புதிய பதிவுகள்

வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

3 months 2 weeks ago
Big Pictureஇல் பார்த்தால் இப்பிடித்தான் நடக்க போகிறது, முஸ்லிம்களை எங்களுக்கு எதிராக கொம்பு சீவி வளரவிட்டார்கள், இப்பொழுது தேவை முடிந்துவிட்டது சர்வதேசத்தின் ஆதரவுடன் உரிமையாக அடிப்போட பார்க்கிறார்கள். சந்தடி சாக்கில், யாழ் பல்கலைக்கழகத்தில் கைது, தமிழரை மிரட்டுதல் என்று வேறு காரியங்களையும் முடிக்கிறார்கள். எங்கள் பழைய போராளிகளை வைத்து அவர்களுக்கு எதிராக கொம்பு சீவ பார்க்கிறார்கள். நன்றாக சாதித்துக்கொண்டு போபவர்கள் என்னவோ சிங்களவர்கள்தான். இந்த முஸ்லிம்கள் என்ன தெனாவெட்டாக ஆட்டம் போட்டுகொண்டு திரிந்தார்கள். சிங்களவர்கள் இந்த அளவுக்கு இவர்கள் செய்வார்கள், சுற்றுலாத்துறை இந்த அளவுக்கு அடி வாங்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதன் தாக்கம் வரும் காலங்களில் சாதாரண மனிதர்களை வந்தடையும் பொது , கோபம் இன்னும் அதிகமாகும். இவர்களின் அடிப்படை வியாபாரம், இனி வரும் காலங்களில் முஸ்லீம்களின் வியாபாரதளங்கள் நல்ல அடி வாங்கும் நான் நினைக்கிறன்,

கொண்டாட்டத்துடன் நடைபெற்ற எமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தம்

3 months 2 weeks ago
ublished : 06 May 2019 18:00 IST Updated : 06 May 2019 18:00 IST நடிகை எமி ஜாக்சனின் திருமண நிச்சயதார்த்தம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இன்று (மே 6) நடைபெற்றது. ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார். கடந்த புத்தாண்டு தினத்தில், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் எமி ஜாக்சன். எமியின் காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின. சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். “இந்த விஷயத்தைக் கூரையிலிருந்து கத்திச் சொல்லவேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். இன்று அன்னையர் தினம் என்பதால், இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது. இந்த உலகத்தில் எதைவிடவும் உன்னை மிக அதிகமாக நான் நேசிக்கிறேன். உண்மையான, தூய்மையான அன்பு. நாம் நமது குட்டி லிப்ராவைச் சந்திக்கப் பொறுமையின்றிக் காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். இந்நிலையில், இன்று (மே 6) தனக்கும், தன்னுடைய காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். “இன்று எங்களுடைய நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடுகிறோம். இது எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன். https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article27048877.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து

3 months 2 weeks ago
இதன் தொடர்ச்சியை ஊடகவியலார்கள் அறிந்து மக்களுக்கு தரவேண்டும். 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 14 கோடி ரூபா பணம் = கிட்டத்தட்ட 35 மில்லியன்கள் டாலர்கள். இதன் பின்னர் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள், சம்பந்தப்பட்ட அரசுகளை அம்பலப்படுத்த வேண்டும்.

வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

3 months 2 weeks ago
இதைவிட அநியாயம் வேறு என்ன இருக்கிறது? இஸ்லாமியப் பயங்கரவாதம் செய்த கொலைக்காக அப்பாவி போராளி சிறையில் மாதக் கணக்காக சித்திரவதை அனுபவித்து இன்று தெளிவாக அவர் நிரபராதி என்று தெரிந்தும்கூட வெளியில் வரமுடியாத நிலை. அப்பாவிகளை விடுவிக்கவே தயங்கும் சிங்களப் பேரினவாதம், அரசியல்க் கைதிகளை எப்போது விடுதலை செய்யப்போகிறது? இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்குதலுக்குப்பிறகு சர்வதேசத்தால் கொம்புசீவப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் இனிமேல் கட்டுக்கடங்காமல் துள்ளப்போகிறது. அனுபவிக்கப்போவதோ என்றும்போல தமிழர்களும், அப்பாவி முஸ்லீம்களும்தான்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி !

3 months 2 weeks ago
பொதுவாக இது மஹிந்தவின் வேலை யாக தான் இருக்கும். இங்கு விகாரை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மஹிந்தவுக்கு தெரியும் தமிழர் நிலங்களில் விகாரை கட்டினால் கட்டாயம் பிரச்சினை பண்ணுவான், வழக்கு போடுவான், உடனே அதை சிங்கள மக்களிடம் காட்டி வாக்குகளாக மாற்றுவது தான் யுக்தி. ஆனால் இந்த பழைய காலத்து தந்திரம் பலிக்க போவதில்லை.

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

3 months 2 weeks ago
உண்மை, இங்கு எனக்குத் தெரிந்த சிலர், ஊரில் குறைந்தது 6 மாதத்திற்காவது போய் இருந்துவிட்டு வரலாம் என்கிற ஆசையில் யாழ்ப்பாணத்தில் வீடுகளைக் கட்டலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். பலவருட கால புலம்பெயர் வாழ்க்கையின் சலிப்புத்தன்மையும், தாய்நாட்டில் இறுதிக்காலத்திலாவது வாழவேண்டும் என்கிற தவிப்பும் இவ்வாறு அவர்களைச் செய்ய தூண்டுகிறது. அதேபோல, இன்னும் சிலர் வாழ்வின் சூழ்நிலைகளுக்கெற்ப, ஊரில் சென்று வாழலாம் என்று கொழும்பு உற்பட சில இடங்களில் வீடுகளை வாங்கி விடுகிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து, அவர்கள் எங்கே போவதென்று முடிவெடுத்தபின், தாம் ஊருக்கே சென்றுவிடலாம் என்பது அவர்களின் எண்ணம். என்னுடன் கூட வேலைசெய்யும் நண்பர், அடிக்கடி ஊர்போய் வருபவர். இன்று என்னுடன் பேசும்போது ஊரின் நிலை பற்றிச் சொன்னார். சோதனைக் கெடுபிடிகள், விசாரணைகள், தேடுதல்கள் என்று போர்க்காலத்தின் நிலைக்கு யாழ்ப்பாணம் திரும்பிவிட்டதென்று அவரது தம்பியி கூறியதாகவும், இனிமேல் ஊருக்குப் போய்வரும் எண்ணத்தைக் கட்டிவைத்துவிடவேண்டியதுதான் என்று கூறுகிறார். யுத்தம் என்று ஒன்று பாரிய அளவில் நடைபெறாதவிடத்து, அவ்வாறான முடிவுகள் சாத்தியமாக இருந்தது. ஆனால், அப்பாவிகளைக் கொல்வததை வேதமாகக் கொண்ட அடிப்படைவாதம் இவ்வாறான எண்ணங்களை நிச்சயம் கலைத்துவிடும். ஒருகட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டாலும் கூட, தொடர்ச்சியான சிங்களப் பேரினவாதம் நிற்கப்போவதில்லை. தமிழர்கள் மீதான அதனது ஆக்கிரமிப்பும், கலாசரா மொழிச் சிதைவும் தொடரத்தான் போகிறது. ஒருகாலத்தில் தமிழர்க்கான தாயகம் அங்கே இருந்ததற்கான அடையாளம் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும். இப்போதிருக்கும் தமிழ் அரசியத் தலைமைகளால் இதைத் தடுப்பதென்பது முடியாத காரியம். இன்னொரு போராட்டத்திற்கான முயற்சியை புதிய உலக ஒழுங்கு ஒருபோதும் விரும்பப்போவதில்லை என்பதுடன், அடக்குமுறையாளர்களுடன் கைகோர்த்து முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்.

வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை இளைஞர் அணி சம்பியன்!!

3 months 2 weeks ago
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது. இதன் இறுதியாட்டம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தெல்லிப்பழைபிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது.https://newuthayan.com/story/11/வலைப்பந்தாட்டத்-தொடரில-2.html

யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய ஜனாதிபதி

3 months 2 weeks ago
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், நேற்று மே மாதம் 5 ஆம் திகதி பின்னராகவே தொலைநகல் மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். சறீசற்குணராஜா அல்லது யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஆகிய இருவரில் ஒருவரை யாழ்ப்பாண புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்படும் வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிப்பதற்கான பரசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அறியவருகின்றது. இதேவேளை, காரணமேதுமின்றி பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை மீளப் பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/55404

சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து

3 months 2 weeks ago
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 14 கோடி ரூபா பணம் தொடர்பில் பிரதான விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந் நிலையில் அவற்றை முடக்கி, அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சிறப்பு சி.ஐ.டி. குழு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதில் 14 கோடி ரூபா பணத்தில் ஒரு தொகுதியை சி.ஐ.டி. மீட்டுள்ளதுடன் ஏனைய பணம் வங்கிக்கணக்குகளில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த வங்கிக்கணக்குகளை முடக்கி விசாரனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே இந்த பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதி கொண்ட சொத்துக்களை சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளது. அந்த சொத்துக்களையும் முடக்கி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது http://www.virakesari.lk/article/55409

பிரதான சூத்திரதாரி சஹ்ரான் உள்ளிட்ட 36 பேரின் முக்கிய பயிற்சி முகாமொன்று நுவரெலியாவில் சுற்றிவளைப்பு

3 months 2 weeks ago
தடைசெய்யப்பட்டுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் இன்று ( 06.05.2019) சுற்றிவளைத்துள்ளனர். அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் உட்பட 36 பேர் வரையில் இங்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும் கடந்த 21 ம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ம் திகதி தாக்குதலுகான இறுதி பயிற்சியை இந்த கட்டிடத்திலே மேற்கொண்டுள்ளதுடன் குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடத்தை குத்கைக்கு பெற்றுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது http://www.virakesari.lk/article/55397

இரானுக்கு விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பியது அமெரிக்கா

3 months 2 weeks ago
படத்தின் காப்புரிமை U.S. Navy/Getty Images Image caption அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன். கோப்பு படம். விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை இரானுக்குக்கு அனுப்புகிறது அமெரிக்கா. பல தொந்தரவு தரும், பதற்றத்தை அதிகரிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா செயல்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர்க் கப்பல் அனுப்பப்படுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் படையினர் மீதோ, அதன் கூட்டாளிகளின் படையினர் மீதோ ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் தணியாத ஆற்றலோடு பதிலடி தரப்படும் என்று ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை Reuters Image caption ஜான் போல்டன் "யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவும், குண்டு வீச்சு படையும், அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தெளிவான செய்தியை இரான் அரசுக்கு அனுப்பும்" என்று போல்டன் தெரிவித்துள்ளார். "இரானுடன் அமெரிக்கா சண்டையிட முனையவில்லை. ஆனால், இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, இரான் பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, ஏதாவது தாக்குதல் நடத்தினால், பதிலடி தருவதற்கு முழுவதுமாக தயாராக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். உரசலின் பின்னணி அதிபர் ஒபாமா காலத்தில் 2015-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் இரானுடன் செய்துகொண்ட பன்னாட்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கத் தரப்பு மட்டும் ஒரு தரப்பாக வெளியேறியது. அணு ஆயுத சோதனைகள் செய்யாமல் இருப்பதற்காக இரானுக்கு சலுகைகள் அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் அது. அமெரிக்கா வெளியேறினாலும், பிற ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தத்தில் நீடிக்கின்றன. ஆனால், தாம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியவுடன் இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு சீனா, இந்தியா, தென்கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு தாம் விதித்த பொருளாதாரத் தடையில் இருந்து விதிவிலக்கு அளித்துவந்தது அமெரிக்கா. ஆனால், இந்த தடையில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை நிறுத்துவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது. அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து இரான் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பண மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது. இதனால், ஆண்டு பண வீக்க விகிதம் நான்கு மடங்காக உயர்ந்தது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினார்கள். உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின. https://www.bbc.com/tamil/global-48173300

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்

3 months 2 weeks ago
ஜுல்ஃபிகர் அலி பிபிசி உண்மை பரிசோதிக்கும் குழு பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் கயீதா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் கயீதா கருதப்பட்டது. ஆயிரகணக்கான பேர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிராக சண்டையிட்டனர். இந்த அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. ஆனால், அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா கொல்லப்பட்ட பின் அந்த அமைப்பு வலுவிழந்தது. இதற்கிடையே ஐ.எஸ் அமைப்பும் எழுச்சி பெற்றது. சரி. இப்போது இந்த அமைப்பின் நிலை என்ன? சர்வதேச பாதுகாப்புக்கு இன்னும் இந்த அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கிறதா? அமைதியான எழுச்சி கடந்த சில தினங்களாக ஐ.எஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், அமைதியாக அல் - கயீதா அமைப்பு மெல்ல வலுபெற்றுவருகிறது. குறிப்பாக பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உளவு அமைப்பின் சமீபத்திய அறிக்கையும் இது குறித்து எச்சரித்துள்ளது. அந்த அறிக்கை: மூத்த அல் கொய்தா தலைவர்கள் தங்களது சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மேற்குலகம் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு உதவி வருகின்றனர். ஐ.நா மன்றமும் இவ்வாறே கூறி உள்ளது. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அந்த அமைப்பின் அறிக்கை, "அந்த அமைப்பு உயிர் பெற்று வருகிறது. உலகின் பல இடங்களில் அந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது" என்று குறிப்பிடுகிறது. பிரிட்டன் உளவுத்துறையின் தலைவர் அலெக்ஸ் யங்கும் அல் கயீதாவில் எழுச்சி குறித்து எச்சரித்துள்ளார். அல் கயீதாவில் வலைபின்னல் வான் தாக்குதலால் ஐ.எஸ் அமைப்பு தலைவர்கள் கொல்லப்பட்டப்பிம் அல் - கயீதா தன் யுத்திகளை மாற்றி உள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images இதனுடன் இணைந்து இயங்கிய அமைப்புகளுடன் ஒரு வலைப்பின்னலை இந்த அமைப்பு மேம்படுத்தி உள்ளது. ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஐ.எஸ் அமைப்பு இவ்வாறாக செயல்படாது. அதுமட்டுமல்லாமல், உள்ளூர் மக்களை ஈர்க்க சமூக மேம்பாட்டு திட்டங்களிலும் அல் கயீதா செயல்படுத்தி வருகிறது. 2013ம் ஆண்டு இந்த மைப்பு ஜிஹாதிகளுக்கான நெறிமுறைகளை வழிவகுத்தது. இதில் பல சீர்த்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தன. "உள்ளூர் பிரச்சனைகளையும் இந்த அமைப்பு உள்வாங்க தொடங்கி இருக்கிறது. ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் இந்த அமைப்பு இணைத்து கொண்டுள்ளது" என்கிறார் பேராசிரியர் எலிசபெத் கெண்டல். அவர், "உள்ளூர் மக்களுக்கான பாதுகாவலன் என்ற தோற்றத்தை இந்த அமைப்பு ஏற்படுத்தி கொண்டது" என்கிறார். அல் கொய்தா தமது பல கிளை அமைப்புகள் மூலம் தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது. ஆர்ம்டு கான்ஃப்லிக்ட் லொகேசன் மற்றும் ஈவெண்ட் டேடா ப்ராஜெக்ட் டமைப்பின் தரவுகள் இந்த அமைப்பானது 2018ஆம் ஆண்டு 316 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமை Getty Images அல் கொய்தாவின் துணை அமைப்புகள்: அல் கயீதா இன் தி இஸ்லாமிக் மாக்ரெப் 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது, அல் கயீதா இன் தி அரேபியன் பெனின்சுலா 2009ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, அல் கயீதா இன் தி இந்தியன் சப் கான்டினெண்ட் 2014ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஆஃப்கன், பாகிஸ்தான், இந்தியா, மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இயங்குகிறது. மாலி மற்றும் மேற்கு ஆஃப்ரிக்காவில் பல அயுத குழுக்கள் ஜமா அட் நஸ்ரட் அல் இஸ்லாம் வல் முஸ்லிமின் எனற பேரில் இணைக்கப்பட்டுள்ளது. இது அல் கொய்தாவின் துணை அமைப்பாகும். இந்த அமைப்பில் 800 பேர் இருக்கிறார்கள். சோமாலியா மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் அல் சபாப் என்ற அமைப்பு அல் கயீதாவிடம் விசுவாசம் உள்ள அமைப்பாகும். இந்த அமைப்பில் 6 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். சிரியாவில் அல் கயீதா இயங்குகிறது. சிரியாவில் உள்ள பல ஆயுத குழுக்கள் இணைக்கப்பட்டு ஹயாத் தஹ்ரீ அல் சாம் என்ற அமைப்பாக உருவானது. இவர்களுக்கு அல் கொய்தாவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இந்த அமைப்பு சிரியாவின் இட்லீப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பில் 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எதிர்கால தலைமை? 2015ஆம் ஆண்டு அல் கயீதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல் ஜவஹரி குகையிலிருந்து புறப்படும் சிங்கமென ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார். . படத்தின் காப்புரிமை AFP அவர் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன். இவர்தான் எதிர்காலத்தில் அல் கொய்தாவை வழிநடத்துவார் என பார்க்கப்படுகிறது. ஹம்சாவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்கா, அவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசுதொகையை அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/global-48177147

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

3 months 2 weeks ago
சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும், தேசிய தௌஹீத் ஜமாதும் – சுன்னாகம் இளைஞரும் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளார் என சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம். புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்.” முகமது உமர் றியாஸ் (பிரதீப்) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு – யாழ்.மாவட்டம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ChundikuliGirlsCollege #jaffna #srilanka #NationalThowheethJamaath #NTJSriLanka http://globaltamilnews.net/2019/120850/

ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மில்ஹானை சி.ஐ.டி. தேடுகிறது

3 months 2 weeks ago
1 Min Read May 6, 2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்­குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தாக்குதல்களை வழிநடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம்மின் கீழ் செயற்பட்ட குழுவின், ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. மில்ஹான் எனும் குறித்த நபர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு உம்ராவுக்காக சென்றுள்ளதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவர் மீள இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் அவரது பயணப் பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன. அதன்படி மில்ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மில்ஹான், யுத்த காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை ஆயுதப் படைகளில் இருந்தவர் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுணதீவு, காவல் நிலைய உத்தியோகத்தர்கள் கொலையினையும் அவரே நெறிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியன அவை தொடர்பில் சுமார் 68 பேரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றன . அவர்களில் குறித்த தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றை நெறிப்படுத்திய பிரதான சந்தேக நபர்கள் 8 பேர் அடங்குவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மட்டக்களப்பு மன்முனைப் பற்று, ஒல்லிக்குளம் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர்கள் கொண்ட விசாலமான இடப்பரப்பைக் கொண்ட இந்த இடம் காவற்துறை மற்றும் காவற்துறை விஷேட அதிரடிப் படையினரின் சிறப்புக் குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முகாம் தேசிய தெளஹீத் ஜமா அத் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரான ரில்வானின் கீழ் இயங்கியதாக கூறப்படுகிறது. ரில்வான் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்டு இருந்தார். இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹசிமின் மைத்துனர் என கூறப்படும் மெலளானா ரிலா, மற்றும் அவரது சகாவாக கருதப்படும் ஷஹ்னவாஜ் எனும் நபர் ஆகியோர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கும் இலங்கை – இந்தியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணைகளை இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து மெற்கொள்வதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #srilanka #eastersundayattacklk #sakaaranhashim #saudiarabia #milhan http://globaltamilnews.net/2019/120843/

பதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல்…

3 months 2 weeks ago
May 6, 2019 பதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவி ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலை செய்த நிலையில், அவரை நாளை 08-05-2019 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பதியத்தலாவை ஜும்மா பள்ளிவாசலின் பிரதம மௌலவி மீதுர சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தெகியத்தக்கண்டிய காவற்துறையினர் குறிப்பிட்ட மௌலவியின் அறையை சோதனையிட்ட போது தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மொகமத் சஹாரானின் உரையடங்கிய ஒளிப் பதிவு நாடாக்கள், இறுவெட்டுக்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இதையடுத்து குறித்த மௌலவி கைது செய்யப்பட்டு தெகியத்தகண்டிய நீதவான் திமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் அவரை நாளை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.#remanded #srilanka #jummah http://globaltamilnews.net/2019/120839/
Checked
Wed, 08/21/2019 - 01:02
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed