Aggregator

வேடம் -

1 day 2 hours ago
இப்படியும் மனிதர்களா என்பதற்கு உதாரணங்களுடன் கண்கலங்க வைத்த ஒரு குறும்படம். ஏதோ ஒரு விடயத்திலாவது உண்மைகள் வெளிவரட்டும். நன்றி விசுகர்.

சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 பேரை கைதுசெய்ய வலியுறுத்து!

1 day 2 hours ago
போர்க்குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கு இந்தியா ஏன் தயங்குகின்றது என்று ஏன் யாருமே கேட்கவில்லை? தமிழகத்தில் 7 கோடித் தமிழர்கள் வசிக்கிறோம், ஒருவருக்குக் கூடவா இதுபற்றிக் கேள்வி எழவில்லை? உங்களின் உறவுகளில் 150,000 பேரைக் கொன்று வேட்டையாடிய மிருகங்களை உங்கள் நாட்டில் கைதுசெய்யுங்கள் என்று ஐ. நா கேட்கின்றபொழுது, உங்கள் நாடு முடியாதென்கிறதே, அது ஏன் உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை? குறைந்தபட்சம் இவ்விடயம் பற்றி பொதுத் தளங்களிலோ அல்லது தேர்தல் மேடைகளிலோ பேசலாமே?

உங்கள் ஊரவரும் இப்பிடியா????

1 day 3 hours ago
நான் ஊரை விட்டு வந்து 34 ஆண்டுகள் முடியுது. நான் நான்காம் வகுப்புப் படிக்கும் போது எமக்கு ஒருசெல்வநாயகம் ஆசிரியர் படிப்பித்தார்.அவர் கோண்டாவிலில் இருந்துதான் வருவார். இன்னும் இரண்டு பள்ளிகள் எம்மூரில் இருந்தன. அங்கு அப்பெயரில் யாரும் கற்பித்தார்களோ தெரியவில்லை. நான் இதில் இப்பதிவை இட்டதற்குக் காரணமே வேறு. ஆனால் நீங்கள் சிந்தித்துப் பார்க்காது எங்கே குறை பிடிக்கலாம் என்று போட்டுள்ளீர்கள். மற்றவர்களும் வந்து கருத்துக்களை எழுதிய பிற்பாடு ஏன் அந்தப் பட்டங்கள் வந்தன என எழுதுகிறேன்.

கண்ணீருடன் கல்லடி பாலத்தில் கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ; ஸ்தம்பித்தது மட்டக்களப்பு

1 day 3 hours ago
தாயக மக்களின் அவலங்கள் அபிவிருத்தியினாலும், சுமூக வாழ்வினாலும் குறைந்துவிடப்போவதில்லை. புலம்பேர் புலிவால்களின் தூண்டுதல் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, அவர்களின் இந்தப் போராட்டம் தொடரத்தான் போகிறது. இப்போராட்டங்களைப் புலம்பேர் புலிவால்களின் கைங்கரியம் என்று போர்வையிட்டுத் தட்டுக்கழிப்பவர்களின் நோக்கம் ஈடேறுவது நடக்கப்போவதில்லை. அபிவிருத்தியும் சுமூக வாழ்வும் முற்றான ஆக்கிரமிப்பில் வாழ்ந்துகொண்டு , தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு இன்றுவரை அவர்களைத் தேடும் மக்களின் காதுகளில் ஏறப்போவதில்லை. யாவும் நலம் என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டு வாழ எத்தனிக்கும் கனவான்களுக்கு இந்த மக்களின் அவலம் புரியப்போவதுமில்லை, அதற்கான தேவையுமில்லை. ஏனென்றால், இம்மக்களின் இந்த ஓயாத அவலக்குரலே இன்றிருக்கும் அமைதியைச் சீர்குலைத்துவிடும், யுத்தமென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், இது உலகத்தில் நடக்காததா? ஆகவே, இதெல்லாவற்றையும் தூரத்தே எறிந்துவிட்டு, வேலையைப் பார்ப்பீர்களா? என்று அவர்கள் கேட்கிறார்கள். இம்மக்களின் இந்த புலம்பேர் புலிவால்த் தூண்டுதல்ப் போராட்டங்கள் சிங்களவர்களின் மனதைக் காயப்படுத்தி, அவர்களைக் கோபப்படுத்திவிடும் என்று இந்தக் கனவான்கள் அஞ்சுகிறார்கள். ஆகவே, இந்த போராட்டங்களுக்கெல்லாம் காரணமான அந்த "புலம்பேர் புலிவால்கள்" மீது இக்கனவான்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் வருவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

1 day 4 hours ago
போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன் Mar 19, 20190 தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான் என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை அமையப்போகும் வடக்கும் கிழக்கும் இணைந்த சுய நிர்ணய ஆட்சிக்கான சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும் என்றும் கூறியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறிய விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் நடைபெறும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 16 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்துக்கு வந்த நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புகள் பலவற்றை நடத்தி இங்கு வாழும் தமிழ் மக்களின் குறைகள், கவலைகள், கஷ;டங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளேன். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அளப்பெரும் தியாகங்களையும் மகத்தான பங்களிப்பையும் செய்துள்ள கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளின் கீழ் வாழ்ந்துவருவதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்களின் குடும்ப நிலை, கணவன்மார்களை இழந்த பெண்கள் நிலை, வேலை இல்லா நிலைமை என்று பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்துவருவதைக் கண்டு மனம் நொந்துபோயுள்ளேன். இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள். எமக்கான நியாயமான உரித்துக்கள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு நாம் பின்நிற்கத் தேவை இல்லை. அதேசமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும் நாம் செயற்படத்தேவை இல்லை. சமூகங்களின் சுமூகம் என்பது ஒரு சாராரின் தலைமைகள் நித்திரைக்குப் போகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது. கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் நாம் மூலோபாயங்களை வகுத்து செயற்படவேண்டும். இதில் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான். ஆயுத ரீதியான போராட்டம் நடைபெற்றபோது கிழக்கு மாகாண மக்கள் செய்துள்ள பங்களிப்பை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட பங்களிப்புக்களை நான் நீதிபதியாக இங்கு கடமையாற்றிய காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன். செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை நாம் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வினைப் பெறும்போது எமக்குச் சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும். இதனைச் சாத்தியமானதாக்க வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். நான் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்கவிருக்கின்றேன். மக்களாகிய நீங்கள் என்னையோ அல்லது எனது கட்சி முக்கியஸ்தர்களையோ எந்நேரத்திலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறலாம். அவற்றைத் தீர்க்க நாம் எம்மால் ஆனமட்டில் முயற்சி செய்வோம். http://www.samakalam.com/செய்திகள்/போராட்டத்துக்கு-வட-மாகாண/

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

1 day 4 hours ago

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

Mar 19, 20190

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான் என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை அமையப்போகும் வடக்கும் கிழக்கும் இணைந்த சுய நிர்ணய ஆட்சிக்கான சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும் என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறிய விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் நடைபெறும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 16 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்துக்கு வந்த நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புகள் பலவற்றை நடத்தி இங்கு வாழும் தமிழ் மக்களின் குறைகள், கவலைகள், கஷ;டங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளேன். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அளப்பெரும் தியாகங்களையும் மகத்தான பங்களிப்பையும் செய்துள்ள கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளின் கீழ் வாழ்ந்துவருவதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்களின் குடும்ப நிலை, கணவன்மார்களை இழந்த பெண்கள் நிலை, வேலை இல்லா நிலைமை என்று பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்துவருவதைக் கண்டு மனம் நொந்துபோயுள்ளேன். இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள். எமக்கான நியாயமான உரித்துக்கள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு நாம் பின்நிற்கத் தேவை இல்லை. அதேசமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும் நாம் செயற்படத்தேவை இல்லை. சமூகங்களின் சுமூகம் என்பது ஒரு சாராரின் தலைமைகள் நித்திரைக்குப் போகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் நாம் மூலோபாயங்களை வகுத்து செயற்படவேண்டும். இதில் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான். ஆயுத ரீதியான போராட்டம் நடைபெற்றபோது கிழக்கு மாகாண மக்கள் செய்துள்ள பங்களிப்பை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட பங்களிப்புக்களை நான் நீதிபதியாக இங்கு கடமையாற்றிய காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன். செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை நாம் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வினைப் பெறும்போது எமக்குச் சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும்.

இதனைச் சாத்தியமானதாக்க வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். நான் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்கவிருக்கின்றேன். மக்களாகிய நீங்கள் என்னையோ அல்லது எனது கட்சி முக்கியஸ்தர்களையோ எந்நேரத்திலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறலாம். அவற்றைத் தீர்க்க நாம் எம்மால் ஆனமட்டில் முயற்சி செய்வோம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/போராட்டத்துக்கு-வட-மாகாண/

அந்த 70 நாட்கள்

1 day 4 hours ago
புறாத் தீவுக்கு நானும் போயிருந்தேன் ...அந்த நேரம் ஆமி அந்தப் பகுதியில் இருந்தான்...போட்டுக்கு மட்டும் தான் காசு கொடுத்தோம்...தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா.

தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்

1 day 4 hours ago
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:48 Comments - 0 கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத் தேர்தல்க் கூட்டணி, எப்படித் திசை மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் மாநிலத்தில் உள்ள தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் தங்கள் இஷ்டத்துக்கு, ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றன என்ற எண்ணங்கள், வலம் வந்தன. ஆனால், அந்த மாயை இப்போது விலகி, இரு பெரும் தலைவர்களும் இல்லையென்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சிகளை விட்டால், வேறு எந்தக் கட்சிக்கும், கூட்டணி அமைக்கும் பலமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு தி.மு.கவை, ஆட்சிக்கு வரவிடாமல் செய்த, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட, இப்போது அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டன. ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்ற டொக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, அ.தி.மு.க கூட்டணியிலும், ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து, மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதற்குத் தலைமை ஏற்ற விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கின்றன. “பா.ஜ.கவுடன், இருநூறு சதவீதம் கூட்டணி இல்லை” என்று கூறிய டொக்டர் ராமதாஸுக்கு, பா.ஜ.கவும் இடம்பெறும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. திராவிடக் கட்சிகளை மீறி, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதற்கு, இந்தக் காட்சிகள், சாட்சிகளாக அமைந்து விட்டன. அ.தி.மு.க கூட்டணியில், நடைபெற்றுள்ள தொகுதிப் பங்கீட்டில், அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக, பா.ம.கட்சி, ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு மக்களவைத் தொகுதியையும் பெற்றிருக்கிறது. தே.மு.தி.கவோ, “பா.ம.கவுக்குச் சமமாகத் தொகுதிகள் வேண்டும்” என்று, முட்டி மோதிப் பார்த்து விட்டு, ஒரேநேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி, முகத்திரை கிழிந்ததால், கிடைத்ததே மகிழ்ச்சி என்ற அடிப்படையில், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அ.தி.மு.கவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதேபோல், தி.மு.க கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பெற்று, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்துள்ளது. இந்தக் காட்சிகள் எல்லாமே, தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.க; அ.தி.மு.கவுக்கு மாற்று தி.மு.க. இதுதான் தமிழக அரசியல் என்பதை, தேசியக் கட்சிகளான காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும், மாநிலத்தில் உள்ள பிற கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் இயக்கங்கள், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கும் உணர்த்தும் விதமாக, இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகளும் முடிவடைந்திருக்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில், அ.தி.மு.க 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதே போல், தி.மு.க கூட்டணியில், தி.மு.கவும் 20 இடங்களில் போட்டியிடுகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும், சரிசமமாகப் போட்டியிட்டாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சிலவற்றில், தி.மு.க, அ.தி.மு.கவின் சின்னங்களில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதால், இந்த எண்ணிக்கை, சற்று உயரும். அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, அக்கட்சிக்கு டி.டி.வி தினகரனின் போர்க்கொடியால், இன்றைக்குப் பலவீனப்பட்டு நிற்கிறது. அதிகாரத்துக்கு பொறுப்பான அநேகர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவில் இருந்தாலும், தொண்டர்கள் பட்டாளம், தினகரன் பக்கமே இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்தப் பலவீனத்துடன், இரு முக்கிய எதிர்மறை நிலைகளுடன் அ.தி.மு.க, தேர்தலைச் சந்திக்கிறது. ஒன்று, வரலாறு காணாத அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழகத்தில் வீசும் ‘வெறுப்பு அலை’. இன்னொன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்துக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு அலை. இந்த வெறுப்பு அலையும் எதிர்ப்பு அலையும் ஜோடி போட்டுக் கொண்டு, அ.தி.மு.க தலைமையிலான அணிக்கு, மிகப் பெரிய சோதனையை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. போதாக்குறைக்கு எடப்பாடி பழனிசாமியை, மிக மோசமாகச் சென்ற மாதம் வரை விமர்சித்த, பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் ஏற்பட்டுள்ள ‘பொருந்தாக் கூட்டணி’, மேலும் ‘கிடுக்கிப்பிடி’ பிரச்சினையை, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஏற்படுத்தியுள்ளது. டி.டி.வி தினகரனின் பிளவால், தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க என்ற கட்சி, தமிழகத்தில் உள்ள, எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும், சொந்தமாக 30 சதவீத வாக்குகளைப் பெற முடியாத நிலைமையில் தவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கள் மனதில் எதிர்மறையாக இருக்கும் கட்சிகளின் கூட்டணி, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதால், கொங்கு மண்டலம், அதாவது மேற்கு மாவட்டங்களில், அ.தி.மு.கவுக்கு அமோக செல்வாக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பொள்ளாச்சியில் பூதாகரமாகியுள்ள இளம்பெண்கள் மீதான பாலியல் புகார், மேற்கு மாவட்டங்களில் தாய்மார்களின் வாக்கு வங்கியை, அ.தி.மு.க பெருமளவில் பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆகவே, அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி, ‘மெகா கூட்டணி’ போல் தோற்றமளித்தாலும், களத்தில், அக்கட்சிகளுக்கு இருக்கும் கடுமையான பலவீனங்கள், எதிர்ப்பு, வெறுப்பு அலைகள், தேர்தல் வெற்றிக்குக் கைகொடுக்கும் என்று, நம்பிக்கையுடன் சொல்வதற்கில்லை. அதேநேரத்தில், ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கியதால், வாக்குகளை வாரிக் குவித்து விட முடியும்’ என்று அ.தி.மு.கவும் ‘விவசாயிகளுக்கு முதற்றடவையாக, 2,000 ரூபாய் வழங்கியதால், வாக்குகள் வந்து குவிந்து விடும்’ என்று பா.ஜ.கவும் நினைக்கின்றன. அந்தக் கனவு நிஜமாகுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்விக்குறி? திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தி.மு.க, மக்கள் எதிர்பார்க்கும் கட்சியாக இருப்பது ஒரு சிறப்பு. அதேபோல், மோடிக்கு இருக்கும் எதிர்ப்பு, இன்னொரு சிறப்பு. இந்த இரு சிறப்புகளும் தி.மு.க அணியின் முக்கிய மூலதனங்களாக இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை, முன்கூட்டியே தி.மு.க சேர்த்துக் கொண்டதன் மூலம், மூன்றாவது அணி ஒன்று, தமிழகத்தில் உருவாகாமல் தடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வெளியே விட்டிருந்தால், டி.டி.வி தினகரன், நடிகர் கமல்ஹாசன் போன்றோர், தி.மு.க மற்றும் அ.தி.மு.க இல்லாமல், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடும். தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளை, காங்கிரஸுக்குக் கொடுத்த தி.மு.கவின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், மூன்றாவது அணியைத் தடுக்கும் வியூகமே இந்த ஒன்பது தொகுதியின் பரம இரகசியம் என்பது அரசியல் பார்வையாளர்களுக்குப் புரியாமல் இல்லை. அப்படியோர் அணி, காங்கிரஸ் தலைமையில் அமைய வாய்ப்பு அளித்திருந்தால், தி.மு.கவுக்குக் கிடைக்கும் மதச்சார்பற்ற வாக்குகள்தான் பறி போயிருக்கும். அடுத்ததாக, கொம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க கூட்டணியில் இருக்கின்றன. என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு ஒரு வெறுப்பு நிலை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இரு தொகுதிகளை, தி.மு.க கூட்டணியில் பெற்றிருக்கும் அந்தக் கட்சி, தேர்தல் களத்தில் பிரசாரத்தை எப்படிப் புதுவித பாணியில் எடுத்துச் செல்லப் போகிறது? வெறுப்பு நிலை, எப்படி மாற்றப் போகிறது என்பதை வைத்தே, அந்த அணிக்கு விடுதலைச் சிறுத்தைகளால் இலாபமா, நட்டமா என்ற கணக்கு, தேர்தல் முடிவுகளில் தெரிய வரும். ஆகவே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம், தமிழகத்தில் தயாராகி விட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களின் கூட்டணிகளுக்காக, முதல் பிரசாரத்தை மேற்கொண்டு விட்டார்கள். தி.மு.க, அ.தி.மு.க அணிகளில் எந்தெந்தக் கட்சிகள் என்பதும் இறுதி வடிவம் பெற்று விட்டது. இனிவரும் தேர்தல் பிரசாரம், தேர்தல் நடைமுறைகளில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், பிரசாரத்தில் ஒருவருக்கொருவர் காரசாரமாக பறிமாறிக் கொள்ளப் போகும் கடும் சொற்கள், எல்லாம் இனி தலைப்புச் செய்திகளாகும். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. “நான் பிரதமராவேன்” என்று, ஜெயலலிதா பெற்ற அந்த வெற்றியால், தேசிய அரசியலை நிர்ணயிக்க முடியவில்லை. அதிக எம்.பிக்கள் இருந்தும், கடந்த ஐந்து வருடங்களில், தமிழகம் முக்கியத்துவம் இழந்தது. பாரதிய ஜனதாக் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததுதான் அதற்குக் காரணம். ஆனால், இந்த முறை நிலைமை மாறியிருக்கிறது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெறும் 40 தொகுதிகள் வெற்றி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும். தேசிய அரசியலைத் தமிழகம் தீர்மானிக்கும் காலம் மீண்டும் திரும்பும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேசிய-அரசியலை-மீண்டும்-தமிழ்நாடு-தீர்மானிக்கும்/91-230923

தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்

1 day 4 hours ago
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்
எம். காசிநாதன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:48 Comments - 0

கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம்.   

இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது.   

இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத் தேர்தல்க் கூட்டணி, எப்படித் திசை மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் மாநிலத்தில் உள்ள தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் தங்கள் இஷ்டத்துக்கு, ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றன என்ற எண்ணங்கள், வலம் வந்தன.   

ஆனால், அந்த மாயை இப்போது விலகி, இரு பெரும் தலைவர்களும் இல்லையென்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சிகளை விட்டால், வேறு எந்தக் கட்சிக்கும், கூட்டணி அமைக்கும் பலமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.  

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு தி.மு.கவை, ஆட்சிக்கு வரவிடாமல் செய்த, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட, இப்போது அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டன.  

‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்ற டொக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, அ.தி.மு.க கூட்டணியிலும், ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து, மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதற்குத் தலைமை ஏற்ற விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கின்றன.   

“பா.ஜ.கவுடன், இருநூறு சதவீதம் கூட்டணி இல்லை” என்று கூறிய டொக்டர் ராமதாஸுக்கு, பா.ஜ.கவும் இடம்பெறும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. திராவிடக் கட்சிகளை மீறி, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதற்கு, இந்தக் காட்சிகள், சாட்சிகளாக அமைந்து விட்டன.  

அ.தி.மு.க கூட்டணியில், நடைபெற்றுள்ள தொகுதிப் பங்கீட்டில், அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக, பா.ம.கட்சி, ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு மக்களவைத் தொகுதியையும் பெற்றிருக்கிறது.   

தே.மு.தி.கவோ, “பா.ம.கவுக்குச் சமமாகத் தொகுதிகள் வேண்டும்” என்று, முட்டி மோதிப் பார்த்து விட்டு, ஒரேநேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை  நடத்தி, முகத்திரை கிழிந்ததால், கிடைத்ததே மகிழ்ச்சி என்ற அடிப்படையில், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அ.தி.மு.கவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது.   

அதேபோல், தி.மு.க கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பெற்று, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்துள்ளது.   

இந்தக் காட்சிகள் எல்லாமே, தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.க; அ.தி.மு.கவுக்கு மாற்று தி.மு.க. இதுதான் தமிழக அரசியல் என்பதை, தேசியக் கட்சிகளான காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும், மாநிலத்தில் உள்ள பிற கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் இயக்கங்கள், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கும் உணர்த்தும் விதமாக, இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகளும் முடிவடைந்திருக்கின்றன.  

அ.தி.மு.க கூட்டணியில், அ.தி.மு.க 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதே போல், தி.மு.க கூட்டணியில், தி.மு.கவும் 20 இடங்களில் போட்டியிடுகிறது.  

இரண்டு திராவிடக் கட்சிகளும், சரிசமமாகப் போட்டியிட்டாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சிலவற்றில், தி.மு.க, அ.தி.மு.கவின் சின்னங்களில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதால், இந்த எண்ணிக்கை, சற்று உயரும்.  

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, அக்கட்சிக்கு டி.டி.வி தினகரனின் போர்க்கொடியால், இன்றைக்குப் பலவீனப்பட்டு நிற்கிறது. அதிகாரத்துக்கு பொறுப்பான அநேகர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவில் இருந்தாலும், தொண்டர்கள் பட்டாளம், தினகரன் பக்கமே இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.   

இந்தப் பலவீனத்துடன், இரு முக்கிய எதிர்மறை நிலைகளுடன் அ.தி.மு.க, தேர்தலைச் சந்திக்கிறது. ஒன்று, வரலாறு காணாத அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழகத்தில் வீசும் ‘வெறுப்பு அலை’.   
இன்னொன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்துக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு அலை.   

இந்த வெறுப்பு அலையும் எதிர்ப்பு அலையும் ஜோடி போட்டுக் கொண்டு, அ.தி.மு.க தலைமையிலான அணிக்கு, மிகப் பெரிய சோதனையை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. போதாக்குறைக்கு எடப்பாடி பழனிசாமியை, மிக மோசமாகச் சென்ற மாதம் வரை விமர்சித்த, பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் ஏற்பட்டுள்ள ‘பொருந்தாக் கூட்டணி’, மேலும் ‘கிடுக்கிப்பிடி’ பிரச்சினையை, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஏற்படுத்தியுள்ளது.   

டி.டி.வி தினகரனின் பிளவால், தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க என்ற கட்சி, தமிழகத்தில் உள்ள, எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும், சொந்தமாக 30 சதவீத வாக்குகளைப் பெற முடியாத நிலைமையில் தவிக்கிறது.   

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கள் மனதில் எதிர்மறையாக இருக்கும் கட்சிகளின் கூட்டணி, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதால், கொங்கு மண்டலம், அதாவது மேற்கு மாவட்டங்களில், அ.தி.மு.கவுக்கு அமோக செல்வாக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.   

ஆனால், இப்போது பொள்ளாச்சியில் பூதாகரமாகியுள்ள இளம்பெண்கள் மீதான பாலியல் புகார், மேற்கு மாவட்டங்களில் தாய்மார்களின் வாக்கு வங்கியை, அ.தி.மு.க பெருமளவில் பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.   

ஆகவே, அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி, ‘மெகா கூட்டணி’ போல் தோற்றமளித்தாலும், களத்தில், அக்கட்சிகளுக்கு இருக்கும் கடுமையான பலவீனங்கள், எதிர்ப்பு, வெறுப்பு அலைகள், தேர்தல் வெற்றிக்குக் கைகொடுக்கும் என்று, நம்பிக்கையுடன் சொல்வதற்கில்லை.   

அதேநேரத்தில், ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கியதால், வாக்குகளை வாரிக் குவித்து விட முடியும்’ என்று அ.தி.மு.கவும் ‘விவசாயிகளுக்கு முதற்றடவையாக, 2,000 ரூபாய் வழங்கியதால், வாக்குகள் வந்து குவிந்து விடும்’ என்று பா.ஜ.கவும் நினைக்கின்றன. அந்தக் கனவு நிஜமாகுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்விக்குறி?  

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தி.மு.க, மக்கள் எதிர்பார்க்கும் கட்சியாக இருப்பது ஒரு சிறப்பு. அதேபோல், மோடிக்கு இருக்கும் எதிர்ப்பு, இன்னொரு சிறப்பு. இந்த இரு சிறப்புகளும் தி.மு.க அணியின் முக்கிய மூலதனங்களாக இருக்கின்றன.   

காங்கிரஸ் கட்சியை, முன்கூட்டியே தி.மு.க சேர்த்துக் கொண்டதன் மூலம், மூன்றாவது அணி ஒன்று, தமிழகத்தில் உருவாகாமல் தடுத்திருக்கிறது.   

காங்கிரஸ் கட்சியை வெளியே விட்டிருந்தால், டி.டி.வி தினகரன், நடிகர் கமல்ஹாசன் போன்றோர், தி.மு.க மற்றும் அ.தி.மு.க இல்லாமல், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.   

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளை, காங்கிரஸுக்குக் கொடுத்த தி.மு.கவின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், மூன்றாவது அணியைத் தடுக்கும் வியூகமே இந்த ஒன்பது தொகுதியின் பரம இரகசியம் என்பது அரசியல் பார்வையாளர்களுக்குப் புரியாமல் இல்லை.  

அப்படியோர் அணி, காங்கிரஸ் தலைமையில் அமைய வாய்ப்பு அளித்திருந்தால், தி.மு.கவுக்குக் கிடைக்கும் மதச்சார்பற்ற வாக்குகள்தான் பறி போயிருக்கும்.   

அடுத்ததாக, கொம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க கூட்டணியில் இருக்கின்றன. என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு ஒரு வெறுப்பு நிலை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இரு தொகுதிகளை, தி.மு.க கூட்டணியில் பெற்றிருக்கும் அந்தக் கட்சி, தேர்தல் களத்தில் பிரசாரத்தை எப்படிப் புதுவித பாணியில் எடுத்துச் செல்லப் போகிறது? வெறுப்பு நிலை, எப்படி மாற்றப் போகிறது என்பதை வைத்தே, அந்த அணிக்கு விடுதலைச் சிறுத்தைகளால் இலாபமா, நட்டமா என்ற கணக்கு, தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.  

ஆகவே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம், தமிழகத்தில் தயாராகி விட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களின் கூட்டணிகளுக்காக, முதல் பிரசாரத்தை மேற்கொண்டு விட்டார்கள்.   

தி.மு.க, அ.தி.மு.க அணிகளில் எந்தெந்தக் கட்சிகள் என்பதும் இறுதி வடிவம் பெற்று விட்டது. இனிவரும் தேர்தல் பிரசாரம், தேர்தல் நடைமுறைகளில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், பிரசாரத்தில் ஒருவருக்கொருவர் காரசாரமாக பறிமாறிக் கொள்ளப் போகும் கடும் சொற்கள், எல்லாம் இனி தலைப்புச் செய்திகளாகும்.   

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. “நான் பிரதமராவேன்” என்று, ஜெயலலிதா பெற்ற அந்த வெற்றியால், தேசிய அரசியலை நிர்ணயிக்க முடியவில்லை. அதிக எம்.பிக்கள் இருந்தும், கடந்த ஐந்து வருடங்களில், தமிழகம் முக்கியத்துவம் இழந்தது.   

பாரதிய ஜனதாக் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததுதான் அதற்குக் காரணம். ஆனால், இந்த முறை நிலைமை மாறியிருக்கிறது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெறும் 40 தொகுதிகள் வெற்றி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும். தேசிய அரசியலைத் தமிழகம் தீர்மானிக்கும் காலம் மீண்டும் திரும்பும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேசிய-அரசியலை-மீண்டும்-தமிழ்நாடு-தீர்மானிக்கும்/91-230923

சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்

1 day 4 hours ago
சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0 மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையிலும் காணி இழந்த மக்களின் கோரிக்கைகள், வெகுஜனப் போராட்டங்களாக மேற்கிளம்பத் தொடங்கியுள்ளதைக் காண முடிகின்றது. தமிழர் தரப்பில், இவ்வாறான நிறையப் போராட்டங்கள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருக்கத் தக்கதாக, இப்போது வடபுலத்தின் சிலாவத்துறை முஸ்லிம்களால், காணிமீட்புப் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, சிலாவத்துறை பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், மீளக் குடியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படை முகாமை அகற்றுமாறு, இத்தனை நாள்களாகக் கோரிவந்த முஸ்லிம் மக்கள், இப்போது காணி விடுவிப்புக்கான தொடர் போராட்டத்தை, 23 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர். கேப்பாப்புலவு தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் கூட, சிலாவத்துறை முஸ்லிம்களின் 34 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நல்ல சமிக்ஞைகளோ, காத்திரமான அரசியல் நகர்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. இதனால், தொடர் வெகுஜனப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இன்று வெள்ளிக்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தக் காலப் பகுதியில், சிலாவத்துறையில் வாழ்ந்த சுமார் 220 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேறி, வேறு இடங்களில் வசித்து வந்தனர். இந்நிலையில், யுத்தம் முடிந்த கையோடு, அதாவது 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், அம்மக்கள் தங்களது குடும்பங்கள், வாரிசுகளோடு திரும்பி வந்து, மீளக் குடியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். 220 குடும்பங்களாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், 19 வருடங்களுக்குப் பிறகு, சொந்த மண்ணுக்குத் திரும்பிய போது, 625 குடும்பங்களாகப் பெருகியிருந்தனர். எனவே, அவர்களுக்குக் காணி மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. ஆனால், ஏற்கெனவே இம்மக்களுக்குச் சொந்தமாக இருந்த 34 ஏக்கர் நிலப்பரப்பில் கூட, குடியேற முடியாதவாறு, அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் இன்று வரை, தமது காணிகளை விடுவிக்குமாறும் கடற்படை முகாமை வேறோர் இடத்துக்கு மாற்றுமாறும், சிலாவத்துறை மக்கள் பல வழிகளிலும் குரல்கொடுத்து வருகின்றனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், கட்டம் கட்டமாகப் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், பலனேதும் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதியில் இருந்து, கூடாரமடித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது மண்ணுக்கு மீளத் திரும்பியிருந்த சுமார் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்படுகின்ற 34 ஏக்கர் காணியிலிருந்து, கடற்படை முகாம் அகற்றப்பட்டு, அக்காணியை விடுவிக்காமல் இழுத்தடித்து வருகின்றமையால் அல்லது அதைச் செய்யக் கூடாது என்று அரசாங்கம் நினைத்து இருக்கின்றமையால், மேற்படி இருநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள், தமது பூர்வீகக் காணியில் மீள்குடியேற முடியாமல், இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். ஆனபோதும், ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர, ஏனைய அரசியல் தலைமைகளோ, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, தமது போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று அப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர். முத்துக்குளிப்புக்குப் பெயர்போன இடம் என்பதற்கு மேலதிகமாக, பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் மிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை, வடமாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முசலியின் பிரதான ஊராகக் கருதப்படுகின்றது. அத்துடன், சுற்றியுள்ள 25 இக்கும் மேற்பட்ட கிராமங்கள், குக்கிராமங்களின் பிரதான நகர் போலவும் சிலாவத்துறை திகழ்கின்றது. இருப்பினும், அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஒரு தொகுதி மக்களின் காணிகளில், அவர்கள் மீளக் குடியேற முடியாத நெருக்கடி, கடந்த 10 வருடங்களாக நீடித்து வருகின்றமை கவலைக்குரியது. தமது காணிகளில் இருந்து கடற்படை முகாமை அகற்றி, மீள்குடியேற்றத்துக்கு வழிவிட்டுத் தருமாறு, பல வருடங்களாக இம்மக்கள் கோரி வருகின்றனர். இதற்காகத் ‘தபாலட்டைப் போராட்டம்’, கூட்டங்கள், பேரணிகள், மகஜர் கையளிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் என, எல்லா வடிவிலான போராட்ட முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர். அதேநேரம், அரசியல் தலைவர்களால் மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கூட, வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஆன பயன் எதுவுமில்லை என்று, இம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்த 34 ஏக்கரில் ஆறு ஏக்கரை விடுவிப்பதாக முன்னரே பிரதமர் கூறியிருந்ததற்கு அமைவாக, ஆறு ஏக்கர் காணியை மட்டும் விடுவித்தால் கூட, அது போதாது என்று, இதற்காகக் குரல் கொடுப்போர் கூறுகின்றனர். 34 ஏக்கர் காணியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருக்கத்தக்கதாக, ஆறு ஏக்கர் காணியில் 200 குடும்பங்கள் வாழ்வதென்பது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படுவதுடன் அருகிலுள்ள வேறோர் இடத்துக்குக் கடற்படை முகாமை நகர்த்துமாறு, பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய இன மக்களும் கோரி வருகின்றனர். இவ்வாறிருக்கையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள பிரதேச மக்கள் பிரதிநிதியும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றிருக்கின்றார். அத்துடன், இது தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றும் அவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தில், மக்கள் தமது மனக் கிடக்கைகளை முன்வைத்தனர். “பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த, எமக்குச் சொந்தமான காணிகளை, நாங்கள் பறிகொடுத்துப் பரிதவிக்கின்றோம். 10 வருட‍ங்களாக நாங்கள் இந்தக் காணி விடுவிப்புக்காகப் போராடி வருகின்றபோதும், இதுவரை எமக்கு நீதியோ, நியாயமோ கிடைக்கவில்லை. எனவேதான், தற்போது கடற்படை முகாமை அகற்றச் சொல்லி வருகின்றோம். நீங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, எமது காணியை மீட்டுத்தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். இக்கூட்டத்தில், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் புள்ளிவிவர அடிப்படையிலான தரவுகளை முன்வைத்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், “மொத்தமாக 34 ஏக்கர் காணி, கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், ஆறு ஏக்கர் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் காணி, பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர், எஞ்சிருப்பது 26 ஏக்கர் ஆகும். இந்த 26 ஏக்கரில், 35 பேருக்கு வருடாந்த பெர்மிட், 18 பேருக்கு எல்.டி.ஓ. (காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழானது), நான்கு பேருக்கு கிராண்டும் (நன்கொடை அல்லது அளிப்பு), 13 பேருக்கு உறுதியும் இருக்கின்றன” என்று தெரிவித்ததாக அறிய முடிகின்றது. அத்துடன், “12 பேர் காணிகளை அடாத்தாகத் தமக்குச் சொந்தமாக்கி உபயோகப்படுத்தினர்” என்று சுட்டிக்காட்டிய அவர், “ஏற்கெனவே பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில், கடற்படையினருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கு இடமாறிச் செல்வதற்கான உறுதிமொழிகளும் தரப்பட்டன. இவை தீர்மானமாகவும் உள்ளன” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, கடற்படை முகாமை இடம்மாற்றுவதற்காக, மேத்தன்வெளி என்ற இடத்தில் காணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காணி அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலாவத்துறையில் மேற்படி சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில், 18 வருடங்களாக முஸ்லிம்கள் வாழவில்லை. இந்தக் காலப் பகுதியிலேயே யுத்த மேகம் சூழ்ந்திருந்தது. கடற் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்டே, இங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன், ஒரு படை முகாமை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றுவது என்பது, சிறிய விடயமல்ல. அது, அங்கு இருக்கின்ற ஆயுத தளவாடங்களையும் படையினரையும் இடம்மாற்றுதலுடன் தொடர்புடைய செயற்பாடு மட்டுமல்ல, முகாமின் அமைவிடம், பாதுகாப்பு, முன்னைய முகாமில் காணப்படுகின்ற வசதிகளைப் புதிய இடத்தில் ஏற்படுத்தல், கடலைக் கண்காணிப்பதற்கு ஏதுவான கேந்திர மய்யம் என்பவை உள்ளிட்ட, நாமறியாத இன்னும் எத்தனையோ விடயங்களைக் கவனித்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவை எல்லாவற்றையும் ஓர் இரவில், ஒரு வாரத்தில் செய்து முடிக்கக் கூடிய பணியல்ல என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், சிலாவத்துறை மக்கள் இன்று நேற்று இப்போராட்டத்தில் இறங்கவில்லை. ஒரு வாரத்துக்குள், மாதத்துக்குள் படை முகாமை அகற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கவும் இல்லை. மாறாக, கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாகத் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக, கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இப்போது 34 ஏக்கர் காணியையும் விடுவித்திருக்கலாம் என்பதையும் மறுதலிக்கக் கூடாது. எனவே, சிலாவத்துறை மக்களின் நியாயமான கோரிக்கையை, அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். கேப்பாப்புலவு பிரதேசத்தில் படை முகாமை அகற்றி, தமது காணியைத் தருமாறு தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக, கேப்பாப்புலவுக் காணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக, சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், சிலாவத்துறை மக்களின் கோரிக்கையை, ஜனாதிபதியிடம் கொண்டு செல்வதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும், அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, கேப்பாப்புலவு தமிழர்களுக்கு கிடைத்த ‘சந்தோஷமான’ செய்தியை, சிலாவத்துறை முஸ்லிம்களுக்கும் பெற்றுத்தர முஸ்லிம் தலைமைகள் முன்னிற்க வேண்டியது தார்மீகமாகும். காணியற்ற மக்கள் கூட்டம் காணிகள் மனித வாழ்வுக்கும் பௌதீக ரீதியான இருப்புக்கும் அடிப்படையான தேவைப்பாடாகக் காணப்படுகின்றன. சனத்தொகையின் பரம்பலுக்கு அமைவாக, காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனச் சர்வதேச சட்டங்களும் சமவாயங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், நிதர்சனம் வேறு விதமானதாக இருக்கக் காண்கின்றோம். 2017ஆம் ஆண்டு, உலக வங்கி நடத்திய நிலம் மற்றும் வறுமை மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணி உரிமையைப் பாதுகாத்தல் என்பது வறுமையைக் குறைப்பதற்கும் நாட்டிலும் சமூகத்திலும் குடும்ப மட்டத்திலும் பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டது. உலக சட்டங்கள் மட்டுமன்றி, உரிமைசார் அமைப்புகளும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட்டு வருவது போல, சனத்தொகைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினர் (குறிப்பாக பெண்கள், சுதேசிகள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பிரிவினர்) தமக்குரிய காணி உரிமையை உறுதி செய்வதற்கான பங்களிப்புகளை, உலக வங்கியும் வழங்கி வருகின்றது. எது எவ்வாறிருப்பினும், உலகெங்கும் பெருந்தொகையான, காணியற்ற மக்கள் மட்டுமன்றி நாடற்ற மனிதர்களும் உள்ளனர். உலக வங்கியின் தரவுகளின் படி, உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மிகக் குறைவான மக்களே தமது பெயரில் காணிகளைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்தவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் மூன்று மாகாணங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர். ஆனால், மொத்த நிலத்தில் 23சதவீதமே அம்மக்களுக்கு உள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது. அத்துடன், இலங்கையில் சொந்தமாகக் காணிகளே இல்லாத மக்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றது என்றாலும், காணியற்ற இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கின்றனர். இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான ஹெக்டேயர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளன. அதுமட்டுமன்றி, முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஏற்ப, காணிகளும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே, காணிப் பிரச்சினையே இன்று முஸ்லிம்களுக்கு முதன்மையானது என்பது கவனிப்புக்குரியது. இடம்பெயர்ந்த மக்களின் உரித்துக்கள் பற்றி, ஐக்கிய நாடுகள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து ‘பின்ஹெய்ரோ கோட்பாடுகள்’ என்ற தலையங்கத்தின் கீழ் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களினதும் அகதிகளினதும் வீடுகள், காணிகள் போன்றவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிச் சில கோட்பாடுகளை இயற்றியுள்ளார்கள். பொருட்கோடல் உள்ளடங்கலாக 23 கொள்கைக் கருத்துகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அவற்றில் இருந்து முக்கியமான, இரண்டாவது கொள்கைக் கருத்து பின்வருமாறு அமைகின்றது: 2.1. ‘எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆதனத்தில் இருந்தோ எதேச்சாதிகாரமாகவோ அல்லது சட்டத்துக்கு மாறாகவோ எந்தவோர் அகதியோ அல்லது இடம்பெயர்ந்த நபரோ வெளியேற்றப்பட்டிருப்பின் அவர்கள் அவ்வீட்டிலோ காணியிலோ அல்லது ஆதனத்திலோ மீளக் குடியமர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் ஆவார். அத்துடன், ஏதேனும் ஒரு சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைச்சபை ஒன்றால் வீடோ, காணியோ, ஆதனமோ உண்மையில் திரும்பப் பெற முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாகக் காணப்படுமிடத்து அதற்கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்துடையவராவார்.’ 2.2. ‘இடம்பெயர்வுக்குத் தக்க நிவாரணமாக அரசாங்கங்கள் ஆதன மீளளிப்பையே முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதனையே மீளளிக்கும் நீதியின் மிக முக்கியமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மீளளிப்புப் பெறும் உரித்தானது துல்லியமான ஒரு தனியுரித்து. வீடு, காணி, ஆதனம் ஆகியவற்றுக்கு உரிமையுடைய அகதிகளோ, இடம்பெயர் நபர்களோ திரும்ப வந்தால் என்ன, வராதிருந்தால் என்ன மேற்படி உரித்தானது எந்த விதத்திலும் பாதிப்படையாது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைக் கருத்தானது மீள்க்குடியிருப்பு என்ற தனியுரித்து எந்தளவுக்குச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிலாவத்துறை-காணி-மீட்பு-போராட்டம்/91-230920

சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்

1 day 4 hours ago
சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்
மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0

image_fc3b3d4b43.jpgமனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.   

ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர்.   

தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.   

இலங்கையிலும் காணி இழந்த மக்களின் கோரிக்கைகள், வெகுஜனப் போராட்டங்களாக மேற்கிளம்பத் தொடங்கியுள்ளதைக் காண முடிகின்றது. தமிழர் தரப்பில், இவ்வாறான நிறையப் போராட்டங்கள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருக்கத் தக்கதாக, இப்போது வடபுலத்தின் சிலாவத்துறை முஸ்லிம்களால், காணிமீட்புப் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.   

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, சிலாவத்துறை பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், மீளக் குடியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படை முகாமை அகற்றுமாறு, இத்தனை நாள்களாகக் கோரிவந்த முஸ்லிம் மக்கள், இப்போது காணி விடுவிப்புக்கான தொடர் போராட்டத்தை, 23 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர்.   

கேப்பாப்புலவு தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் கூட, சிலாவத்துறை முஸ்லிம்களின் 34 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நல்ல சமிக்ஞைகளோ, காத்திரமான அரசியல் நகர்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை.   

இதனால், தொடர் வெகுஜனப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இன்று வெள்ளிக்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

1990ஆம் ஆண்டில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தக் காலப் பகுதியில், சிலாவத்துறையில் வாழ்ந்த சுமார் 220 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேறி, வேறு இடங்களில் வசித்து வந்தனர். 

இந்நிலையில், யுத்தம் முடிந்த கையோடு, அதாவது 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், அம்மக்கள் தங்களது குடும்பங்கள், வாரிசுகளோடு திரும்பி வந்து, மீளக் குடியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.   

220 குடும்பங்களாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், 19 வருடங்களுக்குப் பிறகு, சொந்த மண்ணுக்குத் திரும்பிய போது, 625 குடும்பங்களாகப் பெருகியிருந்தனர். எனவே, அவர்களுக்குக் காணி மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. 

ஆனால், ஏற்கெனவே இம்மக்களுக்குச் சொந்தமாக இருந்த 34 ஏக்கர் நிலப்பரப்பில் கூட, குடியேற முடியாதவாறு, அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.   

அன்று தொடக்கம் இன்று வரை, தமது காணிகளை விடுவிக்குமாறும் கடற்படை முகாமை வேறோர் இடத்துக்கு மாற்றுமாறும், சிலாவத்துறை மக்கள் பல வழிகளிலும் குரல்கொடுத்து வருகின்றனர்.   

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், கட்டம் கட்டமாகப் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், பலனேதும் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதியில் இருந்து, கூடாரமடித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

தமது மண்ணுக்கு மீளத் திரும்பியிருந்த சுமார் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்படுகின்ற 34 ஏக்கர் காணியிலிருந்து, கடற்படை முகாம் அகற்றப்பட்டு, அக்காணியை விடுவிக்காமல் இழுத்தடித்து வருகின்றமையால் அல்லது அதைச் செய்யக் கூடாது என்று அரசாங்கம் நினைத்து இருக்கின்றமையால், மேற்படி இருநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள், தமது பூர்வீகக் காணியில் மீள்குடியேற முடியாமல், இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.   

ஆனபோதும், ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர, ஏனைய அரசியல் தலைமைகளோ, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, தமது போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று அப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.   

முத்துக்குளிப்புக்குப் பெயர்போன இடம் என்பதற்கு மேலதிகமாக, பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் மிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை, வடமாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முசலியின் பிரதான ஊராகக் கருதப்படுகின்றது.   

அத்துடன், சுற்றியுள்ள 25 இக்கும் மேற்பட்ட கிராமங்கள், குக்கிராமங்களின் பிரதான நகர் போலவும் சிலாவத்துறை திகழ்கின்றது. இருப்பினும், அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஒரு தொகுதி மக்களின் காணிகளில், அவர்கள் மீளக் குடியேற முடியாத நெருக்கடி, கடந்த 10 வருடங்களாக நீடித்து வருகின்றமை கவலைக்குரியது.   

தமது காணிகளில் இருந்து கடற்படை முகாமை அகற்றி, மீள்குடியேற்றத்துக்கு வழிவிட்டுத் தருமாறு, பல வருடங்களாக இம்மக்கள் கோரி வருகின்றனர். 

இதற்காகத் ‘தபாலட்டைப் போராட்டம்’, கூட்டங்கள், பேரணிகள், மகஜர் கையளிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் என, எல்லா வடிவிலான போராட்ட முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர்.   

அதேநேரம், அரசியல் தலைவர்களால் மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கூட, வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஆன பயன் எதுவுமில்லை என்று, இம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.   

இந்த 34 ஏக்கரில் ஆறு ஏக்கரை விடுவிப்பதாக முன்னரே பிரதமர் கூறியிருந்ததற்கு அமைவாக, ஆறு ஏக்கர் காணியை மட்டும் விடுவித்தால் கூட, அது போதாது என்று, இதற்காகக் குரல் கொடுப்போர் கூறுகின்றனர். 34 ஏக்கர் காணியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருக்கத்தக்கதாக, ஆறு ஏக்கர் காணியில் 200 குடும்பங்கள் வாழ்வதென்பது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.   

எனவே, எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படுவதுடன் அருகிலுள்ள வேறோர் இடத்துக்குக் கடற்படை முகாமை நகர்த்துமாறு, பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய இன மக்களும் கோரி வருகின்றனர்.   

இவ்வாறிருக்கையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள பிரதேச மக்கள் பிரதிநிதியும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றிருக்கின்றார். அத்துடன், இது தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றும் அவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.   

image_fc1119403e.jpg

இக்கூட்டத்தில், மக்கள் தமது மனக் கிடக்கைகளை முன்வைத்தனர். “பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த, எமக்குச் சொந்தமான காணிகளை, நாங்கள் பறிகொடுத்துப் பரிதவிக்கின்றோம். 10 வருட‍ங்களாக நாங்கள் இந்தக் காணி விடுவிப்புக்காகப் போராடி வருகின்றபோதும், இதுவரை எமக்கு நீதியோ, நியாயமோ கிடைக்கவில்லை. எனவேதான், தற்போது கடற்படை முகாமை அகற்றச் சொல்லி வருகின்றோம். நீங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, எமது காணியை மீட்டுத்தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.  

இக்கூட்டத்தில், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் புள்ளிவிவர அடிப்படையிலான தரவுகளை முன்வைத்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், “மொத்தமாக 34 ஏக்கர் காணி, கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், ஆறு ஏக்கர் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. 

இரண்டு ஏக்கர் காணி, பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர், எஞ்சிருப்பது 26 ஏக்கர் ஆகும். இந்த 26 ஏக்கரில், 35 பேருக்கு வருடாந்த பெர்மிட், 18 பேருக்கு எல்.டி.ஓ. (காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழானது), நான்கு பேருக்கு கிராண்டும் (நன்கொடை அல்லது அளிப்பு), 13 பேருக்கு உறுதியும் இருக்கின்றன” என்று தெரிவித்ததாக அறிய முடிகின்றது.   

அத்துடன், “12 பேர் காணிகளை அடாத்தாகத் தமக்குச் சொந்தமாக்கி உபயோகப்படுத்தினர்” என்று சுட்டிக்காட்டிய அவர், “ஏற்கெனவே பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில், கடற்படையினருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கு இடமாறிச் செல்வதற்கான உறுதிமொழிகளும் தரப்பட்டன. இவை தீர்மானமாகவும் உள்ளன” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

அத்தோடு, கடற்படை முகாமை இடம்மாற்றுவதற்காக, மேத்தன்வெளி என்ற இடத்தில் காணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காணி அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

சிலாவத்துறையில் மேற்படி சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில், 18 வருடங்களாக முஸ்லிம்கள் வாழவில்லை. இந்தக் காலப் பகுதியிலேயே யுத்த மேகம் சூழ்ந்திருந்தது. கடற் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்டே, இங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

அத்துடன், ஒரு படை முகாமை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றுவது என்பது, சிறிய விடயமல்ல. அது, அங்கு இருக்கின்ற ஆயுத தளவாடங்களையும் படையினரையும் இடம்மாற்றுதலுடன் தொடர்புடைய செயற்பாடு மட்டுமல்ல, முகாமின் அமைவிடம், பாதுகாப்பு, முன்னைய முகாமில் காணப்படுகின்ற வசதிகளைப் புதிய இடத்தில் ஏற்படுத்தல், கடலைக் கண்காணிப்பதற்கு ஏதுவான கேந்திர மய்யம் என்பவை உள்ளிட்ட, நாமறியாத இன்னும் எத்தனையோ விடயங்களைக் கவனித்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

இவை எல்லாவற்றையும் ஓர் இரவில், ஒரு வாரத்தில் செய்து முடிக்கக் கூடிய பணியல்ல என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.   

ஆனால், சிலாவத்துறை மக்கள் இன்று நேற்று இப்போராட்டத்தில் இறங்கவில்லை. ஒரு வாரத்துக்குள், மாதத்துக்குள் படை முகாமை அகற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கவும் இல்லை.   

மாறாக, கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாகத் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக, கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இப்போது 34 ஏக்கர் காணியையும் விடுவித்திருக்கலாம் என்பதையும் மறுதலிக்கக் கூடாது. எனவே, சிலாவத்துறை மக்களின் நியாயமான கோரிக்கையை, அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.   

கேப்பாப்புலவு பிரதேசத்தில் படை முகாமை அகற்றி, தமது காணியைத் தருமாறு தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக, கேப்பாப்புலவுக் காணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக, சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.  

ஆனால், சிலாவத்துறை மக்களின் கோரிக்கையை, ஜனாதிபதியிடம் கொண்டு செல்வதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும், அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.   எனவே, கேப்பாப்புலவு தமிழர்களுக்கு கிடைத்த ‘சந்தோஷமான’ செய்தியை, சிலாவத்துறை முஸ்லிம்களுக்கும் பெற்றுத்தர முஸ்லிம் தலைமைகள் முன்னிற்க வேண்டியது தார்மீகமாகும்.   

காணியற்ற மக்கள் கூட்டம்

காணிகள் மனித வாழ்வுக்கும் பௌதீக ரீதியான இருப்புக்கும் அடிப்படையான தேவைப்பாடாகக் காணப்படுகின்றன. 

சனத்தொகையின் பரம்பலுக்கு அமைவாக, காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனச் சர்வதேச சட்டங்களும் சமவாயங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், நிதர்சனம் வேறு விதமானதாக இருக்கக் காண்கின்றோம்.   

2017ஆம் ஆண்டு, உலக வங்கி நடத்திய நிலம் மற்றும் வறுமை மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணி உரிமையைப் பாதுகாத்தல் என்பது வறுமையைக் குறைப்பதற்கும் நாட்டிலும் சமூகத்திலும் குடும்ப மட்டத்திலும் பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டது.   

உலக சட்டங்கள் மட்டுமன்றி, உரிமைசார் அமைப்புகளும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட்டு வருவது போல, சனத்தொகைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினர் (குறிப்பாக பெண்கள், சுதேசிகள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பிரிவினர்) தமக்குரிய காணி உரிமையை உறுதி செய்வதற்கான பங்களிப்புகளை, உலக வங்கியும் வழங்கி வருகின்றது.   

எது எவ்வாறிருப்பினும், உலகெங்கும் பெருந்தொகையான, காணியற்ற மக்கள் மட்டுமன்றி நாடற்ற மனிதர்களும் உள்ளனர். உலக வங்கியின் தரவுகளின் படி, உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மிகக் குறைவான மக்களே தமது பெயரில் காணிகளைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்தவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.   

இலங்கையைப் பொறுத்தமட்டில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் மூன்று மாகாணங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர். ஆனால், மொத்த நிலத்தில் 23சதவீதமே அம்மக்களுக்கு உள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது.   

அத்துடன், இலங்கையில் சொந்தமாகக் காணிகளே இல்லாத மக்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றது என்றாலும், காணியற்ற இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கின்றனர்.   

இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான ஹெக்டேயர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளன.  

 அதுமட்டுமன்றி, முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஏற்ப, காணிகளும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே, காணிப் பிரச்சினையே இன்று முஸ்லிம்களுக்கு முதன்மையானது என்பது கவனிப்புக்குரியது.   

இடம்பெயர்ந்த மக்களின் உரித்துக்கள் பற்றி, ஐக்கிய நாடுகள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து ‘பின்ஹெய்ரோ கோட்பாடுகள்’ என்ற தலையங்கத்தின் கீழ் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களினதும் அகதிகளினதும் வீடுகள், காணிகள் போன்றவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிச் சில கோட்பாடுகளை இயற்றியுள்ளார்கள். 

பொருட்கோடல் உள்ளடங்கலாக 23 கொள்கைக் கருத்துகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அவற்றில் இருந்து முக்கியமான, இரண்டாவது கொள்கைக் கருத்து பின்வருமாறு அமைகின்றது:   

2.1. ‘எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆதனத்தில் இருந்தோ எதேச்சாதிகாரமாகவோ அல்லது சட்டத்துக்கு மாறாகவோ எந்தவோர் அகதியோ அல்லது இடம்பெயர்ந்த நபரோ வெளியேற்றப்பட்டிருப்பின் அவர்கள் அவ்வீட்டிலோ காணியிலோ அல்லது ஆதனத்திலோ மீளக் குடியமர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் ஆவார். அத்துடன், ஏதேனும் ஒரு சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைச்சபை ஒன்றால் வீடோ, காணியோ, ஆதனமோ உண்மையில் திரும்பப் பெற முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாகக் காணப்படுமிடத்து அதற்கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்துடையவராவார்.’  

2.2. ‘இடம்பெயர்வுக்குத் தக்க நிவாரணமாக அரசாங்கங்கள் ஆதன மீளளிப்பையே முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதனையே மீளளிக்கும் நீதியின் மிக முக்கியமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீளளிப்புப் பெறும் உரித்தானது துல்லியமான ஒரு தனியுரித்து. வீடு, காணி, ஆதனம் ஆகியவற்றுக்கு உரிமையுடைய அகதிகளோ, இடம்பெயர் நபர்களோ திரும்ப வந்தால் என்ன, வராதிருந்தால் என்ன மேற்படி உரித்தானது எந்த விதத்திலும் பாதிப்படையாது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  

இந்தக் கொள்கைக் கருத்தானது மீள்க்குடியிருப்பு என்ற தனியுரித்து எந்தளவுக்குச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிலாவத்துறை-காணி-மீட்பு-போராட்டம்/91-230920

ஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி

1 day 4 hours ago
ஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி ஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.சுகாஸ் ஆகியோரும் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் தற்போது ஜெனீவாவில் களமிறங்கியுள்ளனர். எனினும், இவர்களிற்குள் ஒருங்கிணைந்த தன்மை ஏற்படாத நிலையில், தனித்தனியாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் தரப்பினரை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஜெனீவாவிலுள்ள சில தனிநபர்கள் ஆரம்பித்துள்ளனர். இது குறித்து கலந்தரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதனிடையே, இலங்கை அரசுடன் நெருக்கமாகவுள்ள உலகத் தமிழர் பேரவையினரும் இம்முறை ஜெனீவாவில் தமிழ் தரப்புக்களுடன் இணைந்துகொண்டு செயற்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தமிழர் பேரவையினரை விடுத்து ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில் எந்த சிக்கலுமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை அரசாங்கம் சார்பாக தென்னிலங்கையிலிருந்து சென்றுள்ள சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/ஜெனீவாவில்-தமிழ்-தரப்புக/