புதிய பதிவுகள்

முன்மாதிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை

3 months 1 week ago
முன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் காணப்­படும் சிறந்த நிலைபேராண்மை அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை பின்­பற்­று­வதில் தொடர்ச்­சி­யாக முன்­னணி வகிக்கும் இந்­நி­று­வ­னத்தின் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்­தஸ்து இவ்­வாண்டு கிடைத்­துள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி இந்த தொழிற்­சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முத­லா­வது Leed பிளாட்­டனம் என்ற சான்­றி­த­ழையும் பெற்­றுள்­ளது. இவ்­வாறு சிறப்­பம்­சங்கள் பல­வற்றை கொண்­டுள்ள மட்­டக்­க­ளப்பு Brandix ஆடைத் தொழிற்­சா­லையை பார்­வை­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அண்­மையில் எமக்குக் கிடைத்­தது. நாம் ஒரு குழு­வாக அங்கு சென்­றி­ருந்தோம். குறித்த ஆடைத் தொழிற்­சாலை வளா­கத்­துக்குள் நுழைந்தபோது ஏனைய ஆடைத் தொழிற்­சா­லை­களைப் போல் அல்­லாது வித்­தி­யா­ச­மான ஒரு உணர்வு ஏற்­பட்­டது. தொழிற்­சாலையைச் சுற்றி காற்­றோட்­ட­மான நல்ல இடை­வெளி, அழ­கிய மரங்கள், செடிகள், கொடி­க­ளென பார்ப்­ப­தற்கு பச்சை பசே­லென காட்­சி­ய­ளித்­தது. அந்த ரம்மி­ய­மான காட்­சி­களை ரசித்­த­வாறே ஆடைத்தொழிற்­சா­லைக்குள் அடி­யெ­டுத்து வைத்தோம். தொழிற்­சா­லைக்­குள்ளே முதலில் நாம் சென்­றது பிர­தான கலந்­து­ரை­யாடல் அறைக்கே. அங்கு எமக்கு சில விளக்­கங்­களும் ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டன. அதன் பின்னர் வழி­காட்டல் குழு­வொன்றின் ஊடாக உற்­பத்தி செயற்­பா­டுகள் இடம்பெறும் பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­பட்டோம். வியப்­பூட்டும் வகை­யிலான் அற்­பு­த­மான கட்­ட­மைப்பு ஏனைய ஆடைத் தொழிற்­சா­லை­களைப் போன்றே இங்கும் ஆடை­களின் ஒவ்­வொரு அங்­கங்­களும் தனித்­த­னி­யான பிரி­வி­னரால் தைக்­கப்­பட்டு இறு­தியில் ஆடை முழு­மை­யாக்­கப்­பட்டு ‍பொதி செய்­யப்­ப­டு­வதை காண­மு­டிந்­தது. ஆனால் எவ்­வித பர­ப­ரப்பும் பதற்­றமும் இன்றி ஊழி­யர்கள் தமது பணி­களை முன்­னெ­டுத்­த­வண்ணம் இருந்­தனர். அவர்­க­ளுக்­கான விசேட அறி­வித்­தல்கள் மற்றும் அறி­வு­றுத்­தல்கள் ஒலி­பெ­ருக்கி மூல­மாக வழங்­கப்­பட்­டன. ஒரு ஆடையின் ஒவ்­வொரு பகு­தியும் மற்­றொரு தரப்­பி­னரின் உற்­பத்தி செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­பதால் ஆரம்பம் முதல் இறு­தி­வ­ரை­யான சகல தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் தொடர்­புகள் பேணப்­பட வேண்டும். அதனை இல­கு­ப­டுத்­து­வ­தற்­காக பொது­வான டிஜிட்டல் திரையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதில் நாளொன்­றுக்கு தேவை­யான மொத்த மூலப்­பொ­ருட்கள் மற்றும் ஒவ்­வொரு பகு­தி­யி­லி­ருந்தும் தயா­ரிக்­கப்­பட வேண்­டிய அள­வுகள் போன்­றன குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். அதே­போன்று ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் ஒவ்­வொரு பிரிவிலிருந்து தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அங்­கங்கள் பற்­றிய தர­வுகள் பதி­வா­கிக்­கொண்டே இருக்கும். அதைக் கருத்­திற்­கொண்டு ஊழி­யர்கள் தமது பணி­யினை முன்­னெ­டுப்­ப­தையும் காண­மு­டிந்­தது. பின்னர் முழு­மை­யாக்­கப்­பட்ட ஆடைகள் பரி­சோ­திக்­கப்­பட்டு தர­மற்­ற­வைகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு தர­மா­னவை பொதி செய்­யப்­பட்டு வாடிக்­கை­யாளர் பரி­சோ­த­னைக்­காக கள­ஞ்சி­ய­சா­லையில் வைக்­கப்­ப­டு­கி­றது. இறு­தியில் அவற்றில் சில­வற்றை வாடிக்­கை­யாளர் பரி­சோ­தித்து தரம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதும் அவை ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. நிறு­வ­னத்தின் உற்­பத்தி மற்று சிக்­கனம், சூழ­லுக்கு இசை­வான செயற்­பா­டுகள் குறித்து நிறுவனத்தின் விசேட வேலைத்திட்டத்துக்கான சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ஹேமிந்த ஜயவர்த்தன விளக்­க­ம­ளித்தார். உற்­பத்தி நட­வ­டிக்­கை­களின்போது மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக குறைந்த வலுவில் இயங்­கக்கூ­டிய தையல் இயந்­தி­ரங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மட்­டக்­க­ளப்பு தொழிற்­சா­லையில் நாம் 1800 தையல் இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­து­கின்றோம். இவை தின­சரி 16 மணி நேரம் இயங்­கு­கின்­றன. இவை அனைத்­துக்கும் Clutch மோட்­டர்­க­ளுக்கு பதி­லாக குறைந்த வலுவில் இயங்கும் VSD Servo மோட்­டர்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. உற்­பத்தி காலப்­ப­கு­தியில், Clutch மோட்­டர்கள் தொடர்ச்­சி­யாக இயங்­கு­கின்­றன. Servo மோட்­டர்கள் ஊசி இயங்கும் காலப்­ப­கு­தியில் மாத்­தி­ரமே இயங்­கு­கின்­றன. ஊசி இயக்கம் செயற்­பாட்டு நேரத்தின் 17வீதத்தை மாத்­தி­ரமே கொண்­டுள்­ளது. Clutch மோட்­ட­ருடன் ஒப்­பி­டு­கையில் Servo மோட்­ட­ரினால் 68-–73 வீத வலுவை சேமித்துக் கொள்ள முடி­கி­றது. வாயு சேமிப்பு சாத­னங்கள் (Air Saving Devices) தைக்­கப்­பட்ட ஆடை­களில் சுருக்­கங்­களை அகற்­று­வது என்­பது புதிய செயற்­பாட்டு தேவை­யாக அமைந்­துள்­ளது. இதற்­காக அழுத்­தப்­பட்ட வாயு தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. உள்­ளக அணி­யினால் புத்­தாக்­க­மான வாயு சேமிப்பு சாதனம் ஒன்று வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக அழுத்­தப்­பட்ட வாயு விர­யத்தை 40 வீதத்­துக்கு மேல் குறைத்துக்கொள்­கின்றோம். அதே­போன்று கழிவு நூல்­களை மீள பயன்­ப­டுத்­து­வ­தற்­காக எஞ்­சிய நூல்­களை வேறாக்கி அவற்றை சேமித்து வைக்­கின்றோம். இந்த நூல்­களை புதிய அலங்­கா­ரங்கள் அறி­முகம் செய்யும்போது மீள பயன்­ப­டுத்­து­கின்றோம். கழிவு நீர் வடி­கட்ட நாம் கழி­வுநீர் சுத்­தி­க­ரிப்பு பகு­தி­யொன்றை நிறு­வி­யுள்ளோம். அத­னூ­டாக வடி­கட்­டப்­பட்ட நீரை மீள்­சு­ழற்­சிக்­குட்­ப­டுத்தி கழி­வ­றைகள் மற்றும் விவ­சாய தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­கின்றோம். அதே­ போ­ன்று தொழிற்­சா­லையில் காணப்­படும் நீர் தூய்­மை­யாக்கல் கட்­ட­மைப்­பி­னூ­டாக சகல ஊழி­யர்­க­ளுக்கும் சுத்­த­மா­னதும் பாது­காப்­பா­ன­து­மான குடி­நீரை வழங்கி வரு­கின்றோம். உணவுக் கழிவு உர­மாக்கல் செயற்­பா­டு­களும் இங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது . 24 மணி நேர காலப்­ப­கு­தி­யினுள் உணவு கழி­வு­க­ளி­லி­ருந்து கொம்போஸ்ட் உரம் உர­மாக்கல் இயந்­தி­ரத்­தி­னூ­டாக தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. இந்த உரம் உள்­ளக உரத் தேவைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதுடன் ஊழி­யர்­க­ளது தேவைக்­கா­கவும் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றது. உணவுத் தட்­டு­களை கழுவும்போது நீரின் அளவை குறைத்துக் கொள்ள dishwasher பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இத­னூ­டாக நீரின் வீண் விரயம் தடுக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு தட்­டு­களை கழு­வு­வ­தற்கு கொதி நீரை பெற்றுக்கொள்­வ­தற்­காக solar hot water கட்டமைப்பை நாம் பயன்படுத்துகின்றோம். நீரை மேலும் சிக்கனமாக பயன்படுத்த நவீன குழாய் பொருத்திகளை தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தியுள்ளோம். பாரம்பரிய நீர் பொருத்திகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய பொருத்திகள் ஊடாக 53 வீதமான நீரை சேமிக்க முடிகிறது என எமக்கு விளக்கமளித்தார். தொழிற்சாலையின் கூரைப்பகுதியில் சோலா பெனல்கள் பொருத்தப்பட்டு சூரிய சக்தி மூலமாக மின்சாரம் சேமிக்கப்பட்டு தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பல்வேறு முன்மாதிரியான செயற்பாடுகளை மட்டக்களப்பு Brandix ஆடைத் தொழிற்சாலையில் எம்மால் காண முடிந்தது. இதுபோன்று சகல நிறுவனங்களும் சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி தமது உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். - எம்.நேசமணி- https://www.virakesari.lk/article/63532

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

3 months 1 week ago
நீங்கள் kadancha இன் கருத்தையும் எனது கருத்தையும் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். முதலில் உங்களுடைய எந்த கருத்தை quote பண்ணி நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். சும்மா பிஜேபியை இதற்குள் இழுக்காமல். முன்னைய இந்திய ஆட்சியாளர் என நான் கூறியது ராஜீவ் காந்தி (காங்கிரஸ்), பின்னைய இந்திய ஆட்சியாளர் என நான் கூறியது மன்மோகன் சிங் (காங்கிரஸ்). இதற்குள் பிஜேபி எங்கே வந்தது? தவிர ஆட்சிமாற்றம் எமக்கு நன்மையளிக்கும் என்று நான் எங்கேயாவது எழுதி அதை புரட்சி ஆதரித்துள்ளாரா? இதென்ன புதுக்கதை? 😀

சாதிப்பது வெறி... சாதி இப்போது வெறி

3 months 1 week ago
சாதியம் ஒழியணும் என்பது உண்மை வரவேற்கத்தக்கது ஆனால் தமிழருடைய நாடி நரம்பு ரத்தம் என ஊறிப்போயுள்ள இந்த வெறியை எதை வைத்தும் முற்றாக ஒழித்துவிட முடியாது என்பது என் அனுபவம் தரும் பாடம். திருமணங்கள் மூலம் இதை சாதிக்கலாம் என வல்வை சகாறா சொல்ல வருகிறார் என நினைக்கின்றேன் வாய்ப்பில்லை ஒன்றைவிட மற்றொன்று உயர்வென ஒவ்வொரு சாதியினரும் படிநிலை பார்க்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதி அமைப்பில் வேண்டுமானால் இன்னொருத்தர் நான் உயர்ந்து விட்டேன் என கொலரை தூக்கிவிட வேண்டுமானால் திருமணங்கள் உதவலாம் அண்மையில் பிரான்சிலே இது போன்ற ஒரு சாதி தாண்டிய திருமணம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட எனது நண்பரிடம் பெண் வீட்டை சார்ந்த ஒருவர் சொன்னாராம் பார்த்தீர்களா உங்களுடைய ஆட்களுடன் நாங்களும் சரி சமமாக வேட்டி கட்டி ஒன்றாக நின்றதை என.😥

கனேடியத் தூதுவருடன் சந்திப்பு

3 months 1 week ago
-க. அகரன் இலங்கைகான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்மிலன், தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஓலேற், ஒட்டாவாவில் இருந்து வருகை தந்திருந்த சமாதானத்துக்கான நீண்டகாலச் செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் வைத்து, நேற்று (27) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, போருக்குப் பின்னரான காலப்பகுதியில், வன்னிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள், கனடா, புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், வடக்குமாகாண சுகாதார சேவைகள் மேம்பாடு தொடர்பாகவும் குறிப்பாக கனடா நாட்டினால் மேற்கொள்ளப்படக்கூடிய அணுசரனை தொடர்பாகவும் ஆராயப்பட்டன http://www.tamilmirror.lk/வன்னி/கனேடியத்-தூதுவருடன்-சந்திப்பு/72-237492

‘சிவரூபனுக்கு மன, உடல் ரீதியாக பாதிப்பு’

3 months 1 week ago
-எஸ்.நிதர்ஷன் வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், சிவரூபனை எவ்வித அடிப்படை காரணங்களுமின்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, அவரை மாலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்து காலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்திருக்கும் போது, அங்கு பலரும் அவரை பார்த்து விமர்சிப்பதாகவும் இது அவரது வைத்திய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விகாரத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தலையிட வேண்டுமெனவும், அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சிவரூபனுக்கு-மன-உடல்-ரீதியாக-பாதிப்பு/71-237495

காணி விடுப்புக் கோரி வடக்கில் போராட்டங்கள்

3 months 1 week ago
-சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.என்.நிபோஜன் காணி விடுப்பு கோரி, வடக்கின் பல பாகங்களிலும், இன்று (28) போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவ, மன்னார் ஆகிய பகுதிகளிலேயே, இந்தப் போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில், மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டமக்களால், இன்று (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, நேற்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவு புனித ராஜப்பர் தேவாலய முன்றலில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை கவனயீர்ப்புப் பேரணியாக வந்த மக்கள், மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்டச் செயலகத்துக்குள் மக்கள் செல்வதற்கு முற்பட்ட போது, மாவட்டச் செயலக வாயில் மூடப்பட்டு, மக்கள் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் அமைதிப் போராட்டம் வடக்கு - கிழக்கு மாகாணங்களில், படையினர் வசமுள்ள காணிகளை நல்லிணக்க அடிப்படையில் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (28) முற்பகல் 9.30 மணியளவில், அடையாள அமைதி போராட்டமொன்று மன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம், மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குருஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, நல்லாட்சி அரசாங்கத்துக்குகு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில், தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி, படையினர் வசமுள்ள காணிகளை ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவான வாக்குறுதியொன்றை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின் நிறைவில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன் றாஸுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது. மகஜரை பெற்று கொண்ட மாவட்டச் செயலாளர், மக்களின் கோரிக்கை நியாயமானதெனவும் எனவே இந்த மகஜர், மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், மாவட்டச் செயலகம் சார்பாக, காணி விடுவிப்பு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை மேற்கொண்டு தருவதாகவும், அவர் மேலும் கூறினார். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் முல்லைத்தீவில், இராணுவத்தினர், கடற்படையினர் சுவீகரித்துள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட மக்களால், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், நேற்று (28) முற்பகல் 11 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களை ச்சேர்ந்த மீணவ குடும்பங்களும் கேப்பாப்புலவில் தமத நிலங்களை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் இணைந்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தின் இறுதியில், மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பதற்காக சென்றவர்கள் மாவட்டச் செயலக வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, குறித்த இடத்துக்கு வருகை தந்த மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டது. கையொப்பம் அடங்கிய மகஜர் கையளிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில், விடுவிக்கப்படாத மக்கள் காணிகளை விரைந்து விடுவிக்க வேண்டுமென கோரி, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், இன்று (28) கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முன்பாக முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேரணி, மாவட்டச் செயலகம் வரை சென்றது. குறித்த பேரணியில் கலந்துகொண்ட மக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளரைச் சந்தித்து, நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பில் பெற்றுக்கொண்ட கையொப்பம் அடங்கிய மகஜரை அவரிடம் கையளித்தனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/காணி-விடுப்புக்-கோரி-வடக்கில்-போராட்டங்கள்/71-237490

எல்லைகள் இல்லா உலகம்

3 months 1 week ago
Stay With Me... And Never Let Me Know Just To Celebrate The Notion... Stay With Me, Don't Go Cause The Truth In Your Eyes... Is The Light In The Darkness You Are My Love... My Infinite Love There's No... Other Way That We Can Go Way That We Need Be... Here Is The Prophecy There's So, Much There... More Towering Need Discovering... Be Empowering Once You... Keep Something In Keep Giving In... Keep Winning In With Infinite Love... Once You Keep Something In... Keep Giving In Keep Winning In With... Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me... Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me... I Say The Blind, The Blind... I Say The Blind Will See Me Say Now Heed The Words... And We're Gonna Split The Sea What Say What... Say What What... Light A Candle... Me Say Don't Curse The Darkness Make A Wish... Send It To The Heartless Taking It Back In Time 500 Bc... Taking It To The Future Historically Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me

பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை - ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பு கருத்து

3 months 1 week ago
பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்‌ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?, பெண்களை மதிப்பது எப்படி? பெண்கள் தற்காப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி ? போன்றவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்‌ஷா சன்ஸ்க்ரித் உத்தன் நியாஸ் அமைப்பின் செயலர் அதுல் கோத்தாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கருத்து, புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை. பாலுறவு என்ற வார்த்தையை பள்ளிகளில் பயன்படுத்துவதையே வன்மையாகக் கண்டிக்கிறேன். வேண்டுமென்றால் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க பள்ளிகளில் ஆலோசனை மையம் வேண்டுமானால் அமைக்கலாம். பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை. இதுவரை பாலியல் கல்வி எங்கெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அது எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வியில் இந்தியத் தன்மை இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். https://www.ndtv.com/tamil/no-need-for-teaching-sex-education-in-schools-says-rss-linked-body-2091699?pfrom=home-topstories

பாஜகவினர் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக பியூஷ் மானுஷ் குற்றசாட்டு

3 months 1 week ago
சேலம்: சேலத்தில் பாஜகவினரால் தாக்கப்பட்டது குறித்து பியூஷ் மானுஷ் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவினர் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக பியூஷ் மானுஷ் குற்றசாட்டு கூறியுள்ளார். காஷ்மீர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் கேள்வி எழுப்ப பாஜக அலுவலகம் சென்றபோது தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521837 சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் சென்னை : சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வன்முறை அரசியலை செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வட மாநிலங்களை போல் தமிழகத்திலும் சமூக ஆர்வலர்களை பாஜக குறிவைக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521835

இராமேஸ்வரத்தில் 5வது நாளாக மீனவர்கள் போராட்டம்

3 months 1 week ago
இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உளர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 900க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளதாகவும், மீன்பிடி சார்பு நிறுவனங்கள் கூட்டப்பட்டு சுமார் 25 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர்கள் அறிவித்ததையடுத்து இன்று வட்டாச்சியர் ஜாபர், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மீன்வளத்துறை உதவி இயக்குனர், ராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாளை இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521809

யாசகம் பெற்றுவந்த மாவீரரின் தாய்க்கு உதவிய கரைச்சி பிரதேசசபை

3 months 1 week ago
கரைச்சி பரதேசசபைக்குட்டபட்ட இடங்களில் யாசகம் யாசகம் பெற்றுவருபவர்களை தடுத்து அவர்களின் வாழ்வாதரததை உயர்த்தி சாதாரண மக்களை போன்று வாழச்செய்யும் நோக்குடன் கரைச்சி பிரதேசசபை பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . அதன் முதற்கட்டமாக இன்று கிளிநொச்சி பகுதியில் யாசகம் பெற்றுவந்த மாவீரரின் தாய்க்கு வாழ்வாதாரத்தை உயர்த்த யாசகத்தை நிறுத்தி கடை அமைத்து கொடுத்து கடைக்கான சில பொருட்களும் கடையை கொண்டு நடத்துவதற்கான ஆரம்ப மூலதனமாக சிறு தொகைபணத்தை (10000 ரூபாய்) கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேலமாலிகிதன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் வசந்தராஜா ஜீவராஜா ஆகியோர் பரந்தன் பேரூந்துக்கு அருகாமையில் அமைத்து கொடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/63564

"அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே...!": காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம்

3 months 1 week ago
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி என்னும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவிலான காணி வளங்கள் அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். வனஜீவராசி திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே..!, அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே, இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு..! போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியவாறே மேற்படி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வாழைச்சேனை,வாகரை போன்ற இடங்களில் அரசபடையினர், அரசியல்வாதிகள்,இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் வழங்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டிருந்தமையும் கறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/63565

சாதிப்பது வெறி... சாதி இப்போது வெறி

3 months 1 week ago
சரியாகத்தான் கூறினீர்கள்.. அத்தோடு மனிதர்கள் எல்லோரும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருடைய குறிக்கோள்களும் வேறானவை என்பதையும் மதித்து நடந்தால் சரி..

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

3 months 1 week ago
உங்களிடம் ஒரு கேள்வி, எதற்காக இந்தியாவை, கிந்தியா என்று அழைக்கிறீர்கள்? இழிவுபடுத்தவா அல்லது இந்தியா ஒரு இந்துத்துவ நாடு இல்லை என்பதை பறைசாற்றவா? சும்மா, அறிந்துகொள்வதற்காகத் தான் கேட்கிறேன். அடுத்தாக, பி.ஜே. பியின் கிந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரஸின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் பி.ஜே பியின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? அப்படியிருந்தால், அது எவ்வகையில் எமக்கு சாதகமானதாக இருக்கப்போகிறது? ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தன்மையை பி.ஜே பி புரிந்துவைத்திருக்கிறதென்றால், காங்கிரஸ் அதுபுரியாமலா இவ்வளவு காலமும் எமது தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? காஷ்மீர் தொடர்பாக பி, ஜே பியின் அண்மைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரித்திருப்பதைப் பார்த்தேன். அதற்கான காரணம் வெறுமனே ஹிந்து - முஸ்லீம் பிரச்சினையில்லை என்றும், பாக்கிஸ்த்தான் - இந்தியா பிணக்கும் இல்லையென்று நான் எடுத்துக்கொள்ளலாமா? இவை இரண்டுமில்லையென்றால், நீங்கள் கிந்தியாவின் புதிய காஷ்மீர் நிலைப்பாட்டை ஆதரிக்கக் காரணம் என்ன? காஷ்மீர் தொடர்பான கிந்தியாவின் இப்புதிய நிலைப்பாடு எப்படி எமக்குச் சாதகமாக அமையப்போகிறதென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து இழக்கப்படுவது, ஈழத்தமிழர் நிலைப்பாட்டை இன்னும் பலவீனமாக்கி விடாதா? தனது மாகாணம் ஒன்றிற்கு சிறப்பு அந்தஸ்த்து ஒன்றை வழங்க மறுக்கும் அல்லது இருந்ததைப் பறித்தெடுக்கும் ஒரு அரசு, எப்படி இன்னொரு நாட்டின் சிறுபான்மையினத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து ஒன்றை வழங்கும்படி அந்நாட்டு அரசைக் கேட்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அப்படிக் கோருவதற்கான தார்மீக அந்தஸ்த்தை கிந்தியா காஷ்மீரில் இன்று செய்துள்ளதோடு முற்றாக இழந்துவிட்டதென்பது உங்களுக்குத் தெரிகிறதா? இவை எல்லாவற்றையும் விட, ஈழத்தமிழருக்கு நியாயமான தீர்வொன்றைத் தர வேறொரு காரணம் பி.ஜே. பியின் கிந்தியாவுக்கு இருக்கிறதென்றால், அதை நீங்கள் எழுதவேண்டுமெ என்பது எனது அவா. ஒருவேளை. நாங்கள் எல்லோரும் பார்க்கும் கோணத்தைவிட, இன்னொரு கோணத்திலிருந்து நீங்கள் அதைப் பார்க்கலாம் என்பதனால் கேட்கிறேன். புரட்சி, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் உண்மையாகவே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஆட்சிகள் மாறும்போது மாற்றப்படுகிறதென்று நம்புகிறீர்களா? அப்படி மாறுகிறதென்றால், பி.ஜே. பியின் ஆட்சியினால் எமக்குக் கிடைத்திருக்கும் நண்மைகள் பற்றிச் சொல்லுங்களேன்? உங்களின்மாநிலமே அவர்களை முற்றாக நிராகரித்திருக்கும்போது, நீங்கள் ஆட்சிமாற்றம் எமக்கு நண்மையாக இருக்கும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது.
Checked
Mon, 12/09/2019 - 05:08
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed