புதிய பதிவுகள்

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

3 months 1 week ago
Elite க்கு எதிராக மைக்கல் ஜக்சன் பாடிய பாடல். “Jew me sue me you can never kill me“ என பாடினார். இறுதியில் அவரையும் கொலை செய்து விட்டு drug overdose என கூறினார்கள்.

இலங்கையில் உயிரிழந்த... டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகளுக்கு, அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி.

3 months 1 week ago
ஒரு ஏழை இப்படியான விபத்தில் இறப்பதை நாம் விரைவாகக் கடந்துபோய்விடுகிறோம் அப்படிப் போய்விடமுடியும். ஆனால் இவர்களது மரணம் கேள்விப்படுபவர்களது மனதை சிறிது உலுக்கவே செய்யும். சற்று யோசிச்சுப்பாருங்கள் மிகப்பெரிய செல்வந்தர்களது பிள்ளைகள் அதுவும் சிறுவர்கள் அவர்களுக்கு அத்தருணத்தில் கிடைக்கக்கூடிய அதி உயர் இன்பங்களையெல்லாம் கண்ணிமைப்பொழுதில் யாரோ தட்டிப்பறித்ததுபோல இருக்கு மனதைப்பிசைகிறது.

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

3 months 1 week ago
என்ன சாமானாக இருந்தாலும் இப்படி நாகரீகமாக கொடுத்தால்த் தான் குடிப்பார்கள். இதையே ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தால் நீங்களும் நானும் தான் குடிக்க வேண்டும். அருமை. ஆமா துட்டு ஒன்றும் இல்லையோ. லட்சம் லட்சமாக கொடுக்கிறாங்களாம் அது தான் கேட்டேன்.

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

3 months 1 week ago
நேரம் செலவழித்து 39 வருட வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள்! நன்றி. ஆனால் நீங்கள் முதலிலேயே குறிப்பிட்டிருப்பது போல, இப்படி ஆவணப்படுத்தப் பட்ட தகவல் சதிக் கோட்பாட்டுக் காரர்களின் யோசிப்பை மாற்றாது! அவர்கள் கையில் நேரம் நிறைய இருப்பதால் தங்கள் கற்பனைக் குதிரையில் தான் அதிகம் காசு கட்டி ஓட விடுவர்! உதாரணமாகப் பாருங்கள்: ஈராக்கிற்கு டொயோட்டா ஏற்றுமதி செய்த ட்ரக்குகளின் எண்ணிக்கை 2011 இல் 6000 இருந்து 2013 இல் 18000 ஆக அதிகரித்தது! இவை ஈராக்கின் தரகர்களால் வாங்கப் பட்டு ஐசிஸ் பயங்கரவாதிகளிடம் கொடுக்கப் பட்டன என்று ஊழலில் மிதக்கும் ஈராக்கிய இராணுவமே ஒத்துக் கொண்டிருக்கிறது! ஆனால் இந்த dry fact இல் கிழுகிழுப்பு இல்லையென்று மருதர் ஒரு கதை சொல்கிறார், ஈராக்கிற்கு அமெரிக்க இராணுவத் தளபாடங்களாக இவை சென்று பின்னர் அங்கால போகிறதாம்! இந்தக்கதையை வைத்து ஹொலிவூட் படம் எடுக்கலாம்! பயங்கரவாதிகளுக்கு வாகனங்கள் கிடைப்பதைத் தடுக்க முடியாது!

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months 1 week ago
வன்னியர் இன்னமும் நாள் இருக்கிறது. உங்கள் தலையை குடையாமல் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளை கேட்டுப் பாருங்கள்.அல்லது இதை பிரதி பண்ணிக் கொண்டு நீங்கள் வழமையாக போகும் உணவகத்துக்கு போய்ப் பாருங்கள்.இந்தக் கிழமை ஐபிஎல் போட்டி நடக்கும் போது போனால் நிறைய பேர் இருப்பார்கள்.முயற்சி பண்ணுங்கள்.  நாங்கள் களத்திலைதான் நிக்கிறம்... நந்தன் சொன்ன களம் விளையாட்டுக் களம். பகலில் படு தோல்வியென்றாலும் இரவில் கோல் அடித்து வெற்றி வாகை சூடுவது நாங்க தானே.

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

3 months 1 week ago
அமெரிக்கா தலைமையிலான படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத ஈராக்கின் ராணுவ சிதறியோட, சில காலங்க்களிலேயே ஈராக்கைத் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் அமெரிக்கா கொண்டுவந்தது. சுன்னி இனமான சதாமின் ஆதரவாளர்களும், ராணுவ அதிகாரிகளும் ஓரங்கட்டஒப்பட்டு, சியா இனத்தவர்களை முன்னிறுத்தி பொம்மை அரசொன்றை ஈராக்கில் நிறுவினார்கள். சதாமின் பாத் கட்சி உறுப்பினர்கள், உளவுத்துறை அதிகாரிகள், பல்லாயிரம் ராணுவ வீரர்கள் என்று சுன்னி இன மக்கள் ஓரங்கட்டப்பட அமெரிக்காவுக்கும், சியாவுக்குமெதிரான பகையுணர்வு இந்த சுன்னி ராணுவ அதிகாரிகளிடையே எழத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் ஈராக் பக்தாத் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய சமயத்தில் தேர்ச்சிபெற்று விளங்கிய அபு பக்கர் அல் பக்டாடி எனப்படும் சுன்னியின சமய விற்பன்னர் ஒருவரும் அமெரிக்க ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு இன்னும் பல்லாயிரக்கணக்கான சதாம் ஆதரவு சுன்னியின ராணுவ வீரர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டார். சில வருடங்களில், தந்து நன்னடத்தை மூலம் அமெரிக்க அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்ற பக்டாடி சிறையில் ராணுவக் கைதிகளுக்கு இஸ்லாமிய சமய வகுப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் அச்மந்தப் போக்கினால் இவரைக் கவனியாது விட்டுவிட, இஸ்லாமிய அடைப்படைவாதத்தை இவர் சிறைக்குள் பரப்பத் தொடங்கினார். இதுவரை காலமும் தமக்குள் எரிந்துகொண்டிருந்த அமெரிக்க எதிர்ப்பு - சியா எதிப்புணர்வை சதாமின் முன்னாள் ராணுவ அதிகாரிகளும், உளவுப்பிரிவும் பக்டாடி மூலம் வெளிக்கொணரத் தொடங்கின. தமது காலடியினுள்ளேயே தமக்கெதிரான சூழ்ச்சி நடைபெறுவதைப் பார்க்கத் தவறிய அமெரிக்க அதிகாரிகள், சில காலத்தின் பின்னர் பக்டாடி உற்பட ஆயிரக்கணக்கான சுன்னி போர்க் கைதிகளை விடுவித்தனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட சதாமின் முன்னாள் ராணுவ அதிகாரிகள், பக்டாடி தலைமியிலான ஐ. சிஸ் எனும் மிகத்தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை நிறுவினர்

முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம்

3 months 1 week ago
என்ன சொல்லியும் திருந்த போவதில்லை இன்றைய யாழ்முஸ்லீம் .com ல் யார் அடிக்கிறாங்களோ அவங்களுடன் முட்டுபட வக்கத்து தமிழ் பள்ளியில் சேலை கட்டிவருமாறு அட்டகாசம் என்று முக்கால்வாசி தமிழருக்கு எதிரான துவேச எழுத்துக்கள் இதை பார்த்தும் பார்க்காதது போல் எங்கடை அரசியல் வாதிகள் http://www.jaffnamuslim.com

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

3 months 1 week ago
எழுத நினைப்பதை எழுதுங்கள். NWO பற்றி எழுதுவதானால் அதற்கும் CIA இற்குமுள்ள தொடர்பை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..!

3 months 1 week ago
கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த தெரியவருவதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில் ‘காணவில்லை’ எனும் தலைப்பில், ‘நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமு’ என்ற வாசகத்துடன், ஆட்டுக்கிடா படம் அச்சிட்ட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியைதான் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். குறித்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளாதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவில், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.முருகன். இவர், கடந்த பல ஆண்டுகளாக கிடா ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்து வந்தார். ராமு என பெயர் கொண்ட அந்த கிடாவும் இவருடன் மிகவும் பாசமாக பழகி வந்ததுடன், இவருடனே படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த கிடா காணாமல்போனது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த முருகன், இதுகுறித்து மறைமலைநகர் பொலிஸில் புகார் செய்தார். பொலிஸாரோ, ’காணாமல் போன மனிதர்களையே கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிறோம்; இதில், உனது கிடாவை எங்கிருந்து கண்டுபிடிப்பது..? போ... போய் நல்லா தேடிப்பாரு..!’ என்று அன்பாகச் சொல்லி அனுப்பி வைத்தனர். இதனால் மேலும் வேதனையடைந்த முருகன், சுவரொட்டி அடித்து தானே அந்தக் கிடாவை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதையடுத்து, தனது செல்போன் எண்கள் மற்றும் காணாமல்போன கிடாவின் படத்தை சுவரொட்டி அச்சடித்து, அதை மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார். அந்த சுவரொட்டியில் உள்ள வாசகம்தான் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில், ‘படத்தில் உள்ள கே.எம்.ராமு பத்து ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட கடா. இவன் காணாமல் போனதில் இருந்து எனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டுள்ளது. என் மகனைப்பற்றி தகவல் தந்தாலோ, கண்டுபிடித்து தந்தாலோ 25 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கி, எனது உடலில் உள்ள எந்த பாகத்தை தானமாக கேட்டாலும் சத்தியமாக தருகிறேன்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 'மனிதர்கள் மாயமானால், விளம்பரம் கொடுத்து கண்டுபிடித்து தாருங்கள் எனக் கேட்பது வழக்கம். ஆனால் இவரோ, கிடாவை காணவில்லை, கண்டுபிடித்து தந்தால் 25 ஆயிரம் ரூபாய் சன்மானத்துடன் உடல் உறுப்பையும் தானமாக தருகிறேன் என்கிறாரே... அப்படியானால், அந்த கிடாவை எவ்வளவு பாசத்துடன் வளர்த்திருப்பார்’ என ஒருவருக்கொருவர் பேசியபடி சென்றனர். http://www.virakesari.lk/article/55470

ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு!

3 months 1 week ago
எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா? படத்தின் காப்புரிமை Getty Images Image caption விபத்துக்குள்ளாகி எரிந்த விமானம். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தாங்கள் தப்பியது எப்படி என்பதைப் பற்றி கூறும்போது மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள் இன்னமும் மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு மலரஞ்சலி. நவீன விமானங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. மாஸ்கோவின் ஷெரமெட்யேவோ விமான நிலையத்தில் இருந்து வடக்கு ரஷ்ய நகரமான முர்மான்ஸ்க் நோக்கிப் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் காரணங்களால் உடனடியாக விமான நிலையத்துக்குத் திரும்பி தரையிறங்கியதாக அந்த விமானத்தை இயக்கிய அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏரோஃபிளாட் அறிவித்தது. விபத்துக்குள்ளான விமானம் சுகோய் சூப்பர்ஜெட்-100 வகையை சேர்ந்தது. விமானத் தரவுகளையும், விமானி அறையான காக்பிட்டில் நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி மீட்டெடுக்கப்பட்டு விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமானம் பறக்கத் தொடங்கிய உடனே மின்னல் தாக்கியதாக உயிர் தப்பிய பயணியான பையோடர் யெகோரோவ் என்பவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மின்னல் தாக்குவதால் விமானம் வீழுமா? பல லட்சக்கணக்கான வணிக விமானங்கள் ஒவ்வோர் ஆண்டும் வானத்தில் பறக்கின்றன. இப்படி நடக்கும் விமானப் பயணங்களின்போது மின்னல் வருவது சகஜமானதாகும். பாரம்பரியமான விமானங்கள் அலுமினியம் கொண்டு கட்டப்படுகின்றன. இவை வழக்கமாக மின்னல் தாக்குதல்களை தாங்கி நிற்பவை. விமானத்தின் வெளிக்கூடு மின்னல் தாக்கும்போது பாயும் மின்சாரத்தை எல்லா இடத்துக்கும் பரப்பி, அதன் மூலம் விமானத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கக்கூடியவை. இதனால், பயணத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், சில புதிய விமானங்கள் கார்பன் இழை போன்ற லேசான பொருள்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அவ்வளவாக மின்சாரத்தை கடத்தாதவை. ஒயர் வலை அல்லது இழை கொண்டு இத்தகைய விமானங்களின் மேற்கூட்டைப் பாதுகாக்கவேண்டும். படத்தின் காப்புரிமை Getty Images Image caption விமானம் பறக்கும்போது மின்னல். இது தவிர, விமானத்தின் எரிபொருள் டேங்க்கின் மின்னணு அமைப்புகள் மற்றும், இணைப்புகள் வெளியில் இருந்து மின் தாக்குதலுக்கு உள்ளாகாத வகையில் உறுதியான முறையில் வலுவாக பாதுகாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் மின்னல் தாக்குவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை திசை திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால், இதனால், விமானம் கீழே மோதி விபத்துக்குள்ளாவது மிக அரிது. எப்படியானாலும், விமானத்தை மின்னல் தாக்கும்போது விமானத்துக்குள் இருப்பவர்களால் இதைப் பார்க்க முடியும். பெருத்த இடியோசையை அவர்கள் கேட்கமுடியும். அல்லது விமானத்தின் உட்புறம் திடீரென கண்ணைக் கூசவைக்கும் ஒளியால் நிரம்பும். இதற்கு முன்பு சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் விபத்தில் சிக்கியது 2012ல் இந்தோனீசியாவில்தான். அப்போது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. https://www.bbc.com/tamil/global-48182806

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

3 months 1 week ago
சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தின் ஒளிப்படத்தில் காணப்பட்டவர் விடுவிப்பு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் வாய் முறைப்பாடு பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து விசாரித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ஒளிப்படம் முகநூலில் இருந்து தரவிறக்கப்பட்டு போலிக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இளைஞரிடம் வாய்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இளைஞரது ஒளிப்படத்தை அவரது முகநூலில் இருந்து தரவிறக்கம் செய்து அந்தக் கடிதத்தில் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்த சிலர் ஒருவருடத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது கொள்கைப் பரப்பில் ஈடுபட்டனர் என்ற தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இந்தப் போலிக் கடிதம் தொடர்பிலும் காவல்துறையினர் அதிக அக்கறை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #ChundikuliGirlsCollege #release #police http://globaltamilnews.net/2019/120977/

பல்கலைகழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடல்

3 months 1 week ago
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவரின் விடுதலை தொடா்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும் பல்கலைகழக பேரவை உறுப்பினர்களுக்குமிடையில் உயா்மட்ட கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக இன்று பலாலியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/120967/

தேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்

3 months 1 week ago
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் கடந்த 02ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலப்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். . குறித்த நபர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த நபரிடமிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றில் தெரிவித்துள்ளதனையடுத்து இவ்வாறு அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/120963/

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் - ரவூப் ஹக்கீம்

3 months 1 week ago
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ––––––––––––––––––––––––––––– அலரி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு – – பிறவ்ஸ் ––––––––––––––––––––––––––––– உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலினால் நாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும் காயமடைந்தோரும் பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுமாத்திரமின்றி, முஸ்லிம் சமூகமும் இதனால் பெரும் அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் முப்படையினரும் சிறப்பான முறையில் தேடுதல் நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சிவில் சமூகம் அரசியல் சமூகமும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றன. இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளின்போது ஊடகங்களை அழைத்துச் செல்லும்போது, சாதாரண விடயங்கள்கூட பெரிதுபடுத்தப்பட்டு சித்தரித்துக் காட்டப்படுவதால் அவை மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்க வழிவகுக்கும். சிறிய விடயங்களை ஊடங்களில் மிகைப்படுத்தி காண்பித்து, அதன்மூலம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்கள் மீண்டும் மனம் நோகாதபடி நடந்துகொள்ள வேண்டும். இதற்காக தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாங்கள் கோரவில்லை. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதனையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். முஸ்லிம் மக்கள் மீதான சந்தேகத்தில், அப்பாவிகள் பலர் குற்றமிழைத்தவர்களாக சித்தரிக்கப்படும் சூழல் இதன்மூலம் உருவாக்கப்படலாம் என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். இந்த சிறிய பயங்கரவாதக் குழுவின் வெளிநாட்டு சக்திகளை கண்டறிய வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வழங்கும். முஸ்லிம் சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் துளியளவும் ஆதரவும் அனுதாபமும் இல்லாத சிறிய பயங்கரவாத கும்பலை முழுமையாக அழித்தொழிப்பதற்கு முஸ்லிம்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இப்படியான சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகளையும் சந்தேகத்தை உருவாக்கி பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் தேடுகின்ற சூழலுக்கு ஒருபோதும் இட்டுச்செல்லக் கூடாது. இதுவரையும் அனுதாபமில்லாக ஒரு சிறிய குழுவினருக்கு அனுதாபம் தேடிக்கொடுக்கின்ற ஒரு நடவடிக்கை இந்த தேடுதல்கள் மாறிவிடக் கூடாது. அப்பாவிகள் மீது குற்றம்சுமத்தி அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்காமல் சரியான முறையில் குற்றவாளிகளை அடையாளம்காண வேண்டும். இதனை கவனத்திற்கொண்டு பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சமூக மட்டத்திலும் சமய மட்டத்திலும் தேவையில்லாத பழிச்சொல்லுக்கு ஆளாக்குகின்ற அடிப்படையில் முஸ்லிம்கள் செயற்படுன்றனர் என்ற கருத்தாடல் எழும்பிவிடாமல், மக்களின் உணர்வுகளை மதித்து பாதுகாப்பாகவும் கவனமாகவும் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு முஸ்லிம்கள் பல வழிகளும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்காமைதான் இதற்கு காரணமாகும். இந்நிலையில் மக்கள் மத்தியில் தேவையில்லாத பயம், பீதியை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களும் பாதுகாப்புத் தரப்பும் காரணமாக இருந்துவிடக் கூடாது. இப்படியான தேடுதல் நடவடிக்கைகள் ஏனைய பிரதேசங்களில் நடைபெற்றால், இதைவிட அதிகமான பொருட்கள் கைப்பற்றப்படலாம். இதனால்தான் ஆயுதங்களை கையளிப்பதற்கு அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது. இதனால் சகல தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படலாம். மூதாதையர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புராதன பொங்கிஷங்கள் கூட, இன்று ஆயுதங்களாக கணிக்கப்பட்டு அவை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள். ஆனால், பயங்கரவாதத்தை எந்த சமூகமும் ஆதரிப்பதில்லை. எனவே, பயங்கரவாதத்தையும் ஏனைய குற்றங்களையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் எனக் கருதிவிட முடியாது. அவர்களில் ஒருசிலர் மாத்திரமே பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவர்களில் சாதாரண குற்றம்புரிந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் உரிய முறையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை 90 நாட்கள் வரை தடுத்துவைத்து விசாரிக்க முடியும். அதற்கான முழுப்பொறுப்பும் பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் நாங்கள் எவ்வித தலையீடுகளையும் செய்யப்போவதில்லை. வீடுகளில் முஸ்லிம்கள் வாசிக்கும் சஞ்சிகைகள் கூட இன்று பாதுகாப்புத் தரப்பினால் கைப்பற்றப்படுகின்றன. உதாரணமாக பின்லேடனின் புகைப்படத்துடன் ஒரு ஆக்கம் தமிழிலோ அல்லது அரபியிலோ இருந்தால், அதன் அர்த்தம் தெரியாமல் அதை பயங்கரவாத புத்தகமாக கருதமுடியாது. அது பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட புத்தகமாகவும் இருக்கலாம். இப்படியான புத்தகம், சஞ்சிகைகளை விசாரிக்கும் அதுதொடர்பில் தெளிவுபடுத்தக்கூடிய துறைசார்ந்த நிறுவனங்களின் உதவியை பாதுகாப்புத் தரப்பினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அதனை அடையாளம் காணக்கூடியவர்கள் தேடுதல் நடவடிக்கைகளின்போது உடனிருக்க வேண்டும். இந்த தீவிரவாதக் குழுவினர் 150–200 பேர் வரை இருக்கலாமென உளவுத்துறை நம்புகிறது. முஸ்லிம்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். தேவையில்லாத செயற்பாடுகள் மூலம் சிறிய குழுவுக்கு ஆதரவாக, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற ஒரு சூழ்நிலையை யாரும் உருவாக்கிவிடக்கூடாது. பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை என்ன நோக்கத்துக்காக அங்கு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். பள்ளிவாசலுக்கு ஆயுதங்கள் எப்படி வந்தன, ஏன் வந்தன, அவற்றை யார் கொண்டுவந்தார்கள் என தீவிரமாக ஆராயப்பட வேண்டும். நாட்டில் 9 ஆயிரம் பள்ளிவாசல்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், 2500 பள்ளிவாசல்கள் மாத்திரமே இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்னும் பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்கள் 300 அளவில் இருக்கின்றன. பதிவுசெய்யாத பள்ளிவாசல்கள் விடயத்தில் தீர்மானமெடுக்கும் அதிகாரம் முஸ்லிம் சமய அமைச்சுக்கு உள்ளது. இந்த விடயத்தில் யாரும் குழப்பமடைய வேண்டாம். இவற்றை அரசாங்கம் சரியான முறையில் ஒழுங்கமைக்கும். முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுகையில் ஈடுபடவேண்டும். பள்ளிவாசல்கள் தூரத்தில் இருந்தால் ஐந்து நேரம் அங்கு சென்று வருவது மிகவும் சிரமமாக இருக்கும். இதனால்தான் அருகருகில் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இலங்கையிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு நிதி எவ்வாறு கிடைக்கிறது, அது எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து பள்ளிவாசல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஏதும் குளறுபடிகள் இந்தால் அதன் நம்பிக்கையாளர் சபையை விசாரிக்கும் உரிமை திணைக்களத்துக்கு உள்ளது. இதன்பின் சகல பள்ளிவாசல்களும் நெறிப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்ட நிபந்தனைக்கு முரண்பட்டால் அவற்றை தடைசெய்யும் அதிகாரம் திணைக்களத்துக்கு இருக்கின்றது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட பள்ளிவாசல்களின் விபரங்களை வக்பு சபையிடம் பெற்றுக்கொள்ள முடியும். இஸ்லாமிய மார்க்க கல்வி புகட்டப்படும் மத்ரசாக்களின் பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிரும் நிலையில்தான் இந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது மத்ரசாக்களின் பாடத்திட்டம் முஸ்லிம் சமய அமைச்சினால் ஒருங்கமைப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏதாவது பள்ளிவாசல்களில் தீவிரவாத கருத்துகள் பேசப்பட்டால் முஸ்லிம்கள் அவற்றை அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு கூறியுள்ளனர். இப்படியான தகவல்கள் முஸ்லிம்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கப்பெற்றதை உளவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. மார்க்கத்தின் பெயரால் மாற்று சமூகத்துக்கு எதிராக தீவிரவாதக் கருத்துகளை பரப்புவோரை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தீவிரவாதக் கருத்துக்களை பரப்புவோரை முஸ்லிம்கள் காட்டிக்கொடுக்கின்றனர். சமய வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழையும்போது அதற்குரிய கெளரவத்தை கொடுக்கவேண்டும். சப்பாத்துகளை அணிந்துகொண்டும், நாய்களுடனும் பள்ளிவாசல்களுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருக்கிறோம். புனித ரமழான் காலம் நெருங்கியுள்ள சூழலில் நள்ளிரவு தாண்டியும் ஆண்களும் பெண்களும் பள்ளிவாசலில் மார்க்க கடமைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலைய கருத்திற்கொண்டு பெண்களை பள்ளிவாசலுக்கு வரவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களை சோதனையின் பின்னரே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கிறோம். எங்களது சமூகத்தையும் நாங்களே பாதுகாக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேவாலயங்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் என்ற தரம்பிரித்து தாக்குதல் நடாத்துவதில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூலம் ஈராக்கில் பள்ளிவாசல்களே அதிகளவில் அழிக்கப்பட்டன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களின் பள்ளிவாசல்கள் தடைசெய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மாற்று மதங்களை நோக்கி விசமப் பிரசாரங்களை மேற்கொள்ளும்போதே அவர்களிடமிருந்து பெரும்பாலானோர் ஒதுங்கியுள்ளனர். இந்த பள்ளிவாசல்கள் நீண்டகாலம் கண்காணிப்பில் இருந்துவந்தது. இதனை பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அறிவித்தும் அவர்கள் அசமந்தப் போக்குடன் நடந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து நாங்கள் தவிர்ந்துகொள்ள விரும்பவில்லை. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அசமந்தப்போக்குடன் செயற்பட்டுள்ளனர். ஆனால், யாரும் இவர்களுக்கு அனுசரணை வழங்கவில்லை. அதேசமயம் யாரிடமிருந்தும் இவர்களுக்கு அனுதாபம் இல்லை என்பதையும் உறுதியுடன் கூறுகின்றேன். விடுதலைப் புலிகளுக்கு தனியான பாரிய பிரதேசம் இருந்தது. அவர்களிடம் தனிப் படைகள் இருந்தன. அவர்கள் கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அத்துடன் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் இருந்தது. ஆனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நின்றுநிலைக்கும் சூழல் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு சமூக ஆதரவோ, அரசியல் ஆதரவோ இல்லை. இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒரு அடிப்படைவாதக் குழுவாகும். அவர்களை அடியோடு பிடுங்கியெறிவது நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்யும் பேருதவியாகும். #SLMC #RauffHakeem #isis eastersundayattacklk ஊடகப்பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் http://globaltamilnews.net/2019/120945/

பாடசாலையின் பின்னரான விளையாட்டு பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

3 months 1 week ago
May 7, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் 6ஆம் தரத்திற்கு மேலுள்ள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வருகை நூற்றுக்கு 5 வீதமாகவே காணப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/120952/
Checked
Wed, 08/21/2019 - 01:02
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed