புதிய பதிவுகள்

விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

3 months 2 weeks ago
வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அருள்மொழிவர்மன். மீளவும் வாசிக்கவேண்டிய ஒரு நூல் என்று எவருக்கும் இரவல் கொடுக்காமல் வைத்துள்ளேன்! ஜெயமோகனின் நூல்களைப் படிப்பதற்கும் ஒரு ஆயுள் போதுமா என்ற கேள்வி பல காலமாக உள்ளது!

மரணதண்டனை மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது

3 months 2 weeks ago
சிங்கப்பூரின் கடுமையான சட்டக் கட்டமைப்பில் ஒரு பகுதியான மரண தண்டனை, நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்படுகிறது. கடுமையான சட்டங்களின் மூலமே போதைப்பொருள் கடத்துவோரைத் தடுக்கமுடியும் என நம்புகின்றது சிங்கப்பூர். போதைப்பொருள் கடத்தலுக்காகப் பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.அத்தகைய நடவடிக்கையில் கடத்தல்காரர்கள் ஈடுபடுவதை அது தடுக்கும். போதைப்பொருளுக்கு எதிரான போரில் சட்டம் ஓர் அம்சம். எனினும் போதைப் புழங்கிகள் அந்தப் பழக்கத்தைக் கைவிட போதிய ஆதரவு வழங்கப்படுவது அவசியம். இலாபம் ஈட்டுவதில் குறியாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதை தெரிந்தும் செய்வதே தண்டனைக்கு ஒரு காரணம்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

3 months 2 weeks ago
இண்டர் நேஷனல் என்பது நாடுகளுக்கு (நஷனல்) இடையான (இண்டர்) என்றே பொருள்படும். இண்டர்நேஷனல் என்பதை நாம் ஏன் சர்வதேச (universal) அல்லது அனைத்துலக (world wide) என்று மொழிபெயர்க்கிறோம்? பலாலி இண்டெர்நேஷனல் ஏர்போர்ட் என்பதற்கு பலாலி நாடுகளிடையான விமான நிலையம் என்பதல்லவா சரியான பதம் ? Domestic ஐ நாட்டுக்குள்ளான என மொழிபெயர்க்கலாம்.

உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள்

3 months 2 weeks ago
முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தின் மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை இன்று ஆரம்பித்துள்ளனர். வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்துக்கு முன்பாக இந்த உண்ணாவிரத போராட்டம்.நடைபெற்று வருகின்றது. முன்னதாக வள்ளிபுனம் காளிகோவிலடியிலிருந்து பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள் இனிய வாழ்வு இல்லத்துக்கு முன்பாக வந்து தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் ஏனைய பழைய மாணவர்களும் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 1.நிறுவன ஸ்தாபகரின் செயற்திட்டத்தில் வந்த யாப்பு பின்பற்றப்படவேண்டும். 2. நிறுவன ஸ்தாபகரின் வழித்தோன்றல் பிரகாரம் நிறுவனம் ஒப்படைக்கப்படவேண்டும் 3.நிர்வாக நிர்வாகச் செயற்பாடுகளில் பழைய மாணவர்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பது நிறுத்தவேண்டும். 4.பழைய மாணவர்களை நிபந்தனையற்ற வகையில் பொதுச்சபையில் இணைக்கப்படவேண்டும். 5.அனைத்து பழைய மாணவர்களையும் உள்வாங்காமல் மேற்கொள்ளப்படும் யாப்பு சீர்திருத்தத்தை நிறுத்த வேண்டும். 6.சமூக சேவைத் திணைக்களத்தின் அரச ஊழியராக இருந்து கொண்டு நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் ஒருவர் இல்லத்தின் செயற்குழுவில் இருந்து வெளியேற வேண்டும். 7.மக்கள் பிரதிநிதியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் செயற்குழு மற்றும் நிர்வாக பதவி நிலையிலிருந்து வெளியேறவேண்டும். 8. 11 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவில் 5 உறுப்பினர்களாக பழைய மாணவர்கள் நிபந்தனையற்ற வகையில் இணைக்கப்படவேண்டும். 9.மேற்குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழு ஏற்படுத்தப்படும் போது பழைய செயற்குழு உறுப்பினர்கள் இருவரும் பழைய மாணவர்கள் இருவருமாக இணைந்து குழு அமைக்கப்பட வேண்டும். 10. 6ஆம் இலக்கம் 7ஆம் இலக்கம் ஆகிய கோரிக்கைகள் உடனடியாக செயற்படுத்தப்படவேண்டும். என்பனவாகும் . இதன்போது கருத்து தெரிவித்த இனிய வாழ்வு இல்லத்தின் விழிப்புலன் இழந்த பட்டதாரி பழைய மானவனான பழனிசாமி ராஜ்குமார், இனிய வாழ்வு இல்லம் விழிப்புல செவிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கான ஆதரவு மற்றும் பராமரிப்பு கல்வி வாய்ப்புக்காக 1997 ஆம் ஆண்டு விழிப்புலன் இழந்த மற்றுத்திறனாளியான கிறிஸ்து மாசிலாமணி என்பவரால் உருவாக்கப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளால் நிர்வகிக்கப்பட்டு சிறப்பான வகையில் மாற்று வலுவிழந்த குழந்தைகளின் காப்பகமாக இயங்கி வந்தது. 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் இந்த இல்லத்தில் கல்வி கற்று மாற்றுத் திறனாளிகளாக பல்கலை கழக பட்டதாரிகளாக வெளியேறிய வெளியேறிய சிலரின் முயற்சியில் மீள உருவாக்கப்பட்ட நிலையில் அவர்களை புறந்தள்ளி புதிய நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிர்வாகம் தான்தோன்றி தனமாக செயற்பட்டு வருவதாகவும் இல்லத்தின் ஆரம்பமுதல் அங்கே இருந்து கல்வி கற்று பட்டதாரிகளாக மாற்று வலுவுடைய 13 பேர் வெளியேறியுள்ள நிலையில் அவர்கள் எவரும் இல்லத்தின் செயற்பாடுகளில் உள்வாங்கபடவில்லை அத்தோடு ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருந்துகொண்டு இனிய வாழ்வு இல்லத்தில் மாற்று வலுவுடைய பிள்ளைகளுக்கு சேவை செய்யவென வருகைதந்து தற்போது அங்கும் ஊதியம் பெறும் பணியாளராக மாறியிருக்கின்றார். ஒரு நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த இல்லத்தில் சில அதிகாரம் படைத்தவர்கள் தான்தோன்றிதனமாக நடந்துகொண்டிருகின்றார்கள். இந்த நிலைமைகளை உணர்ந்து எமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என அறிவிக்கின்றோம். எமது நியாயமான கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம். https://www.virakesari.lk/article/59317

" தனி நபர் " தாக்குதல் அச்சத்தில் இலங்கை

3 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினால் இலங்கையில் சாதாரண சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியை மையப்படுத்திய குறித்த குழு சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புப்பட்டு பயிற்சி பெற்றிருந்தமையினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் தற்கொலை தாக்குதல்களோ குண்டு வெடிப்புகளோ மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையின் புலனாய்வு துறைகள் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுள்ளன. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைளில் எவ்விதமான தளர்வு தன்மையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முப்படைகள் மற்றும் பொலிசார் உள்ளிட்ட தேசிய - சர்வதேச புலனாய்வு துறைகளின் ஒத்துழைப்புகளுடன் பாதுகாப்பு சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் திட்டமிட்டு மீண்டும் தொடர் குண்டு தாக்குதல்களை இலங்கையில் மேற்கொள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாக காணப்படுகின்ற போதிலும் , ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் உத்திகளில் ஒன்றான ' தனி நபர் " தாக்குதலுக்கு வாய்ப்புகள் இல்லாமள் இல்லை என்று இராணுவம் தளபதி எச்சரித்துள்ளார். இவ்வாகையான தாக்குதல்கள் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படும் உலக நாடுகளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/59364 ' தனி நபர் " தாக்குதல் 'தனி நபர் " தாக்குதல் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் உத்தியாகும். 'தனி நபர் " பயங்கரவாதம் குறித்த ஆய்வுகள் மிக குறைவாகவே காணப்படுகின்றன. பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்க ஆய்வு நிலையம் இவ்வகையான தாக்குதல் முறைமை குறித்து ஆய்வு செய்துள்ளது. ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்பை சார்ந்தவர்கள் குழுவாக சென்று தாக்குதல்கள் நடத்துவதிலிருந்து 'தனி நபர் " தாக்குதல் முறைமை வித்தியாசமானது. அதாவது காத்திருத்தல் , நீண்ட தூரம் இலக்கை நோக்கி பயணித்தல் மற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் தனியொருவராக தாக்குதல் நடத்துதல் என்பன தனி நபர் தாக்குதல் உத்திகளின் பண்புகளாகும்.

89

3 months 2 weeks ago
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் நடந்த கோரமான கொலைகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்த கந்தப்புக்கு நன்றி. கொலைகள் மலிந்த நிலமாக இருந்த காலத்தில் பார்த்த மரணங்கள் சுடலையில் பிணம் எரியும்போது அருகில் இருந்து விடுப்புக் கதைக்கும் அளவிற்கு பதின்ம வயதினரான எங்களையும் மாற்றியிருந்தது.

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?

3 months 2 weeks ago
நீஙகள் சொல்வதற்கும் இங்கே படத்தில் இணைத்திருப்பதற்கும் தொடர்பில்லை. குறிப்பிட்ட இவ்விடத்தில் மருதங்கேணியர் சொன்னது போல் அழிப்பதற்கென்று காடுகள் எதுவும் இல்லை. ஆற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இருபக்கமும் உள்ள மரம் புதர் புற்படுக்கைகளை அழித்து தமது நிலமாக்கியுள்ளார்கள். 1950 களில் இவ்விடங்கள் நெற்செய்கை நிலங்களாக வழங்கப்பட்டபோதே ஆற்றில் இருந்து கணிசமான தூரம் பாதுகாக்கப்பட்டே வழங்கப்பட்டது. புலிகளின் காலம் வரையில் கூட யாரும் இவற்றை அழித்ததில்லை. நீர்வளத்தை அழித்துவிட்டு எத்தனை காலம் விவசாயம் செய்ய முடியும் !! நெற்செய்கையை பொறுத்தவரைக்கும் தொழில்வாய்பென்று எதுவும் இல்லை. முன்புபோல் நிறைய தொழிலாளர்களை வைத்து விதைப்பதும் இல்லை கதிரறுத்து சூடடிப்பதும் இல்லை. எல்லாம் இயந்திரம். யுத்தத்தின் பின்னர் நெற்செய்கை பணப்பயிராகிவிட்டது. மேலும் முன்னர் சராசரி ஒடு குடும்பத்திற்கு நான்கு ஏக்கரளவில் நெற்செய்கைக்கான காணி இருந்தது. இப்போது நூற்றில் அறுபது வீதத்திற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு நெற்செய்கைக்கான காணி இல்லை மீதி நாற்பது வீதமுள்ளவர்களிடம் நான்கு ஏக்கருக்கு பதிலாக ஐம்பது நூறு ஏக்கர்கள் காணி உள்ளது. வன்னிக்கான சம நிலை முற்றாக குழம்பிவிட்டது. சமநிலையை பேணக் கூடிய தலமைத்துவமோ சடடதிட்டங்களே அதை மதித்து பின்பற்ற வேண்டிய அவசியமோ கடமையே தமிழர் சமூகத்தில் இல்லை. அவனவன் எடுப்பது தான் முடிவு. நீர் வளத்தை பாதுகாத்தால் எதிர்கால சந்ததிக்கு வாழ்வாதராமாக இருக்கும் என்ற ஆதங்கத்தில் எழுதுவது தவிர நாம் எழுதுவதால் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months 2 weeks ago
அவுஸ்திரேலியா விளையாடும் விதத்தைப் பார்த்தால் நீர்வேலியான் காத்தாட இருக்கிற உயரமான புட்டியை 1000 கிலோ சக்கை வைச்சும் தகர்க்கேலாது போலிருக்கே!😡😡😡

வெளியானது மரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் பெயர் பட்டியல்

3 months 2 weeks ago
பட்டியலில் சிங்களவர் 4 பேர் மட்டும்தான்! மிச்சம் எல்லாம் தமிழரும் முஸ்லிம்களும்😲 போதைப்பொருள் கடத்துவோரில் தமிழரும் முஸ்லிம்களுமா அதிகம் ஈடுபடுகின்றார்கள்? அல்லது இதிலும் இனவாதம் உள்ளதா?🤔

அரசுகளும் மது விற்பனையும் தனி மனித வாழ்வும்

3 months 2 weeks ago
நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா? குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும். நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா? குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக்க விடாமல் தடுத்தால் முதலில் பேச்சு வார்த்தை நடத்தும் அதில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் காவல்துறை யை வைத்து தடியடி நடத்தி அரசுப்பணியை தொடருவார்கள் அல்லவா அது போலவே நான் அரசுப்பணியை தடுத்த என் மனைவியை தடியடி நடத்தி அரசுக்கும், காவல்துறைக்கும் உதவி புரிந்தேன். அது எப்படி குற்றமாகும் ? நீதிபதி : நான் இன்றோடு என் பதவியை ராஜினாமா செய்கிறேன்....... மூலம் : முக நூல் பக்கத்தில் இருந்து தொடர்பு பட்ட செய்தி தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488719

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை…

3 months 2 weeks ago
அப்படியே கைது செய்யப்பட்டு எந்த குற்றமும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முஸ்லீம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடலாம், ஆனால் விட மாட்டார்கள் 😞 சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம் இல்லை == இலங்கை !

நெல்லியடியில் 200 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

3 months 2 weeks ago
நேற்றுத்தான் போதைப்பொருள் ஒழிப்பு என்ற திட்டம் பெரும் ஆரவாரத்துடன் நடந்தது. ஒவ்வொரு நாளும் இவ்வாறான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதுவும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் வலுவடைந்தும் கடலோர பாதுகாப்புக்கள் பலப்படுத்த பட்ட நேரத்திலும் கேரளா கஞ்சாவிற்கு குறைவில்லை. ஆக, இந்த கடத்தல் சந்தைப்படுத்தல் என்பனவற்றிற்கு சிங்கள இராணுவம், கடற்படை மற்றும் அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதை மறைக்க இப்படி சில படங்களையும் செய்திகளையும் விடுவது ஒரு ஏமாற்றுத்தனமே !

சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்

3 months 2 weeks ago
அண்மையில் அரச விசாரணை குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் பொழுது சிறிலங்கா இராணுவத்தளபதி இப்பொழுது நாட்டில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதத்தை இராணுவ பலம் கொண்டு வெல்ல முடியாது என கூறி இருந்தார். காரணம் அவர்கள் யாராயும் இருக்கலாம் எதையும் கொண்டு தாக்கலாம் ( விமானம், வசுவண்டி ..). இந்த மாற்றங்கள் ஒரு போலி உத்தரவாதத்தை தருவனவாக மட்டுமே இருக்கும்.

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் முன்பு நீங்கள் கூறியதுபோல பாலியாறு நீளத்துக்கும் அருகில் மரங்கள் நிறைந்து இருக்கும் எந்த வெய்யில் காலத்திலும் தண்ணீர் குளிராக இருக்கும் நான் பல நாட்கள் இந்த நீரை குடித்ததுண்டு. பாண்டியன்குளத்தில் பாலியாறு இல்லை நான் பாண்டியன்குளம் குறித்துதான் எழுதினேன்.

சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்

3 months 2 weeks ago
சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:09 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது. இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியிலும் அவர் தொடருவார். எனினும், மேற்கு படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜூலை 17ஆம் நாள் தொடக்கம், பாதுகாப்பு அமைச்சில், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், மற்றும் தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னி படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 24 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, அந்தப் பதவியில் இருந்து, மாற்றப்பட்டு, மேற்கு படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதன்மை கள பொறியாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஆர்கேபி பீரிஸ், இராணுவ தலைமையக ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய, மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார, இராணுவத் தலைமையகத்தின் முதன்மை கள பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 54 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, 14 பிரிகேடியர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2019/06/29/news/38779

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

3 months 2 weeks ago
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:53 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த விரிவாக்கப் பணிகளை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். http://www.puthinappalakai.net/2019/06/29/news/38789
Checked
Sun, 10/20/2019 - 10:04
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed