புதிய பதிவுகள்

பொன்னியின் செல்வனும் மணிரத்தினமும்,மற்றும் ஐஸ்வர்யாவும்

3 months 2 weeks ago
அந்த நாளில் ஆனந்த விகடன் என்ற அந்த இரவல் புத்தகம் எங்கள் வீட்டுக்கு வந்ததும் அடுத்தநாள் அடுத்தவீட்டுக் குடும்பத்துக்குப் போய்விடவேண்டும் என்பது விதி. அதில் வந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிவந்த தில்லானா மோகனாம்பாள் என்ற தொடரை யார் முதலில் வாசிப்பது என்ற போட்டி. அக்காமார், அண்ணா என்று எங்கள் குடும்பத்தையே புரட்டிப்போடும். கடைக்குட்டி நான், பள்ளிக்கூடம், விளையாட்டு முடிந்து வீட்டுக்கணக்கும் செய்து முடித்தபின், இரவுச்சாப்பாடும் முடியத்தான் கையில் கிடைக்கும். நித்திரைத் தூக்கம், மண்ணெண்ணை விளக்கு என்றாலும், கண் எரிய எரியத் தில்லானா மோகனாம்பாள் தொடரை வாசிப்பதில் அப்படி ஒரு வெறி. வாசித்து முடித்தபின் என் கனவில்வரும் அந்தக் கதாபாத்திரங்களை எல்லாம் அப்படியே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பார்த்து மகிழ்ந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் தொடரும் அப்படி ஒரு அனுபவத்தை எனக்குத் தந்தது. ஆனால் இதில் சிறு மாற்றம். தில்லானா மோகனாம்பாள் தொடரில் வந்த பாத்திரங்களை கனவில் கண்டேன். பொன்னியின் செல்வன் தொடரில் வந்த சில வந்தியத்தேவன், ஆழ்வார்கடியான், அருள்மொழிவர்மன் என்ற பாத்திரங்களாக நானே மாறிப்போவேன். என்னிடம் 5 பாகங்களும் உள்ளன. எத்தனைமுறை வாசித்தேன் என்ற கணக்கு எனக்கே தெரியாது. இப்போதும் கையில்கிடைக்கும் பாகத்தை எடுத்து வாசிப்பதில் அப்படி ஒரு இன்பம். இந்த இன்பம் மாறாது பாத்திரங்களை அப்படியே வடிவம் தரக்கூடிய நடிகர்கள் இன்று உள்ளனரா? திரைப்படம் அதனைத் தருமா? என்பதில் எனக்கும் சந்தேகமே.!!

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சி : மங்கள

3 months 2 weeks ago
ஆம், " 48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இதற்குக் காரணம்," இன்று ஒரு பின்தங்கிய நாடாக மாறிவருகின்றது. காரணம் என்ன என்பது மங்களவுக்கும் தெரியும், தெரிந்தவர்கள், பதவியில் இருக்க, பதவியை தக்கவைக்க சிறுபான்மை இனத்தை பந்தாடுவதும், அரசியலுக்காக நாட்டை ஒரு 'அரச' பயங்கரவாதத்தை வளர்ப்பதும் இந்த 70 ஆண்டு கால சாதனை. இந்த விடயத்தில் இரண்டு சிங்கள பெரும்பான்மை கட்சிகளும் ஒற்றுமையாக தொடர்ந்து இருக்கும் வரை விடிவு இல்லை.

இலங்கையிலுள்ள சீனத் தொழிலாளர்களுக்கு சீனாவிலிருந்து விசேட சிக்கரட்

3 months 2 weeks ago
இலங்கையில் தொழில்செய்யும் சீனர்களுக்கு, சீனாவில் இருந்து விசேடமாக சிகரட் கொண்டுவர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். https://newsline.lk/news/6690-2019-05-30-12-24-39?fbclid=IwAR1599cl5xSFvK8vlMfoxDDJraf-IhAFoADkRFcD-QnSwe_YHz23OuXu9_Y

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சி : மங்கள

3 months 2 weeks ago
சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி பயங்கரவாத நிலையை தோற்றுவிக்க, சில மோசடி அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர ''உலக நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையும் அண்மையில் எதிர்கொண்டது. ஆனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளத. எனினும், இலங்கையில் இன்னுமொரு பயங்கரவாதத்திற்கு குரூர அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இனவாத பிரச்சினையை ஏற்படுத்தி, இரு தரப்பினருக்கிடையே மோதலை உண்டு பண்ணில் அதில் பயனடைய முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக இலங்கையர்கள் அணி திரள வேண்டும். 83ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பக்கம் தள்ளப்பட்டனர். முஸ்லிம் மக்களையும் இ ந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறான நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இடையூறுகள் அவர்களை அடிப்படை வாதத்திற்குள் தள்ளிவிடக் கூடும். அதில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள 99.9 வீதமான முஸ்லிம்களுக்கும் இதற்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், இன்றைய நிலையில், முஸ்லிம் மக்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அறியக்கிடைக்கிறது. அவ்வாறு செய்ய வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். நான் ஒரு மதத்தையோ, இனத்தையோ நேசிப்பதற்கு மேலாக இலங்கையை நேசிக்கிறேன். அதனால் இதனைக் கூறுகிறேன். நாமே தீவிரவாதிகளை உருவாக்குகிறோம். அதனால் அனைத்துத் தரப்பினரம் ஆபத்தில் இருக்கிறோம். 48ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை இருந்தது. ஆனால் 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தெற்காசியாவில் பின்தள்ளப்பட்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இதற்குக் காரணம், இன, மத, குல ரீதியாக வேறுபட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். எனவே, இன, மத, குல ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை நாசப்படுத்தி, தமது குறுகிய இலக்கை அடைவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.'' என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://newsline.lk/news/6689-2019-05-30-12-13-02

உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கப்பட்டது

3 months 2 weeks ago
ஓம்... கண்ணகி, மனிதப்பிறவி எண்டதை மறக்கப்படாது கண்டியளே. தமிழ்நாட்டில, கிராமம் ஒன்றில் எம்ஜியாருக்கு கோவில் கட்டின ஒருத்தர் மூன்று வேளை பூசை செய்வதாகவும், சனமும் வந்து, துனணூறு, பிரசாதம் வாங்கி போகுதாம் எண்டும் செய்தி வந்ததே. இது தொடர்ந்தால், நூறுவருசத்துக்கு பொறகு, எம்ஜியார் சாமி கண் திறந்து பார்க்கேல்லையே எண்டு கஸ்டம் வந்தாக்கள் சொல்லிவினம், இல்லையா?

சாதனை படைத்த தமிழர்கள்

3 months 2 weeks ago
தெரு முணையில், பார்க்கில் தோசை வித்தவர், பார்க்கில் கடை வைக்க தந்த, லைசென்ஸ் விரைவில் முடியப் போகுது என்று சொல்கிறார். அவர் வேறு யாவாரம் செய்ந்தால், ஏன் லைசன்ஸ் குறித்து கவலைபடவேணும்?

உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கப்பட்டது

3 months 2 weeks ago
உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும் மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months 2 weeks ago
இங்கிலாந்து 125-3 23 overs http://live.cric7.net/?m=1 மேலுள்ள சுட்டியை திறக்கும் போது வேறு வேறு தளங்களுக்கு கூட்டிச் செல்லும்.3-4 தடவை அவையை வெளியேற்றிவிட்டால் பின்பு நிம்மதியாக பார்க்கலாம்.

Nesamani: Who is he and why is the world praying for him?

3 months 2 weeks ago
Nesamani: Who is he and why is the world praying for him? பிபிசி யில் வந்துள்ள செய்தி இது.. (இதில் முக்கியமான ட்விட்டை சிவப்பு எழுத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளேன்..! "...இந்தியாவே மோடி அரசை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், தமிழர்களாகிய நாங்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, எங்கள் வழி தனி வழி, நேசமணி பற்றி பெருமை கொள்வோம், வாழ்க நேசமணி ..." என பொருள்பட எழுதியிருப்பது மிக அருமை..! தமிழனுக்கென்று ஒரு குணமுண்டு, அவன் தனித்துவமானவன் என்பதை பிற மக்கள் புரிந்திருப்பர்கள்..! ) Who is Nesamani and why is seemingly everyone in the world praying for him on Twitter? Many Indians were left wondering what was going on as #Pray_for_Neasamani and #Nesamani began trending first in India and then across the world. And no-one seemed to know him - apart from those from the southern state of Tamil Nadu who began the trend. Contractor Nesamani is actually a fictional character from a 2001 Tamil film played by an iconic comedian. The "plea" to pray for him is based on a scene from the popular film Friends. In the scene, Nesamani is a building contractor played by actor Vadivelu. He is trying to restore a historic building, but is struggling with his bumbling assistants who insist on taking everything he says literally. Disaster soon strikes. One of them, who is trying to fix a doorway at the top of a staircase, drops his hammer. It lands right on top of Nesamani's head, causing him to (very theatrically) fall down. #Nesamani is still the number one trend in India on Twitter, and also the second trend worldwide. But why is this trending now? According to Sowmya Rajendran, the film and features editor for the south Indian website The News Minute, it all began with a memes page in Pakistan on Wednesday. Someone on the page, called Civil Engineering Learners, posted a picture of a hammer with the question "what is the name of this tool in your country?". This prompted an alert Tamil Facebook user to comment that it was called Suthiyal in his language and then added, without any context whatsoever, that "contractor Nesamani's head was broken... with it". PM Narendra Modi's Tamil Nadu problem Political satire pokes fun at India's 'bizarre democracy' "Another Tamil user who was clearly in on the joke answered 'is he ok now?' and that's where it all began," Ms Rajendran said. Other Tamil users began commenting as well, all making references to the scene from the film. And soon, it took on a life of its own. On Twitter, people began "praying for him" and the memes it seems, wouldn't stop coming. Skip Twitter post by @VijayIsMyLife End of Twitter post by @VijayIsMyLife Skip Twitter post by @arun1208kumar End of Twitter post by @arun1208kumar Nothing was spared. People referenced "hospital bulletins" similar to those issued when prominent state politicians are sick and there were even photoshopped 'tweets' from world leaders. Skip Twitter post by @fredy7321 End of Twitter post by @fredy7321 And everyone wanted in. Politicians piped up, as did senior journalists and stars from the film fraternity. The 'political tone' Many seemed to revel in the fact that no-one in the rest of the country seemed to know what was going on, with many making mocking references to politics. "As you know, Tamil Nadu completely bucked the national trend, voting overwhelmingly in favour of the party that did not ally with (Prime Minister) Narendra Modi's Bharatiya Janata Party (BJP). In Tamil Nadu, people take a lot of pride in their culture - in standing apart and being different. This is also an assertion of identity. The rest of India doesn't understand us - we walk our own path," said Ms Rajendran. Skip Twitter post by @Iamnot46770316 End of Twitter post by @Iamnot46770316 Skip Twitter post by @thulasideva06 End of Twitter post by @thulasideva06 She added that for the people of the state, the film was so familiar, they didn't even have to "think twice" when it became a meme. "Vadivelu is very popular here and Tamil Nadu has a very vibrant meme culture. So his films from the 90s and early 2000s are used a lot in memes - particularly in political commentary," she said. But what does the man himself think? "We asked him that ourselves and several Tamil television channels had reached out to him to ask precisely that. But he isn't on social media and he said he had no idea what was going on," she said. BBC News

உடற்கட்டில் கவனம் செலுத்தும் ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கும் அபாயம்

3 months 2 weeks ago
கட்டியவளைக் கர்ப்பமாக்க முடியவில்லை என்றால் பிறகென்ன கோதாரிக்கு உதெல்லாம்...... தட்டுத் தடுமாறி எட்டிக்கடந்தால் பத்தித் துளைக்குது என்று பாயைப் பிறாண்டிக்கொண்டு கிடக்க வேண்டிக் கிடக்கு....! 😗

பொன்னியின் செல்வனும் மணிரத்தினமும்,மற்றும் ஐஸ்வர்யாவும்

3 months 2 weeks ago
மணிரத்னம் அதுக்கு சரிவரமாட்டார் ஒரேயடியாய் சொதப்பி விடுவார்..... செல்வராகவன், ராஜமௌலி போன்றவர்களால் ஓரளவு செய்ய முடியும் என்று நினைக்கின்றேன்....! ஆனால் பொன்னியின் செல்வன், கடல்புறா, யவனராணி போன்றவை வாசகர்களின் மனசுக்குள் கட்டி வைத்திருக்கும் அளவு பிரமாண்டமாய் யாராலும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.....!

பாடசாலைகள் மீது தாக்குதல் நடக்கக் கூடும் என வதந்தி

3 months 2 weeks ago
நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று காலை முதல் வதந்திகள் பரவியதாகவும், இந்த வதந்திகளினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற வதந்தி பரவியதாகவும், இதனால் பொதுமக்களும், பெற்றோரும் பதற்றமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவ்வாறு பரவிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இவை வெறும் வதந்திகள் மட்டுமே எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன், பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். பாடசாலைகளுக்குள் வெளிநபர்களை அனுமதிக்கவோ, பாடசாலை நேரங்களில் மாணவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவோ வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://newsline.lk/news/6687-2019-05-30-08-01-28

உண்மையான நேசமணி யார் என தெரியுமா ?

3 months 2 weeks ago
உண்மையான நேசமணி யார் என தெரியுமா ? ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு நேசமணியை பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இன்று தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக திகழ்கிறது கன்னியாகுமரி. ஆனால் இந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்தது வெறும் சாதாரணமாக நடைபெறவில்லை. அதற்கு பின் பல போராட்ட சம்பவங்களுக்கு உண்டு. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் விளவங்கோடு வட்டத்தில் கடந்த 1895-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ஆம் தேதி பிறந்தவர் நேசமணி. வழக்கறிஞரான இவர் குமரி தந்தை எனவும் மக்களால் அறியப்படுகிறார். குமரி தந்தை என நேசமணி அறியப்படுவதற்கு காரணமும் உண்டு. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். அத்துடன் அங்கு தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான போராட்டங்கள் வெடித்த நிலையில் அதனை முன்நின்று நடத்தியவர்களின் பெரும் பங்கிற்குரியவர் நேசமணி. இதனால்தான் மார்ஷல் நேசமணி என்று அம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இதனையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த நேசமணி உள்ளிட்டோர் 1954-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டமும் வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் நேசமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் நடைபெற்ற பலகட்ட போராட்டங்களுக்கு பின் 1956-ஆம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 9 தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்ப்பட்டது. இதில் செங்கோட்டை பகுதி மட்டும் நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது. நேசமணி உள்ளிட்டோரின் போராட்டம் காரணமாகத் தான், தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது. அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ., எம்.பி உள்ளிட்ட பதவிகளையும் வகித்த நேசமணி, தனது 72-வது வயதில் 1968-ஆம் ஆண்டு மறைந்தார். புதிய தலைமுறை பலரும் மறந்துவிட்ட ஒரு தமிழக தலைவரை இந்நேரத்தில் நினைவூட்டியமைக்கு நன்றி..!
Checked
Tue, 09/17/2019 - 07:01
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed