புதிய பதிவுகள்

விக்னேஸ்வரன் மூடிமறைத்த உண்மைகள் நீதிமன்ற தீர்ப்பில் வெளிவந்ததுள்ளது- சி.தவராசா

3 months 1 week ago
ஐங்கரநேசனுடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் இதற்குள் சம்பந்தப்படாத முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இழுப்பதன் மூலம் ஈபிடிபி கும்பலின் உறுப்பினராக காலம் காலமாக தான் பின்பற்றிய தனது அடிவருடி புத்தியை வெளிப்படுத்தியுள்ளார் தவராசா! முன்னாள் முதலமைச்சரின் விரோதிகளிடம் பெற்ற அனுகூலங்களுக்காக தவராசா சில வருடங்களாகவே இவ்வாறு புலம்புவது வழமை!

கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி

3 months 1 week ago
அதாவது கருணா கும்பல் செய்த கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொலை போல பலநூறு கொலைகளின் வழியில் இன்னொரு கொலையும் அரங்கேறும் என்று நம்புகிறீர்களோ?

முகமூடி

3 months 1 week ago
நான் இறங்கிறதில பிரச்சனை இல்லை. ரதி பெருமாள் ந்ந்தன் எல்லாம் மணி கட்டின மாடுகள் சொன்னால்த்தான் வருவினை. 😛😂

“வீரத் தளபதி பால்ராஜ்”என்ற கட்டுரை குறித்த வழக்கு தள்ளுபடி…

3 months 1 week ago
இனப்படுகொலைகாரர்களுக்கும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் எதிராக போரிட்ட வீரத் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் காலஞ்சென்ற அன்னைக்கு அஞ்சலிகள்!!!

விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

3 months 1 week ago
லைக்கா நிறுவனம் ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தை பெற்றுக்க்கொள்வது எம்மை பொறுத்தவரை நன்மையான விடயமே. லைக்கா வடகிழக்கில் நிறையவே உதவிகளை செய்துள்ளது. மேலும் செய்யும் என எதிர்பார்க்கலாம். எம்மவரின் நிறுவனம் என்பதில் எமக்கு பெருமையும் சேரும்.

“வீரத் தளபதி பால்ராஜ்”என்ற கட்டுரை குறித்த வழக்கு தள்ளுபடி…

3 months 1 week ago
April 6, 2019 பிரபல பத்திரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் பற்றி வெளியாகிய கட்டுரை தொடர்பாக பயங்கரவதாத விசாரணைப் பிரிவினர் தாக்கல் செய்த வழக்கை யாழ். நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையால் பாதிக்கப்பட்டவர் யார்? அவரின் முறைப்பாடு தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தமது அறிக்கையில் வெளிப்படுத்தவில்லை. எனவே அதிகாரிகளின் உரிய அறிவுறுத்தல், ஆலோசனையைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். குறித்த பத்திரிகையில் “வீரத் தளபதி பால்ராஜ்” என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையின் ஊடாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அதனால் அந்த ஊடகத்தின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கக் கோரியும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (05.04.19) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி மன்றில் முன்னிலையானார். பத்திரிகையின் ஆசிரியரும் அவரின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மன்றில் முன்னிலையானார். ஊடகத் துறையின் பொறுப்பு மற்றும் அவற்றின் உரிமை பற்றி சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட விளக்கங்களை விபரித்த நீதிவான், இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆழமாக ஆராய்ந்து கட்டளையை வாசித்தார். “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை உள்ளது. ஆனால் தேசிய நலன், பொது மக்கள் பாதுகாப்பு, இனம் – மத நல்லிணக்கம் ஆகியவற்றில் ஊடகங்கள் பொறுப்பாகச் செயற்படுவது அவசியம். அந்த வகையில் இந்த வழக்கில் தேசிய நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக பத்திரிகை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பத்திரிகை கொழும்பிலிருந்துதான் வெளியிடப்படுவதாக எதிர் தரப்பால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதனால் இந்த நீதிமன்றுக்கு நியாயத்திக்கம் இல்லை என அந்த தரப்பால் கூறப்பட்டுள்ளது. மேலும் குறித்த கட்டுரையால் எந்தவொரு பாதிப்பும் இடம்பெறவில்லை எனவும் எதிர்த் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற நியாயத்திக்கத்தை வைத்து இந்த வழக்கை நிராகரித்துவிட முடியாது. யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பத்திரிகை 10 ரூபாயிக்கு விநியோகிக்கப்படுவதாக வழக்குத் தொடுனர் அறிக்கையிட்டுள்ளார். இந்த வழக்கில் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையின் மூலம் பாதிக்கப்பட்டவர் யார்? அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் மற்றும் அவரின் முறைப்பாடு தொடர்பில் வழக்குத் தொடுனர் வெளிப்படுத்தவில்லை. அதிகாரிகளின் உரிய ஆலோசனைகள் – அறிவுறுத்தல்கள் இன்றி இவ்வாறான வழக்கைத் தொடர்வதால் பயனில்லை. எனவே பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இந்த வழக்குத் தொடர்பில் உரிய ஆலோசனைகளைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் வழக்கை தொடர நீதிமன்று அறிவுறுத்துகின்றது. அதனால் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளையிட்டார். http://globaltamilnews.net/2019/117744/

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

3 months 1 week ago
April 6, 2019 சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் 26 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (05-04-2019) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை சுற்றி சோதனையிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படடவர்களில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றான். இவர்கள் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது. Apr 5, 2019 @ 14:20 சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேரை கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இது தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/117702/

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

3 months 1 week ago
எல்லாம் தெரிந்தவர் என்று எவரும் இல்லை! அப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைக்க எங்கள் மூளை கட்டமைக்கப் படவும் இல்லை! ஆனால், "இது தெரியாது, தேடித் தெரிந்து கொள்வோம்!" என்ற ஊக்கம் மட்டுமே தேவை! அந்த ஊக்கம் இருந்தால் நீங்கள் அறிவாளி!அது இல்லா விட்டால் தேடலற்ற சோம்பேறி! ஊக்கமும் இல்லாமல் ஊக்கம் உடையோரை எள்ளி நகையாடுபவராக இருந்தால் தன் அறிவின்மையையே பெருமை என நினைக்கும் முட்டாள்! இதில் எது நீங்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா?😉

Brexit

3 months 1 week ago
உதயகுமார், சுருக்கமான எளிமையான விளக்கத்திற்கு நன்றி. இவை இன்று அவசியமான விளக்கங்கள். எனக்கிருக்கும் சில கேள்விகளை இங்கு கேட்கலாமா? வெளியேறும் முடிவுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை வெற்றி கிடைத்தது (1% ?). இந்த ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் என்ன வகையினர்? வயது, தொழில், கல்வி நிலை என்ற ரீதியில்? பிறெக்சிற் வெற்றியும் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றியும் ஒரே மாதிரியான குடிவரவு எதிர்ப்பு மனநிலையின் விளைவுகள் என நான் நினைக்கிறேன். இது உண்மையா?

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

3 months 1 week ago
தலைவர்களின் தகுதி என்ற பெயரில்சீமான் மேல் ஒரு திட்டமிட்ட சேறடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நேற்று இரவு நியூஸ் 18 போட்டிருந்தது. இன்று அந்த வீடியோவை நீக்கி விட்டார்கள். காரணம் தெரியவில்லை. சட்ட நடவடிக்கைகள் எடுக்க பட்டதோ தெரியவில்லை.

Brexit

3 months 1 week ago
வணக்கம் தமிழ் சிறி நீங்கள் கூறுவது சரியானதே இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுவுக்கு வந்த பின் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எதிர்கால அமைதி பொருளாதாரம் பற்ரி சித்திக்க தொடக்கி சில ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளாதார சந்தையை உருவாக்கினர் .இதன் பின் படிப்படியாகா பல நாடுகள் சேர்ந்து 1957 இல் ஒரு ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை உருவாக்கினார் இதில் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்தனர் . பெரிய பிரித்தானிய இதில் இணைய இரு முறை விண்ணப்பித்தும் பிரான்ஸ் அதிபர் டீ கூலே இனால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் 1973 ம் ஆண்டு ஐரோப்பிய சந்தயில் இணைந்து கொண்டனர் . பின்பு முன்னாள் பிரதமர் மார்கிரட் தக்சர் புதிதாக பல ஒப்பந்தங்களை கொண்டு வந்தார் . நல்ல கருத்துக்கள் கூறிய உறவுகளுக்கு நன்றிகள்

இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு": மனித உரிமை ஆணைக் குழு

3 months 1 week ago
இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு": மனித உரிமை ஆணைக் குழு 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கை முஸ்லிம் பெண்கள் - சித்தரிப்புக்காக. முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகைத் தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திரிகோணமலை கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய பணிப்பாளர், கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 1923ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அன்று முதல் இன்று வரை இந்து கலாசாரத்தை பேணிய வகையிலேயே பாடசாலை நடத்தி செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகைத் தரும் சந்தர்ப்பத்தில் புடவை அணிந்து வருகைத் தர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக அதிபர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நான்கு முஸ்லிம் ஆசிரியைகளும் 2013, 2014, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அதிபர், அன்றே பாடசாலையின் விதிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமது பாடசாலை இந்து கலாசாரத்தை பின்பற்றுகின்ற பாடசாலை என்பதனால், ஹபாயா ஆடை, பாடசாலையின் கலாசாரத்திற்கு ஏற்புடையது அல்லவென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 10ஆவது சரத்திற்கு அமைய, சமய சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன், உரிமைகளை மீற முடியாது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) ஆகிய சரத்துக்களுக்கு அமைய, முறைப்பாட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒருவரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக மற்றுமொரு நபரின் சமய சுதந்திரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஹபாயா ஆடையை தடை செய்வது முறையற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான விடயங்கள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு தரப்பிடம் விடயங்களை ஆராயாமல், சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றமை, தமது பொறுப்புக்களை மீறும் செயற்பாடு என ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது. இந்த நடவடிக்கையானது, சமூகத்தில் இனங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையில் இன ரீதியிலான வைராக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, அத்துடன், இந்த செயற்பாட்டினால், முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் அச்சுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-47834763
Checked
Fri, 07/19/2019 - 14:35
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed