நாவூற வாயூற

பால் ரொட்டி......!

1 week 6 days ago

இந்தப் பால்ரொட்டி என்பது எமது திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களில் பலகாரமாக மட்டுமின்றி திருஷ்டி கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது..... இதை செய்வதில் சில நுணுக்கங்கள் உண்டு, முக்கியமாக பதமாக குறுநல் எடுப்பது. பெண்கள் இதை செய்யும்போது ஆண்களையோ, பொடியளையோ அடுப்படிக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.(ரொட்டி பொங்காதாம்). அப்படியும் பால்ரொட்டி செய்ய கிளம்பி பப்படம் அளவுகூட பொங்காமல்  பாவப்பட்ட ஜென்மங்களாய் திரும்பியவர்களை வரலாறு அறியும்.அவர்களின் ஏக்கங்களைப் போக்கும் பொருட்டு.......!   😂

 

முட்டை பொரிப்பது எப்படி?

3 weeks 3 days ago

நானும் எத்தனை ஆயிரம் முட்டை பொரிச்சு இருப்பன்....ஆனால் இப்படி எல்லாம் மினக்கெடவில்லை. 

நான் பார்த்தவரைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சில சில மாறுதல்களுடன் முட்டை பொரிப்பர். உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் என்னமாதிரி முட்டை பொரிப்பீர்கள் என அறியத் தந்தால் முட்டை பொரியல் பற்றி சுவாரசியமான திரியாக அமையும்.

சிக்கன் மஞ்சூரியன் செய்ய....

3 weeks 4 days ago
 
சூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...!
1548678658-7182.jpg
தேவையான பொருட்கள்:
 
கோழிக்கறி - 400 கிராம் 
முட்டை - 1
கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று 
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
 
செய்முறை:
 
கோழிக் கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 மேசைக்கரண்டி  கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதனை நன்கு  பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். 
 
வெங்காயத்தை தோலுரித்து மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினையும் தோலுரித்து பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். 
 
குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும்  நீளவாக்கில் குறுக்காக வெட்டிக் கொள்ள வேண்டும். மீதமுள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். 
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப்  பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து விட வேண்டும். மற்றொரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கின இஞ்சி  பூண்டினைப் போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க  வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, ஸ்டாக், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். 
 
பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலக்கி வேகவிட வேண்டும். அதில் நறுக்கின குடை மிளகாய், வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறக்குவதற்கு  முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.

கறிவேப்பிலை சட்னி

4 weeks 1 day ago
1548330553-1181.jpg
 
 
கறிவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன்  இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கறிவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும்.
 
தேவையான பொருட்கள்:
 
கறிவேப்பிலை - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
 
செய்முறை:
 
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.
 
பின்னர் நன்கு கழுவிய கருவேப்பிலையை சேர்த்து வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். சிறிய துண்டு புளி கலந்து  அடுப்பை அணைத்து விடவும்.
 
ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து  மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன்  பரிமாறலாம்.

ஆமைக்கறி உடலுக்கு நல்லதா? - உண்டவரின் உண்மை கதை

4 weeks 2 days ago
டிம் சாமுவேல் பிபிசி
 
 •  
கடல் ஆமைபடத்தின் காப்புரிமை Getty Images

ஆமைக்கறி உண்மையில் உடலுக்கு நல்லதா? அது தேவையான புரதத்தை உடலுக்கு வழங்குமா? என்ன சொல்கிறார் அதனை மட்டுமே உண்டு பல நாட்கள் கடலில் வாழ்ந்தவர்.

வாருங்கள் ராபர்ட்சன்னின் கதையை கொஞ்சம் கேட்போம்.

பாய்மர கப்பல் பயணம்

டோக்லஸ் ராபர்ட்சன்னுக்கு அப்போது 18 வயது. அந்த சமயத்தில்தான் அவரது தந்தை டோகல் அந்த விசித்திரமான முடிவை எடுத்தார். டோகல் ஒரு முன்னாள் கப்பற்படை அதிகாரி, அவர்தமது பண்ணை வீட்டை விற்றுவிட்டு, ஒரு பாய்மரக் கப்பல் வாங்க முடிவு செய்தார். அந்த பாய்மர கப்பலில் உலகம் முழுவதும் தம் குடும்பத்துடன் பயணிக்கலாம் என்பது அவர் திட்டம். அந்த பயணம் தமது குடும்பத்திற்கு பெருமகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நினைத்தார்.

கடல் ஆமைபடத்தின் காப்புரிமை Getty Images

எல்லாம் மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது, அவர்கள் அந்த விபத்தில் சிக்கும்வரை.

1971ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த பயணம் குறித்து ராபர்ட்சன் விவரிக்கிறார், "எல்லாம் மிகச்சரியாக சென்று கொண்டிருந்தது. தினம் தினம் சாகசம்தான்." என்கிறார்.

ஆத்ம திருப்தியுடன் பயணம் சென்று கொண்டிருந்த ஒரு நாள், எங்கள் பாய்மர கப்பலை திமிங்கல கூட்டம் கலாபகொஸ் தீவு அருகே மோதியது. நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வெளியேறி ரப்பர் படகில் ஏறினோம் என்று நான்கு தசாப்தத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார்.

ஆமைக்கறியின் அறிமுகம்

கையில் மிகக்குறைவான உணவுப் பொருள் இருப்பே இருந்திருக்கிறது. உயிருடன் இருக்க வேண்டுமானால் கடல் இவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இப்படியான சூழலில், கப்பல் விபத்து நடந்த ஆறாம் நாள், இவர்கள் உணவுக்காக ஒரு கடல் ஆமையை பிடித்திருக்கிறார்கள்.

ராபர்ட்சன் குடும்பம் - கடல் ஆமைக் கறி வாழ்வுபடத்தின் காப்புரிமை Other

உண்மையில் இவர்கள் நாட்களை அந்த கடல் ஆமைதான் ரட்சித்திருக்கிறது. ஆம், இவர்களின் பிரதான உணவாக அது மாறி இருக்கிறது.

ராபர்ட்சன்னின் வார்த்தைகளில் கேட்போம், "ஆமைக்கறியின் ரத்தத்தை அருந்தி ஆளுக்கு ஒரு கவளம் ஆமைக்கறி சாப்பிட்டோம். ரத்தம் கெட்டியாக இருந்ததால், அதனை உண்பதுதான் கடினமாக இருந்தது." என்கிறார்.

நாட்கள் மெல்ல நகர்ந்தன. மீட்பர்கள் வரவில்லை. ஆமைக்கறி அவர்களின் அன்றாட உணவாக மாறியது.

ஆமைகளின் எலும்பும், ஆமை முட்டையிலிருந்து செய்யப்பட்ட சூப்பும் இவர்களது உணவாக ஆகி இருக்கிறது.

ஆறு வாரம் அவர்களின் உணவாக இந்த ஆமைக்கறி இருந்திருக்கிறது.

முப்பதெட்டு நாட்களுக்குப்பின், ஒரு ஜப்பானிய கப்பல் அவர்களை மீட்டு இருக்கிறது.

ஆமைக்கறி நல்லதா?

ராபர்ட்சனின் குடும்பம் ஒரு இக்கட்டான சூழலில் ஆமைக்கறி உண்டு வாழ்ந்தது. அதுவொரு கையறு நிலை, அப்போது பரவாயில்லை. எப்போதும் உண்டு உயிர் வாழ முடியுமா?

ஊட்டச்சத்து நிபுணர் ஜொ ட்ராவர்ஸ், "ஆமைக்கறியில் நிறைய புரதம் உள்ளது, கொஞ்சம் கூட கார்போஹைட்ரேட் இல்லை" என்கிறார்.

ஆமைக்கறி உடலுக்கு நல்லதா? - உண்டவரின் உண்மை கதைபடத்தின் காப்புரிமை Getty Images

மேலும், அதில் செலினியம், விட்டமின் பி12, இரும்பு சத்து, ஜின்க் என ஏராளமான நுண்சத்துகள் உள்ளன.

ஆனால், அதில் நார் சத்து, விட்டமின் ஏ மற்றும் சி, ஒமேகா 3 அதில் இல்லை. இது இறுதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்கிறார்.

அமெரிக்க அதிபரின் உணவுத் தட்டில்

அமெரிக்க அதிபரின் உணவுத் தட்டிலும் ஆமைக்கறி உணவு வகை இருந்திருக்கிறது.

அமெரிக்க அதிபராக இருந்த வில்லியம் டாஃப்ட், ஆமைக்கறி சூப் சமைப்பதற்கென்றே ஒரு சமையல்காரரை நியமித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-46961212

கத்தரிக்காய் மிளகு கறி

1 month ago

கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ்.  சூடான ரைஸ் உடன் பரிமாறவும்.

Brinjals

<img class="alignnone size-full wp-image-16470" itemprop="image" src="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg" alt="Brinjals" width="553" height="400" itemprop="image" srcset="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg 553w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-300x217.jpg 300w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-40x30.jpg 40w" sizes="(max-width: 553px) 100vw, 553px" title="Brinjals">

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – அரை கப் (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – இரண்டு தேகரண்டி

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

பூண்டு – இரண்டு பல்

மஞ்சள் தூள் – சிறிதளவு

தேங்காய் பால் – முக்கால் டம்ளர்

கரிவேபில்லை – சிறிதளவு

அரைக்க:

பூண்டு – நான்கு பல்

மிளகு – ஒன்று கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

முன்றையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின், அரைத்த விழுது சேர்த்து கிளறி சிம்மில் வைத்து எட்டு நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்.

பிறகு, தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கிரேவி பதம்வந்ததும் கரிவேபில்லை போட்டு இறக்கவும்.

https://www.awesomecuisine.com/recipes/22996/kathirikai-milagu-curry-in-tamil.html

கற்கண்டு பொங்கல்

1 month 1 week ago

பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். தற்போது கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கல்கண்டு :400 கிராம்

பால் : 1 லிட்டர்

திராட்சை : 10௦

நெய் : 200 கிராம்

முந்திரி : 10௦

பச்சரிசி : 500 கிராம்

ஏலக்காய் : சிறிதளவு தூள்

செய்வது எப்படி :

எடுத்து வைத்த கல்கண்டை நன்றாக பொடித்து கொள்ளவும்.

பின்னர் பச்சரிசியை நன்றாக கழுவி அதை அரை மணி நேரம் ஊற வைத்து ரவையை போல உடைத்து கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். காய்ச்சிய பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் ஏற்கனவே உடைத்து வைத்திருந்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.

இதன் பின் இடையிடையே தேவையான நெய்யை சேர்க்கவும்.

இதற்கு பிறகு பொடித்த கல்கண்டை சேர்த்தவுடன் கல்கண்டு கரைந்ததும் நெய்யால் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யை ஊற்றி நன்கு கலந்து விட்ட பிறகு இறக்கி எடுத்த 10 நிமிடம் கழித்து பரிமாறினால் சூப்பரான தித்திக்கும் சுவையான கல்கண்டு பொங்கல் ரெடி.

 

49608131_1128448007333607_8574199725908033536_n.jpg

https://www.facebook.com/தமிழ்-சமையல்-முறைகள்-2019-299170813594668/?__tn__=%2CdkCH-R-R&amp;eid=ARBNwEYPANzX6pD2lfMzCSMuBN90JEmXN6Hx9U9Gx3YMIYe_FVglYuf7VGHbODe-JBR03EZ5ETmxy_wv&amp;hc_ref=ARQc4pyX-ibwML1-Qb4U2t3tIFCSXcGpW9a5VhyHO1f6BnxBbwkdo-GxbE9jBHGlCPA&amp;fref=nf&amp;hc_location=group

கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை

1 month 2 weeks ago
கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை
Untitled-1-1_zpsccdbd618.jpg  

1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும் 

தேவையான பொருட்கள் 

 1. செத்தல் மிளகாய் - 500 கிராம் 
 2. மல்லி - 400 - 500 கிராம் 
 3. பெருஞ்சீரகம் - 100 கிராம் 
 4. மிளகு - 50 கிராம் 
 5. சிறிதாக வெட்டிய மஞ்சள் - 25 கிராம் 
 6. கடுகு - 1 மே. க. ( நிரப்பி )
 7. வெந்தயம் - 1 மே. க . ( நிரப்பி )
 8. நற்சீரகம் - 2 மே . க ( நிரப்பி ) 
 9. இறைச்சி சரக்கு - 2 பக்கட் ( சிறியது )
 10. கறிவேப்பிலை - 10 நெட்டு 

செய்முறை :-

 • மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . 

 

 • மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு  சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி கொண்டபின் , மிளகாய் விதைகள் வேறாகவும் , மிளகாய் தோல் வேறாகவும் பிரித்து எடுத்துக் கொள்க . ( விதைகளை வேறாக எடுக்கா விடல் வறுக்கும்போது கருகிவிடும் ) 

 

 • பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் மல்லியை இட்டு வறுக்கவும் . மல்லி சரியாக வறுக்கபட்டிருப்பின் விரல்களின் இடையே வைத்து நசுக்கி பார்க்கும் போது தூளாக உதிரும் பருவத்தில் மல்லியை எடுத்துக் கொள்க .மீண்டும் தாய்ச்சியில் பெருஞ்சீரகத்தை போட்டு வறுத்து , விரல்கள் இடையே வைத்து நசிக்கும் போது உதிரும் பருவத்தில் எடுத்துக் கொள்க . 

 

 • மீண்டும் தாய்ச்சியில் நற்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் . கச்சான் முத்து , கறிவேப்பிலை என்பவற்றை போட்டு வறுத்துக் கறிவேப்பிலை முறுகிய பதத்தில் எடுத்துக் கொள்க  

 

 • இவ் வண்ணமே மிளகாய் விதைகளைத் தனியாக பொன் நிறமாக  வறுத்தெடுத்துக் கொள்க . மிளகாய்த் தோலை தனியாக நன்றாக சூடாகும்வரை  வறுத்தெடுத்து  கொள்க . 

 

 • பின்பு வறுத்த மல்லி , பெருஞ்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் , கச்சான் முத்து , கறிவேப்பிலை , மிளகாய் விதை , மிளகாய் தோல்  என்பவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து திரித்தெடுத்து  நன்றாக ஆற வைத்து அரித்தெடுத்துக் கொள்க . 

 

 • காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம் .

குறிப்பு :-

விரும்பினால் ஒரு பிடி உழுந்து , அரிசி , கடலைப் பருப்பு , கச்சான் முத்து  என்பவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம் .

 

http://yarlsamayal.blogspot.com/2013/02/blog-post_9228.html?m=0

 

ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...?

1 month 2 weeks ago
ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...?
1546422302-4357.jpg
 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள்.
 
ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:
 
பால் - 1கப் 
ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 
சர்க்கரை - 1/2 கப் 
எசன்ஸ் -1 தேக்கரண்டி 
 
ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள்:
 
வேகவைத்த சேமியா - 1கப் 
ஜெல்லி - 1கப் 
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் - 3
 
செய்முறை:
 
முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்டியே வைத்து விட வேண்டாம்.  பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில்  வைத்து விட வேண்டும் 
 
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5-மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். 
 
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும். பின்பு  மேல் குறிப்பிட்ட அணைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும். சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம்  தயார்.

கிராமத்து கோழி குழம்பு செய்ய..!!

1 month 3 weeks ago
 
கிராமத்து கோழி குழம்பு செய்ய..!!
1546078366-7136.jpg
தேவையான பொருட்கள்:
 
கோழிக்கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 4
சிவப்பு மிளகாய் - 8
தனியா - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1(முழு)
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால் சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போடவும். சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும்.
 
கறி நன்கு வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காயை போட்டு வதக்கி, கறி முழ்கும் அளவு நீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியாக  வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும். சுவையான கிராமத்து கோழிக் குழம்பு தயார்.
 
குறிப்பு: தேங்காய் பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி கோழி குழம்பு செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
Checked
Sat, 02/23/2019 - 10:42
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed