Aggregator

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

1 year 1 month ago

wicki.jpg?189db0&189db0

தமது கூட்டணிக்கு தேர்தல் செலவுளுக்கு கைகொடுக்க நிதி உதவிகளை வழங்குமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (13) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்,

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம்

1 year 1 month ago
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம் காத்மாண்டு: இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார். நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பாராளுமன்றத்தில் இருந்து பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதால் விவாதம் நடைபெறவில்லை. இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், திருத்தப்பட்ட வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முதலில் விவாதம் தொடங்கி காரசாரமாக நடைபெறுகிறது. விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். 275 உறுப்பினர்கள் கொண்ட சபையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மசோதா நிறைவேறும். பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், மேல் சபையான தேசிய சபைக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அங்கும் இதேபோன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். தேசிய சபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டு சட்டமாக்கப்படும். https://www.maalaimalar.com/news/topnews/2020/06/13154159/1607496/Nepal-Parliament-set-to-vote-on-new-map-which-covers.vpf

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் -இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும்

1 year 1 month ago
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் -இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. பதிவு: ஜூன் 13, 2020 15:47 PM வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாபாதிப்பில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பிரேசில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறு பட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின் கோளாறுகள், வலிப்பு தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசை வலி போன்ற நரம்பியல் பிரச்சினை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர். "பொது மக்களும் மருத்துவர்களும் இதை அறிந்திருப்பது முக்கியம், ஏனென்றால் சார்ஸ் , கோவ்-2 நோய்த்தொற்று ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகளுடன் இருக்கலாம், ஏதேனும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு," என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் இகோர் கோரல்னிக் கூறினார். பகுப்பாய்வில், விஞ்ஞானிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய வெவ்வேறு நரம்பியல் நிலைமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டறிவது குறித்த வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கின்றனர். ஆய்வின்படி, இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம். மூளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைதல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். கூடுதலாக, வைரஸ் மூளை, மெனிங்கேஸ் - நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு - மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) ஆகியவற்றில் நேரடி தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர். நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அழற்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/13154728/COVID19-threatens-the-entire-nervous-system.vpf

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.

1 year 1 month ago
தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஜூன் 15-ல் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை சென்னை தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தலைமைச் செயலரை தலைவராக கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. அதன் கீழ் துறைவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது அதேபோன்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு முதல்வர், சுகாதார அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிக்கும். தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தொற்று பரவாமல் இருக்க சென்னையைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களையாவது தனிமைப்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 15-ம் தேதி (திங்கட்கிழமை) மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். வரும் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கை பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது. https://www.hindutamil.in/news/tamilnadu/559242-increasing-coronavirus-in-tamil-nadu-cm-s-consultation-with-medical-professionals-on-june-15-1.html ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், மற்றொரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.maalaimalar.com/news/topnews/2020/06/13143528/1607471/Sriperumbudur-ADMK-MLA-tests-positive-for-coronavirus.vpf

மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

1 year 1 month ago
மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. Powered by Ad.Plus ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார். தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே பாரதிராஜா - கண்ணனின் நட்பை அறிவார்கள். இவரை பலரும் 'பாரதிராஜாவின் கண்கள்' என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஏனென்றால் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜா இயக்கியதாகும். 'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'காதல் ஓவியம்', 'மண் வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கிழக்குச் சீமையிலே' என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன். பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், "நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கும் சக்தியுண்டு" என்று தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள். தந்தை பீம்சிங் இயக்கிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மனைவி பெயர் காஞ்சனா. மதுமதி மற்றும் ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன், இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை (ஜூன் 14) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559238-cinematographer-kannan-passed-away-2.html

cinematographer-kannan-passed-away

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

Powered by Ad.Plus
 
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார்.

தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே பாரதிராஜா - கண்ணனின் நட்பை அறிவார்கள். இவரை பலரும் 'பாரதிராஜாவின் கண்கள்' என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஏனென்றால் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜா இயக்கியதாகும்.

'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'காதல் ஓவியம்', 'மண் வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கிழக்குச் சீமையிலே' என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், "நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கும் சக்தியுண்டு" என்று தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள்.

தந்தை பீம்சிங் இயக்கிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மனைவி பெயர் காஞ்சனா. மதுமதி மற்றும் ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன், இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை (ஜூன் 14) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559238-cinematographer-kannan-passed-away-2.html

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

1 year 1 month ago
மீண்டும் கரோனா: போர்க்கால அவசர நிலை நடவடிக்கையில் பெய்ஜிங் சீனாவின் பெய்ஜிங் நகரில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கிய நிலையில், அங்கு போர்க்கால அவசர நிலையை அரசு அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள், “பெய்ஜிங்கில் உள்ள முக்கியச் சந்தை ஒன்றில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெய்ஜிங்கின் ஸின்பாடி சந்தையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அவசர நிலையை அரசு அமல்படுத்தியுள்ளது. இப்பகுதியில் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட எவருக்கும் கரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை” என்று செய்தி வெளியிட்டுள்ளன. ஸின்பாடி சந்தைக்குச் சென்ற பலருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் விளையாட்டு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை தற்காலிகமாகத் தடை செய்யப்படுவதாக பெய்ஜிங் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் உள்ள சந்தை ஒன்றிலிருந்து பரவியது. இதனைத் தொடர்ந்து சீனாவில் இதுவரை 83,064 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 78,365 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கடந்த மாதம்தான் சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது https://www.hindutamil.in/news/world/559236-beijing-district-in-wartime-emergency-after-virus-spike-shuts-marke.html

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

1 year 1 month ago
பாரம்பரிய உணவுகள் மட்டுமல்ல, அந்த உணவுகளின் பெயர்களையே இன்றைய தலைமுறை மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அவைகளை ஞாபகப்படுத்தி, வருங்காலச் சந்ததிகள் கொடிய நோய்கள் பீடிக்காமல் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்வதற்கு வழிகாட்டும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. தொடருங்கள்.

பிள்ளையை தத்தெடுத்தல்

1 year 1 month ago
நன்றி சுவைப்பிரியன். இன்றுதான் எல்லாம் படிவங்களை நிரப்பி பணமும் எனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பிவிட்டேன் ஒரு வருடத்திற்கு, தொடர்ந்து பத்து வருடங்களுக்கு உதவ விரும்பியுள்ளா. மகளிடமிருந்து மாதம் மாதம் நான் வங்கிடுவேன், அதுதான் ஒப்பந்தம் இருவருக்கமிடையில். நன்றிகள் மீண்டும் அனைவருக்கும் வாழ்தியதிற்கும் ஊக்கம் தந்திற்கும் Fund For Mahalir Illam ABN – 47 467 887 194 Membership Form Web - http://www.mahalirillam.org / “CARING FOR MAHALIR IN NEED” Sponsorship Type 1) Child Sponsor donation (A$40/month/child + $10 Ekalvi) 2) Monthly donation – A$50 (for projects) 3) Ad- Hoc donation/monthly /annually Bank details Commonwealth Bank (Hay Market) BSB: 06 2006; A/c No:011033596. Account name: “Fund for Mahalir Illam” admin@mahalirillam.org

எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின் #முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது.

1 year 1 month ago
எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின்#முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது. பேட்டி கண்டவர் கோகுலன்.

எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின்
#முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது. பேட்டி கண்டவர் கோகுலன்.

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன்

1 year 1 month ago
கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (13) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர், தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கட்சிகளாக பிரிந்தும் சுயேட்சைக்குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அவர்கள் கட்டுப்பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாத அளவு மக்களால் நிராகரிக்கப்படுவார்கள். தமிம் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் பதவி மோகத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அரசு செய்ய வேண்டிய வேலையை தமிழராக இருந்து கொண்டு இவர்கள் செய்வதால் இவர்கள் சிங்கள அரசின் நேரடி முகவர்களா என்று சந்தேகம் கொள்ளத் வைக்கிறது. வன்னியில் 6 ஆசனத்திற்காக 30 சுயேற்சைக் குழுக்களும் 400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இதில் கணிசமானவர்கள் அரசின் கைப்பொம்மைகளாக உள்ளவர்கள் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே இவர்களது நோக்கம். இவர்களது சித்து விளையாட்டுக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கறியும். இவர்களது எண்ணங்கள் ஒரு போதும் பலிக்கப்பபோவதில்லை. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றும். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்” என தெரிவித்தார். https://newuthayan.com/கூட்டமைப்புக்கும்-மக்கள/