புதிய பதிவுகள்

இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?

3 months 2 weeks ago
இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images (இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது.) இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளை சஹ்ரான் ஹாஷ்மி என்ற இஸ்லாமியரே நடத்தியதாகவும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தபோது பலருக்கும் கோபத்தைவிட அதிர்ச்சியும் ஆச்சரியமுமே ஏற்பட்டன. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலும் இஸ்லாமியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகளும் மோதல்களும் இருந்திருக்கின்றன. ஆனால், சமீபகால வரலாற்றில் ஒருபோதும் கிறிஸ்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் அவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டது கிறிஸ்தவர்களை எப்படி அதிர்ச்சிக்குள்ளாக்கியதோ, அதேபோல, இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தின் வாசலிலும் இந்த தாக்குதலுக்குக் கண்டனமும் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்ற வாசகங்களும் இடம்பெற்ற பதாகைகள் தொங்கவிடப்பட்டன. வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. பல இடங்களில் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. கிழக்கிலங்கையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடியும் இதற்கு விதிவிலக்கில்லை. அங்குள்ள மௌலவிகளில் துவங்கி, சாதாரண குடிமக்கள்வரை சந்தித்த ஒருவர்கூட இந்தத் தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. வெட்கத்தையும் கடுமையான வருத்தத்தையுமே தெரிவித்தனர். இந்தத் தாக்குதலின் மையமாக இருந்த சஹ்ரான் ஹாஷ்மி காத்தான்குடியைச் சேர்ந்தவர். தங்களுக்கு தீர்க்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருப்பதாகவே அங்கிருக்கும் பலரும் கருதினார்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது இந்த சம்பவத்தை அடுத்து சர்வதேச கவனம் திரும்பியிருக்கிறது. பிற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் இந்த சம்பவங்களும் இணைத்துப் பேசப்பட்டன. ஆனால், இப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மத அடையாளம் சார்ந்த, தனித்துவம்மிக்க ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். 2012ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையில் 19,67,523 இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 9.66 சதவீதம். இலங்கையிலேயே அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக மக்கள் தொகையில், 43 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். திருகோணமலையில் 42 சதவீதம் பேரும் மட்டக்களப்பில் 26 சதவீதம் பேரும் உள்ளனர். இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் இலங்கைச் சோனகர்கள் எனப்படும் (Sri Lankan Moors) தமிழ் பேசும் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக (90%) உள்ளனர். இவர்களைத் தவிர, மலேய முஸ்லிம்கள், போரா முஸ்லிம்கள், மேமன்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் மிகச் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். மொத்தமுள்ள சுமார் 19 லட்சத்து 60 ஆயிரம் இஸ்லாமியர்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே வசிக்கிறார்கள். அதாவது இஸ்லாமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வட-கிழக்கிலும் மீதமுள்ளவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் பரவிவசிக்கிறார்கள். "இஸ்லாமியர்கள் இலங்கையில் எந்தப் பகுதியில் வசிக்கிறார்களோ, அந்தப் பகுதியின் கலாசாரத் தாக்கம் அவர்கள் மீது உண்டு. கிழக்குப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் தமிழர்களிடம் உள்ள (இந்துக்கள்) சீதனம் கொடுப்பது, தாலி அணிவிப்பது போன்ற பழங்கங்கள் இங்கும் சில இடங்களில் உண்டு. வட - கிழக்கிற்கு அப்பால் உள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிங்கள மக்களின் கலாசாரத் தாக்கத்தை கொண்டவர்கள்" என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை தலைவரான டாக்டர் ரமீஸ் அபூபக்கர். ஆனால், இங்கு வசிக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் அனைவருமே தங்களை தங்களுடைய மதம் சார்ந்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய இனம் என்பது மதத்தின் அடிப்படையில் அமைந்ததே தவிர, மொழியின் அடிப்படையில் அமைந்ததல்ல எனக் கருதுகின்றனர். "இலங்கையில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினரால், பிற மதத்தவரால் ஒதுக்கப்பட்டபோது அந்த சவால்களை முறியடித்து முன்னேற அவர்களது மார்க்கம் ஒரு அரசியல் பலமாக இருந்தது. ஒரு இனக்குழுவுக்கு தங்களது அடையாளம் எதன் அடிப்படையில் அமைந்தது என்பதை தீர்மானித்துக்கொள்ள உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்களை மதத்தின் அடிப்படையில் தனி இனக்குழுவாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சமீபத்தில்கூட இஸ்லாமியர்களுக்கு எதிராக கடும்போக்கு பவுத்தர்கள் அணிதிரண்டு போராட்டங்கள், பிரசாரங்களைச் செய்தனர். அந்தத் தருணத்தில் மதம்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஆகவே முஸ்லிம்கள் தங்கள் மதத்தை அடிப்படையாக வைத்தே தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்" என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியரான ரமீஸ் அப்துல்லா. எங்கே துவங்கியது அடையாளப்படுத்துதல்? இலங்கையில் வசிக்கும் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அல்லாமல் முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும்போக்கு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் துவங்கியது என்கிறார் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான எம்.ஏ. நுஹ்மான். இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின்போது சட்டமியற்றும் அவையில் இனரீதியான பிரதிநிதித்துவத்தை வழங்கும் முயற்சிகள் துவங்கின. அந்த காலகட்டத்தில் மிக முக்கியமான தலைவராக இருந்துவந்த தமிழரான சர். பொன்னம்பலம் ராமநாதன், அந்தத் தருணத்தில் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் இலங்கைக் கிளையில் உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரையில் 'இஸ்லாமியர்களும் தமிழர்களே; அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை' எனக் கூறினார். "அந்தத் தருணத்தில் அவர் அவ்வாறு கூறியது இஸ்லாமியர்களின் தனித்த அடையாளத்திற்கான ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. அவர்கள் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து வேறுபட்ட ஒரு அடையாளத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர்" என்கிறார் நுஹ்மான். இது இயல்பானது எனக்கூறும் நுஹ்மான், மலையகத் தமிழர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்; பேசும் மொழிதான் அடையாளம் என்றால் அவர்களும் தமிழர்கள் என்ற வரையறைக்குள் வரவேண்டுமே; அப்படியல்லாமல் மலையகத் தமிழர்கள் என்றுதானே குறிக்கப்படுகிறார்கள். அதுபோலத்தான் இஸ்லாமியர்களும் என்கிறார் நுஹ்மான். ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுகிறார் காத்தான்குடியில் வசிக்கும் மூத்த ஊடகவியலாளரான புவி ரஹ்மத்துல்லா. "இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தையும் வலியுறுத்த வேண்டும் என்பதை நான் பல நாட்களாகவே கூறிவருகிறேன். இரு பிரிவினரை அடையாளப்படுத்தும்போது ஒரு தரப்பினரை மொழி அடிப்படையிலும் ஒரு தரப்பினரை மத அடிப்படையிலும் குறிப்பிடுவது சரியானதல்ல" என்கிறார் புவி ரஹ்மத்துல்லா. தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்களை விரோதமாகப் பார்க்கும் போக்கு துவங்கியபோது, அவர்களிடமும் தான் இதை வலியுறுத்தியதாகச் சொல்கிறார் அவர். ஆனால், இந்த வாதங்களையெல்லாம் தாண்டி, வட - கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மதம் என்ற அடையாளத்தையும் தேசம் என்ற அடையாளத்தையுமே வலியுறுத்துகின்றனர். மொழி என்ற அடையாளத்தை வலியுறுத்துவதில்லை. "மொழிரீதியான அடையாளத்தை இஸ்லாமியர்கள் மீது திணிக்கத் திணிக்க அவர்கள் மத ரீதியான அடையாளங்களைக் கடுமையாகப் பின்பற்ற ஆரம்பித்தனர். இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மத அடையாளங்களை தீவிரமாக பேணுவதற்கு இதுவும் ஒரு காரணம்" என்கிறார் ரமீஸ் அப்துல்லா. இந்த அடையாளத்துடன்தான் அவர்கள் தங்கள் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களை பின்பற்ற ஆரம்பித்தனர் என்கிறார் அவர். இந்த அடையாளத்துடன்தான் அவர்கள், இலங்கையின் பிற சமூகங்களான சிங்களர்களுடனும் தமிழர்களுடனும் தங்கள் உறவுகளை கட்டமைக்கத் துவங்கினர். (இத் தொடரின் அடுத்த பகுதி நாளை புதன்கிழமை வெளியாகும்.) https://www.bbc.com/tamil/sri-lanka-48175737

கைதான யாழ் பல்கலை மாணவர்கள், சிற்றுண்டி சாலை நடத்துனரரை விடுவிக்க இணக்கம்

3 months 2 weeks ago
May 10, 2019 கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று (10.05.19) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ் ,யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர். ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளது. #Jaffnauniversitystudent #arrested #eastersundayattackslk http://globaltamilnews.net/2019/121297/

இஸ்லாமியத் தீவிரவாதம்: நாகரிகங்களுக்கிடையிலான மோதலா? நாகரிகத்துக்குள்ளான மோதலா?

3 months 2 weeks ago
விதுர பிரபாத் முணசிங்க – கௌஷல்யா ஆரியரத்ன முன்னுரை நாம் இன்னும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருக்கின்றோம்.3 மனிதர்கள் என்ற வகையில் அழிவுகளின்போது உணர்ச்சிவசப்படுவது இயல்பானதொரு விடயமாக இருக்கின்றபோதிலும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற உடனடி எதிர்ச்செயற்பாடுகள் எமக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது நன்மையான பெறுபேறுகள் அல்ல என்பதற்கு எமது அண்மைக்கால வரலாறு சான்று பகர்கின்றது. சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான பத்தாண்டுகள், 1983 இல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடுமளவுக்குப் போதுமானதல்ல. உணர்ச்சிவசப்பட்டுத் தேடும் பதில்களைவிட ஆழமாகச் சிந்திப்பதனைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்ததும் அவ்வாறு புறக்கணித்துக்கொண்டு இருக்கின்றதுமான ஒரு சமூகத்துக்கு இச்சந்தர்ப்பத்தில் நாம் அதிகளவில் ஈர்க்கப்படாத அக்கடினமான செயற்பாட்டினையே முன்மொழிகின்றோம். அறிமுகம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்கான பொறுப்பை ISIS அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ISIS என்று நாம் கண்டது, மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படுத்தப்பட்ட, பல்வேறு மேற்கு மற்றும் ஆபிரிக்க வலய நாடுகளில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாத அமைப்பினையேயாகும். பிற்காலங்களில் ஈராக் மற்றும் சிரியா போன்ற சில மத்திய கிழக்குநாடுகளில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் கேள்விப்பட நேர்ந்த செய்திகள் எம்மை கதிகலங்கச் செய்தன. அவற்றின் சில வீடியோக்களில் காட்டப்பட்டுள்ள விடயங்கள், நாம் நாகரிகம் என்று நம்புகின்ற பல சித்தாந்தங்களைச் சவாலுக்குட்படுத்துகின்றன. ஒரு சமயத்தில், அவர்களது பிடியில் சிக்கிய பாரியளவு ஆண்களை வரிசையாக நிற்கச்செய்து கழுத்தை வெட்டிக் கொலை செய்வதனை நாம் காண்கிறோம். மற்றுமொரு செய்தியில் அவர்களது பிடியிலிருந்து தப்பியோடிவந்த ஒரு பெண்பிள்ளை அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் பாலியல் அடிமைகளாக ஆக்கப்படுகின்ற விதத்தினை விபரிக்கின்றது. இணையத்தளத்தினூடாக வலம் வருகின்ற மற்றுமொரு வீடியோவில் ஈராக்கின் மொசூல் நகரில் பண்டைய இடிபாடுகள் மற்றும் கலைப்படைப்புக்கள் என்பன அவர்களது பளுவான சம்மட்டித் தாக்குதலின் மூலம் இடிந்து விழுகின்றமையைக் காணலாம். இவையனைத்தும் நாங்கள் நாகரிகம் என்று கருதக்கூடிய நியமங்களுக்கு அப்பாற்பட்டதும் எம்மால் பொருண்மைக்குள் உள்ளடக்க முடியாததுமான செயற்பாடுகளாகும். 21ஆம் திகதி முதன்முறையாக இலங்கையில் நாமும் அத்தகையதோர் அனுபவத்திற்கு முகங்கொடுத்தோம். எந்தவழியில் சிந்திக்கின்றபோதிலும் எதற்காகச் செய்யப்பட்டது என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு காரணத்துக்காக அப்பாவிப் பெண்கள், மனிதர்கள், குழந்தைகள் கொலை செய்யப்பட்டமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அன்று நாம் தொலைக்காட்சித் திரைகளில் கண்ட அத்தகைய மிலேச்சத்தனம் இன்று எமது அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டது. உண்மையில் எமது வாழ்வின் அடிப்படையாக விளங்குவதாக எம்மால் நம்பப்படுகின்ற தார்மீகக் கோட்பாடுகள் இத்தனை இழிவான முறையில் மீறப்படுகின்றதோர் உலகம் எம் மத்தியில் தோற்றம் பெற்றுக்கொண்டிருப்பது எவ்வாறு? இதனை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? இக்கேள்விக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரபல்யம் வாய்ந்ததும் எளிமையானதுமான ஒரு பதில் உள்ளது. அது யாதெனில், நாம் வாழ்கின்ற நாகரிகத்தைவிட வேறுபட்டதொரு கோட்பாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்ட நாகரிகமடைந்த ஒரு குழுவினுடைய செயற்பாடுகள் என்பதாகும். உண்மையில் இது ஆறுதலளிக்கக்கூடியதொரு பதிலாகும். அவர்கள் நம்மைப் போன்றவர்களல்லர் என்பதைத் தெரிந்துகொள்வதே சிறந்ததோர் ஆறுதலாகும். இன்னொரு வகையில் அந்த இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில் எங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கு அதன் மூலம் வழி ஏற்படுகின்றது. இப்போது எமது முஸ்லிம் அயலவர்கள் அந்த வெளிநாட்டு நாகரிகத்தின் பங்காளியாக மாறுகின்றனர். தற்போது அவர்களது ஆடை அணிகலன்கள், நடைப்பாங்குகள், வாழ்வியல் முறைமைகள், சடங்கு விதிகள் ஆகிய அனைத்தும் எம்முடையதல்லாத நாகரிகமாக, அதாவது அநாகரிகமாகக் கருதி நீக்கப்பட்டு வருகின்றது. ‘அடுத்த ஜென்மத்தில் மிருகமாகப்பிறப்பினும் பரவாயில்லை முஸ்லிமாக மட்டும் பிறந்து விட வேண்டாம்.’ என்று கூறப்பட்ட போஸ்ட் ஒன்று முகப்புத்தகத்தில் பிரபலமாக வலம் வந்துகொண்டிருந்தது. தற்போது முஸ்லிமல்லாத முகப்புத்தக சமுதாயத்தின் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளவாறு, முஸ்லிம்கள் தமது பிள்ளைகளுடன் தம்மை வெடிக்கச்செய்துகொள்வது மரணத்துக்குப் பின்னர் சுவனத்தில் எழுபத்திரெண்டு கன்னியர்களுடன் பாலியல் இன்பம் அனுபவிக்கும் நோக்கத்திலாகும். ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் எமக்கு மறந்துபோயுள்ள விடயம் யாதெனில், இந்த முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது சமூகத்தில் எம்முள் வாழ்ந்தவர்கள் என்பதாகும். அக்காலத்தில் அவர்கள் தொடர்பில் இவ்வாறானதொரு சிக்கல் எங்களுக்குக் காணப்படவில்லை. திடீரென அவர்கள் எமது நாகரிகத்திலிருந்து தூரமாகியவர்களாக மாறியது எவ்வாறு? அவ்வாறெனின் நாம் பல நூற்றாண்டுகளாக அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தது எவ்வாறு? அவ்வாறின்றேல் இந்தக் கதை புதிதாகத் தோன்றியதா? அவ்வாறாயின் அக்கதை யாருடைய தயாரிப்பு? அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் தேவைப்பாடுகள் மற்றும் வரலாற்று நிலைமைகள் என்ன? அத்தகைய கதைகளை வரவேற்பதனூடாக நாம் அடைந்துகொள்ளும் நன்மைகள்ஃ தீமைகள் எவை? அது யாரேனும் ஒருவரால் உருவாக்கப்பட்டதொரு கதையாக இருப்பின் 21ஆம் திகதி உண்மையில் நிகழ்ந்தது என்ன? அவர்கள் உண்மையில் நாகரிகம் என்ற வகையில் நிலையான உலகில் யாரேனும் ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாத மிலேச்சத்தனமான செயற்பாட்டில் ஈடுபடவில்லையா? மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகளை எழுப்புகின்ற கருத்தாடல் ஒன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். இந்த அதிர்ச்சிகரமான சந்தர்ப்பத்தில் அவ்வாறானதொன்றைச் சிந்திப்பதுகூட சங்கடமாக உள்ளது. இருப்பினும், எம்மூடாக அவ்வாறானதொரு கருத்தாடல் துவங்கப்படவேண்டியிருப்பது எம் முன்னிலையில் வெளிக்கொணரப்படவிருக்கும் புதிய யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கு அக்கருத்தாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதனாலாகும். எனவே, சிரமத்துடனேனும் இச்சந்தர்ப்பத்தில் தூரமானதாகக் கருதப்படும் குறுகிய கலந்துரையாடல் ஒன்றினூடாக இக்கருத்தாடலை ஆரம்பிப்போம். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான கருத்து முதன்முறையாக 1993 காலப்பகுதியில் சாமுவேல் ஹங்டிங்டன் என்பவரால் ‘Foreign Affairs’ என்ற இதழுக்காக எமுதப்பட்ட“The Clash of Civilization” என்ற ஆக்கத்திலேயே முன்வைக்கப்பட்டது. பின்னர், அவரால் அவ்வாக்கம் புத்தகமாக மெருகூட்டப்பட்டு 1996 இல் வெளியிடப்பட்டது. ‘உலக அரசியல் புதியதொரு கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது’ என்று கூறியே அவர் தனது ஆக்கத்தை ஆரம்பிக்கின்றார். அவரால் இந்த வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது பனிப்போர் முடிவுக்கு வந்த சந்தர்ப்பமொன்றிலாகும். 1991 இல் அவருடைய மாணவராகவிருந்த பிரான்சிஸ் புகுயாமா தனது The End of History and The Last Man என்ற நூலைப் பிரசுரித்ததன் மூலம் வரலாறு நிறைவுபெற்றுள்ளதாகக் கருத்து வெளிப்படுத்தியுள்ளார். பனிப்போர் இடம் பெற்ற காலப்பகுதியில் உலகத்தில் மோதலானது கருத்தியல் ரீதியிலான இரு வேறுபட்ட தலைமையகங்களுக்கிடைலேயே இடம்பெற்றது. ஹங்டிங்டன் தனது நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையினை முன்வைப்பது இந்த மோதல் நிறைவு பெற்றதொரு சந்தர்ப்பத்திலாகும். அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ‘இந்த நவீன உலகில் மோதலினுடைய தோற்றுவாய் கருத்தியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பது எனது கருதுகோளாகும். (இந்த யுகத்தில்) மனித இனத்துக்கிடையில் சக்தி வாய்ந்ததொரு பிரிவினையை ஏற்படுத்துவதும் மோதல்களுக்கான பிரதான மூலகாரணியாக விளங்குவதும் கலாசாரமாகும்…. நாகரீகங்களுக்கிடையிலான மோதல் உலக அரசியலில் முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.’ (ஹங்டிங்டன் 1993: 22) அவர் உலகத்தை ஒன்பது நாகரிகங்களாகப் பிரித்துக் காட்டியுள்ளார்.4 மேற்குலக- பழைமைவாத- இஸ்லாமிய- ஆபிரிக்க- லத்தீன் அமெரிக்க- சீன- இந்து- பௌத்த- ஜப்பானிய நாகரிகங்களே அவை. பிரதானமான அரசியல் மோதல் தோற்றம் பெறுவது மேற்குலக மற்றும் மேற்குலகல்லாத நாகரிகங்களுக்கிடையிலேயே என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இஸ்லாமிய நாகரிகத்தை ஏனைய நாகரிகங்களைவிட எதிர்மறையானதொரு மனப்பாங்குடன் கலந்துரையாடுகின்றார். அவரது முன்வைப்பின்படி மேலைத்தேயம் தனியானதொரு நாகரிகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, கனடா, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா மற்றும் ஓசனியா ஆகியன மேலைத்தேய நாகரிகத்துக்குட்பட்ட நாடுகளாகும். இந்த நாகரிகம் கிறிஸ்தவம், அறிவொளிக்காலம், கைத்தொழில்மயமாக்கம் மற்றும் நவீனமயமாக்கம் என்பவற்றினூடாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த மேலைத்தேய நாகரிகத்துக்கு முழுமையாக மாற்றமான நாகரிகமாக இஸ்லாமிய நாகரிகத்தை அவர்கள் நோக்குகின்றனர். பேர்னாட் லெவிஸ் என்பவருக்கேற்ப ஹங்டிங்டன் கருதுவதாவது அடுத்துவருகின்ற உலக ஒழுங்குக்கான போர் ஏற்பட்டிருப்பது மேலைத்தேய நாகரிகம் மற்றும் இஸ்லாமிய நாகரிகம் என்பவற்றுக்கிடையிலாகும். இந்த மோதலை சிலுவைப்போர் காலகட்டம் வரையில் பரவலடைந்த 1300 வருடங்களுக்கு மேற்பட்ட காலங்கள் பழைமை வாய்ந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். ‘இது நாகரிகங்களுக்கிடையிலான மோதலன்றி வேறெதுவுமில்லை… இது யாதெனில் எமது பண்டைய போட்டித்தன்மையான யூத-கிறிஸ்தவப் பாரம்பரியத்துக்கும், எமது மதச்சார்பற்ற நிகழ்காலத்திற்கும், அத்துடன் அவையிரண்டினதும் உலக பரிமாணப் பரவலுக்கும் எதிரான எதிர்வினையாகும்.’ (லெவிஸ் 1992: 28) இங்கு உருப்பெறுகின்ற ஆய்வுக் கட்டுரைக்கேற்ப மேலைத்தேய நாடுகள் அனைத்தும் இத்தகைய கிறிஸ்தவ கடந்தகாலப் பாரம்பரியம், நவீனத்துவம், அறிவொளிக்காலம், கைத்தொழில் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. நாகரிகங்களுக்கிடையில் கடுமையான மோதல் ஏற்படுவது அதன் குணாம்சங்களைத் தாங்கியுள்ளவரும் அதன் பாதுகாவலருமாகிய மேலைத்தேய மற்றும் இஸ்லாமிய நாகரிகங்களுக்கிடையிலெனின் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் மேலைத்தேய நாடுகள் கொண்டுள்ள மேலைத்தேயப் பெறுமதிக்கு எதிரான கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதும் நிலை ஏற்படுகின்றது. இந்த ஆய்வுக்கட்டுரைக்கேற்ப தமது நம்பிக்கைக்கு ஒத்துப்போகாதவர்களை கீழ்த்தரமான முறையில் கொலை செய்தல், தமது சமயத்தின் குறிக்கோளுக்குப் புறம்பான கலைப்படைப்புக்கள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களை அழித்தல் ஆகிய செயற்பாடுகளை நாகரிகங்களுக்கிடையிலான மோதல் என்ற கருத்துருவாக்கத்தில் அமைத்துக்கொள்ள முடியும். ஆயினும் இந்தக் கருத்துருவாக்கத்தில் காணப்படுகின்ற அரசியல் நம்மால் புறக்கணிக்கப்படக் கூடாது. முடிவுறாத பனிப்போர் ஹங்டிங்டனுடைய ஆய்வுக்கட்டுரை பனிப்போருடைய நிறைவுடன் கட்டியெழுப்பப்படுகின்ற நவீன உலக அரசியலுக்குள்ளான மோதல்களின் இயல்பு எத்தகையதாகவிருக்கும் என்ற பிரச்சினைக்குப் பல்வேறுபட்ட நபர்களால் வழங்கப்பட்ட பதில்களை உள்ளடக்குகின்றது. இது முடிவுறாதவொரு பனிப்போரை நம்பியதொரு உலகத்தினால் அதனைத் தொடரும் வகையில் அதேபோன்று முடிவுறாத இன்னுமொரு மோதல் தொடர்பான கருத்துருவாக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகும். எட்வட் சய்த் என்பவரின் கருத்தின்படி அது கருத்தியல் சார்ந்த யுத்தத்தின் முடிவில் மேற்குலகினால் பனிப்போர் முழுவதிலும் பராமரிக்கப்பட்ட மேற்கத்தேய மீயுயர் தன்மையை மீண்டும் வேறுபட்டதொரு முறையில் நிலைநிறுத்தும் பொருட்டு வித்தியாசமானதொரு மோதலை மீளுருவாக்கம் செய்வதாகும்.5 இதன் மூலம் மீண்டும் மேற்கத்தேய மீயுயர் தன்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதுடன், மேலைத்தேய அரசியல் செயற்பாடுகளை நியாயத்துவப்படுத்தவதற்கான வாய்ப்பும் மீண்டுமொரு முறை கிட்டுகின்றது. ஹங்டிங்டனுடைய ஆய்வுக்கட்டுரையின் முடிவில் அவரால் மேற்கத்தேய மீயுயர் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் மேலைத்தேயத்தினால் பின்பற்றப்படவேண்டிய அரசியல்சார் வியூகங்கள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதானது அதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. ‘….அவர்களும் சுயாதீன சம்பிரதாய பண்பாடுகள் மற்றும் விழுமியங்களுடன் நவீனத்துவத்தை இணைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். மேற்குலகுக்கு ஒப்பான வகையில் அவர்களது பொருளாதார மற்றும் இராணுவ இயலுமைகள் விருத்தியடைந்துள்ளன. அதனால் சுயாதீனமான அதிகாரச் செயற்றிட்டங்கள் மேலைத்தேயத்துடன் ஒத்துப்போயுள்ளதாக அமைகின்றன. இருப்பினும், அதன் பெறுமானங்கள் மேற்குலகைவிட பாரியளவு மாற்றங்களைக்கொண்டதும் மேற்கத்தேயமல்லாததுமான நவீன நாகரிகங்களுடன் மேற்குலகு இணைந்து செயலாற்றவேண்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நாகரிகங்கள் தொடர்பில் தமது விருப்பங்களை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு மேற்குலகினால் அவர்களது பொருளாதார மற்றும் இராணுவப் பலத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கின்றது.’ (ஹங்டிங்டன் 1993:49) எட்வர்ட் சய்த்தின் கருத்துக்கேற்ப, இங்கு பரிந்துரை செய்யப்படுவது வேரொரு வகையில் பனிப்போரை மீண்டும் கொண்டு நடாத்துவதாகும். அதனூடாகப் பனிப்போர் காலத்தில்போன்று மேற்குலகினரால் மேற்கொள்ளப்படுகின்ற சகல தலையீடுகள், அழுத்தங்கள் மற்றும் நன்மைகளில் பாதுகாவலனாக நிற்றல் என்பனவற்றில் மேற்கத்தேயம் முன்னிற்பது நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஹங்டிங்டன் கருத்தாக்கம் செய்கின்ற மேற்குலகம் மற்றும் உண்மையிலேயே நிலைபெற்றுள்ள மேற்குலகம் ஆகிய இரண்டுக்குமிடையில் பாரிய இடைவெளியொன்று காணப்படுகின்றது. இவர் மேற்கத்தேய நாகரிகத்துக்குரியதாகக் கருதுகின்ற புவிசார் அரசியல் அலகுகளுக்குள் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய அளவுக்கு இஸ்லாமியப் பண்பாடு உள்ளடங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக அவரால் மேற்கத்தேயம் மற்றும் மத்திய ஐரோப்பா ஆகியன மேற்கத்தேய நாகரிகத்துக்குரிய பிராந்தியமாக வகைப்படுத்தப்படும்போது ஜேர்மனில் உள்ள பாரியளவு துருக்கி மற்றும் பாகிஸ்தான் குடித்தொகை, பிரான்சில் உள்ள அதிகளவு வடஆபிரிக்கக் குடித்தொகை, சுவீடன் அல்லது சுவிட்ஸர்லாந்தில் முஸ்லிம் குடித்தொகை என்பன புறக்கணிக்கப்படுகின்றன. இன்னொரு வகையில் முதிர்ச்சியடைந்த, நவீன, கிறிஸ்தவ நாகரிகத்தின் கேந்திர மையத்தில் அமைந்துள்ள நாடுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள நாகரிகத்துக்கு எவ்வகையிலும் பொருந்தாத செயற்பாடுகளை அவர் புறக்கணிக்கின்றார். இது பற்றிப்பேசியுள்ள தலால் அஸாத் கூறுவது யாதெனில், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியை உள்ளடக்குதல் தொடர்பான கருத்தாடலில் முன்வைக்கப்பட்ட வாதமே ஐரோப்பிய நாடுகள் தொடர்பில் உள்ளடக்கப்படமாட்டாது என்பதாகும். அதாவது அதன் வேர்கள் ஆசியாவுடையதாக அமைந்துள்ள துருக்கியினரை ஐரோப்பாவுக்குள் உள்ளடக்குவதனூடாக ஐரோப்பிய நிலை குலைக்கப்படும் என்று கூறப்படுகின்றபோது இரண்டாவது உலகமகா யுத்தத்தில் பாரிய இனப்படுகொலைகளை மேற்கொண்ட நாசி கட்சியினுடைய நாடாகிய ஜேர்மனி ஐரோப்பாவுக்குள் அமைந்துள்ளமை அதன் ஐரோப்பிய நிலைக்கு சிக்கலாகக் கருதப்படுவதில்லை என்பதாகும். (அஸாத் 2003: 161- 162). இன்னொரு வகையில் நாசி கட்சியினரூடாக பாரிய யூத இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது அது ஆரிய மற்றும் யூத நாகரிகங்களுக்கிடையிலான மோதலாக எவராலும் வடிவமைக்கப்படவில்லை. மேற்கத்தேய நாகரிகத்துக்குள்ளான மோதல், நவீனத்துவ மோதல், மேன்மைத்துவத்துக்கான மோதல் என்னும் வகைகளிலேயே அது புரி;ந்துகொள்ளப்பட்டது. அவர்களது ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்குக் காலனித்துவங்களின்போது மேற்கத்தேய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனிதப் படுகொலைகள் அவர்களை மேற்கத்தேய நாகரிகத்துக்குள் உள்வாங்குவதற்கு சிக்கலாக இருக்கவில்லை. ஆயினும், துருக்கி, ஆர்மேனியாவில் மேற்கொண்ட படுகொலைகள் அவர்களை ஐரோப்பாவுக்குள் உள்வாங்கும்போது அவர்களது ஐரோப்பிய நிலையினைக் கேள்விக்குறியாக்குகின்ற ஒரு காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனூடாகத் தென்படுகின்ற விடயம் யாதெனில், இந்த மேற்குலகினை, முஸ்லிம் அல்லது ஏனைய நாகரிகங்களிலிருந்து பாகுபடுத்தி முன்வைத்தல் தெளிவான அரசியல் பாகுபாடுகளாகும் என்பதாகும். வகுப்பாக்கம் என்பது அப்பாவித்தனமானதல்ல நாம் நன்கு அறிந்துள்ளவாறு ஹங்டிங்டன், நாகரிகமென மாறாநிலை உருப்படிவத்திலான வகுப்பாக்கத்தை மேற்கொண்டுள்ள பிராந்தியங்களில் எத்தனையோ பன்மைத்துவங்கள், சிக்கல் தன்மைகள் மற்றும் பிரிவுகள் நிலவுகின்றன. பேர்லின் பிரதேசத்தில், டர்பன் அல்லது ஒஸ்லோ பிரதேசத்தில் பாரியளவில் மக்கள் பங்களிப்புடன் நடாத்தப்படுகின்ற இந்து மற்றும் இஸ்லாம் சமய வைபவங்கள் மற்றும் ஊர்வலங்கள் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது? மேற்குலக நாகரிகத்துக்கு உரித்தானதாகக் கூறப்படுகின்ற மத்திய ஐரோப்பிய நாடுகள் (ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து மற்றும் குரோஷியா) அந்த நாடுகளில் ஐரோப்பிய நிலையினைக் கேள்விக்குறியாக்கி செயல்படுத்தியிருப்பது பண்பாட்டுக் காரணமொன்றின் பேரிலா? முற்றுமுழுதாக இஸ்லாத்தில் அதிகளவு ஆன்மீக அறிவு கொண்ட வடிவமைப்பாகிய சூபி இஸ்லாம் இன்று மேற்கத்தேயர்களினால் மாறாநிலை உருப்படிவத்திலான இஸ்லாத்தினைவிட பௌத்த மெய்யியலுடன் நெருக்கமானது என்று ஒருவரால் விவாதிக்க முடியாதா? எம்மைப் பற்றியே ஹங்டிங்டனுடைய வகுப்பாக்கத்திலிருந்து எடுத்துக்காட்டொன்றை எடுப்போமாயின் அது எவ்வளவு யதார்த்தமற்றது என்பதனை அது பிரதிபலிக்கின்றது. அவர் பௌத்த நாகரிகம் என்ற வகுப்பாக்கத்திற்குள்ளேயே இலங்கையை வைத்து நோக்குகின்றார். அவர் இதற்குள் உள்ளடக்குகின்ற ஏனைய நாடுகளாவன பூட்டான், காம்போடியா, மியன்மார், மொங்கோலியா மற்றும் தாய்லாந்து ஆகியனவாகும். ஒரு வகையில் இலங்கை இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருப்பதுடன் இன்னொரு வகையில் மேற்குலகுடன் மிகவும் நெருக்கமாகவும் உள்ளது. அது மொங்கோலியாவுடன் அல்லது பூட்டானுடன் பரிமாறிக்கொள்கின்ற பண்பாடுசார் பொதுத் தன்மையொன்று காணப்படுமாயின், அது குறைந்தளவிலான காரணங்கள் தொடர்பானதாக மாத்திரமே இருக்க முடியும். அதனடிப்படையில் இஸ்லாம் வேறுபட்டதொரு நாகரிகமாக மாறாநிலை உருப்படிவத்தில் மேற்குலகுடன் நாகரிக மோதலொன்றில் ஈடுபடுவதாக உருவமைக்கப்படுகின்ற ஆய்வுக்கட்டுரை எவ்வளவு பலவீனமானதொன்று என்பது தெளிவாகின்றது. அது மேற்குலக அறிவியல் கருத்தாடல்களில் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு மேற்கத்தேய வெகுசன ஊடகமும் நேரடியாக நிகழ்காலISIS அல்லது வேறொரு இஸ்லாமியத் தீவிரவாதமொன்றை நாகரிகங்களுக்கிடையிலான மோதலொன்றாக வெளிப்படையாக வெளிப்படுத்த மாட்டார்கள். ஆயினும் ஹங்டிங்டன் என்பவர் ஐக்கிய அமெரிக்கக் குடியரசினுடைய அரச திணைக்கள ஆலோசகராவார். அவர் வியட்னாம் யுத்தத்திலும், பனிப்போர் காலம் மற்றும் பனிப்போருக்குப் பிந்திய காலத்திலும் அரச திணைக்களத்துக்கான மூலோபாய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான அவரது கருத்துருவாக்கமானது முதன்முறையாக அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய Foreign Affairs என்ற சஞ்சிகையிலேயே பிரசுரிக்கப்பட்டது. இதன்படி ஹங்டிங்டனுடைய சிந்தனைகள் நடைமுறையில் எந்தளவுக்குச் செல்வாக்குப் பெறுகின்றன என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஹங்டிங்டனுடைய நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான எண்ணக்கரு கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு பலவீனமடைந்துள்ளபோதிலும் அதிகார அரசியலுக்குள் அது மென்மேலும் வலுப்பெற்றதொரு கருத்தியலாகக் காணப்படுகின்றது. நடுநிலையானவை என்று கருதப்படுகின்ற மேலைத்தேய வெகுசன ஊடகங்கள்கூட அதனைத் தமது பயன்பாட்டினுள் வெளிப்படுத்தாது அந்த மனப்பாங்குகளைப் பிரதிபலிக்கின்றன. இன்னொரு வகையில் அதனை நாகரிக மோதலாகப் பிரதிபலிப்பதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளும் ஆவலாக உள்ளனர். அது, இந்த இஸ்லாமிய நாகரிகம் என்ற மாறாநிலை உருப்படிவத்தினுள் பாரியதொரு பன்மைத்துவம் மற்றும் உள்ளக முரண்பாடுகளுடன் காணப்படுகின்ற இஸ்லாமிய உலகின் ஏக பிரதிநிதியாகத் தங்களைப் பிரதிபலிப்பதற்கு அதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகின்றமையினாலாகும். இலங்கையிலும் மேற்கத்தேய எதிர்ப்புவாத அரசியல் சிந்தனைகளைத் தாங்கியுள்ள அதிகளவானோர் இந்த மேற்கத்தேய மூலோபாயக் கருத்தாக்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர். முரண்பாடான வகையில் அவர்களும் நவீனத்துக்கு விரோதமான, அறிவுஞானத்துக்கு விரோதமான மற்றும் மதச் சார்பின்மைக்கு விரோதமான (கழுத்தை வெட்டுகின்ற, பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, கல்வி மற்றும் கலையினைப் பகிஷ்கரிக்கின்ற) நாகரிகத்திற்கு உரித்தான மாறாநிலை உருப்படிவத்திலான குழுவினர் என்ற நோக்கிலேயே முஸ்லிம்களைப் பார்க்கின்றனர். ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பிற்பாடு பிரபல மட்டத்தில் கருத்தாடப்பட்டவையும் இவ்விடயங்களே ஆகும். அதற்கு முன்னர் 2014 ஜூன் மாதத்தில் அளுத்கம நகரிலும், 2018 மார்ச் மாதம் திகன பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு மிகவும் சமீப காலகட்டங்களில் இந்தக் கலந்துரையாடல்களே தீவிரமான முறையில் அரங்கத்துக்கு வந்தமையை இங்கு நினைவுகூர்தல் சாலச் சிறந்ததாகும். தற்போது தீவிரவாத மிலேச்சத்தனமான சிறு பகுதியினர், ஒட்டுமொத்த இஸ்லாமிய நாகரிகமொன்றின் குணவியல்பாக மாறாநிலை உருப்படிவமாக்கி மேற்கத்தேய கதைகளினை, அதனை மெருகூட்டுகின்ற மேற்கத்தேய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற நபர்கள்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்னொரு வகையில் பாரியளவிலான வேறுபாடுகளைக்கொண்ட ஒட்டுமொத்த இஸ்லாமிய நாகரிகத்தைத் தமது தீவிரவாதமாக மாறாநிலை உருப்படிவமாக்கல் மூலம் சொற்பளவிலான தீவிரவாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகின்றது. நாகரிகங்களுக்கிடையிலான மோதலுக்குப் பதிலாக நாகரிகத்துக்குள்ளான மோதல் தாரிக் ரமழான் குறிப்பிடுகின்றவாறு இஸ்லாம் என்பது பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட உருவகமாகும் (Entity). எடுத்துக்காட்டாக இன்று மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் ‘ஷரீஆ’, ‘ஜிஹாத்’ போன்ற கருத்தியல்கள் தொடர்பான பொருள்விளக்கங்கள் பல காணப்படுகின்றன. ‘ஷரீஆ’ என்ற சொல்லைக் கேட்டவுடன் இஸ்லாமிய சட்டம் என்றே நாம் விளங்கிக்கொள்கின்றோம். ஆயினும் ரமழான் குறிப்பிடும் வகையில் ஷரீஆ என்கிற கருத்தியலின் இதயமாக விளங்குவது சூபித்துவ இஸ்லாமிய ஆன்மீக சம்பிரதாயமாகும். அதனுள்ளே, சமாதானத்தை நோக்கிப் பயணிக்கின்ற வழிமுறையாக அது பொருள்கொள்ளப்படுகின்றது. ஜிஹாத் எனப்படுவது தனிப்பட்ட வகையில் தனக்குள்ளும் தனது குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் இ;ச்சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்குக் காணப்படும் தடைகளுடன் போராடுவதாகும். அது புனித யுத்தம் தொடர்பான ஒன்றல்ல. தனக்குள்ளும் தன்னைச் சுற்றியும் சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஆன்மீகப் போராட்டமாகும். அது சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளவற்றை எதிர்ப்பதாகும். ஜிஹாத் என்பது அடிப்படையில் மனிதன் தன்னைத்தானே மாற்றிக்கொள்வதற்கான உள்ளார்ந்த போராட்டமாகும். ஆயினும் இன்று நமக்குத் தெரிந்திருப்பது ஷரீஆ மற்றும் ஜிஹாத் தொடர்பாக தீவிரவாதிகள் முன்வைக்கின்ற பொருள்விளக்கங்கள் மாத்திரமே ஆகும். மாறாநிலை உருப்படிவமாக்கலில் காணப்படும் அபாயமும் அதுவேயாகும். தீவிரவாதிகளின் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் தற்போது நாம் இஸ்லாமிய நாகரிகத்துக்குப் பொதுவான ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனூடாக எமக்குத் தெரிந்துள்ள பெரும்பாலான விடயங்கள் எமது தர்க்கரீதியான அறிவுக்கு உட்படாத வகையில் திரையிடப்பட்டுள்ளது. இஸ்லாம் ஆப்கானிஸ்தானில் 70களின் நடு அரைப்பகுதியில் பனிப்போரினது மோதலில் சிக்கிக்கொண்டது வரையில் ஆசியாவில் மிகவும் சமய சார்பற்றதும் நவீன அரசொன்றினை நிலைபெறச்செய்துள்ளதென்றும் காபூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர்களில் அதிக சதவீதத்தினர் ஆப்கான் யுவதிகள் என்பதுவும் நமது கண்களுக்குத் திரையிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் அல்லது ஈரானில் இஸ்லாமியத் தீவிரவாத அரசியல் கூட்டமைப்புக்களுக்கு நூற்றுக்குப் பத்து வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருநாளும் இயலுமாகவில்லை. எகிப்து, டியூனீசியா, துருக்கி, சிரியா மற்றும் அதுபோன்ற நாடுகளிலும் பெரும்பான்மையினர் இஸ்லாமிய நாடுகளில் மதச்சார்பற்ற ஆட்சியொன்றுக்காக முன்வருகின்றவர்கள் அதிபெரும்பான்மையாக விளங்குகின்றனர். எகிப்தில் முபாரக்கினுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக வீதியில் இறங்கிய மக்கள் அந்நாட்டு ஜனநாயக சனத்தொகையினரன்றி தீவிரவாதிகளல்லர். சுருக்கமாகக் சொன்னால் அதனை இயக்கமாகக் கொணர்ந்ததுகூட முஸ்லிம் சகோதரத்துவத்தினுடைய தலைவர்கள் அல்லர். இவை அனைத்தும் எம்மால் புறக்கணிக்கப்படுவது எதிர்பாராதவிதமாகவா? அகில் பில்கிராம் கூறுவதன்படி சாதாரண அறிவுடைய எந்தவொரு நபருக்கும் தென்படவேண்டியுள்ள விடயம் யாதெனில், முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் தீவிரவாதத்தைக் கொண்டவர்களல்லர் என்பதாகும். அவர்கள் அதிகளவில் தமது மதத்துக்கு பக்தியாளர்களாக இருக்கும் வேளையில்கூட தமது சமயக் கொள்கைகள் அனைத்தையும் உள்ளடக்குகின்ற முழுமையானதொரு வாதத்தினை வேரூன்றவில்லை. தமது மதத்தின் பெயரில் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான எழுச்சி அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. சவூதி அரேபியாவிலோ அல்லது ஈரானிலோ சமூக அழுத்தத்தைப் பிரயோகித்த ஆட்சியாளர்களினால் தம் மீது விதிக்கப்பட்ட கடினமான இஸ்லாமிய சித்தாந்தங்களின்பால் அந்நாட்டுமக்கள் சார்ந்துள்ளனர் என்று கூறுவதற்கு ஆதாரமேதுமில்லை. ‘எனது கண்ணோட்டத்தின்படி மோதல் காணப்படுவது இந்த முஸ்லிம்கள் விசுவாசிக்கின்ற பெறுமானங்களுக்கும் அவர்களைவிட மிகச்சொற்ப அளவினராகிய இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையிலாகும்…… அதனால் முஸ்லிம் மக்களுக்கிடையிலான இந்த மோதலை மதச்சார்பற்றோருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் ஒன்றாகவே நான் காண்கிறேன். (பில்கிராம் 2011).’ பில்கிராம் குறிப்பிடுவதன்படி, பெரும்பான்மையினரான சாதாரண முஸ்லிம்களின் குரல்கள் அடக்கப்பட்டு அது இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எப்போதும் பிரபல்யத்தைப் பெற்றுக்கொடுக்கின்றது. அவர் குறிப்பிடுவதன் பிரகாரம், சமகாலத்தில் மதச்சார்பின்மை என்பது சமயப்பற்றுள்ள அல்லது சமயப்பற்றில்லாத சகல குடிமக்களுக்கும் சமயக் கோட்பாடுகளினதும் நடைமுறைகளினதும் அடிப்படையில் அமையாத ஆட்சி ஒன்றினுள் சமாதானமாக வாழ்வதற்கான புரிந்துணர்வு தொடர்பாகவுள்ள அரசியல் கோட்பாடாகும். அதிக பெரும்பான்மையான முஸ்லிம்கள் அத்தகைய ஒரு ஆட்சியை விரும்புகின்றனர். எனினும், மேற்குலகு அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் மாறாநிலை உருப்படிவத்திலான இஸ்லாமிய நாகரிகமாக ஒன்றுபடுத்தி, நவீனத்துவம், அறிவுஞானம் மற்றும் மதச்சார்பின்மை என்பவற்றுக்கு விரோதமான சமயத் தீவிரவாதிகளாக அதன் அனைத்து மக்களையும் எண்ணுவதற்கு எம்மைத் தூண்டியுள்ளது. எட்வர்ட் சயித் எடுத்துக் காட்டுகின்ற வகையில், அதன்மூலம் தமக்கு சாதகமான சில இஸ்லாமிய நாடுகளின் ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது மோசமான ஆட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கத்தேய நாடுகள் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளன.6 அது, அவர்கள் கூறுவதன்படி மேற்கத்தேய நாகரிகத்தின் அம்சங்களாக அவர்கள் பெயர்குறிப்பிடுகின்ற நவீனத்துவத்தினதும் அறிவுஞானத்தினதும் மதச்சார்பின்மையினதும் பாதுகாவலர்களாக இந்த ஆட்சியாளர்கள் தோன்றி நிற்பதன் காரணத்தினாலாகும். இவ்வாறு பனிப்போர் மேற்கத்தேய அதிகாரச் செயற்றிட்டத்தினை மீண்டும் வேறொரு தோற்றத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய அமெரிக்கக் குடியரசை முதன்மைப்படுத்திய மேற்குலக ஆட்சியாளர்களுக்கு முடியுமாகியுள்ளது. பனிப்போரில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களாகத் தோன்றிய, தங்களுக்குச் சார்பான ஊழல் நிறைந்த லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய ஆட்சியாளர்களைப் பாதுகாத்த அதே வாதத்தையே பிரயோகித்து நவீனத்துவ ஆட்சியாளர்களாகத் தோன்றியுள்ள இஸ்லாமிய நாடுகளில் தங்களுக்குச் சார்பான ஊழல்மிக்க ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உண்மையான மோதல் காணப்படுவது இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இத்தகைய நடுநிலையானதும், நவீனத்துவம் கொண்டதும், அறிவுமிக்கதுமான பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் இடையிலாகும். இது நாகரிகங்களுக்கிடையிலான மோதல் அல்ல, இது நாகரிகத்துக்குள்ளான மோதலாகும். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் என்ற போலியான முகத்திரை இல்லாதவிடத்து அதன் அமைதியான பெரும்பான்மையினருக்கு இதனைவிட சகோதரத்துவமிக்க ஆதரவு உலகத்தின் ஏனைய பிராந்தியங்களின் நவீனத்துவ மதச்சார்பற்ற சக்திகளினூடாக கிடைத்திருக்கும். ஆயினும் மதச்சார்பின்மைக்கு விரோதமான, நவீனத்துவத்துக்கு விரோதமான பிராந்தியமொன்றாக அல்லது நாகரிகமொன்றாக இஸ்லாமிய நாடுகள் வகுப்பாக்கம் செய்யப்பட்டிருப்பதன் ஊடாக அது தடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்குள்ளும் மேற்கத்தேய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பெரும்பான்மைக் குழுவினரூடாக முழுக்க முழுக்க மேற்கத்தேய எண்ணக்கருக்களே விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் தீவிரவாதிகளல்லாத முஸ்லிம் மக்களது பிரச்சினை காது கொடுத்துக் கேட்கப்படாமலுள்ளது. நாம் இன்று இஸ்லாம் என்று கருதுவது தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களாகக் கூறப்படுகின்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் போன்ற தீவிரவாதிகள் வழிபடுகின்ற மதத்தை ஆகும். உண்மையில் மோதல் காணப்படுவது தீவிரவாதம் மற்றும் மதச்சார்பின்மை என்பவற்றுக்கிடையிலாகும். இந்த மோதலில் இஸ்லாத்தைப் போன்றே பௌத்த அல்லது வேறு ஏதேனுமொரு மதத்தைச் சேர்ந்த தீவிரவாதியும் அதே குழுவுக்குள்தான் உள்ளடக்கப்படுகின்றான். அதனால் எமது நிகழ்கால நடைமுறையினை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கெதிராக ‘ஏதேனும் செய்வதற்கு’ (இங்கு நாம் கூற முற்படுவது முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினை அழித்தொழிப்பதற்கு அரசால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை அல்ல. மாறாக, நமது அண்டை முஸ்லிம் சமுதாயத்திடம் வன்முறையைக் கட்டவிழ்ப்பதற்காக வழங்கப்படுகின்ற ஆலோசனைகளையே ஆகும்) எமக்கு அழைப்புவிடுக்கின்ற யாராக இருப்பினும் அவர்களும் அறிந்தோ அறியாமலோ இருப்பது இவ்வாறான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நிலையில்தான். முடிவுரை இந்தக் கடினமான நேரத்தில் எமது பொறுப்பு யாதெனில் தீவிரவாதியல்லாத பெரும்பான்மை முஸ்லிம் மக்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதாகும். எம்முடன் பல நூற்றாண்டுகளாக பொதுத் தன்மையொன்றினைப் பகிர்ந்து வாழ்ந்தவர்கள் இந்தப் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயத்தினரே. எம்மை வேறுபட்ட நாகரிகத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்கள் எம்மை வேறுபட்டவர்களாக ஆக்கியிருப்பது யாதேனுமொரு குறிப்பிட்ட அறிவியல் அமைப்பின் அடிப்படையிலாகும். அறிவுருவாக்கம் என்பது அப்பாவித்தனமான செயற்பாடொன்றல்ல. நாகரிகங்களுக்கிடையிலான மோதல் தொடர்பான இன்றைய எமது அறிவு நிலை மேற்கத்தேய வடிவாக்கமாக இருப்பது மட்டுமல்ல, அது குறிப்பிட்ட மேற்கத்தேய புவிசார் அரசியல் தேவைப்பாட்டின் பேரில் உருவாக்கப்பட்டதொன்றும் ஆகும். தற்கொலைக் ‘குண்டுதாரி’ தேவைப்பட்டது இந்தப் பிரிவுக் கோட்டைக் குறிப்பதற்காகும். நாம் ஒழுக்க விழுமியங்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துக் கருத்தியல்களையும் சவாலுக்குட்படுத்திய, கழுத்தை வெட்டுகின்ற, பிள்ளைகளைக் கொலை செய்கின்ற, பெண்களைப் பாலியல் அடிமைகளாக்குகின்ற மனித நாகரிகத்தின் படைப்புக்களை அழித்தொழிக்கின்ற நபர் தீவிரவாதியாக இருப்பாரேயொழிய எம்மோடு காலாகாலமாக எத்தகைய மோதல்களுமின்றி வாழ்ந்த முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள். நன்றாகச் சிந்தித்துப் பார்க்கின்றவிடத்து நமக்குப் பழக்கப்பட்ட முஸ்லிம்களுள் பெரும்பான்மையினர் தமது குடும்பத்தை, குழந்தைகளை நேசிக்கின்ற, அவர்களுக்காக மிகச்சிறந்த எதிர்காலத்தினை உருவாக்குவதற்காகப் பாடுபடுகின்ற எங்களைப் போன்ற மனிதர்களேயாவர். இஸ்லாமிய நாகரிகத்தின் சொற்பளவிலான தீவிரவாதிகளைக்கொண்ட குழுவொன்றை உருவாக்கி, அதுவே ஒட்டுமொத்தமுமானது என்று மாறாநிலை உருப்படிவமாக்கியது மேற்கூறிய குறித்துரைக்கப்பட்ட அறிவைக் கொண்டேயாகும். ஆயினும் இன்று பல நூற்றாண்டுகளாக எம்முடன் வாழ்ந்த முஸ்லிம் மக்களைப் புரிந்துகொள்வதற்கு எம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திக்கொண்டிருப்பது, இந்த மேற்கத்தேயக் கதையினையேயாகும். உண்மையில் தீவிரவாதியினுடைய எதிர்பார்ப்பும் அதுதான். இஸ்லாமிய நாகரிகத்துக்குள் இந்த புதிய தீவிரவாதத்துக்குப் பலியாகாமல் சகவாழ்வுடன் வாழ்கையைக் கொண்டுசெல்வதற்குக் கடினமான போராட்டத்தில் திளைத்துள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களை நாம் புறக்கணிப்போமாயின் நிச்சயமாக அது தீவிரவாதிக்குக் கிட்டுகின்ற வெற்றியாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் அது மேற்கத்தேய புவிசார் அரசியல் அதிகாரச் செயற்றிட்டத்தின் வெற்றியாகும். எனவே இச்சந்தர்ப்பத்தில் இடத்துக்கிடம் காதுகளில் விழக்கூடிய முஸ்லிம் மக்களுடைய ஆடை அணிகலன்கள், உடல் தோற்றங்கள், வாழ்க்கைப்போக்குகள், சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பாக வெறுக்கத்தக்க கருத்துக்களுக்களைக் கூறுகின்ற அல்லது இந்த ஒழுக்கமற்ற இனத்தினரைப் பழிவாங்க வேண்டும் என்றோ ஃ பாடம் புகட்ட வேண்டும் என்றோ எச்சரிக்கின்ற எந்தவொரு நபராலும் 21 ஆம் திகதி நாம் முகங்கொடுத்த பயங்கரமான யதார்தத்திலிருந்து எம்மைத் தூரக் கூட்டிச் சென்றுவிட முடியாது. அவர்கள் மூலமாக நாம் மீண்டும் மீண்டும் முகங்கொடுக்க நேர்வது அத்தகைய சம்பவங்களுக்கு மாத்திரமேயாகும். இன்று நாம் முகங்கொடுத்துள்ள சவால் யாதெனில், எம்மால் புரிந்துகொள்ள முடியாத, எமது தார்மிகப் பெறுமானங்களுக்குப் பொருந்தாத, நாகரிகமொன்றுக்கு எமது அண்டை முஸ்லிம் மக்கள் உரித்துடையவர்களெனக் கற்பிக்கப்படுகின்ற மேற்கத்தேயக் கதைகளை எமது சிந்தையிலிருந்து அகற்றுவது எவ்வாறு என்பதே ஆகும். பல நூற்றாண்டுகளாக எம்முடன் வாழ்ந்த மக்கள் தொடர்பாக மேற்குலகினர் வழங்கியுள்ள சட்டகத்தினைப் பயன்படுத்தி அவர்களை நோக்குவதனைத் தவிர்ப்பதன் மூலம், இஸ்லாமிய நாகரிகத்தில் சொற்பளவாகவுள்ள மிலேச்சத்தனமான தீவிரவாதத்துக்கு பதில் வழங்க முடியும். நாகரிகங்களுக்கிடையிலான மோதல் பற்றிய கதைகளைப் புறக்கணித்ததன் பிற்பாடு, ஒரேமாதிரியான சமூக நடைமுறையினை எம்முடன் பகிர்ந்துகொண்டு வாழ்கின்ற, எம்மைப் போன்றே தமது சமூகத்திலுள்ள சொற்பளவினரான தீவிரவாதிகளினால் அழுத்தங்களுக்குட்பட்டுள்ள, அவற்றுடன் போராடுகின்ற, உதவிகள் இல்லாதவிடத்து அமைதிகொள்கின்ற, அல்லது அந்த அதிகாரத்துக்கு அடங்கிப்போகின்ற பொறுமையும் அமைதியும் கொண்ட பெரும்பான்மை மக்களை நாம் சந்திக்கின்றோம். ஏப்ரல் 21ஆம் திகதி நாம் சந்தித்த மிலேச்சத்தனத்துக்கு எதிரான போராட்டமானது அவர்களும் நாமும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டிய போராட்டமாக அமைய வேண்டும். அது அவ்வாறு நிகழாதவரை, வௌ;வேறு மதங்களின் பேரிலான மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுதாரிகளினால் நம் கண்ணெதிரே நேர்கின்ற அவலங்களுக்கு நாமும் பங்காளிகளாவோமேயன்றி எமக்கு வேறெதுவும் எஞ்சப்போவதில்லை. 1 விதுர பிரபாத் முணசிங்க, ஒரு சட்டத்தரணி ஆவார். சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அறநிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார். 2 கௌஷல்யா ஆரியரத்ன, ஒரு சட்டத்தரணி ஆவார். கோல்ட் ஸ்மித் கல்லூரி- லண்டன் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் அத்துடன் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அறநிலையம் என்பன கூட்டாக செயற்படுத்துகின்ற ‘நவீன சமூக கற்பிதங்கள்’ (New Social Imaginaries) திட்டத்தில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளராகக் கடமையாற்றுகிறார். 3 இக்கட்டுரை நாட்டின் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சற்றுலாப் பிரயாண விடுதிகள் பலவற்றில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்ற 2019 ஏப்ரல் 21ஆம் திகதியைத் தொடர்ந்துவந்த சில தினங்களில் எழுதப்பட்டுள்ளது. அத் தாக்குதல்களினால் சுமார் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேரளவில் காயமடைந்துள்ளனர். 4 Samuel P. Huntington 1993, “The Clash of Civilizations?”, Foreign Affairs. Summer 1993, Council for Foreign Relations: New York, p.85. 5 சயீத், எட்வர்ட் 1996> https://www.youtube.com/watch?v=aPS.pONiEG8 6 சயீத். எட்வர்ட் 1996> https://www.youtube.com/watch?v=aPS-pONiEG8 உசாத்துணைகள் Asad, Talal 2003, Formations of the Secular: Christianity, Islam and Modernity, Stanford University Press: California. Bilgrami, Akeel 2011, https:// www.amacad.org/publication/clash-within-civilization. Council for Foreign Relations: New York. Huntington, Samuel p.1996, The Clash of Civilizations and Remaking of World Order, Simon & Schuster: NewYork. Lewis, Bernard 1993, “ The Roots of Muslim Rage”, The Atlantic Monthly,vol,266, September, 1990. Ramadan, Tariq 2004, Western Muslims and Future of Islam, Oxford University Press: Oxford. Said, Edward 1996, http://globaltamilnews.net/2019/121248/

காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் - ஆட்சேபனைகள் நிராகரிப்பு

3 months 2 weeks ago
May 10, 2019 நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார். “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடியாங்கு உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து, மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டமையைக் கண்டித்தார். மனுதாரர்கள் அனைவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வரும் மே 24ஆம் திகதி முன்னிலையாக உத்தரவிட்ட மேல் நீதிமன்றம், அன்றைய தினம் வழக்கின் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை நீதிவான் வழங்குவார் என்று குறிப்பிட்டது. 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் கட்டளைக்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன் முன்னிலையானார். முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார். அவருடன் அரச சட்டவாதி மாதினி விக்கேஸ்வரனும் முன்னிலையானார். “2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் ஆரம்பிக்கப்படுள்ளன. சட்டமா அதிபரின் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் பூர்வாங்க ஆட்சேபனைகள் மற்றும் விண்ணப்பங்கள் செய்வதிலும் காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள், 1996ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதியன்று நாவற்குழி மறவன்புலவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது காணாமல் ஆக்கப்பட்ட கணேசலிங்கம் கிருபாகரன், ஸ்ரான்லி ஜீவா, பொன்னம்பலம் கண்ணதாசன் ஆகியோர் தொடர்பில் குறிப்பிட்டு, அவர்களை நீதிமன்றின் முன் கொண்டுவர எதிர்மனுதாரர்களை பணிக்கும் ஆட்கொணர்வு எழுத்தாணை மனுக்களின் ஊடாக உறவினர்கள் கோரியுள்ளனர். இந்த ஆட்கொணர்வு எழுத்தாணை விண்ணப்பங்கள் தொடர்பில் எதிர்மனுதாரர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி தோன்றி பூர்வாங்க ஆட்சேபனைகள் பலவற்றை முன்வைத்துள்ளார். முக்கியமாக மனுதாரரின் எழுத்தாணை விண்ணப்பமானது 21 வருடங்கள் கடந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்து, மனுதாரர்கள் காலதாமதம் என்ற தவறினை இழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர்களின் ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர்மனுதாரர்களால் பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து அவை தொடர்பில் இந்த மன்று கட்டளை ஆக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்தமை காரணமாக உணர்வுபூர்வமான இந்த மனுக்களின் காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பில் மனுதாரர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் காலதாமதம் என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்பட முடியாதது என்றும், ஆட்கொணர்வு எழுத்தாணை என்ற விடயத்தில் காலவரையறை எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுக்கள் தற்றுணிவு நிவாரணமாக கொள்ளப்பட முடியாதது என்றும், உரிமை சார் நிவாரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்மனுதாரர்களினால் முன்வைக்கப்பட்ட ஏனைய ஆட்சேபனைகள் தொழில்நுட்ப ரீதியானவை எனக் கூறப்பட்டு ஆட்கொணர்வு எழுத்தாணை விடயத்தில் தொழில் நுட்ப ரீதியிலான ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என விவாதிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் தொடர்பிலான கணேசலிங்கம் கிருபாகரன்,ஸ்ரான்லி ஜீவா, பொன்னம்பலம் கண்ணதாசன் ஆகியோர் 1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று பிடிக்கப்பட்டுள்ளார். இவை தொடர்பில் மனுதாரரினால் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1996 ஜூலை 20ஆம் திகதியன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி அன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதியன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விண்ணப்பம் செய்த 2017 நவம்பர் 15ஆம் திகதியன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்ற விடயமானது ஒரு தொடர் நிகழ்வாக 1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியில் இருந்து இற்றைவரை தொடர்வதாக இந்த மன்று வெளிப்படுத்துகின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வாக உள்ள நிலையில், அங்கே காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்த மன்று வெளிப்படுத்துகின்றது. வடமாகாண மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டுள்ளது. நாவற்குழி இராணுவ முகாமானது வடமாகாணத்தில் அமைந்திருந்த நிலையில், வடமாகாண மேல் நீதிமன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் நியாயாதிக்கம் இருப்பதாக இந்த மன்று கொள்கின்றது. எனவே எதிர்மனுதாரர்கள் தரப்பில் மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட ஆட்சேபனை பொருளற்றதாகின்றது. மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வெறும் பிரதிகளாக இருப்பது தொடர்பில் பிரதி மன்றாடியார் அதிபதியால் பலத்த ஆட்சேபனை எழுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற விதி 46 இன் பிரகாரம் ஒழுகவில்லை என்றவாறாக ஆட்சேபிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களினால் ஆவணங்களின் மூல பிரதிகள் சமர்ப்பிக்கப்படாதமை தொடர்பிலான விளக்கங்களின்பாலும் மன்று கவனம் செலுத்தி குருதி உறவு ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான தவிர்க்கப்பட முடியாத எழுத்தாணை விண்ணப்பம் ஒன்று, உள்ள சூழ்நிலைகளுக்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும்பொழுது மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படாதமை காரணமாக மட்டும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்று ஏற்க மறுக்கின்றது. எனவே எதிர்மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கமைவாக அர்த்தமற்றவை – தேவையற்றவை – வழக்கு விடயத்தை இறுதியாக தீர்மானிக்க தோதற்றவை என கொண்டு அவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. குடிமகன் ஒருவரின் ஆட்கொணர்வு எழுத்தாணை தொடர்பிலான மனு இந்த வழக்குகளில் கவனிக்கப்பட்டது போல எதிர்மனுதாரர்களினால் கவனிக்கப்படுவது முற்றிலும் தவறானது என இந்த மன்று வெளிப்படுத்துகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடியாங்கு உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து, மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாக இந்த மன்றினால் கருதமுடியாதுள்ளமை குறிப்பிடப்படுகின்றது. இந்த வழியே மனுதாரர்களினால் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனை என்ற வகையில் ஏறக்குறைய 2 வருடங்கள் செலவளிக்கப்பட்டமை பெருத்தளவில் கண்டிக்கப்படுகின்றது. இந்த அளவில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில், உள் நிகழ்வுகளை முழுமையாக பரிசீலித்து, மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு தரப்பினர்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த மன்று வெளிப்படுத்தி இக்கட்டளையை ஆக்குகின்றது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கள் கட்டளையை வழங்கினார். http://globaltamilnews.net/2019/121293/

கட்டுநாயக்கா விமான நிலைய, போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் தளர்வு

3 months 2 weeks ago
May 10, 2019 கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து. வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, நேற்று முன் தினம் இரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இனி வழமை போன்று, பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார். #katunayakeairport # colomboairport #eastersundayattackslk http://globaltamilnews.net/2019/121263/

இலங்கை குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்தவர் சவூதியில் கைதானார்.

3 months 2 weeks ago
சாதாரணமாக 1 மில்லியன், 2 மில்லியன் நிதி உதவிக்கே பெண்டு கலறுது. US$24 மில்லியன் பணத்தினை ஒரு சவூதி Trust ஒரு இலங்கை அரசியல்வாதிக்கு சும்மாவே கொடுக்கிறது. இலங்கை அரசுக்கு, இப்பதான் மூக்கு வேர்த்து இருக்குது. இந்தமாதிரி டிரஸ்ட் மூலமாகவே IS பணம் கீழை நாடுகளுக்கு செல்கிறது. அங்கிருந்து வேலை இல்லாத முஸ்லீம் இளைஞர்களை உருவேத்தி அனுப்புவது தான் இவர்களது வேலை. ஆனால், இவர்கள் எதிர்பாராது, மரத்திலேயே கூர் பார்ப்பது போல, இலங்கையிலேயே, தங்கள் வேலையைக் காட்டியது தான். இன்று, விமல் முதல், SB திசாநாயக்க வரை றிசாட்டினை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். அவரும் சளைக்காமல் வாய் அடித்துக் கொண்டு இருக்கிறார். மறுபுறம் இன்று கிழக்கில் ஹிஸ்புல்லாவை கவனர் பதவியில் இருந்து நீக்கு என்று கடையடைப்பு. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் சேர்ந்தே செய்கிறார்கள் என சொல்லாமல் சொல்கிறது dailymirror. Hartal against Hizbullah

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

3 months 2 weeks ago
Conspiracy theory என்று நக்கலடித்து கருத்து வைக்காமல் இப்படி கருத்து வைத்தமைக்கு நன்றி. இளவரசர் சார்ள்ஸ், ஒபாமா போன்றவர்கள் அவர்களது கைப்பாவையாக இயங்குபவர்கள். அதே நேரம் இளவரசி டயானா அவர்களால் கொல்லப்பட்டார். Secret societies 60, 70 வருடங்களாக அல்ல, அதிலும் அதிக காலமாக இருக்கிறது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது தான். அதற்காக அது பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லையே. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளடங்காத பகுதிகளல்ல. அவையும் உள்ளடங்கி தான் உள்ளன. உலகப் போர் ஒரு உதாரணம். யுத்தங்கள் செய்வது, நோய்களை பரப்புவது மட்டுமல்ல மக்களை gay, lesbien, transgender ஆக மாற்றும் நடவடிக்கைகளிலும் உள்ளார்கள். இதனால் தான் music industry, hollywood industry, politics இல் உள்ளோர் பலர் இவற்றில் ஒன்றாக உள்ளார்கள். ஆனாலும் வெளிக்கு தம்மை straight ஆக காட்டிக்கொள்வார்கள். அனைவரும் அப்படியல்ல, சிலர் உண்மையாகவே straight தான். நாளை புலம்பெயர் தமிழர்களின் சந்ததி தம்மை gay, lesbien என சொல்லிக்கொண்டு திரியும் காலமும் வரலாம். காரணமில்லாமல் cancer உட்பட பல நோய்களை காவிக்கொண்டு திரியும் காலமும் வரலாம். நன்றி.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

3 months 2 weeks ago
அதுவும் இடுப்புக்கு கீழ தான். போர்த்துகேயன் வரேக்க... அதுதான் கோலம். ஆனாலும் பெண்கள் மேலாடை அணிவதில், சாதிய வேறுபாடு காரணமாக தடைகள் இருந்தன. இலங்கையில் மாறினாலும், இந்தியாவில் மிக அண்மைக் காலம் வரை இருந்தது. நீங்கள் வேற சாமானியன் எண்டுறியள்.. நீங்களே ஊத்தின கோப்பியை எடுத்து குடிக்க, ஆள் தேடினா அப்படித்தான் சாமானியன். அதுக்கு தான் சொல்லுறது, பேரிலயாவது, முனி, தனி என்று சன்னாசி தனம் இருக்கோணும்... பேரை மாத்தி.... 'பெண்ணே, இந்தா.. விபூதி.... கொண்டா அந்த கோப்பியை' என்று சொல்லிப் பாருங்கோ.... (சாத்து வாங்கினால், கம்பெனி பொறுப்பல்ல, சொல்லாமல் சன்னியாசம் கிளப்பலாம்)

