Aggregator

என்ர ராசாவுக்கு

3 months 2 weeks ago
என்ர ராசாவுக்கு
brass-natra.jpg?resize=600%2C400&ssl=1

யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர்.

ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்!

அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக்கும் ஒரு கதவு. இதுவே அவர் உலகம். ஒரு வயோதிபர் விடுதியில் இவைகளை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ஒரு மனிதன் மூப்படைய அவன் சஞ்சரிக்கும் பரப்பளவு குறைந்து கொண்டு போவது ஒரு சோகமான உலக நியதி. அந்த குறுகும் உலகைத் கூட கைத்தடி பிடித்து கடக்க வேண்டிய கட்டாயத்தையும் இறைவன் சமைத்துவைத்து விடுகிறான்!

அவரின் அறையில் ஹீட்டர் வசதிகள் இருந்ததால், மெல்பேர்ன் குளிர் அவரை தீண்டவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் பெற்றோர் இணைப்பு விசாவில் வந்து சேர்ந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய பிரஜைக்குரிய எல்லா வசதிகளும் உரிமையாகின.
இளைய மகன் சபேசன் குடும்பத்துடன் எட்டு வருடங்கள் வாழ்ந்து, ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த ‘றிவ சைட் ஏஜ் கேர்’ வாசியானார். இந்த இடப்பெயர்ச்சிக்கு சபேசன் பல காரணங்களை சொன்னாலும், தனது எண்பத்தி ஏழு வயதும் ஒரு காரணம் என்பதை அவர் அறிவார்.

“அப்பு, இஞ்ச தனிச்சுப்போவியள். நானும் செல்வியும் வேலைக்கு போனாப் பிறகு நீங்க விழுந்து கிழுந்து போட்டியள் எண்டா ஆரு பாக்கிறது? அங்க உங்கள நல்லா பாத்துக்கொள்ளுவினம். உங்கள குளிப்பாட்ட, சாப்பாடு பருக்க செல்வியால ஏலாதுதானே? அங்க உங்களுக்கு எண்டு ஒரு அறை தருவினம். குளிப்பாட்ட கிளிப்பாட்ட அங்க கெயாறஸ் இருப்பினம். சொன்ன வேளைக்கு சாப்பாடு….வருத்தம் வாதை எண்டாலும் உடனே டொக்டர அங்கயே வருவிப்பினம். இஞ்ச நானும் செல்வியும் வேலைக்கு போனாப்புறம் நீங்க தனிச்சு போவியள். மகள் ஆர்த்தியும் யூனிவர்சிற்றியும் படிப்பும் எண்டு ஓடியபடியல்லோ இருக்காள்” என்று மகன் அடுக்கிய காரணங்கள் எல்லாம் அவருக்கு வெற்று வார்த்தைகளாகவே பட்டது.

இதுவே இங்கு ஒரு நாகரீகமாய் போய்விட்டது. வெள்ளைக்காரனின் சமூக சடங்குகளை பிரதியெடுத்து வாழும் வாழ்வுதான் உயர்ந்தது எனும் ஒரு மனப்பான்மை நம்மவர்களுள் குடிகொண்டு செழித்து வளர்வதை முருகேசர் அறியாதவர் அல்ல.

இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் அது. மெல்பேர்ன் நகரின் வட-மேற்கில் இருக்கும் ‘சன்சைன் முதியோர் தமிழ் மன்றத்தின்’ மாதாந்த சுற்றுலா நாள் இன்று. இந்த ஞாயிறுகளில் ஒரு பேரூந்தில் வீடுகளிலும் முதியோர் இல்லங்களிலும் வாழும் மூத்தபிரஜை அங்கத்தினர்களை வந்து ஏற்றிக்கொண்டு ஒரு நாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் வந்து இறக்கி விடுவார்கள். முருகேசர் தவறாமல் கலந்துகொள்ளும் நிகழ்வு இது. முதியவர்களையும் சமுதாயத்தில் ஒரு துடிப்புள்ள பிரஜைகளாக வாழவைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் சமூகநல முயற்சிகளில் இதுவும் ஒன்று.

பயணத்தின் போது வாய்க்கு ருசியான உணவு வகைகள் பரிமாறப்படுவதும் ஒரு விசேடம். யாழ்ப்பாணத்து கறித்தூளும் தாளித்த கருவேப்பிலையின் நறுமணமும் கட்லட், பற்றீஸ் என்ற பெயரில் பேரூந்தை நிறைக்கும்.

ஏஜ்ட் கெயாரில் பரிமாறப்படும் ‘வெள்ளைக்காரனின்’ உணவு வகைகளை விழுங்கி மரணித்த முருகேசரின் நாவு விழித்துக் கொள்ளும். “காஞ்சி போன ரொட்டி துண்டும் சூப்பும் இவரு டின்னர்” எனும் பாடலை ஞாபகமூட்டும் சாப்பாடு வகைகளை உண்டு அவருக்கு அலுத்துவிட்டது. இடையிடையே செல்வியின் சமையலை சபேசன் கொண்டுவந்து பரிமாறும்போது தான் இழந்தது உறவுகள் மட்டுமல்ல என்பதை எண்ணிக்கொள்வார்.

இன்று கடற்கரை விஜயம். அங்கு போகும் வழியில் ஒரு உள்ளூர் மார்க்கட்டுக்கும் அழைத்துச் செல்வதாய் அழைப்பு சொல்லிற்று.

பேரூந்து கலகலவென்று சம்பாஷணைகளில் நிரம்பி வழிந்தது. தமது வலிகளையும் வாதைகளையும் பகிர்ந்து கொள்பவர்கள், தம் தனிமையையும் புறக்கணிப்புகளையும் மறைக்க கோமாளி முகமூடிகளை அணிந்த சில முகங்கள், ‘இன்னும் எத்தனை நாள் இப்படி’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் உருவங்கள், கடந்த கால இன்ப நினைவுகளை மீட்டெடுக்க தூண்டில் போடும் சில சிந்தனை முகங்கள், வழுக்கிச் செல்லும் நினைவுகளை வலிந்து பற்றி வார்த்தைகளாக்கி பகிரும் கதைசொல்லிகள் என பல வகை மூத்தோர் கூட்டம்.

அவர்கள் மாற்றியமைக்க நினைத்த உலகே அவர்களை சிறைப்படுத்தி வைத்த சோகம் பலர் முகங்களில் கோடிழுத்து நின்றன.

முருகேசர் தன் சக பயணி நண்பரான துரைராஜாவுடன் அமர்ந்துகொண்டார். இருவருக்கும் உலக அரசியலில் ஈர்ப்பு இருந்தமையினால் அதுவே அவர்கள் உறவிற்கு பசையானது.

அரைமணி நேரத்திலேயே பேரூந்து அந்த ‘சண்டே மார்க்கட்’ எனும் சந்தைக்கு வந்து சேர்ந்தது. “கெதியா இறங்கி பார்த்திட்டு வந்துருங்கோ…..வெய்யில் ஏற முன்னம் போகவேணும் கண்டியளோ” என்ற கட்டளைக்கமைய எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினர்.

இந்த மார்க்கட்டில் உணவு வகைகள், தோட்டத்து காய்கறிகள், பழைய உடைகள், புத்தகங்கள், தோட்டவேலை செய்வதற்கான பாவித்த உபகரணங்கள், பூச்செடிகள், மற்றும் ‘தட்டு முட்டு’ சாமான்கள் என பலவகை பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனேகமானவை பாவித்த பொருட்களும் ‘கராஜ் சேல்’ என்ற வீட்டு வாசல் விற்பனையில் மலிவு விலையில் வாங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டவை.

முருகேசரும் துரைராசாவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களில் ஆர்வமின்றி நடைபயின்றனர்.

“அங்க பாத்தியளோ?….நம்மட ஊர் நடராசர் சிலை போல கிடக்குது. உது எங்க இஞ்ச வந்தது?” என்ற துரைராசாவின் கேள்வி முருகேசரின் கவனத்தை அந்த மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த ‘தட்டு முட்டு’ சாமான்களுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நடராசர் சிலை மேல் திருப்பியது.

ஆம், அது உண்மையே. வெங்கலத்தால் செய்யப்பட்ட வட்டமான சிலை. நடராசர் நர்த்தனம் புரியும் சிலை வடிவம்.

அதைத் தூக்கி அதன் பின்புறம் ஒட்டியிருந்த வெள்ளை காகிதத்தில் எழுதியிருந்த விலையை பார்த்தார். $10 என்று எழுதியிருந்தது.

“நல்ல வடிவான சிலை…. தனி வெங்கலத்தில செய்திருக்கினம்….. உதப்போல ஒரு சிலைய தேடித்திரியிறன்…. விலைய கேட்டுப்பாப்பம். $5 இற்குத் தருவானோ தெரியாது.”

“ஓம், நல்லாத்தான் இருக்குது ….விருப்பம் எண்டால் கேட்டுப்பாரும்” என்ற துரைராசாவின் அங்கீகாரத்தால் உந்தப்பட்ட முருகேசர், மேசையின் மறுபுறம் நின்றவனிடம் தன் பேரத்தை வார்த்தைகளாக்கி “கான் ஐ ஹாவ் இட் ஃபோர் $5.”

“நோ சேர்…. வட் எபவுட் $8 ? “

இது எட்டு வெள்ளிக்கு லாபமே என்பதை அவர் மனக்கணிப்பு சொல்லிற்று.
பணம் கைமாற நடராசர் முருகேசரின் உடமையானார்.

x x x x x

மாலை ஆறு மணிக்கு சுற்றுலா முடிந்து ஏஜ் கேருக்கு வந்து சேர்ந்த முருகேசருக்கு இரவு உணவு அவரது அறை மேசையில் தயாராக காத்திருந்தது.
அவருக்கோ ஊர் சுற்றிய களைப்பு. ஒரு ‘காக்காய் குளியலுடன்’ தலையை துவட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்து தான் அன்று சந்தையில் வாங்கிய நடராசர் சிலையை கையிலேந்தி பழைய நினைவுகளில் மூழ்கினார். நினைவுகள், அவரும் மனைவி பாக்கியமும் இன்பமாய் கழித்த நாட்களுக்கு அவரை இழுத்துச் சென்றன.

திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது. கிழக்கே அமைந்திருந்த ராஜகோபுரத்தில் இருந்த நாட்டியத்தின் 108 கரணங்களை பிரதிபலிக்கும் சிற்பங்களை பாக்கியம் வியப்புடன் பார்த்து “உதுகளையெல்லாம் எப்படித்தான் கட்டியிருப்பினமோ?” என்று கூறி வியந்தாள். எல்லா சன்னதிகளையும் கோயிலின் தீர்த்தக்குளமான ஆனந்த தீர்த்தத்தையும் பார்த்தபின்பு, பிரகாரத்தை சுற்றி வந்து பூஜை செய்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்தனர்.

கோயிலின் முன்னால் இருந்த கடைவீதியில் பல விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தெய்வீக உணர்வில் திழைத்திருக்கும் பயணிகள் மென்மனதில் ‘வாழைப்பழத்தில் ஊசியாக’ வணிகம் சொருகப்படும் தலங்கள் இவை.

அவர்களை கவர்ந்தது அழகான வெண்கல மற்றும் பித்தளை விக்கிரகங்கள் விற்கும் அந்தச் சிறிய கடை.
“ஐயா….நல்ல டிசைன் சிலைகளுங்க. நாங்க வாங்கி விக்கிறதில்லீங்க…எல்லாம் எங்கட தயாரிப்புங்க… இங்க சிலைய வாங்குநாக்கா நாங்களே பிஃரீயா எழுத்த பொறித்துத் தருவமுங்க….வேற இடத்தில வாங்கினீங்க….. அதுக்கு வேறா சார்ஜு பண்ணுவானுங்க” என்ற கடைப்பையனின் விற்பனை மந்திரம் எந்த கஸ்டமரையும் கட்டிப் போட்டுவிடும்.

பாக்கியம்தான் சிலை வாங்குவதில் மும்முரமாய் இருந்தாள்.
“சும்மா காசப்பாக்கம ஒண்ட வாங்குவம். சாமி அறைக்கும் ஒண்டு வேணும். இஞ்ச வாங்கின ஞாபகமும் இருக்குமல்லோ….இல்லாட்டி பேந்து துக்கப்படுவம்”
மனைவியின் கெஞ்சலுக்கு இளகிய முருகேசர், பாக்கியம் தெரிவு செய்த ஒரு நடராஜர் சிலையை வாங்கி அவள் கைகளில் திணித்து “சரி…சிலையில என்ன எழுதப்போறீர்?” என கேள்வியை தொடுத்தார். பிரபஞ்சத்தின் வட்டத்தினுள் நடராஜர் வலது கையில் அபய முத்திரையையும் இடது காலை உயர தூக்கியும் ஆனந்த தாண்டவம் ஆடும் உருவச்சிலை அது.

முருகேசரின் கேள்விக்கு பாக்கியம் பதில் அளிக்கும் முன்பே இடையில் குறுக்கிட்ட கடைப்பையன் “என்ன பொறிச்சுத் தரணுமினு இந்த பேப்பர் துண்டில எழுதிக் தாங்க அம்மா….மிஸ்டேக் இல்லாம தமிழில எழுதித் தரணுமுங்க”.
பேப்பரை வாங்கி பாக்கியம் ஒரு கண யோசனையில் பின் பேனாவால் “என்ர ராசாவுக்கு” என எழுதி பையனிடம் கொடுத்தார்.

அதை படித்த பையனின் முகம் கோணலானது. கண்களை குறுக்கி மூக்கை சுழித்து “அம்மா, ‘எனது ராஜாவுக்கு’ அப்படீணு சுத்த தமிழ்ல பொறிச்சி தரட்டுமா?”
“ஐயோ வேணாம்…நீ ஒண்டும் மாத்த கீத்த வேணாம். அதயே பொறித்துத் தா” என்று ஒரு ரகசியத்தை கூறுவது போல் சொன்ன பாக்கியத்தின் முகம் பெண்மைக்கே உரிய வெட்கத்தால் சிவந்தது. குறும்புக்கார பையனின் கேள்வி தொடர்ந்தது. “அப்படீனா ராசாவுக்கு அப்புறம் ஐயாட பேர பொறித்……”. அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே இடைமறித்த பாக்கியம் “அது ஒண்டும் தேவையில்ல. நான் சொன்னத செய்…..அவர விட்டா எனக்கு வேறு யாரு ராசா?” என கூறிவிட்டு பையனிடம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிவிட்டேனோ என்ற உணர்வில் நாக்கை கடித்துக்கொண்டார்.

கடைக்குள் வேறு சிலைகளை பார்த்துக் கொண்டிருந்த முருகேசரின் காதுகளுக்கும் மனைவியின் இந்த சம்பாஷணை எட்டாமல் இல்லை. பாக்கியத்தின் வார்த்தைகள் அவர் இதயத்தை நெருடிச் சென்று ஒரு இதமான இன்ப அனுபவத்தை விதைத்துச் சென்றது. இந்த மென் உணர்வுகளுக்கு மானுடர் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் ஒரு கணவனை மனைவி அன்பினால் சிறைப்படுத்தி உரிமை கொண்டாடும் இத் தருணங்கள் புனிதமானவை. பண்பாடுகளும் கலாச்சாரங்களும் அந்த உணர்வுகளுக்கு வேலி அமைத்து மண்மூடி மறைக்க எத்தனித்தாலும் மண்ணை மீறிய விதைகளாய் அவை என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் புலப்பட்டு தன் உரிமைகளை மீட்டுக்கொள்ளும்!

பாக்கியம் பதினைந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் மறைந்த பின்பும் அந்த நடராஜர் சிலைக்கு சாமி அறையில் முதன்மை ஸ்தானத்தை அளிக்க முருகேசர் தவறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த போதும் முருகேசர் கூட பயணித்து மகன் சபேசனின் வீட்டில் குடிகொண்டார் நடராஜர்.

ஒரு வருடத்திற்கு முன் முருகேசர் இந்த ஏஜ் ட் கெயாருக்கு வர பெட்டியை அடுக்கும்போது மகன் சொன்னது இன்னும் ஞாபகமே. “அப்பு, உதுகள எல்லாம் கட்டி சுமக்க வேணுமே? அங்க உங்கட அறையும் அப்பிடி ஒண்டும் பெரிசில்ல. இத இஞ்ச வச்சிற்றுப் போங்கோவன். நாங்க என்ன பாத்துக்க மாட்டமா?”. சபேசனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவனுக்கு சிலையாக தெரிந்த நடராஜர் அவருக்கோ பாக்கியத்திடம் இருந்து புறப்பட்ட அந்தரங்க உணர்வுகளின் அடையாளம்.

பாக்கியத்துடன் வாழ்ந்த இன்ப நினைவுகள் அவர் மனதில் வரிசை கட்டி நின்றன. காலக் குடுவையின் சிறு துளையில் வடியும் மணல் பருக்கைகளாய் அவர் வாழ்வு மங்கிப் போய் கொண்டிருக்கும் இந்த முதிர் வயதில் அந்த இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் எந்த ஒரு சடப்பொருளும் அவருக்கு தோணியின் துடுப்பாய்ப் பட்டது.

வாழ்க்கை எனும் வானத்தில் மிதக்கும் முகில் கூட்டங்களாய் அவரின் நினைவுப்பஞ்சுகள் மெல்ல மெல்ல அவரை விட்டு எங்கோ தூர ஓடி மறைகின்றன!

நடராஜர் சிலையை கையில் ஏந்தியபடி கட்டிலில் அமர்ந்திருந்த முருகேசரின் கண்களில் பாசத்தின் ஊற்றாய் நீர் முட்டி கன்னங்களை நனைத்து சிறு துளிகளாய் சிலையில் விழுந்து தெறித்தன. சிலையில் பின்பகுதியில் ஒட்டியிருந்த $10 என எழுதியிருந்த காகிதத்தையும் நனைக்க அவை தவறவில்லை. அவரை அறியாமல் அவர் விரல்கள் சிலையில் ஒட்டியிருந்த அந்த காகிதத்தை சுரண்டி அகற்றியது.
சிலையில் பொறித்திருந்த “என்ர ராசாவுக்கு” என்ற வார்த்தைகள் அவரைப் பார்த்து சிரித்தன!

நடுங்கும் கைகளால் சிலையை மெதுவாய் உயர்த்தி நெஞ்சுடன் அணைத்த அவரின் வாயில் இருந்து “என்ர குஞ்சு” என்ற வார்த்தைகள் ஒரு மந்திர உச்சரிப்பாய் காற்றில் கலந்து மறைந்தன.

 

https://solvanam.com/2023/12/31/என்ர-ராசாவுக்கு/

ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி கப்பல்களிற்கு அனுமதியில்லை - இந்தியாவிற்கு கொழும்பு தகவல்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN    01 JAN, 2024 | 02:46 PM

image
 

ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி  கப்பல்கள்  தனது துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் துறைமுகத்திற்குள்ளும்   விசேட பொருளாதார வலயத்திற்குள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிவழங்கப்போவதில்லை என கொழும்பு புதுடில்லியிடம் தெரிவித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக  இந்தியாவிற்கு இலங்கை தகவலை தெரிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என  இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனவரி ஐந்தாம் திகதி முதல் மே மாதம் வரை தென் இந்து சமுத்திர பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீனாவின் ஜியாங் யாங் கொங்3 ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்காது என்பதே அர்த்தம் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவின் கரையோர பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட கப்பலிற்கு அனுமதியளிக்கவேண்டும் என மாலைதீவு அரசாங்கத்திடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனா சார்பு அரசாங்கம் மாலைதீவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்து சமுத்திரத்திற்குள் சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல்கள் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அனுமதிப்பதுஅவற்றிற்கு துறைமுகங்களில் இடமளிப்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கொழும்பிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதை தொடர்ந்தே கடந்த வாரம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் ஒரு வருட தடை குறித்து  இந்தியாவிற்கு அறிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/172874

தூக்கு மேடையில் சதாம் உசேன் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

3 months 2 weeks ago
சதாம் உசேன் தூக்குமேடையில் அவர் கூறிய வார்த்தைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தான் தூக்கிலிடப்பட மாட்டோம் என்று சதாம் உசேன் நம்பினாராம்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சனா ஆசிப் தர்
  • பதவி, பிபிசி உருது
  • 31 டிசம்பர் 2023

“டிசம்பர் 30,2006 அன்று காலை 3 மணிக்கு எழுந்த சதாம் உசேனிடம் இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பின் அமைதியாக சென்று குளித்துவிட்டு, தூக்குமேடைக்கு தயாரானார்.”

இந்த குறிப்புகளை சதாம் உசேனின் கடைசி நாட்கள் குறித்து தான் எழுதிய “தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் வில் பார்டன்வெர்பர். சதாம் உசேனின் காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்த 12 அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

அவரது கூற்றுப்படி, தனது இறுதி நாட்களில், தான் தூக்கிலிடப்பட மாட்டோம் என்று முன்னாள் இராக் சர்வாதிகாரியான சதாம் உசேன் நம்பினாராம்.

இராக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சதாம் உசேனின் ஆட்சி 2003ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

சதாம் உசேன் தூக்குமேடையில் அவர் கூறிய வார்த்தைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இராக் வளாகத்தில் உள்ள கான்கிரீட் அறையில் சதாம் தூக்கிலிடப்பட்டார்.

சதாம் உசேன் ஏன் தூக்கிலிடப்பட்டார்?

1982ல் துஜைல் நகரில் தனது எதிராளிகளான 148 பேரை கொலை செய்த குற்றத்திற்காக 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இராக் நீதிமன்றத்தால் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, கொல்லப்பட்ட அனைவருமே ஷியா சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் சதாம் உசேனை கொல்ல முயற்சித்து தோல்வியடைந்தவர்கள்.

சதாம் உசேன் தூக்கிலிடப்படும் இடம் மற்றும் நேரம் இறுதி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

இராக் தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள 'காத்மியா' பகுதியின் இராக் வளாகத்தில் உள்ள கான்கிரீட் அறையில் சதாம் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்கர்கள் இந்த இடத்தை 'கேம்ப் ஜஸ்டிஸ்' என்று அழைக்கின்றனர்.

அந்த சமயத்தில் இராக்கை சேர்ந்த சிறு குழு ஒன்றும் அந்த இடத்தில் இருந்தது.

 
சதாம் உசேன் தூக்குமேடையில் அவர் கூறிய வார்த்தைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மரண தண்டனையை வாசித்த போது சதாம் உசேன் தனது கையில் குரானை வைத்திருந்தார்.

அந்த குழு தகவலின்படி, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நீதிபதி மரண தண்டனையை வாசித்த போது சதாம் உசேன் தனது கையில் குரானை வைத்திருந்தாக கூறியுள்ளனர்.

பின்னர் அந்த குரானின் நகலை அவரது நண்பர்களில் ஒருவருக்கு சதாம் கொடுக்க சொன்னாராம்.

தூக்குமேடையில் தூக்கிலேற்றும்போது, கைதிகளுக்கான உடையை அணிவதற்கு பதிலாக, 61 வயது சதாம் உசேன் வெள்ளை சட்டையும், அடர் நிற கோட்டையும் அணிந்திருந்தார்.

இராக் தொலைக்காட்சியில் முகமூடி அணிந்த நபர்கள் குழுவால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டன. ஆனால், தூக்கிலிடப்பட்டது காட்டப்படவில்லை.

 
சதாம் உசேன் தூக்குமேடையில் அவர் கூறிய வார்த்தைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சாமல் மிக பொறுமையாக நின்று கொண்டிருந்தார்

தூக்கு மேடையில் சதாம் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

தூக்கு மேடைக்கு சென்ற பிறகு, சதாம் உசேனின் கழுத்து மற்றும் தலையை சுற்றி கருப்பு துணி (வழக்கமாக தூக்குத்தண்டனை கைதிகளுக்கு அணியப்படும் துணி) மூடப்பட்டது. அதன் பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அந்த துணியை போர்த்த தூக்கிலிடுபவர் முன்வந்த போது, சதாம் அதை மறுத்துள்ளார். காரணம், அந்த துணியை அணியாமல் தூக்கிலிடப்பட அவர் விரும்பினார்.

சதாம் தூக்கிலிடப்பட்ட பிறகு கசிந்த வீடியோ ஒன்றில், சதாமின் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டியபோது, “இந்தத் துணிச்சலை நினைத்து பார்ப்பாயா...” என்று சிரித்துக் கொண்டே கத்துவது போல் காட்சிகள் இருந்தன.

அதன் பின், அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர், "நரகத்திற்குப் போ..." என்று கத்த, எதிரி நாட்டினர் தனது நாட்டை அழித்ததாக குற்றம் சாட்டும் சதாம், "அந்த நரகம் இராக்கா?" என்று கேட்டுள்ளார்.

பிபிசி உலக செய்தியாளர் ஜான் சிம்ப்ஸன் கூற்றுப்படி, சதாம் உசேன் தூக்கிலிடப்படும் அந்த வீடியோவில், “ அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சாமல் மிக பொறுமையாக நின்று கொண்டிருந்தாராம்”.

மேலும் அந்த வீடியோவில், சதாம் உசேன் குரான் வசனங்களை படித்துக்கொண்டே தூக்குமேடைக்கு வருவதும் உள்ளது.

அந்த நேரத்தில், இராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாவ் வஃபிக் அல் ரிபாயும் அந்த இடத்தில் உடனிருந்தார். அதற்கு பின்னர் பிபிசியிடம் பேசிய அவர், சதாம் தூக்கு மேடைக்கு அமைதியாக நடந்து வந்ததாக கூறினார்.

“அவரை நாங்கள் தூக்கு மேடைக்கு அழைத்து சென்றோம். அவர் சில முழக்கங்களை எழுப்பினார். மேலும் அவர் மிகவும் உடைந்து போயிருந்தார்.”

2013 ஆம் ஆண்டு வெளியான ஒரு புகைப்படத்தில் சதாமின் வெண்கலச் சிலை மற்றும் அதன் கழுத்தில் அவர் தூக்கிலிடப்பட்ட அதே கயிறு இருந்தது. அந்த புகைப்படத்தில் இருந்த நபர் மாவ் வஃபிக் அல் ரிபாய் தான்.

அந்த புகைப்படம் வெளியான பிறகு, பல நாடுகளை சேர்ந்த நபர்களும் அந்த கயிறை ஏலத்தில் கேட்டனர். ஆனால், மாவ் வஃபிக் அல் ரிபாய் சதாம் உசேனின் அந்த சிலை மற்றும் கயிறை அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதாக கூறிவிட்டார்.

 
சதாம் உசேன் தூக்குமேடையில் அவர் கூறிய வார்த்தைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சதாம் உசேன் தூக்கிலடப்பட்டு அவரது உடல் வெளியே கொண்டுவரப்பட்ட போது மக்கள் அவர் மீது எச்சில் துப்பவும், திட்டவும் செய்தனர்.

இந்த வழக்கே ஒரு நகைச்சுவை..

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உடலின் புகைப்படங்கள் இராக் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதில் வெள்ளைநிற மேலங்கிக்கு பதில் அவர் கோட் அணிந்திருந்தார் மற்றும் அவரது உடல் வெள்ளை தாளால் மூடப்பட்டிருந்தது.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு அவரது உடல் வெளியே கொண்டுவரப்பட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அவர் மீது எச்சில் உமிழவும், திட்டவும் செய்தனர்.

“தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற தனது புத்தகத்தில் சதாமின் 12 காவலர்களில் ஒருவர் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது, மற்றவர்கள் அவரை பிடித்து இழுத்து விட்டனர் என்று எழுதியுள்ளார் பார்டன்வெர்பர்.

அந்த 12 காவலர்களில் ஒருவரான ஆடம் ராதர்சன், “ சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது, நாங்கள் அவருக்கு துரோகம் இழைத்து விட்டதாக உணர்ந்தோம். நாங்கள் எங்களையே கொலைகாரர்களாக கருதிக்கொண்டோம். எங்களுக்கு நெருக்கமான ஒருவரை நாங்கள் கொலை செய்துவிட்டதாக நாங்கள் உணர்ந்தோம்” என்று பார்டன்வெர்பரிடம் கூறியுள்ளார்.

டிசம்பர் 13, 2003 அன்று சதாம் உசேன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நவம்பர் 5, 2006 அன்று நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சதாம் உசேனுக்கெதிரான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு நீதிபதியிடம் அங்கிருந்த முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரிம்சி கிளார்க் "இந்த விசாரணை ஒரு நகைச்சுவை" என்று எழுதப்பட்ட ஒரு சீட்டைக் கொடுத்துள்ளார். இதனால் அவரை நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் நீதிபதி.

https://www.bbc.com/tamil/articles/cp4e1gg19qlo

இந்து மதத்துக்கும் அரசமைப்பில் முன்னுரிமை யாழ். வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க முடிவு

3 months 2 weeks ago
இந்து மதத்துக்கும் அரசமைப்பில் முன்னுரிமை யாழ். வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க முடிவு
870689489.jpg

பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசமைப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட சில கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் சைவ அமைப்புகள் எதிர் நோக்கும் சமயரீதியான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டபத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மற வன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இந்து அமைப்புகளின் கோரிக்கைகள் இதன்போது அடையாளம் காணப்பட்டு அவை அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது அவற்றைக் கையளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத் துக்கு அரசமைப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
மதங்களின் மதமாற்ற முயற்சியைத் தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் மதமற்ற தடைச்சட்டத்தை இயற்றவேண்டும்.
இந்து மதங்களும், பௌத்தமதங்களுக் கும் தெய்வமாகப் போற்றப்படும் பசுக்களை எவரும் கொல்லக்கூடாது. பசுவதை தடைச்சட்டத்தை இயற்றவேண்டும். ஆரம்பமுன்பள்ளி பருவத்திலுள்ள சிறார் களுக்கு பசுவைப் பாதிப்பது பற்றிய நூல்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்பனவே ஜனாதிபதியிடம் கோரிக்கைகளாக முன்வைக்கப்படவுள்ளன.  (ஐ)
 

https://newuthayan.com/article/இந்து_மதத்துக்கும்_அரசமைப்பில்_முன்னுரிமை_யாழ்._வரும்_ஜனாதிபதியிடம்_கோரிக்கை_முன்வைக்க_முடிவு

ஜப்பானில் 7.6 நிலநடுக்கம் - பெரும் சுனாமி எச்சரிக்கை

3 months 2 weeks ago
ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம்,REUTERS

1 ஜனவரி 2024, 08:12 GMT
புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகோவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை "உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு" இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

5 மீட்டர் உயரமுள்ள அலைகள் நோட்டோ பகுதியை நோக்கி வந்துள்ளதாக ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நோட்டோ பகுதிக்கு அருகிலுள்ள நீகாட்டா, டோயாமா உள்ளூர் நிர்வாகமும் சுனாமி எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் 3 மீட்டர் உயரமுள்ள அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'காலி செய்யுங்கள்' என்ற வாசகம் ஜப்பானின் அரசு தொலைக்காட்சியில் பெரிய வடிவில் தோன்றி மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணு உலைகளுக்கு பாதிப்பா?
ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம்,JAPAN METEOROLOGICAL AGENCY

நிலநடுக்கம் ஏற்பட்டதையும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, 0.3 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள், இந்திய நேரப்படி மதியம் 02.48 முதல் 03.47 இடையே ஜப்பானின் கிழக்கு கடற்கரையை தாக்கக்கூடும் என்று தென் கொரியா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

ஜப்பானின் மிகப்பெரிய அணு உலை மின்சார தயாரிப்பாளரான கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அணுஉலைகளில் 'அசாதாரண நிலை ஏதுமில்லை' என்று விளக்கமளித்துள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இந்த அணு உலை விபத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

 
கரையை தாக்கிய சுனாமி
ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம்,REUTERS

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் சுனாமி அலை மத்திய ஜப்பானின் வடக்கு கடற்கரையை தாக்கியது.

கரைக்கு வந்த சுனாமி அலைகளில் சில அலைகள் சுமார் 1 மீட்டர் உயரம் வரை இருந்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி மாலை 04.21 மணிக்கு 1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் இஷிகவா பகுதியில் அமைந்துள்ள வஜிமா துறைமுகத்தை தாக்கின. டோயாமா நகரத்தில் 0.8 மீட்டர் வரை உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகின.

சுனாமியால் என்ன பாதிப்பு?
ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம்,EPA

நிலநடுக்கம் மற்றும் சுனாமியைடுத்து இஷிகவா பகுதியிலிருந்து டோக்கியோ நகரத்திற்கு இயக்கப்படும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் ரயில்வே அறிவித்துள்ளது.

இஷிகவா பகுதியிலுள்ள சூசு நகரத்தில் நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆகியவை முற்றிலும் இடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம்” - வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் மஹிந்த குணரத்ன

3 months 2 weeks ago
“வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம்” "06 மாதங்களுக்குள் போதை பொருளையும் ஒழிப்போம்"
adminJanuary 1, 2024
Mahinda-Gunawardana-Jaffna-DIG.jpg?fit=1

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜூன் மாத காலப்பகுதிக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையால் வடக்கில் 90 சதவீதம் குற்றச் செயல்கள் சடுதியாகக் குறைந்துள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

பதில் காவற்துறை  மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் செயற்பாடுகளை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். அதற்குரிய நடவடிக்கைகள் வடக்கிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

போதைப்பொருள் விற்பனை செய்வோர் தொடர்பாக 0718598834 (யாழ்ப்பாணம்), 0718598835(காங்கேசன்துறை), 0718598836 (வவுனியா), 0718598837 (மன்னார்), 0718598838 (கிளிநொச்சி), 0718598839 (முல்லைத்தீவு) என்ற இலக்கங்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

இந்த இலக்கங்களுக்கு அழைப்பெடுப்பவர்களின் விவரங்கள் தெரியவராது. அதனால் அச்சமின்றி தகவல்ளை வழங்க முடியும். அத்துடன் வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயத்திலும் நேரடியாக முறையிடலாம் என மேலும் தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2024/199210/

பச்சை மிளகாய் ஒன்று ரூ.20 இற்கு விற்பனை; மரக்கறிகளின் விலை உயர்வு

3 months 2 weeks ago

சில்லறை விற்பனை சந்தையில் நேற்று (31) ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1900 ரூபா தொடக்கம் 2200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, பச்சை மிளகாய் ஒரு காய் 15 முதல் 20 ரூபா வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பொருளாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் அளவு வழமையை விட எழுபத்தைந்து வீதத்தால் (75%) குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நாட்களில் பெய்த கனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்து, தொண்ணூறு சதவீதம் (90%) பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று (31ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய நகரங்களின் சில்லறை விற்பனைச் சந்தைகளில் பல வகையான மரக்கறி வகைகள் கிலோ ஒன்று 300 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. பீன்ஸ் 750 ரூபாய், முட்டைகோஸ் 550 ரூபாய், கேரட் 900 ரூபாய், தக்காளி 600 ரூபாய், பீட்ரூட் 800 ரூபாய், நோகோல் 450 ரூபாய், வெண்டைக்காய் 350 ரூபாய், கத்திரிக்காய் 650 ரூபாய், கறி மிளகாய் 800 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டன.

நுவரெலியா, யாழ்ப்பாணம் மற்றும் வெலிமடை பிரதேசங்களில் இருந்து உருளைக்கிழங்குகள் வரவில்லை மற்றும் சில மரக்கறிகளும் கிடைக்கப்பெறவில்லை. ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விலை 130 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சிவப்பு வெங்காயத்தின் மொத்த விலை 450 ரூபாவாகவும், இலங்கை சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராம் மொத்த விற்பனை விலை 400 ரூபாவாகவும் இருந்தது.
மலையகம், தாழ்நிலம், யாழ்ப்பாணம் மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் இருந்து வரும் மரக்கறிகளின் மொத்த விநியோகம் பதினைந்து முதல் இருபத்தைந்து வீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/286567

செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN  01 JAN, 2024 | 09:17 AM

image
 

செங்கடல் பகுதியில் சரக்குகப்பலொன்றை கைப்பற்ற முயன்ற ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள்  தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பலொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டவாறு ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நான்கு படகுகள்  அந்த கப்பலை கைப்பற்ற முயன்றன கப்பலிற்கு அருகில் நெருங்கிசென்றன என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பை செவிமடுத்த அமெரிக்க போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் உதவிக்கு விரைந்தன மூன்று படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டன அவற்றிலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

நான்காவது படகு தப்பிச்சென்றுவிட்டது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தங்களின் எச்சரிக்கையை குறிப்பிட்ட வர்த்தக கப்பல் செவிமடுக்க மறுத்தது என தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம்முதல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்களைமேற்கொண்டு வருகின்றனர் -இதுவரையில் 100க்கும் மேற்பட்டஆளில்லா விமானதாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/172851

மரண பலம் - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago

          மரண பலம்

                    -----சுப.சோமசுந்தரம்

 

        சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது.
         தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர்.
        ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட்டிக்காட்டிலா (!!!) பிள்ளையைச் சேர்ப்பாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து என்னை உரிமையுடன் தூக்கி வந்து பாளையில் அந்தக் காலத்திலேயே இருந்த கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்தாள் என் ஆச்சி. நான் நானாக ஆனேன். அதனால் அவளிடம் பாசத்தில் கட்டுண்டே வாழ்ந்திருக்கிறேன். கடைசிக் காலத்தில் அவளைக் கவனிக்க ஆள் அமர்த்தியபோது, செலவுக்கு என்னிடம் அதிகம் வாங்கலாம் என்றும், "அவன் எனக்காக எதுவும் செய்வான்" என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாள். பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு அவளது பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள். என்னைப் பாசத்துடன் குறிப்பிட்ட காலம் வரை வளர்த்ததற்கும், கடைசிக் காலத்தில் கூட என்மீது நம்பிக்கயை வெளிப்படுத்தியதற்கும் நானும் கடமைப்பட்டவன். எனவே நாங்கள் அவள் வாழுங்காலம் இயன்றவரை அவளைத் தாங்கிப் பிடித்தோம்.
        ஆனால் நிறைய மனிதர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தாள். மருமகள்களுக்குக் கொடுமையான மாமியாராகவே வாழ்ந்தாள். வேற்று மனிதர்களிடமும்  ஓரளவு அப்படியே ! கடைசிக் காலத்தில் தன்னைக் கவனிக்க அமர்த்தப்பட்டவர்களைக் (caretakers) கேவலமாக நடத்தியதில் சுமார் பதினைந்து பேர்களை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.
      அவள் வாழுங்காலம் (காரணத்தோடு) அவளைத் தூற்றிய சிலர் அவளது மரணத்தில், "103 வயது ! கொடுத்து வைத்த ஆன்மா. அதிலும் ஏகாதசி அன்று இறந்ததால் வைகுண்ட பிராப்தி !" என்றெல்லாம் அவள் புகழ் பாடினார்கள். மனதுக்குள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டேன். எனக்கு அவள் நல்ல ஆச்சி. அவ்வளவே! அதற்காக அவள் நல்லவள், உத்தமி என்றெல்லாம் நான் பேசித் திரிந்தால் அது சுயநலமாகத்தானே முடியும் ! அல்லல் பட்டவர்களின் துன்பத்தை உணர்ந்து, பிறிதின் நோய் தந்நோயாகக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டாமா ?                 மரணத்திற்கு மனிதனைப் புனிதனாக்கும் ஆற்றல் உண்டோ ? நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ஒரு படத்தில் சொல்வதைப் போல, முடிந்தால் நாமெல்லோரும் செத்துச் செத்து விளையாடலாமோ !

யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் அபாயம்! சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்- விரிவுரையாளர் இளம்பிறையன்

3 months 2 weeks ago

யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் அபாயம்! சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்- விரிவுரையாளர் இளம்பிறையன்

யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்!

 

 

ஆட்லறிக்கான ஒரு சண்டை | தொடர்

3 months 2 weeks ago
தடங்கள்-1

1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.

தொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அமைத்துக் கொண்டோம். அங்கே நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, படிப்புக்காக மட்டுமே அணிகள் அங்கே ஒன்றுகூடுவோம். மற்றும்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுசிறு அணிகளாகப் பிரிந்து சற்றுத் தூரம் தள்ளித் தங்கியிருந்தோம். இந்தப் புளியங்குளம் என்பது ‘ஜெயசிக்குறு’ புகழ் புளியங்குளமன்று. அது கண்டிவீதியில் ஓமந்தைக்கும் கனகராயன் குளத்துக்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒட்டுசுட்டான் புளியங்குளம். ஒட்டுசுட்டான் – முள்ளியவளைச் சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துள்ள கிராமம்.

எமது கற்கைநெறி மீண்டும் தொடங்கியது. சிரமத்துக்கு மத்தியிலும் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு வகுப்புக்களாவது நடந்துவிடும். ஒட்டுசுட்டான் நோக்கியோ முள்ளியவளை நோக்கியோ நகராமல் புளியங்குளத்தை நோக்கி நகர்வதே நெடுங்கேணி இராணுவத்தின் நோக்கமாக இருந்ததால் எமது பக்கத்தில் அதிக சிக்கலிருக்கவில்லை. ஆனால் மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள்.

ஒருநாள் காலை வகுப்புக்கென்று நாங்கள் அமர்ந்திருந்த நேரத்தில், ‘இன்று வகுப்பில்லை, முக்கிய விடயம் பற்றி உங்களோடு ஒருவர் பேசுவார்’ என்று கற்கைநெறிப் பொறுப்பாளர் சொன்னார். ஒரு பிக்-அப் வாகனம் வந்துநின்றது. ஒருவர் வந்து கதைக்கத் தொடங்கினார். அவர் கதைக்குமுன்னமே எமக்குள் இருந்த சிலரை வகுப்பறையிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். அவர்களுள் இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

“உங்களை ஒரு வேலைக்காகக் கூட்டிக்கொண்டு போகச்சொல்லியிருக்கினம். அதுபற்றிக் கதைக்கத்தான் வந்தனான். உங்களில சிலபேரை எடுக்க வேண்டாமெண்டு உங்கட தளபதிகள், பொறுப்பாளர்கள் சொன்னவை. அவையளைத்தான் முதலிலயே எழுப்பி அனுப்பீட்டம். நீங்கள் போற இடத்தில கஸ்டமான வேலையள் வரும். பெரிய வெயிற்றுகள் தூக்கிப் பறிக்கிற வேலை வரும். உடல்நிலை ஏலாத ஆக்கள் இப்பவே சொல்லிப் போடுங்கோ. அங்கபோய் நிண்டுகொண்டு கஸ்டப்பட்டால் அதால எல்லாருக்கும் பிரச்சினைதான். உங்களைக் கூட்டிக்கொண்டு போனபிறகு வேலை தொடர்பாக் கதைக்கிறன்”

எது தொடர்பான வேலை என்பது எம்மிற் சிலருக்கு உடனேயே விளங்கிவிட்டது. கூட்டிச்செல்ல வேண்டாமென்று படையணியால் சொல்லப்பட்டவர்களைப் பார்த்தால் இது ஏதோ தாக்குதலோடு தொடர்புபட்டது என்பதும் விளங்கிவிட்டது. ஏனென்றால் பயிற்சித் திட்டத்துக்கென அவர்கள் வரும்போது அவர்கள் நின்ற இடமும் பணியும் அப்படிப்பட்டது. அவர்களுள் ஒருவன் கப்டன் அன்பரசன்.

எம்மோடு வந்து கதைத்தவர் வேறு யாருமில்லை. மணியண்ணை. ‘மோட்டர் மணி’ என்று முன்பும் ‘ஆட்டி மணி’ என்று பிற்காலத்திலும் இயக்கத்தில் அறியப்பட்ட தளபதி மணிவண்ணன்தான் எம்மோடு வந்து கதைத்தார். அவரைப்பற்றி இயக்கம் முழுவதும் அறிந்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் அவரைக் கண்டதில்லை. அப்போது வகுப்பறையில் இருந்த பலருக்கு தம்மோடு கதைப்பது யாரெனத் தெரிந்திருக்கவில்லை, அவர் கதைக்க முன்பு சொல்லப்படவுமில்லை.

எமக்கோ அது ஆட்லறியோடு தொடர்புபட்ட வேலையென்பது விளங்கிவிட்டது. அந்நேரத்தில் ஆட்லறிப் படையணியை ராயு அண்ணையும் மணியண்ணையும்தான் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் எவரிடமும் இதைப்பற்றிப் பேசவில்லை. அது இயக்க நடைமுறையுமன்று. நிறையப் பேருக்கு என்ன வேலை, தம்மோடு கதைப்பது யாரென்பது தெரியாமலேயே இருந்தது. எம்மை ஏற்கனவே மணியண்ணைக்குத் தெரியுமென்பதாலும், இந்த வேலை எது தொடர்பானதென்று நாம் ஊகித்திருப்போம் என்று அவர் கருதியதாலும் எம்மைத் தனியே அழைத்து ‘இந்த வேலைக்குச் சரிவராத ஆட்களை நீங்கள் தான் சொல்ல வேணும். ஏலாத ஆக்கள் அங்க வந்தால் பிறகு எல்லாருக்கும் சிரமமாத்தான் போகும். அதுக்காக அவையளை இஞ்சயே விட்டிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு வேற வேலைக்கும் ஆக்கள் தேவைதான். அவையள அங்க விடுவம்.’ என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்கள் மூன்று பேரைக் காட்டிக் கொடுத்தோம். ஒருவன் வயிற்றுவெடிக்காரன். மற்ற இருவரும் கையெலும்பு முறிந்தவர்கள். அதன்பிறகு வந்த ஒருவருடத்துக்கு – எமது முதன்மைக் கற்கைநெறி முடிவடையும்வரை – அந்த மூவராலும் நாங்கள் ‘காட்டிக் கொடுப்போராக’க் குறிப்பிடப்பட்டு வந்தோமென்பது தனிக்கதை.

அன்று காலையுணவை முடித்துக் கொண்டு நாம் புறப்பட்டோம். நிப்பாட்டப்பட்டவர்கள் போக எஞ்சிய எமது படையணிப் போராளிகள் எட்டுப்பேருக்கும் லெப்.கேணல் கதிர்(பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்தார்) பொறுப்பாக வந்தார். எமது கற்கை நெறியிலிருந்தும் அங்குநின்ற நிர்வாகப் போராளிகளிலிருந்தும் கிட்டத்தட்ட நாற்பது பேர்வரை மணியண்ணையோடு புறப்பட்டோம்.

தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ?

விசுவமடுவில் ஒரு காட்டுப்பகுதி. முகாம் ஏதும் அங்கு இருக்கவில்லை. காட்டுக்குள் சிறு கூடாரங்கள் இரண்டு இருந்தன. போனவுடன் எம்மை நான்கு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு கூடாரம் தந்து எமக்கான வதிவிடத்தை அமைக்கச் சொன்னார்கள். அங்கு தேவராஜ் அண்ணன்தான் பொறுப்பாக நின்றார். அவர் ஏற்கனவே எம்மோடு நின்று, முல்லைத்தீவில் ஆட்லறி கைப்பற்றப்பட்டதும் ஆட்லறிப்படையணிக்கென்று அனுப்பப்பட்டவர். இரண்டில் ஓர் ஆட்லறி இவரின் பொறுப்பின் கீழேயே இருந்தது. அன்று மாலை மணியண்ணை வந்தார்.

‘நீங்கள் ஆட்லறிப்பயிற்சி எடுக்கப் போகிறீர்கள்’ என்று அப்போதுதான் சொன்னார். ஓர் ஆட்லறி கொண்டுவரப்பட்டது. எம்மோடு நின்றசிலர் முல்லைத்தீவுச் சண்டையில் பங்குபற்றியதோடு ஆட்லறியைக் கைப்பற்றிய அணியிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களைவிட மற்றவர்கள் அனைவரும் முதன்முதலாக அன்றுதான் ஆட்லறியைப் பார்க்கிறோம். மணியண்ணையின் கதையைத் தொடர்ந்து எமக்கான பயிற்சிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.

பயிற்சித்திட்டம் 24 மணிநேரப் பயிற்சியாக இருந்தது. ஓரணி இரண்டு மணிநேரம் பயிற்சியெடுக்கும். அந்நேரத்தில் மற்ற இரு அணிகள் ஓய்வெடுக்கும். எஞ்சிய ஓரணி ஆட்லறிக்கான காவற்கடமையில் ஈடுபட்டிருக்கும். பிறகு மற்றதோர் அணிக்கு இருமணிநேரப் பயற்சி, பிறகு இன்னோர் அணிக்கு என்று தொடரும். நான்காம் அணிக்குப் பயிற்சி முடிந்ததும் மீள முதலாமணி தொடரும். காவற்கடமையும் இரண்டு மணித்தியாலத்துக்கொருமுறை சுழன்றுகொண்டிருக்கும். இச்சுழற்சிமுறைப் பயிற்சியில் ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆட்லறி ஒன்றாய்த்தானிருந்தது. அந்த ஆட்லறிக்குரிய தேவராஜ் அண்ணையின் அணியினரே பயிற்சி தந்துகொண்டிருந்தனர். மற்ற ஆட்லறியும் அதற்குரிய அணியும் ஏற்கனவே நடவடிக்கைக்காக நகர்த்தப்பட்டிருந்தது. பயிற்சி 24 மணிநேரமும் சுழற்சியில் நடந்துகொண்டேயிருந்தது. இரவில் பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் நடக்கும். ஓரணிக்குக் கிடைக்கும் நான்குமணிநேர இடைவெளியில்தான் நித்திரை, சாப்பாடு, குளிப்பு, துவைப்பு, அரட்டை எல்லாமே.

இரண்டு பகல்களும் மூன்று இரவுகளும் இப்படியே பயிற்சி நடந்தது. இரண்டு மணிநேரப் பயிற்சியிலேயே உடல் துவண்டுவிடும். இதற்குள், இருமணிநேரக் காவற்கடமை, இருமணிநேரப் பயிற்சி, நான்குமணிநேர ஓய்வு (இதற்குள் மற்ற வேலைகளும் வந்துவிடும்) என்று மூன்றுநாட்கள் நடந்த தொடரோட்டத்தில் உடம்பு தும்பாகிப் போனது. ஓர் ஆட்லறி எறிகணையின் மொத்தநிறை 43 கிலோகிராம் என்பதாக இப்போது நினைவுள்ளது. அதில் குண்டுப்பகுதி மட்டும் முப்பது கிலோவுக்கு மேல்வரும். கட்டளைக்கேற்ப அதைத்தூக்கிக் கொண்டு ஆட்லறியடிக்கு வந்து குழலேற்றுவதும் பிறகு தூக்கிக் கொண்டு மீளப்போவதுமென்று நாலைந்து முறை செய்தாலே நாக்குத் தள்ளிவிடும். ஆள்மாறி ஆள்மாறி அந்த இரு மணிநேரங்களும் நெருப்பாக நிற்க வேண்டும். ஆட்லறிக் கால்களை விரிப்பது, சுருக்குவது என்று நாரி முறியும். நுட்பங்கள் விளங்கப்படுத்தப்படும் சிலநிமிடங்கள் மட்டுமே ‘அப்பாடா’ என்றிருக்கும்.

இயக்கத்தில், ஆட்லறிப் பயிற்சியெடுப்பதில் நாங்கள் மூன்றாவது தொகுதியாக இருந்தோம். முதலாவது தொகுதி, முல்லைத்தீவில் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டதும் ஒழுங்கமைக்கப்பட்டு பயற்சியெடுத்த தொகுதி. புளுக்குணாவ இராணுவ முகாமிலிருந்த ஆட்லறியைக் கைப்பற்றவென தென்தமிழீழப் போராளிகளைக் கொண்ட ஓரணி பயிற்சியெடுத்துச் சென்றது. அதுவே இரண்டாவது தொகுதி. நாங்கள் மூன்றாவது தொகுதி. எந்தத் தொகுதிக்கும் எங்களைப்போல் பயிற்சி நடக்கவில்லை. அவையெல்லாம் முறைப்படி நடத்தப்பட்ட பயிற்சி நெறிகள். நாங்கள்தான் ‘மூன்றே நாளில் முனைவராவது எப்படி?’ என்ற கணக்காகப் பயிற்சியெடுத்தவர்கள்.

ஆட்லறி எறிகணைகள் ஏவிக் காட்டப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தும் அதற்கான நேரமிருக்கவில்லை. மூன்றுநாட்கள் நடந்த பயிற்சியிலேயே நாங்கள் ஒருவழி ஆகிவிட்டிருந்தோம். எறிகணையை ஏவிப்பார்க்கவில்லையே தவிர மற்றதெல்லாம் அத்துப்படி. நித்திரைத் தூக்கத்திற்கூட எந்தப்பிழையும் விடாமல் முறைப்படி செய்யும் நிலைக்கு அந்த மூன்றுநாள் கடும்பயிற்சியில் வந்திருந்தோம்.

