புதிய பதிவுகள்

சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க அனுமதி: ஐகோர்ட்

3 months ago
சென்னை: சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கையில் தனியார் செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக மாணவி குற்றச்சாட்டு தெரிவித்தார். மாணவிக்கு திருமணம் நடந்த சில நாட்களில் மருத்துவ பரிசோதனையில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 3 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து பெண்ணை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் கணவர் விட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையில் தனக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கர்ப்பிணி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்தனர். அதில்; சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மேலும் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து மரபணு ஆய்வு செய்யவும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534242

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வாத்தியார்......! உம்பர்கட்கு அரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்து என் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே .....! ---பிடித்த பத்து----

துருக்கியின் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது : ரஷ்யா சூளுரை

3 months ago
குர்துக்களுக்கு ஆதரவாகப் போரிட படை வீரர்களை அனுப்பிய ரஷ்யா சிரியாவில் குர்துக்கள் மீதான துருக்கியின் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, ரஷ்யா தனது படை வீரர்களை களத்தில் இறக்கியுள்ளது. சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களை தீவிரவாதிகளாகக் கருதி, அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமெரிக்கா, தனது படைகளை வாபஸ் பெற்றதை அடுத்து, இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஷ்யா களத்தில் இறங்கியுள்ளது. குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுவதற்காக தங்கள் நாட்டு படை வீரர்களை, சிரியாவுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. https://www.polimernews.com/dnews/85144/குர்துக்களுக்கு-ஆதரவாகப்போரிட-படை-வீரர்களை-அனுப்பியரஷ்யா

துருக்கி தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் நேபாம் குண்டுகளை பயன்படுத்துகின்றது- குர்திஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டு

3 months ago
2009 இல் நமது ஈழ மண்ணில் கேட்ட, பார்த்த அதே அவலங்கள் இன்று 2019ல். மக்களும், இடமும், நேரமும் தான் மாறி உள்ளன. காட்சியும் அவலமும் மாறவில்லை. ஒரு நேட்டொ நாடு இப்படி செய்கின்றது.

கல்முனை மாணவன் கி. முகேஷ் தலைக்கவசம் கண்டுபிடிப்பு

3 months ago
வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவன் சாதனை! இந்தோனேஷியாயாவில் நடைபெற்ற சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 17 வயது மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை கல்முனையில் உள்ள கார்மேல் பாத்திமா தேசியக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் . இவர், அதிகரித்துவரும் சாலை விபத்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் வகையில், மோட்டார் சைக்களில் பயணம் செய்வோர் அணியும் பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை கண்டு பிடித்தார். இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி, ஹெல்மெட்டில் ஏற்படும் அதிர்வை கணித்து, அது விபத்தினால் ஏற்பட்ட அதிர்வா அல்லது சாதாரணமாக ஏற்பட்ட அதிர்வா என்பதை கண்டுபிடித்து, விபத்தாக இருக்கும்பட்சத்தில் உறவினருக்கோ அல்லது போலிஸாருக்கோ குறுஞ் செய்தி அனுப்பும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு அவருடைய உயிரை காப்பாற்ற முடியும். இந்நிலையில், இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த 9 ஆம் திகதி ஆரமபமாகி 12 ஆம் திகதி வரை சர்வதேச அளவிலான 19 வயதிற்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையிலிருந்து 12 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புகளுடன் கலந்துகொண்டனர். இவர்களில், பாதுகாப்பான தலைக்கவசம் கண்டுபிடித்த கல்முனை மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவனை வரவேற்கும் நிகழ்வு, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மாணவர் முகேஷ் ராம் கூறுகையில், ஆசிய நாடுகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இதனால் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிகமானோர் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். இவற்றை தவிர்க்கும் நோக்கில் எனது கண்டுபிடிப்பு அமைந்ததால், சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/67114

ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை

3 months ago
புதுடெல்லி பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு (MDMA) விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, இதுதொடர்பாக கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணைக்கு வரவில்லை குறிப்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தமுறை அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/520764-life-sentences-must-be-stopped-supreme-court-accepts-perarivalan-plea-1.html

ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? எடப்பாடிக்கு சவால் விடுக்கும் ஸ்டாலின்!

3 months ago
சசிகலா காலில் தவழ்ந்து முதல்வராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் ராஜினாமா செய்து விட்டு வரட்டும், ஒரே தொகுதியில் போட்டுயிடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடிக்கு சாவல் விடுத்துள்ளார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருதகுளத்தில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மத்தியில் நடக்கும் பாஜ ஆட்சிக்கு அடிமையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அடிமை ஆட்சி என கூறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரம் வந்துள்ளது. நாங்கள் மத்திய அரசுக்கு அடிமையல்ல என பதில் கூறியுள்ளார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆனால் அடிமை ஆட்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களை சொல்ல முடியும். அதில் ஒரே ஒரு உதாரணம் நீட் பிரச்னை. திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீட் பிரச்னை வந்தது. ஆனால் கருணாநிதி அதை ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடையுத்தரவு பெற்றார். பின்னர் ஜெயலலிதாவும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் கொள்ளையடிக்கும் ஆட்சி நடத்தினாலும் நீட் தேர்வை ஏற்க தயாராக இல்லை. எடப்பாடி முதல்வராக வந்த பின்னர் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. அதனால் தான் தமிழகத்தில் அடிமை ஆட்சி நடக்கிறது என்கிறேன். தமிழகத்தின் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்தது. அதை கேள்வி கேட்க எடப்பாடிக்கு துப்பு இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது கேள்வி கேட்க எடப்பாடியால் முடியவில்லை. ஏனெனில் கேள்வி கேட்டால் ஆட்சி பறிபோய் விடும். முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயிலுக்கு போய் விடுவார்கள். அதனால் தான் கேள்வி கேட்க முடியவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் சட்டசபையில் அவர் என்னை பார்த்து சிரித்து விட்டார். உடனே அவரது பதவியை சசிகலா பறித்து விட்டார். அதற்கு பின்னர் சசிகலா தானே முதல்வராக தேதி குறித்து விட்டார். 4 நாட்கள் விட்டிருந்தால் சசிகலா முதல்வராகி இருப்பார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து விட்டது. அப்போது சசிகலா காலில் தவழ்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதனால் தான் பாஜ தலைவர்களின் காலில் எடப்பாடி வீழ்ந்து கிடக்கிறார். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும். ஒரே தொகுதியில் இருவரும் நிற்போம். போட்டியிட்டு பார்ப்போம் என்று அவர் சவால் விடுத்துள்ளார். https://www.ndtv.com/tamil/ready-to-compete-in-the-same-constituency-mkstalin-challenges-edappadi-2118408

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

3 months ago
மத மாற்றம் என்பது ஒருவரின் வரலாற்றை அழிப்பது போன்றது. பாரம்பரியம், பண்பாடு, அறம் சார்ந்த மதிப்பிடூகள், நம்பிக்கைகள் எல்லாமே பாட்டன், பூட்டி அவர்களின் மூதாதையரின் நம்பிக்கைகளில் இருந்து வந்தது. அதனால்தான் பிற மதங்களுக்கு மாறியவர்கள் தாலி கட்டுவது போன்ற சடங்குகளை கைவிடாமல் இருக்கின்றனர். எனவே அந்நியமான மதத்திற்கு மாற்ற பிரச்சாரம் செய்பவர்களைக் கண்டால் ஆத்திரம் வருவது இயல்பு. மதங்களில் நம்பிக்கையில்லாத நான், மதம் மாறிய எனது உறவினர்கள் சிலருடன் கதைப்பது குறைவு. அவர்கள் தமது மூதாதையர்களை/வேர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதுதான் காரணமாக இருக்கலாம்!

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்...!

3 months ago
விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது. திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புகைப்படத்தை க்விங்ஹாய்-திபெத் எல்லையில் எடுத்துள்ளார். ‘தி மொமண்ட்' (தருணம்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் நரியை கண்டு மர்மொட் அஞ்சுவது போல் உள்ளது. ‘தக்க தருணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது' என தேர்வு குழுவின் தலைவர் ராஸ் கிட்மான் பாராட்டியுள்ளார். 2019 ஆண்டின் இளம் வைல்ட்லைப் போட்டோகிராப் விருது நியூசிலாந்தின் க்ரஸ் எட்மணுக்கு வழங்கப்பட்டது. இந்தோனேசியாவில் படமெடுக்கப்பட்டது அந்த புகைப்படம். 100 நாடுகளை சேர்ந்த சுமார் 48,000 பேரை வீழ்த்தி இந்த விருதை வென்றுள்ளனர் யோங்க்யூங் பவோ மற்றும் க்ரஸ் எட்மண். விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. https://www.ndtv.com/tamil/and-the-wildlife-photographer-of-the-year-award-goes-to-a-china-photographer-2118383?pfrom=home-lateststories

ஹொங் கொங் சட்டசபை இடைநிறுத்தப்பட்டது

3 months ago
ஹொங் கொங்கின் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமை ஹொங் கொங்கின் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததோடு, அவரைப் பதவி விலகுமாறு இன்று மீண்டும் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட சட்டசபை அமர்வொன்றில் கோரிய நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்தவகையில், இவ்வாறானதொரு நிலைமை நேற்றும் ஹொங் கொங் சட்டசபையில் ஏற்பட்டிருந்த நிலையில் காணொளி மூலம் தனது வருடாந்த கொள்கையை நிகழ்த்தியிருந்த பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாம், அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றபோதே நேற்று இரண்டாவது நாளாகவும் ஹொங் கொங் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதேவேளை புதிய வீதி வன்முறையாக, கத்திகளையும், சுத்தியல்களையும் கொண்டிருந்த முகமூடி அணித்த தாக்குதலாளிகள், பாரியதொரு ஜனநாயக ஆதரவுக் குழுவின் தலைவரொருவரை நேற்று தாக்கியுள்ளனர். அந்தவகையில், இது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சீன அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் கைகளில் இரத்தம் உள்ளதெனத் தெரிவிக்கும் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளை அங்கிகரிக்குமாறு கோரியிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் உரையில் கண்டு கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபையிலிருந்து டசின் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்புக் காவலர்கள் வெளியேற்றியிருந்த நிலையில், அவர்கள் கோஷமிட்டிருந்ததுடன், பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் கைகளில் இரத்தம் இருக்கும் பதாதைகளைக் காண்பித்திருந்தனர். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹங-கங-சடடசப-இடநறததபபடடத/50-240113

மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி!

3 months ago
மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி! மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன. விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்து விட்டால், அவற்றின் ஆயுள் கொஞ்சம் அதிகரிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் பொறுத்த வரை, இது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பொறிமுறை: உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு, இதய நோய் இரத்த அழுத்தம் போன்ற தற்காலத்தில் மரணத்திற்குக் காரணமான பல நோய்களைக் குறைத்து விடுவதால் ஆயுள் சிறிது அதிகரிக்கலாம். ஆனால், உணவும் அனுசேபமும் மட்டுமே இந்த நோய்களைக் குறைத்து விடுவதில்லை, மனப் பதட்டம் (stress) போன்ற சமூகக் காரணிகளும் நோய்களை உருவாக்கக் கூடியவை என்பதால் அந்த திசையிலும் ஆய்வுகள் நகர்கின்றன. இந்தக் கோணத்தில் செய்யப் பட்ட ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவு தான் மேலே தலைப்பில் இருக்கும் "மூளைக்கு ஓய்வு" என்பது! நூறு பில்லியன் கலங்களால் ஆன மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விழுங்கிக் கொள்ளும் ஒரு உறுப்பு. அந்த நூறு பில்லியன் மூளைக்கலங்களான நியூரோன்களிடையே உருவாகும் நரம்புப் பிணைப்புகள் (synapses) ட்ரில்லியன் கணக்கில் இருக்கும். இந்த வலையமைப்பே (neural network) நாம் கற்றுக் கொள்ளவும், அனுபவம் பெறவும், உணர்வுகளால் நெகிழவும் காரணமான அடிப்படை அமைப்பாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது கொண்டிருக்கும் அதேயளவான நியூரோன்கள் தான் அது வளரும் போதும் அதன் மூளையில் இருக்கின்றன. ஆனால், இந்த நியூரோன்களிடையேயான தொடர்புகள் தான் மூளை வளர்ச்சியாக எமக்குத் தெரிகிறது. பின்னர் எமக்கு வயதாகும் போது கொண்டு வந்த நியூரோன்களில் சில ஆயிரத்தை நாம் இழக்கிறோம். அந்த இழப்போடு நரம்புப் பிணைப்புகளும் இழக்கப் படும் போது மூளைக்கு வயதாக ஆரம்பிக்கிறது. முதுமையின் இயற்கையான மாற்றம் இது. இந்த நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் வைத்திருக்க ஒரு வழி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது. பொதுவாகவே உடலில் சுவாசத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும் உடற்பயிற்சி முதல் மூளைக்கு வேலை தரும் கணக்கு, வாசிப்பு, யோசிப்பு, இசை வரை என பல வழிகளில் மூளையின் நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் காக்க முடியும். மூளையின் நியூரோன்கள் அதிகம் அளவுக்கு மீறி செயற்படாமல் பாதுகாப்பதாலும் ஒரு உயிரின் ஆயுளை அதிகரிக்கக் கூடும் என்று தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு கூறுகிறது. இந்த அளவுக்கு மீறிய நியூரோன்களின் செயல்பாடு (excitation) என்பது எங்கள் மனப் பதட்டத்தின் பால் பட்டதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 80 வயதுவரை வாழ்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 85 வயது வரை வாழ்ந்தவர்களின் மூளையில் "றெஸ்ட்" (REST) எனப்படும் ஒரு ஜீனின் செயல்பாடு அதிகமாக இருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த றெஸ்ட் ஜீனின் வேலை மூளையின் நியூரோன்கள் அதிகமாக பதகளிப்பாகாமல் (over-excitation) பார்த்துக் கொள்வதாகும். இதே ஜீனினால் இயக்கப்படும் ஒரு நரம்பியல் பாதை தான் உடலில் மனப்பதட்ட நேரத்தின் போது நிகழும் அனுசேபத் தொழிற்பாடுகளையும் கட்டுப் படுத்துகிறது. எனவே, பதட்டம், அதனால் நிகழும் அனுசேபத் தொழில்பாடு அதோடு மூளையில் கொஞ்சம் அதிகமாகத் துள்ளும் நியூரோன்கள், இவையெல்லாம் இணைந்தே எங்கள் ஆயுளைக் குறைப்பதாக கருதுகிறார்கள். உணர்ச்சி வசப்படாமல் இருப்பது சில சமயங்களில் சாத்தியமில்லையானாலும் " அமைதியாய் இருந்தால் சில ஆண்டுகள் அதிகம் வாழலாமே?" என்ற கவர்ச்சிகரமான நன்மை கருதி இனி உணர்ச்சி மயமாவதைத் தவிர்ப்போம்! (இது எனக்குப் பொருந்தாத அட்வைஸ்!😎). ஆய்வின் இணைப்பு: https://www.nature.com/articles/s41586-019-1647-8 சாதாரண மொழியில் ஆய்வின் சுருக்கம்: https://www.nature.com/articles/d41586-019-02958-x நன்றி. ஜஸ்ரின்

முதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு

3 months ago
காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 17 , இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.... சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. “என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார். “அங்கு தலைமையில் உள்ளவர்கள் எல்லாரும், எங்களைப் போல முதியவர்கள் தானே; அதைத்தான் சுமந்திரன் சொல்லியுள்ளார் போலும்” எனச் சொன்னார் இன்னொரு முதியவர். வேடிக்கையாகச் சொன்னாலும், உள்ளே மறைமுகமாக ஆழமான கருத்து உள்ளதுதானே? யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா, கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன், “எங்களிடம் முதிர்ச்சியான அரசியல்த் தலைமை உண்டு” எனக் கூறியிருந்தார். மேலும், அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளின் முக்கியத்துவம், கம்பெரலியவின் நோக்கம் எனப் பல விடயங்களைத் தொட்டுப் பேசி உள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகள், முக்கியத்துவம் நிறைந்தனவே; அவை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே; அதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் கிடையாது. இன்னும் சிறிது காலங்களில், நிறைவுக்கு வரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில், அரசியல்த் தீர்வு விடயத்திலும் கூட, கூட்டமைப்பு பல விட்டுக் கொடுப்புகளைச் செய்துள்ளது. என்ன விதத்திலாவது, புதிய அரசமைப்பை உருவாக்குவதன் ஊடாக, நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என முழுமையாக நம்பி நடந்துள்ளது. இந்நிலையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவோம் என, எழுத்து மூலமான உறுதி மொழியை வழங்கத் தயங்கினால் அல்லது தவறினால், ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என, இலங்கைத் தமிழரசுகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். சி.வி.கே சிவஞானம் சிரேஷ்ட அரச அதிகாரியாகப் பணியாற்றியவர். அத்துடன், நீண்ட காலமாக அரசியலிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக, முக்கிய பதவியில் உள்ளார். இவரது இந்தப் பேச்சு, ‘முதிர்ச்சி’யான அரசியல் பேச்சா என விளங்கவில்லை. மேலும், “தேர்தல் பகிஷ்கரிப்பு, தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல; 2005ஆம் ஆண்டிலும் செய்து காட்டியிருந்தார்கள்” எனவும் கூறி உள்ளார். சரி பிழைகளுக்கு அப்பால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் கடுமையான விளைவுகளை, இன்னமும் தமிழினம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டிய நிலையில் உள்ளோம். மறுபக்கத்தில், கடந்த காலங்களில் இனப்பிரச்சினை விடயத்தில், இந்த நாடு பல உடன்படிக்கைகளை, ஒப்பந்தங்களை எழுத்து வடிவில் கண்டது. அவற்றுக்கு எல்லாம் ஈற்றில் என்ன நடந்தது? ஓப்பந்தங்களைத் தூக்கியெறிவதும், எரிப்பதும், கிழிப்பதும் பேரினவாதிகளுக்குக் கடினமான காரியங்கள் அல்ல; இவற்றை விவரிக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை. இந்நிலையில், அன்று தமிழ் இளைஞர்கள் கரங்களில் மட்டும் இருந்த ஆயுதம், இன்று அனைத்துத் தமிழ் மக்கள் கைகளிலும் உள்ளன. ஆம்! அதுவே வாக்கு எனும் ஆயுதம். அதுவே, தற்போது தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள பலமான ஆயுதம்; அத்துடன் உரிமையும் கூட. அதை எவ்வாறு உத்தமமாகப் பயன்படுத்தலாம் எனத் திட்டம் தீட்டுவதும், அதை உச்சமாகப் பயன்படுத்துவதும் அதற்கான ஊக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களும் வாக்கு என்ற ஆயுதத்தை வெற்றுக் காகிதங்களாகப் பார்க்கின்றார்களா? தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தலில் வாக்களித்தோ, புறக்கணித்தோ பௌத்த சிங்களவரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளார். இந்த நிதர்சனமான உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே, தமிழ் மக்கள் வாக்களிக்காது ஒதுங்கி, விலகி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஒற்றுமையாகக் கணிசமான தமிழ்க் கட்சிகள் ஒன்று கூடித் தீர்மானம் எடுத்து, தமிழ்த் தலைமை சுட்டு விரல் காட்டும் சிங்கள வேட்பாளருக்கு, வாக்களிக்க வேண்டும். இதனூடாக, இலங்கைத் தீவின் ஐனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியவர்களாகத் தமிழினம் மாற வேண்டும். மாறாக, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஒ(ப)துங்கி இருக்கக் கூடாது. கொழும்பிலிருக்கும் சிங்களத் தலைமை, திருகோணமலையில் இருக்கும் தமிழ்த் தலைமையிடம் நேராகச் சென்று ‘வாக்கு’க் கொடுத்து, வாக்குக் கேட்க வைக்க வேண்டும். எதிர்காலத்தில், தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்று, ஐனாதிபதியாகிய பின்னர், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காமலும் போகலாம் என்ற பயமும், தமிழர்களுக்கு உள்ளூர உண்டு. மறுபுறத்தில், தமிழ் மக்கள் வாக்களிக்காது விடுவதால், தெரிவு செய்யப்படும் வேட்பாளராலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படலாம் தானே? ஆனால், சி.வி.கே. சிவஞானம் கூறுவது போல, “நாம் தேர்தலைப் புறக்கணித்து, ஒதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், யார் அதன் பின் ஆட்சிக்கு வருகின்றார்களோ, அவர்களுக்குச் சர்வதேச சமூகத்தின் ஊடாக, எமது பிரச்சினைக்குத் தீர்வை வழங்க அழுத்தம் கொடுப்போம்” என்பது எந்தளவு சாத்தியப்பாடானது? தமிழ் மக்கள் விடயத்தில், சர்வதேசம் என்பது, எப்போதோ முடிந்த காரியம் என்றாகி விட்டது என்றே, தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். ‘சீவன் துடிக்கத் துடிக்கப் போன போது, வேடிக்கை பார்த்தவர்கள், அந்தியேட்டிக்கு வந்தது போல’ போர் முடிந்தும் பத்து ஆண்டுகளில், தமிழ் மக்கள் விரும்பும்படியாகக் குறிப்பிட்டுக் கூறும்படியாக, சர்வதேசத்தால் என்னத்தைச் சாதிக்க முடிந்தது? ஆகவே, சர்வதேசம் என இன்னும் எத்தனை நாள்களுக்குக் கூறிக் கொண்டு இருக்கப் போகின்றோம். களத்தின் தோற்றப்பாடும், காலத்தின் தேவைப்பாடும் தமிழர்கள், தங்களது சர்வ வல்லமையைப் பெருக்குவதிலேயே முற்றிலும் தங்கி உள்ளது. இதேவேளை, பேரினவாதம் தங்களுக்குள் கதிரைக்கான அரசியல் போட்டி என்று வரும் போதே, குடும்ப ஆட்சி வேண்டுமா, நாட்டைக் கட்டி எழுப்பும் தலைவர் வேண்டுமா, அராஜக ஆட்சி வேண்டுமா, சமாதான ஆட்சி வேண்டுமா எனக் கேள்வி கேட்பார்கள். ஆனால், நாடு என்று வரும் போது, வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். “பயங்கரவாதத்தை முறியடித்தவரை, மின்சாரக் கதிரையிலிருந்து நானே காப்பாற்றினேன்” எனக் காப்பாற்றவும் அடைக்கலம் கொடுக்கவும் முண்டியடிப்பார்கள். அதுவே, முதிர்ச்சியான அரசியல்த் தலைமைத்துவம் ஆகும். தமிழ் மக்களிடம், முதிர்ச்சியான அரசியல் தலைமை இல்லை என்றே கூற வேண்டும். தற்போது, தமிழர்கள் அரசியலில் வெறுமையே நிலவுகின்றது. தகுதியான தமிழ்த் தலைமைக்கான பதவி, இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. “தமிழ்க் கட்சித் தலைவர்களே தயவு செய்து ஓரணியில் அணி திரளுங்கள். ஒன்றுபட்டுத் தேர்தலை எதிர்கொள்வோம்” எனத் தமிழ்ச் சமூக சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என ஒட்டுமொத்தச் சமூகத்தினரும் கோரிக்கை விடுத்தும், ஒற்றுமை என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எந்தத் தமிழ்க் கட்சியும் தங்களது கட்சி நலனையும் தங்களது சொந்த நலனையும் விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை. அதேவேளை, தமிழ் மக்களும் எந்தத் தமிழ்க் கட்சியையும் எந்தத் தமிழ்த் தலைவரையும் தனியாக முன்னுரிமைப்படுத்தவும் தயார் இல்லை. அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தில், அதன் அரசியல்த் தலைவர்கள் தங்களது மக்களது விடிவுக்காக அணியாகச் செயற்பட இன்னமும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. மாறி மாறி மற்றவர்கள் மீது குறைகளைச் சொல்லுவதும் குழிபறிப்பதும் குறுக்கே நிற்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பாள்புரம், பாலைப்பாணி, கொல்லவிளாங்குளம், வடகாடு ஆகிய பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் 45க்கு மேற்பட்ட மாணவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதேச சபையிலும் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் தங்களது கதிரைகளைப் பிடிக்க முண்டியடிக்கும் அரசியல்வாதிகளால், அப்பாவிச் சிறுவர்களது போக்குவரத்து வசதிகளைச் சீர்படுத்தி, பாடசாலைக் கதிரைகளில் அவர்களை அமர்த்த முடியாது உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகத் தமிழர் உள்ளார். இதைவிடத் தமிழ் மக்களது உரிமைகளைக் கடமைகளை நிறைவேற்றவென, பல தமிழ்க் கட்சிகள் உண்டு. ஆகவே, அவர்கள் அனைவரும் இதற்கும் பொறுப்புக் கூறல் வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மதரசசயன-அரசயல-தலம-எஙகளடம-உணட/91-240139

அந்தத் தேசப்பற்றாளர்கள் எங்கே?

3 months ago
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:58 இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில், அந்த மக்களின் வாக்குகள் அவசியமில்லை என்றதோர் எண்ணத்தில், இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவே அப்போது கருதப்பட்டது. எனவே, அந்த முஸ்லிம் விரோத பிரசாரம், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில், அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, அது தீவிரமடையும் என்றும் கருதப்பட்டது. இந்த இனவாதப் பிரசாரம், அரசியல் நோக்கம் கொண்டது என்றும் எனவே, அது ஜனாதிபதித் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கூட்டத்தின் போது கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய நிலையில், தற்போது நிலைமை மாறியிருக்கிறது போல் தெரிகிறது. வெற்றி பெறுவதற்காகவே போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தாம் தேசப்பற்றாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களைச் சீண்டியும் அச்சுறுத்தியும் இஸ்லாத்தை நிந்தித்தும் வந்த பௌத்த தீவிரவாதிகள், அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, நாட்டின் தென் பகுதிகளில் சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக பெற்றுக் கொண்டும், ஐக்கிய தேசிய கட்சி சுமார் 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. பொதுஜன பெரமுன, சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை அவ்வளவாகப் பெறாத நிலையிலும், 49 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே தான், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளின்றியே தமக்கு, ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என ஆரம்பத்தில் கருதியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், பின்னர் அவர்கள் வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏனைய தேர்தல்களைப் போல் ஜனாதிபதித் தேர்தலின் போதும், வெற்றி பெறுபவர் தோல்வியடைபவர்களை விடக் கூடுதலாக வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதாது. அவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். அவ்வாறு இல்லாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணியே, வெற்றி பெறுபவர் தீர்மானிக்கப்படுவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன 62 இலட்சம் வாக்குகளையும் மஹிந்த ராஜபக்‌ஷ 58 இலட்சம் வாக்குகளையும் பெற்றனர். எனவே, இம்முறை வெற்றி பெறுபவர் குறைந்த பட்சம் 65 இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது, சாத்தியமா என்று எழுந்துள்ள சந்தேகமே, மொட்டு கட்சியினர் என்றழைக்கப்படும் பொதுஜன பெரமுனவினர் சிறுபான்மையின வாக்குகளை நாடக் காரணமாய் இருக்கிறது என்று கருதலாம். இந்த நிலையில், கடந்த காலத்தில் அந்த முஸ்லிம் விரோதிகள் தூக்கிப் பிடித்த சில விடயங்கள், காணாமற் போயுள்ளதை அவதானிக்க முடிகிறது. 4,000 பௌத்த பெண்களை மலடிகளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் மருத்துவர் முஹம்மத் ஷாபியை, அவர்கள் முற்றாக மறந்து விட்டனர் போலும். 4,000 பெண்களை மலடிகளாக்குவது என்றால் இலேசான விடயமா? அதனை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? ஆனால், மறந்துவிட்டார்கள். எனவே, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியவர்களின் இனப் பற்று, உண்மையான இனப்பற்றாக இருக்குமா? அல்லது, இது பொய்க்குற்றச்சாட்டு என்பதை அறிந்தும், இனவாதத்தால் சுயதிருப்பதி அடைவதற்காக, அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்களா என்பதை, இப்போது நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். அதேபோல், ஐ.தே.க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, கடந்த காலங்களில் செயற்பட்டமையை பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் ஏதோ தேசத் துரோகமாகக் கருதுவதாகவே தெரிந்தது. எதற்கெடுத்தாலும் ஐ.தே.க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைப்படி செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். கூட்டமைப்பும் குறிப்பாக, அதன் தலைவர் இரா. சம்பந்தன், அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், நாட்டை பிளவுபடுத்த கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படும் பயங்கர சக்திகளாகவே, அவர்கள் சித்திரித்தனர். ஆயினும், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கவே நிலைமை மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பது இப்போது பாவமாகக் கருதப்படுவதில்லை. தமது கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்ததை நடத்தவிருப்பதாகவும் ராஜபக்‌ஷவின் கோரிக்கையின் பேரிலேயே அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அண்மையில் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இது எவ்வாறு சாத்தியமாகும்? இது சாத்தியமாவதற்கு ஒன்றில் கூட்டமைப்பு மாறியிருக்க வேண்டும். அல்லது பொதுஜன பெரமுன மாறியிருக்க வேண்டும். இது சாத்தியமாவதாக இருந்தால், ஒன்றில் கூட்டமைப்பின் பார்வையில் பொதுஜன பெரமுன இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகளைச் செய்த தலைவர்களின் கட்சியல்ல; அதேபோல், பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் பார்வையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுடன் இணைந்து நாட்டைத் துண்டாட முயற்சித்த கட்சியல்ல. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தார். ஆனால், இறுதியில் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முற்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியால், ஐ.தே.க ஆட்சி காப்பாற்றப்பட்டது. தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்க வாக்குறுதி அளித்தே, மஹிந்தவின் அரசாங்கத்தை, ரணில் விக்கிரமசிங்க கவிழ்த்ததாக, அப்போது பொதுஜன பெரமுனவினர் கூறினர். அந்தத் தமிழ்க் கூட்டமைப்புடன் தான், இப்போது பேச்சுவார்த்தை நடத்த கோட்டா அழைப்பு விடுத்துள்ளார். ஓரிரு மாதங்களுக்கு முன்னர், கடும் தேசப்பற்றாளர்களாக இருந்தவர்கள், அந்த அழைப்புக்கு எதிராகக் குரல் எழுப்புவதாகத் தெரியவில்லை. உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் இலக்குகளாகினர். அந்தப் பௌத்த தீவிரவாதிகளின் பின்னணியில், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளே இருந்தனர். முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும் அவ்வாறு இலக்கானவர்களில் ஒருவராவர். அவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனால் கோட்டாபய பயனடையப் போகிறார் என்பது தெளிவானதாகும். ஹிஸ்புல்லாஹ்வுக்குத் தமிழர்களோ, சிங்களவர்களோ வாக்களிக்கப் போவதில்லை; ஓரிருவர் ஆங்காங்கே வாக்களிக்கலாம். அவர் பெரிதாக வாக்குகளைப் பெறாவிட்டாலும் முஸ்லிம்களே அவருக்கு வாக்களிப்பர். முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும், சஜித்துக்கு வாக்ளிப்பர் என்றே தெரிகிறது. அந்த வாக்காளர்களில் சிலர், ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், அதன் பயன் கோட்டாவையே சென்றடையும். எனவே, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பௌத்த தீவிரவாதிகள், அவர் ஜனாதிபதியாவதற்கு போட்டியிடுவதைப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. இது தான், தேசப்பற்றின் இலட்சணம். தேசப்பற்று: மேலும் சில உதாரணங்கள் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, வர்த்தக வணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கடந்த மே மாதம் 31 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த மூவரும், ‘முஸ்லிம் பயங்கரவாதிகள்’ என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஹிஸ்புல்லாஹ்வின் ‘பற்றிகலோ கம்பஸ்’ எனப்படும் பல்கலைகழகத்துக்கு எதிராக, ரத்தன தேரர் பெரும் போராட்டத்தையே நடத்தினார்கள். ஆனால், ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவொரு சதித் திட்டமோ, குறுகிய நோக்கமோ இருப்பதாகக் கோட்டாவை ஆதரிக்கும் ரத்தன தேரர் காணவில்லை. அவர் இப்போதும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதோ, ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதைப் பாவித்து, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதோ, இதன் அர்த்தம் அல்ல. ஆனால், ரத்தன தேர் போன்றோர்களின் தேசப்பற்றின் உண்மையான சுபாவத்தைப் புரிந்து கொள்ள, இது நல்லதொரு சந்தர்ப்பமாக இருக்கிறது என்பதே எமது வாதமாகும். மதுமாதவ அரவிந்த என்பவர், ஒரு சிங்களப் பாடகர், நடிகர். அதேபோல், அவர் கடந்த வாரம் வரை, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார். அண்மையில், கோட்டாவுக்கு ஆதரவாக நடைபெற்ற சிறிய கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமாகக் கருத்துத் தெரிவித்தார். இந்த உரை, சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தமது உரையால், தமது கட்சி அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து அவர் இராஜினாமாச் செய்தார். தாம், இனக் குரோதச் சொற்களைப் பாவித்தமை பிழை என, மதுமாதவ கூறவில்லை. மாறாக, அந்த உரையால், கட்சி அசௌகரித்துக்கு உள்ளாகியதாலேயே அவர் பதவி துறந்துள்ளார். இந்த விடயத்தை விளக்குவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கட்சித் தலைவர் கம்மன்பிலவும் அவர் பாவித்த சொற்கள் பிழையானவை என்று கூறவில்லை. மதுமாதவ பாவித்த சொற்கள், முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறாக ‘அமைந்திருக்கக் கூடும்’ என்பதால், அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக ஒரு கட்டத்தில் கூறினார். அவர் பாவித்த சொற்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சாக ‘அமைந்திருக்கக் கூடும்’ என்பதால், அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, மற்றொரு கட்டத்தில் அவர் கூறினார். இந்த உரையை அடுத்து, ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மதுமாதவவைத் தொலைபேசி மூலம் திட்டித் தீர்த்ததாகவும் அதனாலேயே அவரைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்விக்க கம்மன்பில நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மறுபுறத்தில், இது தேர்தல் காலமாக இல்லாதிருந்தால், பொதுஜன பெரமுனவினரும் கம்மன்பிலவும் அந்த உரையை நியாயப்படுத்தி இருப்பார்களேயல்லாமல், இவ்வாறான நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை. கடந்த காலத்தில், ஞானசார தேரர் போன்றோர்கள் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மிகவும் மோசமாக நிந்தித்த சந்தர்ப்பங்களில், அது பௌத்தத்துக்கு அவப் பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் செயல் என எவரும் கூறவில்லை. ரத்தன தேரர், இரசாயன உரப் பாவனையைக் கடுமையாக எதிர்ப்பவர். தேசிய விவசாயத்தை அழிக்க ஏகாதிபத்தியவாதிகள் இரசாயன உரத்தைப் பாவிக்கிறார்கள் என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கோட்டாவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம், அநுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போது, தமது ஆட்சியின் கீழ் இலவசமாகவே விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்கப்படும் என கோட்டா வாக்குறுதியளித்தார். ரத்தன தேரரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார். தாம் ‘ஏகாதிபத்தியவாதிகளின் சதிக்கு’ சாதகமாகச் செயற்படுவதாக, கோட்டா அந்தக் கூட்டத்தின் போது கூறிய போதிலும், ரத்தன தேரர் அதனை விமர்சிக்கவில்லை. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளுக்காக ஐ.தே.க நாட்டை அவர்களிடம் அடகு வைத்திருப்பதாகவே பொதுஜன பெரமுனவினர் கடந்த காலங்களில் கூறி வந்தனர். அதே வாக்குகளுக்காக, இப்போது அவர்களும் தாம் தேசப்பற்றாக எடுத்துரைத்ததை வேண்டுமென்றே புறக்கணித்துச் செயற்பட்டு வருகிறார்கள். உண்மையான தேசப்பற்றை அவ்வாறு புறக்கணிக்கவோ, மறக்கவோ, உதாசீனப்படுத்தவோ முடியுமா? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அநதத-தசபபறறளரகள-எஙக/91-240140

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

3 months ago
இலங்கையில் ஒரு சட்டமே வேண்டும். அதாவது, மத மாற்றம் கோயில்கள், ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகளிலேயே மட்டுமே நடைபெறுவதற்கு சட்ட அனுமதி உண்டு என்று. சட்டத்தில் இந்த கட்டிட அமைப்புகள் வரையறுக்கப்பட்ட வேண்டும். இத்தகைய சட்டம், பல்வேறு பிரச்னைகளை தீர்த்து விடும். ஜஸ்டின் போன்றோருக்கு இது உவப்பிலாத சட்டம் தான், அனல் இது எல்லோருக்கும், மதாற்றத்தை பொறுத்தவரை, சட்டத்தின் முன் சமமாக நடத்த இடமளிக்கும்.

பேரம்­பேசும் பலத்தை இழந்­த­மையால் பௌத்த மய­மாக்கல் அரங்கேற்றம் - யாழ். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

3 months ago
நிதர்சனம் ! மீண்டும் ஒருமுறை தமிழினத்திற்கு, தேவையான காலத்தில் பங்காற்றிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

பச்சோந்தியா? துரோகியா? ஒரே மேடையில் பேச வருமாறு ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு

3 months ago
‘சீரோ ஆகமாட்டார் ஹீரோ ஆகுவார்’ “முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல், சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதிருக்கின்ற நம்பிக்கை வீண்போக மாட்டாது” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர், தங்களது ஆதரவாளர்கள் சகிதம்,) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர். இந்த நிகழ்வு, தாருஸ்ஸலாமில் நேற்று (16) நடைபெற்றபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் ஹக்கீம், “இந்த மீளிணைவானது, தனி மனிதனை விடுத்து, சமூகத்தைப் பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். கட்சியில் இருக்கின்றவர்களைப் பலவீனப்படுத்தாமலும், புதிதாக வருபவர்களை மலினப்படுத்தாமலும் செயற்பாடுகளைப் பகிர்ந்துகொண்டு ஒருமித்துப் பயணிக்க வேண்டும்” என்றார். இதேவேளை, “நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற காலகட்டத்தில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியைப் பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து புதியதொரு யுகம் படைப்போம்” என, எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். http://www.tamilmirror.lk/அம்பாறை/சர-ஆகமடடர-ஹர-ஆகவர/74-240131
Checked
Wed, 01/22/2020 - 10:40
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed