Aggregator

குண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற 1000 ஆண்டுகள் ஆகும்: நீதிபதிகள் கோபம்

14 hours 55 minutes ago
குண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற 1000 ஆண்டுகள் ஆகும்: நீதிபதிகள் கோபம் சென்னை குண்டுங்குழியுமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ள உயர் நீதிமன்றம், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்த தகவல்களையும் சேர்த்து நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் மழை நீர் வடிகால் வழியே செல்ல சாலையோரங்களில் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. ஆனால் இவை தூர்வாரப்படாமல், வருடம் முழுதும் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது என பல கோடி செலவழிக்கப்படுகிறது. மழை நீர் வடிகால் சரிவர இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்குவது பெரிய பிரச்சினையாக உள்ளது. இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாது, 80 சதவீத மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுவிட்டது என சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே சாலையில் கேபிள் பதிக்கும் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி பழையபடி சாலை அமைப்பதில்லை என ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரும், ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சிபிஐ விசாரணையில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளருமான மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “ரிலையன்ஸ், ஏர்டெல், வேல்ட்டெல் (worldtel) நிறுவனங்களால் 2001 முதல் சென்னையில் தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைத்து தராததால், பள்ளத்தில் விழுந்தும், அதில் தேங்கிய நீரில் சிக்கியும் பலர் காயமடைந்தும், சிலர் மரணமடைந்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக எஸ்பிளானேடு, மயிலாப்பூர் காவல் நிலையங்களில் அளித்த புகார்களில் இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. தொலைப்பேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவராதது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், ஏற்கனவே மோசமான சாலைகளை கண்டறியவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை ஆராயவும் இரண்டு வெவ்வேறு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “தற்போதைய பருவமழை காலம் முடியும் வரை சாலைகள் செப்பனிடப்போவதில்லை. இதேநிலையில் போனால் தற்போதைய சிங்கப்பூரைப் போல சென்னை மாறுவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும், ஆனால் அப்போது சிங்கப்பூர் 10000 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுவிடும். மோசமான தரத்துடன் சாலைகள் அமைக்கப்படுவதும், அப்படிப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததுமே இப்படிப்பட்ட மோசமான சாலைகள் அமைவதற்கு காரணம். சென்னையில் கழிவுநீர் கால்வாய்களுக்கான வழிகள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்படாமல், ஏன் சாலையில் நடுவிலேயே அமைக்கப்படுகிறது. நீதிமன்றம் கேள்வி கேட்காதவரை அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்த கடமையுணர்ச்சியோ, பொறுப்புணர்வோ ஏற்படுவது இல்லை. சட்டவிரோத பேனர் காரணமாக சிலர் இறக்கின்றனர். சாலைகளின் நடுவில் உள்ள குழிகள் காரணமாக சிலர் இறக்கின்றனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் அதிகாரிகள் கவலைப்படுவதாக தெரியவில்லை”. எனத்தெரிவித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்தும் நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். https://www.hindutamil.in/news/tamilnadu/521155-bombarding-roads-take-1000-years-to-change-like-singapore-chennai-high-court-criticized-3.html

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக - பாமக இடையே மோதல் ஏற்படும் சூழல்; போலீஸாரால் தடுத்து நிறுத்தம்

14 hours 57 minutes ago
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக - பாமக இடையே மோதல் ஏற்படும் சூழல்; போலீஸாரால் தடுத்து நிறுத்தம் விக்கிரவாண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,607. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,546. திருநங்கைகள் 25 மற்றும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 209 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் . இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கவுதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளில் 1,333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 103 கிராமங்களுக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் இன்று (அக்.21) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் அணிவகுப்பு விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மேலும் வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் சுகாதாரத் துறையினர் மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதாவது 103 கிராமங்களில் 61 கிராமங்களில் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி, இத்தொகுதியில் 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. கல்யாணம்பூண்டி வாக்குச்சாவடியில் சுகாதாரத் துறையினர் வாக்காளர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் மற்றும் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதனிடையே ஆசாரங்குப்பம் வாக்குச்சாவடியில் திமுக-பாமகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. https://www.hindutamil.in/news/tamilnadu/521377-vikravandi-byelection-afternoon-1-o-clock-status.html

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக - பாமக இடையே மோதல் ஏற்படும் சூழல்; போலீஸாரால் தடுத்து நிறுத்தம் vikravandi-byelection-afternoon-1-o-clock-status விக்கிரவாண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,607. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,546. திருநங்கைகள் 25 மற்றும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 209 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் . இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கவுதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளில் 1,333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

103 கிராமங்களுக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் இன்று (அக்.21) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் அணிவகுப்பு விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மேலும் வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

15716475701863.PNG

வாக்காளர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் சுகாதாரத் துறையினர்

மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதாவது 103 கிராமங்களில் 61 கிராமங்களில் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி, இத்தொகுதியில் 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கல்யாணம்பூண்டி வாக்குச்சாவடியில் சுகாதாரத் துறையினர் வாக்காளர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் மற்றும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இதனிடையே ஆசாரங்குப்பம் வாக்குச்சாவடியில் திமுக-பாமகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

https://www.hindutamil.in/news/tamilnadu/521377-vikravandi-byelection-afternoon-1-o-clock-status.html

உணவுக்குழாய் புற்றுநோய்

15 hours 2 minutes ago
உணவுக்குழாய்ப் புற்றுநோய்... சில உண்மைகள்..! மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது உணவுக்குழாய்ப் புற்றுநோய். இந்தியாவிலும் இது மரணத்தை உண்டாக்கக்கூடிய புற்றுநோய் வரிசையில் முன்னிலையில் இருந்துவருகிறது. இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலமான மிசோராமில்தான் இந்தப் புற்றுநோயின் தாக்கம் அதிகம். அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் வருகிறது. உப்பால் வரலாம் புற்று உணவுக் குழாய் அழற்சிக்கு (ரிஃப்ளக்ஸ்) அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினை, உணவுக்குழாய்ப் புற்றுநோய். ‘ரிஃப்ளக்ஸ்’ பிரச்சினையில் வரக்கூடிய பாதிப் பிரச்சினைகள் இதிலும் உள்ளன. இது வம்சாவளியாக வரக்கூடிய பிரச்சினை அல்ல. மிகவும் குறைந்த அளவில்தான் வம்சாவளியாக உணவுக்குழாய்ப் புற்றுநோய் வருகிறது. பிறகு எந்த வகையில் இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது? “மனிதனின் பழக்கவழக்க மாற்றங்களால்தாம் இந்தப் புற்றுநோய் அதிகம் வருகிறது. இரைப்பையிலும் உணவுக்குழாயிலும் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணமே, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதுதான். இது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுமட்டுமல்ல; பழங்களே சாப்பிடாதவர்களுக்கும் உப்பு உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உணவுப் பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளின் ஒன்று” என்கிறார் குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன். இந்த உணவுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும்கூட உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் பல மடங்கு அதிகம். இதுவும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் அவர். அலட்சியம் உணவை விழுங்குவதில் சிரமமா? ‘ரிஃப்ளக்ஸ்’ இருப்பவர்களுக்கு எப்படி நெஞ்செரிச்சல் இருக்கிறதோ அதுபோலவே உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை உணர்த்துவது விழுங்குதலில் உள்ள பிரச்சினைதான். புற்று வளர்வதால் உணவுக்குழாய் சுருங்கிவிடுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குக் கடின உணவான சப்பாத்தியோ பரோட்டாவையோ சாப்பிடும்போது அது இரைப்பைக்குச் செல்லாது. தண்ணீர் குடித்தால்தான் உள்ளே செல்லும். இல்லையென்றால் அப்படியே உணவுக் குழாயிலேயே தங்கியிருக்கும். இதுபோன்ற ஒரு நிலை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? “உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். எண்டாஸ்கோப்பி மூலம் நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், என்னுடைய அனுபவத்தில் சப்பாத்தி, பரோட்டாவைச் சாப்பிடக் கஷ்டமாக இருந்தால், எளிய உணவான இட்லி, தோசைக்கு மாறிவிடுபவர்கள் ஏராளம். இட்லி, தோசையும் சாப்பிட முடியாமல் போனால், கஞ்சிக்கு மாறிவிடுவார்கள். கஞ்சியும் குடிக்க முடியாமல் போனால், நீராகாரத்துக்கு மாறிவிடுவார்கள். மருத்துவரையே பார்க்காமல் தவிர்த்துவிடுவார்கள். இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும்போது இடைப்பட்ட காலத்தில் புற்று நன்றாக வளர்ந்துவிடும். அதனால்தான் நம் ஊரில் ஆரம்ப காலத்திலேயே உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. உணவு விழுங்கக் கஷ்டப்படத் தொடங்கிய பிறகு நான்கு மாதங்கள் கழித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே அதிகம். இதையும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். இது இரைப்பை, உணவுக் குழாய் இரண்டுக்குமே பொருந்தக்கூடியது தான்” என்கிறார் சந்திரமோகன். unavu-2jpgஎஸ்.எம். சந்திரமோகன் அறிகுறிகள் உஷார் அலட்சியத்தால் மருத்துவரைச் சந்திக்காமல் தள்ளிப்போடுவதால் புற்று இதர உறுப்புகளுக்கும் பரவிவிடும். புற்றை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதால், சிகிச்சை முறையும் சிக்கலாகிவிடுகிறது. எப்போதும் மருத்துவத்தில் புற்றுநோய் வந்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் ஆராய்வது வழக்கம். ஆனால், பரவிய நிலையில் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும்போது அதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்தால், எளிய சிகிச்சையின் மூலம் உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்த வழி இருக்கிறது. உணவுக்குழாய்ப் புற்றுநோய்க்கு விழுங்குவதில் ஏற்படும் தொந்தரவு மட்டுமே அறிகுறி அல்ல. புளித்த ஏப்பம், பசிக்குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். இந்த அறிகுறிகள் உணவுக்குழாய், இரைப்பைப் புண்ணிலும் காணப்படும் பொதுவான அறிகுறிகள்தாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகும்போதுதான் உணவுக்குழாயில் புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும். பொரித்த உணவு வகைகள், உப்பு அதிகம் கலந்த உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகள், மது, புகை ஆகியவற்றைக் கைவிட்டால், உணவுக்குழாயில் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம். குழாய் காப்போம்..! https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/150585-.html

14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால்

15 hours 14 minutes ago
14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால்

Published by J Anojan on 2019-10-21 11:40:05

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார்.

EHWucZqXYAA3wQU.jpg

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 

இவர் மேரி பெரேல்லா என்ற தனது பாடசாலை தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மேரி பெரேல்லா. 

இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்றுமுன்தினம் நடந்தது. 

ஸ்பெயினில் நடந்த இந்த திருமணத்தில் பிரபல டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் உட்பட சுமார் 350 விருந்தினர்கள் கலந்துகொண்டு மணமக்களைவாழ்த்தினர்.

EHWucbWX4AApNE6.jpg

https://www.virakesari.lk/article/67273

ஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட்

15 hours 16 minutes ago
ஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட் Published by J Anojan on 2019-10-21 13:48:21 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியிலேயே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க நீக்கப்பட்டு, புதிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். இந் நிலையில் தற்போது இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிக்கி ஆர்தர், மார்க் ராம்பிரகாஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67286

Published by J Anojan on 2019-10-21 13:48:21

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது.

chandika-hathurusingha-gett-1548838216.j

அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியிலேயே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க நீக்கப்பட்டு, புதிய  இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் தற்போது இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிக்கி ஆர்தர், மார்க் ராம்பிரகாஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/67286

162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா

15 hours 18 minutes ago
162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர்மா 212 ஓட்டங்களையும், ரஹானே 115 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான எல்கர், ஓட்டம் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் மொஹமட் ஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிகொக் 4 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்க அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந் நிலையில் மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. ஹம்சா(62), பாவுமா(32) மற்றும் ஜார்ஜ் லின்டே(37) ஆகிய வீரர்களை தவிர பிற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. இதனால் தென்னாபிரிக்க அணி 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஷமி, ஜடேஜா, நதீம் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 335 ஓட்டங்களினால் பின் தங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி ஃபாலோ ஆன் செய்து மீண்டும் துடுப்பெடுத்தாடி வருகிறது. அதன்படி சற்று முன்னர் வரை தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. எல்கர் 16 ஓட்டத்துடனும், கிளேசன் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். https://www.virakesari.lk/article/67288

Published by J Anojan on 2019-10-  

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

EHX9rZbWsAM0mPr.jpg

இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். 

இந்தியா சார்பில் ரோகித் சர்மா 212 ஓட்டங்களையும், ரஹானே 115 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். 

தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான எல்கர், ஓட்டம் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் மொஹமட் ஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிகொக்  4 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தென்னாபிரிக்க அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

இந் நிலையில் மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 

ஹம்சா(62), பாவுமா(32) மற்றும் ஜார்ஜ் லின்டே(37) ஆகிய வீரர்களை தவிர பிற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. இதனால் தென்னாபிரிக்க அணி 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஷமி, ஜடேஜா, நதீம் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 

இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 335 ஓட்டங்களினால் பின் தங்கியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி ஃபாலோ ஆன் செய்து மீண்டும் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

அதன்படி சற்று முன்னர் வரை தென்னாபிரிக்க அணி  4 விக்கெட்டுக்களை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. எல்கர் 16 ஓட்டத்துடனும், கிளேசன் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 

EHX78lCXYAUi7Xx.jpg

https://www.virakesari.lk/article/67288

ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டி தாக்குதல் ; இரு இராணுவ வீரர் உட்பட மூவர் பலி!

15 hours 22 minutes ago
இந்தியாவின் பதில் தாக்குதலில் 3 முகாம்கள் நிர்மூலம் ; 6-10 வரையான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலி - இந்திய இராணுவத் தளபதி Published by J Anojan on 2019-10-20 19:49:41 பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 6 தொடக்கம் 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று இரவிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் இரு இந்திய இராணுவ வீரர்கள் உள்ளடங்கலகா மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதைப் போன்று இந்திய இராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தயுள்ளனர். இதில் பாகிஸ்தான் பகுதியிலிருந்த 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலினால் மூன்று தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தும் உள்ளனர். அது மாத்திரமன்றி பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 6 தொடக்கம் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/67254

கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் !

15 hours 24 minutes ago
கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் ! Published by Priyatharshan on 2019-10-21 15:28:51 அவுஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கறுப்புநிற மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், அவுஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலிய பொலிஸார் சோதனை களை மேற்கொண்டனர். அவுஸ்திரேலிய அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம் சாட்டின. இந்நிலையில், பத்திரிகைகளுக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்பின்னணியிலேயே அவுஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கறுப்புநிற மை பூசி மறைத்து வெளியிட்டு எதிர்ப்புகளை வெளிக்காட்டியுள்ளன. பத்திரிகைகளின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியாவின் பல்வேறு வானொலிகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிகை, தி அவுஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவிக்கையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை சிறிது சிறிதாக பாதிப்படைச்செய்துள்ளது. பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த வருடம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அத்துடன் பத்திரிகை சுதந்திரம் அவுஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்குட்பட்டது. அதில் நான், பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/67293

Published by Priyatharshan on 2019-10-21 15:28:51

அவுஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கறுப்புநிற மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன.

australia-newspapers.jpg

போர்க்குற்றங்கள்,  அவுஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. 

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலிய பொலிஸார்  சோதனை களை மேற்கொண்டனர்.

அவுஸ்திரேலிய அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம்  சாட்டின. 

இந்நிலையில், பத்திரிகைகளுக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும்  ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதன்பின்னணியிலேயே அவுஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கறுப்புநிற மை பூசி மறைத்து வெளியிட்டு எதிர்ப்புகளை வெளிக்காட்டியுள்ளன.

பத்திரிகைகளின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியாவின் பல்வேறு வானொலிகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிகை, தி  அவுஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம்  உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து  அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவிக்கையில்,

“ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த  இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை சிறிது சிறிதாக பாதிப்படைச்செய்துள்ளது.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த வருடம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அத்துடன் பத்திரிகை சுதந்திரம் அவுஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்குட்பட்டது. அதில் நான்,  பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67293

கோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா

15 hours 28 minutes ago
கோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா Published by Loga Dharshini on 2019-10-21 15:46:23 ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக வந்­த­வுடன் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வை வழங்க முடியும் என்றால் மகிந்த ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஏன் சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்­லை­யென தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தோட்டக் கமிட்டித் தலை­வர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளு­ட­னான மக்கள் சந்­திப்பு நேற்­று­முன்­தினம் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் அட்டன் பணி­ம­னையில் இடம்­பெற்­றது. இதன்­போதே ‍அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பினார். சங்­கத்தின் பிரதி நிதிச் செய­லா­ளரும், மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரூ­மான சோ. ஸ்ரீதரன் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான சங்­கத்தின் பிரதித் தலைவர் எம். உத­ய­குமார், உப­த­லைவர் எம். ராம், அட்­டன்-­டிக்­கோயா முன்னாள் நகர பிதா டாக்டர் அழ­க­முத்து நந்­த­குமார், தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி சஜித் பிரே­ம­தா­ஸவா அல்­லது கோத்­த­பாய ராஜ­பக்­ஸவா என்­ப­தற்­கான தேர்தல் இன்னும் ஒரு­மா­தக்­கா­ல­கப்­ப­கு­திக்குள் நடை­பெ­ற­வுள்­ளது. இதை முழு நாட்டு மக்­க­ளுமே எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றார்கள். கோத்­த­பாய வந்தால் என்ன நடக்கும் என்­பது மக்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். யாரும் வாய் திறந்து பேச முடி­யாது. நாட்டில் அடக்கு முறையும் குடும்ப ஆட்­சியும் மீண்டும் தலை தூக்கும் என்­பதை மறந்து விடக் கூடாது. மலை­யக இந்­திய வம்­சா­வளி மக்கள் நாடற்­ற­வர்­க­ளாக இருந்த போது அவர்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை வழங்­கி­யவர் இன்­றைய ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தந்­தை­யா­ரான அமரர் ரண­சிங்க பிரே­ம­தாஸ என்­பதை நாம் நன்­றி­யுடன் நினைவு கூர வேண்டும். அவ­ரது தந்­தையின் வழியில் நாட்டை சுபீட்­ச­மான பாதைக்குக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலை­வ­ரான சஜித் தேவையா அல்­லது ஆயிரக் கணக்­கான மக்­களை கொன்று குவித்து பெண்­களை வித­வை­க­ளாக்­கிய கொடுங்­கோலர் கோத்­த­பாய தேவையா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் தீபா­வளிப் பண்­டி­கையை மகிழ்ச்­சி­யோடு கொண்­டாட வேண்டும் என்­ப­தற்­காக கம்­ப­னிகள் வழங்கும் 10 ஆயிரம் ரூபா முற்­ப­ணத்­துக்கு மேல­தி­க­மாக 5 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க நாம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதற்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி­ய­வர்கள் அது கிடைக்­குமா என்று சந்­த­தேகம் எழுப்­பி­யி­ருந்­தார்கள். அதே­நேரம், அது தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் இலஞ்சம் என்று மலை­யக அர­சி­யல்­வா­திகள் சுட்டிக் காட்டி கிடைக்க விடாமல் தடுத்து நிறுத்­தி­யுள்­ளார்கள். மலை­யக மக்­க­ளுக்­காக நீலிக் கண்ணீர் வடிக்கும் சில அர­சி­யல்­வா­திகள் 3 பாரா­ளு­மன்ற “சீட்” டும் 30 கோடி ரூபா பணமும் கேட்டு அது கிடைக்­காத கார­ணத்தால் மாற்று வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு தரு­வ­தற்கு சென்று விட்­டார்கள். இவர்கள் தான் 83 ஆம் ஆண்டில் இனக் கல­வாரம் ஏற்­பட்­ட­போது தமிழ் மக்கள் ஐ.தே.கட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் கொல்­லப்­பட்­ட­தாகக் பிர­சாரம் செய்து வரு­கின்­றார்கள். அந்த நேரத்தில் இவர்­களின் பெருந்­த­லைவர் அர­சாங்­கத்­தோடு இருந்தார் என்­பதை மக்கள் மறக்­க­வில்லை. இந்த நிலையில் கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக வந்­த­வுடன் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேத­ன­மாக வழங்கப் போவ­தாக பிர­சாரம் செய்­கின்­றார்கள். இந்த ஆயிரம் ரூபா கோரிக்கை கடந்த 10 வரு­ட­மாக இருந்து வரு­கின்­றது. இதை கம்­ப­னிகள் தான் வழங்க முடி­யுமே தவிர, அர­சாங்­கத்தால் வழங்க முடி­யாது. அவ்­வாறு கோத்­த­பாய ஜனா­தி­ப­தி­யாக வந்து வழங்க முடியும் என்றால் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ஸவினால் ஏன் வழங்க முடியவில்லை. அவருடைய காலத்திலும் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அவர் ஏன் கண்டுகொள்ளவில்லை? எனவே, மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/67296