புதிய பதிவுகள்

வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி

2 months ago
(எம்.மனோசித்ரா) வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/78645

கொரோனாவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறாக விமர்சிக்க வேண்டாம் - பிரதமர் மஹிந்த

2 months ago
(இராஜதுரை ஹஷான்) கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு நாட்டு மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அரசியல் தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை பல்வேறு வழிமுறைகள் ஊடாக முன்னெடுத்து வருகின்றது. முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் ஒரு தரப்பினர் அரசியல் நோக்கங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வாறான செயல்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கன. உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தாமல் , சவால்களை எதிர்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். https://www.virakesari.lk/article/78644

சுவிற்சர்லாந்தில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழர் நிறுவனம் தொடர்பில் சுவிஸ் தொலைக்காட்சி விபரணம்

2 months ago
கவனிக்கவும், சட்டமே, மோசடியா இல்லை சட்ட வரம்பிற்குள் நடைபெற்ற வியாபாரமா என்பதை தீர்மானிக்கும். எல்லா நிறுவனங்களும் செய்யும் முறை தானே. ஊருடன் ஒத்து வாழ வேண்டும் என்பது... ஆஆ மறந்து விட்டேன் தமிழன் மூதாதையர்கள் உங்கள் நோக்கில் பொதுவாக முட்டாள்கள்.

கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன்

2 months ago
2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி. 2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே.

டென்னிஸ் உலகின் மன்னன் பொறிஸ் பெக்கர் ஆண்டியான கண்ணீர் கதை..!

2 months ago
இவ்வாறான சோகக்கதை பல உலக விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் உள்ளது. 'எல்லாம் கொஞ்சக்காலம்தான்' என்பது மறக்கப்பட்டு, பொருளாதார / முதலீடு பற்றிய அறிவுரைகளுக்கும் மரியாதை கொடுக்காததால் இந்த நிலை ஏற்படுகின்றது. ஓம், மது மற்றும் மாதுக்கள் என்பனவும் ஆண்டாடு காலமான காரணிகள்.

நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் பண ஒறுப்புத் தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது.

2 months ago
இலங்கைக்கும் கொண்டுவரவேண்டும். அப்போதாவது நமது சனம் கட்டுக்குள் வருகிறதா என்று பார்க்கலாம். 😡

ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி?

2 months ago
தகவல் மட்டுமல்ல கொறோனா வைரஸ் பரவுவதைத் தடுத்தாலும் கொறோனா கட்டுப்பாட்டில் இருக்கும். 😂 BBC ஊதுகுழலாகி கனகாலமாச்சு. ☹️

மருத்துவ போரில் தமிழகம்.. கொரோனாவை துடைத்தெறிய மாவட்ட எல்லைகள் சீல்வைப்பு

2 months ago
அறிவிப்பு விடுக்கப்பட்டுச் சில மணிநேரத்துக்குள் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மணித்தியாலத்துக்கு 10 ஈரோப்படி சம்பளமும் வழங்கப்படும். எதிர்வரும் 3 மாதத்துக்கு இரண்டு இலட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இவர்களை விவசாய இராணுவம் என்று அழைக்கப்படுகின்றனர். பாதுகாப்புக் கருதி ஒவ்வொருவரும் குறைந்தது 10 மீற்றர் இடைவெளியில் வேலை செய்வ்வவார்கள்.

ஊரடங்கு தளர்த்தப்படும் காலப் பகுதி அரத்தமற்றதாகிவிடுகிறது - ஆர்னோல்ட் ஆதங்கம்

2 months ago
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகி விடுகின்றது என இம்மானுவல் ஆர்னோல்ட் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஊரடங்கு சட்டம் நேற்று குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் யாழ். மத்தியில் ஒன்று கூடியிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. இவ் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் முக்கிய நோக்கமான மக்கள் கூட்டாக ஒன்று கூடுவதை தடுக்கும் செயன்முறை ஊரடங்கு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில் வலுவற்றதாகி விடுவதனை அவதானிக்க முடிந்தது. அதாவது வைத்தியர்களால் இத்தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக முன்வைக்கப்படும் ஆலோசனைகளான தனிமைப்படுத்தல், கைகளை கழுவுதல், சுத்தமாகஇருத்தல், இரு நபர்களுக்கிடையில் குறிப்பிட்ட இடைவெளியை பேணுதல் என்பன ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மீறப்படுகின்றன. ஒன்று கூடும் மக்கள் வைத்திய ஆலோசனைகளைப் பொருட்படுத்தாது பொருட்களை கொள்வனவு செய்வதில் மாத்திரமே அவதானம் செலுத்துகின்றனர். இது ஊரடங்கின் நோக்கத்தை சீர்குழைத்து விடுகின்றது. எனவே ஊரடங்கு தளர்த்தல் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளதுடன், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் புதிய முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் எல்லைப் பரப்பினுள் இலகுவாக மக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான முறைமைகளை ஏற்படுத்தி, நகர் பகுதியில் பலர் ஒன்று கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதை கணக்கிலெடுக்காது விடுவோமாக இருந்தால் மக்கள் ஒன்று கூடுவதன் மூலம் ஏற்படும் பாரிய சிக்கல் நிலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய் விடும். எனவே இது தொடர்பில் மக்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு துறையிலும் உள்ள வைத்தியர்களுடனும் கலந்துரையாடியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/78640

ஊரடங்கு வேளையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

2 months ago
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார். இம்முறைப்பாடுகளில் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும்இ பாதிக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டிற்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன்இ அவற்றில் 10 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டவை ஆகும். ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் ஆகும். எனவே ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களைஃபிள்ளைகளை பொறுப்புடன்இ பாதுகாப்பாகவும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. தற்போது சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில்இ அவர்களது மனநிலை குறித்த புரிதலை பெரியோர் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நாம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/78637

பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா

2 months ago
பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா : வைரசினை எதிர்கொள்வது குறித்து சமூக ஊடங்களில் தொடர்ந்து அறிவுரைகள் - ஆலோசனைகள் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனக்குள்ள பாரிய சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து மௌனமாகயிருந்த ஒபாமா தற்போது டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் அவற்றினை முகநூலில் மீள்பதிவு செய்துவருகின்றார். பராக் ஒபாமா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான புதிய நடவடிக்கைகளி;ற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தி வருகின்றார் வைரஸ் நெருக்கடியின் போது அமைப்புகளும் தனிநபர்களும் முன்னெடுத்துள்ள மனதிற்கு வலிமையையும் நம்பிக்கையையும் நடவடிக்கைகள் குறித்த பதிவுகளை அவர் வெளியிட்டு வருகின்றார். ஒபாமாவின் பதிவுகளிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் பலர் அதற்கு பதில்களையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என வோசிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலிற்கான ஒபமாவின் டுவிட்டர் கருத்தினை கடந்த வாரம் 120,000 பேர் மீள்பதிவிட்டிருந்தனர். வோசிங்டன் போஸ்டின் மிகவும் வாசிக்கப்பட்ட தகவலாக அது மாறியுள்ளது என போஸ்டின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் சரியான விடயங்களை செய்து ஏன் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என்பதை இந்த கட்டுரை தெரிவிக்கின்றது, எங்கள் அனைவராலும் வைரஸ் பரவுவதை தடுக்க உதவ முடியும்,முதியவர்களை பலவீனமானவர்களை பாதுகாக்க முடியும்,என ஒபாமா தெரிவித்திருந்தார். கடந்த வாரங்களில் ஒபாமா டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்கள் பார்க்ககூடிய பரிமாறிக்கொள்ளக்கூடிய பொது சுகாதாரம் தொடர்பான கருத்துக்களை வெளியிடவிரும்புகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குழப்பமான விடயம் என்பதால் விஞ்ஞான அடிப்படையில் விடயங்களை முன்வைப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விளங்கிக்கொள்ளக்கூடிய பொதுசுகாதார கருத்துக்களை வெளியிடவேண்டும் என ஒபாமா கருதுகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மக்கள் பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என அவர் விரும்புகின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. >நெருக்கடியான தருணத்தில் மிக முக்கியமான பணியை மேற்கொண்டுள்ளவர்களை தூக்கிவிடுவதற்கு ஒபாமா விரும்புகின்றார்,உந்துசக்தியை ஏற்படுத்தக்கூடிய அந்த பதிவுகள் அதனை வாசிப்பவர்களிற்கு மனோதைரியத்தை வழங்கும் என ஒபாமா கருகின்றார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரையில் டிரம்பினை விமர்சிக்காத ஒபாமா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கில் நிற்பவர்களிற்கு பெரும் நன்றிக்கடனை வெளியிட்டு வருகின்றார். உங்கள் அயலில் உள்ள முதியவர்கள் பலவீனமானவர்களை தொலைபேசி தொடர்புகொண்டு அவர்களது நிலையை அறிந்துகொள்ளுங்கள் என அவர் ஆலோசனை வழங்கி வருகின்றார். எதிர்வரும் காலங்களில் நாங்கள் எதனை எதிர்பார்க்கவேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தி வருகின்றார். https://www.virakesari.lk/article/78641

உலக நிதி நிறுவனங்களிடம் கால அவகாசம் கோருகிறார் ஜனாதிபதி கோத்தா

2 months ago
கொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பல்தரப்பு, இருதரப்பு உதவி முகவர் நிறுவனங்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி&nb; உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் -19 சமூக இடைவெளி, பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த நிவாரணம் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/78639
Checked
Fri, 05/29/2020 - 21:42
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed