புதிய பதிவுகள்

'புத்தரின் மகள்கள்' - இலங்கை பெண் பௌத்த துறவிகளின் உரிமைப் போராட்டம்

5 months 1 week ago
இந்த வசனம் எதற்காக இடையில் செருகப் பட்டது என்பதற்க்கான காரணம் தெரியவில்லை! வரலாறு உண்மையில் திரிக்கப்படுகின்றதா அல்லது இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதற்கு...ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ...யாராவது அறியத் தாருங்கள்..! சிங்கள மன்னர்கள் தான்...தென்னிந்தியாவிலிருந்து ...இளவரசிகளை மணந்தார்கள் என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன! எனினும்...பிக்குணிகளை.. அவர்கள்: துன்புறுத்தினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது உள்ளது..!

வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா

5 months 1 week ago
வட கொரியாவின் கிறிஸ்மஸ் எச்சரிக்கையை வெற்றிகொள்ள அமெரிக்கா தயார் – ட்ரம்ப் பதிலடி வட கொரியாவின் “கிறிஸ்மஸ் பரிசு” பற்றிய எச்சரிக்கையை சமாளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். மார்-எ-லாகோ விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆச்சரியம் என்ன என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம், அதை நாங்கள் வெற்றிகரமாக சமாளிப்போம். அத்தோடு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். சிலவேளைகளில் இது ஒரு நல்ல பரிசாக கூட இருக்கலாம், ஒரு ஏவுகணை சோதனைக்கு மாறாக அவர் எனக்கு ஒரு அழகான குவளை அனுப்பும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சிங்கப்பூரில் ட்ரம்ப் மற்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையே கடந்த ஆண்டு உச்சிமாநாட்டின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை விரைவில் செயற்படுத்த “உறுதியான நடவடிக்கைகளை” எடுக்குமாறு வொஷிங்டனை சீனா வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர், “ஒரு நிரந்தர சமாதான ஆட்சியை நிறுவுவதற்கும் கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுசக்தி மயமாக்கலை உணர்ந்து கொள்வதற்கும் சாத்தியமான ஒரு உறவுப்பாலத்தை உருவாக்க வட கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு அவர் அழைப்பு விடுத்தார். http://athavannews.com/u-s-ready-to-deal-with-any-north-korean-christmas-gift-trump/

பலத்த பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

5 months 1 week ago
உலகவாழ் கிறிஸ்தவர்களால் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய இலங்கையிலும் இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மக்கள் மகிழச்சியுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கமைய இயேசு பாலனின் பிறப்பைக் குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். இதன்போது பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் திருநாள் திருப்பலியில் பங்குபற்றினர். மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பகுதியை சுற்றி முப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, பாதுகாப்புக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது. இதேநேரம் மன்னார் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. \\ யேசு பிறப்பினையும் அவரின் அவதாரத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் நள்ளிரவு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதற்கமைய மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் யேசு பிறப்பு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தேவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்தபோதிலும் இன்றைய ஆராதனையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், அவ்வாறான சம்பவம் இனியொருபோதும் நடைபெறாமல் இருக்கவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. இந்த வழிபாட்டில் ஆலயத்தின் பங்குத்தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பக்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். வழிபாட்டினையொட்டி பேராலயத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர்,பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மலையகத்திலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் தலவாக்கலையில் உள்ள புனித பத்திரிசியார் தேவலாயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட்தந்தை மெத்யூவினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அத்தோடு, ஈஸ்டர் தினத்தன்று குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக விசேட ஆராதனைகளும் இடம்பெற்றன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். தேவலாயத்திற்குள் பிரவேசிக்கும் பக்தர்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய பின்னர், தேவலாயத்திற்குள் செல்ல அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று பாதுகாப்புக்கு மத்தியில் நத்தார் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. 12 மணிக்கு அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் பெருந்திரலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்கமைய வவுனியா குடியிருப்பு தூய ஆவியானவர் தேவாலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது அதிகளவான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது. அனைத்து தேவாலயங்களிற்கு முன்பாகவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வழிபாடுகளுக்கு சென்றவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் பாதுகாப்பு பணியினால் ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்திலும் நத்தார் தின சிறப்பு வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. நள்ளிரவு வழிபாடுகளும் பல திருச்சபைகளில் முன்னெடுக்கப்பட்டன. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு நத்தார் இன்னிசை வழிபாடும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், தொடர்ந்து திருப்பலியினை அருட்தந்தை அசோகன் ஒப்புக்கொடுத்தார். மாவட்டத்தின் பல திருச்சபைகளிலும் நத்தார் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மக்கள் பலரும் திருப்பலி பூஜைகளில் பங்குபற்றினர். http://athavannews.com/பலத்த-பாதுகாப்புடன்-நாடள/ நத்தார் தினத்தில் வாழ்த்துச் செய்தி மூலம் தமது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்திய ஜனாதிபதி இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சுபீட்சமான நத்தார் உதயமாகட்டும். இனிய நத்தார் வாழ்த்துகள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், "சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மைப் பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக் கொள்வோம். பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றுவோம். அதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும் என்றே கிறிஸ்தவம் போதிக்கின்றது. "நல்ல உள்ளங்கள் அமைதியடையட்டும்" என்பதையே இக்காலத்தில் இசைக்கப்படும் இறை கானங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அத்தகைய தூய உள்ளங்களைக் கொண்ட ஒரு சமூகமே எமது எதிர்பார்ப்பாகும். ஆண்டவரின் ஆசீர்வாதமும் விருப்பமும் அதுவேயாகும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம். இறை ஆசீர்வாதம் பெற்ற வணக்கஸ்தலங்களில் அண்மையில் முகங்கொடுக்க நேர்ந்த துன்பியல் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை இடம்பெறாதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பிறந்துள்ள இந்த நத்தாரை அச்சமும் சந்தேகமுமின்றி நிம்மதியாகக் கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே கருணை உள்ளம் கொண்ட அனைவரினதும் பிரார்த்தனையாக அமைந்த அதேவேளை, மிகுந்த துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான மக்களுக்கு நிம்மதியையும் பெற்றுத் தரும். இயேசு பிரான் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சகல மக்களையும் சமமாக மதித்துப் போற்றும் உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக இந்த உன்னத நத்தார் தினத்தில் நாம் அனைவரும் மீண்டும் திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/statements/01/234655?ref=home-feed

'புத்தரின் மகள்கள்' - இலங்கை பெண் பௌத்த துறவிகளின் உரிமைப் போராட்டம்

5 months 1 week ago
இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ''தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,'' என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள், ''பிக்குணிகள்'' என்று பெண் துறவிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இனியும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்றும் கூறியதால், அடையாள அட்டை பெறும் தகுதி பறிக்கப்பட்டது. அப்போதிருந்து, பௌத்த மத பிக்குணிகள் - கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளைப் போன்றவர்கள் - சிக்கலில் மாட்டியிருக்கின்றனர். உரிமைகள் எதுவும் இல்லாமல் சேவையாற்றும் இவர்கள், சமுதாய மக்களால் நேசிக்கப்படுகின்றனர். 'வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போல எங்களை நடத்துகிறார்கள். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்,'' என்று நாட்டின் மிக மூத்த பெண் துறவியான கோத்மலே ஸ்ரீ சுமேதா பிக்குணி பிபிசியிடம் தெரிவித்தார். ''புத்தரின் மகள்களாக நாங்கள் இந்த மண்ணில் பிறந்தோம். இது பாலின பாகுபாடு இல்லாமல் வேறு எதுவும் இல்லை,'' என்று அவர் கூறினார். 1998ல் உயர் அங்கீகாரம் அளிக்கப்பட்ட 20 துறவிகளில் அவரும் ஒருவர். 'எவ்வளவு குரூர புத்தியுள்ளவர்கள்?' இலங்கையில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பிக்குணிகள் கிடையாது. இலங்கையின் மீது போர் தொடுத்த இந்து, தென்னிந்திய மன்னர்களால், மத அடிப்படையிலான துபுறுத்தல்களால் அவர்கள் இறந்து போய்விட்டனர். பிறகு 1998ல், அந்த நூற்றாண்டில் முதல்முறையாக புதிய பெண் துறவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில், 150 பெண் துறவிகள் உருவாகியிருந்தனர். இப்போது சுமார் 4,000 பேருக்கு மேல் உள்ளனர் என்றும், ஆறு வயது முதல் பெண்கள் துறவிகளாக உள்ளனர் என்றும் கருதப்படுகிறது. ஆனால் எல்லோரும் மகிழ்ச்சியாக இல்லை. அடுத்த புத்தர் தோன்றும் வரையில் பிக்குணி அந்தஸ்துகளை உருவாக்க முடியாது. ஏனெனில் இலங்கையில் கடைபிடிக்கப்படும் பௌத்த பாரம்பர்யத்தில் பெண் துறவிகள் நடைமுறை இல்லை என்று தலைமை மதகுரு கூறியுள்ளார். பெண்கள் துறவிகளாக இருப்பதையே சிலர் ஆட்சேபிக்கின்றனர். ''பெண் பௌத்த துறவிகளுக்கு புத்தர் அனுமதித்த காலத்திலேயே, தயக்கம் இருந்தது. ஏனெனில் பெண்கள் வலு குறைந்தவர்கள், மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலை இருந்தது,'' என்று மான்ட்டா பானி என்ற துறவி பிபிசியிடம் 1998ல் கூறியுள்ளார். அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து, அடையாள அட்டை பெறுவதற்கான உரிமை பறிக்கப்பட்டது. பள்ளிக்கூட இறுதித் தேர்வு எழுதுவதற்காக தேசிய அடையாள அட்டை (என்.ஐ.சி.) பெறுவதற்கு சமந்தபத்ரிகா விரும்பினார். இலங்கையில் அடையாள அட்டை இல்லாமல், உயர்நிலைத் தேர்வுகளில் யாரும் பங்கேற்க முடியாது. ''தலைமை மதகுருக்களின் அனுமதி இல்லாமல் அவருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடியாது என்று பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையர் கூறிவிட்டார்,'' என்று இலங்கையின் வடமேற்கில் தொலைதூரத்தில் உள்ள போதுஹரா நகரில் தன் கோவிலில் இருந்தபடி அவர் பிபிசியிடம் கூறினார். ''எனக்கு மிகவும் சோகமாகிவிட்டது. நான் தேர்வு எழுத முடியாது என்று நினைத்தேன். பிறகு தேசிய பதிவாளர் அலுவலகத்துக்கு நாங்கள் சென்றோம். அவர்களும் மறுத்துவிட்டனர். அப்போது என் குரு பிக்குணியும், சகோதரி பிக்குணியும் அழுதுவிட்டனர்.'' சமந்தபத்ரிகா ஆணாக இருந்திருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆண் பௌத்த துறவிகளுக்கு 16 வயதாகும்போது, அவர்கள் துறவு மேற்கொண்ட பெயரில் தேசிய அடையாள அட்டை அளிக்கப்படும். அவர்களுடைய பிறப்பிடம் தொடங்கி, சிறப்பு பௌத்த பெயர் வரை அதில் இடம் பெற்றிருக்கும். ''இந்த நாட்டில் நாங்கள் என் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்? அவர்கள் மனதளவில் எவ்வளவு குரூரமானவர்கள்,'' என்று ஹல்பனடெனியே சுபேசலா பிக்குனி கேள்வி எழுப்பினார். டெக்கன்டுவேல பிக்குணி பயிற்சி மையத்தில் விரிவுரையாளராக இருக்கும் சுபேசலா, இலங்கையின் கல்வி அமைச்சகத்தில் பெண் துறவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கலுதாரா மாவட்டத்தில் உள்ள அந்த மையத்துக்கு சமீபத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ''இந்த நாட்டில் யாரும் - எந்த சமுதாயத்தினர், மதத்தினர் அல்லது