Aggregator

உணவு செய்முறையை ரசிப்போம் !

1 year 5 months ago
நீர்வேலியான் எமது வீட்டிலும் இராசவள்ளிக் கிழங்கு என்றால் ஒரு பைத்தியமே.கனடாவில் தாராளமாக கடைகளில் வாங்கலாம். சன்பிரான்ஸ்சிஸ்கோவில் சீனர்கள் வீடுகளில் பயிரிட்டு ஒவ்வொரு புதனும் கொண்டு வந்து தெருவோரத்தில் போட்டு விற்பார்கள்.நாங்கள் போய் நிற்கிற நாட்களில் மகள் நிறைய வாங்கிவருவா. அடுத்த இருகிழமையில் அங்கு நிற்பேன்.இப்பவே சொன்னால் வாங்கி வைத்திருப்பா.

பூரணம் - சயந்தன்

1 year 5 months ago
பூரணம் - சயந்தன் May 8, 2019 பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள். வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவியபடி விழுந்து வெடித்தது என்றாள். ‘விஷ்க்.. விஷ்க்..’ சன்னங்கள் காற்றை ஓட்டையிட்டன. தலையை உள்ளே இழுத்துப் பதுங்கினேன் என்றாள். வெளியில் அவளுடைய தலைக்கறுப்பை கண்டால் கதிர் அண்ணன் கண்டபாட்டுக்குத் திட்டுவார். ‘உனக்குச் சாக விருப்பமெண்டால் சொல்லு, நாளைக்கே நான் ஏற்பாடு செய்யிறன்’ கதிர் அண்ணன் இயக்கத்தில் இருந்தார் என்றாள். பக்கத்திலிருந்த தரப்பாள் கொட்டிலில், அவரும் ஓர் ஊனமுற்ற பொறுப்பாளரும் தங்கியிருந்தார்கள். அவர்களுடைய ‘வோக்கி ரோக்கி’ இரைகிற சத்தம் கேட்டது. அகழிக்குள் சாக்கை விரித்துவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டேன் என்றாள். எதிரில் அண்ணா உட்கார்ந்திருந்தார். அவருடைய இரண்டு பிள்ளைகளும் தொடையில் தலை வைத்து நித்திரையாகியிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியை தடவிக்கொண்டிருந்தார். முகம் தடித்து வீங்கிப்போயிருந்தது. அவர் ஒழுங்கான ஒரு நித்திரை கொண்டு கண்டதேயில்லை என்றாள். பதுங்கு அகழிக்குள் இருட்டு நுழைந்தது. கப்பல் இப்பொழுது ஒரு கறுப்புப் புள்ளியாயிருக்கக்கூடும். அதையே நினைத்துக்கொண்டிருந்தேன் என்றாள். ஓர் ஆட்டம் அசைவில்லாமல் அது போய்க்கொண்டிருந்தது. சின்னச் சின்ன நீர் மேடுகளாகத் தளும்பியபடி கடல் அமைதியாயிருந்தது. குழந்தைகள் வீரிடாமல் நித்திரை கொள்கிறார்கள். காயக்காரர்கள் முனகவில்லை. காற்று முகத்தை வருடுகிறது. படீரென்று பக்கத்தில் வெடித்தது. பதுங்கு அகழியின் சுவர் உதிர்ந்து கொட்டுண்டுவதைப்போல உணர்ந்தேன் என்றாள். இருட்டுக்குள் விழிகளால் துளாவினாள். அண்ணா இன்னமும் உட்கார்ந்திருக்கிறார் போல. பதற்றமான பேச்சுக் குரல்கள் வெளியே நடந்துபோயின. ‘ஆமி மூவ் பண்ணினால் கதிர் அண்ணன் சொல்லுவார்’ என்ற நம்பிக்கை இருந்தது என்றாள். இரு தரப்பும் துவக்குச் சன்னங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். ஷெல்கள் இங்கிருந்து கூவிச்சென்று தொலைவில் வெடித்தன. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கடல் மட்டும் இரைந்தது என்றாள். அன்றிலிருந்து ஒன்பதாவது மாதத்தில் பூவரசன் பிறந்தான் என்று மேலும் கூறினாள். 000 இடுப்பிற்குள் அணைந்து நின்ற பூவரசனின் கழுத்தையும் முதுகையும் வைகறையின் விரல்கள் பரிவுடன் வருடின. அவளுடைய குரலில் தென்பட்ட தெளிவும் நிதானமும் திருப்தியாயிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர், மெனிக்பாம் முகாமிலிருந்து முதற்தடவையாக மகப்பேறுக் ‘க்ளினிக்குக்கு’ சென்றபோது அங்கிருந்த தாதியின் அதட்டலான கேள்விகளுக்கு குனிந்த தலை நிமிராமல் அழுதுகொண்டிருந்ததை நினைத்தாள். “பதினேழு வயசுப் பெட்டைக்கு பிள்ளையைத் தந்தவன் யாரெண்டு தெரியேல்லையெண்டால் யாராவது நம்புவினமா? வீட்டுக்குத் தூரமில்லாமல்போய் எத்தினை நாளெண்டாவது கணக்கு வைச்சிருக்கிறியா” வைகறை ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கேவினாள். “அழாதை. இந்தா.. தண்ணியைக் குடி” தண்ணீர்ப் போத்தலைக் கை நீட்டி வாங்கி வாய் வைத்துக் குடித்தாள். சற்று முன்னர் “குழந்தையின்ர அப்பா வரேல்லையா” என்று கேட்டபோது இருந்ததைப்போல தாதியின் குரல் தணித்திருந்தது. அதற்கு வைகறை பதில் சொல்லவில்லை. தாதி “அப்பா இறந்திட்டாரா” என்று கேட்டாள். “இல்லை மிஸ் அப்பா யாரெண்டு தெரியாது” வைகறைக்கு பதின்மூன்றோ பதின்நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது பக்கத்துக் காணியிலிருந்த சிவந்தி அக்காவும் இதே பதிலைத்தான் சொன்னாள். அதுதான் ஞாபகத்தில் வந்திருக்கவேண்டும். சிவந்தி அக்கா திருமணம் செய்துகொள்ளாமலேயே ‘பிள்ளைத்தாச்சியாய்’ இருக்கிறாள் என்ற சேதியும் தகப்பன் யாரென்று தெரியாதாம் என்ற சேதியும் ஊர் முழுக்கப் பரவியிருந்தது. அவளை யாரும் நம்பவில்லை. ‘யாரையோ காப்பாற்றத்தான் இப்பிடிப் பொய் சொல்லுறாள்” என்று பேசித்திரிந்தார்கள். சிவந்தி அக்கா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். ஒரு நாள் ‘நல்ல தண்ணி’ அள்ளப் போனபோது அவளுடைய அப்பா ஒரு தும்புக் கட்டையால் பாம்பை அடிப்பதைப்போல அவளை அடித்துக்கொண்டிருந்ததை வைகறை கண்டாள். பூசாரிக்கு உரு வந்ததைப்போல அவருடைய முகம் விகாரமாயிருந்தது. “செத்துப்போ.. உயிரோடை இருக்காதை. செத்துப்போ..” “அடிக்காதைங்கோ..” சிவந்தி அக்கா வயிற்றைப்பிடித்தபடி புழுதியில் பிரண்டு குழறினாள். தந்தை களைத்துப்போனவர்போல தொப் என்று உட்கார்ந்தார். “ஆரெண்டாவது சொல்லனடி. காலில விழுந்தெண்டாலும் கூட்டிக்கொண்டு வாறன்” “எனக்குத் தெரியாது…” சிவந்தி அக்கா கத்தினாள். “எக்கேடு கெட்டும் நாசமாப் போ” என்று தும்புக்கட்டையைச் சுழட்டி எறிந்துவிட்டு அவர் படலையைத் திறந்துகொண்டு வெளியேறினார். வைகறை ஓடிச்சென்று சிவந்தி அக்காவைத் தூக்கி இருத்தினாள். “தண்ணி கொண்டு வரட்டா..” வாளியில் நீர் இறைத்துக்கொண்டுவந்து கைகளில் கோலி வாயில் பருக்கினாள். சிவந்தி அக்கா அனுங்குகிற குரலில் “சத்தியமா எனக்கு இருட்டை மட்டும்தானடி தெரியும்” என்று முணுமுணுத்தாள். வைகறை இருட்டைச் சபித்தாள். இருளை, நிலவை, கடலை, கப்பலை, வெக்கையை, வியர்வை, ஒரு புளித்த நெடியை அனைத்தையும் சபித்தாள். கண்ணீர் மறுபடியும் வழிந்தது. “அழாதை. தனியவா வந்தனி.. ” என்று தாதி கேட்டாள். “ம்..” க்ளினிக்குக்கு வருவதற்கு யாருமிருக்கவில்லை. அவளுக்கு ஏழெட்டு நாட்களாகவே தலைச் சுற்று இருந்தது. மார்புக் காம்புகளில் ‘விண்’ என்ற நோவு. முகாமில் பக்கத்துக் கொட்டிலுக்குள் இருந்த ரமணி அக்காவிடம் கோடாலித் தைலம் வாங்கி நெற்றியிலும் மார்பிலும் பூசிக்கொண்டாள். புதுப்பழக்கமாக இரவுகளில் அடிக்கடி சலத்திற்குத் தூண்டியது. ஒரு பூனையைப்போல வெளியேறி வாசலின் ஓரத்தில் கழித்துவிட்டு மருமக்களோடு வந்து படுத்துக்கொண்டாள். ஒரு நாள் தொண்டைக்குள் புளிச்சலாக புரைத்துக்கொண்டு வந்து சத்தியாகிவிட்டது. வாசலிலேயே ஓங்காளித்தாள். ரமணி அக்கா ஓடிவந்து நெற்றியிலும் பிடரியிலும் கை வைத்துத் தலையைத் தாழ்த்தி “மிச்சத்தையும் எடு” என்றாள். அவள் “சாப்பாடு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லையாக்கும்” என்றபோதுதான் இரண்டு மாதங்களாக துடக்குத் தேதிகள் குழறுபடியாயிருப்பது உறைத்தது. நிலைகுலைந்து போனாள். அண்ணாவுக்கு மூச்சும் விடவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியபோது ‘ஆமிக்காரர்கள்’ அவளையும் அண்ணாவையும் பிள்ளைகளையும் ஒரே குடும்பமென்றே பதிவு செய்து கூடாரத்தை ஒதுக்கியிருந்தார்கள். மருமக்கட்பிள்ளைகளுக்கு நான்கும் மூன்றுமான வயதுகள். நிலவன் என்றும் இறைவன் என்றும் பெயர். வைகறையோடு நல்ல வாரப்பாடாயிருந்தார்கள். குளிக்க வார்க்கவும், கழுவவும், சோறு தீத்தவும் அவள்தான் வேண்டும் என்ற பிடிவாதத்திற்கு அண்ணனிடம் வாங்கிக்கட்டுவதும் உண்டு. வைகறையின் அம்மாவை, அவளுக்கு நினைவு தெரிவதற்கு முன்னரேயே நோய் காவு கொண்டிருந்தது. அப்பாவிடம்தான் வளர்ந்தாள். அண்ணனை வேண்டுமென்றால் தன்பாட்டில் வளர்ந்தான் என்று சொல்லலாம். இவளைத் தாயில்லாக் குறை தெரியாமல் பார்த்துப் பார்த்து வளர்த்தார். பதின்மூன்று வயதில் பருவமெய்தி வீட்டிலிருந்த காலத்தில் அண்ணன், அவனுடைய இருபத்தியொராவது வயதில் திருமணம் செய்துகொண்டான். அவனும் அண்ணியும் ஊரைவிட்டு ஓடிப்போய் மூன்று மாதத்தின் பின்னரே திரும்பி வந்தார்கள். அண்ணி கர்ப்பமாயிருந்தாள். அக்காலத்திற்தான் நிர்மலா மாமி வீட்டிற்கு வந்தாள். அவளை அதற்கு முன்னரும் வழிகளில் கண்டிருந்தாலும் பழக்கமிருக்கவில்லை. நிர்மலா மாமி இவளைக் கண்டதும் மலர்ந்து சிரிப்பாள். சில நேரங்களில் சுண்டியதைப்போல முகம் சுருங்க பதைப்போடு ஒதுங்கி விலகுவாள். அவளைப் பார்க்கும்போது இன்னதெனத் தெரியாத ஓர் இஷ்டமும் நெருக்கமும் அதுபாட்டுக்கு உருவாகும். நல்ல செந்தளித்த முகம். அதில் பெரிய வட்டக் குங்குமப்பொட்டு. நிர்மலா மாமி காலையில் பத்துமணிக்கெல்லாம் வந்துவிடுவாள். வந்ததும் பச்சை முட்டையைக் கடும்கோப்பியில் கலக்கியடித்துச் சுடசுடக் கொடுத்தால் வைகறை அதை ‘அடிமுட்டக்’ குடிப்பாள். மதியத்தில் நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியலும் கீரையும் பிசைந்த குழல் புட்டு. தன் கையாலேயே ஊட்டுவாள். வெயில் சாய பழங்களைக் கீலம் கீலமாக நறுக்கி சில்வர் தட்டில் அடுக்கி வைப்பாள்.. அவள்தான் ரமணிச்சந்திரனையும் லக்சுமியையும் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாள். அவள்தாள் நப்கின்களைப் பயன்படுத்துவதை விளங்கப்படுத்தினாள். நிர்மலா மாமி இருக்கும்போது அப்பா ஒருநாளும் வீட்டிற்கு வருவதில்லை. அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டதேயில்லை. ஏழோ எட்டு மாதத்திற்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் அப்பாவும் நிர்மலா மாமியும் மன்னாருக்குச் சென்றுவிட்டார்கள் என்று அறியநேர்ந்தபோது ‘அப்பா என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.’ என்று வைகறை இரவு முழுவதும் அழுது புலம்பினாள். ‘அவளையும் கூட்டிக்கொண்டு வாங்க என்று நிர்மலா மாமியாவது அப்பாவிற்குச் சொல்லியிருக்கலாம்..’ என்று கோபப்பட்டாள். வைகறையை அண்ணன் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவன் “எங்கடை அப்பா செத்துப்போனார்” என்று சொன்னான். போன நாளிலிருந்தே ‘பிள்ளைப் பெத்திருந்த’ அண்ணிக்கு உதவி ஒத்தாசைக்கு ஓர் ஆள் தேவைப்பட்டிருந்ததைப்போல வைகறை முழு நாளும் மெனக்கெட்டாள். அண்ணிக்காரி ஒரு பொல்லாதவள்.. பகலெல்லாம் அவளும் அண்ணனும் ‘நாயே பேயே’ என்று சண்டை பிடித்தார்கள். தர்க்கம் பெருகப் பெருக அண்ணன் “கத்தாதை..” என்று உறுக்கியவாறே கிட்ட நெருங்குவான். அவளுடைய கன்னத்தில் ‘பளார்’ என்றொரு அறை விழும்வரைக்கும் பொறுத்துக்கொண்டிருந்தவள் போல பத்ரகாளியாகிவிடுவாள். அதற்குப் பிறகு அவளைச் சமாதானப்படுத்த முடியாது. “நக்கித் தின்னி, பொறுக்கி” என்றெல்லாம் அவளிடமிருந்து வசைச்சொற்கள் விழும். “மாதாவே. இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டிரும்” என்று ஓலமிடுவாள். பானைகளையும் சருவச் சட்டிகளையும் தூக்கி வீசுவாள். அண்ணன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறியபிறகு வைகறையைப் பார்த்து “உன்ரை அண்ணரை எப்பிடி ஒரு பெட்டிப் பாம்பா அடக்கிறது எண்டு எனக்குத் தெரியுமடி” என்று வன்மத்தோடு சொல்வாள். பிறகு இரவு அமைதியாக நீளும். அண்ணி இரண்டாம் முறையாகவும் கர்ப்பமானாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அண்ணி செத்துப்போனாள். அப்பொழுது கடைசிப்பெடியன் ஒரு ‘தவ்வல்’ குழந்தை, ஒரு வயதும் ஆகவில்லை. சாதாரண காய்ச்சல் என்று மாறி மாறி பனடோல் போட்டுக்கொண்டிருந்தவள் ஐந்தாவது நாள் ‘தஞ்சக்கேடாகி’ சுருண்டு விழுந்தாள். இரவே ஒரு மோட்டர்சைக்கிளை ‘ஹயருக்குப்’ பிடித்து நடுவில் இருத்திவைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். நினைவு தப்பிவிட்டது. மூன்றாவது நாள் பிரேதமாகக் கொண்டுவந்தார்கள். அவளுடைய கால்மாட்டில் குந்தியிருந்து பெருவிரல்களைப் பொத்திப்பிடித்துக்கொண்டு அண்ணன் கதறியது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. “நீங்கள் என்ரை அம்மாவெல்லோ..” ‘அண்ணனுக்கு எப்பிடிச் சொல்லுறது’ க்ளினிக்கில் வைகறையின் சிறுநீரைச் சோதித்து கர்ப்பத்தை உறுதிசெய்தபோது அவள் கூடாரத்திற்குத் திரும்ப மனமில்லாமல் புழுதிக்குள்ளேயே குந்தியிருந்தாள். காட்டு வெயிலில் உச்சி எரிந்தது. ஒரு மொட்டாக்குக் கூட போடத்தோன்றவில்லை. வயிற்றில் ஒரு சதைத் திரட்சி வளரத்தொடங்கியிருக்கிறது என்பதை சீரணிக்க முடியாமல் மூச்சுத் திணறியது. ‘நிர்மலா மாமி நெற்றியைத் தடவினால் ஆறுதலாயிருக்கும்’ என்று நினைத்தாள். யாரிடம் சொல்வதென்று ஒன்றும் தோன்றவில்லை. ‘விசாரணையில நானொரு இயக்கப்பெட்டையெண்டு பிடிச்சுக்கொண்டுபோய் பிடரியில சுட்டால் நல்லது..’ என்று யோசிக்கவே பெரிய ஆசுவாசமாயிருந்தது. அவ்வாறான வீடியோக் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன என்று முகாமில் பேசிக்கொண்டார்கள். ‘ஆமிக் கொமாண்டர் பல்லை நெருமிக் கொண்டு வயித்தில உதைஞ்சால் எவ்வளவு ஆறுதல்…’ வைகறை கிரமமாக இராணுவ விசாரணைகளுக்குப் போய் வரவேண்டியிருந்தது. அவள் ஓர் இயக்க உறுப்பினர் அல்ல என்பதை அவர்கள் பிடிவாதமாக நம்ப மறுத்தார்கள். “பொய் சொல்ல வேணாம், ஒரு நாள் புலியில இருந்தாலும் சொல்லிடணும்” என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தினார்கள். ஒரு தடித்த ஆமிக்காரி வைகறையின் உடலில் ஆயுதப்பயிற்சியின் தளும்புகளைத் தேடிக் களைத்தாள். “ஏன் உன்னை புலிகள் பிடிச்சிட்டுப் போகல” என்று சந்தேகத்துடன் கேட்டாள். “உன் வீட்டில அண்ணா தம்பி யாராவது இயக்கத்தில இருந்தாங்களா” “இல்லை.. எனக்கு அவங்களைக் கண்ணிலயும் காட்டக்கூடாது” என்று வைகறை தீர்மானமாகச் சொன்னாள். அவள் ‘கதிர் அண்ணையைத்’ தவிர என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். அவளுக்குக் கதிர் அண்ணை என்றால் காணும். அவனில் நல்ல விருப்பம். மாத்தளனிற்கு வந்து கைவிடப்பட்டிருந்த கூடாரமொன்றிற்குள் நுழைந்தபோதுதான் முதன்முதலாக அவனைக் கண்டாள். பக்கத்துக் கூடாரத்தில் சக்கர நாற்காலியிலிருந்த பொறுப்பாளரின் முகத்தை துணியை ஈரத்தில் பிழிந்து துடைத்துக் கொண்டிருந்தான். பார்த்தவுடனேயே போராளி என்று புரிந்தது. “அண்ணையாக்கள், இந்தக் கொட்டிலில வேற யாரும் இருக்கினமோ” கதிர் அண்ணை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான். பிறகு சாதாரணமான குரலில் “இருந்தவை. நேற்றுத்தான் செத்திருக்கவேணும்” என்றுவிட்டு அலுவலில் மூழ்கினான். வைகறைக்கு விறுக் என்று கோபம் வந்தது. ‘இப்பிடியா பதில் சொல்லுற’ முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கூடாரத்தின் பிளாஸ்ரிக் தரப்பாள் கத்தியால் குதறியதைப்போல கிழிந்து தொங்கினாலும் உள்ளே பதுங்கு அகழி நல்ல நிலையில் இருந்தது. சாக்குகளிலும் சேலையை வெட்டித் தைத்த பைகளிலும் நிரப்பிய மண் மூட்டைகளால் நன்றாகக் காப்புச் செய்யப்பட்டிருந்தது. அங்கேயே தங்கிக்கொள்வதென்று முடிவு செய்தார்கள். கதிர் அண்ணையையும் அந்தப் பொறுப்பாளரையும் தினமும் ஒருமுறையென்றாலும் சந்தித்துப்பேச போராளிகள் வந்தார்கள். அவர்கள் வருவதையும் போவதையும் ‘பராக்குப்’ பார்த்தபடிதான் வைகறை பொழுதைப் போக்கினாள். கதிர் அண்ணையிடம் மீறாத ஓர் ஒழுங்குமுறையும் நிதானமும் இருந்தது. ஷெல்கள் வெடித்துக் கரும்புகை அடங்கிய இரண்டாவது நிமிடத்தில் அவன் பச்சைத் தண்ணீரால் முகத்தை ஒத்தியெடுத்துவிட்டு ‘உப்’ என்று கன்னத்தை ஊதிச் சவரம் செய்தபடியிருப்பதைக் காணலாம். இரண்டொரு நாட்களிலேயே அவன் மருமக்கட்பிள்ளைகளுக்கு பிஸ்கற்றுக்களைத் தருவது சூசியம் தருவது வாழைப்பழம் தருவது என ஒரு பரஸ்பர அறிதல் உருவாகியிருந்தது. ஒருநாள் வைகறை இறைவனுக்கு ரொட்டியைக் கிழித்துத் தீத்திக்கொண்டிருந்தாள். பச்சை மிளகாயை நறுக்கி வெறும் கோதுமை மாவில் பிசைந்து மண்ணெண்ணெய்த் தகர மூடியில் வாட்டிய ரொட்டி. எதிரில் கதிர் அண்ணை இளைப்பாறுவதைப்போன்ற ஒரு தோரணையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கையில் ஒரு சிறிய புத்தகமிருந்தது. விரல்கள் அலைச்சலோடு தாள்களைப் புரட்டுவதும் நிறுத்திவிட்டு வேறெங்கோ வெறிப்பதுவும் ஓரக்கண்ணால் இவளைப் பார்ப்பதுமாக இருந்தான். அது புதியதொரு அந்தரமாக இருந்தது. வைகறை சட்டையில் ஏதாவது கிழிசல் இருக்கின்றதா என்று தன்னியல்பாகத் தடவிப்பார்த்தாள். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். ரொட்டியின் கடைசித் துண்டை இறைவனின் வாயில் ஊட்டிவிட்டு எழுந்தபோது கதிர் அண்ணையின் குரல் கேட்டது. “பசிக்குது. ஒரு ரொட்டி சாப்பிடுங்கோ எண்டு என்னைக் கேட்க மாட்டியா..” அவள் விருட்டென்று அடுப்புக்கு ஓடினாள். ஒரு துண்டு ரொட்டி கூட மிச்சமிருக்கவில்லை. ஷெல்கள் விழுந்து வெடிக்கும்போது மட்டுமல்ல, அரிதிலும் அரிதாக ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவும்போதுகூட கதிர் அண்ணை, வைகறையை வெளியில் திரிய அனுமதிப்பதில்லை. “உள்ளை போய் இரு” என்று விரட்டுவான். அவளை இயக்கம் பிடித்துக்கொண்டு போய்விடக்கூடாதென்பதில் அவனுக்கு உள்ளூர ஒரு விருப்பம் இருந்திருக்கவேண்டும். ஒருநாள் “இஞ்சை வா” என்று கூப்பிட்டான். கையில் ஒரு சீருடைப் போராளியின் புகைப்படம் இருந்தது. அதைக் கொடுத்தான். “இவன் இப்ப உயிரோடை இல்லை. பெயர் பேராளன். ஊர் தேராவில். உன்னை எவளாவது இயக்கத்துக்கு வரச்சொன்னால் இதைக் காட்டி அண்ணை மாவீரர் எண்டு சொல்லு. உண்மையைக் கண்டுபிடிக்க மூண்டு நாளாவது ஆகும். அதுக்குள்ளை ஒரு அதிசயம் நடக்காமலா போய்விடும்.” இன்னொருநாள் மூன்று கற்களின் இடுக்கில் எரிந்த அடுப்பில் குறிப்புப் புத்தகங்களையும் புகைப்படங்களையும் கிழித்துக் கிழித்து எரித்துக்கொண்டிருந்தான். தீயின் செம்மையில் உக்கிரமாயிருந்த அவனுடைய முகத்தை இதற்குமுன்னர் வைகறை ஒருபோதும் கண்டதில்லை. ஓடிப்போய் அவனிடமிருந்து அவற்றைப் பறித்தாள். “கதிர் அண்ணை, இது மொக்கு வேலை” அவன் “கொண்டு வா..” என்று கத்தினான். மிரண்டுபோய்க் கொடுத்தாள். “நீங்கள் வைச்சிருக்கேலாது எண்டால் படங்களை என்னட்டைத் தாங்கோ. நான் வைச்சிருக்கிறன்” “வேணுமோ” எழுமாற்றாக ஒரு படத்தை உருவி நீட்டிவிட்டு சட்டென்று திருப்பியெடுத்தான். “இதில யூனிபோமில நிக்கிறன். இது வேண்டாம்” இன்னும் இரண்டொரு படங்களை விலக்கி விலக்கித் தேடினான். “இந்தா இதை வைச்சிரு” அந்தப் புகைப்படத்தில் கதிர் அண்ணையும் ஒரு முதிய பெண்ணும் நின்றிருந்தார்கள். அவள் சீத்தைத் துணியிலான பூப்போட்ட கைலியைச் சுற்றிக்கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்திருந்தாள். முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. பழுப்பு நிற கல் பதித்த மூக்குத்தி அணிந்திருந்தாள். கண்கள் ஒளிர்ந்து சிரித்தன. கதிர் அண்ணை அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்தவாறு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து நின்றான். சற்றுமுன்னர் அவளை முத்தமிட்டிருக்கவேண்டும். சாரமும் முழங்கை வரை மடித்துவிடப்பட்ட பச்சைச் சேட்டும் அணிந்திருந்தான். “நான் லீவில போய் நிண்ட நேரம் எடுத்தது. பத்து வருசத்துக்குப் பிறகு பிறந்த ஒரேயொரு முத்தெண்டு பூரணக் கிழவி என்னில அப்பிடியொரு பாசம். ம்.. இப்ப இந்தக் கடற்கரையிலதான் எங்கையாவது திரியும்” கதிர் அண்ணையைக் கடைசியாகக் கண்ட நாளில்தான் மாத்தளன் கடலிற்குக் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காகக் கப்பல் வந்திருந்தது. கடற்கரையில் சனங்கள் முண்டியடித்தார்கள். திடீரென்று முடிவெடுத்ததைப்போல அண்ணன் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு கடற்கரைக்குப் புறப்பட்டான். “யாருடைய காலில விழுந்தெண்டாலும் இவங்களை ஏத்திக்கொண்டு போகப்போறன். நீ தனியச் சமாளிப்பாய்தானே” என்றபோது வைகறைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மௌனமாக நின்றாள். ஆனால் அவனால் அப்படியெல்லாம் வெளியேற முடியாதென்று நினைத்தாள். அதுவொரு ஆசுவாசமாக அவளைத் திருப்திப்படுத்தியது. அண்ணன் இரண்டு பைகளை மட்டுமே எடுத்துக்கொண்டான். நிலவனும் இறைவனும் அவனுடைய விரல்களைப் பிடித்து நடப்பதற்குப் பின்னடித்தார்கள். இவளைத் திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். “வாறியளா.. இல்லாட்டி விட்டுட்டுப் போகவா” கத்தினான். வைகறை அவர்களுக்குக் கையசைத்தாள். வெளியில் வந்து நின்றாள். சனக்கூட்டம் திணறுப்பட்டது. ‘இயக்கத்தோடு சண்டை பிடிக்கினம்போல’ மேலதிக சிகிச்சைக்காக யாரையெல்லாம் திருகோணமலைக்கு அனுமதிப்பது என்பதில் இயக்கத்திடம் ஓர் அளவுகோல் இருந்தது. காயத்தின் தீவிரத்திற்கும், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் அப்பாலும் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்கள். ‘கதிர் அண்ணை நினைச்சால் என்னையும் அனுப்பலாமா’ என்று வைகறை யோசித்தாள். ‘ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லியாவது அனுப்பலாம்..’ திரும்பிப் பார்த்தாள். அவனுடைய கூடாரம் வெறுமையாய் இருந்தது. திடீரென்று கடற்கரை அமளிப்பட்டது. சனங்கள் கடலை நோக்கித் திரண்டு ஓடினார்கள். அவர்களிற்கும் இயக்கத்திற்கும் வாய்த்தர்க்கம் முற்றியிருக்கவேண்டும். கூச்சலாயிருந்தது. வைகறை நிலவனுக்காகவும் இறைவனுக்காகவும் வருத்தப்பட்டாள். ‘படீர்’ என்று ஒரு துப்பாக்கி வெடித்தது. தொடர்ந்து மூன்று அழுத்தமான வெடிகள் கடலை உதைப்பதைப்போல கேட்டன. சனக்கூட்டம் கத்திக்கொண்டு நாற்புறமும் சிதறியது. அண்ணன் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான். “மேல் வெடி வைச்சுச் சனத்தைத் துரத்திறாங்கள். கதிர்தான் சுட்டவன்” என்றான். சற்றுக்கழித்து கதிர் அண்ணையைத் துப்பாக்கியோடு கண்டாள். இவளைக் காணாததைப்போல நடந்துபோனான். ‘என்ர காலுக்குக் கீழயும் இவர் ரெண்டு வெடி வைச்சால் அடுத்த முறை கப்பல் வரேக்கை இந்த நரகத்தை விட்டுப் போகலாம்’ என்று யோசித்தாள். ‘நிலவனையும் இறைவனையும் அண்ணன் தனியச் சமாளிப்பார்தானே’ கதிர் அண்ணை அன்றைக்கு இரவு கூடாரத்தில் தங்கினானா தெரியவில்லை. மறுநாள் மதியம்போல செத்துப்போய்விட்டான். விமானத் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலி. ஒரு முன்பள்ளிக் கட்டிடத்தில் வெறும் ஏழெட்டுப்பேரோடு அஞ்சலி நடந்தது. கேள்விப்பட்டபோது வைகறைக்கு உடம்பு நடுங்கத்தொடங்கிற்று. அழுதபடி ஓடினாள். கதிர் அண்ணைக்கு எந்த இடத்தில் காயமென்று தெரியவில்லை. ஒரு காட்போட் பெட்டிக்குள் சாதாரண ஆடையில் வளர்த்தியிருந்தார்கள். காலையில் சவரம் செய்த முகத்தில் மொய்த்த இலையான்களை ஒரு சிறுவன் விசிறியபடியிருந்தான். வைகறை நிற்கத் திராணியற்று அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்தாள். சருமச் சுருக்கங்கள் நிரம்பிய முகத்தில், ஒளி வற்றிய கண்களைக்கொண்ட ஒரு கிழவியை அவள் சுற்றுமுற்றும் தேடினாள். அந்த முதிய பெண்ணின் ஒப்பாரிப்பாடல் கதிர் அண்ணைக்கு ஆறுதலாயிருக்குமென்று நினைத்தாள். இந்த நரக நிலத்திலிருந்து தன்னை வெளியேற்றும் வல்லபம் கதிர் அண்ணைக்கு உண்டு என்ற நம்பிக்கை வைகறைக்கு இருந்திருக்க வேண்டும். அவன் நினைத்திருந்தால் கப்பலிலோ, ஏதேனும் கள்ளப்பாதையிலோ அனுப்பி வைத்திருக்க முடியும். அவனைப் பெட்டியோடு தூக்கி உழவு இயந்திரப்பெட்டியில் ஏற்றினார்கள். அழுகை வெடித்தது. வாயைப்பொத்தி அடக்கினாள். கடமுட என்று சப்தமெழுப்பியபடி உழவு இயந்திரம் நகர்ந்தது. கூடாரத்திற்குத் திரும்பினாள். வானம் கரு நீல நிறமாகியிருந்தது. வைகறைக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. பதுங்கு அகழிக்குள் இறங்கினாள். அண்ணன் பிள்ளைகளின் முதுகில் தட்டித் தூங்க வைத்துக்கொண்டிருந்தான். காற்றை உறிஞ்சியெடுத்துவிட்டதைப்போல புளுக்கமாக இருந்தது. அகழிக்கு மேலேறிப் படுக்கலாமா என்று யோசித்தாள். பயமாயிருந்தது. அண்ணன் பிள்ளைகளை தொடையிலிருந்து இறக்கிவிட்டு கால்களை நீட்டி அகழிச்சுவரில் சாய்ந்தான். அவனுடைய கண்கள் வழமைபோல மேலே நிலைகுத்தின. இரவு எட்டு எட்டரை இருக்கலாம். மயான அமைதி. இந்நேரங்களில் கதிர் அண்ணையின் ‘வோக்கி’ இரைகிற சத்தத்தைக் கேட்டாலே தெம்பாயிருக்கும். தொலைதூரத்தில் ஒரு பஞ்சப்பட்ட துப்பாக்கியிலிருந்து ஒன்றோ இரண்டு சத்தங்கள் அவ்வப்போது கேட்டன. ஆறாவது கூடாரத்தில் ஒரு குழந்தை வீரிட்டு அழுதது. இந்த இருட்டையும் அமைதியையும் பற்றிப்பிடித்தபடி ஒரு கள்ளப்பாதையால் யாரேனும் வெளியேறிக்கொண்டிருக்கக்கூடும். அந்த நிழல் உருவில் பொறாமைப்பட்டாள். இரவுக்குக் காலில் வெடிபட்டதைப்போல ஊர்ந்தது. வைகறை நேரத்தைப் போக்காட்ட அலைகளைக் கூர்ந்து கேட்க முயற்சித்தாள். ‘ஸ்ஸ்’ என்ற இரைச்சல் ஒவ்வொருமுறையும் பெருகி பொலபொலவென்று உடைந்து பின்வாங்கியது. ‘சண்டை முடிஞ்சதும் நிர்மலா மாமியைத் தேடிக் கண்டுபிடிக்கவேணும்.’ என்று தோன்றியது. அண்ணனுக்குத் தெரிந்தால் காலை அடித்து முறிப்பான். அவன் நிர்மலா மாமியைத் திட்டித் தீர்க்காத ஒரு வசைச்சொல் இல்லை. ‘அண்ணனும் பாவம்தான்.’ அப்பாவும் நிர்மலா மாமியும் ஓடிப்போன பிறகு “உங்கட அப்பா ஏன் இப்பிடிச் செய்தவர்” என்று ஊரார் அவனைத்தான் துக்கம் விசாரித்தார்கள். நிர்மலா மாமியின் கணவர் மூக்குமுட்டக் குடித்துவிட்டுவந்து வீட்டு முற்றத்தில் நின்று தூஷணத்தில் கத்தினார். அண்ணன் பதிலுக்கு ஒரு வார்த்தையும் திருப்பிச் சொன்னதில்லை. நிறைய அவமானப்பட்டான். நிறையக் கவலைப்பட்டான். பள்ளிக்கூடத்தில் ஒரு பெடியன் வைகறைக்குக் கடிதம் கொடுத்தபோது முதலில் அண்ணனுடைய பரிதாபமான முகம்தான் ஞாபகத்தில் வந்தது. அந்தப் பெடியனுக்கு மேல் வரிசையில் தெத்துப்பல். சாடையான வாக்குக் கண். பார்க்க வேணும்போல இருக்கிற முகம். ‘உன் மௌனம் அழகுதான். எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கடிதத்தில் எழுதியிருந்தான். அவனுக்குக் கடைசிவரையும் பதில் சொல்லவில்லை. ஆனாலும் அவன் கொஞ்சம் தாமதித்து வந்தாலும் தவிப்பாயிருந்தது. வேறு பெண்களைப் பார்த்தாலே எரிச்சலாயிருந்தது. வைகறை பாதி உறக்கத்தில் ஒரு புன்னகையை வரைந்தாள். சவப்பெட்டி அளவிலான ஓர் இருள்கட்டி அவளை மூடிக்கொள்வதைப் போலிருந்தது. ‘குப்’ என்ற புளித்த வாடையை முகர்ந்தாள். ‘கள்ளப்பாதையால் யாரோ வெளியில போகினம் போல’ என்ற நினைவோடியது. அலை உடைந்து பின்வாங்கிய பிறகு இரைச்சலே இல்லை. ‘கடல் வத்தி நிலமாச்சுதெண்டால் நடந்தே போயிடலாம்..’ இளஞ்சூடுடைய அவளுடைய தட்டையான வயிற்றில் இருட்டின் சொரசொரப்பான விரல்கள் அவசரமாகப் பதிந்து அழுத்தின. வெகு தொலைவில் பஞ்சப்பட்ட அந்தத் துப்பாக்கி ‘டுப்’ என்று தன்னுடைய கடைசிச் சன்னத்தையும் துப்பியது. ‘சண்டை முடிஞ்சிட்டுது போல.. சனங்களை இனி வெளிய விடுவினம்..’ ஒரு மூச்சுக்காற்று தேகமெங்கும் அலைந்து திரிந்தது. வியர்த்தது. களைத்தாள். ஆறாவது கூடாரத்திலிருந்து வீரிட்ட குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது. யாரோ அதனைத் தூங்கச் செய்திருந்தார்கள். 000 காலையில் நிலவனின் வீரிட்ட குரலில்தான் கண்விழித்தேன் என்றாள். அவனுடைய பிஞ்சுக் கால்களின் கீழே அண்ணன் காய்ந்த சுள்ளித்தடியால் விளாச குழந்தை பதைத்துப் பதைத்துக் குழறியது. ஓடிச்சென்று அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டேன் என்றாள். “ஏன் அடிக்கிறியள்” என்று கேட்கவில்லை. அண்ணனும் எதுவும் சொல்லவில்லை. அவனுடைய நேர்ப்பார்வையைக் காணக்கூடாதென்று பிரயத்தனமெடுத்தாள். பெரும்பாலும் நாள் முழுவதும் நின்றுகொண்டேயிருந்தேன் என்றாள். மேலும் இரண்டொரு நாட்களுக்குச் சிறுநீர் கழிக்க இயலவேயில்லை என்றும் கூறினாள். 000 மெனிக்பாம் முகாமின் நீளக் கூடாரத்தின் பிளாஸ்ரிக் தடுப்பிற்கு அப்பால் ரமணி அக்காவும் மூன்று பிள்ளைகளும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். வைகறை ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் அவர்களுடனேயே இருந்தாள். அவள் இரண்டு தடவைகள் க்ளினிக்கிற்கு இரகசியமாகச் சென்று வந்தாள். இரண்டாம் முறை “என்னெண்டு தெரியேல்லையக்கா, ஒரே உடம்பு தஞ்சக்கேடா இருக்கு” என்று சொன்னாள். ரமணி அக்காவை நிமிர்ந்து பார்க்கவும் தயக்கமாயிருந்தது. கண்களின் அலைச்சலும் உத்தரிப்பும் காட்டிக்கொடுத்துவிடும் என்று பயந்தாள். திடீரென்று ‘இவவுக்குச் சொல்லுவமோ’ என்று நினைத்தாள். ரமணி அக்கா முதற்கேள்வியாக ‘யாரடி..’ என்று கேட்பாள். ‘தெரியாது’ என்று சொன்னால் ‘நீயெல்லாம் ஒரு பொம்பிளையோ” என்று திட்டுவாள். அவளுடைய மூத்த பெண்ணுக்கு பன்னிரெண்டு வயது நடந்துகொண்டிருந்தது. ‘இங்கு வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளவேண்டும்’ என்று வைகறை முடிவு செய்தாள். ஆனால் இயலவில்லை. அண்ணனுடைய கூடாரத்தில் ஒரு நிமிஷம் கூட அவளால் காலூன்ற முடியவில்லை. அவனோடு பேச்சுக் குறைந்து இல்லாமலேயே போய்விட்டது. நிலவனிலும் இறைவனிலும் காரணமின்றி எரிச்சல்பட்டாள். துடிக்கத் துடிக்க அவர்களுடைய தொடைச் சதையில் கடிக்க வேண்டும்போல ஒருமுறை தோன்றியது. திடுக்கிட்டுப்போனாள். பிறகு வருந்தினாள். “என்னடி ஒரு மாதிரி இருக்கிறாய்” என்று ரமணி அக்கா இரண்டொரு தடவைகள் விசாரித்தாள். வைகறை மூன்றாவது க்ளினிக்கிற்குப் போவதற்கு முதல்நாள், அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு “என்ன எண்டாலும் என்னை நம்பிச் சொல்லு..” என்று நேரடியாகவே கேட்டாள். வைகறைக்கு பொசுக் என்றெல்லாம் கண்ணீர் முட்டவில்லை. “சுகமில்லாமல் இருக்கிறன். நாளைக்கு மூண்டாவது க்ளினிக்” என்று இறுகிய குரலில் சொன்னாள். “பிள்ளையள்.. வெளிய போயிருந்து விளையாடுங்க” ரமணி அக்காவின் பிள்ளைகள் கூய் என்றவாறு வெளியே ஓடினார்கள். அவள் வைகறையின் விரல்களை ஒவ்வொன்றாக நீவிவிட்டாள். “நான் மூண்டு பிள்ளையளிட அம்மா. என்னையே இந்த நாய்கள் பார்த்த பார்வையும் கேட்ட கேள்வியும் நினைச்சாலே வயித்தைப் பிரட்டும். ஆமிக்காரங்கள் உன்னைத் தனியவா விசாரிச்சவங்கள்?” வைகறை தலையைக் குனிந்துகொண்டிருந்தாள். செத்துப்போன தாயே திரும்பி வந்துகேட்டாலும் வாயைத் திறப்பதில்லை என்றொரு ஓர்மம் வளர்ந்து கொண்டிருந்தது. நிர்மலா மாமி புட்டுத் தீத்தியபடியே “அது யார் பிள்ளை” என்று கேட்கிறாள். வைகறை அவளுடைய கையை விறுக் என்று தட்டிவிட்டு எழுந்து போகிறாள். “யாரடி அது” என்று கேட்கின்ற சிவந்தி அக்காவை கண்களில் ஏளனம் கொப்பளிக்கப் பார்க்கிறாள். “யாரம்மா..” அப்பா கேட்கிறார். அழுகை வருகிறது. உதடுகளைத் தைத்துக் கொள்கிறாள். ரமணி அக்கா வற்புறுத்தவில்லை. அடுத்தநாள் க்ளினிக்கிற்கு வைகறையோடு புறப்பட்டுவிட்டாள். “தெரிஞ்ச பிள்ளைதான்” என்று தன்னை அறிமுகப்படுத்தினாள். தாதி ‘இந்தக் காலத்துப் பிள்ளைகள்..’ என்று எதையோ இழுக்கவும் அதை மறித்து “காதலிச்சுத்தான் கல்யாணம் கட்டினவள். என்ன செய்ய.. கடவுளின்ரை அனுக்கிரகம் இல்லை” என்று துயரத்தோடு சொன்னாள். வைகறை அவளைச் சரேலென்று திரும்பிப் பார்த்தாள். தாதி கண்களைச் சுருக்கினாள். “அதைத்தான் நானும் கேட்டனான். இவ தெரியாதெண்டு சொன்னா” என்றாள். “புருசன் இயக்கத்தில இருந்தவர் எண்டதை எப்பிடி எல்லாரிட்டையும் சொல்லுறது.. எந்தப் புத்தில எந்தப் பாம்பு இருக்குமோ..” அதற்குப் பிறகு தாதி எதுவும் பேசவில்லை. பரிசோதனைகளை முடித்து இயல்பாக இருக்கிறது என்றாள். சில சத்துக் குளிகைகளை வழங்கினாள். க்ளினிக்கிற்கான அடுத்த திகதியைக் குறித்துக் கொடுத்தாள். வரும் வழியில் “ஏன் அப்பிடிச் சொன்னீங்கள்” என்று வைகறை ரமணி அக்காவைக் கேட்கவில்லை. ‘அப்படிச் சொன்னதுக்கு நன்றி சொல்லுவமோ’ என்று தோன்றியது. பிறகு அதையும் சொல்லவில்லை. எதையுமே பேசாமலிருக்க அந்தரமாயுமிருந்தது. ரமணி அக்கா அதை சொற்ப நேரத்திற்கு உடைத்தாள். “என்ர மூண்டாவது பெட்டையின்ரை முப்பத்தொண்டுக்குத் தகப்பன் இல்லை. முதலே செத்திட்டார். ஆனா அவளை யாரும் பதில் தெரியாத ஒரு கேள்வியைக் கேட்டு அவமானப்படுத்த ஏலாது. உன்ர வயித்தில தங்கியிருக்கிறது சிங்களமோ என்னவோ, அது ஒரு மனிச உயிர். யாராலும் நக்கலடிக்க ஏலாத ஒரு மனுசப்பிறப்பா நாளைக்கு அது நடந்து திரியவேணும் என்று நான் நினைச்சன். பிழையெண்டால் இப்பவே அதைக் கொலை செய்” முதுகு வடத்திலிருந்து எதையோ பிடுங்கி எடுக்கிற மாதிரி சுளீர் என்றது. வைகறை போன வேகத்தில் உடுப்புக்களை அடைந்திருந்த இரண்டு பைகளையும் கொட்டிக்கிளறி அடியில் கிடந்த கதிர் அண்ணையின் படத்தை எடுத்தாள். தேகம் நடுங்கியது. விறுவிறென்று முகாமிலிருந்த ஒபிஸிற்குப் போனாள். கொமான்டரைச் சந்திக்க வேண்டும் என்றாள். “சேர்.. நான் இப்ப கர்ப்பமா இருக்கிறன். இவர்தான் என்ரை கணவர். இயக்கத்தில இருந்தவர். நாங்கள் கலியாணம் கட்டி ஆறு மாசம்தான் ஆகியிருந்தது. பிளேனடியில செத்திட்டார். இதை நான் முதலில் பயத்தில சொல்லவில்லை. மன்னிக்க வேணும்” படபடவென்று ஒப்புவித்தாள். உடம்பின் நடுக்கம் குறைந்தது போலிருந்தது. கொமான்டர் விபரங்களை எழுதித் தரச்சொல்லி தாளை நீட்டினான். கதிர் அண்ணையும் பூரணக் கிழவியும் கட்டிப்பிடித்தபடி நின்ற படத்தை தரச்சொல்லி வாங்கிக்கொண்டான். ஐந்தாவது நாள் பூரணக் கிழவியோடு ஆமிக் கொமான்டர் கூடாரத்திற்கு வந்தான். 000 பூரணக் கிழவி ஒரு மாம்பழம் வதங்கியதைப்போல சுருங்கியிருந்தாள் என்றாள். அவளுக்குக் கூன் விழுந்திருந்தது. பழுப்பு நிறக் கல் பதித்த மூக்குத்தியைக் காணவில்லை. அவளுடைய கண்கள் மட்டும் மின்னின என்றாள். அருகிலேயே நின்ற கொமான்டர் “ஒங்க மாமி பூரணத்தை நான் கண்டுபிடிச்சிக் கொண்டு வந்திருக்கிறது” என்று சிரித்தான். தலை விறைத்தது என்றாள். கொமான்டர் “மருமகளிட்ட போங்க” என்றான். கிழவி அந்தச் சொல்லிற்காகக் காத்திருந்தவளைப்போல ஓடிவந்து தோளை இறுக்கிக் கட்டிப்பிடித்தாள். அவளுக்குப் பூஞ்சையான பாரமற்ற தேகம். ஒரு குழந்தைப்பிள்ளையைத் தாங்கிக்கொள்வதைப் போலிருந்தது. கைகளால் முகத்தை ஏந்தி மாறி மாறிக் கொஞ்சத் தொடங்கினாள். கன்னத்தில் பதிந்த ஈரத்தை இலேசான அருவருப்புடன் துடைத்தேன் என்றாள். கிழவிக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. விம்மினாள். “வம்சம் அழியாமல் காத்த என்ர ஆத்தை” என்று காதுக்குள் முணுமுணுத்தாள். நொய்ந்த மார்போடு கட்டியணைத்தாள். சரேலென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். கண்ணீர் வழிகிற முகத்தை நிமிர்த்தி ஆசையோடு பார்த்தாள் என்றாள். 000 கிழவி நடுங்குகிற விரல்களால் வைகறையின் இளஞ்சூடான வயிற்றைத் தொட்டுத் தவிப்போடு தடவினாள். “என்ரை முத்தான முத்து வளர்கின்ற மூலமே” என்ற பெருங்குரல் உடைந்து காட்டு வெக்கையில் வழிந்தது. பூரணம் சின்னதாக மேடிட்ட அந்த வயிற்றைக் கையெடுத்துக் கும்பிடலானாள். http://sayanthan.com/?p=1367

ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்….

1 year 5 months ago
ஓவியர் கருணா கருணா, ஈழத்தின் பிரபல்யம் வாய்ந்த ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவன். அவர் எப்போதும் ஓவியங்களோடும், புகைப்படங்களோடும், வரைகலைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தவர். கருணாவை எப்போது முதன்முதலில் சந்தித்தேன் என இப்போது ஞாபகமில்லை. ஆனால் அவரது அழைப்பின்பேரில் அவரது பழைய அலுவலகம் இருந்த டொன் மில்ஸிற்குச் சில தடவைகள் சென்றிருக்கின்றேன். அப்போதுதான் அவர் இத்தாலிக்குப் போய்விட்டு வந்து அங்கு எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக விபரித்துக்கொண்டிருந்தார். பிறகு எனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்குக் கருணாவின் ஓவியத்தைப் பாவிக்க விரும்பி அவரிடம் சென்றிருக்கின்றேன். அவர் சில ஓவியங்களை மனமுவந்து தந்து எதையும் பாவித்துக்கொள்ளலாம் என அனுமதி தந்திருந்தார். எனினும் அதை அச்சாக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் நிகழாமல் போயிருந்தது. கருணாவை எங்கு சந்தித்தாலும் புறச்சூழல் எவ்வாறு இருந்தாலும் ஓவியங்கள்/புகைப்படங்கள்/புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உடனேயே உரையாடத் தொடங்கிவிடுவார். ஆம்ஸ்டடாம் போய் வான்கோவின் ஓவியங்களைப் பார்த்துவிட்டு வந்து நான் ஒரு கட்டுரையாக 'அம்ருதா'வில் எழுதியபோது மனம் மிகுந்து பாராட்டியிருக்கின்றார். நம்மிடையே எவரும் ஓவியங்களையோ, அச்சுப் பதிப்புக்களில் வடிவமைப்புக்கள் பற்றியோ அவ்வளவு எழுவதில்லை, உங்களைப் போன்றோர் இவை பற்றி அடிக்கடி எழுதவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு ஓவியங்களை/மியூசியங்களைத் தேடிப் பார்ப்பதில் ஆர்வமிருந்தாலும், அவற்றை எழுதிப் பார்க்கவேண்டுமென்கின்ற உற்சாகத்தைத் தந்தவர்களில் ஒருவராக கருணாவைச் சொல்லவேண்டும். கருணாவின் சடுதியான மரணம் அதிர்ச்சியானது மட்டுமில்லை இந்த வயதிற்குள் நிகழ்ந்திருக்கக்கூடாதெனவே மனம் அவாவுகிறது. நம்மிடையே இவ்வாறான ஓவியங்கள்/புகைப்படங்கள் போன்றவற்றில் உயரங்கள் மேலேறிப்போனவர்களும், அவற்றின் மீது கறானான பிடிவாதங்கள் உடையவர்களும் மிக அரிதாகவே இருப்பார்கள். கருணாவைப் போலத் திறமையின் ஆழத்துக்குச் செல்வது எல்லோராலும் இயல்வதுமில்லை. அவரைப் போல ஒருவர் மறையும்போது அந்த இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான விடயமுமல்ல. இவ்வாறான திறமைகள் கனிந்து வர நீண்ட காலம் எடுக்கும், மேலும் இவை அடிக்கடி நிகழ்ந்துவிடுபவையும் அல்ல.அவரை ஒருவகையில் கலை மனதோடு கரைந்துகொண்ட குழந்தை எனச் சொல்லலாம். அநேகவேளைகளில் அவர் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு யோசித்ததுமில்லை. ஏ.ஜே கனரட்னவையைப் போல, பிரமிளைப் போல கருணா அண்ணாவும் தனக்கான உலகில் ஓவியங்களோடும், புகைப்படங்களோடும், வடிவமைப்புக்களோடும் தனித்து வாழ்ந்தவர். கனடாவில் அவரின் வடிவமைப்புப் பங்களிப்பின்றி வந்த சிற்றிதழ்கள்/பத்திரிகைகள் என்பவை மிகக் குறைவென்றே சொல்லவேண்டும். கருணா புகைப்படங்களை அற்புதமாக எடுப்பார். ஆனால் அவரிடமிருந்து புகைப்படங்களை பெற்றுக்கொள்வதுதான் கடினமென்று நண்பர்களிடையே பிரபல்யம் வாய்ந்த கதைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு நிறையப் புகைப்படங்களை அனுப்பியிருக்கின்றார். நான் முதன்முதலாக நாடகமொன்றை எழுதி நெறியாள்கை செய்தபோது, பயிற்சி நடந்த ஒருநாளில் தானாகவே அங்கே வந்து புகைப்படங்களை எடுத்து, நாங்கள் கேட்காமலே போஸ்டர்களைக் கூட எங்களுக்காக வடிவமைத்துத் தந்தவர்.தனது படைப்புக்கள் பேசட்டும், தான் மறைவில் நிற்போமென தன்னை அநேகம் வெளிப்படுத்தாத ஒருவர் கருணா என்பதாக எப்போதும் அவரை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்றேன். (நன்றி: 'அம்ருதா' ‍ சித்திரை, 2019) http://djthamilan.blogspot.com/2019/05/blog-post.html?m=1

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்

1 year 5 months ago
இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல் அமெரிக்க இலங்கை உயர்மட்டக்குழுவினர் பங்கேற்பு - இந்தியாவுடனும் உரையாடல் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளது. நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில் அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா போன்ற மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன. வோஷிங்கடன் டிசி (Washington, DC,) நகரில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்குகொள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ற இந்தோ - பசுபிக் மூலோபாயம், இலங்கை, ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், இலங்கையின் உள்ளக அமைதிக்கான உதவி, ஏனயை நாடுகளின் இரணுவப் பயன்பாடுகள், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆற்றல்களை மேம்படுத்தல் போன்ற விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளன. அத்தோடு பிராந்தியப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது போன்றவை உட்பட பல்வேறு விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்படவுள்ளன. இதன் பின்னர் மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்யவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அங்கு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான இலங்கையின் நிலை தொடர்பாக உரையாடவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அமெரிக்காவின் ஏற்பாட்டிலேயே அமைச்சர் திலக் மாரப்பன மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்வதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, இந்தப் பயணத்துக்கு முன்னதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் திலக் மாரப்பனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் சந்தித்து உரையாடுவரெனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லை இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்துத் தமது நிலைகளை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து அமெரிக்கா, இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் பல நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேதான் சென்ற 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் நடத்தினர். தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல்நாள் அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நின்றன. ஆனால் தாக்குதலையடுத்து இலங்கைப் படைகளுடனான கூட்டப் பயிற்சிகளை நிறுத்திவிட்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று விட்டன. அத்துடன் தமிழர் தாயகமான முல்லைத்தீவுக் கடலில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலை வரையான அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வை அமெரிக்கா ஆரம்பித்திருந்தது. எனவே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கருதப்பட்டது. அத்துடன் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலகுவாக ஒன்று கூடும் நிலத்தொடர்புள்ள பிரதேசங்கள் குறிப்பாக சிரியாவில் உள்ள அவர்களின் பிரதான முகாம்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவே அமெரிக்கா மார்தட்டியிருந்தது. ஆகவே நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில், அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாகவே அவசர அவசரமாகக் கொழும்புக்கு வந்து தற்கொலைத் தா்க்குதல் குறித்து விசாரணை நடத்திய மேற்குலக நாடுகளின் இராணுவப் புலனாய்வாளர்கள், தற்போது அமெரிக்காவில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதாக அவதானிகள் கூறுகின்றனர். அமெரிக்காவில் இலங்கையுடன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் சீனா இலங்கை முப்படைகளுக்கும் தேவையான பல மில்லியன்கள் பெறுமதியான அதிநவீன வாகனங்களை வழங்கியுள்ளது. அதேவேளை, இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லையெனவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=957&fbclid=IwAR3dnlJNSYLgsm6figxdJQR7DXUP704chUtt3ptqGmwP9Y8IPxpEGk-btDU

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து
இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்
அமெரிக்க இலங்கை உயர்மட்டக்குழுவினர் பங்கேற்பு - இந்தியாவுடனும் உரையாடல்
 
main photomain photo
  •  
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 
 
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளது.

நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில் அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா போன்ற மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன.

வோஷிங்கடன் டிசி (Washington, DC,) நகரில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்குகொள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ற இந்தோ - பசுபிக் மூலோபாயம், இலங்கை, ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், இலங்கையின் உள்ளக அமைதிக்கான உதவி, ஏனயை நாடுகளின் இரணுவப் பயன்பாடுகள், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆற்றல்களை மேம்படுத்தல் போன்ற விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளன.

அத்தோடு பிராந்தியப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது போன்றவை உட்பட பல்வேறு விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்படவுள்ளன.

இதன் பின்னர் மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்யவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அங்கு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான இலங்கையின் நிலை தொடர்பாக உரையாடவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்காவின் ஏற்பாட்டிலேயே அமைச்சர் திலக் மாரப்பன மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்வதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இந்தப் பயணத்துக்கு முன்னதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் திலக் மாரப்பனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் சந்தித்து உரையாடுவரெனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லை

இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்துத் தமது நிலைகளை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து அமெரிக்கா, இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் பல நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேதான் சென்ற 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் நடத்தினர்.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல்நாள் அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நின்றன. ஆனால் தாக்குதலையடுத்து இலங்கைப் படைகளுடனான கூட்டப் பயிற்சிகளை நிறுத்திவிட்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று விட்டன.

அத்துடன் தமிழர் தாயகமான முல்லைத்தீவுக் கடலில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலை வரையான அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வை அமெரிக்கா ஆரம்பித்திருந்தது.

எனவே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கருதப்பட்டது. அத்துடன் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலகுவாக ஒன்று கூடும் நிலத்தொடர்புள்ள பிரதேசங்கள் குறிப்பாக சிரியாவில் உள்ள அவர்களின் பிரதான முகாம்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவே அமெரிக்கா மார்தட்டியிருந்தது.

ஆகவே நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில், அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அவசர அவசரமாகக் கொழும்புக்கு வந்து தற்கொலைத் தா்க்குதல் குறித்து விசாரணை நடத்திய மேற்குலக நாடுகளின் இராணுவப் புலனாய்வாளர்கள், தற்போது அமெரிக்காவில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் இலங்கையுடன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் சீனா இலங்கை முப்படைகளுக்கும் தேவையான பல மில்லியன்கள் பெறுமதியான அதிநவீன வாகனங்களை வழங்கியுள்ளது.

அதேவேளை, இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லையெனவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=957&fbclid=IwAR3dnlJNSYLgsm6figxdJQR7DXUP704chUtt3ptqGmwP9Y8IPxpEGk-btDU

மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார்

1 year 5 months ago
மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார் நெல்லை Published : 10 May 2019 10:29 IST Updated : 10 May 2019 10:30 IST சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944-ம் ஆண்டு தோப்பில் முஹம்மது மீரான் பிறந்தார். நாவல் மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என படைப்பில் தனித்துவம் கொண்டவர். கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான் என்றால் அது மிகையாகாது. தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவராகக் கருதப்படும் மீரான், கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’, ‘கூனன் தோப்பு’ ஆகியவை மீரானின் சாதனைப் படைப்புகள். இவரது முதல் சிறுகதை வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ளன. மீரானின் சாய்வு நாற்காலி என்ற நாவல், 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் கிட்டத்தட்ட 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். மீரான் சமீபத்தில் எழுதி வெளியான ‘குடியேற்றம்’ நாவல் தவிர மற்ற எல்லா நாவல்களுக்கும் விருதுகள் கிடைத்தன. கிணறு குறித்து ஒரு நாவலை எழுதி வருவதாக அவர் சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தோப்பில் முஹம்மது மீரான் இன்று அதிகாலை திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் காலமானார். அவரது உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் மீரான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மீரானுக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும் ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது என்ற மகன்களும் உள்ளனர். தமிழின் மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீரான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். https://tamil.thehindu.com/tamilnadu/article27088851.ece

தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈ

1 year 5 months ago
😄😎நேரடியா இல்லையாம்டாப்பா ....,மறைமுகமாகவாம் அப்ப இது அவையளின்ட கெரில்லா தாக்குதல் என்று சொல்லுறார்

தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள்

Lieutenant-General-Mahesh-Senanayake-300இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய  பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நேற்று செவ்வி ஒன்றை அளித்துள்ள அவர்,

“குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்று விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானது என்பதைக் கண்டறிவதில் அதிகாரிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை விசாரணைகள் பல பகுதிகளுக்கு அப்பால் செல்லவில்லை, எனவே நாம் சூழ்நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இது கட்டுப்படுத்தக் கூடியது, இதனை அடக்கி விட முடியும்.

இன்னொரு சுற்றுத் தாக்குதல்களை நடத்த விடாமல், வழமை நிலையை கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தாக்குதலில் அனைத்துலக தொடர்பு உள்ளது. எனவே நாங்கள் அந்த பாதையிலேயே பணியாற்றுகிறோம்.

நிச்சயமாக இதற்குப் பின்னார் ஐ.எஸ் தொடர்பு உள்ளது. அதற்காக ஐஎஸ் அமைப்பு நேரடியாகத் தொடுத்த தாக்குதல் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

சதி, தாக்குதல் திட்டம், நிதியுதவிகள் மற்றும் வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டனவா என்பது உள்ளிட்ட வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து, விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தை மீண்டும் முகாம்களுக்குள் திருப்பி அழைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்க, தொலைத்தொடர்பு கருவிகள், கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆகிய நாடுகள், விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு கட்டளை வழங்கி, கட்டுப்படுத்துவராக சஹ்ரானே செயற்பட்டுள்ளார்.

குண்டுகளுக்கு பெரும்பாலும் உள்ளூர் வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து கிடைத்திருக்கக் கூடும்.

சில சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக, கேரளா, பெங்களூர, காஷ்மீர் பகுதிகளுக்கு பயிற்சிக்காக சென்றுள்ளனர். அவர்களின் பயணங்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதில் விசாரணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/05/11/news/37879

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி

1 year 5 months ago
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி Maatram Translation on May 9, 2019 பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். “எனக்கு எதிராக முன்னர் மதநிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது; அந்த நிலையில், ஒன்று நான் கொல்லப்பட முடியும் அல்லது சிறையில் அடைக்கப்பட முடியும் என்ற அச்சத்தில் முன்னரேயே நான் எனது வீட்டை விட்டு வெளியேறியிருந்தேன். அப்பொழுது நான் தூக்கமின்றி தவித்தேன்; பட்டினி கிடந்தேன்; எனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் கடும் அச்சத்தில் இருந்தேன். ஒரு சில மணித்தியாலங்களில் அனைத்தையும் இழந்திருந்தேன். நானும், எனது மனைவியும் கடும் பயத்திலும், அதிர்ச்சியிலும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இலங்கைக்கு வந்தோம். நண்பர்களின் குடும்பங்கள், உறவினர்கள், எமது தொழில்கள், எமது வீடு வாசல்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாங்கள் இங்கு வந்தோம். ஆனால், இப்பொழுது இலங்கையும் அதே மாதிரியான ஒரு நாடாகியுள்ளது. நாங்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து இப்பொழுது பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளோம். இன்று பகல் எமது வீட்டுக்கு வெளியில் ஒரு கும்பல் கூடி, ஒரு சிலர் மிக மூர்க்கத்தனமான விதத்தில் எமது வீட்டுக் கதவை உதைத்தார்கள். ஒரு நபர் என்னைப் பிடித்துத் தள்ளியதுடன், எனது கன்னத்தில் அறைந்து, என்னுடைய சட்டை கொலறை பிடித்து என்னை இழுத்தெடுத்தார். அவருக்கு பின்னால் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நின்றார்கள். அவர்கள் இப்படிச் சொன்னார்கள்: நீங்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டும்” – 2019 ஏப்ரல் 27ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நின்றிருக்கும் பாகிஸ்தான் அகதி. நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த பாகிஸ்தான் நபர் ஒருவர் தனது வீட்டிற்கு ஒரு வன்முறைக் கும்பல் எவ்வாறு வந்தது என்பதனை என்னிடம் விளக்கிக் கூறினார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஒரு பிள்ளைக்கு 4 வயது, இரண்டாவது பிள்ளைக்கு 2 ½ வயது. அந்தக் கும்பல் அவரை உதைத்து, கொல்லப்போவதாக அச்சுறுத்தியது. அதனை அடுத்து, அந்த வீட்டுச் சொந்தக்காரர் அவர் அந்த வீட்டிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தித்தார். நீர்கொழும்பு லூயிஸ் பிளேசில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு ஒரு வன்முறைக் கும்பல் எவ்வாறு வந்தது என்ற விவரத்தை ஒரு பாகிஸ்தான் பெண்மணி எடுத்துக்கூறினார். உடனடியாக அவர்கள் அந்த வீட்டை வீட்டு வெளியேறாது விட்டால் அவருடைய குடும்பத்தை அவர்கள் தாக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் தாம் அணிந்திருந்த ஆடைகளுடன் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது; அல்லது ஒரு சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டி நேரிட்டது. ஆடைகள், மருந்து வகைள் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் முக்கியமான ஆவணங்கள் மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் என்பவற்றை அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. இலங்கைக்கு அகதிகளாக வந்தவர்கள் இப்பொழுது இலங்கைக்குள்ளே அகதிகளாகியுள்ளார்கள் உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களின் போது நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பிதேசங்களில் வசித்து வந்த அகதிகளிடமிருந்து நான் நிறையக் கதைகளை கேட்டறிந்து கொண்டேன். அகதிகள் குடும்பங்களை தமது வீடுகளில் வைத்திருந்தால் வீடுகளை நிர்மூலமாக்கப் போவதாக வன்முறைக் கும்பல்கள் தம்மை அச்சுறுத்தியதாக வீட்டுச் சொந்தக்காரர்கள் சொன்னார்கள். இதன் விளைவாக, சுமார் 1200 அகதிகளும், தஞ்சம் கோருபவர்களும் (“தஞ்சம் கோருபவர்கள்” எனக் குறிப்பிடப்படுபவர்கள் தமது அகதி விண்ணப்பங்கள் தொடர்பாக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாத ஆட்கள் ஆவார்கள்) மூன்று தற்காலிக முகாம்களில் (இரண்டு அகமதியா பள்ளிவாசல்களிலும், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும்) இப்பொழுது தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் மோசமான நிலைமைகளின் கீழேயே அவர்கள் அந்த இடங்களில் தங்கியிருக்க நேரிட்டுள்ளது. இங்கு கழிப்பறை வசதிகள் மிகக் குறைவாக இருந்து வருவதுடன், தண்ணீரும் போதியளவில் கிடைப்பதில்லை. இடப் பற்றாக்குறை காரணமாக பெருந்தொகையானவர்கள் அமர்ந்தவாறே நித்திரை கொள்ள வேண்டியுள்ளது. ஆட்கள் இரவில் தங்குவதற்கான வசதிகளை கொண்டிராத இரண்டு பள்ளிவாசல்களையும் பொருத்தவரையில் நிலைமை மிக மோசமானதாகும். கடந்த சில நாட்களில் பெய்துள்ள மழை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த இரண்டு பள்ளிவாசல்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கிய ஒரு சில உள்ளூர்வாசிகள் சுமார் 700 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய அகதிகள் முகாமிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சுமார் 40 பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் 175 பேர் சுவர்கள் இல்லாத கராஜ் ஒன்றின் தரையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். பொலிஸ் நிலையத்தில் தங்கி நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் ஒரு சில கழிப்பறைகளையும் இந்த அகதிகள் பயன்படுத்தி வருகின்றனர். பொலிஸார் அவர்களுக்கு உதவிகளை வழங்கியிருப்பதுடன், அவர்களை கருணையுடனும், பெருந்தன்மையுடனும் நடத்தியுள்ளார்கள். வரையறுக்கப்பட்ட வசதிகளை அவர்கள் இந்த அகதிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால், அகதிகளை பொறுத்தவரையிலும், அதேபோல பொலிஸாரை பொறுத்தவரையிலும் நிலைமை சகிக்க முடியாததாக இருந்து வருகின்றது. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை சிறந்த வசதிகளுடன் கூடிய பொருத்தமான இடம் ஒன்றில் தங்கவைக்குமாறு கோரி பல்வேறு அமைப்புக்களுக்கும், தேவாலயங்களுக்கும் மன்றாட்டத்துடன் கூடிய வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன. ஒரு சிலர் இந்த அகதிகளுக்கென தமது கதவுகளை திறப்பதற்கு பயப்பட்டார்கள். ஆனால், ஒரு சிலர் தைரியத்துடன் அதற்கென முன்வந்தார்கள். எவ்வாறிருப்பினும், பொலிஸ் நிலையத்திலிருந்து அவர்களை அகற்றி, வேறு ஒரு இடத்தில் தங்க வைப்பதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்த வன்முறை மற்றும் அச்சுறுத்தல் என்பன காரணமாக தோல்வியடைந்துள்ளன. இந்த அகதிகளில் ஒரு குழுவினர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, பௌத்த பிக்குகளின் தலைமையிலான உள்ளூர் குழுக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பொலிஸாரினால் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாதிருந்ததுடன், அந்த அகதிகள் குழுவினர் மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டார்கள். பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு மற்றொரு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தலைமையில் எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன. அந்தப் பேருந்து திருப்பப்பட்டு, அதில் இருந்தவர்கள் மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டார்கள். மேலும இரு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த கொழும்பு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கென இந்த அகதிகள் பேருந்துகளில் ஏற்றப்பட்டிருந்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்களை வழங்க முடியாத நிலைமையில் இருந்து வந்த காரணத்தினால் இந்த இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன. கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் மீள இடம்பெயர நேரிட்ட நிலைமை உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து அகதிகள் கடும் எதிர்ப்புக்களையும், வெளியேற்றங்களையும் எதிர்கொண்டு வரும் ஒரேயொரு பிரதேசமாக நீர்கொழும்பு மட்டும் இருந்து வரவில்லை. கண்டிக்கு அருகில் வீடொன்றில் வசித்து வந்த நான்கு ஆப்கானிஸ்தான் அகதிகளும் இதே மாதிரியான ஒரு நிலையை எதிர்கொண்டார்கள். கடந்த வாரத்தில் உள்ளூர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனைகளை அடுத்து வீட்டு உரிமையாளரினால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், பொலிஸ் சோதனைகளின் போது எத்தகைய சந்தேகத்திற்குரிய பொருட்களும் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனையடுத்து அவர்கள் சென்ற விருந்தினர் விடுதியும் கூட இப்பொழுது அவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றது. தெஹிவலையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரத்மலானையில் வசித்து வந்த மற்றொரு ஆப்கான் அகதி அயலவர் ஒருவரினால் “எதிரி” என அழைக்கப்பட்டதுடன், இந்த அகதியை தாக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியிருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் தாம் வாடகைக்கு இருக்கும் அந்த வீட்டிற்குள் அச்சத்துடன் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். மொரட்டுவயில் தனது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் ஓர் ஆப்கான் அகதிக் குடும்பம், அவர்களுடைய அகதி ஆவணங்கள் தொடர்பாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனை அடுத்து, அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு வீட்டு உரிமையாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பலர் இலங்கையில் வசிப்பதற்கான சட்டபூர்வமான ஆவணங்களை தம்வசம் வைத்திருந்த போதிலும், பல விருந்தினர் விடுதிகள் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, முஸ்லிம் வீட்டுச் சொந்தக்காரர்கள் இது குறித்து பெருமளவுக்கு அச்சமடைந்துள்ளார்கள். உள்ளூர் மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் தூண்டப்பட முடியும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள். பாணந்துறையில் தங்கியிருக்கும் ஓர் ஆப்கான் அகதி இப்படிக் கூறினார்: “முன்னர் ஆட்கள் எம்மைப் பார்த்து புன்னகை செய்தார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள் எம்மை சந்தேகத்துடனும், பகைமை உணர்வுடனும் பார்க்கின்றார்கள். அதன் காரணமாக வெளியில் செல்வதற்கு எமக்குப் பயமாக உள்ளது. ஒரு அறையை வாடகைக்கு எடுப்பதற்கு நான் முயற்சித்த பொழுது, அந்த விருந்தினர் விடுதியின் உரிமையாளர் ‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள்’ என உரத்துச் சத்தமிட்டார். வேறு ஒரு விருந்தினர் விடுதிக்கு செல்வதற்கு நான் முயற்சித்தேன். ஆனால், எவரும் எனக்கு தங்குமிட வசதியை பெற்றுத் தருவதற்கு விரும்பவில்லை.” இந்த அகதிகள் யார்? இந்த அகதிகளும், தஞ்சம் கோருபவர்களும் தமது சொந்த நாடுகளில் எதிர்கொண்ட துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்புக் கோரி இலங்கைக்கு வந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் ஒரு சிலர் ஹசாரா இன சமூகத்தைச் சேர்ந்த அஹமதியா மற்றும் ஷியா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள். ஏனையவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தமது நாட்டில் முஸ்லிம் குழுக்களின் துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் ஆவார்கள். தீவிரவாதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் என்பவற்றினால் துன்பங்களை அனுபவித்த சமய சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்து வருகின்றார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக அரசிலிருந்து அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புக்களும் கிடைக்கவில்லை அல்லது மிகச் சிறு அளவிலான பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது. இலங்கையில் இருக்கும் இந்த அகதிகள் பாகிஸ்தான் மதநிந்தனைச் சட்டத்தின் கீழ் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். பாகிஸ்தானில் மதநிந்தனை மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இருந்து வருகின்றது. துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புளொக் செயற்பாட்டாளர்கள், நாத்திகவாதிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒரு சிலரும் இலங்கையில் தஞ்சம் கோரியிருந்தார்கள். இலங்கை 1951ஆம் ஆண்டின் அகதிகள் சமவாயத்திற்கு கையொப்பமிட்டிருக்கும் ஒரு நாடாக இருந்து வரவில்லை. அதன் காரணமாக, ஆட்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பான தேசிய நடைமுறைகளை அது கொண்டிருக்கவில்லை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் (UNHCR) இலங்கை அரசாங்கத்துடன் 2005ஆம் ஆண்டில் செய்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தஞ்சம் கோரும் ஆட்களை அந்த அலுவலகம் இங்கு பதிவு செய்வதுடன், அவர்கள் தொடர்பாக அகதி அந்தஸ்தை நிர்ணயிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், ஏனைய நாடுகளில் நிரந்தரமாக குடியேறக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் இலங்கையில் தற்காலிகமாக வசிப்பதற்கென இந்த அகதிகளை வரவேற்றுள்ளன. 2019 மார்ச் 31 இல் உள்ளவாறு, ஏனைய நாடுகளில் குடியேறுவதற்காக காத்திருக்கும் 851 ஆட்கள் இலங்கையில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர். 819 ஆட்களின் அகதி விண்ணப்பங்கள் தொடர்பாக (தஞ்சம் கோருபவர்கள்) இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இவர்கள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்து வருவதுடன், பெரும்பான்மையாக 1341 ஆட்கள் பாகிஸ்தானியர்களாகவும், 201 ஆட்கள் ஆப்கானிஸ்தானைச் சேரந்தவர்களாகவும் உள்ளனர். அதேபோல கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான தமது விண்ணப்பங்கள் ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பெருந்தொகையானவர்களும் இருக்கின்றார்கள். 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தின்போது 20 அகதிகள் நிரந்தர மீள்குடியேற்றத்திற்காக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்கள். ஒரு நீண்ட விண்ணப்ப மீளாய்வுச் செயன்முறை இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பத்தை அனுப்பி வைத்தல், நேர்காணல் மற்றும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறித்து அறிவித்தல் கிடைத்தல் என்பவற்றுக்கிடையில் பல வருட கால இடைவெளி காணப்படுகிறது. அதன் விளைவாக தஞ்சம் கோரும் ஆட்களுக்கு மத்தியில் உயர் அளவிலான நிச்சயமற்ற நிலை மற்றும் அச்ச உணர்வு என்பன நிலவி வருகின்றன. தற்போதைய நெருக்கடி எதிர்பாராத ஒரு நெருக்கடியாக இருந்து வருவதுடன், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இந்த அகதிகளை மிகவும் பலவீனமான நிலைமையில் வைத்திருப்பதுடன், அவர்களுடைய நிர்க்கதி நிலையை மேலும் தீவிரப் படுத்தியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் இலங்கையில் அகதிகளின் வாழ்க்கை அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ஆளொருவருக்கு ரூ. 10,000 தொகையை கொடுப்பனவாக வழங்குகின்றது அல்லது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ரூ. 22,000 வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை இலங்கையில் கௌரவமான விதத்தில் வாழ்க்கை நடத்துவதற்கு, தங்குமிட வசதி மற்றும் உணவு என்பவற்றுக்கான செலவுகளை கூட ஈடுசெய்வதற்கு போதியதாக இருந்து வரவில்லை. தஞ்சம் கோருபவர்களுக்கு எத்தகைய கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தமது செலவுகளை தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில முஸ்லிம் குழுக்கள், கிறிஸ்தவ தேவாலய குழுக்கள் மற்றும் அரச சாரா அமைப்புக்கள் என்பன அவர்களுக்கு கல்வி, தங்குமிட வசதி, சுகாதார பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஆதரவளித்து வந்துள்ளன. ஆனால், இந்த உதவிகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து வருவதுடன், ஒரு சிலர் மட்டுமே அவற்றிலிருந்து பயனடைந்துள்ளார்கள். தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரை பொறுத்தவரையில் வீடமைப்பு, உணவு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு அல்லது சட்ட ரீதியான வேலை வாய்ப்பு என்பவற்றுக்கான உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்துவதில்லை. அரசாங்கத்தினால் இத்தகையவர்களுக்கு நிரந்தர தங்குமிட வசதிகளோ அல்லது இடைத்தங்கல் வசதிகளோ வழங்கப்படுவதில்லை. உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பு அல்லது சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்பு போன்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் அவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை நியாயமான விதத்திலும், எளிதாக ஒரு சிறு மேலதிகச் செலவுடன் செய்யக்கூடியதாக இருந்து வந்த போதிலும், இது இடம்பெறுவதில்லை. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு அரசாங்க வைத்தியசாலைகளிலும், மருந்தகங்களிலும் கிடைக்கும் சிகிச்சைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பன அக்கறை மற்றும் கருணை என்பவற்றின் அடிப்படையில் பெருமளவுக்கு குறைபாடுகளை கொண்டவையாக இருந்து வருகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளின் அக்கறையின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன், மருத்துவப் பராமரிப்பை நாடும் தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் தமது அடிப்படை உரிமையை அனுபவிப்பதற்கு பதிலாக, ஏதோ ஒரு சலுகையை கோரி நிற்பவர்கள் போல உணர நேரிடுகின்றது. கொடுமைகள், வன்முறை மற்றும் பாரபட்சம் என்பவற்றை நேரடியாக அனுபவித்து, அவற்றின் காரணமாக தமது வீடு வாசல்களிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் எப்பொழுதும் தாம் பிரிந்து வந்திருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளார்கள். தமக்கு பரிச்சயமில்லாத, வரவேற்பார் எவரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ வேண்டி நேரிடுகின்றது. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு உளநலச் சேவைகளோ, உள சமூகப் பராமரிப்பு வசதிகளோ கிடைப்பதில்லை. இலங்கையின் அரசியல் யாப்பு “அனைத்து மட்டங்களிலும் முழுமையான கல்வியை சமத்துவமான விதத்தில் அணுகுவதற்கான உரிமையை அனைத்து ஆட்களுக்கும்” உத்தரவாதப்படுத்திய போதிலும், அகதிகளின் மற்றும் தஞ்சம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை. 06-10 வயதுப் பிரிவைச் சேர்ந்த அகதிப் பிள்ளைகள் UNHCR அனுசரணைக்கு ஊடாக பாடசாலைகளை அணுக முடிகின்றது. ஆனால், இரண்டாம் நிலை கல்வி வயதுப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைகள் முறைசார் கல்வியை அணுக முடியாத நிலை காணப்படுகின்றது. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அரசாங்கத்தின் பெருந்தொகையான தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி முறைகளுக்குள்ளும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அவை இந்தப் பிள்ளைகள் தொழில் திறன்களை கற்று, அவற்றை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய முறைகளாகும். அதன் ஊடாக அவர்கள் இந்தத் திறன்களை பயன்படுத்தி, தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதுடன், இலங்கையில் சுயாதீனமாக வாழக்கூடிய ஒரு நிலைமையும் ஏற்பட முடியும். அகதிகளை பார்த்து அச்சப்படுவது ஏன்? வட மாகாண மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் இந்த அகதிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு முன்வந்த பொழுது, இந்த நெருக்கடிக்கான ஒரு தற்காலிக நிவாரணம் குறித்த நம்பிக்கை துளிர்த்தது. இந்த விடயம் ஜனாதிபதி அவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் கூட சுமார் 1200 அகதிகள் மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். வட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் வடக்கிற்கு இந்த அகதிகளை அழைத்து வரும் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரிய வருகின்றது. ஆனால், வட புலத்தைச் சேர்ந்த ஏனைய தமிழ் அரசியல் வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமய குருமார் ஆகியோர் இந்த அகதிகளை வரவேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருந்தன்மையுடன் கூடிய இந்த உதவிகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்து வருவதுடன், இந்நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கான இடைக்கால ஏற்பாடுகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. மக்களின் நடமாட்டச் சுதந்திரத்தையும் உள்ளடக்கிய விதத்தில் இந்த ஆட்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் என்பவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையும் இருந்து வருகின்றது. அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வலுப்படுத்தப்படுவது அத்தியாவசியமாகும். மேலும், இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முனைப்பான ஒரு பங்கினை வகிக்க வேண்டி இருக்கின்றது. அதேவேளையில், சிவில் சமூகம் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகிய தரப்புக்களும் ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும். அகதிகள் எதிர்கொண்டு வரும் புதிய அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் ஆட்களுக்கு நிரந்தர மீள்குடியேற்றத்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தை துரிதப்படுத்துவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் முன்வருதல் வேண்டும். முன்னர் குறிப்பிட்டதைப் போல, அகதிகள் குறித்த அச்சம் மற்றும் கோபம் என்பன பெரும்பாலும் விளக்கமின்மை மற்றும் புரிந்துணர்வின்மை என்பவற்றிலிருந்து தோன்றுகின்றன. அனைத்து இலங்கை வாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகியோரைப் போலவே அகதிகளும் குறிப்பிட்ட நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள். போதைப் பொருள் கடத்தல் போன்ற பாரதூரமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவங்கள் குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், அகதிகள் தொடர்பாக அத்தகைய எந்தவொரு சம்பவத்தையும் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சமய அல்லது இனத்துவ சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயத்தையும், முஸ்லிம்களையும் உள்ளடக்கிய விதத்தில் இனக் குழுக்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்ற விடயத்தையும் இலங்கை மக்கள் ஒரு சிலர் மட்டுமே அறிந்துள்ளார்கள். இந்த அறியாமையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்கள் தொடர்பாக தோன்றியிருக்கும் பகைமை உணர்ச்சி மற்றும் சந்தேகங்கள் என்பனவும் இணைந்து இலங்கையில் வசித்து வரும் இந்த அகதிகளுக்கு எதிரான பழிவாங்கல் செயற்பாடுகளின் அலையை தூண்டியுள்ளன. தமது சொந்த நாடுகளில் கடும் அச்சுறுதல்களை எதிர்கொண்டு, ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் மக்களை ஏற்று, உபசரிப்பது உலகளாவிய ரீதியில் ஒரு சவாலாக இருந்து வருகின்றது. ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் பெருந்தொகையான நாடுகளில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆதரவு என்பவற்றை கோரியுள்ளார்கள். உலகளாவிய ரீதியில் அகதிகளாக இருந்துவரும் 28.5 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது, பாகிஸ்தான் சுமார் 1.4 மில்லியன் அகதிகளையும், பங்களாதேஷ் சுமார் 900,000 அகதிகளையும் பராமரித்து வருகின்றன என்ற விடயத்தை அவதானிக்க முடிகின்றது. இதனுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையை பொறுத்தவரையில் ஒரு சிறு எண்ணிக்கையினர் மட்டுமே – 1700 பேருக்கும் குறைவானவர்களே – இவ்விதம் வெளிநாட்டு இங்கு அகதிகளாக இருந்து வருகின்றனர். தமது சொந்த நாடுகளில் கடும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் எம்மீது நம்பிக்கை வைத்து இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றார்கள் என்ற விடயம் குறித்து இலங்கையர்கள் என்ற முறையில் நாங்கள் பெருமிதமடைய வேண்டும். அவர்கள் இங்கு தற்காலிகமாக தங்கியிருக்கும் ஒரு சில வருடங்களின் போது நாங்கள் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு பராமரிப்பு வழங்கி, அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென நம்புகின்றோம். நாங்கள் அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்ய முடியாது. எமது உள்ளங்களையும், இல்லங்களையும் நாங்கள் அவர்களுக்காக திறந்து விடுதல் வேண்டும். ருக்கி பெர்னாண்டோ எழுதி Refugee crisis in Sri Lanka after the Easter Sunday bombings என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் https://maatram.org/?p=7773

on May 9, 2019

sri-lanka-ahmadi-muslim-refugees5.jpg?zo

பட மூலம், Rabwah

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும்வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். “எனக்கு எதிராக முன்னர் மதநிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது; அந்த நிலையில், ஒன்று நான் கொல்லப்பட முடியும் அல்லது சிறையில் அடைக்கப்பட முடியும் என்ற அச்சத்தில் முன்னரேயே நான் எனது வீட்டை விட்டு வெளியேறியிருந்தேன். அப்பொழுது நான் தூக்கமின்றி தவித்தேன்; பட்டினி கிடந்தேன்; எனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் கடும் அச்சத்தில் இருந்தேன். ஒரு சில மணித்தியாலங்களில் அனைத்தையும் இழந்திருந்தேன். நானும், எனது மனைவியும் கடும் பயத்திலும், அதிர்ச்சியிலும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இலங்கைக்கு வந்தோம். நண்பர்களின் குடும்பங்கள், உறவினர்கள், எமது தொழில்கள், எமது வீடு வாசல்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாங்கள் இங்கு வந்தோம். ஆனால், இப்பொழுது இலங்கையும் அதே மாதிரியான ஒரு நாடாகியுள்ளது. நாங்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து இப்பொழுது பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளோம். இன்று பகல் எமது வீட்டுக்கு வெளியில் ஒரு கும்பல் கூடி, ஒரு சிலர் மிக மூர்க்கத்தனமான விதத்தில் எமது வீட்டுக் கதவை உதைத்தார்கள். ஒரு நபர் என்னைப் பிடித்துத் தள்ளியதுடன், எனது கன்னத்தில் அறைந்து, என்னுடைய சட்டை கொலறை பிடித்து என்னை இழுத்தெடுத்தார். அவருக்கு பின்னால் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நின்றார்கள். அவர்கள் இப்படிச்  சொன்னார்கள்: நீங்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டும்” – 2019 ஏப்ரல் 27ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நின்றிருக்கும் பாகிஸ்தான் அகதி.

நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த பாகிஸ்தான் நபர் ஒருவர் தனது வீட்டிற்கு ஒரு வன்முறைக் கும்பல் எவ்வாறு வந்தது என்பதனை என்னிடம் விளக்கிக் கூறினார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஒரு பிள்ளைக்கு 4 வயது, இரண்டாவது பிள்ளைக்கு 2 ½ வயது. அந்தக் கும்பல் அவரை உதைத்துகொல்லப்போவதாக அச்சுறுத்தியது. அதனை அடுத்துஅந்த வீட்டுச் சொந்தக்காரர் அவர் அந்த வீட்டிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தித்தார். நீர்கொழும்பு லூயிஸ் பிளேசில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு ஒரு வன்முறைக் கும்பல் எவ்வாறு வந்தது என்ற விவரத்தை ஒரு பாகிஸ்தான் பெண்மணி எடுத்துக்கூறினார். உடனடியாக அவர்கள் அந்த வீட்டை வீட்டு வெளியேறாது விட்டால் அவருடைய குடும்பத்தை அவர்கள் தாக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் தாம் அணிந்திருந்த ஆடைகளுடன் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டதுஅல்லது ஒரு சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டி நேரிட்டது. ஆடைகள்மருந்து வகைள் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் முக்கியமான ஆவணங்கள் மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் என்பவற்றை அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது.

இலங்கைக்கு அகதிகளாக வந்தவர்கள் இப்பொழுது இலங்கைக்குள்ளே அகதிகளாகியுள்ளார்கள்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களின் போது நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பிதேசங்களில் வசித்து வந்த அகதிகளிடமிருந்து நான் நிறையக் கதைகளை கேட்டறிந்து கொண்டேன். அகதிகள் குடும்பங்களை தமது வீடுகளில் வைத்திருந்தால் வீடுகளை நிர்மூலமாக்கப் போவதாக வன்முறைக் கும்பல்கள் தம்மை அச்சுறுத்தியதாக வீட்டுச் சொந்தக்காரர்கள் சொன்னார்கள். இதன் விளைவாகசுமார் 1200 அகதிகளும்தஞ்சம் கோருபவர்களும் (“தஞ்சம் கோருபவர்கள்” எனக் குறிப்பிடப்படுபவர்கள் தமது அகதி விண்ணப்பங்கள் தொடர்பாக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாத ஆட்கள் ஆவார்கள்) மூன்று தற்காலிக முகாம்களில் (இரண்டு அகமதியா பள்ளிவாசல்களிலும்நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும்) இப்பொழுது தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் மோசமான நிலைமைகளின் கீழேயே அவர்கள் அந்த இடங்களில் தங்கியிருக்க நேரிட்டுள்ளது. இங்கு கழிப்பறை வசதிகள் மிகக் குறைவாக இருந்து வருவதுடன்தண்ணீரும் போதியளவில் கிடைப்பதில்லை. இடப் பற்றாக்குறை காரணமாக பெருந்தொகையானவர்கள் அமர்ந்தவாறே நித்திரை கொள்ள வேண்டியுள்ளது.

ஆட்கள் இரவில் தங்குவதற்கான வசதிகளை கொண்டிராத இரண்டு பள்ளிவாசல்களையும் பொருத்தவரையில் நிலைமை மிக மோசமானதாகும். கடந்த சில நாட்களில் பெய்துள்ள மழை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த இரண்டு பள்ளிவாசல்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கிய ஒரு சில உள்ளூர்வாசிகள் சுமார் 700 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய அகதிகள் முகாமிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சுமார் 40 பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் 175 பேர் சுவர்கள் இல்லாத கராஜ் ஒன்றின் தரையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். பொலிஸ் நிலையத்தில் தங்கி நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் ஒரு சில கழிப்பறைகளையும் இந்த அகதிகள் பயன்படுத்தி வருகின்றனர். பொலிஸார் அவர்களுக்கு உதவிகளை வழங்கியிருப்பதுடன்அவர்களை கருணையுடனும்பெருந்தன்மையுடனும் நடத்தியுள்ளார்கள். வரையறுக்கப்பட்ட வசதிகளை அவர்கள் இந்த அகதிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால்அகதிகளை பொறுத்தவரையிலும்அதேபோல பொலிஸாரை பொறுத்தவரையிலும் நிலைமை சகிக்க முடியாததாக இருந்து வருகின்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை சிறந்த வசதிகளுடன் கூடிய பொருத்தமான இடம் ஒன்றில் தங்கவைக்குமாறு கோரி பல்வேறு அமைப்புக்களுக்கும்தேவாலயங்களுக்கும் மன்றாட்டத்துடன் கூடிய வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன. ஒரு சிலர் இந்த அகதிகளுக்கென தமது கதவுகளை திறப்பதற்கு பயப்பட்டார்கள். ஆனால், ஒரு சிலர் தைரியத்துடன் அதற்கென முன்வந்தார்கள். எவ்வாறிருப்பினும்பொலிஸ் நிலையத்திலிருந்து அவர்களை அகற்றிவேறு ஒரு இடத்தில் தங்க வைப்பதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்த வன்முறை மற்றும் அச்சுறுத்தல் என்பன காரணமாக தோல்வியடைந்துள்ளன. இந்த அகதிகளில் ஒரு குழுவினர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுதுபௌத்த பிக்குகளின் தலைமையிலான உள்ளூர் குழுக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பொலிஸாரினால் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாதிருந்ததுடன்அந்த அகதிகள் குழுவினர் மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டார்கள். பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு மற்றொரு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுதுஉள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தலைமையில் எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன. அந்தப் பேருந்து திருப்பப்பட்டுஅதில் இருந்தவர்கள் மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டார்கள். மேலும இரு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த கொழும்பு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கென இந்த அகதிகள் பேருந்துகளில் ஏற்றப்பட்டிருந்தார்கள். ஆனால்பொலிஸார் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்களை வழங்க முடியாத நிலைமையில் இருந்து வந்த காரணத்தினால் இந்த இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் மீள இடம்பெயர நேரிட்ட நிலைமை

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து அகதிகள் கடும் எதிர்ப்புக்களையும்வெளியேற்றங்களையும் எதிர்கொண்டு வரும் ஒரேயொரு பிரதேசமாக நீர்கொழும்பு மட்டும் இருந்து வரவில்லை. கண்டிக்கு அருகில் வீடொன்றில் வசித்து வந்த நான்கு ஆப்கானிஸ்தான் அகதிகளும் இதே மாதிரியான ஒரு நிலையை எதிர்கொண்டார்கள். கடந்த வாரத்தில் உள்ளூர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ்  சோதனைகளை அடுத்து வீட்டு உரிமையாளரினால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால்பொலிஸ் சோதனைகளின் போது எத்தகைய சந்தேகத்திற்குரிய பொருட்களும் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனையடுத்து அவர்கள் சென்ற விருந்தினர் விடுதியும் கூட இப்பொழுது அவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றது. தெஹிவலையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரத்மலானையில் வசித்து வந்த மற்றொரு ஆப்கான் அகதி அயலவர் ஒருவரினால் “எதிரி” என  அழைக்கப்பட்டதுடன்இந்த அகதியை தாக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியிருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் தாம் வாடகைக்கு இருக்கும் அந்த வீட்டிற்குள் அச்சத்துடன் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். மொரட்டுவயில் தனது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் ஓர் ஆப்கான் அகதிக் குடும்பம்அவர்களுடைய அகதி ஆவணங்கள் தொடர்பாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனை அடுத்துஅந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு வீட்டு உரிமையாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பலர் இலங்கையில் வசிப்பதற்கான சட்டபூர்வமான ஆவணங்களை தம்வசம் வைத்திருந்த போதிலும்பல விருந்தினர் விடுதிகள் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளன. குறிப்பாகமுஸ்லிம் வீட்டுச் சொந்தக்காரர்கள் இது குறித்து  பெருமளவுக்கு  அச்சமடைந்துள்ளார்கள். உள்ளூர் மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் தூண்டப்பட முடியும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

பாணந்துறையில் தங்கியிருக்கும் ஓர் ஆப்கான் அகதி இப்படிக் கூறினார்: “முன்னர் ஆட்கள் எம்மைப் பார்த்து புன்னகை செய்தார்கள். ஆனால்இப்பொழுது அவர்கள் எம்மை சந்தேகத்துடனும்பகைமை உணர்வுடனும் பார்க்கின்றார்கள். அதன் காரணமாக வெளியில் செல்வதற்கு எமக்குப் பயமாக உள்ளது. ஒரு அறையை வாடகைக்கு எடுப்பதற்கு நான் முயற்சித்த பொழுதுஅந்த விருந்தினர் விடுதியின் உரிமையாளர் ‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள்’ என உரத்துச் சத்தமிட்டார். வேறு ஒரு விருந்தினர் விடுதிக்கு செல்வதற்கு நான் முயற்சித்தேன். ஆனால்எவரும் எனக்கு தங்குமிட வசதியை பெற்றுத் தருவதற்கு விரும்பவில்லை.”

இந்த அகதிகள் யார்?

இந்த அகதிகளும்தஞ்சம் கோருபவர்களும் தமது சொந்த நாடுகளில் எதிர்கொண்ட துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்புக் கோரி இலங்கைக்கு வந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் ஒரு சிலர் ஹசாரா இன சமூகத்தைச் சேர்ந்த அஹமதியா மற்றும் ஷியா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள். ஏனையவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தமது நாட்டில் முஸ்லிம் குழுக்களின் துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் ஆவார்கள். தீவிரவாதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள்தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் என்பவற்றினால் துன்பங்களை அனுபவித்த சமய சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்து வருகின்றார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக அரசிலிருந்து அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புக்களும் கிடைக்கவில்லை அல்லது மிகச் சிறு அளவிலான பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது. இலங்கையில் இருக்கும் இந்த அகதிகள் பாகிஸ்தான் மதநிந்தனைச் சட்டத்தின் கீழ் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். பாகிஸ்தானில் மதநிந்தனை மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இருந்து வருகின்றது. துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்ஊடகவியலாளர்கள்புளொக் செயற்பாட்டாளர்கள்நாத்திகவாதிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒரு சிலரும் இலங்கையில் தஞ்சம் கோரியிருந்தார்கள்.

இலங்கை 1951ஆம் ஆண்டின் அகதிகள் சமவாயத்திற்கு கையொப்பமிட்டிருக்கும் ஒரு நாடாக இருந்து வரவில்லை. அதன் காரணமாகஆட்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பான தேசிய நடைமுறைகளை அது கொண்டிருக்கவில்லை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் (UNHCR) இலங்கை அரசாங்கத்துடன் 2005ஆம் ஆண்டில் செய்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தஞ்சம் கோரும் ஆட்களை அந்த அலுவலகம் இங்கு பதிவு செய்வதுடன், அவர்கள் தொடர்பாக அகதி அந்தஸ்தை நிர்ணயிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், ஏனைய நாடுகளில் நிரந்தரமாக குடியேறக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் இலங்கையில் தற்காலிகமாக வசிப்பதற்கென இந்த அகதிகளை வரவேற்றுள்ளன. 2019 மார்ச் 31 இல் உள்ளவாறு, ஏனைய நாடுகளில் குடியேறுவதற்காக காத்திருக்கும் 851 ஆட்கள் இலங்கையில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர். 819 ஆட்களின் அகதி விண்ணப்பங்கள் தொடர்பாக (தஞ்சம் கோருபவர்கள்) இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இவர்கள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்து வருவதுடன், பெரும்பான்மையாக 1341 ஆட்கள் பாகிஸ்தானியர்களாகவும், 201 ஆட்கள் ஆப்கானிஸ்தானைச் சேரந்தவர்களாகவும் உள்ளனர். அதேபோல கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான தமது விண்ணப்பங்கள் ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பெருந்தொகையானவர்களும் இருக்கின்றார்கள். 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தின்போது 20 அகதிகள் நிரந்தர மீள்குடியேற்றத்திற்காக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்கள். ஒரு நீண்ட விண்ணப்ப மீளாய்வுச் செயன்முறை இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அதாவதுவிண்ணப்பத்தை அனுப்பி வைத்தல்நேர்காணல் மற்றும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறித்து அறிவித்தல் கிடைத்தல் என்பவற்றுக்கிடையில் பல வருட கால இடைவெளி காணப்படுகிறது. அதன் விளைவாக தஞ்சம் கோரும் ஆட்களுக்கு மத்தியில் உயர் அளவிலான நிச்சயமற்ற நிலை மற்றும் அச்ச உணர்வு என்பன நிலவி வருகின்றன. தற்போதைய நெருக்கடி எதிர்பாராத ஒரு நெருக்கடியாக இருந்து வருவதுடன், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இந்த அகதிகளை மிகவும் பலவீனமான நிலைமையில் வைத்திருப்பதுடன், அவர்களுடைய நிர்க்கதி நிலையை மேலும் தீவிரப் படுத்தியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் இலங்கையில் அகதிகளின் வாழ்க்கை

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ஆளொருவருக்கு ரூ. 10,000 தொகையை கொடுப்பனவாக வழங்குகின்றது அல்லது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ரூ. 22,000 வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை இலங்கையில் கௌரவமான விதத்தில் வாழ்க்கை நடத்துவதற்கு, தங்குமிட வசதி மற்றும் உணவு என்பவற்றுக்கான செலவுகளை கூட ஈடுசெய்வதற்கு போதியதாக இருந்து வரவில்லை. தஞ்சம் கோருபவர்களுக்கு எத்தகைய கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தமது செலவுகளை தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில முஸ்லிம் குழுக்கள்கிறிஸ்தவ தேவாலய குழுக்கள் மற்றும் அரச சாரா அமைப்புக்கள் என்பன அவர்களுக்கு கல்வி, தங்குமிட வசதி, சுகாதார பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஆதரவளித்து வந்துள்ளன. ஆனால், இந்த உதவிகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து வருவதுடன், ஒரு சிலர் மட்டுமே அவற்றிலிருந்து பயனடைந்துள்ளார்கள்.

தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரை பொறுத்தவரையில் வீடமைப்பு, உணவு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு அல்லது சட்ட ரீதியான வேலை வாய்ப்பு என்பவற்றுக்கான உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்துவதில்லை. அரசாங்கத்தினால் இத்தகையவர்களுக்கு நிரந்தர தங்குமிட வசதிகளோ அல்லது இடைத்தங்கல் வசதிகளோ வழங்கப்படுவதில்லை. உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பு அல்லது சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்பு போன்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் அவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை நியாயமான விதத்திலும்எளிதாக ஒரு சிறு மேலதிகச் செலவுடன் செய்யக்கூடியதாக இருந்து வந்த போதிலும்இது இடம்பெறுவதில்லை. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு அரசாங்க வைத்தியசாலைகளிலும்மருந்தகங்களிலும் கிடைக்கும் சிகிச்சைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பன அக்கறை மற்றும் கருணை என்பவற்றின் அடிப்படையில் பெருமளவுக்கு குறைபாடுகளை கொண்டவையாக இருந்து வருகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளின் அக்கறையின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன்மருத்துவப் பராமரிப்பை நாடும் தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் தமது அடிப்படை உரிமையை அனுபவிப்பதற்கு பதிலாகஏதோ ஒரு சலுகையை கோரி நிற்பவர்கள் போல உணர நேரிடுகின்றது. கொடுமைகள்வன்முறை மற்றும் பாரபட்சம் என்பவற்றை நேரடியாக அனுபவித்து, அவற்றின் காரணமாக தமது வீடு வாசல்களிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் எப்பொழுதும் தாம் பிரிந்து வந்திருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளார்கள். தமக்கு பரிச்சயமில்லாத, வரவேற்பார் எவரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ வேண்டி நேரிடுகின்றது. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு உளநலச் சேவைகளோ, உள சமூகப் பராமரிப்பு வசதிகளோ கிடைப்பதில்லை.

இலங்கையின் அரசியல் யாப்பு “அனைத்து மட்டங்களிலும் முழுமையான கல்வியை சமத்துவமான விதத்தில் அணுகுவதற்கான உரிமையை அனைத்து ஆட்களுக்கும்” உத்தரவாதப்படுத்திய போதிலும்அகதிகளின் மற்றும் தஞ்சம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை. 06-10 வயதுப் பிரிவைச் சேர்ந்த அகதிப் பிள்ளைகள் UNHCR அனுசரணைக்கு ஊடாக பாடசாலைகளை அணுக முடிகின்றது. ஆனால்இரண்டாம் நிலை கல்வி வயதுப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைகள் முறைசார் கல்வியை அணுக முடியாத நிலை காணப்படுகின்றது. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அரசாங்கத்தின் பெருந்தொகையான தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி முறைகளுக்குள்ளும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அவை இந்தப் பிள்ளைகள் தொழில் திறன்களை கற்றுஅவற்றை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய முறைகளாகும். அதன் ஊடாக அவர்கள் இந்தத் திறன்களை பயன்படுத்திதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதுடன்இலங்கையில் சுயாதீனமாக வாழக்கூடிய ஒரு நிலைமையும் ஏற்பட முடியும்.

அகதிகளை பார்த்து அச்சப்படுவது ஏன்?

வட மாகாண மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் இந்த அகதிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு முன்வந்த பொழுது, இந்த நெருக்கடிக்கான ஒரு தற்காலிக நிவாரணம் குறித்த நம்பிக்கை துளிர்த்தது. இந்த விடயம் ஜனாதிபதி அவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் கூட சுமார் 1200 அகதிகள் மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். வட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் வடக்கிற்கு இந்த அகதிகளை அழைத்து வரும் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரிய வருகின்றது. ஆனால்வட புலத்தைச் சேர்ந்த ஏனைய தமிழ் அரசியல் வாதிகள்சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமய குருமார் ஆகியோர் இந்த அகதிகளை வரவேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருந்தன்மையுடன் கூடிய இந்த  உதவிகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்து வருவதுடன், இந்நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கான இடைக்கால ஏற்பாடுகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. மக்களின் நடமாட்டச் சுதந்திரத்தையும் உள்ளடக்கிய விதத்தில் இந்த ஆட்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் என்பவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையும் இருந்து வருகின்றது. அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வலுப்படுத்தப்படுவது அத்தியாவசியமாகும். மேலும்இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முனைப்பான ஒரு பங்கினை வகிக்க வேண்டி இருக்கின்றது. அதேவேளையில், சிவில் சமூகம் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகிய தரப்புக்களும் ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும். அகதிகள் எதிர்கொண்டு வரும் புதிய அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் ஆட்களுக்கு நிரந்தர மீள்குடியேற்றத்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தை துரிதப்படுத்துவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் முன்வருதல் வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டதைப் போல, அகதிகள் குறித்த அச்சம் மற்றும் கோபம் என்பன பெரும்பாலும் விளக்கமின்மை மற்றும் புரிந்துணர்வின்மை என்பவற்றிலிருந்து தோன்றுகின்றன. அனைத்து இலங்கை வாழ் மக்கள்சுற்றுலாப் பயணிகள்  மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகியோரைப் போலவே அகதிகளும் குறிப்பிட்ட நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள். போதைப் பொருள் கடத்தல் போன்ற பாரதூரமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவங்கள் குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால்அகதிகள் தொடர்பாக அத்தகைய எந்தவொரு சம்பவத்தையும் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சமய அல்லது இனத்துவ சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயத்தையும்முஸ்லிம்களையும் உள்ளடக்கிய விதத்தில் இனக் குழுக்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்ற விடயத்தையும் இலங்கை மக்கள் ஒரு சிலர் மட்டுமே அறிந்துள்ளார்கள். இந்த அறியாமையும்உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்கள் தொடர்பாக தோன்றியிருக்கும் பகைமை உணர்ச்சி மற்றும் சந்தேகங்கள் என்பனவும் இணைந்து இலங்கையில் வசித்து வரும் இந்த அகதிகளுக்கு எதிரான பழிவாங்கல் செயற்பாடுகளின் அலையை தூண்டியுள்ளன.

தமது சொந்த நாடுகளில் கடும் அச்சுறுதல்களை எதிர்கொண்டு, ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் மக்களை ஏற்று, உபசரிப்பது உலகளாவிய ரீதியில் ஒரு சவாலாக இருந்து வருகின்றது. ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் பெருந்தொகையான நாடுகளில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆதரவு என்பவற்றை கோரியுள்ளார்கள். உலகளாவிய ரீதியில் அகதிகளாக இருந்துவரும் 28.5 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது, பாகிஸ்தான் சுமார் 1.4 மில்லியன் அகதிகளையும்பங்களாதேஷ் சுமார் 900,000 அகதிகளையும் பராமரித்து வருகின்றன என்ற விடயத்தை அவதானிக்க முடிகின்றது. இதனுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையை  பொறுத்தவரையில் ஒரு சிறு எண்ணிக்கையினர் மட்டுமே – 1700 பேருக்கும் குறைவானவர்களே – இவ்விதம் வெளிநாட்டு இங்கு அகதிகளாக இருந்து வருகின்றனர்.

தமது சொந்த நாடுகளில் கடும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் எம்மீது  நம்பிக்கை வைத்து இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றார்கள் என்ற விடயம் குறித்து இலங்கையர்கள் என்ற முறையில் நாங்கள் பெருமிதமடைய வேண்டும். அவர்கள் இங்கு தற்காலிகமாக தங்கியிருக்கும் ஒரு சில வருடங்களின் போது நாங்கள் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு பராமரிப்பு வழங்கி, அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென நம்புகின்றோம். நாங்கள் அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்ய முடியாது. எமது உள்ளங்களையும்இல்லங்களையும் நாங்கள் அவர்களுக்காக திறந்து விடுதல் வேண்டும்.

ruki_fernando-e1522406696800.jpg?resize=ருக்கி பெர்னாண்டோ எழுதி Refugee crisis in Sri Lanka after the Easter Sunday bombings என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

https://maatram.org/?p=7773

அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன்

1 year 5 months ago
அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன் அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும், எனினும் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாததால், ஆளுனர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களுக்கு தாம் இடம் கொடுத்ததாகவும் அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர தெரிவித்துள்ளார். எனவே, ‘உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிசாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை’ என்ற உண்மையை மறைத்து, புனைகதைகளை பரப்பி, அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் எனவும் அனைவரையும் கோருகிறேன். இத்தகைய ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடி மிக்க சூழலில், அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். அவிசாவளை எனது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன். ஆகவே இது தொடர்பாக நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் நடந்துக்கொண்டு தீர்வை தேட வேண்டுமென, மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியிடம் நான் இன்றும், நேற்றும் கூறியுள்ளேன். திங்கட்கிழமை நான் இப்பாடசாலைக்கு நேரடியாக சென்று, பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, நிலைமைகளை அவதானித்து பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளேன். நாடாளுமன்ற நுழைவாயிலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம். எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. இதுபற்றி அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். இதை அறியாதவர்களுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் விளயாட முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியர்கள், கடந்த வருடம் பின்தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் குறிப்பிட்ட பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு வழங்கப்பட்டவை ஆகும். ஆகவே இவர்களுக்கு இடமாற்றம் ஒருபோதும் வழங்கப்பட முடியாது. இதை இந்த ஆசிரியர்களும், பாடசாலை பெற்றோர்களும் மனதில் கொள்ள வேண்டும். ஆசிரிய வேலை செய்து இவர்கள் அரசாங்க சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், வேதனம் பெருகின்ற ஆசிரியர்களின் தொழிலை விட பிள்ளைகளின் கல்வியே முக்கியமானது. அதற்காகவே பாடசாலைகள் இருக்கின்றன. இந்த விதி இந்நாட்டின் எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஏற்கனவே பின்தங்கி உள்ள தோட்டப்புற தமிழ் பாடசாலைகளின் கல்வி தரம் மேலும் மோசமடைய முடியாது. இதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன். இவர்களால் இனி இங்கே பணியாற்ற முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஆசியர்கள் எமக்கு தேவை. இதுபற்றி எனக்கு விபர அறிக்கை சமர்பிக்கும்படி மாகாண உதவி கல்வி பணிப்பாளர் உதயகுமாருக்கும், பாதுகாப்பு நியதிகளை இந்த பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடிக்கும் முகமாக இப்பாடசாலை கல்வி நடவடிகைகளை முன்னெடுக்கும்படி, இப்பாடசாலை உள்வரும் ஹோமகம வலய கல்வி பணிப்பாளர் வீரசூரியவுக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். முகத்தை மூடக்கூடாது என்பது மட்டுமே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே உடை தொடர்பாக சட்டப்படி எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆசிரியைகளின் உடை தொடர்பாக பாடசாலைகளில் பாரம்பரியம் மாத்திரமே இருக்கின்றது. இத்தகைய உடை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னரே இந்நாட்டில் ஆங்காங்கு பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் முகம் கொடுத்துள்ளனர். பாடசாலை பாரம்பரிய உடைகளுக்கு சட்ட அடிப்படை கிடையாது. எனினும் எந்த ஒரு சமூகத்திலும் சட்டம், சம்பிரதாயம் ஆகிய இரண்டுமே செல்வாக்கு செலுத்துகின்றன. உண்மையை சொல்லப்போனால், கொழும்பு நகரின் பல பிரபல தேசிய பாடசாலைகளில், பெண் ஆசிரியர்கள் சேலை அணிந்து மட்டுமே பாடசாலைகளுக்குள் நுழைய முடியும். இது அந்த பாடசாலைகளின் சம்பிரதாயம் ஆகும். பாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுவான உடை பற்றி இப்போது அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுபற்றி செவ்வாய்கிழமை அமைச்சரவையில் உரையாட உள்ளேன். இந்நிலையில் அபாயா அணிந்து வரவேண்டாம் என கூற சட்டத்தில் இடமில்லை. எனினும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும், தமது பாடசாலை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் தம்மை உடற்பரிசோதனை செய்ய உரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோருக்கு இடமளிக்க வேண்டும். இது இந்நாட்டில் இன்றைய பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை கட்டாயமாகும். இதில் எவருக்கும் எந்த ஒரு காரணம் கொண்டும் விலக்களிக்க முடியாது. நடந்து முடிந்த கோர படுகொலைகளின் பின்னர், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பது மிகவும் நியாயமானது. இன்று தமது பிள்ளைகளின் கல்வியை விட, தமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்கே பெற்றோர் முதலிடம் வழங்குகின்றனர். இது சரியானது. மேலும் ஒரு பாடசாலை தொடர்பில் அங்கே கல்வி பயிலும் அந்த பிரதேச மக்களுக்கே அதிக உரிமை இருக்கின்றது. கடமை நிமித்தம் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்ற வரும் ஆசிரியர்கள், இதை புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும். http://athavannews.com/அபாயா-அணிந்த-ஆசிரியைகள்/