Aggregator

கொரோனா வைரஸ் கட்டுக்குள் : பெரும் மகிழ்ச்சியில் பெல்ஜியம் மக்கள்

1 year 2 months ago
கொரோனா வைரஸ் கட்டுக்குள் : பெரும் மகிழ்ச்சியில் பெல்ஜியம் மக்கள் பெல்ஜியம் மார்ச் மாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கிய பெல்ஜியத்தில் மார்ச் 10 ஆம் திகதிக்கு பின் முதல் முறையாக நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும் நேற்றைய தினம் 05 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஏப்ரலில் தினசரி இறப்பு எண்ணிக்கை 343 ஆக இருந்து வந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பெல்ஜியமும் நாட்டை முடக்கியது. தற்போது கொரோனா தொற்றுநோய்களைக் குறைத்து வருவதையடுத்து கட்டம் கட்டமாக நாட்டை வழமைக்கு திருப்பும் பணியை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, பெல்ஜியத்தில் 62,781 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 9,787 பேர் உயிரிழந்தும் உள்ளனர். https://www.virakesari.lk/article/85898

இந்தியா தொடர்பில்  சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா

1 year 2 months ago
இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர். புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக இருந்தது. சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகளை அவதானித்தால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, இந்தியாவின் தலையீடின்றியே தன்னால் ஒரு அரசியல் தீர்வை காணமுடியும் என்பதே அவரது அரசியல் புரிதலாக இருந்தது. ரணிலுடன் உறவாடுவதன் ஊடாக, புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்று சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பினார். இதன் காரணமாக ரணிலின் நிகழ்சிநிரலுக்கு முற்றிலுமாக ஒத்துழைத்தார். தற்போது அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்திருக்கும் நிலையில்தான் மீண்டும் இந்தியாவை நோக்கி கைநீட்டுகின்றார். 2015இல், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இடம்பெற்ற, சம்பந்தன் (சுமந்திரன்) – ரணில் உறவாடல் கிட்டத்தட்ட, ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு ஒப்பானது. ஓஸ்லோ பேச்சுவார்த்தையின் போதும் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருந்தது. அதே போன்றுதான் கூட்டமைப்பின் புதிய அரசியல் யாப்பு முயற்சியின் போதும் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருந்தது. இந்தியா பார்வையாளராக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர்கள் எந்தவொரு விடயத்தையும் அடைய முடியவில்லை என்பதே வரலாறு. நோர்வேயின் மத்தியஸ்தத்தில் இந்தியா தலையீடு செய்யவில்லை ஆனால் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வழங்கிய நோர்வே, இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் மிகவும் தெளிவாக இருந்தது. இதன் காரணமாகவே ஒவ்வொரு விடயங்களையும் உடனுக்குடன் புதுடில்லிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. இது தொடர்பில் நோர்வே மத்தியஸ்த்திற்கு தலைமை தாங்கிய எரிக்சொல்கெய்ம் கூறியிருக்கும் ஒரு விடயம் இங்கு ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. பி.ஜே.பி தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த சிங்காவை சந்தித்தோம். அவர் பழகுவதற்கு இனிமையானவராகத் தெரிந்தார். நாங்கள் ஒருவாறு பரீட்சையில் சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணினேன். அவர் பேசத் தொடங்கினார். உங்களிடம் எனக்கு ஒரு கேள்வியிருக்கின்றது. நீங்கள் பொறுமைசாலிகளா? நோர்வேஜியர்கள் பொறுமைசாலிகள் இல்லை – நாங்கள் இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்க எண்ணியுள்ளோம் என்று நான் பதிலளித்தேன். இதற்கு சிங்காவின் பதில் தெளிவாக இருந்தது – அப்படியென்றால், விரைவாக விமான நிலையத்தை அடையக் கூடிய கார் ஒன்றை எடுங்கள். நீங்கள் எடுத்திருக்கும் விமானச்சீட்டு ஒரு வழிப் பயணத்துக்குரியதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜரோப்பாவை சென்றடையுங்கள். ஏனெனில் இலங்கைப் பிரச்சினைக்கு நீங்கள் விரைவாக தீர்க்க முடியுமென்று எண்ணினால் விடங்களை சிக்கலுக்குள்ளாக்குவீர்கள். இந்தப் பிரச்சினை மீது, ஒரு பத்து வருடங்களை நீங்கள் செலவிட்டாலும் கூட, அப்போதும் நிலைமைகள் மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். அப்போதும் கூட நீங்கள் ஒரு பங்களிப்பை மட்டுமே வழங்கியவர்களாக இருப்பீர்கள்’ இதனை நினைவுபடுத்தும் சொல்கெய்ம், அவர் சரியாகவே கூறியதாகக் குறிப்பிடுகின்றார். உண்மையில் தனது மேலாதிக்கமுள்ள பிராந்தியத்திற்குள் ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. இதனையும் சொல்கெய்ம் ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கின்றார். எனினும் இந்தியா நோர்வேயின் மத்தியஸ்தத்தை குழப்பவில்லை. அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தது. இந்த விடயங்கள் ‘உள்நாட்டு யுத்தம் ஒன்றின் முடிவுக்காக’ என்னும் நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. தமிழர் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையென்று இப்போதும் குரல்கள் எழுகின்றன. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, இந்தியாவை தவிர்த்து எந்தவொரு மூன்றாம் தரப்பின் முயற்சிகளும் இலங்கை விடயத்தில் வெற்றியளிக்காது. இது தொடர்பில் தமிழர் தரப்பிடம் தெளிவான பார்வை இருக்க வேண்டியது அவசியம். இப்போது சம்பந்தனின் விடயத்திற்கு வருவோம். கடந்த ஜந்து வருடங்களாக சம்பந்தன் இந்தியாவை வேண்டா விருந்தாளியாகவே கருதினார். கொழும்புடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை காணலாமென்று சிந்தித்தார். இன்று இந்தியா தங்களின் பக்கமாக நிற்பதாக கூறும் சம்பந்தன் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் இந்தியா தொடர்பான மூலோபாய விடயங்களில் எத்தகைய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கின்றார்? மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை நிர்மானிப்பது தொடர்பில் இந்தியா ஆர்வம் காண்பித்தது. உண்மையில் அவ்வாறானதொரு திட்டத்திற்கான முன்மொழிவை வரதராஜப் பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணசபைதான் முன்வைத்திருந்தது. எனினும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. யுத்தம் முடிவுற்றதும் மீண்டும் அந்தத் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் அதனை விரும்பவில்லை. உண்மையில் மக்கள் ஒரு திட்டத்தை எதிர்த்தால் அதன் பின்னர் எந்தவொரு நாடும் முதலீடு செய்ய விரும்பாது. மேலும் அதனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் எந்தவொரு நன்மையும் இல்லை. சம்பந்தன் உண்மையிலேயே இந்தியாவின் நண்பராக இருந்திருந்தால், மாற்று யோசனை ஒன்றை இந்தியாவிடமே கொடுத்திருக்கலாம். அல்லது அதனை கைவிடுமாறு கேட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தன் செய்ததோ வேறு. இந்தியத் தூதரகத்திற்கு ஒரு கதையையும் ரணில் – மைத்திரிக்கு பிறிதொரு கதையையும் கூறியிருந்தார். என்னுடைய பிணத்தின் மீதுதான் நீங்கள் அனல்மின்நிலையத்தை கட்டவேண்டும் என்று ரணிலிடம் கூறியிருக்கின்றார். இதனை ரணில் இந்தியத் தூதரகத்திடம் கூறியிருக்கின்றார். இது தூதரக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் உறுதிப்படுத்தினார். 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் வெளிச் சக்திகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை. ஆட்சி மாற்றத்தின் மூலம் ஓரளவு சீனாவை தடுத்து நிறுத்தலாமென்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட, அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. மேற்குலகின் நண்பரான ரணில்விக்கிரமசிங்க அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் இலங்கையை மேலும் சீனாவின் பிடிக்குள் தள்ளிவிட்டார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கினார். இது இந்திய மற்றும் அமெரிக்க மூலோபாய சமூகங்கள் மத்தியில் அதிக விசனத்தை ஏற்படுத்தியது. இதில் பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயமுண்டு. உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தச் செயலுக்கு பின்னால் சம்பந்தனும் இருந்தார். ஏனெனில் இவ்வாறானதொரு பாரதூரமான மூலோபாயத் தவறை செய்யமுற்படும் ரணிலை சம்பந்தன் பாதுகாத்தார். ஆகக் குறைந்தது பாராளுமன்றத்தில் கூட ரணிலின் இந்த நகர்வை கூட்டமைப்பு விமர்சிக்கவில்லை. இது இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதை தெரிந்திருந்தும் சம்பந்தன் இது தொடர்பில் மௌனமாகவே இருந்தார். உண்மையில் ரணிலின் இந்த நகர்வுடன்தான் மேற்கு ரணிலை முற்றிலும் கைவிட்டது. மகிந்த ராஜபக்ச சீனாவை நோக்கி அதிகம் சாய்கின்றார் என்னும் அடிப்படையில்தான் இந்திய –அமெரிக்க கூட்டணி மகிந்த ஆட்சியின் மீது அதிருப்திகொண்டது. ஆனால் இந்திய – மேற்குலகின் நண்பர்களாக இருப்பார்கள் என்று நம்பிய ரணிலோ நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றனர். சம்பந்தன் உண்மையிலேயே யாருடை நண்பர்? பொதுவாக சம்பந்தனை இந்தியாவிற்கு ஆதரவானவராக பார்க்கும் ஒரு போக்குண்டு. ஆனால் சம்பந்தனின் செயற்பாடுகளை உற்றுநோக்கினால், அவ்வாறு தெரியவில்லை. சம்பந்தனின் அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்துமே இந்தியாவிற்கு எதிராகவே இருந்திருக்கின்றது. ஒரு விடயத்தில் ஒருவரது ஆதரவு அல்லது எதிர்ப்பை அவரது செயற்பாடுகளின் மூலம்தான் அளவிட முடியும். சம்பந்தனின் நடவடிக்கைகள் அவர் இந்தியாவின் நண்பர் என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை. இந்தியா தமிழ் மக்களுடன் நிற்கவேண்டுமென்றால் தமிழர்களும் இந்தியாவுடன் நிற்கவேண்டும். சம்பந்தனின் பசப்பு வார்த்தைகளை நம்பும் நிலையில் நிச்சயம் இந்தியா இருக்கப் போவதில்லை. http://www.samakalam.com/blog/இந்தியா-தொடர்பில்-சம்ப/

பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர்.

புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக இருந்தது. சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகளை அவதானித்தால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, இந்தியாவின் தலையீடின்றியே தன்னால் ஒரு அரசியல் தீர்வை காணமுடியும் என்பதே அவரது அரசியல் புரிதலாக இருந்தது. ரணிலுடன் உறவாடுவதன் ஊடாக, புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்று சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பினார். இதன் காரணமாக ரணிலின் நிகழ்சிநிரலுக்கு முற்றிலுமாக ஒத்துழைத்தார். தற்போது அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்திருக்கும் நிலையில்தான் மீண்டும் இந்தியாவை நோக்கி கைநீட்டுகின்றார். 2015இல், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இடம்பெற்ற, சம்பந்தன் (சுமந்திரன்) – ரணில் உறவாடல் கிட்டத்தட்ட, ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு ஒப்பானது. ஓஸ்லோ பேச்சுவார்த்தையின் போதும் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருந்தது. அதே போன்றுதான் கூட்டமைப்பின் புதிய அரசியல் யாப்பு முயற்சியின் போதும் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருந்தது. இந்தியா பார்வையாளராக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர்கள் எந்தவொரு விடயத்தையும் அடைய முடியவில்லை என்பதே வரலாறு. நோர்வேயின் மத்தியஸ்தத்தில் இந்தியா தலையீடு செய்யவில்லை ஆனால் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வழங்கிய நோர்வே, இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் மிகவும் தெளிவாக இருந்தது. இதன் காரணமாகவே ஒவ்வொரு விடயங்களையும் உடனுக்குடன் புதுடில்லிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. இது தொடர்பில் நோர்வே மத்தியஸ்த்திற்கு தலைமை தாங்கிய எரிக்சொல்கெய்ம் கூறியிருக்கும் ஒரு விடயம் இங்கு ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

பி.ஜே.பி தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த சிங்காவை சந்தித்தோம். அவர் பழகுவதற்கு இனிமையானவராகத் தெரிந்தார். நாங்கள் ஒருவாறு பரீட்சையில் சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணினேன். அவர் பேசத் தொடங்கினார். உங்களிடம் எனக்கு ஒரு கேள்வியிருக்கின்றது. நீங்கள் பொறுமைசாலிகளா? நோர்வேஜியர்கள் பொறுமைசாலிகள் இல்லை – நாங்கள் இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்க எண்ணியுள்ளோம் என்று நான் பதிலளித்தேன். இதற்கு சிங்காவின் பதில் தெளிவாக இருந்தது – அப்படியென்றால், விரைவாக விமான நிலையத்தை அடையக் கூடிய கார் ஒன்றை எடுங்கள். நீங்கள் எடுத்திருக்கும் விமானச்சீட்டு ஒரு வழிப் பயணத்துக்குரியதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜரோப்பாவை சென்றடையுங்கள். ஏனெனில் இலங்கைப் பிரச்சினைக்கு நீங்கள் விரைவாக தீர்க்க முடியுமென்று எண்ணினால் விடங்களை சிக்கலுக்குள்ளாக்குவீர்கள். இந்தப் பிரச்சினை மீது, ஒரு பத்து வருடங்களை நீங்கள் செலவிட்டாலும் கூட, அப்போதும் நிலைமைகள் மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். அப்போதும் கூட நீங்கள் ஒரு பங்களிப்பை மட்டுமே வழங்கியவர்களாக இருப்பீர்கள்’
இதனை நினைவுபடுத்தும் சொல்கெய்ம், அவர் சரியாகவே கூறியதாகக் குறிப்பிடுகின்றார். உண்மையில் தனது மேலாதிக்கமுள்ள பிராந்தியத்திற்குள் ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. இதனையும் சொல்கெய்ம் ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கின்றார். எனினும் இந்தியா நோர்வேயின் மத்தியஸ்தத்தை குழப்பவில்லை. அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தது. இந்த விடயங்கள் ‘உள்நாட்டு யுத்தம் ஒன்றின் முடிவுக்காக’ என்னும் நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

modi_tna_004

தமிழர் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையென்று இப்போதும் குரல்கள் எழுகின்றன. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, இந்தியாவை தவிர்த்து எந்தவொரு மூன்றாம் தரப்பின் முயற்சிகளும் இலங்கை விடயத்தில் வெற்றியளிக்காது. இது தொடர்பில் தமிழர் தரப்பிடம் தெளிவான பார்வை இருக்க வேண்டியது அவசியம்.

இப்போது சம்பந்தனின் விடயத்திற்கு வருவோம். கடந்த ஜந்து வருடங்களாக சம்பந்தன் இந்தியாவை வேண்டா விருந்தாளியாகவே கருதினார். கொழும்புடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை காணலாமென்று சிந்தித்தார். இன்று இந்தியா தங்களின் பக்கமாக நிற்பதாக கூறும் சம்பந்தன் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் இந்தியா தொடர்பான மூலோபாய விடயங்களில் எத்தகைய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கின்றார்?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை நிர்மானிப்பது தொடர்பில் இந்தியா ஆர்வம் காண்பித்தது. உண்மையில் அவ்வாறானதொரு திட்டத்திற்கான முன்மொழிவை வரதராஜப் பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணசபைதான் முன்வைத்திருந்தது. எனினும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. யுத்தம் முடிவுற்றதும் மீண்டும் அந்தத் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் அதனை விரும்பவில்லை. உண்மையில் மக்கள் ஒரு திட்டத்தை எதிர்த்தால் அதன் பின்னர் எந்தவொரு நாடும் முதலீடு செய்ய விரும்பாது. மேலும் அதனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் எந்தவொரு நன்மையும் இல்லை. சம்பந்தன் உண்மையிலேயே இந்தியாவின் நண்பராக இருந்திருந்தால், மாற்று யோசனை ஒன்றை இந்தியாவிடமே கொடுத்திருக்கலாம். அல்லது அதனை கைவிடுமாறு கேட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தன் செய்ததோ வேறு. இந்தியத் தூதரகத்திற்கு ஒரு கதையையும் ரணில் – மைத்திரிக்கு பிறிதொரு கதையையும் கூறியிருந்தார். என்னுடைய பிணத்தின் மீதுதான் நீங்கள் அனல்மின்நிலையத்தை கட்டவேண்டும் என்று ரணிலிடம் கூறியிருக்கின்றார். இதனை ரணில் இந்தியத் தூதரகத்திடம் கூறியிருக்கின்றார். இது தூதரக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் உறுதிப்படுத்தினார்.

2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் வெளிச் சக்திகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை. ஆட்சி மாற்றத்தின் மூலம் ஓரளவு சீனாவை தடுத்து நிறுத்தலாமென்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட, அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. மேற்குலகின் நண்பரான ரணில்விக்கிரமசிங்க அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் இலங்கையை மேலும் சீனாவின் பிடிக்குள் தள்ளிவிட்டார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கினார். இது இந்திய மற்றும் அமெரிக்க மூலோபாய சமூகங்கள் மத்தியில் அதிக விசனத்தை ஏற்படுத்தியது. இதில் பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயமுண்டு. உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தச் செயலுக்கு பின்னால் சம்பந்தனும் இருந்தார். ஏனெனில் இவ்வாறானதொரு பாரதூரமான மூலோபாயத் தவறை செய்யமுற்படும் ரணிலை சம்பந்தன் பாதுகாத்தார். ஆகக் குறைந்தது பாராளுமன்றத்தில் கூட ரணிலின் இந்த நகர்வை கூட்டமைப்பு விமர்சிக்கவில்லை. இது இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதை தெரிந்திருந்தும் சம்பந்தன் இது தொடர்பில் மௌனமாகவே இருந்தார். உண்மையில் ரணிலின் இந்த நகர்வுடன்தான் மேற்கு ரணிலை முற்றிலும் கைவிட்டது. மகிந்த ராஜபக்ச சீனாவை நோக்கி அதிகம் சாய்கின்றார் என்னும் அடிப்படையில்தான் இந்திய –அமெரிக்க கூட்டணி மகிந்த ஆட்சியின் மீது அதிருப்திகொண்டது. ஆனால் இந்திய – மேற்குலகின் நண்பர்களாக இருப்பார்கள் என்று நம்பிய ரணிலோ நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

சம்பந்தன் உண்மையிலேயே யாருடை நண்பர்? பொதுவாக சம்பந்தனை இந்தியாவிற்கு ஆதரவானவராக பார்க்கும் ஒரு போக்குண்டு. ஆனால் சம்பந்தனின் செயற்பாடுகளை உற்றுநோக்கினால், அவ்வாறு தெரியவில்லை. சம்பந்தனின் அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்துமே இந்தியாவிற்கு எதிராகவே இருந்திருக்கின்றது. ஒரு விடயத்தில் ஒருவரது ஆதரவு அல்லது எதிர்ப்பை அவரது செயற்பாடுகளின் மூலம்தான் அளவிட முடியும். சம்பந்தனின் நடவடிக்கைகள் அவர் இந்தியாவின் நண்பர் என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை. இந்தியா தமிழ் மக்களுடன் நிற்கவேண்டுமென்றால் தமிழர்களும் இந்தியாவுடன் நிற்கவேண்டும். சம்பந்தனின் பசப்பு வார்த்தைகளை நம்பும் நிலையில் நிச்சயம் இந்தியா இருக்கப் போவதில்லை.

http://www.samakalam.com/blog/இந்தியா-தொடர்பில்-சம்ப/

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்

1 year 2 months ago
வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும் கட்சிகளின் நிலைவரமும் சண்முகவடிவேல் பாராளுமன்ற தேர்தல் வடக்கு மாகாணத்தில் அதி தீவிரமான நிலையை எட்டிவருகிறது. ஆதீக்கம் செய்த தரப்பு தோல்வியை அடையும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை நோக்கி நகர்கிறது. நீதியரசர் தலைமையிலான அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெறும் நிலை ஏற்பட்டுவருகிறது. வலிகாமம் பிரதேசத்திலும் வடமராட்சியிலும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகிறது. அதே நேரம் தேசிய மட்டத்தில் போட்டியிடும் கட்சிகளும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் வடமாகாணத்தில் அதிக நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றன. பொதுவெளியில் அல்லது தென் இலங்கையில் ஜனநாயகம் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் மையவாதக் கட்சியான தமிழரசுக் கட்சியும் தமக்கு அத்தகைய ஜனநாயகத்தினை குழிதோண்டிப் புதைத்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிக அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.முடிந்த வாரத்தில் புலி எதிர்ப்பு வாதியும் அவரது தோழரும் மிருசுவில் பகுதியில் நடத்த முயன்று இடைவழியில் கூடியிருந்த மக்களிடம் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி கூட்டத்தினை கைவிட்டு வந்ததிலிருந்து நிலமை தலைகீழாகிவருவதனை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறே அரியாலைக்குள்ளும் ஒரு சம்பவம் இரு வேட்பாளருக்கும் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பொது வெளியில் ஒரு கூட்டத்தினை நடாத்த முடியாத நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கடசியை பாராளுமன்றத்தில் தூக்கி நிறுத்த முயன்ற போது காணப்பட்ட ஒற்றுமையும் ஆலோசனையும் தேர்தலில் காணமுடியாதுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான தேர்தலிலும் அத்தகைய ஒருமைப்பாடு இல்லாதுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக அதில் நிகழும் பிழைகளையும் தவறுகளையும் வஞ்சகமான சுயநல அரசியலையும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இவர்கள் எப்படியெல்லாம் செயல் பட்டிருப்பார்கள் என்பது முக்கியமானது. விடுதலைப் புலிகள் தமது அமைப்புக்குள்ளேயே நிகழ்ந்த தவறுகளை எப்படிக் கையாண்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த விடயம். அத்தகைய பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மேற்கொள்ள அவர்கள் இல்லாத போது அதனை தமிழ் மக்களே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை விடுதலைப் புலிகள் போல் தமிழ் மக்கள் செய்ய முடியாது. அதற்காகவே வாக்குச் சீட்டு உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எந்த விடயம் ஆதிக்கம் செய்கிறது என்பதுவும் தமிழ் மக்களுக்கு தெரியும்.முக்கிய காரணம் அவர்களுக்குள் எழுந்துள்ள போட்டி. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை மீதிக் காலத்தில் எழுச்சி பெறாது எப்படி அழிப்பது என்பதற்கான போட்டியாகும். அது மட்டுமன்றி ஒரு கூட்டமைப்பாக அது செயல்பட முடியாது திண்டாடுகிறது. கடந்த இரு தசாப்த காலம் என்பது அதன் தலைமையிலும் பங்காளிக் கட்சிகளதும் பலவீனத்தை கோடிட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் உருவாக்கியது என கூக்குரல் இடும் தரப்பினருக்கு தெரியவில்லை கூட்டமைப்பு புலிகளால் எடுத்துவந்த இலட்சியத்தினை எப்படிச் சிதைத்துள்ளார்கள் என்பது. அது மட்டுமல்ல அவர்கள் உருவாக்கும் போது அதில் அங்கம் பெற்றவர்கள் எப்படி பிரிந்து தனியன்களாகவும் மாற்று என்றும் செயல்பட வேண்டிய நிலைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினர் எனத் தம்மை அழைத்துக் கொள்வார்கள் என்று. வெளியே கூறிக் கொள்ளலாம் நாம் அவர்களை வெளியேற்றவில்லை தாமாகவே வெளியேறினார்கள் என்று. அதற்கான உண்மைக் காரணத்தை கூட்டமைப்பின் ஆதிக்கவாதிகள் சொல்லாது விட்டால் தமிழ் மக்களுக்கு தெரியாது என நினைக்கிறார்கள். இதேநேரம் மாற்று என தம்மை அழைத்துக் கொண்டு அதன் ஊடாக வலுவான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளார் நீதியரசர் விக்னேஸ்வரன். அவர் ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து ஓர் உடன்பாட்டை வரைந்து அதன் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்து ஆரோக்கியமாக முரண்பாடோ குழிபறிப்போ இன்றி பயணிக்கின்றார். அது மட்டுமல்ல தனது தோழமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட துணிச்சலுடன் முன்வந்ததுடன் எல்லோரையும் அரவணைத்து பயணிக்கின்றார். அத்துடன் வடக்கையும் கிழக்கையும் ஒருங்கு சேர பயணிக்கும் தமிழ் மக்களது நீண்ட அபிலாசைக்குள் இயங்கும் அணியாக தம்மை வடிவமைத்து செயல்படுவது வியப்பாக உள்ளது. வேறு எந்தத் தரப்பு குறிப்பிட்டாலும் மாற்று அணி என்பது விக்னேஸ்வரன் தலைமையிலான அணி என்பதற்கு அதிக உள்ளடக்கங்கள் அவ்வணியிடம் காணப்படுகிறது. வேறுபட்ட சக்திகளை ஒன்றிணைத்திருகிறது. வேறுபட்ட ஆளுமைகளை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களை தனிப்பட்ட நலனுக்கு அப்பால் களத்தில் நிறுத்தியுள்ள அணியாகவும் விளங்குகிறது.ஏனைய கட்சிகள் தமது பிரதான வேட்பாளர்களின் வெற்றிக்காக மட்டுமே பெண்களை நிறுத்துகின்ற சந்தர்ப்பத்தில் பெண் தலைமைத்துவத்தினை முதன்மைப்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி பெண் வேட்பாளர்களை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது. வெளிப்படையாக மக்களிடம் நிதி கோரும் ஐரோப்பிய நாடுகள் போன்று செயல்படும் விக்னேஸ்வரன் தமது வேட்பாளர்களது சொத்து விபரத்தையும் காட்டிவருவது அதன் சிறந்த அரசியல் கலாசார பண்பினைக் காட்டுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக இருந்தாலும் சரி- வேறு தரப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் விருப்பு வாக்குக்காக தமக்குள்ளே சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.காட்டிக் கொடுப்புகளையும் குழிபறிப்புகளையும் பார்க்கும் போது இவர்களிடமிருந்து தமிழ் மக்கள் ஏதாவது பெற முடியுமா என்பது கேள்விக்குரியதாகவே தெரிகிறது. பிற கட்சிகளை குற்றம்சாட்டும் மாற்று அணி என தம்மை தாமே அழைத்துக் கொள்ளும் கட்சியினர் போடும் சண்டை அவர்களது கொள்கை வழித் தோன்றல்கள் என்பதன் போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. இவர்களிடம் காணப்படும் கொள்கை பற்றுதல் கட்சிக்கானதா ? தமிழ் மக்களுக்கானதா? அல்லது விருப்பு வாக்குகளுக்கானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரை உடன்பாட்டுடனும் நட்புடனும் புரிந்துணர்வுடனும் செயல்படுகின்றனர். தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படும் போக்கு அவ்வணியிடம் காணப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் கூட்டணியினரே மாற்று அணியாகவும் தெளிவான கொள்கை உறுதிப்பாடு உடையவர்களாகவும் காணப்படுவதுடன் கட்டுக் கோப்புடனும் ஒழுங்குடனும் பயணிக்கின்றனர். அவர்களது தலைமையிடம் காணப்படும் உண்மையும் அரசியல் அபிலாசையும் அவ்வணிக்கு மூன்றுக்கு மேற்பட்ட ஆசனத்தை கொடுக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய யாழ்ப்பாணத் தேர்தல்’ மாவட்டதிலேயே மூன்று ஆசனம் கிடைக்குமாயின் வடக்கு கிழக்கில் அதிக ஆசனத்திற்கு அவ்வணிக்கு வாய்ப்புண்டு. மக்கள் சரியானதை தேர்தெடுக்கும் திறன் உடையவர்கள் என்பது தேர்தலுக்கு பின்பாவது ஏனைய தரப்புக்கள் புரிந்து கொள்வார்கள். http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாணத்தில்-சூடு/

சண்முகவடிவேல்  

பாராளுமன்ற  தேர்தல் வடக்கு மாகாணத்தில் அதி தீவிரமான நிலையை எட்டிவருகிறது. ஆதீக்கம் செய்த தரப்பு தோல்வியை அடையும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை நோக்கி நகர்கிறது. நீதியரசர் தலைமையிலான அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெறும் நிலை ஏற்பட்டுவருகிறது. வலிகாமம் பிரதேசத்திலும் வடமராட்சியிலும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகிறது. அதே நேரம் தேசிய மட்டத்தில் போட்டியிடும் கட்சிகளும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் வடமாகாணத்தில் அதிக நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றன.

பொதுவெளியில் அல்லது தென் இலங்கையில் ஜனநாயகம் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் மையவாதக் கட்சியான தமிழரசுக் கட்சியும் தமக்கு அத்தகைய ஜனநாயகத்தினை குழிதோண்டிப் புதைத்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிக அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.முடிந்த வாரத்தில் புலி எதிர்ப்பு வாதியும் அவரது தோழரும் மிருசுவில் பகுதியில்  நடத்த முயன்று இடைவழியில் கூடியிருந்த மக்களிடம் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி கூட்டத்தினை கைவிட்டு வந்ததிலிருந்து நிலமை தலைகீழாகிவருவதனை அவதானிக்க முடிகின்றது.  அவ்வாறே அரியாலைக்குள்ளும் ஒரு சம்பவம் இரு வேட்பாளருக்கும் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பொது வெளியில் ஒரு கூட்டத்தினை நடாத்த முடியாத நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கடசியை பாராளுமன்றத்தில் தூக்கி நிறுத்த முயன்ற போது காணப்பட்ட ஒற்றுமையும் ஆலோசனையும்  தேர்தலில் காணமுடியாதுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான தேர்தலிலும் அத்தகைய ஒருமைப்பாடு இல்லாதுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக அதில் நிகழும் பிழைகளையும் தவறுகளையும் வஞ்சகமான சுயநல அரசியலையும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இவர்கள் எப்படியெல்லாம் செயல் பட்டிருப்பார்கள் என்பது முக்கியமானது. விடுதலைப் புலிகள் தமது அமைப்புக்குள்ளேயே நிகழ்ந்த தவறுகளை எப்படிக் கையாண்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த விடயம். அத்தகைய பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மேற்கொள்ள அவர்கள் இல்லாத போது அதனை தமிழ் மக்களே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை விடுதலைப் புலிகள் போல் தமிழ் மக்கள் செய்ய முடியாது. அதற்காகவே வாக்குச் சீட்டு உள்ளது.

wig 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எந்த விடயம் ஆதிக்கம் செய்கிறது என்பதுவும் தமிழ் மக்களுக்கு தெரியும்.முக்கிய காரணம் அவர்களுக்குள் எழுந்துள்ள போட்டி. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை மீதிக் காலத்தில் எழுச்சி பெறாது எப்படி அழிப்பது என்பதற்கான போட்டியாகும். அது மட்டுமன்றி ஒரு கூட்டமைப்பாக அது செயல்பட முடியாது திண்டாடுகிறது. கடந்த இரு தசாப்த காலம் என்பது அதன் தலைமையிலும் பங்காளிக் கட்சிகளதும் பலவீனத்தை கோடிட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் உருவாக்கியது என கூக்குரல் இடும் தரப்பினருக்கு தெரியவில்லை கூட்டமைப்பு புலிகளால் எடுத்துவந்த இலட்சியத்தினை எப்படிச் சிதைத்துள்ளார்கள் என்பது. அது மட்டுமல்ல அவர்கள் உருவாக்கும் போது அதில் அங்கம் பெற்றவர்கள் எப்படி பிரிந்து தனியன்களாகவும் மாற்று என்றும் செயல்பட வேண்டிய நிலைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினர் எனத் தம்மை அழைத்துக் கொள்வார்கள் என்று. வெளியே கூறிக் கொள்ளலாம் நாம் அவர்களை வெளியேற்றவில்லை தாமாகவே வெளியேறினார்கள் என்று. அதற்கான உண்மைக் காரணத்தை கூட்டமைப்பின் ஆதிக்கவாதிகள் சொல்லாது விட்டால் தமிழ் மக்களுக்கு தெரியாது என நினைக்கிறார்கள்.

இதேநேரம் மாற்று என தம்மை அழைத்துக் கொண்டு அதன் ஊடாக வலுவான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளார் நீதியரசர் விக்னேஸ்வரன். அவர் ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து ஓர் உடன்பாட்டை வரைந்து அதன் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்து ஆரோக்கியமாக முரண்பாடோ குழிபறிப்போ இன்றி பயணிக்கின்றார். அது மட்டுமல்ல தனது தோழமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட துணிச்சலுடன் முன்வந்ததுடன் எல்லோரையும் அரவணைத்து பயணிக்கின்றார். அத்துடன் வடக்கையும் கிழக்கையும் ஒருங்கு சேர பயணிக்கும் தமிழ் மக்களது நீண்ட அபிலாசைக்குள் இயங்கும் அணியாக தம்மை வடிவமைத்து செயல்படுவது வியப்பாக உள்ளது.

வேறு எந்தத் தரப்பு குறிப்பிட்டாலும் மாற்று அணி என்பது விக்னேஸ்வரன் தலைமையிலான அணி என்பதற்கு அதிக உள்ளடக்கங்கள் அவ்வணியிடம் காணப்படுகிறது. வேறுபட்ட சக்திகளை ஒன்றிணைத்திருகிறது. வேறுபட்ட ஆளுமைகளை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களை தனிப்பட்ட நலனுக்கு அப்பால் களத்தில் நிறுத்தியுள்ள அணியாகவும் விளங்குகிறது.ஏனைய கட்சிகள் தமது பிரதான வேட்பாளர்களின் வெற்றிக்காக மட்டுமே பெண்களை நிறுத்துகின்ற சந்தர்ப்பத்தில் பெண் தலைமைத்துவத்தினை முதன்மைப்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி பெண் வேட்பாளர்களை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது. வெளிப்படையாக மக்களிடம் நிதி கோரும் ஐரோப்பிய நாடுகள் போன்று செயல்படும் விக்னேஸ்வரன் தமது வேட்பாளர்களது சொத்து விபரத்தையும் காட்டிவருவது அதன் சிறந்த அரசியல் கலாசார பண்பினைக் காட்டுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக இருந்தாலும் சரி- வேறு தரப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் விருப்பு வாக்குக்காக தமக்குள்ளே சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.காட்டிக் கொடுப்புகளையும் குழிபறிப்புகளையும் பார்க்கும் போது இவர்களிடமிருந்து தமிழ் மக்கள் ஏதாவது பெற முடியுமா என்பது கேள்விக்குரியதாகவே தெரிகிறது. பிற கட்சிகளை குற்றம்சாட்டும் மாற்று அணி என தம்மை தாமே அழைத்துக் கொள்ளும் கட்சியினர் போடும் சண்டை அவர்களது கொள்கை வழித் தோன்றல்கள் என்பதன்  போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. இவர்களிடம் காணப்படும் கொள்கை பற்றுதல் கட்சிக்கானதா ? தமிழ் மக்களுக்கானதா? அல்லது விருப்பு வாக்குகளுக்கானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரை உடன்பாட்டுடனும் நட்புடனும் புரிந்துணர்வுடனும் செயல்படுகின்றனர். தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படும் போக்கு அவ்வணியிடம் காணப்படுகிறது.

எனவே தமிழ் மக்கள் கூட்டணியினரே மாற்று அணியாகவும் தெளிவான கொள்கை உறுதிப்பாடு உடையவர்களாகவும் காணப்படுவதுடன் கட்டுக் கோப்புடனும் ஒழுங்குடனும் பயணிக்கின்றனர். அவர்களது தலைமையிடம் காணப்படும் உண்மையும் அரசியல் அபிலாசையும் அவ்வணிக்கு மூன்றுக்கு மேற்பட்ட ஆசனத்தை கொடுக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய யாழ்ப்பாணத் தேர்தல்’ மாவட்டதிலேயே மூன்று ஆசனம் கிடைக்குமாயின் வடக்கு கிழக்கில் அதிக ஆசனத்திற்கு அவ்வணிக்கு வாய்ப்புண்டு. மக்கள் சரியானதை தேர்தெடுக்கும் திறன் உடையவர்கள் என்பது தேர்தலுக்கு பின்பாவது ஏனைய தரப்புக்கள் புரிந்து கொள்வார்கள்.

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாணத்தில்-சூடு/

துன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்

1 year 2 months ago
ஆ: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா, அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா… ஹே நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..... ஆ: அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு, அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு, கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு … ஹேய் ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..... ஆ: அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி, அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி, பொன்னான உலகென்று பெயருமிட்டால் பொன்னான உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹேய்... ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.... ஆ: உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு, உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமிஏது கவலை விடு, ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து… ஹேய்.. ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா… ஹே நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு!

1 year 2 months ago
மகிந்தர் சனாதிபதியாக இருந்தபோது பிணம்புணரும் படைகளையும் கொண்டவர். அவர் படைகளுக்கு முன் உரிந்திருந்தால் என்ன? உரியாமல் இருந்தால் என்ன?. அதுகள் தங்கள் காரியங்களைக் கனகட்சிதமாகச் செய்யும், இதற்கு மை போட்டா பார்க்கவேண்டும்.....?? 🤔 தற்போது மகிந்தரின் தம்பி சனாதிபதி. மகிந்தர் தனது அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொன்னால்தானே தம்பியும் தன்பின் வருவோருக்குச் சொல்லி, அந்த முன்னுரிமையைத் தொடரவைக்க முடியும். 😲

2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு

1 year 2 months ago
2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா) என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சாராவின் சிறிய தந்தை மற்றும் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் ஆகியோரையை கைது செய்து குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராகி இருந்ததாக கூறப்படும் சஹ்ரானின் பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்ட குழு கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டது. இந்த குழுவில் நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவலய குண்டுதாரியின் மனைவியான சாராவும் இருந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் இறந்தமைக்கான எந்த தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே சாய்ந்தமருது வீட்டில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரேயே சாரா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படும் நிலையிலேயே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை தற்போது ஆரம்பித்துள்ளது. குறித்த விசாரணையின் ஆரம்பகட்டமாகவே பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், சாராவின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த காலப்பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ளார்.மேலும் இவர் சாய்ந்தமருது பகுதிக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி,சாரா தப்பிச் செல்ல உதவினாரா என்பதை அறியவே அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2ஆம்-கட்ட-தாக்குதலுக்கு-த/