இனக் குழுவினரும் - எங்களைப் போல நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது இல்லை. இந்த நாட்டில் குடிமக்கள் என்ற அடிப்படை உரிமை எங்களுக்கு மறுக்கப்படுகிறது'' என்று அவர் குறிப்பிட்டார். பிக்குணிகளுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கோரி, வேறு பல பெண் துறவிகளுடன் சேர்ந்து அவர் நீண்ட போராட்டம் நடத்தியுள்ளார். அடையாள அட்டை பெற்றவர்களுக்கும் கூட, மிக எளிதில் அதை பறித்துவிடும் வாய்ப்பு உள்ளது. தன் அடையாள அட்டையில் ''பிக்குணி'' என்று குறிப்பிட்டிருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டில் அதைப் புதுப்பித்தபோது, அந்த வார்த்தை காணாமல் போனதை ஒரு பிக்குணி கண்டார். ''தமிழில் 'பிக்குணி' எனும் சொல் இருப்பதை விட்டுவிட்டார்கள். ஆனால் சிங்களத்தில் ஒருபோதும் அது இல்லை'' என்று நீண்டகாலம் போராடிய தலவதுகோடா தம்மதீப்பனி பிக்குணி பிபிசியிடம் கூறினார். 'சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்' பெரும்பாலான இலங்கைவாசிகள் இவர்களின் நிலைமை பற்றி அறியாத நிலையில், பெண் துறவிகள் தனித்துவிடப்பட்டதாக சொல்ல முடியாது. இலங்கையில் பிக்குணி சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அரும்பணி ஆற்றிய டாக்டர் இமானுலுவே ஸ்ரீசிமங்கல தேரோவின் ஆதரவு இவர்களுக்கு உள்ளது. மிக மூத்த தலைமை மதகுருக்களை அவர் விமர்சனம் செய்கிறார். பிக்குணிகள் பிரிவை எதிர்ப்பவர்கள், புத்தரின் போதனைகளை சரியாகப் பின்பற்றுவது இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். புத்தரின் காலத்தில் தலைமை மத குரு என்று யாரும் இருந்தது கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகிறார். புத்தர் ஞானம் பெற்றதும், தனது போதனைகளைப் பின்பற்றுமாறு சீடர்களிடம் கூறினாரே தவிர, தலைமை குருமார்களின் போதனைகளைப் பின்பற்றுமாறு கூறவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த முயற்சியை தாராள கருத்துகள் உள்ள பல துறவிகள் ஆதரிக்கின்றனர். பெண் துறவிகளுக்கு சம உரிமை அளித்தால், பாரம்பரியமான பக்தர்கள் மத்தியில் தங்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் பறிபோய்விடும் என்றும் சிலர் கருதுகின்றனர். கடந்த சுமார் 20 ஆண்டுகளில் தங்களுடைய கடுமையான மற்றும் பணிவான சேவைகள் காரணமாக மக்கள் மனதில் பெண் துறவிகள் இடம் பிடித்துள்ளனர். இருந்தபோதிலும், அவர்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல - அல்லது அதைவிட மோசமாக நடத்தப் படுகின்றனர். ''நாங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைப் போல இருக்கிறோம்'' என்று சுபேசலா பிபிசியிடம் தெரிவித்தார். 'பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து பிராமணர்கள் கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மையைப் போல இது உள்ளது,'' என்றார் அவர். சமந்தபத்ரிகா ஒருவழியாக தேர்வு எழுதிவிட்டார். சமந்தபத்ரிகாவின் குரு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு இலங்கை கல்வி அமைச்சரின் சிறப்பு அனுமதி பெற்றார். இருந்தாலும் அவருக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே 18 வயதாகும்போது அவரால் வாக்களிக்க முடியாது. புத்தரின் போதனைகளின் அடிப்படையில்தான் இந்த நிலைப்பாட்டை தாங்கள் எடுத்திருப்பதாகவும், இதில் பாலின பாகுபாடு எதுவும் இல்லை என்றும் தலைமை மதகுருக்களின் செய்தித் தொடர்பாளர் மேடகமா தம்மானந்த தேரோ கூறினார். இதில் சமரசம் செய்யும் வகையில் ''சங்கைக்குரிய'' (போற்றுதலுக்குரிய) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ள அரசு தயாராக உள்ளது என்று பௌத்த மத விவகாரங்கள் துறையின் கமிஷனர் ஜெனரலான சுனந்தா கரியபெருமா பிபிசி சிங்களப் பிரிவிடம் தெரிவித்தார். தலைமை மத குருக்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற சட்டபூர்வ விதிகள் எதுவும் இல்லை என்றாலும், சில சர்ச்சைகளில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளைத் தொடர்ந்து ''பாரம்பரியங்களே சட்டமாகிவிட்டன'' என்று கரியபெருமா ஒப்புக்கொள்கிறார். இப்போது பெண் துறவிகள் நீதிமன்றங்களை நாடியுள்ளனர்: தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரி இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் அவர்கள் மனு செய்துள்ளனர். சொல்லப்போனால், இலங்கை அரசியல்சாசனத்தை பௌத்த மத விவகாரங்களுக்கான அமைச்சகம் மீறிவிட்டது என்று 2015ஆம் ஆண்டிலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. https://www.bbc.com/tamil/sri-lanka-50906768

யாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை

5 months 1 week ago
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார். வடக்கில் இடம்பெற்று வரும் மண் கொள்ளை, வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் தொடர்பாக கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். “யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து முன்னெடுப்பார்கள். பொது மக்கள் உரிய தகவல்களை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன குறிப்பிட்டார். நேற்றைய சந்திப்பின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் பலராலும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. ரெமிடியஸ் கருத்து தெரிவிக்கையில் “அரியாலை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்யும் பட்சத்தில் மணல் கடத்தல்காரர்களை இலகுவாக கைது செய்ய முடியும்” என குற்றம் சாட்டினார். அத்தோடு தான் இவ்வளவு காலத்தில் பலதரப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலமும் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்திருந்தும் இன்றுவரை போதைப்பொருள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எவையும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். அத்தோடு அங்கு கருத்துரைத்த மாநகரசபை உறுப்பினர் செல்வவடிவேல், பொலிஸாருக்கு நாம் தகவலை வழங்கும் போது அந்தத் தகவல் சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்டவருக்கு செல்கின்றது. எனவே பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொதுமக்கள் பயப்படுகிறார்கள். எனவே இவை அனைத்தையும் நாங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். https://www.virakesari.lk/article/71742

இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் - சிவாஜிலிங்கம்

5 months 1 week ago
தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீங்கள் வாள் எடுத்தால் நாங்களும் வாள் எடுக்கத் தயங்கமாட்டோம். ஆனாலும் அந்த நிலைமைக்கு எங்களையும் நிர்ப்பந்திக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென்று தெற்கில் எழுப்பப்படுகின்ற கோரிக்கை மற்றும் வாள் கொண்டு விரட்டியடிப்போம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கு எதிராக தெற்கிலுள்ள பௌத்த பீடங்களும் சில அரசியல்வாதிகளும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். அதிலும் அவரைக் கைது செய்ய வேண்டுமென்றும் கோருகின்றனர். இதற்கு மேலாக வாளால் விரட்டியடிப்போம் என்கின்றனர். இந்த நிலைமைகள் அல்லது இந்தக் கருத்துக்கள் என்பது இன்றைக்கு விக்கினேஸ்வரன் ஐயாவிற்கு எதிராக சொல்லப்படுகிறது. ஆனால் இது தான் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் இந்த நாட்டில் நடக்கிறது. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் என்னைக் கூட அழைத்து விசாரணை செய்திருந்தனர். ஆகவே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்றவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் வாள் கொண்டு விரட்டியடிக்கப் முனைந்தால் நாங்கள் கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். நீங்கள் சொல்வது போன்று துட்டகைமுனுவின் வாள் எடுத்து வீசினால் நாங்கள் சங்கிலியன் எல்லாளன், பண்டாரவன்னியன் போன்றவர்களின் கேடயங்களை எடுத்து தற்காப்பு செய்வோம். அப்போதும் நீங்கள் நிறுத்தாமல் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் நாங்கள் அவர்களின் வாள்களை எடுப்பதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறோம். ஆகையினால் அதற்கு எம்மை நிர்ப்பந்திக்காதீர்கள் என்றே கோருகின்றோம். இந்த நாட்டில் மீண்டும் இரத்த அறு ஓடுவதற்கு தள்ளாதீர்கள், நாங்கள் எங்களுக்கான தீர்வையே தொடர்ந்தும் கோருகின்றோம். அதே நேரத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமைகளையும் வலியுறுத்துகின்றோம். ஆகவே எமக்கான தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறு தீர்வை வழங்காததால் தான் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றதென்பதையும் சுட்டிக்காட்டுகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/71737

மக்கட்பேறு

5 months 1 week ago
ஆமாம்.. ஒரு பேரன் இருக்கிறார். வீட்டிற்கு சென்றால், வெளியில் சென்றால் அவரோடுதான் எப்பொழுதும். பள்ளிக்கு, பார்க்கிற்கு விளையாட கூட்டி சென்று திரும்பி வருவது எல்லாம். பேரன் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுத்துவிட்டு, மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்குவது பழகிப் போச்சுது.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

5 months 1 week ago
பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! பச்சரிசிப் பல்லு ஒரு சிறுமிக்கு ஆடலாம் அல்லது ஒரு கிழவிக்கு ஆடலாம். எம்ஜிஆரின் காதலி சிறுமியா? இல்லை கிழவியா? என்று கண்ணதாசன் மேல் அன்று ஒரு விமர்சனம் வந்தது.

தெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

5 months 1 week ago
எங்கள் மக்கள் 2009ல் போராட்ட சாத்தியங்கள் யாவும் நிர்மூலமானபின்னரும் புயலில் தீபத்தைக் காப்பாற்றுவதுபோல தேசிய இனத்தன்மையை காப்பாற்றிகொண்டு மெல்ல மெல்ல நிமிர்ந்து வருகின்றனர். வரலாற்றின் முள்வேலி களூடாக ஊர்ந்து வெளியேறி மெல்ல நிமிர்கிற எங்கள் மக்களிடம் நிமிர்வது பற்றி நாம் சொல்லவேண்டுமா? சாத்தியமான வழிகளில் அவர்கள் மெதுவாகவும் நுட்பமாகவும் நிமிர்ந்தே வருகிறார்கள். மீண்டும் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துவரும் காலகட்டத்தில் அவர்கள் எதை வரைந்தாலும் “மீண்டும் நிமிர்கிற மிடுக்கு” நிச்சயம் இலைமறை காயாக இருக்கும். அதானால் நாம் செய்யக்கூடியது உதவுகிறதுதான்.

மக்கட்பேறு

5 months 1 week ago
குழந்தைப் பேறு இல்லாத வாழ்க்கையின் கொடூரத்தை, வெறுமையை வார்த்தையில் சொல்ல முடியாதது. அதே போல், பேரப்பைள்ளைகளை காணாத முதுமையும் வெறுமையே. சுற்றி நாலைந்து குஞ்சு, குருமான்களுடன் லூட்டியடிக்கும் தாத்தா, பாட்டிகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..!

பெண்களுக்கு வரும் ரத்தசோகை

5 months 1 week ago
Dr.Aravindha Raj. வீட்ல நம்ம அம்மாவோ/ மனைவியோ/ அக்காவோ/தங்கச்சியோ ~உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு டா....முடில ~மேல் மூச்சு அதிகமா வாங்குது. ~அடிக்கடி குளிருது... முடில இது மாதிரி நிறைய சொல்லிருப்பாங்க....நாம பல சமயங்கள்ல இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுவோம். ஒரு நாள் அவங்க மயக்கம் போட்டு கீழ விழுந்தா, ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனதும் டாக்டர் ரத்த பரிசோதனை செஞ்சு உங்க கிட்ட சொல்லுற விஷயம்..! அம்மாவுக்கு ஒடம்புல இரும்புச்சத்து கம்மியா இருக்கு....அதனால அனீமியா (ANAEMIA) என்னும் ரத்தசோகை வந்திருக்கு என்பது தான். ~ரத்தசோகை ன்னா என்ன டாக்டர் ? பெண்களுக்கு HEMOGLOBIN எனப்படும் ரத்தத்தின் முக்கிய மூலக்கூறு நார்மலா 12-14 grams/dl இருக்கணும். ஆனா, இவங்களுக்கு 6 gm/dl தான் இருக்கு. அதனால, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கு-ன்னு சொல்லிட்டு அட்மிட் பண்ணி ரத்தம் ஏத்தி, வீட்டுக்கு போறப்ப; இந்தாங்க...இது இரும்புச்சத்து அதிகரிக்க உதவும் மாத்திரை...இந்த மாத்திரைகளை ஒரு மாசம் போடுங்க, அப்புறம் வந்து பாருங்க-ன்னு சொல்லி அனுப்பி விடுவார். நம்ம ஆளுங்க 3 நாளைக்கு மட்டும் மாத்திரை வாங்கிட்டு, ரத்தம் ஏறனும்-ன்னா பேரிச்சம் பழம் சாப்பிட்டா போதும், தேன் குடிச்சா போதும் ன்னு அறிவாளி மாதிரி அவங்களே முடிவு பண்ணிடுவாங்க. இந்த பேரிச்சம்பழத்தோட லட்சணத்த இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன். அதுக்கு முன்னாடி ..!! இந்தியா ல இருக்க 3 இல் 2 பங்கு பெண்களுக்கு ரத்தசோகை இருக்கு. இதுக்கு முக்கியமான காரணம் 2 1.மாதவிடாய்(MENSTRUATION) சமயத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு. 2.பெரும்பாலான வீடுகள்ல நம்ம சாப்பிட்டு மிச்சம் வெச்ச உணவை தான் நம்ம அம்மா சாப்பிடுவாங்க.... அது காய்கறியோ/கறிசோறோ ; அம்மாவுக்கு கிடைக்குறதெல்லாம் மிச்சமும் மீதியும் தான்...சிலருக்கு ரசம் சோறு தான். நமக்கு அதெல்லாம் என்னைக்கு கண்ணுல படுது !!! சரி வாங்க பாப்போம் !! தினசரி இரும்புச்சத்து தேவை நம்ம உடலுக்கு இருக்கு. அதை RDA ன்னு சொல்லுவாங்க !! (RECOMMENDED DAILY ALLOWANCE) இரும்புச்சத்துக்கான அந்த RDA ஆண்களுக்கு ஒரு நாளைக்கு RDA(Men)- 8mg/day. பெண்களுக்கு அது அப்டியே இரண்டு மடங்கு. RDA(Women) - 16mg/Day. காரணம் நான் சொன்ன மாதவிடாய் விஷயம் தான். ~சரி.... இரும்பு சத்து அதிகமா இருக்கணும் ன்னு நான் எங்க அம்மாவுக்கு தினமும் 5 பேரிச்சம் பழம் குடுக்குறேன் டாக்டர்... எப்டி...செம்ம ல ?? செம்ம லாம் இல்ல சார்... ஒரு பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து வெறும் 0.07mg. நம்ம அம்மா ஒரு கிலோ பேரிச்சம் பழம் சாப்பிட்டாலும் அவங்களோட தினசரி தேவை பூர்த்தி அடையாது. அவ்ளோ இனிப்பு சாப்பிட்டா சுகர் வந்து நிலைமை இன்னும் மோசமா ஆகும்...இந்த பேரிச்சம் பழம் அதிக கலோரிகள் கொண்ட ஒரு குப்பை உணவு. இது யார் சாப்பிடுவாங்க தெரியுமா ?? பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் செய்யும் மக்கள், தங்களுக்கு கலோரி குறைபாடு ஏற்பட கூடாதுன்னு சாப்பிடும் பொருள் தான் இது. ஆனா, அதுவே ஆட்டு ஈரல்/ ரத்தம்/ சுவரொட்டி/மீன்/முட்டை இதெல்லாம் இரும்புச்சத்து அதிகம் உள்ள பொருட்கள். வெறும் 75 கிராம் ஆட்டு ஈரல்ல ஒரு நாளைக்கு தேவையான 100% இரும்புச்சத்து இருக்கு. ஒரே ஒரு முட்டைல மட்டும் 1.2 mg இரும்புச்சத்து இருக்கு. லயன் டேட்ஸ் சிரப் குடுக்குறது, நல்லா இருக்க அம்மாவுக்கு வாண்டடா சுகர் வர்ற வெச்சு இன்சுலின் போட வெக்குறதுக்கு சமம்...உங்க வீட்ல லயன் டேட்ஸ் சிரப் இருந்தா அப்டியே தூக்கி தூர போடுறது சிறப்பு. கீரை ல இரும்புச்சத்து ஜாஸ்தி ...ஆனா,கீரை ல இருக்க OXALATE என்னும் பொருள் இந்த இரும்புச்சத்து உரிஞ்சப்படுவதை தடுக்கும். தேங்காய் நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு. ஒரு தேங்காயில் 12mg இரும்புச்சத்து உண்டு. அதனால இறைச்சி சாப்பிடும் அசைவ நபர்கள் நான் மேல சொன்ன எல்லாத்தையும் சாப்பிட்டு இரும்புச்சத்தை கூட்டுங்க. சைவ உணவு சாப்பிடுறவங்க, உணவுல அதிகமா இரும்புச்சத்து கிடைக்க கொஞ்சம் கஷ்டம் என்பதால, தயவுசெஞ்சு மருத்துவரை அணுகி இருப்புச்சத்து சப்ளிமெண்ட் மாத்திரைகளை உட்கொள்ளவும். கர்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிக மிக முக்கியம். உள்ள இருக்க குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஏனைய சத்துக்கள் அம்மாவின் உடலில் இருந்து தான் செல்லும். இந்த இரும்புச்சத்து தான் நம்ம உடலின் ரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உண்டாக மிக முக்கிய காரணம். இந்த RBC தான் உடலெங்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும். குறைவாக இரும்புச்சத்து இருந்தால், RBC குறைவாக உற்பத்தி ஆகும். அதனால் ஆக்சிஜன் ஒழுங்காக கடத்தப்படாது. குழந்தைக்கு தேவையான ஆற்றல் தடைபடும். அதனால் கண்டிப்பா மருத்துவர் அறிவுரை செய்யும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது மிக மிக முக்கியம். (பாப்பா முக்கியம் பிகிலே !!!) இன்னொரு முக்கியமான விஷயம்...கண்ட குப்பை உணவுகள், பாஸ்ட் புட் எல்லாத்தையும் கம்மி பண்ணுங்க... அந்த மாதிரி சுத்தமற்ற முறையில் சமைக்குறப்ப 'WORM INFECTION' ஏற்பட்டு உடலில் இரும்புச்சத்து நுகர்வு கம்மியாகும். முடிஞ்ச வரைக்கும் வீட்ல சமைச்சு சாப்பிடுதல் நல்லது... உங்க கழிவறையை மிக சுத்தமா வெச்சுக்கோங்க... இந்த WORM INFECTION சுத்தமற்ற கழிவறை மூலமாகவும் ஏற்படும். ரத்தசோகை இல்லாத சமூகம் கூடிய சீக்கிரம் அமையட்டும். நன்றி.❣️ Dr.Aravindha Raj.
Checked
Tue, 06/02/2020 - 06:34
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed