புதிய பதிவுகள்

பாலியல் பற்றிய அடிப்படை கல்வியைப் போதிக்க 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்'

3 months 2 weeks ago
வளரிளம் பருவ வயதை அடைந்துள்ள மாணவர்களில் ஏற்படும் எண்ணங்கள், நடத்தைகள், மனப்பாங்கு உள்ளிட்ட மாற்றங்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் ஆண், பெண் சமூகம் பற்றிய யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கும் ஏற்புடைய வகையில் அவர்களுக்கு பாலியல் நடத்தைகள் தொடர்பான அடிப்படைக் கல்வியைப் போதிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஏழாம் ஆண்டு எமது புத்தகம்' என்ற நூலை வெளியிடும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. ஆரோக்கியமான இளைய தலைமுறையினரே நாட்டின் பெறுமதி வாய்ந்த வளம் என்ற அடிப்படையில் அவர்கள் அறிவையும், திறமையையும் முழுமையாகப் பெறுவதற்கும், சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள குடிமகனாக வளர்வதற்கும் அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கிலேயே இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/61816

சுமத்ரா தீவில் பெரிய நிலநடுக்கம்: இலங்கையில் எச்சரிக்கை

3 months 2 weeks ago
இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை ! மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை ! இந்தோனேசியாவின் கடற்கரைப்பகுதியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியையடுத்து இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/61811 இதேவேளை, இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை எனவும் எனவே இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா கடற்கரை பகுதியில் 6.8 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்றபட்டுள்ளதோடு இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும்- எச்.எம்.எம்.ஹரீஸ்

3 months 2 weeks ago
முல்லாவாக... சம்பந்தனும், ஓட்டகமாக.... ஹரீஸ்"சும்" இருக்கிறார்கள். 😲 அடுத்த தேர்தலில்... இந்த இரண்டு பேருக்கும்... "கிறீஸ்" பூசி.... சொந்த வீட்டுக்கு, அனுப்ப வேண்டும். 💥 அதனைத்தான்... இந்தக் கதை சொல்கின்றது. செய்வீர்களா.....

இந்து சமய அமைப்புகளும் போராட்டமும்

3 months 2 weeks ago
எந்த ஆதாரங்களும் இல்லாமல் மடைத்தனமான பொய் புளுகுகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டவையே இந்து புராணங்கள். தமிழர்களின் தொன்மை வரலாற்று சிறப்பையும் அவர்களின் பரிணாம முன்னேற்றத்தையும் இந்த அறிவுக்கு சிறிதும் ஒவ்வாத இந்து புராண இதிகாசங்கள் சிதைத்து விட்டன என்பதே உண்மை. இந்த புராணங்களை நம்பி தனது அறிவியல் வளர்ச்சியை இழந்த தமிழர்கள் இன்றும் அதே மனப்பாங்குடன் இந்து புராண இதிகாசங்களை தமக்கு உரியவை என்று நம்பி ஏமாந்த சோணகிரிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். புராணங்களால் அள்ளி விதைக்கப்பட்ட மூடப்பழக்கங்களை தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் தம்மை விட அதை கடைப்பிடிக்காத இனங்கள் பல சமூக அரசியல் பொருளாதார பலத்துடன் வாழ்வதை நடைமுறையில் பார்ததும் இன்னமும் திருந்தாமல் இருப்பது அடுத்த பல தலைமுறைகளுக்கும் மூட பழங்கங்களை விதைப்பது போன்ற நடவடிக்கைகள் போது தமிழரது அடிமைத்தனம் தொடரும் என்பதையே உறுதி செய்கின்றன. பிரெஞ்சு புரட்சிபோல் பழமை வாதத்தை தூக்கி எறியும் பாரிய கலாச்சாரப் புரட்சி ஏற்பட்டாலே தமிழர்கள் தமது பெருமையுடன் அடுத்த இனங்களுக்கு நிகராக தோழமையுடன் தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்கும். அவ்வாறான தலை நிமிர்வு தமிழரிடையே ஏற்படாமல் தடுக்கவே மறவன் புலவு சச்சிதானந்தம் போன்றவர்கள் மூலம் மக்களிடையே நஞ்சு தெளிக்கப்படுகிறது.

யார் தடுத்தாலும் தலைமைத்துவத்தை ஏற்க தீர்மானித்துள்ளேன் - சஜித்

3 months 2 weeks ago
(ஆர்.யசி) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சரும்மான சஜித் பிரேமதாச, என்ன தடைகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு களமறிங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் பொறுப்பை கையிலெடுக்க தயார் என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் அதுவாகவே அமைந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படியாக நான் இதனைக் கூறினேன். இதில் பல தடைகள் வரும். அழுத்தங்கள் வரும் ஆனால் சவால்களை எதிர்கொள்ள இப்போது நான் தயார். யார் தடுத்தாலும் நான் தலைமைத்துவத்தை ஏற்றுகொள்ள தீர்மானித்துள்ளேன் என்றும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் அதிகமாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில் அதுகுறித்தும் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/61817

இந்து சமய அமைப்புகளும் போராட்டமும்

3 months 2 weeks ago
இதற்கு யாரேனும் பதில் வைத்துள்ளீர்களா? இல்லை என்பதே உண்மை 🙂 எங்கே ஒரு வெற்றிடம் இருக்கின்றதோ அங்கே ஒன்று தோன்றும். அது மாதமாக மனித வரலாற்றில் இருந்துள்ளது, இருக்கின்றது இருக்கும். அது இன விரிசலாக இருந்துள்ளது, இருக்கின்றது இருக்கும். அது பொருளாதார இருந்துள்ளது, இருக்கின்றது இருக்கும். இதில் தான் நாம் அனைவரும் சிக்கி சுற்றுகின்றோம்.

இந்து சமய அமைப்புகளும் போராட்டமும்

3 months 2 weeks ago
இந்த விடயத்தை மதங்களுக்கிடையேயான மோதலாக மாற்றாமல் பேச உங்களால் முடியுமா? குமரிக்கண்டம் சிந்து வெளி நாகரீகங்கள் 1.2 மில்லியன் ஆண்டுகள் முன்பு இருந்தனவா? தமிழ் புராதனம் மிக்கது என்பது நிரூபிக்கப் பட்ட ஒன்று! ஆதாரமுள்ள தமிழ் புராதனத்தை விட்டு விட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாற்பட்ட நம்பிக்கைகளோடு இணைத்து ஏன் புருடா விட வேண்டும்? அது தமிழுக்கோ ஈழத்திற்கோ என்ன நன்மையைக் கொண்டு வரும் என்று சொல்லுங்கள்?

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்கொள்வதில் இழுத்­த­டிப்பு வேண்டாம் - ஷர்­மிளா செய்யத்

3 months 2 weeks ago
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். கணவனுக்கு மனைவியைப் பிடிக்காதபோது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ, அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும். இதனால் கீழ்க்காணும் தீமைகள் நிலவுவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம். 1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன்புறுத்துவான்; அவளைப் பராமரிக்கவும் மாட்டான். 2. அல்லது எளிதில் விவாகரத்து பெறுவதற்காக நடத்தை கெட்டவள் என்று மனைவியின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான். 3. அல்லது மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தற்கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடித் தப்பித்துக் கொள்வான். இஸ்லாம் அல்லாத மதங்களில் விவாகரத்தை அனுமதிக்காததாலும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருப்பதாலும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை நாம் கண்டு வருகிறோம். எனவே பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் இஸ்லாம் எளிதாக்கியிருக்கிறது. விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. பின்வரும் வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது. முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும். அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும். அதுவும் பயன் தராதபோது அடித்துத் திருத்த வேண்டும் என்று திருக்குர்ஆன் 4:34 வசனம் கூறுகிறது. https://onlinetntj.com/66-விவாகரத்து-தலாக்-சட்டம்/777

அமர்நாத் யாத்ரிகர்கள் உடனே வெளியேற காஷ்மீர் அரசு உத்தரவு: "பயங்கரவாத அச்சுறுத்தல் காரணம்"

3 months 2 weeks ago
காஷ்மீரில்.... நடக்கும், வேடிக்கைகளை பார்க்க, பொய்யிலே பிறந்து... பொய்யிலே... வளர்ந்த, இந்திய அரசியல் வாதிகளின் நாடகமாவே... எனக்கு தெரிகின்றது. தங்களது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க, பொய்யான பிரமையை... உருவாக்கி, முட்டாள் வட இந்தியர்களை... ஏமாற்றுகின்றது என்றே... நினைக்கின்றேன். இப்படியான செயல்களால்... கோபம் கொண்ட பாகிஸ்தான், சீனாவுடன் கூட்டு சேர்ந்து... இந்தியாவுக்கு கொடுக்கத் தொடங்கினால்... அதனை இந்தியா... தாங்க மாட்டாது என்பதே, உண்மை நிலவரம். புலி வருது, புலி வருது... என்று மக்களை பயப்படுத்தினால், உண்மையாகவே... (பாகிஸ்தான், சீனா) புலிகள் ஊருக்குள் வந்து விடும். கவனம்... இந்திய அரசியல்வாதிகளே...

சட்டவிரோத மணல்அகழ்விற்கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்பா? மக்கள் சந்தேகம்

3 months 2 weeks ago
இந்த சொறிலங்கா காவல்துறை அதிகாரிகள் தான் அத்தனை சட்டவிரோத செயல்களையும் செய்ற ஆக்கள். புலிகளிட காவல்துறை இருந்தா தான் இப்பிடியான சட்டவிரோத செயல்களை நிற்பாட்டலாம்.

இந்து சமய அமைப்புகளும் போராட்டமும்

3 months 2 weeks ago
சிந்துவெளி முதல் குமரிக்கண்டம் வரை தமிழன் ஆண்ட காலம் முதல் தமிழரின் கடவுளா சிவன் இருந்து வருகிறார். பின்னர் வட இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களும் சிவனை வழிபட வரலாறு தெரியாத சிலர் தான் சிங்களவன் ஸ்டைல்ல சிவன் வட இந்தியர்ட கடவுள் என்டு புளுடாவிட்டு பாக்கினம். வத்திக்கான் லோர்ட் ஜீசஸ் ஐ வழிபடுபவர்கள் தமிழர் அல்லாதவர்கள் தான் அதிகம். தமிழன் ஊர்ல இருந்து பல்லாயிரம் மைல்கல் தூரத்துல இருக்கிற ஜீசஸ் ஐ தூக்கி பிடிப்பவர்கள் ஈழம் வந்து ஆக்கிரமித்த போது கபட முறையில் சில தமிழனையும் ஜீசஸ் ஐ வழிபட வைத்தனர். அந்த வழித்தோன்றல்கள் சிலர் இப்ப திருக்கேதீஸ்வரத்தில காடைத்தனத்தில இறக்கி இருக்குதுகள்.

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

3 months 2 weeks ago
புண்ணிய பாரதத்தின் புனிதர்கள் சிதைத்துவிட்ட எமது பண்பாட்டுக் கோலங்கள் எனது நெஞ்சத்தில் இரத்தவடுக்களை ஏற்படுத்திச் சென்ற அந்த மூன்று நாட்களை என்னால் மறக்கமுடியாது. எனது எட்டு மாதக் குழந்தை தாய்ப்பாலுக்காக அழுத அந்த சோகம்…. “என்ரை பிள்ளைகளை கொல்லாதை, என்னைக் கொல்லு” என்று மன்றாடிய அந்தத் தாயை – எனது மாமியை – கூட்டு வீழ்த்திவிட்டு “ஐயோ… அம்மா……” என்ற கதறல் வெளியே கேட்குமுன் என் இரண்டு மைத்துனர்களைத் துப்பாக்கியால் சுட்ட அந்தக் கொடூரம்…. நினைக்க நெஞ்சம் துடிக்கின்றது. புண்ணிய பாரதத்தின் புனிதக் காவலர்கள் எமது வல்லை மண்ணில் ஏற்ிபடுத்திய அந்த வெறியாட்டம் பதினாறு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும்…. அவர்களால் ஏற்படுத்திச் சென்ற அவலங்களை நினைக்கும்போது…. இரண்டு மைத்துனர்களின் சடலங்களும் அருகருகே கிடத்தப்பட்டிருக்க, துப்பாக்கிச் சூட்டில் குற்றுயிரான எனது மாமியாரையும் பக்கத்தில் படுக்க வைத்து, அடுத்த அறையில் துக்கத்துடனும், பயத்துடனும் துடித்துக் கொண்டிருந்த எனது மனைவி, பிள்ளை இறந்துவிட்ட மைத்துனரின் குடும்பங்கள்.. அவர்களோடு நானும்…. வீட்டைச் சுற்றி கடலை எண்ணையின் நாற்றம்…கேற்றின் வெளியே தலைகாட்டும் இந்திய இராணுவச் சிப்பாய்கள்…தமையன்மாரையும் இழந்து என்னையும் இழந்து விடுவேனோ என்ற பயத்தில் துடித்த எனது மனைவி. மனைவியின் வேண்டுதலில் நானும், எனது மருமகனும் ( பதினைந்து வயதுப் பையனும்) உடல் முழுக்க எனது மைத்துனரிகளின் இரத்தத்தைப் பூசிக் கொண்டு மைத்துனருக்கருகே நானும் மருமகனும்….. எவ்வளவு நேரம் படுத்துக் கிடப்பது… இரத்தநெடி…பயம்….எல்லாம் சேர்ந்து எமது தலையைச் சுக்குநூறாக வெடிக்க வைத்தது. “அம்மா… என்னாலை இங்கை படுத்திருக்க ஏலாது….. நான் அடுத்த அறையுக்கை போறன்….” பகல் இரண்டு மணிக்கு நடைபெற்ற கொடூரம்…. பகலை விழுங்க மறுத்த அந்த நேரத்தின் பயங்கரம்…… இரண்டாம் நாள் எனது எட்டு வயது குழந்தை பசியால் அழுதது. மகளின் அழுகையைத் துடைக்க தாயால் முடியவில்லை. தாய் உணவு அழுந்தினால்தானே தாயின் மார்பில் பால் சுரக்கும். வெறும் மார்பு குழந்தையின் பசியைப் போக்குமா..? குழந்தை வீரிட்டு அழுதது. குழந்தையின் அழுகுரல் வீட்டிற்கு அப்பால் உள்ள இராணுத்தை வரவழைத்து விடுமோ…! பயத்தாலும் குழந்தையின் பசியைத் தீர்க்க முடியவில்லையே என்ற சோகத்தாலும் மனைவி துடிக்க…… பக்கத்து வீட்டுப்பெண் தடுப்பு வேலியைப் பியத்து, பயத்துடன் வீட்டில் தயாரித்து வந்த தேனீர் குழந்தையின் அழுகையை நிறுத்தியது. மூன்றாம் நாள் விடிந்தது…… “வாத்தியார் மூண்டு நாளாகுது… முத்தத்திலை போட்டு பிணங்களை எரியுங்கோ….” புண்டணி ஐயரின் வார்த்தைகளை நாம் சிரமேற்கொண்டோம் எனது மூத்த மைத்துனர், சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் காலை தருவித்த பத்து அந்தர் விறகு அவர்களின் ஈமக்கிரியைக்கு உதவியது.. அறையிலிருந்த என்னை வெளியே வர எவரும் விடவில்லை. மனைவிமார் , தங்கை, தினைந்து வயது மகனி மண்ணெண்ணையை ஊற்றி சிதைக்குக் கொள்ளி வைத்தனர். அதே தெரவில் இருந்த இரண்டு சகோதரங்கள்கூட இறந்துவிட்ட சகோதரர்களின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள முடியாத அவலம். மனம் கருகித் துடித்தது…. அந்தக் கொடூரத் தன்மையை வார்த்தைகளால் வடிக்க முடியாது. சிதை மூட்டப்பட்டு தீ அந்த இருவரின் உடலையம் விழுங்கிக் கொண்டிருந்தது. எரியும் சிதையிலிருந்து எனது மைத்துனர் ஒருவரின் கை சூட்எனால் எழும்ப…யன்னலூடாக இந்தச் துயரச் சம்பவத்தைப் பார்த்துக் கொணடிருந்த நான்….. “ ஒரு கட்டைடையைத் தூக்கி கைக்கு மேலே போடுங்கோ….” என் மைத்துனரின் மனைவி ஒரு கட்டையைத் தூக்கி எனது மைத்துனரின் கைமேல் போட….. சுடலையில் சிதை எரியும்போது உறவினர்களே அருகில் இருப்பதில்லை….. இங்கு மனைவியும் , தங்கையும் சிதையை மூட்டிய கொடூரம்……. நினைக்கவே உள்ளம் துடிக்கிறது. இது புண்ணிய பாரத பூமியின் புனிதர்கள் விளைவித்த பண்பாட்டு கோலங்கள்….!

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்கொள்வதில் இழுத்­த­டிப்பு வேண்டாம் - ஷர்­மிளா செய்யத்

3 months 2 weeks ago
(நா.தனுஜா) முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் பெண்­களின் உரி­மை­க­ளுக்கும் கௌர­வத்­திற்கும் மதிப்­ப­ளித்து திருத்­தங்கள் மேற்­கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக நாங்கள் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்கும் நிலையில், அப்­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் இஸ்­லா­மிய மத ­நி­று­வ­னங்­க­ளுமே இந்தத் திருத்­தங்­களை மேற்­கொள்­வதை இழுத்­த­டிப்புச் செய்து தடை­களை ஏற்படுத்தி வந்­தனர். இந்­நி­லையில் தற்­போது பேரி­ன­வா­தி­களால் பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தத்தின் விளை­வாக இஸ்­லா­மிய மதத்­திற்கு முர­ணான திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தையும் அதே­போன்று எவ்­வித திருத்­தங்­க­ளையும் மேற்­கொள்­ளாமல் இழுத்­த­டிப்பு செய்­வ­தையும் தவிர்க்க வேண்டும் என்று எழுத்­தா­ளரும் சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான ஷர்­மிளா செய்யத் தெரி­வித்தார். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் விரை­வாக திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டு­வரும் நிலையில், இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைக் கோரி கடந்­த­ கா­லத்தில் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்த ஷர்­மிளா செய்­யத்­திடம் வின­வியபோது அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறி­ய­தா­வது: முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று முஸ்லிம் பெண்கள் பல­வ­ருட கால­மா­கவே கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றனர். குறிப்­பாக பெண்­களில் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக நிர்­ண­யித்தல், திரு­ம­ணப்­ப­திவுச் சான்­றி­தழில் பெண்­களும் கையெ­ழுத்­திடல் உள்­ள­டங்­க­லாக பெண்­களின் உரி­மை­க­ளுக்கும் கௌர­வத்­திற்கும் மதிப்­ப­ளித்து திருத்­தங்கள் மேற்­கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்­களில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறோம். எனினும், அப்­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் இஸ்­லா­மிய மத­நி­று­வ­னங்­க­ளுமே இந்தத் திருத்­தங்­களை மேற்­கொள்­வதை இழுத்­த­டிப்புச் செய்து தடை­களை ஏற்­ப­டுத்தி வந்­தனர். எனினும் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளையும் தனித்­து­வத்­தையும் இல்­லாமல் செய்ய வேண்டும் என்­பதை நோக்­காகக் கொண்டு செயற்­படும் பேரி­ன­வா­தி­களின் கோரிக்­கை­களால் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதில் துரி­த­நிலை­யொன்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் எத்­த­கைய மாற்­றங்­களை நாங்கள் கோரி­யி­ருந்தோம் என்பதைக் கருத்திற்கொண்டு அவற்றையே திருத்த முற்பட வேண்டும். மாறாக தற்போது பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் விளைவாக இஸ்லாமிய மதத்திற்கு முரணான திருத்தங்களை மேற்கொள்வதையும் அதேபோன்று எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்வதையும் தவிர்க்க வேண்டும். https://www.virakesari.lk/article/61800

ஷாபி விவகார தொடர்ச்சி ; குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

3 months 2 weeks ago
(எம்.எப்.எம்.பஸீர்) வைத்தியர் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில், குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் கோரிக்கையை ஆராய்ந்தே தேசிய பொலிஸ் ஆணைக் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் திகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சராகவும் இடமாற்றப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளிப்படுத்தின. https://www.virakesari.lk/article/61806

உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே இருக்கிறார்"

3 months 2 weeks ago
படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம் சித்தரிக்க மட்டுமே சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் படுகாயமடைந்த உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் என்பவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றம் சாட்டிய பெண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சென்ற கார், சில தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே பதிவெண் அழிக்கப்பட்ட லாரி மோதியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த வழக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. படத்தின் காப்புரிமை ANWHAV SWARUP YADAV அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண் இன்னும் மயக்க நிலையிலிருந்து எழவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவித்தார். அதையடுத்து பேசிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பை சேர்ந்த வழக்கறிஞர், அவரது உடல்நிலை தேறும் வரை லக்னோ மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்புவதாக தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தெரிவித்தார். அதே போன்று, வேறொரு வழக்கின் கீழ் உத்தரப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் மகேஷ் சிங்கை டெல்லியுள்ள திகார் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்னும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக இன்று அம்மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ரஞ்சன் கோகோய் முன்னதாக, நேற்று முதல் முறையாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுவது, வாகனம் மோதிய சம்பவத்தை சிபிஐ ஒரே வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது, இழப்பீடு கொடுப்பது, டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் 45 நாட்களில் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கை விசாரித்து முடிப்பது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. வழக்கின் பின்னணி உன்னாவ் சட்ட மன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடவடிக்கை கோரி அந்தப் பெண் உ.பி. முதல்வர் யோகி ஆதித்திய நாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். படத்தின் காப்புரிமை Facebook Image caption குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் அதற்கு மறுநாள் போலீஸ் காவலில் இருந்த அவரது தந்தை இறந்தார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பி அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ. சேங்கர் கைது செய்யப்பட்டார். இந்த பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் அவரது உறவினர் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது. முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்டு 1ஆம் தேதி சேங்கர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது. https://www.bbc.com/tamil/india-49202844

சுமத்ரா தீவில் பெரிய நிலநடுக்கம்: இலங்கையில் எச்சரிக்கை

3 months 2 weeks ago
படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்தோனீசிய கடற்கரை ( கோப்புப் படம்) இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவுக்கு அருகிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமை National Early Tsunami Warning Centre, Sri Lanka Image caption இலங்கை தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கை. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து, இலங்கை வளிமண்டலவியல் திணைக் களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உடனடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு ஆரம்ப அறிவித்தலை வழங்குவதற்காகவே இது வெளியிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஆரம்ப கட்ட ஆய்வுகள்படி, இலங்கை மற்றும் இலங்கை அருகே உள்ள நாடுகளுக்கு சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார். எனினும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து தாம் சர்வதேச வானிலை மையங்களுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்தியா இதுவரை எந்தவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என தெரிவித்த இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, தாம் அறிவித்தல்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார். https://www.bbc.com/tamil/global-49209840

முல்லைத்தீவு பாடசாலை மாணவி உயிரிழப்பு, மேலதிக விசாரணைக்கு உத்தரவு….

3 months 2 weeks ago
August 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முல்லைத்தீவு உண்ணாப்பிலவு றோமன் கத்தேலிக்க பாடசாலையில், தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய சீனு என்ற இ. லிந்துசியா என்ற மாணவி கடந்த 29.07.19 அன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு காவற்துறையினருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் பணித்துள்ளார். குறித்த மாணவி கடந்த 29 ஆம் திகதி அன்று பாடசாலை சென்ற வேளை பாடசாலையில் சுவாசநோய் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த மாணவிக்கு பாடசாலை நேரத்தின் போது பகல் 12.30 மணிக்கு சுவாச நோயால் சுவாசிக்க அவதிப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமியினை அனுமதித்துள்ளார்கள். மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு காவற்துறையினருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பணித்துள்ளார். http://globaltamilnews.net/2019/127914/
Checked
Tue, 11/19/2019 - 12:10
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed