புதிய பதிவுகள்

மகாராணியைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

3 months 2 weeks ago
மகாராணியைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் விஜயத்தின் முதல்நாளான இன்று(திங்கட் கிழமை) பிரித்தானிய மகாராணியைச் சந்தித்துள்ளார்கள். இன்று காலை லண்டன் வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற மதிய விருந்துபசாரம் மற்றும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மதிய விருந்துக்கு பின்னர் ட்ரம்ப் தம்பதியர் வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். அதைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமீலா ஆகியோரால் அவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மகாராணியால் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்படவுள்ள அரச விருந்தில் ட்ரம்ப் தம்பதியர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்விருந்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேற் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயத்தின் இரண்டாவது நாளான நாளையதினம் பிரதமர் தெரேசா மே-யை அமெரிக்க ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் காலநிலை மாற்றம் மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனம் Huawei பற்றி விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. http://athavannews.com/இங்கிலாந்து-மகாராணியை-சந/

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

3 months 2 weeks ago
இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன் இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’. நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார். http://athavannews.com/இனவாதிகளின்-பிடியில்-நேற/

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months 2 weeks ago
குமார‌சாமி தாத்தா தொட‌ர்ந்து முன் நிலையில் நிப்ப‌தால் , ஒரு போத்தில் க‌ள்ளு தாத்தாவுக்கு ஓட‌ர் ப‌ண்ணி விட்ட‌ன் 🥂🍻 , இப்ப‌ ம‌கிழ்ச்சி தானே தாத்தா இஞ்சோய் 😁

ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா?

3 months 2 weeks ago
தேர்தலில் ஒருத்தரும் பெரும்பான்மை எடுக்க மாட்டார்கள்...இவர்களது மக்கள்,இவர்கள் செய்தது பிழை தான் என்று தெரிந்தாலும் விட்டிக் கொடுக்க மாட்டார்கள்..கட்டாயாம் சிங்கள கட் சிகள் ஆட்சி அமைக்க இவர்களது உதவி தேவை ...மக்களாவது,மண்ணாவது பதவி முக்கியம் அமைச்சரே

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

3 months 2 weeks ago
இலங்கையில் இருக்கும் சில மகப்பேற்று நிபுணர்கள் சொல்கிறார்கள் பிரசவத்தின் போது அப் பெண்களுக்கு தெரியாமல் கருத துளையினுடாக ஊசி போடலாம்மாம்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?

3 months 2 weeks ago
என்று இலங்கையில் புத்தபிக்குகளின் அரச ஆதிக்கம் உடைந்து, அரசானது பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டுக்குள் மட்டும் செயல்படத் தொடங்குகிறதோ, அன்றுதான் மொழிப் பிரச்சனையில் தொடங்கி, இலங்கை மக்களிடம் புகுத்தப்பட்டுள்ள மதவெறியும் அடங்கி, ஒரு புதுயுகம் மலர வழியேற்படும். அனைத்து மதத்தினரதும் மதக் கோட்பாடுகளும் இலங்கை அரசின் சட்டங்களை மீறாமலே கடைப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்தினால்... ஆசியாவில் மட்டுமல்ல, இந்தப் பூமிப் பந்திலேயே இலங்கை ஒரு சொர்க்கபுரியாக விளங்கும்.!

கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என அறிவிப்பு

3 months 2 weeks ago
கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என அறிவிப்பு தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம் மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.கஸ்தூரி ரங்கன் குழு: மூன்றாவது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது.தமிழகம்: இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்றால் தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும். இதனால் மாநில உரிமைகள் பறிபோகும் என்பது கல்வியாளர்களின் கவலையாகும்.தொடர் எதிர்ப்பு: இதைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டப்பட்டன. அது போல் 3-ஆவது மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும். ஆனால் அது எந்த மொழி என்பதை மாணவர்களே தேர்வு செய்ய வேண்டுமே ஒழிய அதை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலமானது. தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என பாஜக தலைவர்களும் தெரிவித்து வந்தனர்.இந்தி கட்டாயம்: இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை.நீக்கம்: விருப்பத்தின் அடிப்படையில் 3-ஆவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Read more at: https://tamil.oneindia.com/news/delhi/centre-has-released-a-revised-draft-of-new-education-policy-352865.html

இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

3 months 2 weeks ago
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு பொறுப்பேற்ற இந்தியா இதற்கும் பொறுப்பேற்கும் என நினைக்கிறேன். ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தி மாசி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்கள். இப்ப இன்னும் இரு மாதங்களுக்கிடையில் என்கிறார்கள். இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது ஆச்சர்யம் தான்.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

3 months 2 weeks ago
தடுப்பிலிருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி சொன்னது நினைவுக்கு வருகிறது, ஊசி போடும்போது எதற்காக போடுகிறீர்கள் என கேட்க எச்ஐவிக்கு தடுப்பூசி போடுவதாக கூறினார்களாம்!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?

3 months 2 weeks ago
சுதந்திரத்துக்கு முன்னர் ஆசியாவின் சொர்க்க பூமியாகவே இலங்கை விளங்கியது. சுதந்திரம் கிடைத்த பின்னரும் நாட்டு மக்கள் ஐக்கியமாகவே வாழ்ந்தனர். எனினும், பௌத்த மத அடிப்படைவாதிகளாலேயே நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியது. இன, மதம், குல பேதங்களால் மக்களிடையே முரண்பாடுகள் உருவாகின. இதனால், பொருளாதாரரீதியிலும் வீழ்ச்சியந்தது இலங்கை. ஒரு காலகட்டத்தில் சிங்கபூரை இலங்கைபோல் மாற்றுவேன் என அந்நாட்டு பிரதமர் லீ குவான் அறிவித்திருந்தார். ஆனால், இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே? பண்டா, செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றிருக்காது. தமிழ் மக்களும் தனிநாடு வேண்டுமென கோரியிருக்கமாட்டார்கள். பிக்குகள் சிலர் போர்க்கொடி தூக்கியதாலேயே உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டிய நிலை பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது. அவர் இறுதியில் ஒரு பௌத்த பிக்குவால் கொல்லப்பட்டார். இதன் விளைவு பாரதூரமாக அமையும் என பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறியது போலவே உள்நாட்டு போர் தலைதூக்கியது. நகத்தால் கிள்ளியெறிந்து தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினையை, அடிப்படைவாதிகளே போர்க்களத்தை நோக்கி நகர்த்தினர். இதனால் 30 ஆண்டுகள் இன்னல்களை எதிர்கொண்டோம். எமது இன்னல்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பங்கெடுக்கவில்லை, நடுநிலைமையும் வகிக்கவில்லை. இன்று, சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லீம்களை குறிவைக்கிறார்கள். எமது தலைவர்கள் முன்னாள் இரண்டு தெரிவுகள் உள்ளன. உண்மையின் பக்கம் நிற்பது, அடுத்தது சிங்கள பேரினவாதத்துடன் இணைவது.

ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா?

3 months 2 weeks ago
Sirisena Sponsored Richtig athana Drama Escalates Making it further clear that Athuraliye Rathana thera’s protest fast and subsequent actions are all part of a political drama staged by Sirisena, Presidential Media Division announced a short while ago that Governors M L A M Hizbullah and Azath Salley have resigned from their positions. Although the handing in of resignations appears as if Rathana thera’s protest fast scored resulting in one of his demands to be realized, a closer look at the Constitution reveals this is part of a carefully thought out play staged by Sirisena to help him score brownie points among voters. Constitutional provisions grant power to the President to appoint a Governor but does not authorize sacking one. If an ousting of the Governor is to happen, the President requires the backing of a ⅔ majority in the Provincial Council. Term of Eastern Provincial Council ended on September 30, 2018 and term of Western Provincial Council ended on April 21, 2019, rendering it impossible for Sirisena to stage an ousting of the Governors. Hence, before the growing unpopularity of the trio Bathiudeen, Hizbullah and Salley, it is clear that Rathana thera’s protest before the Kandy Temple of the Tooth is a cooked up political drama to help Sirisena achieve his political goals. It should also be noted that both Hizbullah and Salley in recent weeks have publicly called for the Presidential pardon and release of BBS Galagoda Atte Gnanasara, who yesterday joined Rathana theraat the protest fast site and said, despite their ideological differences, he has united with Rathana thera in the face of the ‘Muslim issue’. Meanwhile, these short sighted, power hungry moves of Sirisena might end up costing innocent civilians dearly, as anti-Muslim narratives appear to grow stronger. All shops in Kandy remain closed today in an expression of solidarity with Rathana thero’s protest and BBS Gnanasara is marching to Colombo with his goons, demanding the President and government immediately act on Rathana thera’s demands. It was also reported that three individuals who were at the site of Rathana thero’s protest fast, who were unable to confirm their identity and were later revealed to be Muslims, were attacked by a mob while the military attempted to remove them from the location. https://www.colombotelegraph.com/index.php/sirisena-sponsored-rathana-drama-escalates/

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்

3 months 2 weeks ago
வியாழேந்திரன் முஸ்லிம்களுக்கு எதிராக கதைத்து வருபவர். ஆனால் இவர் அதுரலிய ரத்ன தேரரை ஆதரித்து தானும் அடையாள உண்ணாவிரதமிருந்தது இவரை மைத்திரி-மகிந்த கூட்டணி பின்னணியில் இயங்குபவராக தான் சிங்களவர்கள் முன்னிலையிலும் காட்டும். ஏற்கனவே சிங்களவர்கள் இது பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிக்குகள் உண்ணாவிரதமிருக்கலாம். இவர் அதை ஆதரித்து அடையாள உண்ணாவிரதமிருந்தது தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கொண்டுவரப்போவதில்லை. தீமையை மட்டுமே கொண்டு வரும். அதுரலிய ரத்ன தேரரை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ளாமல் வேறு விதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை என்பது என் கருத்து. இது சிங்களவர்கள் வியாழேந்திரனை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். Although this act may seem like the merging of strange bedfellows on the surface – the mystery solves itself when taking a look at political events during the Constitutional coup in October – November, 2018. Viyalendiran was among the MPs who pledged support to the Maithripala Sirisena – Mahinda Rajapaksa nexus during the Constitutional Coup along with Rathana thera. He was even sworn in as the Minister of Regional Development for the Eastern Province. If there was ever a doubt on Rathana thera’s motivations for this protest fast, it has now been made clear. https://www.colombotelegraph.com/index.php/political-hand-behind-rathanas-protest-fast-comes-to-light/
Checked
Sun, 09/22/2019 - 14:11
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed