Aggregator

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

1 year 2 months ago
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crimes of aggression) என்பனவற்றின் மீது விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. முதலில் வழக்குத்தொடுனர் அலுவலகம் மேற்சொன்ன பாரதூரமான குற்றங்கள் நிகழ்ந்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதையும், அவற்றை விசாரிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு விசாரணையொன்றை ஆரம்பிக்க: குறித்த நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றிருக்க வேண்டும். அல்லது, ஐ.நா. பாதுகாப்புச் சபையால் குறித்த நாடு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரதீனப்படுத்தப்பட வேண்டும். இலங்கை, ரோம் சட்டத்தை தன் நாட்டுச் சட்டத்தில் இணைக்காத நாடு. அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகாரத்தை ஏற்காத நாடு. ஆகவே, இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க பாதுகாப்பு சபையூடாக இலங்கையைப் பாரதீனப்படுத்துவதே இதுவரை காலமும் ஒரே வழியாக இருந்தது. அமெரிக்கா முதலில் இலங்கையை ICC இல் பாரதீனப்படுத்த இணங்கி இருக்க வேண்டும். அமெரிக்கா அதைச் செய்தாலும் சீனாவும், ரஷ்யாவும் அதற்கெதிராகத் தம் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாதிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையூடாக இலங்கையை ICC இல் பாரதீனப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியை ஆதரிக்கும் சட்டவறிஞர்களும் பொது வெளியில் சொல்லியிருக்கிறார்கள். சென்ற வருடம் நவம்பர் மாதம் தன் இருபது வருடகால வரலாற்றில் முதற்தடவையாக ICC மேற்சொன்ன நிபந்தனைகள் இரண்டில் ஒன்றையேனும் பூர்த்திசெய்யாதவொரு நாட்டின் மீது விசாரணையை ஆரம்பித்தது. அந்த நாடு மியன்மார். மியன்மார் ICC இன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதொரு நாடல்ல. ஆனால், மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலட்சக் கணக்கில் பங்களாதேஷில் அகதிகளாகக் குடியிருக்கிறார்கள். பங்களாதேஷ் ரோம் சட்டத்தை தன் நாட்டுச் சட்டத்தில் இணைத்த நாடு. ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களில் ஒன்றான நாடுகடத்தல் அல்லது நாட்டிலிருந்து விரட்டப்படல் என்ற குற்றத்துடன் பங்களாதேஷ் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்த அடிப்படையில் மியன்மார் மீது விசாரணையைத் தொடங்கலாம் என்ற புதிய சட்ட வியாக்கியானத்தின் கீழ் ICC இன் பிரதான வழக்குத்தொடுனர் மியன்மார் மீது விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருந்தார். மியன்மாரை விசாரிக்கவென எடுக்கப்பட்ட முடிவு தானாய் உதித்ததல்ல. இதுவரை காலமும் ICC இல் ஆபிரிக்க நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களே விசாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக ICC மீது கறுப்பின மக்களை மாத்திரம் கூண்டில் நிறுத்தும் இனவாதக் கட்டமைப்பு என்கிற தீவிரமான குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதைச் சமாளிக்க வேண்டிய தேவை ICC க்கு உதித்திருந்தது. மேலும், வல்லமையான இஸ்லாமிய நாடுகள் ஒருமித்து மியன்மார் மீது சர்வதேச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றியிருந்தன. ஆகவே, மியன்மார் மீது ICC ஆரம்பித்திருக்கும் விசாரணை ஒரு அதி விசேடமான சம்பவம் (exception not the rule). இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுவது பொருத்தம். வழக்குத்தொடுனர் முடிவெடுத்தால் மட்டும் போதாது. அதை ICC இன் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவும் ICC சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத நாடு. ஆனால், ICC இன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் இழைத்த குற்றங்களை விசாரிக்க வேண்டுமென வழக்குத்தொடுனர் எடுத்த முடிவை ICC நீதிபதிகள் (Pre-Trial Chamber II) ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், சில காலம் ICC இன் அமெரிக்காவிற்கெதிரான முயற்சி கிடப்பிலிருந்தது. மீண்டும் வழக்குத்தொடுனர் அந்த முடிவுக்கு எதிராக மேன்முறையிட்டு இந்த வருடம் மார்ச் மாதம் முன்னைய முடிவு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வருவோம். எந்த நாடுகள் எல்லாம் ஒன்று கூடி விடுதலைப் புலிகளை அழித்தனவோ; எந்தெந்த நாடுகள் அப்பாவித் தமிழர் கொல்லப்பட்டதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தனவோ, அந்த நாடுகள் எல்லாம் பத்தாண்டு கழித்து, ஏதோவொரு அசிரீரி ஒலிக்கக் கேட்டு மொத்தமாக மனம் மாறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நாடுகள் இப்போது இலங்கை மீதான ICC விசாரணைக்குப் பாரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றன. வழக்குத்தொடுனருக்கு விசாரணையை ஆரம்பிக்க சட்ட அடிப்படையொன்று அவசியம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த இடத்தில் எவ்வாறு மியன்மாரிலிருந்து, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு விரட்டப்பட்டார்களோ, அதுபோன்றே ICC அங்கத்துவ நாடில்லாத இலங்கையிலிருந்து, ICC அங்கத்துவ நாடுகள் பலவற்றிற்கு எம்மவர்கள் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு வழக்குத்தொடுனர் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று சட்டரீதியில் ஒப்பான சூழ்நிலைகள் அல்ல. இருந்தாலும் இதுவொரு பொருட்டில்லை எனக் கொள்வோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் சட்ட அடிப்படையில் வழக்குத்தொடுனர் விசாரணைகளை ஆரம்பிக்கிறார் என்போம். அடுத்த கட்டம் என்ன? ICC இன் விசாரணையாளர்கள் முதலில் விசாரணைகளில் ஈடுபட்டு இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி, சந்தேகநபர்களை இனங்காண வேண்டும். இரண்டு விடயங்கள் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும். ICC தனி நபர்கள் மீது தான் வழக்குத் தொடுக்கலாம், ஒரு அரசின் மீது அல்ல. பொதுவாக ஒரு நாட்டில் ஒருவரையோ அல்லது அதிகபட்சம் இருவரையோதான் இதுவரை காலம் ICC குற்றவாளியாக இனங்கண்டிருக்கிறது. மேலும், ICC தன் விசாரணைகளை நடத்த குறித்த நாட்டின் இணக்கத்தில் தங்கியிருக்கிறது; இது தெளிவாகவே ICC இன் பொது ஆவணங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஆதாரங்களைத் திரட்டவென ICC விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளிக்காவிட்டால் அவர்களால் வலிந்து இலங்கைக்குள் வந்துவிட முடியாது. நாம் விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் இருக்கும் பாரிய இடைவெளியையும் புரிந்துகொள்ள வேண்டும். ICCயால் தற்போது மொத்தம் 13 நாடுகள் மீதான விசாரணைகள் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை மனதிற் கொள்க. கொங்கோ, உகண்டா, சூடான் போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. எமது பிரச்சினையைப் பொறுத்தளவில் வெளிநாடுகளில் அகதிகளாய் வாழும் தமிழரை மட்டும் வைத்துக் கொண்டு இனப்படுகொலை என்ற குற்றத்தை நிறுவப் போதுமான ஆதாரங்களைத் திரட்ட முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமானது. ஆனால், இதுவும் நடக்கிறதென்றே வைத்துக் கொள்வோம். ஆதாரங்களைத் திரட்டிய பின் பொருத்தமான சந்தேகநபர் யார் என்பதை ICC இனங்கண்டு அவருக்கு அழைப்பாணை விடுக்கும். சந்தேகநபர் தானாக முன்வந்து வழக்கில் தன்னைச் சமர்ப்பிக்கலாம். சந்தேகநபர் அதைச் செய்யாத பட்சத்தில் ICC அந்த நபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவொன்றைப் பிறப்பிக்கும். சந்தேகநபரது நாடோ அல்லது அவர் பயணிக்கும் நாடொன்றோ அவரைப் பிடித்து ICC யிடம் ஒப்படைத்தால் மாத்திரமே வழக்குத் தொடரப்படலாம். குறித்த நபர் நீதிமன்றில் இல்லாது வழக்கைக் கொண்டு செல்ல முடியாது. இதுவரை ICC ஒரேயொரு ஆட்சியிலிருக்கும் அரச தலைவர் மீதுதான் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. சூடானின் அதிபரான அல் பஷீர் என்பவரே அவர். அல் பஷீருக்கெதிரான முதலாவது பிடியாணை 2009 இல் பிறப்பிக்கப்பட்டது. அல் பஷீர் வெகு இலகுவாகவே ஐ.நா. மற்றும் ICC இன் அங்கத்துவ நாடுகள் பலவற்றிற்கு சென்று வந்து கொண்டிருந்தார். எந்த நாடும் அவரைக் கைதுசெய்து ஒப்படைப்பதாய் இருக்கவில்லை. இவரைக் கைதுசெய்து ஒப்படைக்காத நாடுகள் மீது ICC ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முறைப்பாடுகளைச் செய்தபோதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அல் பஷீரோடு சேர்த்து மொத்தம் 12 பேர் மீது ICC இன் சர்வதேச பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட படி இருக்கின்றன. மீதி எவரையும் எவரும் கைதுசெய்து நாடு கடத்துவதாய் இல்லை. பிடியாணை விடுக்கப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேர் செத்தும் போய் விட்டார்கள். எம் பிரச்சினைக்கு மீண்டும் வருவோம். (1) முதலாவதாக, எம்மை அழித்த அதே உலக நாடுகள் திடீரென மனம் மாறி இலங்கை மீதான விசாரணையொன்றிற்குப் பாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். (2) இருக்கும் சட்டச்சிக்கல்களை மேற்கொண்டு வழக்குத்தொடுனர் எப்படியோ விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும். (3) பல்லாண்டு காலமெடுத்து ICC விசாரணையாளர்கள், இலங்கையின் ஒத்துழைப்பின்றி இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டி முடிக்க வேண்டும். (4) அடுத்து, ஓரிரு நபர்களை ICC சந்தேகநபர்களாக இனங்கண்டு, அழைப்பாணையோ, பிடியாணையோ விடுக்க வேண்டும். (5) பின்னர், குறித்த சந்தேகநபர் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் அவராக ஹேகில் தன்னைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது இலங்கை அரசோ, குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர் பயணமாகும் நாடொன்றோ அந்த நபரைப் பிடித்து ICCயிடம் ஒப்படைக்க வேண்டும். (6) இதற்குப் பின்னரே வழக்கு தொடங்கப்படலாம். வழக்கின் முடிவில் ஆதாரங்களுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக சொகுசான ஐரோப்பிய சிறையொன்றில் குற்றவாளி சிறை வைக்கப்படுவார். தன் இருபது வருட கால வரலாற்றில் ICC மூன்றே நபர்களைத்தான் இத்தனை படிமுறைகளையும் கடந்து சர்வதேசக் குற்றங்களின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பிட்டிருக்கிறது. ஆட்சியிலிருக்கும் அரச தலைவர் ஒருவருக்கு எதிராக 20 வருடத்தில் ஒரேயொரு முறைதான் படிநிலை (3) எட்டப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை அந்த இடத்தைத் தாண்டி நகராது பத்து வருடமாகத் தரித்து நிற்கிறது. இலங்கையிலும் அவ்வாறே. முதலில் முதல் நான்கு படிமுறைகளையும் நாம் கடக்க வேண்டும். இவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. நடந்தாலும் இலகுவில் 20 ஆண்டுகள் எடுத்துவிடக்கூடும். இவற்றின் முடிவில் ICC பிடியாணை விடுத்த ஒரே காரணத்திற்காக இலங்கை அரசு குறித்த குற்றவாளியைப் பிடித்து ICCயிடம் கொடுப்பதற்கான எந்தவிதக் கடப்பாடும் அதற்கில்லை. எந்தக் கட்சியைச் சார்ந்த இலங்கை அரசாங்கமும் அதைச் செய்யப்போவதுமில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ வெகு இலகுவாக பிடியாணையை நிராகரித்து விட்டு வேலையைப் பார்ப்பதை விடுத்து அன்றைய இலங்கை அரசு தமிழருக்குத் தனித் தமிழ்த் தேசம் கொடுக்கும் பேரம் பேசலுக்குத் தன்னை அழைக்குமெனக் கதை அளக்கிறார். மேற்சொன்னவை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், அவருக்கு ஆதரவளிக்கும் சட்டப் புலமை கொண்டவர்களுக்கும் தெரியாத விடயங்கள் அல்ல. தெரிந்துகொண்டே சுய இலாப அரசியலுக்காகப் போராற் பாதிக்கப்பட்ட மக்களிடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற மாயையை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் கண்டிக்கப்பட வேண்டிய செயலை வெட்கமின்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள். இலைஜா ஹூல் https://maatram.org/?p=8642

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

1 year 2 months ago
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

spacer.png

பட மூலம், PageTamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை.

ஏன் என்பது வருமாறு:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crimes of aggression) என்பனவற்றின் மீது விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது.

முதலில் வழக்குத்தொடுனர் அலுவலகம் மேற்சொன்ன பாரதூரமான குற்றங்கள் நிகழ்ந்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதையும், அவற்றை விசாரிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு விசாரணையொன்றை ஆரம்பிக்க:

குறித்த நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றிருக்க வேண்டும்.

அல்லது,

ஐ.நா. பாதுகாப்புச் சபையால் குறித்த நாடு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரதீனப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை, ரோம் சட்டத்தை தன்  நாட்டுச் சட்டத்தில் இணைக்காத நாடு. அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகாரத்தை ஏற்காத நாடு. ஆகவே, இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க பாதுகாப்பு சபையூடாக இலங்கையைப் பாரதீனப்படுத்துவதே இதுவரை காலமும் ஒரே வழியாக இருந்தது. அமெரிக்கா முதலில் இலங்கையை ICC இல் பாரதீனப்படுத்த இணங்கி இருக்க வேண்டும். அமெரிக்கா அதைச் செய்தாலும் சீனாவும், ரஷ்யாவும் அதற்கெதிராகத் தம் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாதிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையூடாக இலங்கையை ICC இல் பாரதீனப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியை ஆதரிக்கும் சட்டவறிஞர்களும் பொது வெளியில் சொல்லியிருக்கிறார்கள்.

சென்ற வருடம் நவம்பர் மாதம் தன் இருபது வருடகால வரலாற்றில் முதற்தடவையாக ICC மேற்சொன்ன நிபந்தனைகள் இரண்டில் ஒன்றையேனும் பூர்த்திசெய்யாதவொரு நாட்டின் மீது விசாரணையை ஆரம்பித்தது. அந்த நாடு மியன்மார்.

மியன்மார் ICC இன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதொரு நாடல்ல. ஆனால், மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலட்சக் கணக்கில் பங்களாதேஷில் அகதிகளாகக் குடியிருக்கிறார்கள். பங்களாதேஷ் ரோம் சட்டத்தை தன் நாட்டுச் சட்டத்தில் இணைத்த நாடு. ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களில் ஒன்றான நாடுகடத்தல் அல்லது நாட்டிலிருந்து விரட்டப்படல் என்ற குற்றத்துடன் பங்களாதேஷ் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்த அடிப்படையில் மியன்மார் மீது விசாரணையைத் தொடங்கலாம் என்ற புதிய சட்ட வியாக்கியானத்தின் கீழ்  ICC இன் பிரதான வழக்குத்தொடுனர் மியன்மார் மீது விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருந்தார்.

மியன்மாரை விசாரிக்கவென எடுக்கப்பட்ட முடிவு தானாய் உதித்ததல்ல. இதுவரை காலமும் ICC இல் ஆபிரிக்க நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களே விசாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக ICC மீது கறுப்பின மக்களை மாத்திரம் கூண்டில் நிறுத்தும் இனவாதக் கட்டமைப்பு என்கிற தீவிரமான குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதைச் சமாளிக்க வேண்டிய தேவை ICC க்கு உதித்திருந்தது. மேலும், வல்லமையான இஸ்லாமிய நாடுகள் ஒருமித்து மியன்மார் மீது சர்வதேச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றியிருந்தன. ஆகவே, மியன்மார் மீது ICC ஆரம்பித்திருக்கும் விசாரணை ஒரு அதி விசேடமான சம்பவம் (exception not the rule).

இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுவது பொருத்தம். வழக்குத்தொடுனர் முடிவெடுத்தால் மட்டும் போதாது. அதை ICC இன்  நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவும் ICC சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத நாடு. ஆனால், ICC இன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் இழைத்த குற்றங்களை விசாரிக்க வேண்டுமென வழக்குத்தொடுனர் எடுத்த முடிவை ICC நீதிபதிகள் (Pre-Trial Chamber II) ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், சில காலம் ICC இன் அமெரிக்காவிற்கெதிரான முயற்சி கிடப்பிலிருந்தது. மீண்டும் வழக்குத்தொடுனர் அந்த முடிவுக்கு எதிராக மேன்முறையிட்டு இந்த வருடம் மார்ச் மாதம் முன்னைய முடிவு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வருவோம். எந்த நாடுகள் எல்லாம் ஒன்று கூடி விடுதலைப் புலிகளை அழித்தனவோ; எந்தெந்த நாடுகள் அப்பாவித் தமிழர் கொல்லப்பட்டதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தனவோ, அந்த நாடுகள் எல்லாம் பத்தாண்டு கழித்து, ஏதோவொரு அசிரீரி ஒலிக்கக் கேட்டு மொத்தமாக மனம் மாறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நாடுகள் இப்போது இலங்கை மீதான ICC விசாரணைக்குப் பாரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றன. வழக்குத்தொடுனருக்கு விசாரணையை ஆரம்பிக்க சட்ட அடிப்படையொன்று அவசியம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த இடத்தில் எவ்வாறு மியன்மாரிலிருந்து, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு விரட்டப்பட்டார்களோ, அதுபோன்றே ICC அங்கத்துவ நாடில்லாத இலங்கையிலிருந்து, ICC அங்கத்துவ நாடுகள் பலவற்றிற்கு எம்மவர்கள் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு வழக்குத்தொடுனர் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று சட்டரீதியில் ஒப்பான சூழ்நிலைகள் அல்ல. இருந்தாலும் இதுவொரு பொருட்டில்லை எனக் கொள்வோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் சட்ட அடிப்படையில் வழக்குத்தொடுனர் விசாரணைகளை ஆரம்பிக்கிறார் என்போம். அடுத்த கட்டம் என்ன?

ICC இன் விசாரணையாளர்கள் முதலில் விசாரணைகளில் ஈடுபட்டு இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி, சந்தேகநபர்களை இனங்காண வேண்டும். இரண்டு விடயங்கள் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும். ICC தனி நபர்கள் மீது தான் வழக்குத் தொடுக்கலாம், ஒரு அரசின் மீது அல்ல. பொதுவாக ஒரு நாட்டில் ஒருவரையோ அல்லது அதிகபட்சம் இருவரையோதான் இதுவரை காலம் ICC குற்றவாளியாக இனங்கண்டிருக்கிறது. மேலும், ICC தன் விசாரணைகளை நடத்த குறித்த நாட்டின் இணக்கத்தில் தங்கியிருக்கிறது; இது தெளிவாகவே ICC இன் பொது ஆவணங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஆதாரங்களைத் திரட்டவென ICC விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளிக்காவிட்டால் அவர்களால் வலிந்து இலங்கைக்குள் வந்துவிட முடியாது.

நாம் விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் இருக்கும் பாரிய இடைவெளியையும் புரிந்துகொள்ள வேண்டும். ICCயால் தற்போது மொத்தம் 13 நாடுகள் மீதான விசாரணைகள் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை மனதிற் கொள்க. கொங்கோ, உகண்டா, சூடான் போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

எமது பிரச்சினையைப் பொறுத்தளவில் வெளிநாடுகளில் அகதிகளாய் வாழும் தமிழரை மட்டும் வைத்துக் கொண்டு இனப்படுகொலை என்ற குற்றத்தை நிறுவப் போதுமான ஆதாரங்களைத் திரட்ட முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமானது. ஆனால், இதுவும் நடக்கிறதென்றே வைத்துக் கொள்வோம்.

ஆதாரங்களைத் திரட்டிய பின் பொருத்தமான சந்தேகநபர் யார் என்பதை ICC இனங்கண்டு அவருக்கு அழைப்பாணை விடுக்கும். சந்தேகநபர் தானாக முன்வந்து வழக்கில் தன்னைச் சமர்ப்பிக்கலாம். சந்தேகநபர் அதைச் செய்யாத பட்சத்தில் ICC அந்த நபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவொன்றைப் பிறப்பிக்கும். சந்தேகநபரது நாடோ அல்லது அவர் பயணிக்கும் நாடொன்றோ அவரைப் பிடித்து ICC யிடம் ஒப்படைத்தால் மாத்திரமே வழக்குத் தொடரப்படலாம். குறித்த நபர் நீதிமன்றில் இல்லாது வழக்கைக்  கொண்டு செல்ல முடியாது.

இதுவரை ICC ஒரேயொரு ஆட்சியிலிருக்கும் அரச தலைவர் மீதுதான் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. சூடானின் அதிபரான அல் பஷீர் என்பவரே அவர். அல் பஷீருக்கெதிரான முதலாவது பிடியாணை 2009 இல் பிறப்பிக்கப்பட்டது. அல் பஷீர் வெகு இலகுவாகவே ஐ.நா. மற்றும் ICC இன் அங்கத்துவ நாடுகள் பலவற்றிற்கு சென்று வந்து கொண்டிருந்தார்.  எந்த நாடும் அவரைக் கைதுசெய்து ஒப்படைப்பதாய் இருக்கவில்லை. இவரைக் கைதுசெய்து ஒப்படைக்காத நாடுகள் மீது ICC ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முறைப்பாடுகளைச் செய்தபோதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அல் பஷீரோடு சேர்த்து மொத்தம் 12 பேர் மீது  ICC இன் சர்வதேச பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட படி இருக்கின்றன. மீதி எவரையும் எவரும் கைதுசெய்து நாடு கடத்துவதாய் இல்லை. பிடியாணை விடுக்கப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேர் செத்தும் போய் விட்டார்கள்.

எம் பிரச்சினைக்கு மீண்டும் வருவோம். (1) முதலாவதாக, எம்மை அழித்த அதே உலக நாடுகள் திடீரென மனம் மாறி இலங்கை மீதான விசாரணையொன்றிற்குப் பாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். (2) இருக்கும் சட்டச்சிக்கல்களை மேற்கொண்டு வழக்குத்தொடுனர் எப்படியோ விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும். (3) பல்லாண்டு காலமெடுத்து ICC விசாரணையாளர்கள், இலங்கையின் ஒத்துழைப்பின்றி இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டி முடிக்க வேண்டும். (4) அடுத்து, ஓரிரு நபர்களை ICC சந்தேகநபர்களாக இனங்கண்டு, அழைப்பாணையோ, பிடியாணையோ விடுக்க வேண்டும். (5) பின்னர், குறித்த சந்தேகநபர் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் அவராக ஹேகில் தன்னைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது இலங்கை அரசோ, குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர் பயணமாகும் நாடொன்றோ அந்த நபரைப் பிடித்து ICCயிடம் ஒப்படைக்க வேண்டும். (6) இதற்குப் பின்னரே வழக்கு தொடங்கப்படலாம். வழக்கின் முடிவில் ஆதாரங்களுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக சொகுசான ஐரோப்பிய சிறையொன்றில் குற்றவாளி சிறை வைக்கப்படுவார்.

தன் இருபது வருட கால வரலாற்றில் ICC மூன்றே நபர்களைத்தான் இத்தனை படிமுறைகளையும் கடந்து சர்வதேசக் குற்றங்களின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பிட்டிருக்கிறது. ஆட்சியிலிருக்கும் அரச தலைவர் ஒருவருக்கு எதிராக 20 வருடத்தில் ஒரேயொரு முறைதான் படிநிலை (3) எட்டப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை அந்த இடத்தைத் தாண்டி நகராது பத்து வருடமாகத் தரித்து நிற்கிறது.

இலங்கையிலும் அவ்வாறே. முதலில் முதல் நான்கு படிமுறைகளையும் நாம் கடக்க வேண்டும். இவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. நடந்தாலும் இலகுவில் 20 ஆண்டுகள் எடுத்துவிடக்கூடும். இவற்றின் முடிவில்  ICC பிடியாணை விடுத்த ஒரே காரணத்திற்காக இலங்கை அரசு குறித்த குற்றவாளியைப் பிடித்து ICCயிடம் கொடுப்பதற்கான எந்தவிதக் கடப்பாடும் அதற்கில்லை. எந்தக் கட்சியைச் சார்ந்த இலங்கை அரசாங்கமும் அதைச் செய்யப்போவதுமில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ வெகு இலகுவாக பிடியாணையை நிராகரித்து விட்டு வேலையைப் பார்ப்பதை விடுத்து அன்றைய இலங்கை அரசு தமிழருக்குத் தனித் தமிழ்த் தேசம் கொடுக்கும் பேரம் பேசலுக்குத் தன்னை அழைக்குமெனக் கதை அளக்கிறார். மேற்சொன்னவை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், அவருக்கு ஆதரவளிக்கும் சட்டப் புலமை கொண்டவர்களுக்கும் தெரியாத விடயங்கள் அல்ல. தெரிந்துகொண்டே சுய இலாப அரசியலுக்காகப் போராற் பாதிக்கப்பட்ட மக்களிடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற மாயையை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் கண்டிக்கப்பட வேண்டிய செயலை வெட்கமின்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Elijah-e1594981725684.png?resize=95%2C11இலைஜா ஹூல்

https://maatram.org/?p=8642

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

1 year 2 months ago
ஈழப்பிரியன் பாராட்டுக்கள், உங்கள் நல்ல மனதிற்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள். இணைப்பை கொடுத்ததால் நல்ல உள்ளம் கொண்ட பலர் உதவுவார்கள் http://letushelpnow.org/yogar_swami_elders_home

ஓம் முருகா

1 year 2 months ago
கறுப்பச்சட்டை ஆசாமி ஒன்னு.. முப்பாட்டன் முருகனுன்னா. அவன் அப்பன் சிவனா? சிவனே தாண்டா. முப்பாட்டனே அக்கினிப் பொறின்னா அவன் பாட்டன்?! கறுப்புச் சட்டை ஆசாமிகளா.. பகுத்தறிவுக்கும் கறுப்புக்கும் என்ன சம்பந்தன்டா. தமிழன் கறுப்படா.ஏன்னா அவன் சூரியனுக்கு சொந்தக்காரன். ஆதலால் அவன் முப்பாட்டனும் கறுப்பு அவன் அப்பனும் கறுப்பு. கறுப்புச் சட்டைக்குள்ளால் பார்க்காதே பகுத்தரிவு கருத்துக் கண்ணால் பார்க்கப் பழகு அதுதான் தமிழனின் பகுத்தறிவு எல்லா மனிதற்கும் உள்ள பொது அறிவு.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020

1 year 2 months ago
இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே🤔 6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020

1 year 2 months ago
இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே🤔 6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!

‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல்

1 year 2 months ago
‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல் – கலாநிதி ஜெகான் பெரேரா அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன். கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மனிதகுல வரலாற்றில் மிகவும் ஆபத்தான கட்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் ‘ என்று உலகின் மிகவும் புகழ்பெற்ற — செல்வாக்குமிக்க அறிவுஜீவி நோம் சோம்ஸ்கி அண்மைய நேர்காணலொன்றில் கூறியிருந்தார். இதையடுத்து இன்னொரு நேர்காணலில் சோம்ஸ்கி அமெரிக்காவில் தற்போது மூண்டிருக்கும் ஆர்ப்பாட்ட அலைகளைப்பற்றி கூறுகையில், ‘ இன்றைய ஆர்ப்பாட்டங்களில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற – முன்னென்றும் இல்லாத வகையிலான அவற்றின் வீச்சும் பரந்தளவில் மக்களின் பங்கேற்பும் ஆதரவுமே கவனத்தை தூண்டும் முதல் அம்சங்களாக இருக்கின்றன.அபிப்பிராய வாக்கெடுப்புகளை நோக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.கறுப்பர்களின் உயிர்கள் முக்கியமானவை (Black Lives Matter) என்ற இயக்கத்துக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் கிடைத்துவருகின்ற மக்கள் ஆதரவு ‘ எனக்கு ஒரு கனவு இருக்கிறது ‘ ( I have a dream ) என்ற உரையை மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய காலகட்டத்தில் அவருக்கு இருந்த மிகவும் உயர்ந்த செல்வாக்கையும் விட மிகவும் உச்சமானதாக இருக்கிறது ‘ என்று குறிப்பிட்டிருக்கிறார் ( ஜாகோபின் சஞ்சிகை 2020 ஜூன் ). ‘கறுப்பர்களின் உயிர்கள் முக்கியமானவை ‘ என்ற இயக்கமே மையமாக விளங்குகின்ற போதிலும், பலம்பொருந்திய இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்களில் 61 சதவீதமானவர்கள் வெள்ளையினத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஆர்ப்பாட்ட இயக்கத்தின் வரலாற்று வேர்களை விளங்கிக்கொள்ளுமுகமாக பழைய கறுப்பு பந்தர் கட்சியின் (Black Panther Party) தலைவர்களின் வரலாற்றை அமெரிக்க ஊடகங்கள் திரும்பிப்பார்ப்பதில் இப்போது நாட்டம் காட்டுகின்றன. கறுப்பு பந்தர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பில்லி எக்ஸ்.ஜென்னிங்ஸை ‘ கவுன்ரர் பஞ்ச் ‘ (Counterpunch) சஞ்சிகை அண்மையில் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நேர்காணல் செய்தது. கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், ‘ கறுப்பு பந்தர் கட்சியில் நான் முதலில் இணைந்தபோது தலைவர் மாவோ சே துங்கின் மேற்கோள்கள் என்ற நூலை (Quotations from Chairman Mao Tse -tung) வாசித்தேன். ஒரு சிறு பொறியினால் காட்டுத்தீயை மூளவைக்க முடியும் (A single spark can start a prairie fire) என்று மாவோ கூறினார். பிளாய்டின் கொலைக்குப் பிறகு அமெரிக்க வீதிகளில் அந்த பொறியை நாம் காண்கின்றோம் ‘ என்று சொன்னார். மாவோ சேதுங் 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் ஒரு மாபெரும் தலைவர் ; நவீன காலத்தின் ஒரு தலைசிறந்த வரலாற்றுப் படைப்பாளி பல தலைமுறைகளின் மீது தத்துவார்த்த – சிந்தனைச் செல்வாக்கை செலுத்திய மாமனிதர். இன்றும் கூட தலைசிறந்த பிரெஞ்சு தத்துவஞானி அலெய்ன் பாடியோ தன்னை ஒரு மாவோவாதி என்றே கருதுகிறார். 1968 ஆர்ப்பாட்டங்களின்போது சேகுவேரா, ஹோசிமின், மாவோ சேதுங் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிச்செல்லப்பட்டதைப் போன்று இன்று அமெரிக்காவிலும் உலகிலும் கிளம்பியிருக்கும் ஆர்ப்பாட்ட அலையில் காணக் கூடியதாக இருக்கவில்லை என்ற போதிலும், அதில் பங்கேற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் கிளர்ச்சி உணர்வில் மாவோவின் சிந்தனையின் பொருத்தப்பாட்டை காணக்கூடியதாக இருக்கிறது.ஏனென்றால், ‘ கிளர்ச்சி செய்வது சரியானதே ‘ (It is Right to Rebel) என்பது மாவோவின் சிறந்த சுலோகங்களில் ஒன்றாகும்.இந்த சுலோகத்தில் மார்க்சியத்தின் சாராம்சம் பொதிந்திருக்கிறது என்று அவர் நம்பினார். செங்காவலர் அணிவகுப்பில் மாவோவுக்கு அருகில் சண் மாவோவை நன்கு தெரிந்த தோழர் சண் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சண் மாவோவை சந்தித்து கலந்துரையாடிய ஒரே இலங்கையர் மாத்திரமல்ல, தெற்காசியாவைச் சேர்ந்த சிலரில் ஒருவருமாவார்.நக்சலைட்டுகள் என்று நன்கு அறியப்பட்ட இந்தியாவின் மாவோவாத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் — லெனினிஸ்ட் ) யின் தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்தித்ததில்லை.ஆனால், கலாசாரப்புரட்சியின் உச்சக்கட்டத்தின்போது பெய்ஜிங் தியனென்மென் சதுக்கத்தில் 15 இலட்சம் செங்காவலர்களின் அணிவகுப்பை மாவோ பார்வையிட்டபோது அவருக்கு அருகில் சண் நின்றார். செங்காவலர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கும் அவர் அனுமதிக்கப்பட்டார். சண்ணின் மாவோவாத கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் கருத்தூன்றிய அக்கறைகொண்ட புரட்சிவாதிகளுக்கான இரு பாதைகளில் ஒன்றாக விளங்கியது. மற்றையது டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவுடன் அடையாளப்படுத்திக்கொண்ட மாஸ்கோ சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ தென்திசைப்போக்கு ‘ அணியாகும். உண்மையில் இவற்றை இரு பாதைகள் என்பதை விடவும் ஒரே பாதையென்று கூறுவதே பொருத்தமாகும். ஏனென்றால், இலங்கையின் மாவோவாதிகளில் பலர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தென்னிலங்கையரான எஸ்.ஏ. விக்கிரமசிங்கவின் அணியில் இருந்து வந்தவர்களே. மார்க்சிய — லெனினிய கற்கைக்கான ‘ பல்கலைக்கழகத்தின் தாபகராகவும் உபவேந்தராகவும்’ சண்ணை நோக்கலாம். தென்பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன, வடபகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன மானசீகமான செயல் ஈடுபாடுகொண்ட இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியும் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்களே. ஆனால், அவர்கள் அங்கே ஒருபோதும் நிலைத்திருக்கவில்லை. ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) ஒரு மாவோவாத இயக்கம் அல்ல என்றபோதிலும், அது மாவோவாத இயக்கத்தின் மடியில் இருந்து தோன்றியது என்பதும் அதன் முக்கியமான உறுப்பினர்கள் பெரும்பாலும் முன்னாள் மாவோவாதிகளே என்பதும் இலங்கையின் மாவோவாதத்தின் விளைவளத்திற்கு சான்றாகும். சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாவோவாதிகள் 1964 ஆம் ஆண்டில் பிரிந்துசென்றபோது புதிய இயக்கம் மாஸ்கோ சார்பு கட்சியின் பிரதான தொழிற்சங்கங்களை ( இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் ) அதன் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்லக்கூடியதாக இருந்தது என்பது அதன் தனித்துவத்தை வெளிக்காட்டியது.உலகின் பெரும்பாலான பாகங்களில் அவ்வாறு நடந்தது மிகவும் அரிதேயாகும்.இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்துக்கு சண்முகதாசனே தலைமை தாங்கினார்.அகில இலங்கை விவசாயிகள் காங்கிரஸின் முன்னணி உறுப்பினர்களும் சண்முகதாசனுடனேயே கூடச் சென்றார்கள். இலங்கையின் மாவோவாத இயக்கத்தின் தலைவர் சர்வதேசரீதியில் ஆற்றிய தத்துவார்த்த பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.உலகில் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் ஆரம்பித்தவர்களில் சண்ணும் ஒருவர்.அவரின் ஆங்கிலப் புலமையும் மார்க்சிஸ்ட் — லெனினிஸ்ட் கோட்பாட்டு அறிவும் மாஸ்கோ சார்பு கட்சிகளுடனான உலகளாவிய விவாதங்களில் அவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நிறைவான ஒரு பிரதிநிதியாக மிளிர வைத்தன. அந்த காலகட்டத்தின் அரசியல் நூல்களினதும் பிரசுரங்கள் மற்றும் தொகுப்புக்களின் வரலாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்று அறியப்பட்ட மாவோவாதிகள் தங்களது ஆற்றல்களுக்கு அப்பால் — அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் செல்வாக்குமிக்க பங்களிப்பைச் செய்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது. சண் ஆங்கிலத்தில் எழுதியவை உலகம் பூராவும் கம்யூனிஸ்ட் கற்கைகள் மாணவர்களினால் மாவோவாதம் தொடர்பான பிரதான வளமூலமாகவும் ஆதாரமாகவும் கருதப்பட்டன. இருந்தாலும், இலங்கைக்குள் சண் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இருக்கவில்லை.தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவரான அவர் வயதில் முதிர்ந்தவராகவும் இருந்தார் ; நெடுங்காலமாக முதுகில் ஒரு நோயினாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் ; வாழ்க்கைமுறையும் மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குரியதாகவே இருந்தது.அதனால் ஒரு மொழியை மாத்திரம் பயன்படுத்துகின்ற சிங்கள சமூகத்தளத்துடன் இயல்பாக ஒன்றிணைய முடியாதவராகவும் தான் போதித்ததை நடைமுறைப்படுத்த முடியாதவராகவும் அவர் இருந்தார். ஆனால், சண்ணின் மறைமுக செல்வாக்கு மிகவும் கணிசமானதாக இருந்தது.மாவோவின் படைப்புக்கள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.அவற்றின் தத்துவார்த்த செல்வாக்கு சண்ணின் கட்சி உறுப்பினர்களுக்கு அப்பாலும் விரிவடைந்தது.( உதாரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என்னை விடவும் சிரேஷ்ட மாணவனாக இருந்தபோது தீவிரமான ஒரு மாவோவாதி –அதேவேளை அவரோ என்னை ஸ்ராலினிஸ்ட் என்று அழைக்கிறார் ) ஜே.வி.பி.யும் சண்ணும் ஜனதா விமுக்தி பெரமுனவை ( ஜே.வி.பி.)தத்துவார்த்த அடிப்படையில் கடுமையாக விமர்சித்த சணணும் கூட 1971 ஏப்ரில் கிளர்ச்சி வெடித்தபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க புரட்சிவாதிகள் எல்லோரையும் ஒரே மாதிரியாகவே நோக்கினார்.சிறையில் இருந்த நாட்களில் சண் அவரது சிறந்த படைப்புக்களை எழுதினார்.விடுதலையான பிறகு அவை நூல்களாக வெளியிடப்பட்டன. சிறையில் இருந்து அவர் வெளியே வந்தபோது அவரது கட்சி பிளவுண்டது. ஒரு பிரிவினர் சீனாவின் புதிய வெளியுறவுக்கொள்கையை ஆதரித்தனர். அந்த கொள்கையை இலங்கையிலும் சூடானிலும் சீனா கடைப்பிடித்த அணுகுமுறையின் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.கம்யூனிஸ்டுகளுக்கும் சோவியத் யூனியனின் செல்வாக்கிற்கு உள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடதுசாரிகளுக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கங்களை சீனா ஆதரித்தது.சீனாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட அந்த வலது நோக்கிய நகர்வு றிச்சர்ட் நிக்சனின் கீழ் இருந்த அமெரிக்காவுடனான பெய்ஜிங்கின் புதிய நல்லிணக்கப்போக்கின் விளைவானதே. சீனாவின் போக்கு மாறினாலும் கூட, சண்முகதாசன் முற்றுமுழுதாக கைவிடப்படவில்லை.சீனாவில் டெங் சியாவோபிங் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதாக குற்றஞ்சாட்டி அவரை எதிர்த்த சண்முகதாசன் அல்பேனியாவை ஆதரித்தார். பிறகு அல்பேனியாவையும் நிராகரித்த அவர் பெருமளவுக்கு குறுகிப்போய்விட்ட தனது கட்சி புரட்சிகர சர்வதேசிய இயக்கத்துடன் (Revolutionary International Movment – RIM) இணைந்து செயற்பட வழிகாட்டினார். இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், நேபாளத்தின் மாவோயிஸ்டுகள் உட்பட ஆசியாவில் தீவிர மாவோவாத கிளர்ச்சிகளை நடத்திய கட்சிகளை அந்த இயக்கம் இணைத்துச் செயற்பட்டது. இந்தியாவின் மாவோவாத இயக்கத்தின் மிகவும் மூத்த தலைவரும் நக்சலைட் இயக்கத்தின் தலைமறைவு அமைப்பான மக்கள் போர்க் குழுவின் (Peoples war Group) பிரதி தலைவருமான கோதண்டராமனை நான் 1983 டிசம்பரில் சந்தித்து பேசிய போது அவர் கூறிய விடயங்களில் இருந்து உபகண்ட மாவோவாத இயக்கத்தின் மீது சண் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவருக்கு இருந்த மதிப்பையும் என்னால் அறியக்கூடியதாக இருந்தது. 1960 களின் பிற்பகுதியில் சண்ணின் மாவோவாத கட்சியின் யாழ்ப்பாணக் கிளை முழுவீச்சாக செயற்பட்டவேளையில் முன்னெடுத்த வெகுஜன வன்முறைப்போராட்டம் இந்தியாவில் பிரதானமாக தமிழ்நாட்டில் சாதி அடக்குமுறைக்கு எதிரான நக்சலைட்டுக்களின் இன்றைய போராட்டங்களுக்கு முன்மாதிரியானவையாக இருந்தன எனலாம். அந்த போராட்டம் பிறகு வளர்ந்து வந்த தமிழ்ப் பிரிவினவாத இயக்கத்தினால் பதிலீடு செய்யப்பட்ட போதிலும் அந்த இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவுகள் மாவோ வாதிகளினால் நடத்தப்பட்ட போராட்டங்களின் செல்வாக்குக்குட்பட்டவைகளாகவும் , அந்த போராட்டங்கள் மீது கனிசமான மதிப்பு கொண்டவையாகவும் இருந்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தாபக தலைவரான கே.பத்மநாபா தனக்கு ஆயுதப்பயிற்சி அளித்த பாலஸ்தீன இடதுசாரி இயக்கமான பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் (பி.எப்.எல்.பி) மாபெரும் தலைவரான டாக்டர். ஜோர்ஜ் ஹபாஷி குன்றி வரும் உடல் நிலை குறித்து சிந்திக்க வில்லை. ஆனால் ‘தோழர் சண் எப்படி இருக்கிறார்?’ என்று அக்கறையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். தேசிய விடுதலை போராட்ட சுலோகத்தை கையில் எடுத்த போதிலும், இலங்கை மாவோ வாத இயக்கத்தின் தாபகத் தந்தை ஒரு தமிழராக இருந்த போதிலும் , குறுகிய காலமே நீடித்த ஒரு சிறிய குழுவான தமிழீழ தேசிய விடுதலை முன்னணியைத் (என்.எல்.எப்.டி) தவிர தமிழீழ ஆயுத போராட்ட இயக்கங்களில் வேறு எதுவும் மாவோவாத்தை பின்பற்றவில்லை. பிறகு அந்த முன்னணியிலிருந்தும் ஒரு பிரிவினர் பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி;(பி.எல்.எப்.டி) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். தமிழ் தீவிரவாதிகளுக்கு ஆலோசனை 1980 களின் நடுப்பகுதியில் சண்முகதாசனினால் எழுதப்பட்ட கட்டுரைகள் ( லங்கா கார்டியனில் பிரசுரிக்கப்பட்டவை) மக்கள் போராட்டத்தின் போது போராளிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு நினைவுப்படுத்தின. தீவிரவாத இளம் போராளிகள் அப்பட்டமான பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடாது. குடிமக்களை கொல்லக் கூடாது என்று அந்த கட்டுரைகள் மூலம் சண்முகதாசன் தமிழ் இயக்கங்களை எச்சரிக்கை செய்து வெகுஜன இயக்க அரசியலை அடிப்படையாக கொண்ட நீடித்த மக்கள் போர்க் கோட்பாட்டை போதித்தார். சகல அரசியல் அதிகாரமும் துப்பாக்கி குழலிலிருந்தே பிறக்கின்றன. ஆனால் துப்பாக்கியை கட்சி வழிநடத்த வேண்டுமே தவிர, துப்பாக்கி கட்சியை வழிநடத்த கூடாது என்ற மாவோவின் மேற்கோளையும் அவர் தமிழ் இளைஞர்களுக்கு சுட்டிக்காட்டினார். வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘வரலாற்றில்’ மிகப் பெரிய கொரில்லாப்போரை வழிநடத்திய மகத்தான தத்துவவாதியான மாவோவுடன் அருகாக இருந்து கலந்துரையாடி கற்றுக் கொண்ட இந்த மூத்த தமிழ் தலைவரின் ஆலோசனைக்கு செவிமடுத்திருந்தால், அவரும் அவரது போராளிகளும் நந்திகடலோரத்தில் அழிக்கப்படாமல் இருந்திருக்கலாம். எனது தந்தையார் மேர்வின் டி சில்வாவும் (அவரின் 21 ஆவது நினைவுதினம் கடந்தவாரம் வந்தது) சண்ணும் நெருங்கிய நண்பர்கள். மேர்வின் அவரை மிகவும் அன்பாக ‘மாவோ சே –.சண்’ என்று அழைப்பார். கொழும்பு வார்ட் பிளேஸினில் நாங்கள் வசித்த தொடர்மாடி வாடகை வீட்டுக்கு சண் அடிக்கடி வருவது வழக்கம். அவரது கொள்ளுப்பிட்டி ஸ்கொபீல்ட் பிளேஸ் வீட்டுக்கு சென்று மேர்வின் விருந்துண்பார். எனது தந்தையாரும் அவரும் சீன வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு அரசியல் மற்றும் உட்கட்சி செயற்பாட்டுமுறை குறித்து ஆழமாக கலந்துரையாடி விவாதிப்பார்கள். மேர்வின் சிலோன் டெய்லி நியூஸ், சன்டே ஒப்சேர்வர் மற்றும் லங்கா கார்டியன் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்த போது சண்ணின் கட்டுரைகளை மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தனது நண்பர் பீட்டர் கெனமனின் மனத்தாபங்களுக்கு மத்தியிலும் பிரசுரிக்க ஒருபோதும் தவறியதில்லை. நான் எனது பதின் அகவை வயதுக்குள் பிரவேசிக்கும் போது மாவோவை வாசிக்க தொடங்கினேன். அதற்கு தோழர் சண் தான் காரணம்.அவர் சீனாவுக்கு சென்று திரும்பி வரும் போது பாடசாலை மாணவனாக இருந்த எனக்கு பொன்வண்ணத்திலான மாவோ பட்டிகளையும் ஆடைகளையும் ‘மாவோவின் சிந்தனைகள்’ என்ற சிறிய கையடக்க நூலினதும் , மாவோவின் கவிதைகளினதும் பல்வேறுபதிப்புகளையும் கொண்டுவருவார். 1980 களில் நான் ஒரு இளைஞனாக இருந்த போது ‘கிளர்ச்சி செய்வது சரியானதே’ என்ற மாவோவின் தத்துவார்த்த ஆணையினால் தூண்டப்பட்டு சில போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறகு அடுத்த தசாப்தத்தில் என்னை பாதுகாத்துக் கொள்ள மறைந்திருக்க வேண்டியிருந்தது. அப்போது சில வாரங்கள் தோழர் சண் எனக்கு புகலிடம் தந்தார். அவ்வாறு செய்ததன் மூலம் அரசினாலும் தொழிற்சங்க தலைவர் எல்.டப்ள்யூ. பண்டித போன்ற மூத்த இடதுசாரி தலைவர்களை ஏற்கனவே கொலை செய்த ஜே.வி.பி.னாலும் அவருக்கு ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலை இருந்தது. சண்ணுடன் தங்கியிருந்த அந்த நாட்களில் பின்னிரவு வரை மேல் மாடியில் இருவரும் பல அரசியல் விவகாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்போம். ஒரு இரவு சம்பாஷனையின் போது அவர் ‘கோட்பாட்டு விடயங்களில் நான் தூய்மையானவன் ‘ (In matters of ideology , I am a Brahmin)என்று கூறியது அவரின் பிறந்ததின நூற்றாண்டில் என் மனதில் அழியாத நினைவாக இருக்கிறது. http://www.samakalam.com/செய்திகள்/மாவோவாத-இயக்கத்துக்கு-ச/

– கலாநிதி ஜெகான் பெரேரா

அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன்.

கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மனிதகுல வரலாற்றில் மிகவும் ஆபத்தான கட்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் ‘ என்று உலகின் மிகவும் புகழ்பெற்ற — செல்வாக்குமிக்க அறிவுஜீவி நோம் சோம்ஸ்கி  அண்மைய நேர்காணலொன்றில் கூறியிருந்தார்.

இதையடுத்து இன்னொரு நேர்காணலில் சோம்ஸ்கி அமெரிக்காவில் தற்போது மூண்டிருக்கும் ஆர்ப்பாட்ட அலைகளைப்பற்றி கூறுகையில், ‘ இன்றைய ஆர்ப்பாட்டங்களில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற – முன்னென்றும் இல்லாத வகையிலான அவற்றின் வீச்சும் பரந்தளவில் மக்களின் பங்கேற்பும் ஆதரவுமே கவனத்தை தூண்டும் முதல் அம்சங்களாக இருக்கின்றன.அபிப்பிராய வாக்கெடுப்புகளை நோக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.கறுப்பர்களின் உயிர்கள் முக்கியமானவை (Black Lives Matter)  என்ற இயக்கத்துக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் கிடைத்துவருகின்ற மக்கள் ஆதரவு ‘ எனக்கு ஒரு கனவு இருக்கிறது ‘ ( I have a dream ) என்ற உரையை மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய காலகட்டத்தில் அவருக்கு இருந்த மிகவும் உயர்ந்த செல்வாக்கையும் விட மிகவும் உச்சமானதாக இருக்கிறது ‘ என்று குறிப்பிட்டிருக்கிறார் ( ஜாகோபின் சஞ்சிகை 2020 ஜூன் ).

‘கறுப்பர்களின் உயிர்கள் முக்கியமானவை ‘ என்ற இயக்கமே மையமாக விளங்குகின்ற போதிலும், பலம்பொருந்திய இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்களில் 61 சதவீதமானவர்கள் வெள்ளையினத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஆர்ப்பாட்ட இயக்கத்தின் வரலாற்று வேர்களை விளங்கிக்கொள்ளுமுகமாக பழைய கறுப்பு பந்தர் கட்சியின் (Black Panther Party) தலைவர்களின் வரலாற்றை அமெரிக்க ஊடகங்கள் திரும்பிப்பார்ப்பதில் இப்போது நாட்டம் காட்டுகின்றன. கறுப்பு பந்தர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பில்லி எக்ஸ்.ஜென்னிங்ஸை ‘ கவுன்ரர் பஞ்ச் ‘   (Counterpunch)  சஞ்சிகை அண்மையில் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நேர்காணல் செய்தது.

கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், ‘ கறுப்பு பந்தர் கட்சியில் நான் முதலில்FB_IMG_1557060845276 
 
இணைந்தபோது தலைவர் மாவோ சே துங்கின் மேற்கோள்கள் என்ற நூலை (Quotations from Chairman Mao Tse  -tung) வாசித்தேன். ஒரு சிறு பொறியினால் காட்டுத்தீயை மூளவைக்க முடியும் (A single spark can start a prairie fire)  என்று மாவோ கூறினார். பிளாய்டின் கொலைக்குப் பிறகு அமெரிக்க வீதிகளில் அந்த  பொறியை நாம் காண்கின்றோம் ‘ என்று சொன்னார்.

மாவோ சேதுங் 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் ஒரு மாபெரும் தலைவர் ; நவீன காலத்தின் ஒரு தலைசிறந்த வரலாற்றுப் படைப்பாளி பல தலைமுறைகளின் மீது தத்துவார்த்த – சிந்தனைச்  செல்வாக்கை செலுத்திய மாமனிதர். இன்றும் கூட தலைசிறந்த பிரெஞ்சு தத்துவஞானி அலெய்ன் பாடியோ தன்னை ஒரு மாவோவாதி என்றே கருதுகிறார்.

  1968 ஆர்ப்பாட்டங்களின்போது சேகுவேரா, ஹோசிமின், மாவோ சேதுங் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிச்செல்லப்பட்டதைப் போன்று இன்று அமெரிக்காவிலும் உலகிலும் கிளம்பியிருக்கும் ஆர்ப்பாட்ட அலையில் காணக் கூடியதாக இருக்கவில்லை என்ற போதிலும், அதில் பங்கேற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் கிளர்ச்சி உணர்வில் மாவோவின் சிந்தனையின்  பொருத்தப்பாட்டை  காணக்கூடியதாக இருக்கிறது.ஏனென்றால், ‘ கிளர்ச்சி செய்வது சரியானதே ‘ (It is Right to Rebel) என்பது மாவோவின் சிறந்த  சுலோகங்களில் ஒன்றாகும்.இந்த சுலோகத்தில் மார்க்சியத்தின் சாராம்சம் பொதிந்திருக்கிறது என்று அவர் நம்பினார்.

செங்காவலர் அணிவகுப்பில் மாவோவுக்கு அருகில் சண்

மாவோவை நன்கு தெரிந்த தோழர் சண் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சண் மாவோவை சந்தித்து கலந்துரையாடிய ஒரே இலங்கையர் மாத்திரமல்ல, தெற்காசியாவைச் சேர்ந்த சிலரில் ஒருவருமாவார்.நக்சலைட்டுகள் என்று நன்கு  அறியப்பட்ட இந்தியாவின் மாவோவாத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் — லெனினிஸ்ட் ) யின் தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்தித்ததில்லை.ஆனால், கலாசாரப்புரட்சியின் உச்சக்கட்டத்தின்போது பெய்ஜிங் தியனென்மென் சதுக்கத்தில் 15 இலட்சம் செங்காவலர்களின் அணிவகுப்பை மாவோ பார்வையிட்டபோது அவருக்கு அருகில்  சண் நின்றார். செங்காவலர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சண்ணின் மாவோவாத கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் கருத்தூன்றிய அக்கறைகொண்ட புரட்சிவாதிகளுக்கான இரு பாதைகளில் ஒன்றாக விளங்கியது. மற்றையது டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவுடன் அடையாளப்படுத்திக்கொண்ட மாஸ்கோ சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ தென்திசைப்போக்கு ‘ அணியாகும். உண்மையில் இவற்றை இரு பாதைகள் என்பதை விடவும் ஒரே பாதையென்று கூறுவதே பொருத்தமாகும். ஏனென்றால், இலங்கையின் மாவோவாதிகளில் பலர்  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தென்னிலங்கையரான எஸ்.ஏ. விக்கிரமசிங்கவின் அணியில் இருந்து வந்தவர்களே.

மார்க்சிய — லெனினிய கற்கைக்கான ‘ பல்கலைக்கழகத்தின்  தாபகராகவும் உபவேந்தராகவும்’ சண்ணை நோக்கலாம். தென்பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன, வடபகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன மானசீகமான செயல் ஈடுபாடுகொண்ட இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியும் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்களே. ஆனால், அவர்கள் அங்கே ஒருபோதும்  நிலைத்திருக்கவில்லை. ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) ஒரு மாவோவாத இயக்கம் அல்ல என்றபோதிலும், அது மாவோவாத இயக்கத்தின் மடியில் இருந்து தோன்றியது என்பதும் அதன் முக்கியமான உறுப்பினர்கள் பெரும்பாலும் முன்னாள் மாவோவாதிகளே என்பதும் இலங்கையின் மாவோவாதத்தின் விளைவளத்திற்கு சான்றாகும்.

IMG_20200704_184019
 
சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாவோவாதிகள் 1964 ஆம் ஆண்டில் பிரிந்துசென்றபோது புதிய இயக்கம் மாஸ்கோ சார்பு கட்சியின் பிரதான தொழிற்சங்கங்களை ( இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் ) அதன் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்லக்கூடியதாக இருந்தது என்பது அதன் தனித்துவத்தை வெளிக்காட்டியது.உலகின் பெரும்பாலான பாகங்களில் அவ்வாறு நடந்தது மிகவும் அரிதேயாகும்.இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்துக்கு  சண்முகதாசனே  தலைமை தாங்கினார்.அகில இலங்கை விவசாயிகள் காங்கிரஸின் முன்னணி உறுப்பினர்களும் சண்முகதாசனுடனேயே கூடச்  சென்றார்கள்.

இலங்கையின் மாவோவாத இயக்கத்தின் தலைவர்  சர்வதேசரீதியில் ஆற்றிய தத்துவார்த்த பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.உலகில் மாஸ்கோ சார்பு  கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் ஆரம்பித்தவர்களில் சண்ணும் ஒருவர்.அவரின் ஆங்கிலப் புலமையும் மார்க்சிஸ்ட் — லெனினிஸ்ட் கோட்பாட்டு அறிவும் மாஸ்கோ சார்பு கட்சிகளுடனான உலகளாவிய விவாதங்களில் அவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நிறைவான ஒரு பிரதிநிதியாக மிளிர வைத்தன.

அந்த காலகட்டத்தின் அரசியல் நூல்களினதும் பிரசுரங்கள் மற்றும் தொகுப்புக்களின் வரலாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்று அறியப்பட்ட மாவோவாதிகள் தங்களது ஆற்றல்களுக்கு அப்பால் — அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் செல்வாக்குமிக்க பங்களிப்பைச் செய்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது. சண் ஆங்கிலத்தில் எழுதியவை உலகம் பூராவும் கம்யூனிஸ்ட் கற்கைகள் மாணவர்களினால் மாவோவாதம் தொடர்பான பிரதான வளமூலமாகவும் ஆதாரமாகவும் கருதப்பட்டன.

இருந்தாலும், இலங்கைக்குள் சண் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இருக்கவில்லை.தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவரான அவர் வயதில் முதிர்ந்தவராகவும் இருந்தார் ; நெடுங்காலமாக முதுகில் ஒரு நோயினாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் ; வாழ்க்கைமுறையும்  மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குரியதாகவே இருந்தது.அதனால் ஒரு மொழியை மாத்திரம் பயன்படுத்துகின்ற சிங்கள சமூகத்தளத்துடன் இயல்பாக ஒன்றிணைய முடியாதவராகவும் தான் போதித்ததை நடைமுறைப்படுத்த முடியாதவராகவும் அவர் இருந்தார்.

ஆனால், சண்ணின் மறைமுக செல்வாக்கு மிகவும் கணிசமானதாக இருந்தது.மாவோவின் படைப்புக்கள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.அவற்றின் தத்துவார்த்த செல்வாக்கு சண்ணின் கட்சி உறுப்பினர்களுக்கு அப்பாலும் விரிவடைந்தது.( உதாரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என்னை விடவும் சிரேஷ்ட மாணவனாக இருந்தபோது தீவிரமான ஒரு மாவோவாதி –அதேவேளை அவரோ என்னை ஸ்ராலினிஸ்ட் என்று அழைக்கிறார் )

ஜே.வி.பி.யும் சண்ணும்

ஜனதா விமுக்தி பெரமுனவை ( ஜே.வி.பி.)தத்துவார்த்த அடிப்படையில் கடுமையாக விமர்சித்த சணணும் கூட  1971 ஏப்ரில் கிளர்ச்சி வெடித்தபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க புரட்சிவாதிகள் எல்லோரையும் ஒரே மாதிரியாகவே நோக்கினார்.சிறையில் இருந்த நாட்களில் சண் அவரது சிறந்த படைப்புக்களை எழுதினார்.விடுதலையான பிறகு அவை நூல்களாக வெளியிடப்பட்டன.

சிறையில் இருந்து அவர் வெளியே வந்தபோது அவரது கட்சி பிளவுண்டது. ஒரு பிரிவினர் சீனாவின் புதிய வெளியுறவுக்கொள்கையை ஆதரித்தனர். அந்த கொள்கையை  இலங்கையிலும் சூடானிலும் சீனா கடைப்பிடித்த அணுகுமுறையின் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.கம்யூனிஸ்டுகளுக்கும்  சோவியத் யூனியனின் செல்வாக்கிற்கு உள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடதுசாரிகளுக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கங்களை சீனா ஆதரித்தது.சீனாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட அந்த வலது நோக்கிய நகர்வு றிச்சர்ட் நிக்சனின் கீழ் இருந்த அமெரிக்காவுடனான பெய்ஜிங்கின் புதிய  நல்லிணக்கப்போக்கின் விளைவானதே.

சீனாவின் போக்கு மாறினாலும் கூட, சண்முகதாசன் முற்றுமுழுதாக கைவிடப்படவில்லை.சீனாவில் டெங் சியாவோபிங்  முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதாக குற்றஞ்சாட்டி அவரை எதிர்த்த சண்முகதாசன் அல்பேனியாவை ஆதரித்தார். பிறகு அல்பேனியாவையும் நிராகரித்த அவர் பெருமளவுக்கு குறுகிப்போய்விட்ட தனது கட்சி புரட்சிகர சர்வதேசிய இயக்கத்துடன் (Revolutionary International Movment – RIM) இணைந்து செயற்பட வழிகாட்டினார். இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், நேபாளத்தின் மாவோயிஸ்டுகள் உட்பட ஆசியாவில் தீவிர மாவோவாத கிளர்ச்சிகளை நடத்திய கட்சிகளை அந்த இயக்கம் இணைத்துச் செயற்பட்டது.

 இந்தியாவின் மாவோவாத இயக்கத்தின் மிகவும் மூத்த தலைவரும் நக்சலைட் இயக்கத்தின் தலைமறைவு அமைப்பான மக்கள் போர்க் குழுவின் (Peoples war Group) பிரதி தலைவருமான கோதண்டராமனை நான் 1983 டிசம்பரில் சந்தித்து பேசிய போது அவர் கூறிய விடயங்களில் இருந்து உபகண்ட மாவோவாத இயக்கத்தின் மீது சண் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவருக்கு இருந்த மதிப்பையும் என்னால் அறியக்கூடியதாக இருந்தது.

1960 களின் பிற்பகுதியில் சண்ணின் மாவோவாத கட்சியின் யாழ்ப்பாணக் கிளை முழுவீச்சாக செயற்பட்டவேளையில் முன்னெடுத்த வெகுஜன வன்முறைப்போராட்டம் இந்தியாவில் பிரதானமாக தமிழ்நாட்டில் சாதி அடக்குமுறைக்கு எதிரான நக்சலைட்டுக்களின் இன்றைய போராட்டங்களுக்கு முன்மாதிரியானவையாக இருந்தன எனலாம்.

 அந்த போராட்டம் பிறகு வளர்ந்து வந்த தமிழ்ப் பிரிவினவாத இயக்கத்தினால் பதிலீடு செய்யப்பட்ட போதிலும் அந்த இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவுகள் மாவோ வாதிகளினால் நடத்தப்பட்ட போராட்டங்களின் செல்வாக்குக்குட்பட்டவைகளாகவும் , அந்த போராட்டங்கள் மீது கனிசமான மதிப்பு கொண்டவையாகவும் இருந்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தாபக தலைவரான கே.பத்மநாபா தனக்கு ஆயுதப்பயிற்சி அளித்த பாலஸ்தீன இடதுசாரி இயக்கமான பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் (பி.எப்.எல்.பி) மாபெரும் தலைவரான டாக்டர். ஜோர்ஜ் ஹபாஷி குன்றி வரும் உடல் நிலை குறித்து சிந்திக்க வில்லை. ஆனால் ‘தோழர் சண் எப்படி இருக்கிறார்?’ என்று அக்கறையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

தேசிய விடுதலை போராட்ட சுலோகத்தை கையில் எடுத்த போதிலும், இலங்கை மாவோ வாத இயக்கத்தின் தாபகத் தந்தை ஒரு தமிழராக இருந்த போதிலும் , குறுகிய காலமே நீடித்த ஒரு சிறிய குழுவான தமிழீழ தேசிய விடுதலை முன்னணியைத் (என்.எல்.எப்.டி) தவிர தமிழீழ ஆயுத போராட்ட இயக்கங்களில் வேறு எதுவும் மாவோவாத்தை பின்பற்றவில்லை. பிறகு அந்த முன்னணியிலிருந்தும் ஒரு பிரிவினர் பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி;(பி.எல்.எப்.டி) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர்.

தமிழ் தீவிரவாதிகளுக்கு ஆலோசனை

1980 களின் நடுப்பகுதியில் சண்முகதாசனினால் எழுதப்பட்ட கட்டுரைகள் ( லங்கா கார்டியனில் பிரசுரிக்கப்பட்டவை) மக்கள் போராட்டத்தின் போது போராளிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு நினைவுப்படுத்தின. தீவிரவாத இளம் போராளிகள் அப்பட்டமான பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடாது. குடிமக்களை கொல்லக் கூடாது என்று அந்த கட்டுரைகள் மூலம் சண்முகதாசன் தமிழ் இயக்கங்களை எச்சரிக்கை செய்து வெகுஜன இயக்க அரசியலை அடிப்படையாக கொண்ட நீடித்த மக்கள் போர்க் கோட்பாட்டை போதித்தார். சகல அரசியல் அதிகாரமும் துப்பாக்கி குழலிலிருந்தே பிறக்கின்றன. ஆனால் துப்பாக்கியை கட்சி வழிநடத்த வேண்டுமே தவிர, துப்பாக்கி கட்சியை வழிநடத்த கூடாது என்ற மாவோவின் மேற்கோளையும் அவர் தமிழ் இளைஞர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘வரலாற்றில்’ மிகப் பெரிய கொரில்லாப்போரை வழிநடத்திய மகத்தான தத்துவவாதியான மாவோவுடன் அருகாக இருந்து கலந்துரையாடி கற்றுக் கொண்ட இந்த மூத்த தமிழ் தலைவரின் ஆலோசனைக்கு செவிமடுத்திருந்தால், அவரும் அவரது போராளிகளும் நந்திகடலோரத்தில் அழிக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

எனது தந்தையார் மேர்வின் டி சில்வாவும் (அவரின் 21 ஆவது நினைவுதினம் கடந்தவாரம் வந்தது) சண்ணும் நெருங்கிய நண்பர்கள். மேர்வின் அவரை மிகவும் அன்பாக ‘மாவோ சே –.சண்’ என்று அழைப்பார். கொழும்பு வார்ட் பிளேஸினில் நாங்கள் வசித்த தொடர்மாடி வாடகை வீட்டுக்கு சண் அடிக்கடி வருவது வழக்கம். அவரது கொள்ளுப்பிட்டி ஸ்கொபீல்ட் பிளேஸ் வீட்டுக்கு சென்று மேர்வின் விருந்துண்பார். எனது தந்தையாரும் அவரும் சீன வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு அரசியல் மற்றும் உட்கட்சி செயற்பாட்டுமுறை குறித்து ஆழமாக கலந்துரையாடி விவாதிப்பார்கள். மேர்வின் சிலோன் டெய்லி நியூஸ், சன்டே ஒப்சேர்வர் மற்றும் லங்கா கார்டியன் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்த போது சண்ணின் கட்டுரைகளை மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தனது நண்பர் பீட்டர் கெனமனின் மனத்தாபங்களுக்கு மத்தியிலும் பிரசுரிக்க ஒருபோதும் தவறியதில்லை.

நான் எனது பதின் அகவை வயதுக்குள் பிரவேசிக்கும் போது மாவோவை வாசிக்க தொடங்கினேன். அதற்கு தோழர்  சண் தான் காரணம்.அவர் சீனாவுக்கு சென்று திரும்பி வரும் போது பாடசாலை மாணவனாக இருந்த எனக்கு பொன்வண்ணத்திலான மாவோ பட்டிகளையும் ஆடைகளையும் ‘மாவோவின் சிந்தனைகள்’ என்ற சிறிய கையடக்க நூலினதும் , மாவோவின் கவிதைகளினதும் பல்வேறுபதிப்புகளையும் கொண்டுவருவார்.

1980 களில் நான் ஒரு இளைஞனாக இருந்த போது ‘கிளர்ச்சி செய்வது சரியானதே’ என்ற மாவோவின் தத்துவார்த்த ஆணையினால் தூண்டப்பட்டு சில போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறகு அடுத்த தசாப்தத்தில் என்னை பாதுகாத்துக் கொள்ள மறைந்திருக்க வேண்டியிருந்தது. அப்போது சில வாரங்கள் தோழர் சண் எனக்கு புகலிடம் தந்தார். அவ்வாறு செய்ததன் மூலம் அரசினாலும்  தொழிற்சங்க தலைவர் எல்.டப்ள்யூ. பண்டித போன்ற மூத்த இடதுசாரி தலைவர்களை ஏற்கனவே கொலை செய்த ஜே.வி.பி.னாலும் அவருக்கு ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலை இருந்தது.

சண்ணுடன் தங்கியிருந்த அந்த நாட்களில் பின்னிரவு வரை மேல் மாடியில் இருவரும் பல அரசியல் விவகாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்போம். ஒரு இரவு சம்பாஷனையின் போது அவர் ‘கோட்பாட்டு விடயங்களில் நான் தூய்மையானவன் ‘ (In matters of ideology , I am a Brahmin)என்று கூறியது அவரின் பிறந்ததின நூற்றாண்டில் என் மனதில் அழியாத நினைவாக இருக்கிறது.

http://www.samakalam.com/செய்திகள்/மாவோவாத-இயக்கத்துக்கு-ச/

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை" அமல் - என்ன நடக்கிறது அங்கே?

1 year 2 months ago
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை" அமல் - என்ன நடக்கிறது அங்கே? 19 ஜூலை 2020, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் "போர்க்கால அவசரநிலை" அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பிப்ரவரி - மார்ச் மாதத்துக்குப் பிறகு பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 20 நாடுகளில் கூட சீனா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, சீனாவில் இதுவரை 85,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது, 4,600 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்? கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன? உரும்கியில் என்ன நடக்கிறது? ஷின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியில் 35 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாகக் கடந்த புதன்கிழமை முதல் உரும்கியில் புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சீனாவின் மற்ற நகரங்களிலிருந்து உரும்கிக்கும், அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் செல்ல இருந்த கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், நகர ரயில் சேவையும் முற்றிலும் முடக்கப்பட்டது. உரும்கியில் இதுவரை புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று கூறிய அதிகாரிகள், "ஒட்டுமொத்த நகரமும் போர்க்கால அவசரநிலையை சந்தித்து வருகிறது. அனைத்துவிதமான குழு செயல்பாடுகளும் தடைசெய்யப்படுகின்றன" என்று தெரிவித்தனர். உரும்கியில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள முடக்க நிலை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முதலில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும்; பிறகு அது உரும்கி முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். ஒருவர் மற்றொருவரின் வீட்டிற்கு செல்லவும், அதிக எண்ணிக்கையிலானோர் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை இருந்தால் மட்டுமே உரும்கி மக்கள் வேறு நகரங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு முன்னர், கட்டாயம் நோய்த்தொற்று பரிசோதனை செய்திருக்க வேண்டும். உரும்கியின் தியான்ஷான் மாவட்டத்தில் தொற்று மூலம் கண்டறியப்பட்டதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குநர் ருய் பாலிங் கூறினார். "நோய்த்தொற்று வேகமாக பரவியுள்ளது" என்றாலும், "நிலைமை பொதுவாக கட்டுப்படுத்தக்கூடியது" என்று அவர் கூறினார். இந்த நிலையில், ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இந்த வாரம் இதுவரை நோய்த்தொற்று அறிகுறியற்ற 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 269 பேர் "தீவிர மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்." ஷின்ஜியாங் மாகாணமும் சர்ச்சைகளும் Getty Images சீனாவின் இந்த ஷின்ஜியாங் மாகாணத்தில்தான் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு நாடுகளால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்த மாகாணத்தில் உள்ள வீகர் இன முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது. அதேவேளையில், ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படவில்லை என சீனா மறுத்து வருகிறது. எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுவதையும் சீனா மறுத்தது. அண்மைக் காலமாக மறுகல்வி முகாம்களில் பல லட்சம் மக்களை சீன அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தைத் தடுக்க அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/global-53460942

முதலமைச்சராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றீர்கள்? ‘சி.வி’யின் பதில் என்ன??

1 year 2 months ago
முதலமைச்சராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றீர்கள்? ‘சி.வி’யின் பதில் என்ன?? July 18, 2020 வனஜன் விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள கேள்விக்கான பதில்கள் வருமாறு: ஒரு மாகாணத்தின் முதல்வராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிடத் தேவைதானா? பதில்; தேவை. மக்கள் சேவையை வழி நடத்த அதிகாரம் தேவையாக இருக்கின்றது. மக்கள் சேவை எனும் போது மக்களை ஒன்றிணைப்பது, அவர்களின் வாழ்வாதாரம் உள்ளடங்கலான அன்றாட பிரச்சனைகளைத் தீர்ப்பது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை உறுதிப்படுத்தல், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என்று பலவும் அதனுள் அடங்கும். முதல்வர் என்ற பதவியை அனுபவித்துவிட்டு, அதன் கௌரவங்களுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பும் ஒருவர் ஓய்வை நோக்கிச் செல்லலாம். ஆனால் முதல்வர் பதவிக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நான் அங்கம் வகித்த கட்சியின் தலைமைத்துவத்தின் ஏமாற்றுதல்களையும் கண்ட பிறகு ஓய்வெடுப்பது சுயநலச் செயலாக நான் கருதினேன். எம் மக்களுக்கு கொள்கை ரீதியான ஒரு மாற்று அரசியல் பாதையை உருவாக்கிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால்தான் இந்தப் பயணம். எங்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் பல ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வருகின்றார்கள். அவர்கள் சேவை மனப்பான்மையையும் மக்கள் நேய மனோபாவத்தையும் வெளிக் காட்ட வேண்டும். அவ்வாறான மனோபாவத்தை எம் கட்சியினரால் வெளிக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒருவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம் வகித்திருந்தால் அக் கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகவும் தாங்கள் இருந்திருக்க முடியுமல்லவா? பதில்; நான் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வரவே விரும்பவில்லை. அதை பலமுறை கூறியிருக்கின்றேன். முதல்வராக வந்த தொடக்கத்தில் இருந்து பலமுறை கூறி வந்திருக்கின்றேன். ஆனால் வந்த பின் கண்டவை எனக்கு வியப்பை ஊட்டின. தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டும், அதற்காகக் கட்சித் தலைவர்களுக்கு ஆமா போட வேண்டும். கட்சி மூலமாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளில் இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதைவிடுத்து கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற மனோ பாவத்திலேயே எமது பிரதிநிதிகள் இருக்கக் கண்டேன். கட்சித் தலைவர்களும் அதையே எதிர்பார்த்தார்கள். அவர்களைப் போல பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் நான் அரசியலுக்கு வந்திருந்தால் தொடர்ந்தும் முதல்வராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன். நான் இப்போது தமிழ் மக்களின் எதிர்காலத்தை அச்சத்துடன் காண்கின்றேன். கொள்கை ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு வேகம் தான் என்னை இந்த மாற்றுத் தலைமைப் பயணத்திற்குள் கொண்டு வந்துள்ளது. தனியாக அரசியல் பயணத்தை தொடங்கத்தான் வேண்டுமா? பதில்; இந்த நிர்பந்தத்தை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தான் உருவாக்கினார்கள். எனக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை உருவாக்கி, அதை இலங்கை அரசின் பிரதிநிதியான அன்றைய ஆளுரிடம் கொண்டு சென்று கையளித்தார்கள். எந்த ஆளுநர் வேண்டாம் என்றார்களோ, அந்த ஆளுனரிடம் சென்று என்னை எதிர்ப்பதற்காக மண்டியிட்டார்கள். நான் மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்கையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்பட விரும்பியமை அவர்களுக்கு சிக்கலாக இருந்தது. அப்படி சிக்கலானவர்களைவிட்டு நான் கொள்கைப் பற்றுடன் பயணிப்பதுதானே சிறந்தது? தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கியிருக்க என்னை என் மனம் விடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தங்கள் பிரதான விமர்சனம் என்ன? பதில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை ஆதரித்தபோது, எம் மக்களின் பிரச்சினைகள் பலவற்றை தீர்த்திருக்கலாம். அந்தப் பொன்னான வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள். அன்றைக்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையை ஆதரித்தார்கள். வடக்கு கிழக்கில் விகாரைகள் கட்டும் தீர்மானங்களையும் தமிழர்களுக்கு எதிரான பல திட்டங்களையும் ஆதரித்தார்கள். அவற்றின் விளைவுகள்தான் இன்றைக்கு தொல்லியல் ஆக்கிரமிப்புக்கள் எம் மண்ணில் பெருமளவில் நடக்க இடமளித்துள்ளன. அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையை நடத்தவிடாமல் கால அவகாசத்தை வழங்கி, அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் எமது பிரதிநிதிகள் நடந்து கொண்டமை ஏற்கத் தக்கன அல்ல. தமிழ் தலைவர்கள் மக்களுக்கு என்ன கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்; உண்மையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும், கொள்கைப்பற்றும் தான் தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டிய பண்புகள். வேறு கடின விடயம் ஒன்றுமில்லை. நான் வடக்கில் மக்களுடன் மக்களாக வாழ்ந்த காலத்தில்தான் நிறைய விடயங்களை உணர்ந்தேன். எங்கள் மக்கள் நிறைய தியாகங்களைச் செய்தவர்கள். அவர்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. அவர்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. உண்மையில் மக்களுடன் மக்களாக வாழ்வதும் அவர்களுக்கு நேர்மையாக இருப்பதுந்தான் தமிழ்த் தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டும். இராஜதந்திரம் என்ற பெயரில் எம் மக்களுக்குத் துரோகம் இழைக்கக்கூடாது. இன்று மக்களுக்கு இது நன்றாக விளங்குகின்றது. இனியும் அதை எங்கள் அரசியல்வாதிகள் செய்ய முடியாது. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியமையால் எதை சாதித்தீர்கள்? பதில்; இதுவரை காலமும் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது இனப்படுகொலையே என்பதை இந்தத் தீவுக்குள் உள்ள சட்ட ரீதியான அல்லது ஜனநாயக ரீதியான சபை ஒன்றில் நிறைவேற்றியிருப்பதுதான் அதன் முக்கியத்துவம். தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் வடக்கு மாகாண சபையிலுந்தான் இத்தகைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் ஒரு ஆவணமாக மாத்திரமல்லாமல், ஆயுதமாகவும் இருக்க இந்தத் தீர்மானம் வழி வகுத்துள்ளது. அதுதான் இலங்கை அரசுக்கு எம்மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதி;டவசமாக எமது பிரதிநிதிகள் எனப்படுவோருக்கும் அதனால்தான் என்மீது கோபம். இது மிகக் கவலையான விடயம். அவர்கள் தேர்தல் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் பேசிவந்த இனப்படுகொலை என்ற விடயத்தைத் தானே நாம் தீர்மானமாக நிறைவேற்றினோம். ஆனாலும் அதன் காரணமாக அவர்களுக்கு என்மீது ஏன் கோபம் வந்துள்ளது என்பது ஒரு புரியாத விடயமாக உள்ளது. ஒரு வேளை அவர்களின் சுயநலமே அவர்கள் என்னை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும். ஆகவே எமது சுயநல அரசியல்வாதிகளின் முகத் திரையைக் கிழிக்கவும் இந்தத் தீர்மானம் உதவி செய்துள்ளது. மக்களிடம் என்ன கோரிக்கையை முன் வைக்கின்றீர்கள்? பதில்; விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என்று கேட்கின்றேன். ஒரு புதிய அரசியல் சூழல் ஏற்படட்டும். இல்லாது போனால் எங்கள் புனிதங்களை அவமதிப்பவர்களுக்கும் எங்களை ஏமாற்றுபவர்களுக்கும் அங்கீகாரம் அளிப்பதுபோல ஆகும். அது எங்கள் மண்ணுக்கு நாங்களே இழைக்கும் துரோகம் ஆகிவிடும். உங்கள் பயணத்திற்கு மக்கள் எத்தகைய ஆதரவை வழங்குவார்கள் என நினைக்கின்றீர்கள்? பதில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது இளைஞர்களும் மக்களும் திரண்டு வீதிக்கு வந்தார்கள். வடக்கு கிழக்கு எங்குமிருந்து வந்து யாழ்ப்பாணக் கோவில்த் தெருவில் நின்று எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அந்த ஆதரவுக் குரல்தான் என் அரசியல் பயணத்தைத் தூண்டியது. எனக்கான கடமையை உணர்த்தியது. மக்கள் இம்முறை எங்களுக்கு அமோக ஆதரவைத் தருவார்கள். மக்கள் தரும் ஆதரவை அவர்களின் விடியலுக்காகக் கடுமையாகப் பயன்படுத்துவோம். சலுகை அரசியல், வியாபார அரசியல் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் எமது கொள்கையை வலியுறுத்தி ஒரு முன் மாதிரியான புதிய அரசியலைத் தொடங்குவோம் http://thinakkural.lk/article/55872

இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை என தெரிவித்து மோசடி – ஹைதராபாத்தில் இளைஞன் கைது

1 year 2 months ago
இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை என தெரிவித்து மோசடி – ஹைதராபாத்தில் இளைஞன் கைது July 19, 2020 இலங்கையுடன் தொடர்புபட்ட சிறுநீரக மாற்றுசத்திர சிகிச்சை மோடிசடிகும்பலொன்றை சேர்ந்தவரை கைதுசெய்துள்ளதாக இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்து குடும்பமொன்றிடமிருந்து 34 இலட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய இளைஞர் ஒருவரை கைதுசெய்ததன் மூலம் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைதுசெய்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆந்திரபிரதேசத்தின் குண்டுரை சேர்ந்த பவன்ஸ்ரீனிவாஸ் என் 25 வயது இளைஞனை இந்த மோசடி தொடர்பில் முதலில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த இளைஞன் சிறுநீரக தானம் செய்தவன் எனவும் பின்னர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்த பின்னர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஆட்களை ஏற்பாடும் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தான் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இளைஞன் இதுவரை இவ்வாறு ஒன்பது பேருக்கு சிறுநீரக மாற்று சத்திரகிச்சைக்கு உதவியுள்ளான், இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ஆறு இலட்சம் இந்திய ரூபாயினை பெற்றுள்ளான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை தொடர்பில் குறிப்பிட்ட இளைஞனிடம் 34 இலட்சம் வழங்கியதாக குடும்பமொன்றை சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பிட்ட பணத்தை வேண்டிய பின்னர் அந்த இளைஞன் அந்த குடும்பத்தினரின் தொடர்பை துண்டித்துள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியுள்ள தனது கணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வேளை இந்த இளைஞனை தொடர்புகொண்டேன் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ள பெண்ணொருவர் இலங்கையிலும் துருக்கியிலும் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இளைஞன் பணத்தை பெற்றுக்கொண்டான் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பணத்தை பெற்றுக்கொண்ட இளைஞன் இலங்கையில் கசினோவில் பெருமளவு பணத்தை செலவிட்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட இளைஞன் பங்குசந்தையில் பணத்தை இழந்த பின்னர் இலங்கைக்கு சென்று தனது சிறுநீரகத்தை விற்றதும், பின்னர் அதே மருத்துவர்களிடம் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் முகவராக செயற்பட்டமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இளைஞன் சமூக ஊடகங்கள் மூலம் வறியவர்களை இலக்குவைத்து செயற்பட்டுள்ளான். இலங்கையின் மருததுவமனைகளில் சிலருக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்கும் உதவியுள்ளான். http://thinakkural.lk/article/55957

நாங்கள் நாடாளுமன்றம் சென்ற பின்பும் எமது கூட்டணி என்பது இன்னும் விரிவுபடுத்தப்படும்; சுரேஷ்

1 year 2 months ago
நாங்கள் நாடாளுமன்றம் சென்ற பின்பும் எமது கூட்டணி என்பது இன்னும் விரிவுபடுத்தப்படும்; சுரேஷ் July 19, 2020 தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர் இருக்கின்றனர். அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய சகல வேட்பாளர்களும் நவக்கிரகங்கள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளுக்குள் நிற்கின்ற நிலை தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பல பேருடைய நாக்கில் சனி துள்ளி விளையாடுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கக் கூடிய ஒரே தெரிவாக ஒருமித்துச் செயற்படுகின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியே இருப்பதாகவும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.. தேர்தலில் பல்வேறுபட்ட அரசியற் கட்சிகளில் அரசாங்கத்திற்கு சார்பாக இருக்கக் கூடியவர்கள் அதே நேரம் அரச சின்னங்களில் கேட்கக் கூடிய கட்சிகளாக சுயேட்சைக் குழுக்களாக இருக்கக் கூடிய பலர் தாங்கள் வென்று வருவதன் மூலம் அரசாங்கத்தைப் பலப்படுத்தலாம் என்று இருக்கின்றார்கள். ஆகவே இப்போது பல தரப்பினர்கள் ஏறத்தாழ எட்டு முதல் பத்திற்குள் அவர்கள் சுயேட்சைகளாகவும் அரசியல் கட்சிகளாகவும் கோத்தபாயவின் அரசாங்கத்தை பலப்படுத்தவதை நோக்கமாகக் கொண்டும் வாக்குகளைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ் மக்கள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது யுத்தம் முடிவுற்று பத்து வருடங்கள் நிறைவடைந்தாலும் கூட ஆயிரக்கணக்கான நாட்களாக எங்களது தாய்மார் தங்களது பிள்ளைகள் உறவுகளைத் தேடி தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு அரசாங்கம் சொல்லக் கூடிய பதில் மிகவும் அவர்கள் ஒன்றில் இறந்திருப்பார்கள் அல்லது வெளிநாட்டிற்கு தப்பிப் போயிருப்பார்கள் போன்ற விதமாகத் தான் அமைகின்றது. ஆனால், உண்மையாகவே அவ்வாறான பதில்கள் காயப்பட்ட மக்களுக்கு வலி சுமந்த மக்களுக்கு மேலும் மேலும் ஒரு வலியை உருவாக்குவதாகத் தான் இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லர். இவர்கள் நேரடியாக சரணடைந்தவர்கள் அல்லது நேரடியாக வீடுகளிலோ முகாம்களிலோ கைது செய்யப்பட்டவர்கள். பொது மக்களுக்கு முன்னால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆகவே இவர்கள் இறந்திருப்பார்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை. அவ்வாறானவர்களுக்கு கூட எதிர்காலத்தில் விமோசனம் நீதி கிடைக்குமா என்ற கேள்வியைத் தான் நாங்கள் இப்போது எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இவர்களுடைய செயற்பாடுகள் என்பது நான் கூறிய எட்டு பத்து கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் செயற்பாடுகள் அவ்வாறான ஒரு மோசமான அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நீதியைக் கொடுக்க தயாராக இல்லாத அரசாங்கத்திற்கு மிகவும் திமிர்த்தனத்துடனும் ஆணவத்துடனும் செயற்படுகின்ற அரசாங்கத்திற்கு இன்னும் கூறுவதானால் வட – கிழக்கை ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் அடக்க முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு வாக்குப் போடுவடு என்பது எவ்வளவு சரியானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான வாக்குகள் தமிழினத்தினுடைய எதிர்காலத்திற்கு நிச்சயமாக அது பாதகமாக அமையும். அவர்களுக்கு சாதகமாக ஒரு ஆசனம் கிடைத்தால் கூட தங்களது தமிழின விரோத கொள்கைகள் எல்லாத்தையும் தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டின் அடிபப்படையில் தான் அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அதனை இங்கு மாத்திரமல்ல. வெளிநாடுகளில் கூட கூறுவார்கள். அதாவது வடக்கு மாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றொரு செய்தியை அவர்கள் சொல்லக் கூடும். இப்பொழுது இருக்கக் கூடிய முக்கியமான இன்னுமொரு பிரச்சினை என்னவென்றால் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாகக் கூறுவது என்னவென்றால் தாங்கள் பாராளுமன்றம் சென்று நல்ல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வலுவான அமைப்பாக மீண்டும்; பாராளுமன்றம் அனுப்ப வேண்டுமென்று தான் கூறுகின்றார். இதுவரை காலமும் அவர்கள் பேசி வந்த தமிழ் மக்களுடைய இறையாண்மை தமிழ் மக்களுக்கான தீர்வு இவை எல்லாம் எங்கே போய் விட்டது என்றொரு கேள்வி இருக்கின்றது. வரக் கூடிய அரசாங்கம் குறித்து ஒரு பக்கத்தில் சொல்வது இந்த அரசாங்கம் வந்தால் இராணுவ ஆட்சி வருமென்று சொல்கின்றார்கள். ஆனால் இந்த அரசாங்கம் தான் வருமென்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட மகிந்த ராஐபக்ச தலைமையிலான புதிய பாராளுமன்றம் உருவாக இருக்கின்றது என்பது தான் பரவலான சிங்கள தமிழ் பிரதேசங்களில் உள்ள கருத்தாகும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வரப் போகின்ற ஒரு இராணுவ ஆட்சியில் சுமந்திரன் போன்றோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போகின்றதாக கூறி வருகின்றனர். அதாவது ஒரு பக்கத்தில் இராணுவ ஆட்சி வரப் போகின்றது எனக் கூறுகின்றனர். மறுபக்கத்தில் பார்ப்பதானால் எங்களுக்கு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்றும் அரசியல் தீர்வு எப்பொழுது வருமென்று தெரியாது. ஆகவே, அதுவரை அமைச்சர்களாக இருந்து நாங்கள் அபிவிருத்தியை செய்யப் போகின்றோம் என்ற தொனியில் கருத்து கூறுகின்றனர். இந்த விடயத்தில் சம்மந்தன் ஐயாவைப் பார்த்தால் அவர் என்ன கூறுகின்றார் என்றால் இது ஒரு தேர்தல் காலம். அமைச்சர் பதவிகள் பற்றி பேச வேண்டிய அவசியம் இப்பொழுது தேவையில்லை. ஆக தேர்தலிற்கு பிற்பாடு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் சம்பந்தன் ஐயா கூட பேசுவாரா என்ற கேள்வியும் எழுகின்றது. இவ்வாறு ஒரு நிலைமை இருக்குமாக இருந்தால் மக்கள் இந்த விசயம் எல்லாவற்றையும் ஆராய்ந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒன்று மாத்திரம் தான் இப்பொழுது தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சனை தமிழ் மக்களினுடைய இருப்பைப் பாதுகாப்பதென்பது தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அபிவிருத்தி திட்டம் முக்கியமாக வேலை வாய்ப்பை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டம். எல்லாவற்றையும் மையமாக வைத்து செயற்படுகிறது. இப்பொழுது நடைபெற்றதெல்லாத்தையும் பார்த்திர்களானால் அதில் கம்பரெலிய திட்டம் என்பது அரசாங்கம் கொண்டு வந்த நாடு தழுவிய திட்டம். அது தமிழ் மக்களுக்கும் சில கிராமங்களில் சில வீதிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுக்கெல்லாம் இப்பொழுது கூட்டமைப்பு உரிமை கோருகின்றது. இது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் நாடு தழுவிய ரீதியில் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட திட்டமாக இருக்கின்றது. அந்த வகையில் கூட்டமைப்பு என்பது அரசாங்கத்துடன் இணங்கிப் போக்கக் கூடிய சூழ்நிலையில் ஏனென்றால் அதைத் தான் அவர்களுடைய பேச்சாளர் சுமந்திரன் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். சம்பந்தன் ஐயா அதனை நிராகரிக்கவில்லை. மாறாக ஒரு தேர்தல் காலத்தில் இதைப் பற்றி பேசத் தேவையில்லை என்று தான் கூறியிருக்கின்றார். ஏனென்றால் ஏற்கனவே தமிழரசுக் கட்சிக்குள் பல குழப்பங்கள் இருக்கின்றது. இருக்கக் கூடிய சகல வேட்பாளர்களும் நவக்கிரகங்கள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளுக்குள் நிற்கக் கூடியதைத் தான் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் பல பேருடைய நாக்கில் சனி துள்ளி விளையாடுகின்றது. குறிப்பாக சிறிதரன் சொல்லக் கூடிய சில பிரச்சினைகளைப் பார்த்தால் அதாவது சுமந்திரன் தான் தமிழ் மக்கள் மத்தியில் ஒரே ஒரு அறிவாளி என்றும் அந்த அறிவாளியைக் கைவிட்டால் தமிழ் மக்களுக்கு வேற அறிவாளிகள் கிடையாது என்றும் கூறுகின்றார். எல்லோருமே எந்தவிதமான ஒருமித்த கொள்கையோ, ஒருமித்த கருத்தோ இல்லாமல் தாங்கள் மாத்திரம் தான் தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றோம் என்று சொல்லக் கூடியவர்களாக இருந்த கூட்டமைப்பினர் கொள்கைகளையும் விடுத்து இன்று யாரும் ஒருதருக்கு ஒருவர் முகங் கொடுத்து பேசாமல் ஒரு சிதறிப்பட்ட சூழலில் தான் இருப்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு தெரிவாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இருக்கின்றது. குறைந்த பட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய அனைவரையும் ஒன்றுபடுத்தி நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றோம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைய வேண்டும் என்பதற்காக மிக நீண்ட காலம் முயற்சி செய்தோம். குறிப்பாக சுமார் ஒன்றரை வருடங்களாக முயற்சி செய்து உள்நாட்லும் புலம் பெயர் தேசங்களிலிருந்தும் பல பேர் அவர்களுடன் பேசினார்கள். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்து வரவில்லை என்பது தான் யதார்த்தம். ஆகவே, இன்றைய சூழலில் உண்மையான ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம் என்பது மாத்திரமல்ல ஒன்றை தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாக நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது தேர்தலிற்குப் பிற்பாடு இந்தக் கூட்டணியானது எங்களது கொள்கைகளை ஏற்று வரக் கூடிய ஏனையோரையும் உள்ளடக்குவார்கள். நாங்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமாக இருந்தால் எங்களுடைய ஐக்கியம் பலப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. யார் என்னத்தைச் சொன்னாலும் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு நாங்கள் ஒரு சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதென்பது உள்நாட்டில் அரசாங்த்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பது போன்ற விடயங்களுக்கு எங்கள் மத்தியிலான ஐக்கியம் முக்கியம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. நாங்கள் நாடாளுமன்றம் சென்ற பின்பும் இந்தக் கூட்டணி என்பது இன்னும் விரிவுபடுத்தப்படும். இதில் இணங்கி வரக் கூடிய அனைவரும் உள்வாங்கப்படுவார்கள் அந்த வகையில் தான் எங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் இருக்கும் என்பதையும் நாங்கள் கூறிக் கொள்கிறோம். நாங்கள் தனித்து நின்று தனியாகச் சென்று எல்லாவற்றையும் சாதிப்பொம் என்று நாங்கள் கூறவில்லை. ஒற்றுமையினுடைய அடிப்படை என்பதை ஆரம்பத்திலிருந்தே அதாவது திம்புப் பேச்சுவார்த்தையிருந்து நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை என்பது எங்களுக்கு பலமாக இருக்கும். திம்புவில் அந்த ஒற்றுமை எங்களுக்கு பலமாக இருந்திருக்கிறது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பொழுது அது எங்களுக்கு பலமாக இருந்திருக்கிறது. ஐக்கியம் என்பது எங்களுக்கு நிச்சமாக பலமான இறுக்கமான நிலையைத் தோற்றுவிக்கும். அது தமிழ் மக்களுக்குத் தேவை. இந்த விடயங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மிகத் தெளிவாக இருக்கின்றது. ஆகவே இன்னும் இரண்ட வாரங்கள் தேர்தலுக்கு இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால் சுயேட்சைகளுக்கோ ஏனையவர்களுக்கொ வாக்களித்து இந்த நிலவரங்களைக் குழப்பாமல் ஒருமித்து நின்று மீன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியைப் பலப்படுத்துவதன் ஊடாக நிச்சமாக சரியான பாதையில் சரியான வழிமுறையை நாங்கள் எடுக்க முடியும். எதிர்காலத்தில் நாங்கள் இவற்றையெல்லாம் திட்டமிட்டு முன்னே கொண்டு செல்ல முடியுமென்று நம்புகின்றோம். ஆகவே தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு வழங்க வேண்டுமென்று வேண்டி நிற்கின்றோம்” என்றார். http://thinakkural.lk/article/55926