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

3 months 2 weeks ago
உண்மை தான். இவரை கொலை செய்தது கூட CIA தான். நான் கேள்விப்பட்டதிலிருந்து, CIA, FBI போன்றன இவரை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பின. ஆனால் இவர் அவர்களுடன் ஒத்துப்போகவில்லை. சில CIA அலுவலர்கள் இவரை தம்முடன் இணைந்து வேலை செய்யுமாறு கேட்டும் இவர் மறுத்து விட்டார். Rat race என்ற பாடலில் “rasta don’t work for no CIA” என்றும் பாடியிருந்தார். CIA அந்நேரம் Jamaica இல் அரசியல் வன்முறைகளை தூண்டிக்கொண்டிருந்தது. மறுபக்கம் துப்பாக்கி விற்பனை, போதைப்பொருள் விற்பனையை முன்னெடுத்திருந்தது. இவரது பாடல்கள் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பதும் அமைதியை, ஒற்றுமையை வலியுறுத்துவதும், அமெரிக்க உளவுத்துறைக்கு எதிரான வகையில் அமைந்ததும், அடக்குமுறைக்கு எதிராக, கறுப்பின விடுதலை பற்றியதாக, “world system” க்கு எதிராக என பலவாறு இருந்தமையும், இவருக்கு மக்கள் ஆதரவு, அரசியல் பலம் இருந்தமையும் CIA விரும்பாத விடயங்கள். PNP (Peoples National Party) இன் Michael Manley க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் JLP (Jamaican Labour Party) இன் Edward Seaga ஐ பதவியிலேற்றும் முயற்சியிலும் CIA செயற்பட்டது. Bob Marley வெளிப்படையாக எவருக்கும் ஆதரவு தெரிவிக்காத போதும் இவரை Michael Manley இன் ஆதரவாளராக தான் CIA உட்பட பலர் பார்த்தார்கள். அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறையை அடுத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையிலும் வன்முறையிலிருந்து ஆறுதல்படுத்தும் வகையிலும் 5/12/1976 அன்று “Smile Jamaica” concert நடத்தவிருந்த நிலையில் இரு நாட்கள் முன் (3/12/1976) அதற்கான rehearsel இல் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது CIA இன் பின்னணியுடன் JLP ஏவி விட்ட சிலர் வந்து இவரை கொல்லும் முயற்சியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இவர், இவர் மனைவி, மற்றும் மேலும் இருவர் காயமடைந்தனர். இதில் இவர் உயிர் தப்பி விட்டதால் CIA director William Colby இன் மகன் Carl Colby ஐ அனுப்பி, அவர் தன்னை ஒரு camera man ஆக அறிமுகப்படுத்தி அவர் மூலம் ஒரு சோடி boots ஐ இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்கள். அதை போட்டுப்பார்க்க முயற்சித்த போது அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கதிரியக்க செப்புக்கம்பி இவர் விரலில் குற்றி அது cancer உருவாக காரணமானது. (செயற்கையாக cancer ஐ புகுத்தினார்கள்) (இவர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தாலும் காயத்துடன் ஒற்றுமையை வலியுறுத்தும் concert இல் 5 ஆம் திகதி கலந்து கொண்டார், பின் Bahamas சென்று தங்கினார், பின் London சென்றார்) July 1977 இல் கால்பந்தாட்ட விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்துடன் காலை பரிசோதித்த போது தான் அவ்விரலில் cancer இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவர்கள் விரலை துண்டிக்குமாறு கூறியுள்ளார்கள். இவர் தனது rastafarian நம்பிக்கை காரணமாகவும், துண்டித்தால் Performance செய்வதில் தடங்கல் ஏற்படும் என்றும் நினைத்து மறுத்து விட்டதாகவும், அதற்கு பதிலாக நகம் மற்றும் நகப்படுக்கையை அகற்றி தொடையிலிருந்து தசையை வெட்டியெடுத்து அப்பகுதியை மூடியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அது cancer உடலில் பரவுவதை தடுக்க முடியவில்லை. மீண்டும் Jamaica இல் வன்முறை தூண்டிவிடப்பட்ட நேரம் மீண்டும் ஒற்றுமையை வலியுறுத்தி 1978 இல் “one love peace” concert ஐ நடத்த லண்டனிலிருந்து திரும்பி வந்து நடத்தியிருந்தார். Cancer மத்தியிலும் இவர் பாடல் வெளியீடு, தனது tour நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். இவர் ஒருநாள் Central Park இல் jogging செய்து கொண்டிருந்த போது சுய நினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். பின் ஏனைய நடைபெறவிருந்த concerts ரத்து செய்யப்பட்டது. இவரை Dr. Josef Issels என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அதற்காக ஜேர்மனிக்கு சென்று அவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். (Dr. Josef Issels என்பவர் ex SS officer என்றும் CIA உடன் இணைந்து Bob Marley க்கு விஷமூட்டியவர் என்று தகவல்). 8 மாதங்கள் கடந்த நிலையிலும் சிகிச்சை வெற்றியளிக்கவில்லை. எனவே மீண்டும் Jamaica இற்கு செல்ல முற்பட்டு விமானத்தில் ஏறியுள்ளார். Flight இல் அவரது நிலை மோசமடைந்ததாகவும் மியாமியில் தரையிறங்கி உடனே மருத்துவமனைக்கு (அந்நேரம் Cedars of the Lebanon Hospital என அழைக்கப்பட்டது) கொண்டு சொல்லப்பட்டு பின் அங்கு 11/05/1981 அன்று இறந்தார். பி.கு: விமானத்தினுள்ளும் மருத்துவமனையிலும் என்ன நடைபெற்றது என்ற விரிவான தகவல் என்னிடம் இல்லை.

நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?

3 months 2 weeks ago
படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம். ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் வரை பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம். 5ஜி என்றால் என்ன? ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும்? 5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. படத்தின் காப்புரிமைCHINA NEWS SERVICE அந்த வகையில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த ரேடியோ அலைக்கற்றைகள் குறித்த ஆராய்ச்சியாளரான கதிரவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "வேகம் என்று நாம் சொல்ல வருவது கம்பியில்லாத ரேடியோ தொடர்பாடலில் அலைக்கற்றையின் அகலமாகப் பார்க்கப்படுகின்றது. இன்று புழக்கத்தில் இருக்கும் 3ஜி அல்லது 4ஜி ஆகிய தொடர்பாடல் முறைமைகள் பயன்படுத்தும் அதிர்வெண்கள் 3 கிகாவுக்கும் குறைவானவை. 5ஜியிலோ 30 கிகா வாக்கில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம் 5ஜி என்றால் முந்தையவை கால்வாய் நீர். அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல நாம் பார்க்கலாம். இலங்கையில் சமூக ஊடகங்களை முடக்குவது தீவிரவாதிகளை ஒடுக்குமா? 6 கேமரா, 2 பேட்டரி: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிட்டது சாம்சங் 30 கிகா மைய அதிர்வெண்ணில் 3 கிகா வேகத்துக்கு தொடர்பாட முடிவதற்கு சமம். 3 கிகா இன்றைய அதிர்வெண்ணில் 300 மெகா வேகம் போன்றது. 10-20 மடங்கு இன்றைய வேகத்திலும் அதிகமாகத் தொடர்பாடலாம்" என்று அவர் கூறினார். உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது இணைய வேகத்தை தவிர்த்து 5ஜியின் முக்கியத்துவங்கள் என்னென்ன? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 1ஜி முதல் 4ஜி வரையிலான தொழில்நுட்ப மேம்பாடு, சாதாரண கம்பியில்லா குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலிருந்து தொடங்கி, அதிவேக இணைதள பயன்பாடு வரை பல்வேறு மாற்றங்களை நமது வாழ்க்கையில் புகுத்தியுள்ளது. அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும். அதுமட்டுமின்றி, வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியாவிற்கு 5ஜி தேவையா? பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்படுவதால், அவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தேவையா என்ற கேள்வி ஒவ்வொருமுறை எழுப்பப்படுகிறது. எனவே, இதுகுறித்த கேள்வியை கதிரவனிடம் முன்வைத்தபோது, "உலகமயமான சூழலில் ஒரு நாட்டுக்கு மட்டும் பயன் அதிகமாக இருப்பதாக, நமக்கு அவசியமில்லாததாகப் எந்த நுட்பியலையும் பார்க்க முடியாது. 5ஜி தொழில்நுட்பம் கண்டிப்பாக இந்தியாவுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். தற்போது இருக்கும் நுட்பியலில் கேபிள் (கம்பி வடம்) வைத்து நெருசலான இடங்களில் குழி தோண்டி சேவை வழங்குவதைவிட, 5ஜி தொழில்நுட்பம் மூலம் வசதியாகவும் துரிதமாகவும் இணைப்புகளை வழங்கலாம்" என்று அவர் கூறுகிறார். போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ - சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா? சர்வதேச அளவில் பார்க்கும்போது, இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை மிகவும் போட்டி மிகுந்ததாக கருதப்படுகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் அலைபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களிடையேயான தொழிற்போட்டி இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயத்தில், 2023ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 835 மில்லியன்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மேலாண்மை நிறுவனமான மெக்கன்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஒருபுறம் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும், அதன் காரணமாக மற்றொருபுறம் இணைய பயன்பாடும் பன்மடங்கு அதிகரித்து வரும் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பதற்கான தேவை நிச்சயமாக உள்ளது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுவதற்கு தேவையான சர்வதேச உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துவதும், நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்லாது எவ்வித பாரபட்சமுமின்றி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தரமான சேவையை அளிப்பதே சவாலான காரியமாக இருக்கும். 5ஜி தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை என்ன? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 5ஜி தொழில்நுட்பத்துக்கான வன்பொருட்கள் தயாரிப்பு, அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள், புதிய பெயரில் அங்கீகரிக்கப்படாத 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. முறைப்படுத்தப்பட்ட 5ஜி குறித்த தர நிர்ணய அறிவிப்புகள் வெளிவந்தவுடனே, அவை உண்மையிலேயே 5ஜி வேகத்தை கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பம் முறையாக அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமென்று 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான எரிக்சன் கூறுகிறது. 5ஜி திறன்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டனவா? படத்தின் காப்புரிமைSAMSUNG Image captionசாம்சங் எஸ்10 5ஜி திறன்பேசி இதற்கு முன்னரே குறிப்பிட்டபடி, உலகம் முழுவதும் 5ஜிக்கான தர நிர்ணயம் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை. ஆனால், வழக்கம்போல் திறன்பேசி தயாரிப்பாளர்கள் முந்திக்கொண்டு தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக, உலகின் முன்னணி திறன்பேசி தயாரிப்பாளரான சாம்சங் கடந்த மார்ச் மாதம் தனது முதல் 5ஜி திறன்பேசியான சாம்சங் கேலக்சி எஸ்10ஐ வெளியிட்டது. அதேபோன்று, ஹுவாவேய், ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிட்டுவிட்டன. இந்நிலையில், அடுத்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனமும், அதைத்தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிகுறியே இல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள், சாதாரண திறன்பேசிகளை விட சற்றே கூடுதல் விலை கொண்ட 5ஜி திறன்பேசிகளை தற்போதைக்கு வாங்காமல் இருப்பதே சரியான முடிவாக இருக்கும். ஏனெனில், 5ஜி தொழில்நுட்பம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு முழுமையாக வெளியிடப்படுவதற்கு முன் உங்களது திறன்பேசி அக்காலத்துக்கு ஏற்ற சிறம்பம்சங்களை கொண்டிராமல் பயனற்று போவதற்கான வாய்ப்புகளுள்ளன. https://www.bbc.com/tamil/science-48223510?ocid=socialflow_facebook&fbclid=IwAR1M1ffncAtmuOxSyawYRWSJEhfIaphvrkpFKU_znyKrcIr9H0h1dgLROj4

பதுளை - அல் - முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடைசெய்ய செந்தில் தொண்டமான் கோரிக்கை

3 months 2 weeks ago
செந்திலுக்கு ஏன் இந்த வேலை? மலையக மக்களுக்கு யாழ்ப்பாணத்தான் வந்து தமிழ் படிபிக்க மாட்டான் ,ஈரான் காரன் இஸ்லாத்தையாவது கற்று கொடுக்கிறான் ,பட்டம் கொடுக்கிறான் அதை கெடுக்கிறதே தமிழர்களுடைய வேலையா போச்சு😄

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

3 months 2 weeks ago
எங்கன்டயளும் ஆறு முழ சீலையை கட்டிக்கொண்டு இருந்தவையள்.....வெள்ளையள் வந்த பின்புதான் கொஞ்சம் முன்னேற்றம் 😄
Checked
Mon, 08/26/2019 - 07:08
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed