புத்திசாலித்தனம்.

# 07. நேரம் கிடைக்கும்போது நமது போனின் User Manual -ஐ ஒருமுறையாவது படித்துப் பார்ப்பது நல்லது. மொபைலில் தேவையற்ற Widget களை நீக்கிவிடுவது சிறந்தது.

# 08. அதிக சூடு, குளிர்ச்சி மற்றும் காந்தவிசை உள்ள இடங்களில் நமது போனை வைத்திருப்பது நல்லதல்ல.

# 09. Automatic Screen Lock Time செட் செய்துகொள்வது சிறந்தது.

# 10. நமக்கு மிகவும் பயனுள்ள ஆப்ஸ்களின் Premium மற்றும் Beta Version-களை உபயோகிக்கலாம்.

சேமிப்புத் திறன் மேம்பட:

# 01. போனில் நாம் அடிக்கடி பயன்படுத்தாத, தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை Uninstall செய்து விடுவது நல்லது. Uninstall செய்யும் முன்பு செட்டிங்கில் ஆப் டேட்டாவை க்ளீயர் செய்துவிட வேண்டும்.

# 02. நாம் ஆப்களை நிறுவும்போது அல்லது அவை இயங்கும்போது, அவை குப்பைக் கோப்புகளை தற்காலிக சேமிப்பில் விட்டுவிடும். அவற்றை (Clear Cache) அவ்வப்போது அழித்துவிட வேண்டும்.

# 03. தரமான SD கார்டுகளைப் பயன்படுத்தி நமது சேமிப்பிடத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும்.

# 04. Light Version கிடைக்கும் ஆப்ஸ்களில், அவை நமக்கு போதுமானதாய் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்.

Representational Image
 
Representational Image Pixabay

# 05. போனின் மற்றும் ஆப்ஸ்களின் Cloud Storage களைப் போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

# 06. நாம் பயன்படுத்த மாட்டோம் என்றால், நமது போனின் Animation -களை Developer Option-ல் சென்று ஆஃப் செய்துவிடலாம்.

பாதுகாப்பு மேம்பட:

# 01. நமது போனை பாஸ்வேர்ட் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் லாக் செய்துகொள்வது பாதுகாப்பானது. இதனால் ஹேக்கர்களிடமும், திருடர்களிடமும் நமது விவரங்கள் செல்வது ஓரளவு தடுக்கப்பட வாய்ப்புண்டு.

# 02. பொது வெளியில் கிடைக்கும் இலவச WiFi-களைத் தவிர்த்து விடுவது சிறந்தது.

# 03. பைக்கில் செல்லும்போது தலையை சாய்த்தவாறும் அல்லது ஹெல்மெட்டினுள் போனை வைத்தும் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 04. நாம் பயன்படுத்தும் ஹெட்போன்கள் தரமானவையாக இருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது அவற்றைத் துடைத்து சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

# 05. நாம் ஒரு புதிய ஆப்பை பதிவிறக்கி நிறுவ விரும்பும்போது, நம்பகமான Apps Store-களில் இருந்து மட்டுமே ஆப்ஸ்களை Download செய்ய வேண்டும்.

# 06. நமது பல்வேறு பயன்பாடுகளின் Username மற்றும் Password ஆகியவற்றை அவ்வப்போது மாற்றுவது சிறந்தது.

Representational Image
 
Representational Image Unsplash

பேட்டரி திறன் மேம்பட:

# 01. இரவு நேரங்களில் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

# 02. போன் மெமரியைப் பொறுத்தவரை எப்போதும் கால் பங்கு (25%) காலியாக வைத்து இருப்பதே சிறந்தது.

# 03. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு முன்னர் நமது அனைத்து விவரங்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

# 04. தேவையற்ற ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்த நிலையில் வைக்கலாம்.

# 05. மொபைல் பேட்டரியை 100% சார்ஜ் செய்யாமலும்,10%-க்கு கீழ் இறங்கிவிடாமலும் பார்த்துக்கொள்வது சிறந்தது.15% முதல் 95% வரையிலான அளவில் பேட்டரியைப் பராமரிப்பது சிறந்தது.

# 07. இணையதளப் பயன்பாடு இல்லாதபோது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

# 08. அதிக பேட்டரி சக்தியை உபயோகிக்கும் பயன் குறைந்த ஆப்களை நீக்கிவிடுவது சிறந்தது.

Representational Image
 
Representational Image Unsplash

# 09. தேவைப்படும் போது Battery Saver வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

# 10. தரமான ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியின் திறனை அதிகரிக்கும்.

உடல்நலம் மேம்பட:

# 01. மொபைல் போனை சட்டைப் பையில் வைப்பதைவிட பேன்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது.

#02. Vibration அதிக ரேடியேஷனை வெளிப்படுத்த வாய்ப்புண்டு என்பதால், முடிந்தவரை நமது மொபைலை Vibration Mode -ல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

# 03. எப்போதும் நமது மொபைல்போனை இடதுபுறம் காதில் வைத்துப் பேசுவது நல்லது.

# 04. இரவு தூங்குவதற்கு 1 மணிநேரம் முன்பும், காலையில் எழுந்ததும் 1 மணி நேரம் வரையிலும் நாம் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

# 05. வாரம் ஒருநாள் ஸ்மார்ட் போனை ‘தொடா’ விரதம் இருப்பது சிறந்தது.

# 06. தூங்கும்போது படுக்கை அருகில் மொபைல் போனை வைக்காமல் தூரமாக அல்லது வேறு அறையில் வைப்பது நல்லது.

# 07. சமையலறை மற்றும் பாத்ரூமிற்குள் மொபைல் போனை கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 08. தேவையான அளவு Screen Brightness மற்றும் எழுத்துகளின் அளவு (Font Size) மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

Representational Image
 
Representational Image

# 09. அதிக வெளிச்சம் மற்றும் இருட்டில் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

# 10. ஒருநாளின் குறிப்பிட்ட சில நேரங்களை மொபைல் போன் பயன்படுத்தா நேரம் என நமக்கு நாமே வரையறுத்துக் கொள்ளலாம்.

அகன் சரவணன்

https://www.vikatan.com/technology/tech-news/tips-to-use-smartphone-in-a-smarter-way

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

1 year 1 month ago
`மீண்டும் இறைச்சி சந்தையில் கொரோனா; மூடப்பட்ட மார்க்கெட்’ - சீனாவில் அதிகரிக்கும் வைரஸ் பரவல் சீனாவின் பெய்ஜிங் நகரில் இருக்கும் மொத்த விற்பனை சந்தை ஒன்றில் வேலை செய்த பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் இன்று உலகம் சந்தித்து வரும் மோசமான நிலைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனாதான். கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத் தலைநகரான வுகானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா பரவியதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டு அங்கு மக்கள் நடமாடக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஹூபேவை தவிர சீனாவின் பிற இடங்களில் வைரஸ் பரவல் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. சீனா AP 3 மாத போராட்டத்துக்குப் பிறகு சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கில் முழுத் தளர்வு அறிவிக்கப்பட்டது. சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது அங்கு மீண்டும் கொரோனா வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தமுறை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங் நகரில் இருக்கும் ஜின்ஃபாடி (Xinfadi) என்ற மொத்த விற்பனை சந்தை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் இறைச்சி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இருவர், அந்த சந்தைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மூலம் சந்தை முழுவதும் வைரஸ் பரவியிருக்கலாம் என பெய்ஜிங் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு எப்படி தொற்று உறுதியானது எனத் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் பெய்ஜிங்கில் நேற்று ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 7 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியாகியுள்ளதும் அவர்களில் 6 பேர் பெய்ஜிங்கில் இருக்கும் சந்தைக்குச் சென்று வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. சீனா AP முதன்முறையாக சீனாவில் கொரோனா பாதிப்பு உருவாகி மீண்டும் சந்தைகள் திறக்கப்பட்டபோது இந்த ஜின்ஃபாடி சந்தையில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பெய்ஜிங் மட்டுமல்லாது சீனாவின் பெரும்பாலான நகரங்களில், ஆடு, மாடு இறைச்சியின் மொத்த விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் தற்போது அந்த சந்தைக்குச் சென்ற பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், ஜின்ஃபாடி சந்தை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. மேலும் சந்தையைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுக் குடியிருப்புகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. அந்தச் சந்தையைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சந்தையில் இருக்கும் இறைச்சிகளை வெளியேற்றி வருகின்றனர். அதேபோல் இந்தச் சந்தையிலிருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் எந்த ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளிலும் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜின்ஃபாடி சந்தையில் பணி செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து அவர்களின் குடும்பத்தினரைக் கண்காணிக்கவும் பெய்ஜிங் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. https://www.vikatan.com/news/international/beijing-wholesale-market-shut-amid-new-covid-19-cases

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!

1 year 1 month ago
கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ?

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

1 year 1 month ago
அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்

’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை

1 year 1 month ago
’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை Johnsan Bastiampillai / 2020 ஜூன் 13 ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்.... பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்து பீரங்கிகள் வரையிலான ஆயுதங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் களைத்துப்போன, பாலஸ்தீன இளைஞர்கள் கைகளில் எடுத்த புதுவகை ஆயுதம்தான் வீடியோ கமெரா. குண்டுகளுக்கு அஞ்சாத இஸ்ரேலிய படைகள், இந்தப் புதிய ஆயுதத்துக்கு அஞ்சினர். இஸ்ரேலியரின் மனித உரிமை மீறல்களை, ஆக்கிரமிப்புகளை ஒளிப்பதிவு செய்வதற்காக, பாலஸ்தீன இளைஞர்கள் கமெராவும் கையுமாக அலைந்தார்கள்; இப்போதும் அலைகிறார்கள். இஸ்ரேலில் சமாதானம் மலரவேண்டும் என்பதற்காகப் பாடுபடும், நெதர்லாந்தைச் சேர்ந்த மனிதஉரிமை அமைப்பான 'பி'ரி செலம்' (B'T Selem) இந்தப் போராட்டத்துக்கு நிதியுதவி வழங்கி, ஆயிரக்கணக்கான வீடியோ கமெராக்களை, பாலஸ்தீன இளைஞர், யுவதிகளிடம் கையளித்தது. இந்தப் 'படப்பிடிப்புப் போராட்டம்' காரணமாக, பாலஸ்தீனத்துக்கு பல நல்ல விளைவுகள் நடந்தேறின. இனச்சுத்திகரிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் சமூகம் ஒன்றில், படப்பிடிப்புப் போராட்டத்தின் தேவை, அத்தியாவசியமானதாக உணரப்படுகின்றது. ஓரினம் அடக்குமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் உட்படுகின்றது என்றால், அது குறித்த உண்மை, உலக சமுதாயத்தின் முன் கொண்டுசெல்லப்பட வேண்டும். யாருக்கு எதிராகப் போராடுகின்றோம், எதற்காகப் போராடுகின்றோம், போராட்டத்தின் இறுதி நோக்கத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் சக்திகள் எவை, போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் காரணிகள் யாவை போன்றவையே, ஒரு போராட்டத்தின் தன்மை, அதன் செல்நெறிகள் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. இலங்கையில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் கடந்த காலத்தில், அஹிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் எனத் தொடர்ந்து, தற்போது அஹிம்சையில் வந்து நிற்கின்றது. இந்நிலையில், தற்போது ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுடன், நடந்தேறும் உண்மைகளை வெளிக்கொணரும் வகையிலான ஆதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த ஆதாரங்கள் காணொளிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவில், பொலிஸாரின் வன்முறையால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட்டுக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்று வரும், 'கறுப்பு உயிர்களும் முக்கியம்' என்ற உலகளாவிய போராட்டத்துக்கு அடிப்படைக் காரணியாக இருந்தது, 17 வயது உயர்தரப் பாடசாலை மாணவியால் எடுக்கப்பட்ட ஒரு சாதாரண காணொளி மட்டுமே! டர்நெல்லா ஃபிறெஷர் என்ற மாணவி, தனது நண்பனுடன் அந்தச் சந்தை வளாகத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான், பொலிஸார் அந்தக் கறுப்பினத்தவரைக் கைது செய்யும் காட்சியைக் கண்டு, அதைப் பத்து நிமிடங்கள் படமாக்கியுள்ளார். அதில் எட்டு நிமிடங்களும் 46 விநாடிகளும் புளொய்ட் மரணிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகளைப் படமாக்கிய அவர், அதை முகப்புத்தகத்தில் உடனடியாகவே பதிவேற்றியிருந்தார். இந்தக் காட்சி, அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் புரட்சிகளைச் செய்யும் என்று கடுகளவும் எண்ணியிருந்திருக்க மாட்டார். எந்த ஆயுதத்துக்கும் இல்லாத வலிமை, இந்தக் காணொளிக்குக் கிடைத்துள்ளது. 1972 ஜுன் ஒன்பதாம் திகதி, தெற்கு வியட்நாமில் தராங்பாங் என்ற கிராமத்தில் வீசப்பட்ட 'நெப்பொம்' என்ற குண்டு வெடிக்க வைக்கப்பட்டதில், உடல்முழுவதும் தீக்காயங்களுடன் தனது இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, முகத்தில் பீதியுடன் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் ஒரு படம், 19 வருட வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய காரணியாக இருந்தது. இலங்கையில். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் காட்சிப்படுத்தப்பட்ட பல காணொளிகளை கொண்டு 'சனல்-4' தயாரித்த குறும்படங்கள், ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு உதவி இருந்தன. இந்தக் காணொளிகள் உலக மக்களின் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் ஆழமானவை. யுத்த வலயத்தில் இருந்த டொக்டர்கள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள், மதகுருமார் போன்றோர் கண்கண்ட சாட்சியங்களாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, இந்தக் காணொளிகள் ஏற்படுத்திய தாக்கம் மிகக் கடுமையானவையாக இருந்தன. சிங்களப் படைவீரர்கள், தமது திறன்பேசி, கமெராக்கள் மூலமாகப் பொழுதுபோக்காகவும் தமது நண்பர்களுக்கு அனுப்பும் முகமாகவும் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள், 'சனல்-4' மூலம் வெளிஉலகுக்கு அம்பலமாகி விட்டன. இந்தக் காணொளிகள் போலியானவை என நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தப் போர்க்குற்றங்கள் விடுதலைப்புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டன என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படும் வகையில், சிங்களத்தில் இருந்த குரல்ப் பதிவுகளை, தமிழில் பேசுவது போன்று மாற்றி. உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது. பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையே, ஆட்சி அமைப்பதற்கான துரும்புச் சீட்டாக வைத்துள்ள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களின் இன நெருக்கடி தொடர்பான உண்மைகளை ஒருபோதும் எடுத்துச் சொன்னதில்லை; சொல்லப் போவதுமில்லை. உண்மையில், சிங்கள மக்கள் ஒற்றைப் பரிமாண சிந்தனைக்குள் மூடிவைக்கப்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குத் தமிழர்கள் ஏன் போராடுகின்றார்கள், என்ற உண்மை தெரியவராமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, நாட்டைப் பிரிப்பதற்கான போராட்டமாகப் பார்க்கின்றார்கள். அந்தளவுக்கு அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை, சிங்கள மக்கள் மத்தியில் வளர்ப்பதன் ஊடாக, அந்தச் சமூகத்தைத் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருப்பதே சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் நோக்கமாகும். சிங்கள சமூகத்திடம், இனநெருக்கடி தொடர்பான உண்மைகளைச் சொல்ல விரும்பும் எவரையும், இலங்கை பேரினவாத அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுகளை முன்வைத்திருந்தார். இதே தடத்தில் பயணித்த இடதுசாரி அரசியல்வாதிகள், குறிப்பாக வாசுதேவ நாணயக்கார போன்றோர் பின்னர் தடம்மாறி இருந்தமைக்குக் காரணம், உண்மைகளைச் சொல்ல அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை என்பதுடன் உண்மைகளைச் சொல்பவர்களால் அதிகாரத்துக்கும் வர முடியாது என்பதாகும். இன்றைய நிலையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கான நியாயத் தன்மையை, இரண்டு தரப்பினருக்கு மத்தியில் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். முதலாவது, சிங்கள சாதாரண பொதுமக்கள்; இரண்டாவது, சர்வதேசங்களில் வாழும் சாதாரண பொது மக்கள். இந்த இரண்டு தரப்பினருக்கும் தமிழ் மக்கள், இன்று எவ்வாறு ஒடுக்கப்படுகின்றார்கள், அவர்களின் நிலங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகின்றன, வளங்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன, ஆயுதப் படையினர், ஆயுதமுனையில் தமிழ் மக்களை எவ்வாறு அச்சுறுத்துகின்றார்கள் போன்ற அனைத்துச் சம்பவங்களும் காணொளிகள் மூலம், ஆதாரப்படுத்தப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்களையும் அழிவுகளையும் முழுமையாகப் புகைப்படங்களாகவோ, காணொளிகளாகவோ இனி வெளியிட்டுவிட முடியாது. ஆனால், இனி, தமிழர்களுக்கு எதிராக இடம்பெறப்போகும் கொடூரங்களையும் அச்சுறுத்தல்களையும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் ஆதாரத்துடன் வெளிப்படுத்த முடியும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், உலக நாடுகள் தமிழர்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு தருவார்கள் என நம்பி இருப்பதைவிட, பொதுமக்கள் தாமாகவே, தமது பிரச்சினையை எதிர்கொண்டு, தீர்வுகாண முயற்சிக்க வேண்டும். இதற்கு நமது கையில் இருக்கும் சாதாரண திறன்பேசியே, நமக்குச் சிறந்த ஆயுதமாக இருக்கும். அதை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகின்றோம் என்பது, நம் ஒவ்வொருவரின் கையில் இருக்கிறது. நமது பங்கை நாம் செய்தால், நம் நிலையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால், இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, அச்சுறுத்தல் விடுத்த காணொளி, அரசியலில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோன்ற அச்சுறுத்தல்கள் எத்தனை எத்தனை தினமும் தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற அச்சுறுத்தல்கள், அவமதிப்புகள் என யாவும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பத்தியின் நோக்கமாகும். உண்மை வெளிக்கொணரப்படுவதன் மூலமே நீதியைத் தேட முடியும். நீதியின் மூலமே, அமைதியைத் தேட முடியும். ஆகவே, உண்மைகள் வெளிக்கொணரப்படுவது காலத்தின் தேவை கருதி முக்கியத்துவம் பெறுகின்றன. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/படப்பிடிப்பு-என்ற-போராட்டத்தின்-தேவை/91-251851

Johnsan Bastiampillai   / 2020 ஜூன் 13

ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்....

பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என,  பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. 
அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்து பீரங்கிகள் வரையிலான ஆயுதங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் களைத்துப்போன, பாலஸ்தீன இளைஞர்கள் கைகளில் எடுத்த புதுவகை ஆயுதம்தான் வீடியோ கமெரா. 

குண்டுகளுக்கு அஞ்சாத இஸ்ரேலிய படைகள், இந்தப் புதிய ஆயுதத்துக்கு  அஞ்சினர். இஸ்ரேலியரின் மனித உரிமை மீறல்களை, ஆக்கிரமிப்புகளை ஒளிப்பதிவு செய்வதற்காக,  பாலஸ்தீன இளைஞர்கள் கமெராவும் கையுமாக அலைந்தார்கள்; இப்போதும் அலைகிறார்கள். 

இஸ்ரேலில் சமாதானம் மலரவேண்டும் என்பதற்காகப் பாடுபடும், நெதர்லாந்தைச் சேர்ந்த மனிதஉரிமை அமைப்பான 'பி'ரி செலம்' (B'T Selem) இந்தப்  போராட்டத்துக்கு நிதியுதவி வழங்கி, ஆயிரக்கணக்கான வீடியோ கமெராக்களை, பாலஸ்தீன இளைஞர், யுவதிகளிடம் கையளித்தது. இந்தப் 'படப்பிடிப்புப் போராட்டம்' காரணமாக, பாலஸ்தீனத்துக்கு பல நல்ல விளைவுகள் நடந்தேறின. 

இனச்சுத்திகரிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் சமூகம் ஒன்றில், படப்பிடிப்புப் போராட்டத்தின் தேவை, அத்தியாவசியமானதாக உணரப்படுகின்றது. ஓரினம் அடக்குமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் உட்படுகின்றது என்றால், அது குறித்த உண்மை, உலக சமுதாயத்தின் முன் கொண்டுசெல்லப்பட வேண்டும். 

யாருக்கு எதிராகப் போராடுகின்றோம், எதற்காகப் போராடுகின்றோம், போராட்டத்தின் இறுதி நோக்கத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் சக்திகள் எவை, போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் காரணிகள் யாவை போன்றவையே, ஒரு போராட்டத்தின் தன்மை, அதன் செல்நெறிகள் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. 

இலங்கையில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் கடந்த காலத்தில், அஹிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் எனத் தொடர்ந்து, தற்போது அஹிம்சையில் வந்து நிற்கின்றது. இந்நிலையில், தற்போது ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுடன், நடந்தேறும் உண்மைகளை வெளிக்கொணரும் வகையிலான ஆதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த ஆதாரங்கள் காணொளிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 

அமெரிக்காவில், பொலிஸாரின் வன்முறையால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட்டுக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்று வரும், 'கறுப்பு உயிர்களும் முக்கியம்' என்ற உலகளாவிய போராட்டத்துக்கு அடிப்படைக் காரணியாக இருந்தது, 17 வயது உயர்தரப் பாடசாலை மாணவியால் எடுக்கப்பட்ட ஒரு சாதாரண காணொளி மட்டுமே! 

image_c707ef8a7d.jpg

டர்நெல்லா ஃபிறெஷர் என்ற மாணவி, தனது நண்பனுடன் அந்தச் சந்தை வளாகத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான், பொலிஸார் அந்தக் கறுப்பினத்தவரைக் கைது செய்யும் காட்சியைக் கண்டு, அதைப் பத்து நிமிடங்கள் படமாக்கியுள்ளார். அதில் எட்டு நிமிடங்களும் 46 விநாடிகளும் புளொய்ட் மரணிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகளைப் படமாக்கிய அவர், அதை முகப்புத்தகத்தில் உடனடியாகவே பதிவேற்றியிருந்தார். இந்தக் காட்சி, அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் புரட்சிகளைச் செய்யும் என்று கடுகளவும் எண்ணியிருந்திருக்க மாட்டார். எந்த ஆயுதத்துக்கும் இல்லாத வலிமை, இந்தக் காணொளிக்குக் கிடைத்துள்ளது.

1972 ஜுன் ஒன்பதாம் திகதி, தெற்கு வியட்நாமில் தராங்பாங் என்ற கிராமத்தில் வீசப்பட்ட 'நெப்பொம்' என்ற குண்டு வெடிக்க வைக்கப்பட்டதில், உடல்முழுவதும் தீக்காயங்களுடன் தனது இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, முகத்தில் பீதியுடன் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் ஒரு படம், 19 வருட வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய காரணியாக இருந்தது.

இலங்கையில். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் காட்சிப்படுத்தப்பட்ட பல காணொளிகளை கொண்டு 'சனல்-4' தயாரித்த குறும்படங்கள், ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு உதவி இருந்தன. இந்தக் காணொளிகள் உலக மக்களின் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் ஆழமானவை. 

யுத்த வலயத்தில் இருந்த டொக்டர்கள், தொண்டு நிறுவனங்களின்  ஊழியர்கள், மதகுருமார் போன்றோர் கண்கண்ட சாட்சியங்களாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, இந்தக் காணொளிகள் ஏற்படுத்திய தாக்கம் மிகக் கடுமையானவையாக இருந்தன. 

சிங்களப் படைவீரர்கள், தமது திறன்பேசி, கமெராக்கள் மூலமாகப் பொழுதுபோக்காகவும் தமது நண்பர்களுக்கு அனுப்பும் முகமாகவும் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள், 'சனல்-4' மூலம் வெளிஉலகுக்கு அம்பலமாகி விட்டன. 

இந்தக் காணொளிகள் போலியானவை என நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தப் போர்க்குற்றங்கள் விடுதலைப்புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டன என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படும் வகையில், சிங்களத்தில் இருந்த குரல்ப் பதிவுகளை, தமிழில் பேசுவது போன்று மாற்றி. உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது. 

பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையே, ஆட்சி அமைப்பதற்கான துரும்புச் சீட்டாக வைத்துள்ள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களின் இன நெருக்கடி தொடர்பான  உண்மைகளை ஒருபோதும் எடுத்துச் சொன்னதில்லை; சொல்லப் போவதுமில்லை. உண்மையில், சிங்கள மக்கள் ஒற்றைப் பரிமாண சிந்தனைக்குள் மூடிவைக்கப்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். 

சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குத் தமிழர்கள் ஏன் போராடுகின்றார்கள், என்ற உண்மை தெரியவராமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, நாட்டைப் பிரிப்பதற்கான போராட்டமாகப் பார்க்கின்றார்கள். அந்தளவுக்கு அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை, சிங்கள மக்கள் மத்தியில் வளர்ப்பதன் ஊடாக, அந்தச் சமூகத்தைத் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருப்பதே சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் நோக்கமாகும். சிங்கள சமூகத்திடம், இனநெருக்கடி தொடர்பான உண்மைகளைச் சொல்ல விரும்பும் எவரையும், இலங்கை பேரினவாத அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை. 

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுகளை முன்வைத்திருந்தார். இதே தடத்தில் பயணித்த இடதுசாரி அரசியல்வாதிகள், குறிப்பாக வாசுதேவ நாணயக்கார போன்றோர் பின்னர் தடம்மாறி இருந்தமைக்குக் காரணம், உண்மைகளைச் சொல்ல அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை என்பதுடன் உண்மைகளைச் சொல்பவர்களால் அதிகாரத்துக்கும் வர முடியாது என்பதாகும்.  

இன்றைய நிலையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கான நியாயத் தன்மையை, இரண்டு தரப்பினருக்கு மத்தியில் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்.

முதலாவது, சிங்கள சாதாரண பொதுமக்கள்; இரண்டாவது, சர்வதேசங்களில் வாழும் சாதாரண பொது மக்கள். இந்த இரண்டு தரப்பினருக்கும் தமிழ் மக்கள், இன்று எவ்வாறு ஒடுக்கப்படுகின்றார்கள், அவர்களின் நிலங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகின்றன, வளங்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன, ஆயுதப் படையினர், ஆயுதமுனையில் தமிழ் மக்களை எவ்வாறு அச்சுறுத்துகின்றார்கள் போன்ற அனைத்துச் சம்பவங்களும் காணொளிகள் மூலம், ஆதாரப்படுத்தப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட வேண்டும். 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்களையும் அழிவுகளையும் முழுமையாகப் புகைப்படங்களாகவோ, காணொளிகளாகவோ இனி வெளியிட்டுவிட முடியாது. ஆனால், இனி, தமிழர்களுக்கு எதிராக இடம்பெறப்போகும் கொடூரங்களையும் அச்சுறுத்தல்களையும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் ஆதாரத்துடன் வெளிப்படுத்த முடியும். 

அரசியல்வாதிகள், அதிகாரிகள், உலக நாடுகள் தமிழர்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு தருவார்கள் என நம்பி இருப்பதைவிட, பொதுமக்கள் தாமாகவே, தமது பிரச்சினையை எதிர்கொண்டு, தீர்வுகாண முயற்சிக்க வேண்டும். இதற்கு நமது கையில் இருக்கும் சாதாரண திறன்பேசியே, நமக்குச் சிறந்த ஆயுதமாக இருக்கும். அதை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகின்றோம் என்பது, நம் ஒவ்வொருவரின் கையில் இருக்கிறது. 

நமது பங்கை நாம் செய்தால், நம் நிலையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால், இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, அச்சுறுத்தல் விடுத்த காணொளி, அரசியலில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோன்ற அச்சுறுத்தல்கள் எத்தனை எத்தனை தினமும் தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற அச்சுறுத்தல்கள், அவமதிப்புகள் என யாவும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பத்தியின் நோக்கமாகும்.

உண்மை வெளிக்கொணரப்படுவதன் மூலமே நீதியைத் தேட முடியும். நீதியின் மூலமே, அமைதியைத் தேட முடியும். ஆகவே, உண்மைகள் வெளிக்கொணரப்படுவது காலத்தின் தேவை கருதி முக்கியத்துவம் பெறுகின்றன.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/படப்பிடிப்பு-என்ற-போராட்டத்தின்-தேவை/91-251851

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

1 year 1 month ago
விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲

நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு!

1 year 1 month ago
நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு! On Jun 12, 2020 டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும்வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன. https://www.thaarakam.com/news/136856 செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்காச்சியண்ணை என அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர், 1992 முதல் வீபோ நகரின் மாலதி தமிழ்க்கலைக்கூடத் தொடக்கநிலை நிர்வாக உறுப்பினராக இருந்து, மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கிப் பணியாற்றியவர். தமிழீழத்தேசத்தின் விடுதலையை விரைவுபடுத்தவேண்டும் என்கின்ற தீராத தாகத்தோடு, இரவுபகல் பாராது தேசப்பணிபுரிந்த செயற்பாட்டாளர். எல்லோரையும் கவரும் எளிமையான வாழ்வும் தேசவிடுதலைப்பணிகளில் ஏனையவர்க்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பண்பும் கொண்டிருந்த இவர், நெருக்கடிகள் மிகுந்த தன் குடும்பச் சூழ்நிலைகளுக்கு நடுவேயும் சளைக்காது பணியாற்றிய பெருமைக்குரியவர். 2009 இற்குப் பின்னரான காலத்திலும் மனந்தளராது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களது சிந்தனைக்கமைவாக, மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் உறுதியோடு செயலாற்றியவர். தனது அன்பாலும் பொறுமையாலும் மக்களது மனங்களில் நிறைந்தவர். இத்தகைய விடுதலைப் பற்றுக்கொண்டு இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளனைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் தேசப்பற்றுமிக்க செயற்பாட்டிற்காக “நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/136796