Aggregator

கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம், விசேட பஸ்சேவைகள் நிறுத்தம்!

1 year 2 months ago
கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம், விசேட பஸ்சேவைகள் நிறுத்தம்! July 23, 2020 கதிர்காம ஆடிவேல்விழாவையொட்டி கடந்த 17வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் நாட்டின் கொரோனா சூழ்நிலைகருதி இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதானசபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். கடந்த 17வருடகாலமாக இந்து கலாசார திணைக்களத்தின் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுவந்தன. அதில் பல இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் பசியாறிவந்தனர். ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை ஆதலால் அது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறோம் என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். இதேவேளை இந்து யாத்திரீகர் விடுதியும் இம்முறை பக்தர்களுக்கு அல்லாமல் கொரோனாத்தடுப்பு அலுவலர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலகம் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் சிரத்தை எடுத்தனராயினும் அதற்கான அனுமதி கிடைக்கப்பெறாமையினால் அது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கதிர்காமம் மற்றும் உகந்தமலைமுருகனாலய ஆடிவேல் விழாக்காலங்களில் மேற்கொள்ளப்படும் வழமையான விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நாட்டின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சகல பாகங்களிலுமிருந்தும் பல பஸ் டிப்போக்களும் கதிர்காமத்திற்கான பஸ்சேவைகளை நடாத்திவந்தமை தெரிந்ததே. ஆனால் இம்முறை பக்தர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால் பஸ்சேவைகள் இடம்பெறவில்லை. கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்குமான பஸ் சேவைகள் இம்முறை நடாத்தப்படவில்லை என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார். இச்சேவைகளினால் கடந்தகாலங்களில் டிப்போவிற்கு மிகுந்த வருமானம் கிடைக்கப் பெற்றிருந்தது .இம்முறை கொரோனா அதனை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். காரைதீவு நிருபர் சகா http://thinakkural.lk/article/57190

கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம், விசேட பஸ்சேவைகள் நிறுத்தம்!

1 year 2 months ago
கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம், விசேட பஸ்சேவைகள் நிறுத்தம்!
July 23, 2020

kathirkamam-300x182.jpg

கதிர்காம ஆடிவேல்விழாவையொட்டி கடந்த 17வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் நாட்டின் கொரோனா சூழ்நிலைகருதி இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதானசபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

கடந்த 17வருடகாலமாக இந்து கலாசார திணைக்களத்தின் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுவந்தன. அதில் பல இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் பசியாறிவந்தனர். ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை ஆதலால் அது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறோம் என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

இதேவேளை இந்து யாத்திரீகர் விடுதியும் இம்முறை பக்தர்களுக்கு அல்லாமல் கொரோனாத்தடுப்பு அலுவலர்கள் தங்குவதற்கு  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலகம் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் சிரத்தை எடுத்தனராயினும் அதற்கான அனுமதி கிடைக்கப்பெறாமையினால் அது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

news-06-1-300x182.jpg

அதேபோல் கதிர்காமம் மற்றும் உகந்தமலைமுருகனாலய ஆடிவேல் விழாக்காலங்களில் மேற்கொள்ளப்படும் வழமையான விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நாட்டின் கொரோனா
கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சகல பாகங்களிலுமிருந்தும் பல பஸ் டிப்போக்களும் கதிர்காமத்திற்கான பஸ்சேவைகளை நடாத்திவந்தமை தெரிந்ததே. ஆனால் இம்முறை பக்தர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால் பஸ்சேவைகள் இடம்பெறவில்லை.

கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்குமான பஸ் சேவைகள் இம்முறை நடாத்தப்படவில்லை என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார். இச்சேவைகளினால் கடந்தகாலங்களில் டிப்போவிற்கு மிகுந்த வருமானம் கிடைக்கப் பெற்றிருந்தது .இம்முறை கொரோனா அதனை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

காரைதீவு  நிருபர் சகா

http://thinakkural.lk/article/57190

எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்

1 year 2 months ago
தமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார் கோவையைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கோவையைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் கோவை ஞானி. கி.பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார். 1935ல் பிறந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர், மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததுடன், தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்து கீழை மார்க்சியத்தைப் படைத்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை கோவை ஞானி எழுதியுள்ளதோடு, தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கண்பார்வை குறைந்த போதும் அனைத்து நூல்களையும் பிறர் துணையுடன் வாசித்து விடும் பழக்கம் கொண்டவர் கோவை ஞானி. தவறுகள் நடக்கும் போது அறச்சீற்றத்துடன் அவற்றை விமர்சிப்பவர். நிகழ் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததுடன் பல்வேறு இலக்கியக் குழுக்களையும் உருவாக்கி அதை வழிநடத்தியவர் கோவை ஞானி. ஈழவிடுதலைப் போராட்டம் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட இவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் ஈழ இலக்கியங்களை போற்றியும் எழுதியுள்ளார். புலிகள் இயக்கம்மீது மிகுந்த மதிப்பினை கொண்ட இவர், ஈழத்து எழுத்தாளர்களுடன் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார். வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். கோவை ஞானிக்கு பாரிவள்ளல், மாதவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கோவை ஞானியின் இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது. https://www.vanakkamlondon.com/kovai-gani-23-07-2020/ கண்ணீர் அஞ்சலிகள்..

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா

1 year 2 months ago
இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பாதிப்பு புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பாதிப்புகள் மற்றும் 1,129 இறப்புகள் அதிகரித்துள்ளன, இதனால் ஒட்டுமொத்த பாதிப்புகள் 12 லட்சத்தை தாண்டியுள்ளது. "நாட்டில் இதுவரை 12,38,635 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 4,26,167 சிகிச்சையில் உள்ளனர், 7,82,607 பேர் குணமாகி உள்லனர் 29,557 பேர் உயிரிழந்து உள்ளனர்.என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/23102105/Biggest-spike-in-Covid-cases-takes-Indias-tally-past.vpf

வன்முறைக்கு வன்முறைதான் பதிலடி: ஓமல்பே சோபித தேரர்.!

1 year 2 months ago
வன்முறைக்கு வன்முறைதான் பதிலடி: ஓமல்பே சோபித தேரர்.! "வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜுலை ஓர் சாட்சி." - இவ்வாறு தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கறுப்பு ஜுலைக் கலவரத்தின் 37ஆவது நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "1983ஆம் ஆண்டு அரங்கேறிய கறுப்பு ஜுலை இனக்கலவரத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுமே முழுப்பொறுப்பு. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இராணுவத்தினரைக் குறிவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகவே கொழும்பில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. ஆனால், இந்தக் கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசு அன்று தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இந்தக் கலவரத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் மோசமான செயலாலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையினாலுமே கலவரம் பெரிதாக மூண்டது. இதுதான் உண்மை. சிங்கள மக்கள் மீது எவரும் பழியைப் போட முடியாது. தேசத்தைக் காத்த இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கை வைக்க வேண்டி வந்தது. தமிழர்களுக்காக அன்றும் ஒழுங்கான தலைமை இருக்கவில்லை; இன்றும் ஒழுங்கான தலைமை இல்லை. வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்கு கறுப்பு ஜுலை ஓர் சாட்சி. அப்படியான ஒரு நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை" - என்றார். http://aruvi.com/article/tam/2020/07/23/14754/

1595467102_0000.jpg

"வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜுலை ஓர் சாட்சி."

- இவ்வாறு தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கறுப்பு ஜுலைக் கலவரத்தின் 37ஆவது நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"1983ஆம் ஆண்டு அரங்கேறிய கறுப்பு ஜுலை இனக்கலவரத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுமே முழுப்பொறுப்பு.

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இராணுவத்தினரைக் குறிவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகவே கொழும்பில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது.

ஆனால், இந்தக் கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசு அன்று தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

இந்தக் கலவரத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மோசமான செயலாலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையினாலுமே கலவரம் பெரிதாக மூண்டது. இதுதான் உண்மை.

சிங்கள மக்கள் மீது எவரும் பழியைப் போட முடியாது. தேசத்தைக் காத்த இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கை வைக்க வேண்டி வந்தது.

தமிழர்களுக்காக அன்றும் ஒழுங்கான தலைமை இருக்கவில்லை; இன்றும் ஒழுங்கான தலைமை இல்லை.

வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்கு  கறுப்பு ஜுலை ஓர் சாட்சி. அப்படியான ஒரு நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/07/23/14754/

மாற்று திறனாளிகளின் திறமைகள்

1 year 2 months ago
தன்னம்பிக்கை பெற்ற மாற்று திறனாளிகள் கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழணும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்