மூன்றாவது இரவுப்பயற்சி நடந்துகொண்டிருந்தபோது மீளவும் மணியண்ணை வந்தார். பயிற்சி நிறுத்தப்பட்டது. அந்த இரவு வினோதமாக இருந்தது. ஆட்லறிப் படையணியின் நிர்வாக வேலைகளில் நின்ற அனைவரும் பொறுக்கி ஒன்றுசேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முறைப்படியாகவோ அரைகுறையாகவோ ஆட்லறிப்பயிற்சியெடுத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, முன்பு புளுக்குணாவ முகாம் தகர்ப்புக்காக வந்து பயிற்சியெடுத்தவர்களில் வன்னியில் எஞ்சி நின்ற போராளிகளையும் அங்கிங்கென்று பொறுக்கிக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களில் இருவர் கொம்பனி நிலை அணித்தலைவர்களாக இருந்தும்கூட அழைத்துவரப்பட்டிருந்தார்கள்.

மளமளவென அணிகள் பிரிக்கப்பட்டன. ஓர் ஆட்லறிக்கு எட்டுப்பேர் என்றளவில் அணிகள் அமைக்கப்பட்டன. பயிற்சியாளர்களின் அறிவுரையோடு ஒவ்வோர் அணியிலும் ஆட்களுக்கான பணிகள் வழங்கப்பட்டன. முதன்மைச் சூட்டாளன், தொலைத் தொடர்பாளன், எறிகணையைக் குழலேற்றுபவன் என்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வோர் அணியோடும் தேவராஜ் அண்ணையின் ஆட்லறியணியின் போராளிகள் இருவர் கலக்கப்பட்டனர். இறுதியில் ஒன்பது அணிகள் எம்மிடமிருந்தன. இன்னும் ஓரணிக்கு என்ன செய்வதென்பது மணியண்ணையின் தலையிடியாகவிருந்தது. எங்களுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது, இயக்கம் சுளையாக எதையோ பார்த்துவிட்டது, காலங்கடத்தாமல் கொத்திக்கொள்ளப் பரபரக்கிறது.

‘இந்த மூண்டுநாளும் பயிற்சியெடுத்தாக்கள் ஓய்வெடுங்கோ, இப்ப வந்து சேர்ந்தாக்கள் திரும்ப ஞாபகப்படுத்திறதுக்காக பயிற்சியெடுங்கோ. விடிய நாலு மணிக்குள்ள எல்லாரும் ரெடியாயிடோனும்’ என்று மணியண்ணை சொல்லி எம்மை ஓய்வுக்காக அனுப்பிவைத்தார்.

எங்கே ஓய்வெடுப்பது? உடல் மிகமிகக் களைப்படைந்திருந்தாலும் மனம் மிகமிக உற்சாகமாகவே இருந்தது. எல்லோருக்கும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. இன்னும் இரண்டொரு நாட்களில் எமது போராட்டத்தில் பெரிய வரலாற்றுத் திருப்புமுனை நிகழப்போகிறது என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் ஒவ்வொருவரிடமும் மிகுந்திருந்தது. ஒன்றில் இயக்கத்திடம் புதிதாக பத்து ஆட்லறிகள் வந்திருக்க வேண்டும், அவற்றை வைத்து அவசரமாக பெரியதொரு தாக்குதலைச் செய்யப் போகிறது; அல்லது எங்கோ பத்து ஆட்லறிகளை இயக்கம் கண்வைத்து விட்டது, அவற்றைக் கைப்பற்றப் போகிறது. ஆட்லறிகளைக் கொள்வனவு செய்துவந்து இறக்குவதென்பது அப்போது சாத்தியமற்றதாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டது. எனவே இரண்டாவது நிகழ்வையே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

சிந்தனைகள் இன்னும் விரிவடைந்துகொண்டிருந்தன. தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ?

கிடைத்திருக்கும் நான்கு மணிநேரத்தில் யார்தான் நித்திரை கொள்வார்கள்? நித்திரைதான் வந்துவிடுமா? மற்றப்பக்கத்தில் ஏனையவர்களுக்கு மீளநினைவூட்டற் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அன்றிரவு தூக்கமின்றி குறுகுறுப்பாகவே கழிந்தது. மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது.

தொடரும்…

எழுதியவர்: அன்பரசன்.

https://www.eelanesan.com/2021/12/thadankal-1.html

September 3, 2009

உள்ளிருந்து ஒரு குரல் | தொடர்

3 months 2 weeks ago
2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர். தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வதற்குச் சிறிய கால அளவேனும் தேவையாக இருந்தது. இந்தக் கால அவகாசத்தைப் பெறுவதற்காகவும் வேலைசெய்து கொண்டிருக்கும் போராளிகள் மீது தாக்குதல் நடத்த வரும் எதிரியின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் ஒரு அணி முன்னே ஊடுருவி தீக்கழிக்குச் சென்றது. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த போராளிகள் ஆறுபேரும் மாலதி படையணிப் போராளிகள் ஆறுபேரும் வேவு அணியில் நான்கு பேருமாகப் பதினாறு பேர் கொண்ட அந்த அணி மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுடனும் தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்களுடனும் நகர்ந்தது. முன்னே மூன்று கிலோ மீற்றர்கள் நகர்வு. நகரும் இடமெங்கிருந்தும் அடி கிடைக்கும் என்ற காரணத்தால் விழிப்புடனேயே அனைவரும் சென்றனர். இவர்களுக்கான கட்டளையை வழங்குவதற்காக மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த ஜானும் உடன் சென்றார். போகுமிடமெல்லாம் படையினர் அவ்விடங்களில் நடமாடியதற்கான அடையாளங்கள் இருந்தன. காலணித்தடம், நெகிழப்பைகள், குருதித் தடுப்புப் பஞ்சணைகள், தீப்பெட்டி போன்ற இன்னபிற அங்கே காணப்பட்டன. சென்ற இடத்தை அவதானித்து இரண்டு நிலைகளைப் போட்டுக் காப்பில் ஈடுபட்டவாறே அவ்விரவைக் கழித்தனர். அடர்காடு, மையிருட்டு அடுத்தவரைத் தொடுகையின் மூலமின்றி இனங்காண முடியாத இருள். அந்த இரவு ஒருவாறு விடிந்துவிட்டது. அடுத்த நாட்காலை வேவுப் போராளிகளும், இவர்களுமாகச் சேர்ந்து தடயம் பார்த்துப் பொறி வெடிகளைப் புதைத்தனர். நிற்கும் இடத்துக்குச் சற்றுப் பின்னே புதிய முன்னணிக் கோட்டை அமைப்பதற்கான திட்டம் உருப்பெறுவதற்காக பின்னிருந்து ஊர்தியொன்று தருவிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது. ஊர்தியின் சத்தத்தை இனங்கண்ட படையினர் தமது தொலைத்தொடர்பு உரையாடல்களில் அவ்வூர்தியையும், போராளிகளையும் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்குத் திட்டமிட்டனர். இந்த உரையாடல் ஒற்றாடலின் மூலம் தெரியவந்ததால் ஊர்தி உடன் பின்னுக்கு அனுப்பப்பட்டது. அன்று மதியம் ஊர்தி நின்ற இடத்தைக் குறிவைத்து எறிகணைகள் மழைபோல வந்து பொழியத் தொடங்கின. இதனால் ஊடுருவிச் சென்று நிலைகொண்ட அனைவரும் தமது நடமாட்டத்தை நிறுத்திக் காப்பில் இருந்தனர். அன்றிரவு அவ்விடத்தை விட்டுப் பின்னகர்ந்து வேறிடத்தில் நிலை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளை கிடைத்தது. எப்படியும் இவர்களை மோப்பம் பிடித்துப் படையினர் வந்து தாக்குவார்கள் என்பதை இவர்களும் அறிந்திருந்ததால் கட்டளைக்கேற்ப பக்கவாட்டாக இடம்மாறி அதற்குப் பின்னே நகர்ந்து வேறோரிடத்தில் அந்த அணி காவலில் நின்றது. முக்கோணவடிவத்தில் ஒருபுறம் வேவு அணியும், இன்னொரு பக்கம் பெண்புலிகளும், மறுபுறம் மன்னார்க் கட்டளைப் பணியகத்தினருமாக நிலையைப் போட்டு விடிய விடிய மாறி மாறி விழித்திருந்தனர். ஒருபுறம் நிற்பவர்களுக்கும் மறுபுறத்தில் நிற்பவர்களுக்கும் நாற்பது மீற்றர்களே இடைவெளி. அதிகாலை நான்கு மணிக்குக் காடுமுறிக்கும் சத்தம் கேட்டது. பெண்புலிகளின் பக்கம் காவலில் நின்ற வசியரசி புதியவர் என்பதால் சான்மொழியைத் துணைக்கு எழுப்பினார். சத்தங்கேட்டு அனைவருமே விழிப்பு நிலைக்குச் சென்று தகுந்த காப்புக்களில் நின்றனர். படையினர் பன்னிரண்டு பேரளவில் நகர்ந்து வருகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டது. நகர்ந்து வருபவர்கள் இவர்கள் போட்ட முக்கோணக் காப்பை அவதானித்தால் அந்த முக்கோணத்தின் மூன்று புறமிருந்தும் புலிகள் தமது எதிர்ப்பைக் காட்டத் தயாராக நின்றனர். கண்டமேனிக்குப் பரவலாக நகர்ந்த சிங்களப்படைகள் இவர்களுக்கு கிட்டவாக நகர்ந்து இவர்களது முக்கோண நிலையின் உட்புறத்தே வந்துவிட்டனர். சான்மொழி எழுந்து காப்பில் நிற்க ஜான்மாதிரி ஒரு உடற்பருமனானவர் அவரது உடையமைப்புடனேயே அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது. வந்தவர் P.மு சுடுகருவி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் இவர் ஜானல்ல என்பதைச் சான்மொழி இனங்கண்டார். எனினும் உள்ளே வந்த படையினரை ஒரு பகுதியினரும் சுட முடியாது. சண்டை வெளிப்புறமாகவே நடைபெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முக்கோணத்தின் உள்ளே எதிரிகள் தாக்கினால் மறுபுறத்திலிருக்கும் எம்மவர்களே பலியாகக் கூடும். இதையுணர்ந்த போராளிகள் முக்கோணத்தை விட்டுப் படையினர் வெளியேறு மட்டும் மறைவாக இருந்தனர். உள்ளே வந்தவர் கொற்றவையின் தலையை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டார். மூன்று மீற்றரில் இப்போது எதிரி. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த பாலு சடுதியாகச் செயற்பட்டு கொற்றவைக்கருகே வந்தவனை விழுத்திவிட்டார். விழுந்தவன் தனது துப்பாக்கியால் கொற்றவைக்குச் சுட அதைக்கண்ட பரணிதா விழுந்தவனுக்கு மறுபடியும் சுட்டு அவனைச் செயலிழக்கப் பண்ணினார். இப்போது அனைவரையும் அனைவரும் இனங்கண்டு விட்டனர். உள்ளே வந்தவர்களை ஒருவாறு முக்கோணத்தின் வெளியே தள்ளியாகிவிட்டது. வெளிப்புறமாக எல்லோரும் தாக்கத்தொடங்கினர். "மகே அம்மே" என்ற சத்தம் வெளிப்புறமிருந்து கேட்கத் தொடங்கியது. முக்கோணத்தில் நின்ற போராளியொருவருக்குப் பாதக்காலில் பெரிய காயம். கட்டளைப் பணியகத்துடனான தொடர்பு சீராக இருக்க, நின்ற இடத்திலிருந்து இவர்களைப் பின்வாங்கி வருமாறு கட்டளை கிடைத்தது. வந்தவர்கள் இவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு "மகே அம்மே" சொல்லிக்கொண்டு பின்வாங்கி விட்டனர். எறிகணைகள் துரத்திவந்து விழுவதற்கிடையில் காயக்காரரை யும் தூக்கிக்கொண்டு அந்த ஊடுருவல் அணி பின்வாங்கியது. சற்றுப் பின்னே சென்று தடிவெட்டிக் காவு படுக்கை செய்து அவரைத் தூக்கலாமென்று சுற்றிலும் அவதானித்தால் விடத்தல் பற்றைகளே எங்கும் தென்பட்டன. வேறு வழியின்றி விடத்தல் தடிவெட்டி முள்ளைச் சிராய்த்து விட்டு காயக்காரரை காவு படுக்கையில் தூக்கிக்கொண்டு தேத்தாவாடிக்கு வந்து சேர்ந்தனர். அந்த இரண்டு நாட்களும் போதிய உணவும், நீரும், ஓய்வுமின்றி இருந்ததால் ஏற்கெனவே இரத்த அழுத்தம் இருந்த ஜானுக்குக் களைப்பாக இருந்தது. அவர் தனது நோயையும், இயலாமையையும் அதுவரை வெளிக்காட்டவில்லையெனினும் முன்னணிக்கோட்டுக்கு அண்மித்த வழியில் மயங்கிக் கீழே சரிந்தார். தனது தந்தையைப் போன்ற அகவையிலிருந்த அவரை சான் மொழியும் இன்னுமொருவருமாகத் தூக்கிச் சென்று அவருக்குரிய இடத்தில் விட்டனர். இவர்கள் ஊடுருவிச் சென்ற கால இடைவெளியைப் பயன்படுத்தி தேத்தாவாடி முன்னணிக்கோடு சண்டைக்குத் தயாரான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அந்த ஏற்பாடுகள் நிறைவடையும் முன்னரே அந்த முன்னணிக் கோட்டின் ஒருபுறம் தனது அணியை காவலில் நிறுத்தியிருந்த அமர்வாணத்தின் பகுதியில் சண்டை தொடங்கி விட்டிருந்தது. பாப்பா மோட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் முறியடிப்பு அணியில் ஒருவராகத் துளசியும் நின்றார். அடிக்கடி படையினர் முன்னகர்வதால் அடிக்கடி முறியடிப்புச் சமர்களும் நடந்துகொண்டிருந்தன. காலை, நண்பகல், மாலை, இரவு என்று காலவேறு பாடுகளற்றுச் சண்டைகள் தொடர்ந்தன. முன்னணிக் கோட்டுக்கும், அதற்கான முதன்மைத் தளத்துக்கும் ஐம்பது மீற்றர் இடைவெளியே இருந்தது. ஒவ்வொரு நாளும் டாங்கிகளின் சூடுகள் இவர்களைத் தேடிவந்தன. முதன்மைத் தளத்துக்கருகே வீதி இருந்ததால் அவ்வீதி வழி டாங்கியுடன் படையினர் முன்னேற முற்பட்டனர். முதன்மைத் தளத்திலிருந்து எதிரிகளை இனங்கண்டதால் இவர்களும் பக்கவாட்டாகவே அடிக்கத் தொடங்கிவிட்டனர். டாங்கிச் சூடுகள் பற்றை பறகுகளையெல்லாம் கிளப்பியெறிந்ததால் எங்கோ நிம்மதியாகக் கூடுகட்டியிருந்த குளவிகள் தமது இருப்பிடத்தையிழந்து சினங்கொண்டு பறந்து படையெடுத்து வந்தன. ஈழமங்கை முதன்மைத் தளத்திலிருந்து முன்னணி நிலைகளுக்குக் கட்டளை வழங்கிக் கொண்டிருந்தார். அருகே நடைபெறும் சண்டையையும் வழிப்படுத்திக் கொண்டிருந்தார். குளவிகளின் கோபம் ஈழமங்கையை நோக்கித் திரும்பியது. கட்டளை வழங்க முடியாது குளவிகள் அவரைக் கொட்டித் தள்ளின. புவிநிலைகாண் தொகுதியுடன் நின்ற பிருதுவி ஈழமங்கை மயங்கிச் சரிய அவரது நடைபேசியை எடுத்துத் தானே கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈழமங்கையைப் பின்னுக்கு அனுப்பிவிட்டு அவ்விடத்தைப் பொறுப்பெடுக்க அகமதி வந்தார். சிறிது நேரத்துக்குள் அவ்விடம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. முன்னே, பின்னே பக்கவாட்டாக என்று எங்கும் சிங்களப் படைகள். கப்டன் மல்லிகாவுடனான முறியடிப்பு அணிமட்டும் அவ்விடத்தில் நிற்க ஏனையோர் அனைவரும் பகுதிப் பொறுப்பாளர் சத்தியாவின் கட்டளைக்கமைவாகப் பின்வாங்கிச் சென்றனர். அன்றைய நாள் இவர்களுக்கு உணவு கொடுக்க வந்து படையினரிடம் மாட்டிக்கொண்ட உழுபொறியை மீட்கும் பணி இரவிரவாகத் தொடர்ந்தது. உழுபொறியின் ஓட்டுநருடன் தேவா தலைமையில் சென்ற முறியடிப்பு அணி உழுபொறியை மீட்பதற்கான சண்டையைச் செய்தது. P.K யும், 50 கலிபருமாக அடித்துக் கொடுக்க, ஆண், பெண் போராளிகளடங்கிய முறியடிப்பு அணி அன்றிரவே சண்டையிட்டு உழுபொறியை மீட்டு வந்தது. ஓயாது சண்டை, ஓயாது வேலை, ஊனுறக்கமில்லை, ஒழுங்கான குளிப்பு, முழுக்கில்லை, சேற்று வாடை, ஈரஆடை, குளவிகளும், நுளம்புகளும், பாம்புகளும் உறையுமிடத்தில் வாழ்க்கை என்றிருந்தாலும் போராட மறுப்பதில்லை புலிகள். சிங்களப் படைகளுக்கு இது அந்நியமண் புலிகளுக்கோ இது உரிமை மண். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இதுதான் நமது நிலம். இந்த நிலத்தில் நெருப்பெரித்து மக்களைக் கலைத்து அந்த நெருப்பிலே குளிர்காய வருகின்றான் எதிரி. அவன் மூட்டிய நெருப்புக்குள்ளேயே அவனைத் தள்ளி விழுத்திவிடக் கானகமெங்கும் காத்திருக்கின்றனர் புலிகள். நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை. புலிகளின் பணியும் இன்னும் முடியவில்லை. எழுதியவர் - அம்புலி https://eluvom.blogspot.com/2009/04/blog-post_1505.html

உள்ளிருந்து ஒரு குரல் | தொடர்

3 months 2 weeks ago
மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர். ‘முடியுமானால் வந்து பார். எங்கள் வித்துடல்களைத் தாண்டியல்லாது நாமிருக்கும் வரையும் முடிந்தால் வந்துபார் பார்ப்போம்: என்று உறுதியுடன் காத்திருந்தனர் பெண்புலிகள் லெப்.இளமதியின் காப்பரணில் தான் தாரணியும் லெப்.தமிழ்மகளும் நின்றிருந்தனர். கடந்த ஆறுமாதங்களாக பழக்கப்பட்டுப்போன களமுனை என்பதனால் புளியங்குளம் தொடங்கி குஞ்சுக்குளம் வரையும் இவர்களுக்குத் தண்ணிப்பட்ட பாடம். அவர்கள் குளித்துப் பல வாரங்களாகிவிட்டன. அன்று நிலைமையைப் பார்த்துக்குளிக்க விடுவதாகப் பிளாட்டூன் முதல்வி மேஜர் சிவா கூறியிருந்தார். அரசியல்துறை மகளிர் அணி தாக்குதலணிப் போராளிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவள் சிவா. இருந்தாலும் அன்று அவளால் அவர்களைக் குளிக்கவிடமுடியாமல் போய்விட்டது. அந்த முன்னணி நிலை புற்கள் நிறைந்த வெட்டை வெளி. காப்புகளென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சில மரங்கள் இருந்தன. காலாற நடந்துபோக எண்ணினால் அவர்கள் கட்டாயமாக குறிசூட்டுக்கோ, எறிகணைகளுக்கோ இலக்காக வேண்டியதுதான. அன்று காவற்கடமையில் நின்ற தாரணி படையினரின் நகர்வினைக் கண்டுவிட்டாள். அங்கிருந்து பீ.கே.எல்.எம்.ஜீ சுடுகலன்கள் ரவைகள், உந்துகணைகள், எறிகணைகள் என்று வலுவான சூடுகள் வர, இங்கிருந்தும் ரவைகளும் எறிகணைகளும் சீறிப்பாய்ந்தன. முக்கால் மணிநேரம் மூர்க்கமாக முன்னேற முயன்ற சிங்களப் படைகளைத் தமக்கேயான தற்துணிவுடன் எதிர்த்து நின்றனர். புலிப்படைகள் இறுதியில் இளமதியின் நிலையைக் கைப்பற்ற முடியாமல், அவர்களின் குறிக்கும் கனவில் மண்ணைப் போட்டுவிட்டுப் பின்வாங்கிவிட்டனர் சிறிலங்காப் படையினர் வந்த இரண்டு நாட்களும் அமைதியாகக் கழிந்தது. கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அணிகளைக் குளிக்கவிட எண்ணி ய சிவா, அவர்களை மாற்றிவிட மதுமதியின் அணியினை அனுப்பினாள். இளமதியிடம் காவலரணைப் பொறுப்பேற்றுக்கொண்ட மதுமதி அவர்களைக் குளிப்பதற்கு அனுப்பினாள் மதுமதி இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பான தாகவே இருக்கும். ஒளிப்படப்பிரிவில் இந்து களப்பிடிப்பாளராகப் பல களங்கள் சென்று வந்தவள் இங்கே ஒரு காவலரண் முதல்வியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான களமுனைகளிலும் இயல்பாக நிதானமாக இருந்து செயற்படுவது இவளின் சிறப்பியல்பு. குளிக்கச் சென்ற அணியும் அவர்களுக்கான ஆடைகளைத் தலைமை மையத்திலிருந்து எடுத்து வந்த செந்தாவின் அணியும் சந்தித்துப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் அந்த நேரம் மதுமதியின் காவலரணில் சண்டை தொடங்கிவிட்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட சிவா சிறு அணியொன்றுடன் அவ்விடத்துக்கு விரைந்தாள். பாதுகாப்பான காப்புகளில் அனைவரையும் பிரித்து விட்டுவிட்டுத் தானும் ஒரு மரக்காப்புடன் நின்று கட்டளைகளை வழங்கிக் கொண்டு சண்டையிட்டாள். அந்த நேரம் சிவாவைக் குறிவைத்து ஏவப்பட்ட உந்துகணை சீறிவந்து வெடிக்க, அவளையும் காப்பரணையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்போடு எதிரிப்படைகளும் இரண்டையும் விடக்கூடாது என்ற உறுதியுடனும் சண்டையைத் தானே வழிநடத்த வேண்டும் என்ற பொறுப்புடனும் மதுமதி அணிகளை வைத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள். கைவசமிருந்த வெடிப்பொருட்களும் முடியும் நிலை. விழுப்புண்ணடைந்தவர்களின் சுடுகலன்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ரவையாகப் பார்த்துப் பார்த்து தேனெழில் சுட்டுக்கொண்டிருக்க, எந்தப் பதட்டமும் இல்லாமல் ‘மிக்சரை' மென்றபடி நிலைமையைக் கட்டளை மையத்துக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தாள் மதுமதி. வல்வளைப்பாளர்களின் ரவைகளும் உந்துகணைகளும் எறிகணைகளும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. அந்தக்குண்டு மழைக்குள்ளும் இன்னுமொரு அணியினரால் இடையில் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் சிவாவின் வித்துடலையும் தமது காவலரணையும் விட்டுவிடக்கூடாது என்றஉறுதியுடன் ஆண் போராளிகளின் சிறிய அணியொன்றுடன் முன்னேறினர் இளமதியின் அணியினர். காவலரணில் இருந்து சில மீற்றர் தூரத்திலேயே தமிழ்மக்களும் இளமதியும் வீரச்சாவடைய, ஏனையோர் விழுப்புண்ணடைந்து வீழ்ந்தனர். விழுப்புண்ணடைந்தவர்களால் நகரமுடியவில்லை. கையைத்தூக்கினாலோ, புல் அசைந்தாலோ ரவைகளும் எறிகணைகளும் அவ்விடத்தைக் குதறிவிடும். காவலரணைத் தக்க வைப்பதோடு வித்துடல்களையும் விழுப்புண் அடைந்தவர்களையும் அனுப்பவேண்டிய பொறுப்பும் மதுமதியினுடையது. அனால் வெடிபொருட்கள் வரும்வரையும் அவர்களால் தற்காப்புச் சூடுகளை மட்டுமே வழங்கமுடியும். குந்தியிருந்து கட்டளை மையத்துடன் தொடர்பை மேற்கொண்டிருந்த மதுமதியின் காலுக்குக் கீழ் எதிரியால் எறியப்பட்ட கையெறி குண்டு ஒன்று வந்துவிழுந்து வெடிக்க அவளும் விழிமூடிப்போக, கடுமையாக விழுப்புண்ணடைந்த தாரணியும் தேனெழிலும், மாமகளும் ஏனைய ஆண் போராளிகளும் ஊர்ந்து பின்னால் வந்து சேர, அந்தக் காவலரண் எதிரிப்படைகளிடம் விழுந்து போனது. செந்தா அரசியல்துறை மகளிர் தாக்குதல் அணியின் மருத்துவப்போராளி. தேடுதல் அணியின் ஒருவராகத் தனது மருத்துவப் பையுடனும் கையெறி குண்டுகளுடனும் அவளை அதிகமாகக் காணலாம். அவளுக்கு ஓய்வு என்பதே இருந்ததில்லை. தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மேலாக முன்னணி நிலைகளுக்கு அவசரமாக வெடிபொருட்கள் வழங்கவேண்டுமா? உடனே முன்வருவாள். உணவு - தண்ணீர் வழங்கவேண்டுமா? நேரம் காலம் தேவையில்லை செந்தாவுக்கு உடனே புறப்பட்டுவிடுவாள். அது புதூரின் காட்டுப்பகுதி. சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரின் அமுக்க வெடிகள் அடிக்கடி முழங்கும் பகுதி. அன்றும் காலையே அமுக்கவெடித்தொகுதியொன்று வெடித்தனால் அன்றைய நாள் உணவு மாலையே வந்துசேர்ந்தது. முன்னணி நிலைக்கான உணவுகளை வழங்கும் பொறுப்பு செந்தாவிடம் விடப்பட்டது. அவளுக்குத்தான் அந்தப் பாதைகள் அத்துப்படி. ஒன்பது பேர் கொண்ட அணி புறப்பட்டது. அதில் முதலாவது ஆளாக செந்தா செல்ல, அவளுக்குப் பின்னால் குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு ஏனையவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். சிலகாவலரண்களுக்கு உணவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சல காவலரண்களுக்குத்தான் வழங்க வேண்டும். அணி அடுத்த காவலரண்நோக்கி நகரத் தொடங்கியது. சடுதியாக மிக அருகில் வெடித்த அமுக்கவெடியால் தூக்கி எறியப்பட்ட செந்தா, நிதானித்துக்கொண்டு சுடுவதற்காகத் தனது சுடுகலனைத் தூக்கினாள். ஒருகை இயங்க மறுத்தது. அப்போதுதான் விழுப்புண்ணடைந்திருப்பதை அறிந்துகொண்ட செந்தா திரும்பிப் பார்த்தாள் எவரையும் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தாள் சத்தமில்லை. மெல்லப் பின்நோக்கி நடக்கத்தொடங்கினாள். இடையில் காலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆண்போராளி கிடந்தார். ஆனால் செந்தாவால் அந்தப்போராளிக்கு உதவமுடியாதநிலை. உதவி அணியைக் கூட்டிவருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தவளை சம்பவ இடம்நோக்கி அணியுடன் வந்துகொண்டிருந்த கொம்பனி பதில்முதல்வி குயில் கண்டுகொண்டார். செந்தாவைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, அவளின் தகவலின்படி சம்பவ இடத்தையும் சுற்றுப்புறச் சூழலையையும் தேடுதல் செய்த குயிலின் அணி விழுப்புண்ணடைந்தவர்களை மீட்டு வந்தது. சிறிலங்காப் படையினரின் அமுக்கவெடித் தாக்குதல்களுக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கும் பெயர்போன இடம்தான் குஞ்சுக்குளம் நவ்விப்பகுதி. அங்குதான் அரசியல்துறை மகளிர் தாக்குதலணியும் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பிளாட்டூன் பதில் முதல்வி கப்டன் கவிப்பிரியாவுடன் சுடர்மதி, முல்லை கதிரினி, சில ஆண் போராளிகள் என்று தமது கடமைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். ஆறுகள் நிறைந்த வவுனியாக் களமுனையில் இவர்களும் அருகருகே இருந்த இரண்டு ஆறுகளைக் கடந்தே செல்லவேண்டும். பாதிப்பேர் முன் ஆற்றையும் மீதிப்பேர் பின் ஆற்றையும் கடக்க முற்பட்டனர். முன்னால் சென்ற கப்டன் கவிப்பிரியாவுக்கு சிங்களப் படையினரின் மணம் மூக்கினுள் நுழைந்ததோ என்னவோ அணிகளுக்குச் சைகை காட்டி நிலையெடுக்கச் செய்யவும், பதினைந்து இருபது மீற்றர் இடைவெளித் தூரத்தில் உருமறைப்புடன் அமைந்திருந்த நிலையிலிருந்து அவர்களின் சுடுகலன்கள் அவர்களைக் குறிவைத்துக் குண்டுகளைத் துப்பத்தொடங்கின. கணப்பொழுதில் சமாளித்துக்கொண்ட கப்டன் கவிப்பிரியாவின் அணியினரும் தமது சுடுகலன்களால் தாக்க, வனம் அதிர்ந்தது. சுடர்மதியும், முல்லையும் ஆண்போராளி ஒருவரும் பின் ஆற்றுக்குள் நிலையெடுக்க அணி இரண்டாகப் பிரிந்துவிட்டது. வேகமாக முடிவெடித்துச் செயற்பட்டாள் முல்லை. கையெறி குண்டுடன் மாத்திரம் வந்திருந்த ஆண் போராளியைத் தங்களுக்குப் பின்னால் வரும்படி கூறிவிட்டு. சுட்டுக்கொண்டு முன்னேறி முன்னேறி அணியுடன் இணைந்துகொண்டனர் முல்லையும் சுடர்மதியும். அணிகளை ஒருங்கிடைத்துக் கொண்டு தாக்குல்களைக் கொடுத்துக்கொண்டே தமது பாதையை மாற்றிப் பயணத்தைத் தொடர்ந்தனர் கப்டன் கவிப்பிரியாவின் அணியினர். நினைவுகளுடன்: -உலகமங்கை https://eluvom.blogspot.com/2009/04/blog-post_1505.html

உள்ளிருந்து ஒரு குரல் | தொடர்

3 months 2 weeks ago
முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்கவெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேறமுடியும். அப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர். முறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசி யின் அணியிலிருந்தும் வேறு அணிகளி லிருந்தும் பெற்றோரைக் காணச் சென்ற வர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது. முன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்’ இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டி யுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா. தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது. “அண்ணன் சொன்ன வேதம் என்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு முயன்றிடு பாதைகள் எப்போதும் திறக்கும் இல்லையேல் அவைகள் மூடியே கிடக்கும் என்றார் இன்னும் அதிகமுண்டு. தூரமென்று ஏதுமில்லை பாரம் என்ற சொல்லே இல்லை ஏலாதென்றால் சேரும் தொல்லை போராடென்றான் போராடென்றான்” (நன்றி – பாடல் தமிழவள்) வினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும். கோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது. முன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை. அந்தக் கோயில்மோட்டையில் முறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர். வந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை. நின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச் சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார். செவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர். தலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இலைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன. ஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது. நான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார். வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்கவெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா. இப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டுவிடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட்டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா. மாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்குச் சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன. நினைவுகளுடன்:- போராளி மலைமகள். ஈழநாதம் (27 மார்கழி 2008) இதழிலிருந்து….. https://pulikalinkuralradio.com/archives/10462

இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்! 

3 months 2 weeks ago
எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை. பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம். இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை. சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள். வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது. அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர். டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை. உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.