புதிய பதிவுகள்2

“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!

3 months ago
ரொம்ப…. பாதிக்கப்பட்டுளீர்கள் போல் தெரிகின்றது நானும் கொழும்புக்கு போனால் குரூசோவோடு நிற்கலாமென்று நினைத்தேன். நீங்க சொல்வதைப் பார்த்தா ஆப்பு தான்.

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி. சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனடிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அப்போது இந்தியா இவ்விடயத்தில் தலையிடவே இல்லை. 1983 இலிருந்துதான் இந்தியா எமது பிரச்சினையில் தலையிட ஆரம்பித்தது. அதற்கு வித்திட்டவர் இந்திரா. ஆனால், 1983 ஆம் ஆண்டின் இனக்கொலை தமிழர்கள் தனித் தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதையும், அவர்கள் தம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்த முடியாது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு உணர்த்திற்று (உங்களுக்கு அந்த உணர்வு வரவில்லையென்றால் பிழை தமிழர்களில் அல்ல). 2009 இல் நடந்தவை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்கள் "இலங்கையர்" என்று கூறி மகிழ மாட்டீர்கள். இந்தியா தலையிட்டது தனது நலன்களை காத்துக்கொள்ளவே. அதற்கும் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல. எமது போராட்டம் இந்திய நலன்களுக்கான போராட்டம்தான் என்று நீங்கள் நம்பினால், அது உங்களின் அரசியல் அறிவை, எமது போராட்டத்தின் சரித்திரம் தொடர்பான புரிதலைக் காட்டி நிற்கிறது. அழிக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் மட்டும்தான். ஆனால், எமது இருப்பிற்கான, மொழிக்கான, தாயக‌க் காப்பிற்கான போராட்டமும் தேவையும் என்றுமில்லாதவாறு இன்று அதிகமாகவே இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாது, நாம் அனைவருமே இலங்கையர் என்று நீங்கள் கூறி மகிழ்வீர்களாக இருந்தால்,பிழை என்னில் இல்லை. இந்தியாவையும், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவினையும் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, எனது கேள்விக்கு பதில் தாருங்கள். இலங்கையில் இன்று தமிழர்கள் சம உரிமையினைக் கொண்டு, தமது மொழிக்கான சம அந்தஸ்த்தினைக் கொண்டு, இராணுவ ஆக்கிரமிப்பின்றி, தமது தாயகம் காவுகொள்ளப்படாது, பெளத்த மயமாக்கப்படாது சிங்களவர்களுக்கு நிகரான சுதந்திரத்தைக் கொண்டு வாழ்கிறார்களென்று நம்புகிறீர்களா?

ஹமாஸ் ஆயுதக் குழுவை இஸ்ரேல்தான் உருவாக்கியதா? உண்மை என்ன?

3 months ago
இதுதான் இயறகை. காலத்துக்கு காலம் இயக்கங்களைஉருவாக்குவதும் பின்னர் அவர்களுக்கு எதிராய் திரும்புவதும் நடக்கின்றது. புலிகளை இந்தியா உருவாக்கவில்லையா? பின்னர் என்ன நடந்தது? இதுதான் சரித்திரத்திலிருந்து பாடம் கட்காவிடடால் இது தொடர் கதைதான்.

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
இலங்கை போராளிகளுக்கு இந்தியா ஆய்தம் கொடுத்து பயிட்சி வழங்கியது எதட்காக? இலங்கையில் ஈழம் சாத்தியம் இல்லை என்பது இந்தியாவுக்கு தெரியாதா? அப்படி பெற்று கொடுத்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் என்ன செய்யும்? போராட்டத்தால் கண்ட பலன் என்ன? இருந்ததை எல்லாம் இழந்ததுதான் மிச்சம். பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைமைக்கு தமிழ் மக்கள் வந்துள்ளார்கள். 13 திருத்த சடடதுக்கு என்ன நடந்தது? இந்தியாவுக்கு தேவைப்படும்போது கையில் எடுப்பார்கள், பின்னர் கை நழுவி விடுவார்கள். இவை எல்லாமே இந்தியாவின் நாடகம்தான்.

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ்

3 months ago
இவர்கள் மீனின் விலை குறைந்து விட்ட்து என்று சொல்வதெல்லாம் அதன் விலை ஆயிரத்துக்கு மேலேதான். நான் பேலியகொடையில் வாங்குவதால் அந்த விலைகளைத்தெரியும். மற்ற இடங்களில் வாங்கினால் அதனையும் விட ஒன்றரை இரண்டு மடங்கு அதிகம். உண்மையாகவே பிள்ளகைளின் ஊடட சத்து என்பது பாரதூரமானது. முடடையின் விலையும் அப்படி. அரசு எப்படியோ வரி வரி என்று போட்டு மக்களை வதைக்கிறது. எப்படியாவது IMF இடம் நல்ல பெயர் எடுத்து கடன் வாங்கத்தான் முயட்சிக்குதே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. தேர்தலின் பின்னர் ஒரு மாற்றம் நிச்சயமாக வரும். ஆனால் அதன் விளைவுகள் எப்படியோ , பொறுத்திருந்து பார்ப்பம்.

டாடோ என்கின்ற டாலிபோ

3 months ago
உண்மைச் சம்பவம் வாசிக்க திகிலாக உள்ளது. மொகமது இப்படி செய்ய தூண்டியது அல்லது இதை செய்ய கட்டளையிட்டது மாபியா குழுவோ எனவும் சந்தேகம் வருகின்றது. வாகன இலக்க தகட்டை மறைக்கும்/மாற்றும் யோசனையே மொகமதுவுக்கு தோன்றாதது அவன் ஆத்திரத்தில் பின்விளைவை நினைக்காது/ எதேச்சையாக முடிவு எடுத்தானோ என எண்ண தோன்றுகின்றது. எனக்கும் மொகமது எனும் பெயரில் ஒரு முதலாளி பழக்கம். அவன் சாவகசமாக கதைக்கும்போது தங்களுக்கு வெட்டு, கொத்து எல்லாம் சாதாரண கைவந்த கலை என்று கூறுவான்.

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ்

3 months ago
நேற்றைய ஒரு செய்தியில்…. மீன் விலை பாதியாக குறைந்து விட்டது என்றிருந்தது. காரணம் மக்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லாமல் போய் விட்டதாம். இவை எல்லாம் வளரும் பிள்ளைகளின் ஊட்டச் சத்து சம்பந்தப் பட்ட விடயம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் இதனைப் பற்றி பெரிதாக சிந்திப்பதாக தெரியவில்லை.

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!

3 months ago
முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன். இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன். பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம். நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள். இன்னமும் முடிவில்லை.

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அமெரிக்காவுக்கு நல்லதல்ல: கமலா ஹாரிஸ்

3 months ago
இவர் ஜனாதிபதியானால் நிச்சயமாக இஸ்ரேலுக்கு ஆதரவும் உதவியும் அதிகரிக்கும். நேட்டோ இல் பிளவு உண்டாக சந்தர்ப்பம் உண்டு. மத்திய கிழக்கில் எப்படியான பிரச்சினை, தீர்வு வரும் என்று கூற முடியாது. எனவே ஒரு குழப்பமான நிலைமை உருவாக சந்தர்ப்பம் அதிகம். அதட்காக இப்போது குழப்பம் இல்லை என்றில்லை.

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன். நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூதர்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அதுவரை உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்துதிரிந்த அவர்களுக்கு இஸ்ரேல் எனும் தமது மூதாதையர் நாட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்தின் தலைமையில் மேற்குலகு ஆதரவு வழங்கியது, இதற்கான காரணம் அவர்கள் முகம்கொடுத்த அழிவுகளும் துன்பங்களும்தான். நவீன இஸ்ரேலின் உருவாக்கத்தினையடுத்து, சுற்றியிருந்த அரபுநாடுகள் அதனை முற்றாக அழித்துவிட மேற்கொண்ட இருபெரும் யுத்தங்களின் போதும் (1967 ஆம் ஆண்டின் ஆறுநாள் யுத்தம், 1973 இன் யொம் கிப்புர் யுத்தம்) யூதரின் பக்கமே அரபுலகத்தைத் தவிர்த்த உலக அனுதாபம் இருந்தது. ஆனால், இஸ்ரேல் அதன்பின்னர் நடந்துகொண்ட முறை அந்த அனுதாபத்தினை சிறிது சிறிதாகக் குறைத்து ஈற்றில் மேற்கின் ஒரு சில நாடுகளின் ஆதரவு என்று சுருங்கிவிட்டது. இதற்கான முக்கியமான காரணம் பாலஸ்த்தீனத்தின்மீதும், அம்மக்கள் மீதும் இஸ்ரேல் நடத்திவரும் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தான். எமது தாயகத்தில் , எமது தாயக‌க் நிலத்தொடர்பை உடைத்தெறிந்து நடைபெற்றுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இஸ்ரேலின் ஆலோசனையின் பெயரில் நடத்தப்படுபவை என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால், அதுதான் உண்மை. உலகெங்கும் சுயநிர்ணய உரிமை கோரிப் போரிடும் இனக்குழுமங்களுக்கெதிரான ஆக்கிரமிப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் இஸ்ரேலின் மொசாட் உதவிவருவது வெளிப்படை உண்மை. சரி, அக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னதான யுத்தத்திற்கு வரலாம். இஸ்ரேல் பாலஸ்த்தீனர்கள் மீது நடத்திவந்த அடக்குமுறைகளும் படுகொலைகளும் எந்தளவு தூரத்திற்கு மனித நேயத்திற்கு எதிரானதோ, அதற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல ஹமாஸ் அக்டோபர் 7 இல் நடத்திய தாக்குதல். தமிழர்களின் நிலத்தொடர்பை ஊடறுத்து அமைக்கப்பட்ட இராணுவமயப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களும் ஹமாஸ் நடத்திய தாக்குதலும் பல விடயங்களில் ஒத்துப்போகின்றன. யூதர்களைக் கடத்திச் சென்றது, பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கியமை என்பதைத் தவிர புலிகளும் ஹமாஸும் நடந்துகொண்டது ஒரே வகையில்த்தான். கொல்லப்பட்டவர்களில் ஆயுதம்தரித்த குடியேற்றக்காரர்களும் அடக்கம், இரு சம்பவங்களிலும். நடக்கும் குடியேற்றங்களை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதே குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம். ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்தும் யுத்தம் முற்றான அழித்தொழிப்புடன் கூடிய ஒரு இனக்கொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. போரிடும் தரப்புக்களுக்கு பின்னால் நின்று சாமரம் வீசும் ஈரான் ஆகட்டும், ஹூத்தீக்களாகட்டும், அமெரிக்காவாகட்டும், இவர்கள் எவருமே கொல்லப்படும் பாலஸ்த்தீனர்களுக்காகவோ கொல்லப்பட்ட யூதர்களுக்காகவோ உண்மையாக இரங்கவில்லை. பாலஸ்த்தீனர்களினதும், யூதர்களினதும் அவலங்களைப் பாவித்து தத்தமது தனிப்பட்ட இலாபங்களை அடைய விளைகிறார்கள். எமது போராட்டத்தில் இந்தியா ஒருபக்கமும் அமெரிக்கா இன்னொரு பக்கமும் சாய்ந்து செயற்பட்டது போல. போகிறபோக்கில் நீங்கள் ஈழத்தமிழரையும் தொட்டுவிட்டுச் செல்கிறீர்கள். இலங்கை இலங்கையர்களுக்குச் சொந்தமா? எல்லோரையுமே நீங்கள் கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் ஒன்றாக நடத்துகிறார்களா? அப்படி நடத்தியிருந்தால் நாம் தனிநாடு கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது? எமது போராட்டம் தனிநபர்களால் தூண்டிவிடப்பட்ட தேவையற்ற போராட்டம் என்று கூறும் அளவிற்கு உங்களின் எண்ணம் சுருங்கக் காரணம் என்ன? அல்லது இதுதான் உங்களின் உண்மையான நிலைப்பாடா? நல்லது, வெளியே வந்திருக்கிறீர்கள்.

தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க ரணில் முயற்சி - விமல் வீரவன்ச

3 months ago
நான் ரணிலுக்கு எதிராக வாக்களிக்க இருந்தேன். இவர் கூறுவதை பார்த்தல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் போல இருக்குது.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் - மஹிந்த ராஜபக்ஷ

3 months ago
நிச்சயமாக ராஜபக்சேக்கள் வெற்றியடைய முடியாது. எனவே தங்களை பாதுகாக்க கூடிய தலைவர் என்றால் அது ரணில்தான். வேறு தெரிவு இல்லை. நிச்சயமாக இவர்கள் ரணிலை ஆதரிப்பார்கள் .

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ்

3 months ago
அந்தந்த நேரத்துக்கு அந்தந்த பதில்களும் , செயட்பாடுகளும். இங்கு அரசு என்றெல்லாம் ஒன்றுமில்லை, எப்படி பதவியை வைத்து கொள்ளையடிக்கலாமோஅப்படி கொள்ளையடிப்பதுதான் நோக்கம். எதிர் காலத்தையும் , சுகாதாரத்தையும் பற்றி எந்த அரசு(?) சிந்திக்கிறது. கொண்டு வரும் மருந்துகளிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதையும் விட பெரிய மோசடி என்ன இருக்கிறது?

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months ago
அப்படியா? இஸ்ரேலுடன் சேர்ந்து வாழும்தபாலஸ்தீனர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். இலங்கையில் வாழும் இலங்கையர்கள் ஆய்தம் தூக்க வில்லையா. அதுபோலத்தான் இதுவும். சிலர் தங்கள் சுய நலத்துக்காக மற்றவர்களை தூண்டிவிடுவதுதான் எல்லாவற்றிட்கும் முக்கிய காரணம். இஸ்ரேல் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம் . வேறு யாரும் சொந்தம் கொணட முடியாது. அங்குள்ள மற்றயவர்களை விட்டு வைத்திருப்பதே பெரிய காரியம். இலங்கைஇலங்கையர்களுக்குத்தான் சொந்தம்.

பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

3 months ago
இது பற்றி நேற்று ஒரு பெரிய பத்திரிகையாளர் மஹா நாடே நடந்தது. அதில் அவர்கள் கூறியது என்னவென்றால் கைது செய்யப்படட எல்லோரையும் சிறையில் அடைக்கவில்லையாம். அவர்களின் மோசமான, முக்கியமானவர்கை மட்டுமே சிறையில் அடைத்தும் , புனர்வாழ்வு முகாமுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள். இது வரைக்கும் ஏறக்குறைய 40 ,௦௦௦ இட்கும் மேட்படுத்தவர்கள் கைது செய்யப்பட்ட்தாகவும் அநேகமானோர் நீதி மன்றில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட்தாகவும் கூறினார். ஏறக்குறைய 5000 பேர் மட்டில் சிறையிலும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Checked
Sat, 04/20/2024 - 14:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed